World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Kerry rejects call for Iraq troop withdrawal

Defeated Democratic candidate on "Meet the Press"

ஈராக் துருப்பு விலக்கல் கோரிக்கையை ஏற்க மறுத்த கெர்ரி

தோற்கடிக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் "செய்தியாளர்களை சந்தித்தல்"

By Bill Van Auken
1 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 2-ல் நடைபெற்ற வாக்குப்பதிவு சிறிது வித்தியாசமாக சென்றிருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்று பிரமைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் அவரது முன்னாள் ஆதரவாளர்கள் எவரும் இருந்தால் அவர்களுக்கு தோல்வியடைந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி ஞாயிறன்று ஒரு திட்டவட்டமான பதிலை தந்தார்.

NBC தொலைக்காட்சியின் "பத்திரிகையாளர் சந்திப்பு" நிகழ்ச்சியில், கெர்ரிக்கு அவரது சக மசாசூசெட்ஸ் செனட்டர் எட்வார்ட் கென்னடி ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்வதற்கு ஒரு கால அட்டவணையை தயாரிக்க வேண்டுமென்றும் குறைந்தபட்சம் 12,000 துருப்புக்களை உடனடியாக விலக்கிக்கொள்வது தொடங்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கும் வீடியோ படம் திரையிட்டு காட்டப்பட்டது.

"உடனடியாக 12,000 அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியாக வேண்டும் என்று செனட்டர் கென்னடி கேட்டிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று NBC யை சார்ந்த Tim Russert கேட்டார்.

"இல்லை" கெர்ரி பதிலளித்தார்

"அமெரிக்க துருப்புக்களை விலக்கி கொள்வதற்கு ஒரு திட்டவட்டமான கால அட்டவணை இருக்கவேண்டுமென்று நீங்கள் நம்புகிறீர்களா?" ரஸ்ஸெர்ட் தொடர்ந்து கேட்டார்.

"இல்லை" என கெர்ரி திரும்ப பதிலளித்தார்.

இந்த தொலைக்காட்சி கருத்து பரிமாற்றத்தின் தொனி பதுங்கிப்பாயும் இதழியலுக்கு நேர் எதிரானது. கென்னடியின் முன் மொழிவிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பை கெர்ரி வரவேற்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது மற்றும் புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் கெர்ரி ஆரத்தழுவிக்கொண்டிருக்கிறார் - இதன் பொருள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதாகும்.

அதே நேரத்தில், கம்பெனி நிர்வாக ஊடகங்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னோடி தலைவர் ஈராக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற எல்லா முக்கியமான பிரச்சனையிலும் இரண்டு பெருவர்த்தக கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

"இப்போது, தெளிவாக நாம், ஈராக்கியருக்கு அதிகாரத்தை தருவதற்கு முன் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது துருப்புக்களை விலக்கிக் கொள்ள முடிகின்ற நிலை ஏற்பட வேண்டும்." என்று கெர்ரி அந்தப் பேட்டியில் அறிவித்தார். ஈராக் போருக்கு கூடுதலாக 80 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய புஷ் நிர்வாகம் கோரிக்கை விடுக்கும்போது அதை ஏற்று அவர் வாக்களிப்பாரா என்று கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்தபோது "இது எல்லாவகையிலும் ஆம்" என்று சொன்னார்.

"பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும்" தருவது என்பது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் எதிர்ப்பு கிளர்ச்சியை ஒடுக்குவது, என்பதை உள்ளடக்கிய சொற் சிலம்பம்தான். அதனுடைய பொருள் என்னவென்றால் மேலும் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களை கொலை செய்வதும் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் மேலும் நூற்றுக்கணக்கில் போர் வீரர்களை பலி கொடுப்பதும்தான். இதற்காகவே அந்த 80 பில்லியன் டாலர்கள் செலவாகும்.

கெர்ரியின் தேர்தல் பிரச்சாரத்தின் வளைவரையை தொடர்ந்து அவரது போக்கை அம்பலப்படுத்துகிற வகையில் இந்தப் பேட்டி அமைந்திருக்கிறது. இந்த செனட்டர் ஜனநாயகக் கட்சி தொடக்கநிலை தேர்தல்களில் தன்னை போர் எதிர்ப்பு வேட்பாளர் என்று நாடகமாடினார் மற்றும் புஷ் "தவறான வழியில்" அமெரிக்க மக்களை இட்டுச் சென்றதாக குற்றம் சாட்டினார். இப்படிப்பட்ட நாடகத்தினால் அந்த செனட்டர் தொடக்கநிலைத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் தகராறுக்கு இடமில்லாத வகையில் ஒரு முன்னோடி வேட்பாளராக அவர் உருவானதும் ஆக்கிரமிப்பிற்கு தனது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்ட முந்திக் கொண்டார். தேவையான துருப்புக்களை அனுப்ப புஷ் நிர்வாகம் தவறிவிட்டதாக கண்டனமும் கூட தெரிவித்தார்.

மிகப்பெருமளவில் இருந்த ஜனநாயகக் கட்சியின் போர் எதிர்ப்பு அடித்தளத்தை ஏமாற்றும் முயற்சியை விட்டு அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினருக்கு உறுதியளிக்க தொடங்கினார். போரை நடத்துவதற்கு குடியரசுக் கட்சி வேட்பாளர் - ஜனாதிபதியை விட தன்னை நம்ப வேண்டும் என்று உறுதியளித்தார். கெர்ரி இப்போது இந்த பேட்டியை தந்திருப்பதன் மூலம் தேர்தலுக்கு முந்திய பிரசாரத்தில் தான் எடுத்து வைத்த அறிவிப்புக்களில் தேவையில்லாதவற்றை தள்ளிவிட்டு தேவையானவற்றை சேர்த்துக்கொள்கிறார்.

இப்போது தோல்வியில் கெர்ரி தேர்தல் "ஒற்றுமைக்கான கட்டளை" என்றும் "பொது அடிப்படையைக் கண்டுபிடிக்கும் அரங்கு" என்றும் கூறுகிறார். அந்த அரங்கு தெளிவாக ஈராக் கொலைகளங்களில்தான் இருக்கிறது.

நவம்பர் தேர்தலில் கெர்ரி தோல்வியடைந்ததற்கு காரணம், ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எந்தவித ஒரு உண்மையான மாற்றையும் தர விரும்பவில்லை மற்றும் தர இயலவில்லை என்பதாகும். "பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்", மற்றும் ஈராக்கை வென்றெடுத்து அதன் எண்ணெய் இருப்புக்களை அதன் ஒரு அங்கமாக இணைத்து கொண்ட பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டம் என்று கூறப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த பொய்யையும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தழுவிக்கொண்டார்.

பேட்டி கண்ட ரஸ்ஸெர்ட், News Week வார இதழில் தேர்தலுக்குப் பின்னர் வாஷிங்டனிலுள்ள AFL - CIO தலைமை அலுவலகங்களில், ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களிடையே கெர்ரி ஆற்றிய உரை பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த செய்தியின்படி, கெர்ரி "மக்கள் கருக்கலைப்பை விரும்பவில்லை என்று புரிந்து கொள்கிற வகையில் புதிய வழிவகைகள், அந்தக் குழுவிற்கு தேவை என்று கூறினார். ஜனநாயகக் கட்சிக்காரர்களும் அதிக அளவில் வாழ்விற்கு ஆதரவான வேட்பாளர்களை வரவேற்க வேண்டும்" என்றார். அந்த வார இதழ், "அப்போது அந்த அறையில் ஒரு பெருமூச்சு கிளம்பியது" என குறிப்பிட்டிருந்தது.

அந்த செய்தி சரியானதா என்று கேட்கப்பட்டபோது, கெர்ரி அளித்த பதிலில் "அது துல்லியமாகத்தான் வெளியிட்டிருக்கிறது" என்று கூறினார். அதற்குப் பின்னர் அவர், கருக்கலைப்பு செய்வதற்கு பெற்றோர்களது சம்மதம் தேவை, என்ற சட்டத்தை ஆதரிப்பதாக கூறினார். அந்த நடவடிக்கை மூலம், கருக்கலைப்பு உரிமைகள் கடுமையாக சீர்குலைக்கப்படுகின்றன, வயது வராதவர்களின் உடல்நலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது, மற்றும் மருத்துவ சிகிச்சையில் சட்ட அடிப்படையில் குற்றங்கள் நடப்பதற்கு வகை செய்யப்படுகிறது.

2004 தேர்தலில் தங்களது தோல்வி மூலம் கெர்ரியும் இதர ஜனநாயக கட்சி முன்னணி தலைவர்களும் பெற்ற படிப்பினை புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகளுக்கு மாற்றாக ஒரு திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதல்ல அல்லது ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதல்ல, மாறாக மேலும் வலதுசாரி பக்கம் சாய்ந்தாக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். குடியரசுக் கட்சிகாரர்களோடு போட்டி போட்டு "மதிப்பீடுகள்" பற்றிய வாய்ச்சொல் மற்றும் மத பிற்போக்குத்தனங்களை வளர்க்கும் வேண்டுகோள்களை விடுப்பதில் முன் நிற்கின்றனர்.

Top of page