World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany welcomes conference of war criminals, witch-hunts their opponents

போர்க்குற்றவாளிகள் மாநாட்டை ஜேர்மனி வரவேற்கிறது, அவர்களுடைய விரோதிகளை வேட்டையாடுகிறது

By Justus Leicht
9 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

வரவிருக்கும் வாரங்களில் ஜேர்மனியில் ஈராக்கிய போரைப் பற்றியும், ஆக்கிரமிப்பை பற்றியும் இரண்டு மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

"முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference)" என்பதில் சர்வதேச உயர்மட்ட அரசியல்வாதிகளும், இராணுவ பிரமுகர்களும், அமெரிக்க ஆக்கிரமிப்பு போரையும், ஈராக்கிய நகரங்களை முற்றிலும் தகர்த்தது பற்றியும் நியாயப்படுத்திப் பேச இருக்கின்றனர். ஆக்கிரமிப்பு படைகள் சித்திரவதை முறைகள், கைதிகளை தவறாக நடத்தியவை ஆகியவற்றை பெரிதுபடுத்தக்கூடாது என்றும் ஜேர்மன் அரசாங்கம் இந்தக் குற்றம் சார்ந்த நடவடிக்கைக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கோரும் வகையில் மாநாடு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றஞ்சார்ந்த போரின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவரான அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் பங்கு பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளதை, முனிச் மாநாட்டு அமைப்பாளர்கள் பெரும் வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் துணை மந்திரி டக்லாஸ் பீத்தைத் தனக்குப் பதிலாக அவர் அனுப்ப இருக்கிறார். புதிய கன்சர்வேடிவ்கள் என்று அழைக்கப்டும் குழுவின் முக்கிய தொடர்பாளராக பீத் இருப்பதுடன் ஈரானுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவாளரும் ஆவார்.

இரண்டாவது மாநாடு பேர்லினில் சற்று ஆடம்பரக் குறைவான சூழலில் நடக்க இருக்கிறது. "ஈராக்கிய ஆக்கிரமிப்பு, எதிர்ப்பு, சர்வதேச ஒற்றுமை பற்றிய சர்வதேச மாநாடு" என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இடதுசாரிகள், சமாதானவாதிகள், அரபு தேசியவாதக் குழுக்கள், சுய சிந்தனையாளர்கள் கூட்டமைப்பில் இருந்து Junge Welt செய்தித்தாள் வரை தனிப்பட்ட நபர்கள், அமைப்புக்கள் ஆகியவை இதை ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கூட்டத்தின் நோக்கம், ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக தோன்றியுள்ள, ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு எதிரான எழுச்சியை விவாதிக்கும் வகையில் உள்ளது.

இந்த அமைப்பாளர்களில் ஒருவரான ஜோச்சிம் கில்லர்ட், ஒரு பேட்டியில் விளக்கியதாவது: "பயங்கரவாத தாக்குதலுக்கு முழு எதிர்ப்பும் பொறுப்பு எனக் கூறமுடியுமா? எதிர்ப்பு சக்திகளில் பல்வேறு பிரிவினர் எத்தகைய இலக்குகளை தொடர்கின்றனர்? நாங்கள் இவற்றையும், மற்ற பிரச்சினைகளையும் விவாதிக்க விரும்புகிறோம். ஈராக்கிய மக்களுடன் எவ்வாறு சிறந்த ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்ற பிரச்சினையை, இது மையமாகக் கொண்டிருக்கும்." அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் ஈராக்கிய ஆக்கிரமிப்பு சட்டவிரோதம், ஈராக்கியர் எதிர்ப்பு முற்றிலும் நெறியானது என்ற கருத்து இந்த மாநாட்டின் அமைப்பாளர்களிடம் வெளிப்படையாக உள்ளது.

அரசாங்கம், செய்தி ஊடகம் இவை இந்த இரு மாநாடுகள் பற்றி கொண்டுள்ள நிலைப்பாட்டை ஒப்பிடுவது பயனுடையதாக இருக்கும். முனிச் மாநாட்டை பொறுத்த வரையில் அது சுமுகமாக நடத்தப்படுவதற்கும், போர் எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இருந்து பங்கு பெறுபவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு உறுதியளிக்கும் வகையில் அனைத்தும் செய்யப்பட்டுள்ளபோது, பேர்லினில் நடக்கவிருக்கும் மாநாடு பற்றி ஒற்று அறிதல், இழிவுபடுத்தி பேசுதல், குற்றச் சாட்டிற்குட்படுத்துதல் என்ற அனைத்தும் நடப்பதோடு, இறுதியில் அதன் மீது தடையும் வரும் என்று தோன்றுகிறது. தாங்கள் எந்த குற்றங்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும் பேர்லின் மாநாட்டை ஒட்டி எதிர்பார்க்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளபோதும்கூட, இந்த நிலமை காணப்படுகிறது.

உள்துறை பேர்லின் ஆட்சிக்குழு உறுப்பினரான எர்ஹர்ட் கோர்டிங் (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி-SPD), நகரத்தின் உளவுத்துறை பணிக் குழுவினரிடம் இந்த மாநாடு "சதாம் ஹுசைனுடைய பழைய ஆட்சியின் ஆதரவாளர்களாலும்" இடதுசாரிக் குழுக்களாலும் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனவரி 13ம் தேதி தெரிவித்தார். தன்னுடைய முதல் குற்றச் சாட்டிற்கு கடுகளவு சான்று கொடுக்க இவரால் இயலாமற் போனாலும், எந்த விமர்சனமுமின்றி, அனைத்து ஜேர்மன் செய்தி ஊடக தகவல்களிலும் இது பல முறை தெரிவிக்கப்பட்டது

"சதாம் ஹுசைனுடைய ஆதரவாளர்கள் பேர்லினில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்" என்ற கருத்தைத்தான் சற்றே மாறுதல்களுடன் அனைத்து தலையங்கங்களும் கூறின. மாநாட்டின் அமைப்பாளர்கள் உண்மையில் பழைய ஈராக்கிய சர்வாதிகாரி மற்றும் பாத்திஸ்ட் ஆட்சியில் இருந்து தங்களைத் தெளிவாகத் தொலைவில் நிறுத்திக் கொண்டுள்ளனர், என்ற பொது நிலைப்பாட்டை இந்தச் செய்தி ஊடகங்கள் கருத்திற்கொள்ளவில்லை; ஹுசைனுக்காக "ஒரு சொட்டுக் கண்ணீர்கூட ஒருவரும் விடவில்லை" என்றும் அவருடைய ஆதரவாளர்கள் எவரும் மாநாட்டில் கலந்து கொள்ளுவர் என்ற எதிர்பார்ப்பும் இல்லை என்றும் கில்லர்ட் தெரிவித்தார். நகரச் செய்தி ஏடான B.Z., தன்னுடைய செய்தி வெளியீட்டிற்கு உளவுத் துறைதான் ஆதாரம் கொடுத்ததாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

மாநாட்டை தடை செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று ஒப்புக் கொண்ட போதிலும்கூட, கோர்ட்டிங் அறிவித்ததாவது: "என்ன அங்கு நடக்க உள்ளது என்பதை நாங்கள் கவனிப்போம்."

Spiegel on-line, மாநாட்டிற்கு எதிரான செய்தி ஊடக பிரச்சாரத்தை சில உண்மைகளுடன் கூற முற்பட்டு அம்முயற்சியில் இழிவாக தோல்வியடைந்தது. மாநாட்டின் ஆதரவாளர்களில் ஒருவர்தான் "சதாம் ஹுசைன் ஆதரவாளர்" என்று கூறப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளார்; ஜேர்மனியின் கீழைக் கல்விக்கூடம் (German Orient Institute) எனப்படும் ஒரு மிகப் புகழ்வாய்ந்த, கெளரவமான, அறிவியல் சிந்தனைக்குழுவில் ஓர் உறுப்பினராக இருக்கும் அஜிஸ் அல்காஜாஸ் தான் அவர். இவரைப் பொறுத்தவரையில்கூட, Spiegel on-line கட்டுரை, இவர் "பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமுடையவரா" என்பதே சந்தேகத்திற்குரியது என்று ஒப்புக் கொண்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், இதே வலைத் தளத்தில் முந்தைய நாள் "சதாம் ஹுசைனுடைய ஆதரவாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்" என்ற தலைப்பில் வந்திருந்த ஒரு கட்டுரை முற்றிலும் போலியான கட்டுரையாகும்.

ஆனால், கோர்ட்டிங்கோ, செய்தி ஊடகப் பிரிவுகளோ, உண்மையைத் தவறான முறையில் வெளியிட்டதற்காக தங்களுடைய மன்னிப்பையும் கொடுக்கவில்லை, தவறை திருத்தவும் இல்லை. அவர்களுடைய முன்னுரிமை, பிறரை அவதூறுக்கு உட்படுத்தவேண்டும், மிரட்ட வேண்டும், முடிந்தால் ஈராக்கிய எழுச்சியாளர், ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பு இவற்றின் ஒற்றுமையை குற்றம் சார்ந்தது எனக் காட்டவேண்டும் என்பதுதான்.

சுதந்திர சிந்தனையாளர்களின் கூட்டமைப்பின் தலைவரும், மற்றும் மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவருமான Klaus Hartmann, கோர்ட்டிங்கிற்கு எழுதிய பகிரங்க கடிதம் ஒன்றில் சரியாக வர்ணித்துள்ளதாவது:

"நூரெம்பேர்க் போர்க் குற்றங்கள் நடுவர் மன்றத்தின் விதிகளை ஒட்டி, ஒரு பெரிய குற்றமான இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடவும், சர்வதேச சட்டங்களையும் காக்க எவர் கருதுகின்றனரோ, அவர்கள் அதையொட்டி எந்தக் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்க தலைவருடைய "ஆதரவாளராகவும்" ஆகிவிடமாட்டார்கள். சர்வதேச சட்டத்தை கடுமையாக காக்கவேண்டும் என்ற கருத்து உடையவர்களுக்கு, அமெரிக்காவும், அதைத் தாழ்ந்து பணிந்து நிற்கும் கொலைகார கூட்டணியும், ஈராக்கிற்கு எதிரான போர், சர்வதேச சட்டத்தை மீறியது என்றும், ஆக்கிரமிப்பு ஒருவகையான பயங்கரவாதம் என்றும், அதற்கெதிரான எழுச்சி சட்டபூர்வமானது என்ற உணர்வும்தான் ஏற்படும். சதாம் ஹுசைன் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகூட பரிவு உணர்வு அல்லது நிராகரிப்பு என்ற பிரச்சினையினால் எழவில்லை; அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் அவர் செய்துள்ள நிரூபிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்காக, அவரை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்ற பொருளைத் தராது; ஆனால், அது சுதந்திரமான, இறைமை பெற்ற ஈராக்கினால் செய்யப்பட வேண்டுமே ஒழிய, ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களுடைய கைப்பாவைகள் ஆகியோரால் செய்யப்படக் கூடாது."

"இந்தக் காலகட்டத்தில்" மாநாட்டை தடைசெய்வதற்கு தக்க காரணங்கள் இல்லை என்று கூறப்பட்டிருக்கும் கோர்ட்டிங்குடைய அறிவிப்பிற்கு "தொடரலாம்" என்ற அடையாளம் வந்துவிட்டதாக கூறுவதற்கு இல்லை. கடந்த செப்டம்பர் மாதம், ஒரு "அரேபிய-இஸ்லாமிய" மாநாடு, பாலஸ்தீனிய, ஈராக்கிய எழுச்சிக்கு ஆதரவாக பேர்லினில் நடத்தப்படுவதாகத்தான் இருந்தது. அப்பொழுதும் கோர்ட்டிங் "இந்த மாநாடு பயங்கரவாதிகளின் மாநாடாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று அறிவித்திருந்தார்.

ஆனால், செய்தி ஊடகம் "போர்க்குணமிக்க இஸ்லாமிய வாதிகள்" என்ற கூற்றை சூனியக்காரத்தன வெறியுடன் தொடக்கியவுடன், அதிலும் குறிப்பாக, ஜேர்மன் உள்துறை மந்திரி ஓட்டோ ஷிலி மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியவுடன், கோர்ட்டிங் முற்றிலும் மாறிய நிலையில் "கிளர்ச்சி" என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தி, மாநாட்டை தடைசெய்ததை நியாயப்படுத்தினார்.

ஆனால் மக்களை தூண்டிவிடுதல், பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு, குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொது இசைவு தந்தது போன்ற குற்றச் சாட்டுக்களை மாநாட்டின் அமைப்பாளர்களின் மீது சுமத்தியவர்கள்மீது, அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டாட்சியின் குற்றவியல் அலுவலகம், பின்னர் விசாரணையை கைவிட்டுவிட்டது. வேறுவிதமாகக் கூறினால் தடையை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட வாதங்கள் முற்றிலும் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டன.

ஆயினும், இதற்கு காரணமாக இருந்தவர்களை பொறுத்தவரையில், தடையற்ற பேச்சுரிமை, கூட்டம் போடும் உரிமை இவற்றை தாக்கும் அவர்களுடைய அடுத்த நடவடிக்கைக்கு இது எந்த முட்டுக்கட்டை போடுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தாது.

Top of page