World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: amid mounting crises, Musharraf twists and turns

பாக்கிஸ்தான்: பெருகிவரும் நெருக்கடிக்கிடையில் முஷரப் வளைகிறார், திரும்புகிறார்

By Keith Jones and Vilani Peiris
31 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

தனது வீரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற வகையில், பாக்கிஸ்தான் இராணுவ சர்வாதிகாரி ஜனாதிபதி, டிசம்பர் 2003-ல் தன்னை கொல்வதற்கு நடைபெற்ற இரண்டு நவீன முயற்சிகளுக்கு அப்பால், தனக்கு இன்னும் ஒன்பது வாழ்க்கைகள் இருப்பதாக புதிர் போட்டார். அப்படியிருந்தும் 12 மாதங்களுக்கு பின்னர், பர்வேஷ் முஷாரஃப் பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் தலைமை பொறுப்பிலிருந்து 2004 இறுதிவாக்கில் இறங்கிவிடுவதாக அளித்திருந்த அவரது உறுதிமொழிக்கு துரோகம் இழைத்துவிட்டு நாட்டின் ஜனாதிபதியாகவும், பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைவராகவும் குறைந்த பட்சம் 2007 வரை நீடிக்கப்போவதாக அறிவித்தார். புஷ் நிர்வாகம் அடிக்கடி தனது ''பயங்கரவாதத்தின் மீதான போரில் முக்கிய கூட்டாளி என்று எடுத்துக்காட்டி வருகின்ற தளபதி தெளிவாகவே, தனக்கு இன்னும் பல வாழ்வுகள் இருக்கின்றன என்பதை சந்தேகிக்கிறார்.

அது பக்கத்து ஈரானுக்கெதிராக இராணுவ தாக்குதல் நடத்த ஆயத்தமாகி கொண்டு வருகின்றபோது வாஷிங்டனோடு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக முஷாரஃப் ஆயத்தமாகி வருவது தொடர்பாக படைஅதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து கொண்டு வருகின்றன, அதேபோல் இந்தியா தொடர்பாக சமாதான சமிக்கைகளை காட்டி வருவது தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து வருவதாகவும், இந்தியா வைத்திருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவிற்கெதிரான கிளர்ச்சிக்கு இராணுவ ஆதரவு தருவதை குறைத்துக் கொள்வதும் அடங்கும் என்று நம்பகத் தன்மையுள்ள ஊடகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Asia Times On-Line-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியின்படி, "1999 அக்டோபர் 12-ல் அவர் ஆட்சியை பிடித்துக்கொண்ட பின்னர், முதல் தடவையாக முஷாரஃப்பும் அவரது அதிகாரத்தின் உண்மையான மூலாதாரமான அவரது லெப்டினட் ஜெனரல்கள் சிலரும் ...... இப்போது ஒரே கருத்தில் இல்லை என்பதை கோடிட்டு காட்டுகின்ற சமிக்கைகள் உள்ளன."

இதற்கிடையில், தமது ஆட்சியின் செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்கு முதலாளித்துவ எதிர்க்கட்சிகளிடையே உள்ள சக்திகளை தனக்கு ஆதரவாக திரட்டுவதற்கு முஷாரஃப் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. பலூச்சிஸ்தானில் ஒரு மலைவாழ் மக்கள் கிளர்ச்சி அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தலைவலியாகி விட்டது.

பல மாதங்களாக பாக்கிஸ்தான் அரசாங்க அமைப்புகள் மீதும் பலூச்சிஸ்தானிலுள்ள இராணுவத்தினர் மீதும், தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன, ஆனால் ஜனவரி 11-ல் பலூச்சி தேசியவாதிகள் இதுவரையில்லாத மிகவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாக்குதலை நடத்தி சூய்யில் உள்ள, நாட்டின் பிரதான எரிவாயு கிணற்றில் அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ளனர். பல மணி நேரம் நடைபெற்ற ஒரு சண்டையில் பாக்கிஸ்தான் அரசிற்கு சொந்தமான பெட்ரோலியம் லிமிடெட்டின் பல கட்டிடங்கள் பிடிக்கப்பட்டன மற்றும் எட்டு பாதுகாப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையினால் இயற்கை எரிவாயு இயந்திரத்திற்கு (Compressor) ஏற்பட்ட சேதத்தின் பொருள் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு மேல் சூய் எரிவாயு கிணற்றிலிருந்து பஞ்சாபிலும் மற்றும் சிந்துவிலும் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் மில்லியன் கணக்கான வீடுகளுக்கும் எரிவாயு கிடைக்காது. அரசாங்க அதிகாரிகள் மதிப்பீட்டின்படி ஒரு நாளைக்கு 150 முதல் 200 மில்லியன் ரூபாய்கள் இழப்பு ஏற்படும், தோராயமாக இது 2.5 முதல் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

திரும்ப திரும்ப ரயில்களுக்கான வழித்தடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் பலூச்சிஸ்தானில் அனைத்து இரவு ரயில் சேவைகளையும் காலவரையின்றி நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசிற்கு சொந்தமான ரயில்வே நிறுவனத்திற்கு சென்றவாரம் ஏற்பட்டது.

பலூச்சிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராக பெருகிவரும் கிளர்ச்சிக்கு முஷாரஃப்பின் உடனடி பதில் பாரியளவு இராணுவ எதிர்நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியிருப்பதாகும். "எங்களை அழுத்தாதீர்கள், இது 1970கள் அல்ல நீங்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடி மலைகளில் ஒளிந்து கொண்டீர்கள், இப்போது அது நடக்காது. (இது 1970களின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சியை பற்றி குறிப்பிடுவதாகும். அப்போது அன்றைய பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் கட்டளைப்படி, இராணுவம் கொடுரமாக ஒடுக்கியது) இந்த முறை உங்களுக்கு எது தாக்கியது என்றே தெரியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்."

5000 ஆயுதப்படைகளின் ஊழியர் உட்பட 20,000 பாதுகாப்பு துருப்புக்கள் பலூச்சிஸ்தானுக்கு திரும்ப அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இராணுவ மற்றும் இராணுவ ஆதரவு அரசாங்கம் முன்னாள் சிட்டி வங்கி அதிகாரி செளகத் அசிஸ் தலைமையிலான அரசாங்கம் இதுவரை தாங்கள் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறுவதை மிகக்கடுமையாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது, எரிவாயு உரிமங்களில் பலூச்சிஸ்தானுக்கு கூடுதல் பங்கு தரவேண்டும் மற்றும் மத்திய அரசாங்க மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் அதிக பங்கு தரவேண்டும் என்ற பலூச்சிஸ்தானின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் செவிமெடுக்க தாயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியான MQM (இராணுவ ஆதரவு அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொண்டுள்ள கட்சிகளில் ஒன்று) மற்றும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பலுசிஸ்தான் நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கு, வன்முறையை பயன்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றன. பாக்கிஸ்தானின் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளேயே பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. முஷாரஃப் ஆட்சி பஞ்சாபியர் ஆதிக்கம் செலுத்தும் இராணுவத்திடமும் அதிகாரத்துவத்திடமும் அரசு அதிகாரங்களை மேலும் குவித்திருப்பதால் தேசிய இனப் பதட்டங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன, அவற்றால் பாக்கிஸ்தான் நாட்டின் ஐக்கியத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

பாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் பலூச்சிஸ்தான் பரப்பளவில் மிகப் பெரியது, ஆனால் மக்கள் தொகையில் மிகக்குறைவானது. இயற்கை வாயு, எண்ணெய், தாமிரம் மற்றும் தங்கம் உட்பட செறிவான இயற்கை வளங்கள் கிடைத்தாலும் பாக்கிஸ்தானிலேயே அது பரம ஏழையான பகுதி ஆகும்.

பலூச்சிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்தை நடத்துவதில் மலைவாழ் இனங்களின் தலைவர்கள் தலைமை தாங்குகின்றனர். பொருளாதார வளர்ச்சியுடன், ஆப்கான் அகதிகளும் மற்றும் பாக்கிஸ்தானியரும் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக அந்த மாகாணத்திற்குள் குடியேறியிருப்பதால் தங்களது அதிகாரமும் சலுகைகளும் வீழ்ந்துவிட்டதை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களிடையே பொருளாதார வாய்ப்புகள் மற்றும் ஜனநாயகம் இல்லாதது தொடர்பாக நிலவுகின்ற ஆழமான வெறுப்புணர்வுகளை இந்தக் கிளர்ச்சி அறிவிக்கிறது.

பலூச்சிப் போராட்டம் பாக்கிஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் பெரும்பகுதி பத்திரிகை தலைப்பு செய்திகளாக இடம்பெற்றிருந்தாலும் முஷாரஃப் ஆட்சியையும், பாக்கிஸ்தானின் ஆளும் செல்வந்த தட்டினரையும் எதிர்கொண்டுள்ள பல்வேறு வகைப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளில் ஒன்றுதான்.

ஒரு தொடர்ச்சியான பூகோள-அரசியல் மற்றும் பொருளாதார நெருக்குதல்களின் கீழ், முஷாரஃப் பாக்கிஸ்தானின் ஒரு பரந்த உழைக்கும் மக்களிடையே மிகப்பெரும் அளவிற்கு செல்வாக்கை இழந்துவிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார், ஆனால், அது செல்வந்த தட்டின் முக்கியமான பிரிவுகளை சார்ந்தவர்களது அபிலாஷைகள் மற்றும் அக்கறைகளை வெட்டி முறிப்பதாகும் மற்றும் அவர்களது பாரம்பரிய ஆதரவுகளான முஸ்லீம் மதத்தலைமை முதல் இராணுவ புலனாய்வு ஸ்தாபனம் வரை நிலவிவந்த ஆதரவு உறவுப்போக்குகளையும் வெட்டி முறிப்பதாக அமைந்துவிட்டது.

பாக்கிஸ்தான்: ஆசியாவில் ஒரு அமெரிக்காவின் உந்துதளம்

அது அமெரிக்க பத்திரிகைகளில் ஏறத்தாழ குறிப்பிடப்படாமல் விடப்பட்டுவிட்டது, ஆனால், தேசிய புலனாய்வு சட்டத்தை சென்ற மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது, அரசாங்கம் நியமித்த 9/11 கமிஷன் அளித்த பரிந்துரைகளுக்கேற்ப அந்த சட்டம் இயற்றப்பட்டது. "முஷாரஃப் தெளிவான சிந்தனையுள்ள நிதானப்போக்கில் இருப்பாரானால்... அமெரிக்கா கடுமையான தேர்வுகளை செய்வதற்கும் விரும்பியாக வேண்டும் மற்றும் பாக்கிஸ்தானின் எதிர்காலத்திற்கு நீண்டகால உறுதிமொழி தரவேண்டும்" என்ற கமிஷனின் பரிந்துரைகளுக்கு சட்டபூர்வமான ஆதரவு தருவதற்காக சென்றமாதம் அந்த சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் ஜனாதிபதி புஷ் 180 நாட்களுக்குள் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றி தகவல் தரவேண்டும். அந்தத் தகவல்களில், "பாக்கிஸ்தானுடன் அமெரிக்கா எதிர்காலத்தில் நீண்ட உறவுகள் வைத்துக்கொள்வதற்கான ஒரு விரிவான மூலோபாயத்தை முன்மொழிவு செய்வதாக இருக்க வேண்டும்" மற்றும் பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதற்கான எட்டு நோக்கங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவது", ''பேரழிவு ஆயுதங்கள் பரவாது தடுப்பது" மற்றும் நவீன-தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்வதாகும்.

பாக்கிஸ்தானுடன் ஒரு நீண்டகால உறவை நிலைநாட்டுவதற்கான உறுதிமொழி குறைந்தபட்சம் ஒரு பகுதி, கெடுபிடிப்போரின் போது வாஷிங்டன் திரும்ப திரும்ப பாக்கிஸ்தானை ஒரு முன்வரிசை நாடாக முன்னிறுத்தியது, ஆனால், அமெரிக்காவின் பூகோள அரசியல் மூலோபாயம் மாறியதும் பாக்கிஸ்தானை புறக்கணித்து விட்டது என்று பாக்கிஸ்தானின் செல்வந்தத்தட்டினர் தெரிவித்த விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முஷாரஃப் வாஷிங்டனின் செப்டம்பர் 2001 கோரிக்கைகளை பணிந்து ஏற்றுக்கொண்ட பின்னர், தலிபான் ஆட்சியுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்ட பின்னர், ஆப்கானிஸ்தானை வென்றெடுப்பதற்கு அமெரிக்கா பாக்கிஸ்தானை ஒரு உந்து முனையாக பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கிய பின்னர் இஸ்லாமாபாத் பல பில்லியன் டாலர்களை அமெரிக்க உதவியாக பெற்றது, அதன் பொதுக்கடன்களில் பெரும்பகுதி மறுகடனாக மாற்றப்பட்டது மற்றும் அமெரிக்க ஆயுதச் சந்தைகளில் இருந்து நவீன இராணுவ சாதனங்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.

பாக்கிஸ்தான் இராணுவம் முஷாரஃப்பிற்கு மிக வலுவான அரணாக உள்ளதற்கு அடுத்தபடியாக, புஷ் நிர்வாகம் இருப்பது அதன் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குள் ஆக்கிரமிப்பு மற்றும் நவீன - காலனித்துவ வேட்கையும் அவரது ஆட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

பாக்கிஸ்தானில் புஷ் நிர்வாகத்திற்கு மகத்தான பொதுமக்களது எதிர்ப்பு நிலவுகிறது, குறிப்பாக ஈராக்கை சட்ட விரோதமாக பிடித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு நிலவுகிறது. பாக்கிஸ்தான் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்காவிற்கு உதவி வழங்கி வருகிறது என்று அம்பலத்திற்கு வந்திருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் குற்றங்களுக்கு இஸ்லாமாபாத் ஒரு உடந்தையாக செயல்படுகிறது என்ற கண்ணோட்டத்தை மேலும் உசுப்பிவிடவே செய்யும். அது பாக்கிஸ்தானுக்கெதிராக தெஹ்ரான் நடவடிக்கை எடுப்பதற்கும் வழி திறந்துவிடும் மற்றும் இந்தியாவுடன் உறவுகளை மேலும் சிக்கலாக்கிவிடும், அது எரிசக்தி வளங்களை தேடிக்கொண்டிருக்கிறது. மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்ததில் கவலை கொண்டிருக்கிறது, ஈரானுடன் நெருக்கமாக உறவுகளை நிலைநாட்டிக்கொள்வதில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறது.

சில பாக்கிஸ்தான் அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற பலூச்சிஸ்தான் சம்பவங்களில் ``ஒரு மூன்றாவது தரப்பு`` சம்மந்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். பலூச்சிஸ்தான் எல்லையில் ஈரான் உள்ளது, அங்கு கணிசமான பலூச்சி மக்கள் வாழ்கின்றனர், எனவே இது ஈரானை குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் பாக்கிஸ்தான் அரசாங்கம் ஈரானுக்கு அதன் நட்புறவு நோக்கங்கள் குறித்து மீண்டும் உறுதியளிக்க தீவிரமாக முயன்று வருகிறது. ஈரானிய அணு நிலையங்களை அடையாளம் காட்டுவதில் அமெரிக்காவிற்கு உதவி வருகிறது மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகள் ஈரானில் நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும், பலூச்சிஸ்தானிலிருந்து ஈரானுக்குள் புகுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் வந்திருக்கிற செய்திகளை கடுமையாக பாக்கிஸ்தான் மறுத்துள்ளது, மேலும் பதட்டங்களை பெருக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இஸ்லாமாபாத் ஈரான் மீது ஒரு நேரடியான குற்றச்சாட்டை கூறாதிருக்கக்கூடும்.

பத்திரிகை செய்திகளின்படி, அமெரிக்காவுடன் பாக்கிஸ்தான் ஒரு கொத்தடிமை போன்று உறவுகளை கொண்டிருப்பது இராணுவத்தின் பிரிவுகளின் மத உணர்வுகளையும், தேசியவாத உணர்வுகளையும் கிளறிவிட தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பட்டாணிய இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் பெரும் பகுதியில் சென்ற ஆண்டு பாரியளவு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தொடர்பாக பாக்கிஸ்தான் இராணுவத்திலுள்ள பட்டாணி அதிகாரிகள் வருந்துகின்றனர் (அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்திருக்கிறது தெற்கு வஷிரிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் ஆதரவாளர்களை தேடுவதற்கான நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் துருப்புக்கள் எடுத்திருக்காவிட்டால் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து புகுந்திருக்கக்கூடும் மற்றும் அவர்களே தேடுதல் வேட்டைகளை நடத்தியிருப்பார்கள் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் கூறியது). குறிப்பாக பாக்கிஸ்தான் இராணுவத்திலுள்ள ஷியா அதிகாரிகள் ஈரானுக்கெதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கிஸ்தான் சதி செய்து கொண்டிருப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பர் என்று பத்திரிகைகளில் ஊகச் செய்திகள் வந்திருக்கின்றன.

இந்திய-பாக்கிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளால் பெருகி வரும் அச்சங்கள்

அமெரிக்காவிடமிருந்து வந்த நெருக்குதல்கள் காரணமாக காஷ்மீர் கிளர்ச்சி இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், இந்தியா-பாக்கிஸ்தான் மோதலுக்கும் ஒரு ஊற்றுக்கால் என்றும் அது ஆபத்தான குழப்பத்தை உருவாக்கி கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா கருதியதால் முஷாரஃப் அதுவரை இந்தியாவிற்கு எதிரான ஒரு வெறியர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்----2003 கடைசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டார், காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையில் போர் நிறுத்த பிரகடனம் செய்தார், அதற்குப் பின்னர் இந்தியாவுடன் ஒரு விரிவான சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றார்.

இந்த மாற்றத்திற்குப் பின்னணியில் முஷாரஃப்பின் கணிப்பும் அடங்கியிருந்தது, இந்தியாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு இப்போது தான் தக்க தருணம் என்று கருதினார். ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ அனுகூலங்கள் மிகப் பெரிய அளவிற்கு வளரும் மற்றும் இப்போது அமெரிக்காவானது இந்திய-பாக்கிஸ்தான் மோதலில் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதிலும் ஒரு வலுவான பாக்கிஸ்தானை நிலைநாட்டுவதிலும் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை அவர் கணித்தார்.

தற்போது ஓராண்டிற்கு பின்னரும் அந்த சமாதான முன்னெடுப்பு முடங்கிக் கிடக்கிறது. பாக்கிஸ்தான் தினசரி பத்திரிகையான டான் தந்துள்ள தகவலின்படி, ``இந்தியாவும், பாக்கிஸ்தானும் பழைய கெட்ட நாட்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு நெருங்கி வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது.``

பாக்கிஸ்தானுடன் வர்த்தக மற்றும் இதர உறவுகளை வளர்ப்பதற்கு இந்தியா ஆர்வத்தோடு இருந்தாலும், காஷ்மீரில் தற்போதுள்ள எல்லையை மாற்றுவது சம்மந்தப்படாத எந்த தீர்வு பற்றியும் பிடிவாதமாக உள்ளது.

இதற்கிடையில் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் 1960-ஆம் ஆண்டு சிந்து நதி தண்ணீர் ஒப்பந்தத்திற்கு சட்ட விளக்கம் தருவது தொடர்பாக கடுமையான மோதல் எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது கட்டப்பட்டு வரும், பஹிலிகார் அணை சட்ட விரோதமானது என்று இஸ்லாமாபாத் கூறுகிறது. அது உலக வங்கி நடுவராக செயலாற்ற வேண்டுமென்று கோரியுள்ளது, ஒரு அதிகாரி ``சாபப் பெட்டி`` என்று வர்ணித்திருப்பதைபோல், வங்கி சம்மந்தப்படுவதில் எச்சரிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்திய-பாக்கிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தைகள் பாக்கிஸ்தானிலும், இந்தியாவிலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. பல தசாப்தங்களாக பாக்கிஸ்தான் செல்வந்த தட்டினர், பாக்கிஸ்தான் ஆட்சியின்கீழ் காஷ்மீரை ஒன்றுபடுத்துவது ஒரு புனிதமான பணி என்று சித்தரித்து வந்தனர், பாக்கிஸ்தானில் தேசிய ஐக்கியத்தை வளர்ப்பதற்காகவும், சமூக பதட்டங்களை திசை திருப்புவதற்காகவும் காஷ்மீரின் பெயரால் இந்தியாவிற்கெதிரான உணர்வுகளை கிளப்பிவிட்டனர்.

மேலும் இந்திய-பாக்கிஸ்தான் மோதலும் பாக்கிஸ்தானின் தேசிய வாழ்விற்கு உடனடி ஆபத்து என்ற கூற்றும் அரசாங்கத்தில் தான் ஒரு பிரதான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை இராணுவம் வலியுறுத்துவதற்கு பிரதானமாக அமைந்திருந்தது.

பெருகிவரும் பொருளாதாரப் பிரச்சனைகள்

தனது ஆட்சியின் கீழ் பாக்கிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர்ப்பு அடைந்திருப்பதாக முஷரப் திரும்பித்திரும்ப பெருமையடித்துக்கொண்டார், பாக்கிஸ்தானை நுட்பமாக ஆராய்கின்ற பார்வையாளர்கள் முஷாரஃப்பின் கூற்றையும் சென்ற மே மாதம் படுதோல்வியடைந்த ''இந்தியா ஒளிர்கிறது'' என்று பிரச்சாரம் முழங்கிய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் கூற்றையும் ஒப்பு நோக்கி ஆராய்கின்றனர்.

இதில் உண்மை என்னவென்றால் பாக்கிஸ்தான் சென்ற ஆண்டு 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை கண்டது, ஆனால் சர்வதேச வெளிநாட்டு முதலீட்டில் மிகக்குறைந்த அளவையே (2004ல் 328 மில்லியன் டாலர்கள்) பெற்றது. 2004 மறு பாதியில் பணவீக்கம் கூர்மையாக உயர்ந்து ஆண்டிற்கு 9 சதவீதமாயிற்று.

மிக முக்கியமாக, அண்மை ஆண்டுகளில் வறுமை கடுமையான உயர்வையும் சமூக துருவ முனைப்படலையும், வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது வாழ்பவர்கள் 35 முதல் 39 சதவீதத்திற்கு இடையில் அதிகரிக்கின்ற நிலையும் ஏற்பட்டது.

பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற ஒரு முயற்சியாக முஷாரஃப் ஆட்சி நவீன- தாராளவாத சீர்திருத்தங்களை முடுக்கிவிடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அமெரிக்க வர்த்தக கவுன்சிலில் ஜனவரி 3-ல் உரையாற்றிய பிரதமர் அசிஸ், ``நாங்கள் ஒரு பெரிய தனியார்மயமாக்கல் செயற் திட்டம் வைத்திருக்கிறோம்`` என்று பெருமையடித்துக் கொண்டார். தனியார்மயமாக்கும் நிறுவனங்களில் உயர் தர வரிசைகளில் பாக்கிஸ்தான் ஸ்டீலும், பாகிஸ்தான் பெட்ரோலும் உள்ளன.

அரசாங்கம் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களிலும், பணத்தைக் கொட்டி வருகிறது, அதே நேரத்தில் சமூகத் தேவைகளை அடியோடு புறக்கணித்துவிட்டது. (பாக்கிஸ்தான் மக்களில் பாதிப்பேர் கல்வியறிவு இல்லாதவர்கள், எனவே உலகிலேயே கல்விக்கு GDP-ல் 2 சதவீதத்திற்கும் குறைந்த தொகையை செலவிடுகிற விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில நாடுகளில் பாக்கிஸ்தான் ஒன்று.)

மின் உற்பத்தி செய்யும் அணைக் கட்டுகள் மற்றும் பாசன திட்டங்கள் ஆகியவற்றை கொண்ட, மிகப்பெரிய மெகா திட்டங்களே இரண்டு காரணங்களால் மிகப்பெரிய மோதல்களுக்கு அடிப்படையாகிவிட்டது. சில திட்டங்களால் ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை இழந்துவிடுவார்கள். வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு மாகாணங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் செல்வந்தத் தட்டினரிடையே மனக் குறைகளையும் வெறுப்பையும் உருவாக்குகின்ற மோதல் புள்ளிகளாக அவை ஆகிவிட்டன.

அவர் அதிகாரத்தை கைப்பற்றியதும், அரசியல் செல்வந்தத் தட்டினரை ஒதுக்கி தள்ளினார். அவர் இப்போது வாஷிங்டனை ஆரத் தழுவியிருப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிப்பதற்கும் பாக்கிஸ்தானின் எதிரியான இந்தியாவுடன் உறவுகளில் ஒரு மூலோபாய மாற்றத்தை உருவாக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கும், நவீன-தாராளவாத ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசியல் செல்வந்தத் தட்டினரின் ஆதரவை திரட்ட வேண்டிய அவசியத்தை முஷாரஃப் நன்றாக உணர்ந்திருக்கிறார்.

2004 இறுதி மாதங்களில் இராணுவ தளபதியும் அவரது உதவியாளர்களும் ''தேசிய சமரச இணக்கம்'' பற்றி பேசினார்கள் அதன் அவசியம் பற்றி பல்வேறு எதிர்கட்சிகளோடு மிக முக்கியமாக பெனாசீர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியோடு (PPP) இரகசிய ஆலோசனைகளை நடத்தினர். பூட்டோ பாக்கிஸ்தானுக்கு திரும்பி 2005 முதற் பாதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியை வழிநடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டால், முஷாரஃப் ஜனாதிபதியாக இருப்பதற்கு PPP சம்மதிக்கும் என்று அப்போது வதந்திகள் உலவின.

இறுதியில் அந்த பேச்சுவார்த்தைகள் பெருந்தோல்வியடைந்தன. இரண்டு முறை பூட்டோ பிரதமராக இருந்தபோது உலக நாணய நிதியத்தின் கட்டளைகளை செயல்படுத்தினார் மற்றும் ஊழல் மலிந்த நிர்வாகத்திற்கு தலைமை வகித்தார் என்று பரவலாக இழி புகழ் பெற்றிருந்தாலும் முஷாரஃப் பூட்டோவிற்கு தன்னைவிட அதிக மக்கள் செல்வாக்கு இருக்கிறதென்று அஞ்சுவது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் முஷாரஃப் மேற்கொண்ட முயற்சிகள் இராணுவ ஆதரவு பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (Q)-ஐ பகைத்துகொள்ளவே வழி செய்திருக்கிறது. தற்போதுள்ள "தேர்ந்தெடுக்கப்பட்ட" அரசாங்கத்தில் முதன்மை பங்காளியாக உள்ள PML (Q) கொடுத்த நெருக்குதலின் காரணமாக 2007 வரை புதிய தேர்தல் எதுவும் நடக்காது என்று முஷாரஃப் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அரசியல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் சமூக மற்றும் அரசியல் மோதல்கள் வெடித்துச் சிதறகூடும் என்று முஷாரஃப் பயப்படுவதை நன்றாக எடுத்துக்காட்டுகின்ற வகையில் அண்மையில் இரண்டு கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. பாக்கிஸ்தான் PML தலைவர் Chaudhry Shujaat Husain-ன் படி, ``ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காஷ்மீர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளில் ஒத்த கருத்துக்கள் நிலவ வேண்டும்`` என்பதை தாம் விரும்புவதாக அவரிடம் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். டிசம்பர் 31-ல் அரசாங்கம் ஏற்பாடு செய்த மாணவர்கள் மாநாட்டில் முஷாரஃப் தமது கொள்கைவழியான ``தெளிவு பெற்ற நிதானப்போக்கை`` விளக்கினார். ``எந்த அரசியல் கட்சியும் இந்த நாட்டிலுள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் தனது அரசியலை வளர்ப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது`` என்று அறிவித்தார்.

Top of page