World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

US secretary of state offers Europe a "partnership"

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் "பங்காளியாகுமாறு" ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுகிறார்

By Ulrich Rippert and Peter Schwarz
15 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

"இந்தப் பெண்மணி அதிகமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார், என நான் நினைக்கிறேன்." அமெரிக்க அரசுத்துறை செயலாளர், கொண்டலீசா ரைஸ், பெப்ரவரி 8ம் தேதி பாரிசில் நிகழ்த்திய உரையை படிக்கும்போது மேற்கூறிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும் வரிதான் நினைவிற்கு வருகிறது. (Institute of Political Sciences) அரசியல் அறிவியற் கூடம் (பிரான்சில் "அறிவியல் கூடம்) எனப்படும் உயர்மட்ட அமைப்பில் கிட்டத்தட்ட 500 அரசியல் வாதிகள், அறிவுஜீவிகள், ஒரு சில மாணவர்கள் என்றிருந்த பேரவையில் இவர் தோன்றியது ஏழு ஐரோப்பிய தலைநகரங்களில் மேற்கொண்டிருந்த ஒரு வாரப் பயணத்தின் முத்தாய்ப்பாக இருந்தது; இத் தலைநகரங்களை தவிர இவர் டெல் அவிவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும்கூட சிறிது நேரத்தைக் கழித்திருந்தார்.

அட்லாண்டிக் கடந்த உறவுகளில் "ஒரு புதிய அத்தியாயம்" தொடக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை ரைஸ் விடுத்தார். அமெரிக்காவின் வரலாறும், பிரான்சின் வரலாறும் "பிணைந்துள்ளன. ...நம்முடைய வரலாறு பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிப்பீடுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட தியாகங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட வெற்றிகள் இவற்றின் வரலாறு ஆகும்." 1989ம் ஆண்டு பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு விழுந்தபோது "இதன் உண்மையை நாம் கண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

"முன்னென்றுமிராத வகையில் ஒரு வாய்ப்பை, அட்லாண்டிக் கடந்த உடன்பாட்டை கொள்வதற்கான நேரம் இப்பொழுது உள்ளது" என்று முழங்கிய அவர், "உலக சுதந்திரத்தை தொடர்வதற்காக" என்பது, "21ம் நூற்றாண்டின் ஒருழுங்கமைக்கும் கோட்பாடாக" வரவேண்டும் என்றும் கோரினார். அதுதான் "நீதிக்கும், வளமைக்கும் உலகளவில் பெரும் நன்மை தரக்கூடிய முன்னேற்றங்களை" வரலாற்றளவில் சாதிப்பதற்கும், "சுதந்திரம், சமாதானம் ஆகியவற்றுக்கானதற்கும்" வழிகாட்டியாக இருக்கும் என்றும், இதுபோன்ற வகையில் பலவற்றையும் அவர் கூறினார்.

மேம்போக்காக பார்த்தால், கடந்த வாரம் பாரிசில் உரையாற்றிய பெண்மணிக்கும், முன்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது 2003ல் பிரான்ஸ், ஜேர்மன் அரசாங்கங்களை அவற்றின் ஈராக்கிய படையெடுப்பிற்கான எதிர்ப்பை காட்டியதற்காக தீவிரமாக விமர்சித்த நிலையில் "பிரான்சை தண்டியுங்கள், ஜேர்மனியை அசட்டை செய்யுங்கள், ரஷ்யாவை மன்னியுங்கள்" என்ற கோஷத்தை எழுப்பிய வகையில் உரையாற்றியிருந்ந பெண்மணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லைபோல் தோன்றும். இப்பொழுது தன்னுடைய முழு தூதரக சொற்களஞ்சியத்தை தான் முன்பு விமர்சித்தவர்களை ஈர்க்கும் வகையில் பயன்படுத்துகிறார்.

ஆயினும், பொருளுரையின் தன்மையில் எந்த சலுகையையும் இந்த அம்மையார் அளித்துவிடவில்லை. பூசலுக்குரிய பிரச்சினைகள் குறிப்பிடப்படவில்லை அல்லது ரைஸ் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை வலியுறுத்தித்தான் பேசி வந்தார். பல வர்ணனையாளர்களும் அமெரிக்கா ஈரானுடனான வளர்ந்து வரும் மோதல் பற்றி ஒரு சொல் கூட கூறவில்லை என்பதைக் குறித்துள்ளனர். வாஷிங்டன் ஈரானின் அணுவாயுத திட்டத்தை தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவதற்கு போலிக் காரணமாக பயன்படுத்த முற்படுகையில், பாரிஸ், பேர்லின் மற்றும் லண்டன் ஆகியவை ஒரு தூதரகச் செயற்பாட்டின் மூலம் இதற்குத் தீர்வு காண விழைகின்றன.

ஆழுமை மிகுந்த பிரான்சின் நாளேடான Le Monde குறிப்பிட்டது: "செல்வி ரைஸ் ஒரு முறைகூட தன்னுடைய உரையில், அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மத்திய கிழக்கில் ஒன்றாக இணைந்து ஆற்றவேண்டிய பணிகளில் ஒன்று என ஈரானிய அணுவாயுத பிரச்சினையை பற்றிக் குறிப்பிடவில்லை. ...அப்படியே மறந்துவிட்டாரா? அல்லது, இது ஐரோப்பிய தூதரக முயற்சிகளிடத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடா?"

தன்னுடைய உரையில் தவிர்த்திருந்த மற்ற பிரச்சினைகளில், ஈராக்கில் NATO படைகளை அனுப்பாதது பற்றி, (இதுவரை பாரிசும், பேர்லினும் தங்களுடைய படைகளை அனுப்ப மறுத்துள்ளன), ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு சீனாவிற்கு எதிராக இருந்த ஆயுதவிற்பனைத் தடையை அகற்றியது (அமெரிக்காவினால் கடுமையாய் நிராகரிக்கப்பட்டது), Kyotoல் நடந்த தட்பவெப்பநிலை கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்தது, சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்கு அங்கீகாரம் தராதது, வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் அளிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷ்-பிரான்ஸ் நாடுகளின் திட்டத்தை மறுப்பது, இன்னும் பல பிரச்சினைகளும் அடங்கியிருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவின் கடந்தகால வெளிநாட்டுக் கொள்கை, ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் பற்றி சிறிதேனும் சுய-விமர்சனத்தை ரைஸ் கொண்டிருக்கவில்லை. "முன்னரே தாக்கி தனதாக்கி கொள்ளும் போர்" கொள்கைவழி என்ற பெயரில் அமெரிக்கா மற்ற நாடுகளின்மீது ஒருதலைப்பட்சமாக சர்வதேச சட்டத்தை மீறி தாக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளுதல் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய பதவி ஏற்பு உரையில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதற்கு பதிலாக "கொடுங்கோன்மைக்கு எதிராகவும், உரிமைகளுக்கு ஆதரவாகவும்" என்று கூறியிருந்த புஷ்ஷின் கருத்துக்களை அப்படியே பாரிசில் ரைஸ் எடுத்துரைத்தார்.

இந்த நிலைப்பாட்டு மாற்றத்தை பற்றி உலக சோசலிச வலைத் தளம் அப்பொழுது குறிப்பிட்டிருந்தது: "நடைமுறைக் கொள்கை என்ற அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் என்று மாற்றப்பட்டுள்ளமை உடனடியான, ஆழ்ந்த விளைவுகளை கொண்டுள்ளது: அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான நுழைவாயிலை அதிகப்படுத்துவதோடு, அதன் இலக்குகளையும் பெரிதும் விரிவாக்கியுள்ளது.

"புஷ்ஷின் முன்னரே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் போர்க் கொள்கைவழிக்குப் புது விளக்க உரை கொடுத்துள்ளது அமெரிக்கா இனி வேறு ஒரு நாட்டினால், ஆபத்திற்கு உட்படுத்தக் கூடும் என்றில்லாமலும், வருங்காலத்தின் அந்நாடு அத்தகைய திட்டங்களை மேற்கொள்ளக்கூடும் என்றில்லாமலும், பேரழிவு ஆயுதங்களோ வேறு விதமான அச்சுறுத்தல் வகையையோ அமெரிக்காவிடம் மேற்கொள்ள உள்ளது என்றும் இனி இருக்க வேண்டியதேவையில்லை: எந்த நாட்டை "ஒரு கொடுங்கோன்மை ஆட்சி" நாடு இருப்பதாக அமெரிக்கா கருதுகிறதோ, எங்கு வன்முறை காணக்கூடிய, அல்லது புதிரான வகைகளில் நிறைந்து, கூடி, பெருகி இருக்கிறது என்று அடையாளம் காண்கிறதோ, அதுவே அமெரிக்கா போரை மேற்கொள்ள போதுமானது"(அறிவுக்கு ஒவ்வாத தர்க்கம்: புஷ்ஷின் பதவி ஏற்பு உரையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மூலோபாயமும்")

ஐரோப்பியர்கள், அரேபிய உலகிற்கு "சுதந்திரம், உரிமைகள்" இவற்றைக் கொண்டுவர உதவ வேண்டும் என்ற ரைசின் கோரிக்கை இந்தப் பொருளில்தான் உணரப்படவேண்டும். மொரோக்கொவில் இருந்து ஆப்கானிஸ்தானன் வரையில் உள்ள பகுதி முழுவதும், பரந்த மத்திய கிழக்கு முயற்சி என அழைக்கப்படும் பின்னணியில் அனைத்துமே அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் விருப்பத்திற்கேற்ப மறுவடிவமைப்பு பெறவேண்டும். இப்பகுதியில், "இருப்பதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளும்" நிலை மாற்றப்பட வேண்டும் என்று ரைஸ் மூன்று முறை குறிப்பிட்டார். பாரிசில் ஈரானுக்கு எதிராக வெளிப்படையான அச்சுறுத்தல்களை வழங்குவதை தவிர்த்து தன்னுடைய பார்வையை சிரியாமீது செலுத்தியிருந்தார். சிரியாவின் ஆதிக்கத்திற்குட்பட்டுள்ள லெபனான் "முழு இறைமையையும்" எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடையவேண்டும் என்று அவர் கோரினார்; லெபனானில் வரவிருக்கும் வசந்த காலத்தில் நடக்கவுள்ள "தடையற்ற, "சுதந்திரமான ஜனநாயக தேர்தலை" செல்வாக்கிற்குட்படுத்த முயற்சி செய்தால் விளைவுகள் ஏற்படும் என்றும் டமாஸ்கஸை இவர் எச்சரித்தார்.

ஐரோப்பாவிற்கு பங்காளி உரிமையை கொடுக்க ரைஸ் முன்வந்துள்ளமை, அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ள இருக்கின்ற முயற்சிகளில் இளைய பங்காளியின் பங்கு போல இருக்கும். இந்த இலக்கை கருத்திற்கொண்டு, அவர் எதற்கும் பயன்படாத சில சலுகைகளை, அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பொருளுரையை மாற்றாத, சில சலுகைகளை கொடுக்கின்ற, ஐ.நா.வை மிக உயர்ந்த முறையில் பாராட்டியதோடு, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே "சாலை வரைபடம்" என்று கூறப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவதற்கும் உறுதிமொழியளித்தார்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூது அப்பாசும் இஸ்ரேலிய பிரதம மந்திரி ஏரியல் ஷரோனும், ரைசின் குறுகிய வருகையை அடுத்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஐரோப்பாவில் அவநம்பிக்கையுடன்தான் ஏற்கப்பட்டுள்ளது. இதேபோன்ற உடன்படிக்கைதான் ஈராக் போருக்கு முன் தயாரிப்புக்கள் காலத்திலும் கையெழுத்திடப்பட்டு, பின்னர் அது எதற்கும் உதவாமற் போயிற்று. மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் கட்டிடங்களை எழுப்பிவரும் வரை, அடக்குமுறையை தவிர வேறு எதையும் பாலஸ்தீனியர்களுக்கு அப்பாஸ் கொடுப்பதிற்கில்லை என்ற நிலை இருக்கும் வரை, சமாதானம் என்பது ஏற்படாது என்பதுதான் ஐரோப்பாவிலுள்ள பொதுக் கருத்து ஆகும்.

வாஷிங்டன் பல காரணங்களுக்காக ஐரோப்பாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கிறது.

ஒரு புறத்தில், ஈராக்கிய போர் ஒரு முடிவு தெரியாத சங்கடத்தை ஏற்படுத்திய நிலையை கொடுத்துள்ளது; புஷ் நிர்வாகம் இந்த நிதி, இராணுவ சுமையில் ஒரு பகுதியையாவது ஐரோப்பிய "பங்காளிகளிடம்" நகர்த்தலாம் என்று கருதுகிறது.

மறுபுறத்தில், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் குவிமையம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. கீவ்வில், கணிசமான அமெரிக்க ஆதரவு இருந்ததை அடுத்து "ஆட்சி மாற்றத்தில்" வெற்றி கண்டதை அடுத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இப்பொழுது அதிக அளவில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார். இதைத்தவிர சீனா, அமெரிக்க மூலோபாய வல்லுநர்களால் இடைக்கால, நீண்டகால பார்வையில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முக்கியமான அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் கொண்ட தங்களுடைய மோதலின் ஒரு பகுதியாக, ஐரோப்பியர்கள் ரஷ்யாவுடனும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொள்ளாமல் தடுக்கும் வகையில் இப்பொழுது வாஷிங்டன் ஐரோப்பாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை நாட முயல்கிறது.

ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டின் சில பகுதிகளிடம் இருந்து அமெரிக்க முயற்சிக்கு சாதகமான வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவுடனான உறவு பற்றி ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன: இவை விருந்துகளிலும், பல ஆதரவு திரட்டுமிடங்களிலும் மற்றும் அரசியல் நிறமாலையின் பலபகுதிகளில் இருந்தும் வெளிப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டம் ஒழுங்கு கொள்கைகள் பற்றி தீவிர முனைப்புடைய அரசியல் வாதிகள், "கிறிஸ்தவ மேலைநாடு" பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள், புதிய அச்சுறுத்தும் போட்டியாளர்கள் பெருகும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால் சந்தைகள் மூலப் பொருட்கள் ஆகியவற்றிற்காக அமெரிக்க நலன்களுக்கும் ஐரோப்பிய நலன்களுக்கும் இடையேதான் போர்களின் வெளிப்பாடு இருக்கும் என்ற கருதுபவர்கள் அந்த அரசியல் சக்திகளை எதிர்க்கிறார்கள்.

See Also:

அறிவுக்குப் பொருந்தா தர்க்கம்: புஷ்ஷின் பதவியேற்பு உரையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மூலோபாயமும்

Top of page