World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Extraordinary security measures for Bush visit to Germany

புஷ்ஷின் ஜேர்மன் வருகைக்கு அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

By Marianne Arens and Peter Schwarz
21 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியில் மிகவும் மக்கள் செறிந்துவாழும் இடங்களில் ஒன்றான ரைன்-மைன் பகுதியில், பெப்ரவரி 23 புதன்கிழமை வருவதற்கு முன்பே, கிட்டத்தட்ட அவசரகால நிலைமை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் கார்கள் செல்லும் நான்கு நெடுஞ்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதுடன், இரயில் போக்குவரத்து தடைக்குட்படுத்தப்பட்டு, ரைன், மைன் ஆறுகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளிகளும் உள்ளூர் அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டன. வரலாற்றுப் புகழ்வாய்ந்த மைன்ஸ் நகரத்தின் மையப்பகுதி முற்றிலும் தடுப்பிற்கு உட்பட்டிருக்கும். ஹெலிகாப்டர்கள் மேலே சுற்றிவரும் அதேவேளை, நகரம் முழுவதும் போலீஸ் பிரிவுகளாலும், பாதுகாப்புப் பிரிவுகளாலும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் வேறுவழிகளில் செலுத்தப்படுவதும், பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கும் மைன்சிற்கும் இடையே உள்ள முக்கிய சாலைகள் மூடப்படுவதும், இப்பகுதியின் ரூஸ்ஸெல்ஹைமில் உள்ள மிகப் பெரிய ஓப்பல் கார் தொழிற்சாலைகள் உட்பட பல இடங்களிலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைநேரங்களை மாற்றுவது அல்லது ஒரு நாள் விடுமுறை விடுவது என்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கும்.

பிராங்க்போர்ட் விமானநிலையத்திற்கு மேலே ஆகாய வெளியில் போக்குவரத்து, கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு நிறுத்திவைக்கப்படும். மைன்ஸில் இருந்து 60 கி.மீ. சுற்றளவில் இருக்கும் அனைத்து தனியார் விமானங்களும் ஒரு நாள் முழுவதும் தரையிலேயே நிறுத்தப்பட்டுவிடும். முதல் தடவையாக ஜேர்மன் போர் விமானங்கள், ஆகாயப் பாதையில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் சமாளிப்பதற்காக தாக்குதலுக்கு தயார் நிலையில் வைக்கப்படும்.

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்தில் இருந்து மைன்ஸ், மற்றும் நகர மையம் வரையிலான பாதை முழுவதிலும் பால்கனிகளிலும், கூரைகளிலும் பாதுகாப்பிற்காக இருத்தப்படுவர்; பொதுவாக வெளிநாட்டுப் பாதுகாப்புப் படைகள் அனுமதிக்கப்படாத, மெய்காப்பாளர்கள்கூட பொது இடத்தில் ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படாத ஒரு நாட்டில் இது நடக்கிறது. பல நாட்களுக்கு முன்பே அமெரிக்க இரகசியத்துறை முகவர்கள் இப்பகுதியை கண்ணோட்டம் விட்டுள்ளதுடன், மிகப் பெரிய கவசம் உடைய கார்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அமெரிக்க "வல்லுனர்கள்" இப்பகுதிக்கு பறந்து வந்து தங்கியுள்ளனர்.

மைன்ஸ் நகர மையப்பகுதியில் வரலாற்றுப் புகழ்மிக்க தேவாலயம், கோட்டை, பிராந்திய பாராளுமன்றம், அரசாங்கத் தலைமையகம், உலகப் புகழ்பெற்ற குட்டென்பேர்க் அருங்காட்சியகம் இவற்றைச் சுற்றி பெரும் பாதுகாப்புச் சுவர் வந்துள்ளது. நகரத்தின் மையப்பகுதி முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக தடுப்புக்கள் போடப்பட்டு அவை ஆயுதமேந்திய போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், மற்றும் நகர மையப்பகுதியில் வேலைபார்ப்பவர்கள் கால்நடையாகத்தான் தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டியபின்னர் வந்து செல்ல முடியும். ரைனில் இருந்து விஸ்பாடெனுக்கு செல்லும் முக்கிய இணைப்பான தியோடோர் ஹ்யூஸ் பாலம், பாதசாரிகளும் செல்லமுடியாத நிலையில், முற்றிலுமாக மூடப்பட்டுவிடும்.

கிட்டத்தட்ட 1,300 சாக்கடை மூடிகள் திறக்கப்பட முடியாதபடி ஒட்டுப் பிணைப்பு போடப்பட்டுவிட்டன; ஆங்காங்கு இருந்த தபால் பெட்டிகள், குப்பைத் தொட்டிகள், மின்தொடர்பு பெட்டிகள், சைக்கிள்கள் கூட அகற்றப்பட்டுவிட்டன. பால்கனி புறம் நிற்கக் கூடாது, திறந்த ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கவும் கூடாது என்று நகர மக்களுக்கு வெளிப்படையாக உத்திரவு இடப்பட்டுள்ளது. தங்களுடைய கார்களை தெருக்களில் நிறுத்தக் கூடாது என்றும் தங்களுடைய இல்ல நிறுத்துமிடங்களிலும்கூட வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பல கார் நிறுத்துமிடங்கள் மூடப்பட்டுவிட்டன. செவ்வாய் கிழமை அதிகாலையில் இருந்து, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஏதேனும் கார்கள் தென்பட்டால், அவை அனைத்தும் இழுத்துச் செல்லப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையும் போலீசாரால் கொடுக்கப்பட்டுள்ளது

குப்பைகள் அகற்றுதலும், சாலைகள் துப்புரவு செய்யப்படுதலும் புதன் கிழமையன்று நிறுத்தப்படும். பல்கலைக்கழக மருத்துவமனையும், அதன் அவசர சிகிச்சைப் பிரிவும் காலியாக்கப்பட்டு அவசர காலப் பயன்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், மயக்க மருந்து கொடுப்போர், செவிலியர் ஆகியோர் ஒழுங்கான முறையில், பணியில் ஈடுபடத் தடையற்ற வகையில் இரவே தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று மற்ற மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகைய தீவிர நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு காரணம் எதுவாக இருக்க முடியும்? செப்டம்பர் 11 உடன் ஒப்பிடத்தக்க வகையில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு மைன்ஸ் இலக்காகி இருக்கிறதா? ஒரு போர் அல்லது உள்நாட்டுப் போருக்கான தயாரிப்புக்கள் ஏற்பட்டுள்ளனவா?

அவ்வாறு ஏதும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஜேர்மனியில் சிறு பொழுதைக் கழிக்க உள்ளார், அவர் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஸ்ஷர் (பசுமைக் கட்சி), இருவரும் மைன்ஸ் கோட்டையருகே வரவேற்பு அளிக்க உள்ளனர்.

புஷ்ஷின் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படிப்பார்த்தாலும் தனித்தன்மையுடையனவாக உள்ளன. வெறும் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகள் என்று மட்டும் அவற்றை விலக்கித் தள்ளிவிட முடியாது. மைன்ஸ் ஒன்றும் பாக்தாத் அல்ல. அமெரிக்காவுடன் பல தசாப்தங்களாக நட்பு கொண்டுள்ள ஜேர்மனியில் ஒன்றும் உள்நாட்டுப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. நாட்டில் கொலைவிகிதமும் மிகக் குறைவுதான்: 1980களின் போது செஞ்சேனைப் பிரிவை அழித்த பின் எந்தவிதமான அரசியல் படுகொலையும் இங்கு நடைபெற்றதில்லை.

எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதற்கு ஒப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டிருக்கவில்லை. 1963ம் ஆண்டு மேற்கு பேர்லின் ஷோனபேர்க் நகர அரங்கின் முன் ஜோன் எப். கென்னெடி உரையாற்றியபோது, அவர் பெரும் உற்சாகம் மிகுந்த பார்வையாளர்களால் ஆர்ப்பரிக்கப்பட்டு, பின்னர் கூட்டத்துடன் பகிரங்கமாகப் பங்கு கொண்டார். அதன் பின்னர் பல தசாப்தங்களுக்குப் பிறகு பேர்லினிற்கு அதிகாரபூர்வமாக வருகை வந்த ஜனாதிபதி பில் கிளிண்டன் பேர்லின் உணவு விடுதி ஒன்றிற்கு எதிர்பாராதவிதமாக அதிபர் ஷ்ரோடருடனும் சில மெய்க்காப்பாளர்களுடனும் வருகை புரிந்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும்பீதி, புஷ்ஷும் அவருடைய பாதுகாப்பு ஆலோசகர்களும் ஜேர்மன் மக்களை எந்த விதத்தில் கருதுகின்றார்கள் என்பதை பொறுத்துள்ளதே அன்றி, ஆபத்து பற்றிய பகுத்தறிவுமுறை மதிப்பீட்டை ஒட்டி இருக்கவில்லை. புஷ், மற்றும் அவருடைய கொள்கைகள் பெரிதும் வெறுக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்; இதற்கு விடையிறுக்கும் வகையில் ஜேர்மன் மக்களை, அது அல் கொய்தாவை செழித்து வளர்க்கும் பகுதி போல் நடத்துகின்றனர். கிட்டத்தட்ட பெரும் மனநோயாளியின் நிலையில்தான் அவர்களுடைய அணுகுமுறை உள்ளது.

புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கை "கொடுங்கோன்மை"யை எதிர்த்துப் போராடிவருகிறது, "ஜனநாயகம்", "சுதந்திரம்" ஆகியவற்றைப் பரப்பிவருகிறது என்று தொடர்ந்து பிரமை இருக்குமானால், ஜேர்மனிக்கு அவர் வருகை தரும் சூழ்நிலை தீயதற்கு மாற்றைக் கொடுக்க வேண்டும். பொதுவாக, இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்பொழுதுமே தாங்கள் எழுப்பும் மக்கள் விரோத உணர்வின் ஆழத்தை ஆழ்ந்து அறிந்த சர்வாதிகாரிளுடன்தான் தொடர்புபடுத்தப்படும்.

ஒரு அரசியற்குழு உறுப்பினர் காரில் நகரத்தைக் கடக்கும்போது அல்லது பிரெஷ்நேவ் அரச ரீதியான வருகையை மேற்கொண்டபோது, எவ்வாறு அனைத்து போக்குவரத்து விளக்குகளும் சிவப்பு நிறத்தை மட்டும் காட்டின; பெருங்குழுப்பம் நிலவியது என்பதை, கிழக்கு பேர்லின் வாசிகள் பலரும், ஸ்ராலினிச ஆட்சி நாட்களில் நடந்தவற்றை இன்னும் நினைவுகூற முடியும். இப்பொழுது மைன்ஸ் நகரத்தில் உள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், ஸ்ராலினிச ஸ்டாசி இரகசியப் போலீசாரின் முனைப்பான முயற்சிகள் கூட கனிவுள்ளதாக தோன்றுகின்றன.

உள்ளூர் மக்கள் இவற்றைக் காணும்போது திகைப்பில் வாயடைத்தும், அவநம்பிக்கையும் பெரும் சீற்றத்தையும் கொண்ட கலவையைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர். Frankfurter Rundschau -க்கு வந்த வாசகர் கடிதங்களில் இருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"இப்படிப்பட்ட நாள் ஒன்றை, இதன் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன், நாங்கள் பொறுத்துக் கொள்ள விரும்புகிறோமா என்று, உண்மையில் எவர் எங்களை கேட்டனர்?" எங்களுடைய செலவில் நாங்கள் ஒரு விடுமுறை எடுத்துக் கொண்டு, அதையொட்டி ஒருநாளாவது பாதுகாப்பற்ற தன்மைக்கு நம்முடைய பகுதி, ஒரு குறிப்பிட்ட யுத்த பிரபுக்காக (எல்லாப்புறங்களில் இருந்தும் தாக்கப்படலாம்) உட்படுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

"ஐந்து மில்லியன் வேலையற்றோரின் கருத்தில் இக்கேள்வி எழுகிறது: அரசாங்கம் இத்தகைய ... முற்றிலும் தேவையற்ற வருகைக்கு செலவிடமுடியுமா, இதையொட்டிய அனைத்து நடவடிக்கைகளும் தேவையா? நகரத்தில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், உழைக்கும் மக்கள் ஆகியோர்மீது எந்த உரிமையில் இத்தகைய சூழ்நிலை திணிக்கப்படுகிறது? இதை ஒட்டிய பொருளாதார பின்விளைவுகள் அனைத்திற்கும் யார் பொறுப்பாளி?"

"மற்றொரு நாட்டின் ஜனாதிபதி வருகை புரிகிறார் என்பதற்காக, நம் நாட்டு மக்களை சிறைக்கைதிகள் போல் ஆக்குதல் கூடாது."

"உதாரணமாக மருத்துவமனைகளுக்குச் செல்லும் பாதைகள், மீட்பு வாகனங்கள் செல்வதற்கான வழித்தடங்கள் தடையில்லாமல் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாவது எவரேனும் கருதியிருக்கின்றார்களா? அல்லது அரசாங்கத்தின் விருந்தாளியை கவனிப்பதின் இன்றியமையாத விளைவாக இறப்புக்கள் ஏற்கப்படவேண்டுமா?"

புதன்கிழமை அன்று "திரு புஷ் அவர்களே நல்வரவு இல்லை," என்ற பதாகையின்கீழ் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்று, மைன்ஸ் நகரத்தில் ஒரு புறத்தில் மூடப்பட்டுவிட்ட தெருக்களில் நடக்குமாதலால், அரசாங்க விருந்தினர் இதைப் பற்றிக் கேள்விப்படவும் மாட்டார், இதைப் பார்க்கவும் மாட்டார். நகர நிர்வாகம் அனைத்து ஆர்ப்பாட்ட அமைப்பளர்களின் பெயர்களும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பதாகைகளின் அளவு இரண்டரை மீடடர் நீளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது; இத்தகைய நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆர்ப்பட்ட அமைப்பாளர்களால் சவால் செய்யப்பட்டுள்ளன.

தன்னை போலீஸ்-அரசாங்கப் பாதுகாப்பில் இருத்திக் கொள்வேண்டும் என்ற புஷ்ஷின் உண்மை நிலை, "உலகத்தின் மிகச் சக்தியவாய்ந்த மனிதன்" மக்கட்தொகையின் பரந்த பிரிவினரிடம் கொண்டுள்ள அச்சம் பற்றிப் பெரிதும் எடுத்துரைக்கிறது. புதன் கிழமை எடுக்கப்படவுள்ள விசித்திரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒன்றை தெளிவாக்கியுள்ளன: உலகம் முழுவதும் தேவை என அமெரிக்க ஜனாதிபதி பின்பற்றுகின்ற "சுதந்திரம்" என்று கூறப்படுவது போலீஸ்-இராணுவக் கட்டுப்பாட்டிற்குள்ளும், ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் வகையில்தான் தொடரப்பட இயலும் என்பதேயாகும் அது.

Top of page