World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq elections set stage for deeper crisis of US occupation regime

ஈராக் தேர்தல்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு ஆழமான நெருக்கடியை அமைக்கிறது

By Patrick Martin
31 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் ஜனவரி 30-ல் நடைபெற்றுள்ள தேர்தல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஈராக்கிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கியுள்ள முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதை குறிக்கிறது. ஈராக்கிய மக்களில் மிகப் பெரும்பாலோர் வெறுத்து புறக்கணித்துள்ள பாக்தாத் அமெரிக்க கையாள் ஆட்சி எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை தீர்த்துவைக்கவோ அல்லது உலகம் முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிலுமுள்ள மிகப்பெரும் பகுதியினரின் கண்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்கிவிடவோ செய்யாது.

வாக்குப்பதிவை பாராட்டும் ஒரு வெற்றி அறிக்கையை சுருக்கமாக வெளியிட ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்பட்டார். அமெரிக்க ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதிலும் பீறிட்டெழும் உணர்வுடன் கூட்டம் நிரம்பி வழிந்த அறைக்கு அறை செய்திகளை படம்பிடித்தன. ஆனால் அமெரிக்க அரசாங்கம் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஊடக எந்திரம் ஆகியவற்றின் ஒன்றுபட்ட பிரச்சார ஆற்றல்கள் துப்பாக்கி முனையில் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் நடாத்தப்பட்ட ஒரு தேர்தலை உண்மையான ஜனநாயக ரீதியான நிகழ்வாக மாற்றிவிட முடியாது.

வாக்காளர் வருகை புள்ளி விவரங்கள் தொடர்பாக ஆரம்பத்தில் வெளிவந்த தகவல்கள் போருக்கெதிராக அதிகரித்த அளவில் திரும்பிக்கொண்டிருக்கின்ற, அமெரிக்காவில் உள்ள மக்களது பொதுக் கருத்தை மாற்றுவதற்காக மற்றும் முடிந்த அளவு சிறந்த காட்சியை சித்தரிப்பதற்கான அரசியல் கட்டாயத்தினால் இயக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள் 90 சதவீதம் பேருக்கு மேல்-----கலந்து கொண்டனர் என்ற எண்ணிக்கையின் அறிக்கை, பாக்ஸ் நியூஸிற்கு இயல்பாகவே போதுமானதுதான். ஆனால் பின்னர் ஒரு ஈராக் அதிகாரி நாடு தழுவிய அளவில் 72 சதவீத வாக்குப்பதிவே என்று குறிப்பிட்டார். அதற்குப் பின்னர் இது, நாடு முழுவதிலும் 60 சதவீதம் என்று குறைக்கப்பட்டது, பின்னர் "சில பகுதிகளில்" 60 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது.

ஒத்தூதுகின்ற அமெரிக்க ஊடகங்கள் கடமைதவறாது இந்தப் புள்ளி விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்ததை அப்படியே ஏற்றுக்கொண்டன, அவை சரிதானா என்பதை சவால்செய்யவுமில்லை அல்லது நேரம் செல்ல செல்ல எப்படி ஒவ்வொரு புள்ளி விவரமும் விரைவாய் குறைந்த ஒன்றால் பதிலாக மாற்றப்பட்டன என்பது பற்றி ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை.

எடுத்துக்காட்டாக வாக்குப்பதிவு முடிவடைகின்ற சிறிது நேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட 72 சதவீத புள்ளி விவரம் இயல்பாகவே நிகழ்தற்கரியது, ஏனெனில் சுன்னி முக்கோணப்பகுதியில் மிகப்பெரும்பாலான வாக்குச்சாவடிகள் திறக்கப்படவேயில்லை. சுன்னிக்களில் பெரும்பகுதியினருடன், 20 முதல் 25 சதவீத ஈராக் மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கின்ற நிலையில் இதர பகுதி மக்கள் 72 சதவீதம் வாக்களித்திருக்க முடியுமென்றால் அது ஏறத்தாழ ஒருமனதான வாக்குப்பதிவாக இருந்திருக்கும்.

வாக்குப்பதிவு பற்றிய செய்திகளுக்கு துணையாக, வாக்களிப்பதற்கு புதிதாக கிடைத்திருக்கும் சுதந்திரத்தை கொண்டாடும் மகிழ்ச்சியான ஈராக்கியர், இராணுவத்தைப் பாராட்டும் மற்றும் ஜனாதிபதி புஷ்ஷிற்கு நன்றி தெரிவிக்கும் தொலைக்காட்சி செய்தி படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் இந்தக் காட்சிகள் பெரும்பாலும் ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று நம்புவதற்கு போதிய அடிப்படை உள்ளது ------இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர் Firdos சதுக்கத்தில் இருந்த சதாம் ஹூசேன் சிலையை ஈராக்கியர் சிதைத்த காட்சிகளை போன்றவை. (சதாம் ஹூசேனுக்காக தங்களது வாழ்வையே தியாகம் செய்வதாக உறுதிமொழி தருகின்ற மக்கள் கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் இதுபோன்ற காட்சிகள் பாத்திஸ்ட் சர்வாதிகாரத்தின் தரக்குறியீடாக இருந்தன).

ஒரு பிரதான பிரிட்டிஷ் நாளேடான, இண்டிபென்டன்ட் -ல், றொபேர்ட் பிஸ்க் தந்துள்ள தகவலின்படி, "படம் பிடிக்க அவர்கள் 'அனுமதிக்கப்படும்' ஐந்து வாக்குச்சாவடிகள் பட்டியல் பெரிய தொலைக்காட்சி வலைப்பின்னல்களுக்கு தரப்பட்டது. அந்தப்பட்டியலை நெருக்கமாக ஆராய்ந்தால் அவற்றில் நான்கு ஷியைட் முஸ்லீம்கள் வாழ்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்டது ----அங்கு வாக்குப்பதிவு அதிகமாக இருக்கக்கூடும்----- ஒன்று உயர்வருமானம் உடைய சுன்னி பகுதியில் அங்கு வாக்குப் பதிவு சுமாராக இருக்கும்." சுன்னி தொழிலாள வர்க்க பகுதிகள் எல்லைக்குள் அடங்கவில்லை, என்று அவர் குறிப்பிட்டார்.

சில சம்பவங்களில் ஊடக செய்திகள் அனைத்துமே மொத்தமாக இராணுவ பிரச்சார செய்திக் குறிப்புகளாக இருந்தன. எடுத்துக்காட்டாக, ABC News, பல்லூஜாவில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இருந்ததாக தகவல் தந்திருக்கிறது, அந்த நகரம் சென்ற நவம்பரில் முற்றிலுமாக அமெரிக்க இராணுவ கடுந்தாக்குதல்களால் அழிக்கப்பட்டு விட்டது. அந்த சிதைக்கப்பட்ட நகரத்தில் மிகப்பெருமளவிற்கு வியப்பூட்டும் வகையில் வாக்குப்பதிவு என்ற செய்திக்கான மூலம் அமெரிக்க இராணுவ தலைமையகம்தான். அதேவேளை, இதர செய்தி அமைப்புகள் பல்லூஜாவில் இதர பிரதான சுன்னி நகரங்களைப்போன்று மிக சொற்பமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் தந்திருக்கின்றன சுன்னி நகரங்களில் சில வாக்குச் சாவடிகள்தான் திறக்கப்பட்டன மற்றும் சில வாக்காளர்கள்தான் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் கிளர்ச்சிக் குழுக்களின் வன்முறை அச்சுறுத்தல்களையும் மீறி ஈராக்கிய மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்தார்கள் என்பதுதான் இந்த ஊடக பிரசார தாக்குதலின் பிரதான கருத்தாகும். அத்தகைய செய்திகள் ஈராக்கில் அச்சத்தையும் வன்முறையையும் அளிப்பதையே தொழிலாக கொண்ட மிகப்பெரிய அமைப்பை புறக்கணிந்து விட்டன: அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு பல்லூஜா மற்றும் பல ஈராக்கிய நகரங்களை தரைமட்டமாக்கிவிட்டது. ரமடி மற்றும் சமரா மற்றும் மோசூல் உட்பட சுன்னி மக்கள் வாழ்கின்ற அனைத்து மையங்களிலும் குண்டுவீசி தகர்த்துள்ளது.

அந்த பிராந்தியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வெகுசில நம்பகத்தன்மை கொண்ட நிருபர்களில் ஒருவரான பிஸ்க் தந்துள்ள தகவலின்படி, அமெரிக்கத் தரைப்படைகள் இடைவிடாத தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதுடன், புதியதொரு வான்வழி போர் அவர்களுக்கு உறுதுணையாக நடத்தப்பட்டு வருகிறது. "ஈராக் மீது அமெரிக்காவின் விமானப்படை தாக்குதல்கள் விதிவிலக்காக பன்மடங்கு அதிகரித்துள்ளன. கத்தாரிலுள்ள இராட்சத அமெரிக்க விமானப் படைத்தளத்தில், அல்லது வளைகுடாவில் நடமாடுகின்ற அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்களில் 'இணைக்கப்பட்ட' நிருபர்கள் எவருமில்லை. இந்த கப்பல்களிலிருந்து அதிகரித்த அளவிலும் என்றுமிராதவகையில் அதிகமான மரணம்விளைக்கும் குண்டு வீச்சுக்கள் பறக்கின்றன. அத்தகைய தாக்குதல்கள் பதிவு செய்யப்படாமலும், செய்தி அறிவிக்கப்படாமலும் 'கற்பனை' போரின் ஓர் அங்கமாக ஆகிவிடுகின்றன, இவை அனைத்தும் பாதிக்கப்படுபவர்களுக்கு மிக உண்மையாக இருக்கின்றன ஆனால் பத்திரிகையாளர்களாகிய எங்களது கண்ணிலிருந்து மறைத்து விடுகிறார்கள். இதில் யதார்த்தம் என்னவென்றால், ஈராக்கின் பெரும்பகுதி (வியட்நாமை மேற்கோள்காட்டினால்) சுதந்திரமாக விமானப்படைத்தாக்குதல் நடத்துகின்ற மண்டலமாக மாறிவிட்டது மற்றும் இந்த இரகசியப்போரை அமெரிக்கர்கள் மிகத்திறமையாகவும் மிகக் கொடூரமாகவும் முன்னர், 1991 முதல் 2003 வரை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று முறை என்ற அளவிற்கு குண்டுத் தாக்குதலை நடத்தியதுபோல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்."

இந்த வன்முறை மற்றும் பேரழிவின் வளர்வீத எடையானது, ஒசாமா பின் லேடனின் ஜோர்தானிய ஆதரவாளரான அபு மூஸ்ஸாப் அல்-சர்காவி தலைமையிலான இஸ்லாமியக் குழுக்கள் வைத்ததாக கூறப்படும் பயங்கர குண்டுகளின் எடையை விட மிகவும் அதிகமானது. அமெரிக்க இராணுவம் 2003 மார்ச்சில் ஈராக் மீது படையெடுக்க கட்டளையிட்ட பின்னர், 100,000 ஈராக்கியர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இந்த அளவின் மொத்தமானது குடிமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்புக்களை சிறிதாக்கிவிட்டது.

மேலும், அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் அமெரிக்க படையெடுப்பாளர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதம் தாங்கிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்களது கொத்தடிமைகளான பொம்மையாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளையும் "பயங்கரவாதி"----- என்று முத்திரைகுத்துவது வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கில் நிலவுகின்ற அனைத்து எதிர்ப்பையும் குற்றவியல் நடவடிக்கையாக சித்தரிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு வாய்ச்சொல் சாதனம். உண்மையிலேயே ஆர்வெல்லியனின் பாணியில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பானது சித்திரவதை மற்றும் வெகுஜனக் கொலை தந்திரோபாயங்களில் ஈடுபட்டிருந்தாலும், அது, "ஜனநாயகத்தோடு'' அடையாளப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அதற்கு எதிராக போராடுகின்ற ஈராக்கியர்கள் ஜனநாயகத்தின் எதிரிகள் என்றும் ''ஈராக்கியருக்கு எதிரான'' சக்திகள் என்றும் மற்றும் பாசிஸ்டுகள் என்றும் கூட முத்திரை குத்தப்படுகின்றனர்.

தேர்தல் தினத்தில் அமெரிக்க இராணுவம் நேரடியாக ஈராக்கியர்களை மிரட்டியதற்கு சான்றுள்ளது. பெரும்பாலும் சுன்னி மக்கள் நிறைந்த மற்றும் எதிர்ப்பு கிளர்ச்சியின் மையமான மோசூல் நகரத்தில் அமெரிக்க இராணுவத்தினர் சுற்றி வந்து வாக்களிக்காத ஈராக்கியர்களை தேடியதாக கூறப்படுகிறது, கட்டை விரலில் வைக்கப்படும் அடையாள மை இல்லாததை வைத்து வாக்களிக்காதவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். வாக்களிக்கவில்லை என்று தெரியும் எந்த ஈராக்கியரையும் அவர் ஏன் வாக்களிக்கவில்லை என்று விசாரித்தார்கள்-----அவரது பெயர், எதிர்ப்பு ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பட்டியலில் அமெரிக்க புலனாய்வு துறையினரால் சேர்க்கப்படும், எதிர்கால தாக்குதல் அல்லது கைதுக்கு அவர்கள் இலக்காக கூடும் என்பதில் ஐயம் இல்லை.

மிகவும் அடிப்படையாக, ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பினால் படுமோசமாக களங்கப்பட்டு நிற்கிறது. இந்த வாக்குப் பதிவை நடாத்திய ஆட்சியானது அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் நியமிக்கப்பட்டதுடன் அதற்கு ஐ.நா தனது அங்கீகார முத்திரையை கொடுத்தது. தேர்தல் நடத்தப்பட்ட நேரமும் நடைமுறைகளும் அமெரிக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது. இந்த மாத ஆரம்பத்தில் ஈராக்கிய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலானவர்களது கோரிக்கைகளை தள்ளுபடி செய்து, ஜனாதிபதி புஷ் தானே முடிவு செய்தார் மற்றும் பெருமளவில் சுன்னி மக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு தேதியை எந்தவகையிலும் தள்ளி வைப்பதையும் எதிர்த்தார்.

ஜனவரி 30-ல் பாக்தாத், மோசூல் மற்றும் இதர ஈராக்கிய நகரங்களின் தெருக்களில் இணையில்லா அளவிற்கு அமெரிக்க இராணுவ வலிமை காணப்பட்டது. 150,000 அமெரிக்க துருப்புக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்றார்கள், அவர்களுக்கு துணையாக நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் வந்தன மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக அமெரிக்கா பயிற்சியளித்த மேலும் 150,000 ஈராக்கிய போலீசாரும் இராணுவத்தினரும் வந்தனர். அமெரிக்க ஹெலிகாப்டர்களும், போர்விமானங்களும் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் அதேவேளை, கம்பி வேலிகளுக்கிடையில் துப்பாக்கி ஏந்திய அமெரிக்க இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழே ஈராக்கியர் மூன்று தடவைகள் சோதனை செய்யப்பட்டு வாக்குச் சாவடிகளுக்குள் அனுப்பப்படுவதை அமெரிக்க ஊடகங்களால் கூட மறைக்க முடியவில்லை.

அது ஒரு சுதந்திரத்தின் காட்சியல்ல, ஆனால் ஆக்கிரமிப்பு மற்றும் கொடூரமான கீழ்ப்படிதலின் காட்சியாகும்.

ஈராக்கிற்குள் ஜனவரி 30 வாக்குப்பதிவானது, பெருமளவில் அரசியல் மோதல்களுக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு பெருகிவரும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்ற அரங்கை அமைத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு அதிகாரபூர்வமான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை, இந்த தாமதம் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு தேர்தல் மொத்த எண்ணிக்கையை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கு ஏராளமான அவகாசத்தை தருகிறது.

வடக்கு மற்றும் தெற்கு குர்திஷ் பகுதியிலும் ஷியைட்டுகள் பகுதியிலும் ஏராளமானவர்கள் வாக்குப்பதிவில் கலந்துகொண்டதாக செய்திகள் வந்திருக்கின்றன, ஒரு புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சியில் நிதிச்சலுகைகளும் அரசியல் அதிகாரமும் தரப்படும் என்ற உறுதி மொழிகளுக்கு கைமாறாக, மதத்தலைவர்களும் மலைவாழ் மக்களது தலைவர்களும், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒத்துழைத்து வருகின்றனர். இந்த சாத்தானின் பேரம் ஐக்கிய ஈராக் கூட்டணி தலைமையில் ஒரு ஆட்சியை உருவாக்கக்கூடும், இந்த ஷியைட் கூட்டணி குர்துவின் ஆதரவை அடிப்படையாக கொண்டது --அல்லது அவர்கள் தங்களது அமெரிக்கத் தலைமை பிரபுக்களால் ஏமாற்றப்படலாம்.

வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க பத்திரிகைகளில் பிரதமர் அயத் அல்லாவியின் கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்து வருவதாக பல்வேறு செய்திகள் வந்தன. அவை நம்பகத்தன்மையுள்ள கருத்துக் கணிப்பு அல்லது ஊகங்களை வெளியிடும் அமைப்புக்கள் இல்லாத நிலையில் அந்த ஊகச் செய்திகள், ஊடகங்களின் ஒத்துழைப்போடு வாஷிங்டனால் திட்டமிட்டு இயற்றப்பட்ட தில்லு முல்லு செய்யப்பட்ட தேர்தல் முடிவை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையை உருவாக்குவதற்காக புஷ் நிர்வாகத்தின் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. அல்லாவியின் ஈராக் தேசிய உடன்பாட்டு கட்சி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக சிஐஏ-இனால் நிதியளிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருகிறது, மற்றும் பாத்திஸ்ட் ஆட்சியின் முன்னாள் கட்டாயப்படுத்தி செயல்படுத்துபவரான அவர் இன்னமும் வெள்ளை மாளிகையின் ஆதரவிற்கு இலக்கானவராகவே உள்ளார்----- குர்திஷ் மற்றும் ஷியைட் கட்சிகளை அரவணைக்கும் ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு அவர் ஒரு மத்தியஸ்தராக செயல்படக்கூடும்.

சுன்னிகள் தேர்தலை புறக்கணித்தல், அத்தகையதொரு கூட்டணி உருவாக வகைசெய்தாலும் குர்திஷ் பிரிவினைவாதம் மிக விரைவாக சிதைத்துவிடும். ஞாயிறு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் ஒரு வரைவு அரசியல் சட்டத்தை உருவாக்க இருக்கிறது. அதில் பெரும்பான்மை கட்டுப்பாட்டிற்கான ஷியைட்டுகள் கோரிக்கைகள் குர்திஷ் மாகாணங்களில் அரை-சுதந்திர உரிமைகள் கோரிக்கைக்கு எதிரானதாக இருக்கும். அதில் ஒரு வெடித்துச் சிதறும் ஆரம்பப் புள்ளி வடபுறத்து எண்ணெய் வயல்களின் மையத்தில் இருக்கும் கிர்குக் அந்தஸ்து பற்றியது, அந்த மக்கள் சமமான அளவில் அராபியர்கள், துருக்கியர்கள் மற்றும் குர்துக்களாக பிரிந்திருக்கின்றனர், ஆனால் குர்திஷ்தானின் எதிர்கால பிராந்தியத்தின் ஓர் அங்கமாக அது இடம்பெறவேண்டும் என்று குர்திஷ் கட்சிகள் கோருகின்றன.

அமெரிக்காவிற்குள்ளேயே அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் போர் எதிர்ப்பாளர்களை மிரட்டுகின்ற நோக்கில் ஈராக்கில் ஜனநாயகத்தின் வெற்றி பற்றி அரசாங்க ஆதரவு ஊடகங்கள் பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சார இயக்கம் புஷ் நிர்வாகத்தின் அரசியல் நிலைப்பாட்டிலுள்ள முரண்பாடுகளை தீவிரப்படுத்தவே செய்யும். வெள்ளை மாளிகை கூறுவதுபோல ஈராக் மக்கள் ''தங்களது நாட்டின் கட்டுப்பாட்டை தாங்களே எடுத்துக்கொண்டு விட்டார்கள்'' என்றால் 150,000 அமெரிக்க துருப்புக்கள் அங்கு ஏன் இருக்க வேண்டும்? வெளிநாட்டு பயங்கரவாதிகள், மற்றும் சதாம் ஹூசேன் விசுவாசிகள் அடங்கிய சிறிய குழுக்கள்தான் எதிர்ப்பு கிளர்ச்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படும்போது 25 மில்லியன் ஈராக்கியர்கள் தங்களைத் தாங்களே ஏன் காப்பாற்றிக்கொள்ள முடியாது?

இப்போது செல்வாக்கிழந்துவிட்ட கூற்றுக்களான சதாம் ஹூசைனின் பேரழிவுகரமான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா படையெடுத்தது அல்லது 2001 செப்டம்பர் 11-ல் தாக்குதல்கள் நடத்தியதை தூண்டிவிட்ட பயங்கரவாதிகளோடு சதாம் ஹூசேன் கொண்டிருந்ததாக கூறப்படும் உறவுகளின் காரணமாக படை எடுத்தது என்ற கூற்றுக்களை அடுத்து, "ஜனநாயக மயமாக்கல்" என்பது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான சமீபத்திய சாக்குப்போக்காக ஆகிஉள்ளது. இந்த ஜனநாயக சாக்குப்போக்கும் கூட சம்பவங்களால் வெடித்துச் சிதறிவிடும்.

Top of page