World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: police given new powers against the young

இளைஞர்களுக்கு எதிராக பிரிட்டீஷ் போலீசாருக்கு புதிய அதிகாரங்கள்

By Julie Hyland
4 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

தொழிற்கட்சி அரசாங்கம் கொடூரமான போலீஸ் நடவடிக்கைகளை விழா காலத்தைக்கூட விட்டுவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 26-ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 10-க்கும் 15- வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களுக்கு சமூகவிரோத நடத்தைகளுக்காக அந்தந்த இடங்களிலேயே அபராதம் விதிக்கப்படும்.

நாசவேலைகள், பட்டாசுகளை முறைகேடாக பயன்படுத்துவது, சிறுவயதில் மது அருந்துவது, போன்ற நடவடிக்க்ைகளுக்காக இந்த வயது வரம்புகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, அபராதங்களை விதிப்பதற்கு போலீசாருக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கை முதலில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்றது. பிரிட்டனிலுள்ள West Midlands, Nothinghamahirs, Mersey Side உட்பட 7 போலீஸ் படைகள் அந்தந்த இடங்களில் அபராதங்களை விதிக்க முடியும்.

ஏப்ரல் மாதம் 16-வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது இளைஞர்களுக்கு அந்தந்த இடங்களில் 50 முதல் 80 பவுன்டுகள் வரை அபராதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்னர் 40,000 இளைஞர்களுக்கு அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்களுக்கு இத்தகைய அபராதம் விதிக்கப்படுவது பெற்றோர்கள் தங்களது, குழந்தைகளின் சமூக விரோத நடவடிக்க்ைகளுக்கு எதிராக தகுந்த கண்டிப்பு நடவடிக்க்ைகளை எடுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பதற்காகத்தான், குழந்தைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, கட்ட முடியாதவர்கள் அல்லது மறுப்பவர்கள், சிறையை எதிர்கொள்ளவேண்டும்.

"பெற்றோர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, மற்றும் அவர்கள், தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கு, பொறுப்பேற்க வேண்டும். தங்களது குழந்தைகள், சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு துன்பத்தையும் சேதத்தையும் விளைவிக்கும் போது, அவர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது" என்று உள்துறை அமைச்சர் Hazel Blears குறிப்பிட்டார்.

இளைஞர்கள் கிரிமினல் நீதிமன்ற கட்டுக்கோப்பிற்குள் வராமல் தவிர்ப்பதற்காக, முதல்தடவை மிக சாதாரணமான குற்றத்தை செய்கின்ற இளைஞர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக இந்த குறிப்பிட்ட அபராதம் விதிக்கும் நடைமுறை குறிப்பாக, பொருத்தமுடையது என்று Blears குறிப்பிட்டார்.

1999 ஏப்ரல் மாதம் அரசாங்கத்தின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டளைகள் (Anti-Social Behaviour Orders -Asbos) நடைமுறைக்கு வந்தது. மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் குடும்பங்கள் மற்றும் தனிமனிதர்களை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஒழுங்கீனம் தொடர்பான சட்டத்தின் ஓர் அங்கமாக Asbos கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த கட்டளைகளில் குறிப்பிட்டுள்ள தனிமனிதர்கள் ஒரு கிரிமினல் குற்றத்தை செய்திருக்காவிட்டால்கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு Asbos வகை செய்கிறது. இந்த நடவடிக்கைகள் பற்றி அறிவித்த பிரதமர் டொனி பிளேயர் அச்சுறுத்தல் ஒன்றை வெளியிட்டார்: "நீண்ட நெடுங்காலமாக சுயநலம் கொண்ட சிறுபான்மையினர், தங்கள் விருப்பம்போல் நடந்து கொண்டனர். அது மாறிக்கொண்டு வருகிறது.

"குற்றங்களை புரிவோர், சுற்றித்திரிவோர், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது."

வழக்கமாக ஒரு உள்ளூர் கவுன்சில், மனுச்செய்வதைத் தொடர்ந்து, ஒரு மாஜிஸ்திரேட், நீதிமன்றம் Asbo நோட்டீசை கொடுக்கிறது. அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கிரிமினல் நடவடிக்க்ைகளுக்கு எதிராக மட்டுமல்ல கிரிமினல் குற்றத்திற்கு முன்னோடியாக இருக்கக்கூடும் என்று கருதப்படும், நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 33 வயது பெண் ஒருவர் தொலைக்காட்சி பெட்டி, ஸ்டீரியோ அல்லது வானொலிப்பெட்டி வைத்துக்கொள்ளக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. ஏனெனில் அதை அவர் மிகுந்த இரைச்சலோடு இயக்கி பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவு கொடுப்பதை தடுப்பதற்காகத்தான்.

Asbo நோட்டீஸ் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு மட்டுமே உட்பட்டதல்ல, நீதிமன்றம் தகுதியுள்ளதென்று கருதுமானால் அந்த நோட்டீஸை காலவரையின்றி நீட்டிக்க முடியும். இந்த கட்டளைகள் செயல்படத்துவங்கியது முதல் ஏறத்தாழ 3,000 Asbos நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் (CCTV மற்றும் போலீஸார் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை மறைப்பதற்கு) தொப்பிகள் அணியக்கூடாது என்றுகூட நோட்டீஸ்கள் தரப்பட்டிருக்கின்றன. அனுமதியில்லாமல் கதவில் பொருத்தப்பட்டுள்ள வீட்டுமணிகளை ஒலிப்பதற்கும் தடைவிதித்து இத்தகைய நோட்டீஸ்கள் தரப்பட்டுள்ளன.

எல்லா வயது வரம்புகளை சார்ந்தவர்களுக்கும், இத்தகைய நோட்டீஸ்கள் தரப்பட்டுள்ளன. 87 வயது பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு "தொந்தரவுகளை" தருவதிலிருந்து தடுப்பதற்காக ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொதுவாக Asbos இளைஞர்களை குறிவைத்தே தரப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் தங்களது புறநகர் பகுதிகளில் சில தெருக்களில் நடந்து செல்வதற்கும் அல்லது வர்த்தக வளாகங்களில் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 24-ல், 10-வயது இரட்டையர் சிறுவர்களுக்கு Norfolk நகரசபை அதிகாரிகள் Asbos நோட்டீசை கொடுத்தார்கள் இந்த நோட்டீசை பெற்ற மிகக் குறைந்த வயது சிறுவர்கள் இவர்கள். அவர்கள் இருவரும் மிகுந்த இரைச்சலுடன் இசைக்கருவிகளை இயக்கியதாகவும் தங்களது பிளாட்டிற்கு வெளியிலுள்ள பால்கனியில் பந்து விளையாடியதாகவும், மாடிப்படிகளில் ஓங்கித்தட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று 15 வயது மற்றும் 13 வயதான வேறு இரண்டு சிறுவர்களுக்கும் Asbos நோட்டீஸ் தரப்பட்டிருக்கிறது.

புரொபேஷன் யூனியனான Napo இந்த வழக்குகள் தொடர்பாக புகார்கள் கூறியுள்ளது. டிசம்பர் 26-ல் அந்த யூனியன் ஒரு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூகவிரோத நடத்தைகளை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள் முறைகேடாக, பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை, மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டளைகளை மீறுவோர், அதிக அளவில் சிறைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களது மூல குற்றம், சிறைக்கு செல்வதற்கு அப்பாற்பட்டது என்றாலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டே வருகிறது என்று Napo கூறியுள்ளது. 2001-ல் 322 Asbos நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டன, அவற்றில் 114 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 2002-ல் 403 பேருக்கு Asbos நோட்டீஸ் தரப்பட்டது. அவர்களில் 212 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று Napo ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பூகோள அடிப்படையில் நாட்டின் சில பகுதிகள் குத்துமதிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மற்ற பகுதிகளைவிட அதிக அளவில் அந்த பகுதிகளில் Asbos நோட்டீஸ் தரப்படுகிறது, என்று Napo சுட்டிக்காட்டியிருக்கிறது. Greater Manchester போன்ற பகுதிகளில் மற்ற இடங்களைவிட கூடுதலாக 5 மடங்கு Asbos நோட்டீஸ்கள் தரப்படுகின்றன.

Napo குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ள சில வழக்குகளில் ஒரு இளம்பெண் பொது இடத்தில் எச்சில் துப்புவதை தடுப்பதற்கு Asbos நோட்டீஸ் தரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. நேரில் கண்டவர் சாட்சியத்தின் அடிப்படையில் அந்த இளம்பெண் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மற்றொரு வழக்கில் 28 வயது இளைஞர் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு "பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டதற்காக" Asbos நோட்டீஸ் தரப்பட்டிருக்கிறது. அந்த நோட்டீஸை மீறியதற்காக அவருக்கு இரண்டு முறை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 15 வயது இளைஞர் Asbos கட்டளையை மீறியதற்காக 6 மாதம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இத்தகைய சம்பவங்கள், பிளேயர் அரசாங்கம் குற்றவியல் சட்டநடவடிக்க்ைகள், மூலம் எவ்வாறு சமூக பிரச்சனைகளை சமாளிக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மனக்கோளாறு உள்ளவர்களுக்கு, முறையான மருத்துவ சிகிச்சை தேவை. அதற்கு பதிலாக அவர்கள் நிறைவேற்ற முடியாத தடைகளை Asbos விதிக்கிறது. இதன் விளைவாக அவர்கள் சிறைக்கு செல்லவேண்டியிருக்கிறது. அதே போன்று பள்ளிக்கு செல்லமுடியாத அல்லது பள்ளியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ள சிறுவர்களை சுவரொட்டிகளிலும் பத்திரிக்கைகளிலும் "பெயர் சுட்டி வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தி" குற்றவாளிகளாக்குகிறார்கள்.

Top of page