World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Torture practices in the German army

ஜேர்மன் இராணுவத்தில் சித்திரவதை நடவடிக்கைகள்

By Lucas Adler
3 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மன் செய்தி சஞ்சிகையான Der Spiegel, ஜேர்மன் இராணுவத்தில் (Bundeswehr) புதிதாக சேர்க்கப்படுபவர்கள் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் Coesfeld நகரத்தில் உள்ள இராணுவ முகாம்களில் ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்குமிடையே நடைபெற்ற அடிப்படை பயிற்சியின்போது திரும்பத் திரும்ப சித்திரவதை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக, அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு பிணைக்கைதி விடுவிக்கப்படுவதாகவும், அவர் பிடிக்கப்பட்டு, விசாரணைக்காக கொண்டுவரப்படுவதையும் ஒத்திகை நடத்துவதற்காக இத்தகைய சித்திரவதைகள் நடத்தப்படுகின்றன. அடிப்படை பயிற்சி பெறும் இராணுவத்தினர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு, கழுத்தில் அடிக்கப்பட்டு மற்றும் மின்சார அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக அந்த சம்பவத்தை அடக்கி வாசிக்க முயன்றது அந்த சம்பவம் "ஏற்றுக் கொள்ள முடியாதது, ஒருதனிப்பட்ட சம்பவம் என்று குறிப்பிடப்பட்டது ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஸ்டிருக் (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) ஜேர்மன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு தலைவர் Reinhold Robbe (ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) இருவரும் இந்த சம்பவங்களில், இருந்து தங்களை விலக்கிக்கொள்ள முயன்றனர், இதற்குக் காரணமானோர் கடுமையான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்று எச்சரித்தனர், இதர இராணுவ முகாம்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வந்திருந்தாலும்-----குறைந்த பட்சம் ஆதாரத்துடன் 14 முறைகேடு பற்றிய சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் பாதுகாப்பு அமைச்சர், அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்ற தனது கருத்தை விடாபிடியாக நிலைநாட்டினார்.

இப்பிரச்சனை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கட்டளையிட்டுள்ள விசாரணை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படையினருக்கு ஏன் அடிப்படை பயிற்சி தரப்படுகிறது என்பது தொடர்பாக விசாரிக்காது. Coesfeld சம்பவத்தில் குற்றம், சாட்டப்பட்டுள்ள ஒருவர் Report Mainz சஞ்சிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் எதிர்காலத்தில் இராணுவத்தின் அடிப்படை பயிற்சிகளில் ஓர் அங்கமாக பிணைக்கைதிகள் பிடிபடுவது தொடர்பாக ஒத்திகை நடத்தப்படுமென்று குறிப்பிட்டார். மேல் அதிகாரிகள் தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் அது சம்பந்தமாக, கட்டளையிட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சி பற்றி ஊடகங்கள் முழுமையாக, செய்தி வெளியிட்டாலும், அவை முற்றிலும், புதிய இராணுவத்தினர் மட்டும் முறைகேடாக நடத்தப்பட்டனர் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஊடகங்கள் ஒரு முக்கியமான பிரச்சனையை, எழுப்பவில்லை. அந்த பிரச்சனை இராணுவத்தினருக்கு நெருக்கடி ஏற்படும்போது, சித்திரவதை நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படுகின்றது என்பதாகும். ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் பரவலாக சித்திரவதை நடவடிக்கையை மேற்கொண்டது இந்த உண்மையை நிரூபிப்பதாக உள்ளது.

இந்த சம்பவங்களுக்கும் ஜேர்மன் இராணுவம் தற்காப்புப் படை என்ற நிலையிலிருந்து ஒரு நிரந்தர போர்படை என்ற நிலைக்கு மாற்றப்பட்டதோடு நேரடியாக சம்மந்தப்பட்டதாகும். இந்த மாற்றத்தை, இராணுவத்தின் இயல்பையே மாற்றாமல் கொண்டுவந்துவிட முடியாது. ஜேர்மன் இராணுவம் எல்லைகளை பாதுகாப்பது மற்றும் அதன் தார்மீக ஒழுக்கம் மற்றும் அதன் சொந்த கீர்த்தி ஆகியவை, குளிர் யுத்தகாலத்தில் நிலவிய சிறப்பு வரலாற்று சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பட்ட விளைவாகும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் ஜேர்மனி மீண்டும் ஆயுதபாணியாக்கப்பட்டது, அந்த நேரத்தில் நாஜி ஆட்சியின்போது, ஜேர்மன் இராணுவம் புரிந்த குற்றங்கள் மக்களது உள்ளத்தில் பசுமையாக இருந்த காரணத்தினால் மீண்டும் ஆயுதபாணியாக்குவதற்கு கூர்மையான கண்டனம் எழுந்தது. என்றாலும், வெற்றி பெற்ற மேற்கு நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்தன, சோவியத் யூனியனின் செல்வாக்கு மண்டலத்திற்கு இடையூறு செய்யும் பனிப்போர் எல்லைச் சாவடியாக ஜேர்மனியை பயன்படுத்திக்கொள்வதற்காக மேற்கு நாடுகள் மீண்டும் இதை ஆதரித்தன.

இந்தச் சூழ்நிலைகளில், ஜேர்மன் இராணுவத்தை நிறுவுவது ஜனநாயகம் என்ற போர்வையில், நாஜி ஆயுதப்படை (Wehrmacht) முறைகளில் இருந்து வேறுபட்டதாக அமைந்தால்தான் சாத்தியமாகும். எனவே, புதிய இராணுவத்தின் பங்களிப்பு எல்லைப்பாதுகாப்பு என்கின்ற அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டன, "உள்தலைமை'' என்ற கருத்து வளர்க்கப்பட்டது.

இந்த கருத்தின் அடிப்படை என்னவென்றால் இராணுவத்தில் சர்வாதிகார கட்டுக்கோப்பிற்கும் படையினரின் அடிப்படை மனித உரிமைகளுக்குமான மோதலை கட்டுப்படுத்தவதும், ''சீருடையில் இருக்கின்ற குடிமக்களாக'' விமர்சனரீதியாக சிந்திக்கும் இராணுவத்தை மாற்றுவதுதான் நோக்கம். அரசியல் சட்ட வரம்பிற்கும், ஜனநாயக எல்லைக்குள் இராணுவம் இணைக்கப்படுகிறது. நாஜிக்கள் காலத்தில், நடந்ததைப் போல் இராணுவம் "ஒரு நாட்டிற்குள், இன்னொரு நாடு" என்ற நிலை தோன்றிவிடாது தடுப்பதுதான் இதன் நோக்கம்.

ஆனால் நடைமுறையில் அதிகாரபூர்வமான கூற்றுக்களுக்கும் உண்மைக்குமிடையில் ஒரு கணிசமான இடைவெளி நிலவியது. என்றாலும் குறைந்தபட்சம் ஆளும் வட்டாரங்கள், போருக்கு பிந்திய காலம் முழுவதிலும், இந்த பொதுக்கருத்தை ஏற்றுக்கொண்டன. "சீருடையில் குடிமகன்" இராணுவத்தில் சேருகின்ற சமூகத்தில் அடித்தளமிட்டுள்ள ஒரு அடையாளச் சின்னமான இராணுவம் என்ற கருத்து பிரபலப்படுத்தப்பட்டது.

சோவியத் யூனியன் சிதைந்தவுடன் மற்றும், ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டவுடன், ஜேர்மனியின் சர்வதேச நிலைப்பாடு அடிப்படையிலேயே மாற்றம் கண்டது. ஒரே நாளில் எல்லை பாதுகாப்பு என்பது காலாவதியாகிவிட்ட கருத்தாக மாறிவிட்டது. ஜேர்மனியின் கிழக்கே ஒரே நேரத்தில் மிகப்பெரிய அதிகார இடைவெளி தோன்றியது.

ஆரம்பத்தில், இராணுவம் ஒரு ஜனநாயக, அமைதிகாப்புப்படை என்ற சொல் அப்படியே நிலைநாட்டப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் போருக்கு பிந்திய காலத்தில் ஜேர்மனியை மீண்டும் செல்வாக்குமிக்க ஒரு வல்லரசாக உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகளை உதறித்தள்ளுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை ஆளும் செல்வந்தத்தட்டைச் சேர்ந்த பெரும் அளவில் வளரும் பிரிவினர் உணர்ந்தனர். அவர்கள் ஜேர்மனி தனது நலன்களை பொருளாதார மற்றும் அரசியல், வழிமுறைகளில் மட்டுமின்றி இராணுவத்தின் மூலமும் ஜேர்மனி நிலைநாட்ட வேண்டுமென்று விரும்பினர்.

ஏற்கனவே 1992 இல், ஹெல்மட் கோல் தலைமையிலான பழமைவாத அரசாங்கம் இராணுவத்தின் பங்களிப்பு பற்றி மறுவிளக்கம் தர தொடங்கியது. இதற்கு நடுநாயகமாக விளங்கியது, "ஜேர்மனியின் தேசிய நலன்களை சட்டபூர்வமாக'' முன்னெடுத்துச் செல்வது அமைந்தது. குறிப்பாக உலகம் முழுவதிலும் சந்தைகளையும், மூலவளங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு எந்தவிதமான தடையுமில்லாத வாய்ப்பு உருவாக வேண்டும்" என்பதாகும். (பாதுகாப்பு கொள்கை வழிகாட்டியில், 1992).

ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு பற்றிய மிக விரிவான கருத்தை அனுமதித்து இந்த புதிய அணுகுமுறையை ஜேர்மனி அரசியல் சட்ட நீதிமன்றம் ஆதரித்தது. 1994 முதல் ஜேர்மன் இராணுவத்தினர் நேட்டோ எல்லைக்கப்பால், அதிக அளவில் அனுப்பப்பட்டனர். ஆரம்பத்தில், அவர்கள், மருத்துவ மற்றும் இராணுவ உதவிப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்னர், ஆனால் அதற்கு பின்னர் உடனடியாக ஆயுதந்தாங்கிய சமாதான பாதுகாப்புப்பணிகள் என்பவற்றில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

கோல் அரசாங்கத்திற்கு பின்னர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைகள் கூட்டணி அரசாங்கம் 1998 இல் பதவிக்கு வந்தபின்னர் இந்த நடவடிக்க்ைகள் முடுக்கிவிடப்பட்டன. இரண்டாவது உலகப் போருக்கு பின் முதல் தடவையாக, ஒரு வெளிநாட்டில் போரிடுவதற்காக ஜேர்மனி படையினரை சமூக ஜனநாயக கட்சி -பசுமை அரசாங்கம் அனுப்பியது. பசுமைகள் அதே நேரத்தில், இராணுவத்தை ஒரு வலுவான தலையீட்டு படையாக நவீன ஆயுதங்களுடன் உருவாக்கும் சேவைக்கு ஆதரவான விவாதங்களை துவக்கினர்.

ஆரம்ப தடை தகர்க்கப்பட்ட பின்னர் நேட்டோ எல்லைக்கு வெளியில் பலமுறை ஜேர்மன் இராணுவம் அனுப்பப்பட்டது. மிக குறுகிய காலத்திற்குள், அமெரிக்கா தவிர வேறு எந்த நாட்டையும்விட, தனது சொந்த நாட்டின் எல்லையில் இருப்பவர்களை விட அதிகமான படையினரை ஜேர்மன் வெளிநாடுகளுக்கு அனுப்பியது. செப்டம்பர் 11 தாக்குதல்களையும், ஜேர்மன் அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டு இராணுவவாதத்தை முடுக்கிவிடுவதற்கும், தீவிரமான ஆக்கிரமிப்பான வெளிநாட்டுக்கொள்கையை கடைபிடிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டது.

2000இல் பிரசுரிக்கப்பட்ட பாதுகாப்புக்கொள்கை வழிகாட்டி நெறிமுறைகளின், ஒரு புதிய பதிப்பில் இந்த நடவடிக்க்ைகள், விளக்கப்பட்டன. பூகோள முழுவதிலும் இராணுவத்தை அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட்டது, அமெரிக்க இராணுவ கொள்கையான மிரட்டல் மற்றும் தற்காப்புப் போரை ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையாக ஜேர்மனியும் ஏற்றுக்கொண்டது.

ஜேர்மன் இராணுவம் தனது புதிய பங்கை வகிப்பதற்கு ஒரு புதுவடிவமான படையினர் அதிகம் தேவைப்பட்டது. அரசியல் கல்வியூட்டல் மற்றும் சுதந்திர சிந்தனை ஆக்கிரமிப்பு அடிப்படையிலான இராணுவக் கொள்க்ைகளோடு ஒன்றிப் போக முடியாது. பெருகிவரும் வன்முறை சூழ்நிலைகளுக்கேற்ப இராணுவத்தினர் அனுப்பப்படும்போது, அதற்கேற்ப இராணுவத்தனரின் குணாதிசயங்களும் மாற்றப்படவேண்டும். ஒட்டுமொத்த மக்களில் இருந்தும் சுதந்திரமாக, தனித்துச் செயல்படுவதாக ஒரு இராணுவம் உருவாக்கப்படவேண்டும்.

"நமக்கு பாரம்பரிய போர்வீரர்களும் தேவை உயர் தொழில்நுட்ப அடிப்படையிலான போரை முன்நின்று நடத்துபவர்களும் தேவை." என்று இராணுவ ஆய்வாளர் என்ற முறையில் Hans - Otto Budde என்பவர் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

"Monitor" TV நிகழ்ச்சியில் பேட்டியளித்த உளவியல் பேராசிரியர் Morus Markard இதை எப்படி செயல்படுத்த முடியும் என்பதை விவரித்தார்: "படையினருக்கு அடிப்படை கல்வியளிக்கும்போது, நமது சமுதாயத்திற்குள், பரவலாக நிலவுகின்ற தார்மீக தடைகளை நீக்கியாக வேண்டும். பிறரை கொல்லக்கூடாது, இழிவுபடுத்தக்கூடாது சித்திரவதை அல்லது சித்திரவதை போன்று தோன்றுகின்ற நடவடிக்க்ைகளை எடுக்கக் கூடாது என்பதாக நிலவுகின்ற தடைகளை நீக்கவேண்டும், இந்தத் தடைகள் கொள்கை அடிப்படையில் ஒழித்துக்கட்டப்படவேண்டும். வெளி நாடுகளில் கொல்வது, இழிவு படுத்துவது மற்றும் சில சூழ்நிலைகளில் மற்றவர்களை சித்திரவதை செய்வது சாத்தியம் என்று ஒரு சூழ்நிலை உருவாகும்போது அதற்கேற்ப நமது படைகள் அனுப்பப்படவேண்டும்."

Coesfeld சம்பவங்கள் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் Hamburg சமாதான மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான, ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, இராணுவத்திற்குள் இத்தகைய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததை கோடிட்டுக் காட்டுகிறது. 1980கள் முதல் அரசியல் மற்றும் இராணுவத்தலைமை ''போரிடும் நோக்க'' ஸ்லோகத்தை பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே சமூகத்தில், இராணுவத்தை பற்றிய பரந்த பிரிவினரிடையே நிலவிய பாரம்பரிய '' பன்முகவாத சமூகமதிப்பு'' நனவை பற்றிய வேறுபாட்டை காட்டுகின்ற வகையில் இந்த புதிய ஸ்லோகம் அமைந்தது.

இந்த சீர்திருத்தங்களின் பூர்வாங்க முடிவு 'நவீன-பாராம்பரிய' நிர்வாகத்தில் ஒரு ''போரிடும் கலாச்சாரத்தை'' உருவாயிற்று, அனைத்திற்கும் இராணுவத்தின் திறமைதான் அளவுகோல் என்ற நிலை உருவாயிற்று. ஒரு படையினன் எப்போதுமே போருக்கு தயாராக, இருப்பவர், சுயநலமற்றவர் நிபந்தனை எதுவுமில்லாமல் கீழ்படிந்து நடக்கின்ற வீரர் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் நெறிமுறையாயிற்று ("ஐரோப்பிய பாதுகாப்பும், ஜேர்மன் இராணுவத்தின் எதிர்காலமும்" என்ற குழு அறிக்கை: ஜனநாயகம் இராணுவமுகாமின் கதவோடு நின்றுவிடுவதில்லை", Hamburg 2004).

"சீருடையில் குடிமக்கள்" என்ற கருத்தும் ஜேர்மன் இராணுவம் சமூகத்தில் நங்கூரமிட்டது என்ற கூற்றும் போருக்குப் பிந்திய காலத்தில் பாதுகாப்பிற்கு மட்டுமே இராணுவம் என்ற கட்டுப்பாடுகளையும் சேர்த்து இராணுவவாதத்திற்காக தியாகம் செய்யப்பட்டன. Coesfeld இல் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, நடைபெற்ற விவாதங்களின் கண்டனங்கள் மேலோங்கி நின்றாலும் அதை நியாயப்படுத்துகின்ற வகையில் சில குரல்கள் ஒலித்தன, அவை மக்களிடையே படையினர் பற்றிய புதிய சித்திரத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பை தருகின்ற ஒரு வாய்ப்பாக அவர்கள் எடுத்துக்கொண்டனர்.

Munich Merkur தந்துள்ள தகவலின்படி ஜேர்மன் இராணுவத்தின் முன்னாள் ஜெனரல் இன்ஸ்பெக்டர் Klaus Naumann இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் தரப்படாததைக் கண்டித்தார். எவ்வாறிருந்தபோதிலும், ஜேர்மனியில் இராணுவப் பயிற்சி அளவிற்கு அதிகமான கடுமையாக உள்ளது என்ற கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, "ஒரு படையினனின் வாழ்வில் சம்மந்தப்பட்ட மிகத் தீவிரமான அம்சங்களை உள்ளடக்கிய சம்பவங்களை வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற படையினர் சந்திக்கவேண்டிய இன்றைய முழுமையான மாறுபட்டதொரு உண்மையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நாம் நமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்."

அண்மையில் Süddeutschen Zeitung-ல் கட்டுரை எழுதியுள்ள நூலாசிரியர் Jürgen Busche எழுதியுள்ள நூலான Heldenprüfung இல் (Testing of Herase) குறிப்பிடத்தக்கது. அந்த நூலில் அவர் முதலாவது உலகப் போரில் (Edwin Rommel உட்பட-வட ஆபிரிக்காவிற்கான கிட்லரின் தளபதி) ஆறு படையினர் மற்றும் அதிகாரிகளின் மகத்தான இராணுவ சாதனைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். மற்றும் அதன் மூலம் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்குமிடையே, எந்தவிதமான ''தடையும் இல்லாத உறவுகளுக்கு'' வகை செய்கிறார்.

அவர் ''கவனமாக வளர்க்கப்பட்ட இராணுவ பாரம்பரியத்தை'' அறிமுகப்படுத்துகிறார். அது ஜேர்மன் இராணுவத்திற்கு கல்விபுகட்டுவதில் ஒரு அடிப்படையாக குறிப்பிடுகிறார். அந்த அடிப்படை படையினருக்கு இராணுவத்தின் மூலம் "ஒரு முன்மாதிரி" பங்களிப்பை தருவதாகும். இப்படிச் செய்யும்போது ''ஜேர்மன் இராணுவம் பற்றி வரலாற்று அடிப்படையில்'' கண்டன ஆய்வுகள் செய்யப்படுவதை கண்டித்திருக்கிறார். அந்த ஆய்வுகள் ஜேர்மன் படையினர் முட்டாள்கள் அல்லது கயவர்கள்'' என்று சித்தரிக்கின்றன. இப்படி சித்தரிப்பதை ஆயுதப் படைகளுக்கு கல்வியளிப்பதற்கு ஒரு இடையூறாக அந்த நூலாசிரியர் கருதுகிறார்.

இதை நேரடியாக சொல்வதென்றால், இதன் பொருள் என்னவென்றால், எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் ஜேர்மன் இராணுவவாதத்தையும் அதன் "படையினரையும்" போற்றிப் புகழ்வது ஜேர்மன் இராணுவத்திற்கான அடித்தளமாக அமைக்கப்படவேண்டுமென்று கூறுகிறார், இரண்டு உலகப் போர்களில் அதன் குற்றம்மிக்க பங்கை சாதாரணமாக மறந்துவிடச் சொல்கிறார். அப்படி அவர் கூறுவது எதற்காகவென்றால், ஜேர்மனியின் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, படையினர் தங்களது கொல்லுகின்ற மற்றும் மடிகின்ற பணியை தடையின்றி செய்யத்தான்.

Top of page