World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: strikes reveal lack of programme to fight austerity measures

பிரான்ஸ்: சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடும் வேலைத்திட்டம் இல்லாததை வேலை நிறுத்தங்கள் காட்டுகின்றன

By Antoine Lerougetel
25 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சென்றவாரம் நலன்புரி அரசுகளை இரத்து செய்வதற்கும், தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்குமான பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்ப்பதற்காக பல்வேறு ஒருநாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றமை, ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கொள்கைகளுக்கும் பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் நிர்வாகத்திற்கும் உள்ள எதிர்ப்பின் வீச்சை எடுத்துக்காட்டுகின்றன. (பிரெஞ்சு பொதுத்துறை ஊழியர்களின் வெகுஜன வேலை நிறுத்தங்கள் என்ற கட்டுரையைக் காண்க) அதே நேரத்தில், அவை இந்தக் கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் போரிடுவதற்கு ஒரு வேலைதிட்டம் இல்லாததையும் பகிரங்கப்படுத்துகின்றன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களில் 65 சதவீதம் பேர் ஆதரவு தருவதாக கருத்துக்கணிப்புக்கள் பதிவு செய்திருக்கின்றன. என்றாலும், தொழிற்சங்கங்கள் செயலாற்ற தூண்டிவிட்டு மிகப் பரவலான முறையில் இந்தக் கண்டனங்கள் நடைபெற்றிருப்பது, அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான அறைகூவலாக இது வளர்ந்துவிடக்கூடாது என்பதில் தொழிலாளர் அதிகாரத்துவம் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொதுவான வெகுஜனகிளர்ச்சி ஜனவரி 20, வியாழனன்று நடைபெற்றது, அதில் அரசுத்துறை ஆசிரியர்கள் 800,000 பேரில் 50 முதல் 60 சதவீதம் பேர் பிரான்ஸ் முழுவதிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர் குறைப்பு, பாடத்திட்டங்களை இல்லாதாக்குவதன் மூலம் கல்வியின் தரத்தைக் குறைப்பது, கற்பிக்கும் சுமையை அதிகரிப்பது மற்றும் தேர்வு முறைகளில் மோசடி செய்வது ஆகியவற்றை கண்டித்தனர். தங்களது ஊதிய விகிதங்கள் 2002 முதல் தேக்க நிலையில் இருந்து வருவதால் வாங்கும் சக்தியில் ஏற்பட்ட 5 சதவீத இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மீண்டும் கொண்டுவரக் கோரினர். அவர்களுடன் சில தனியார் பள்ளிகளை சார்ந்த பெரும்பாலும் கத்தோலிக்க பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், அவற்றின் ஊழியர்களுக்கு அரசு நிதி வழங்குகிறது.

அத்தோடு மருத்துவமனை ஊழியர்களும் இதர பொதுத்துறை ஊழியர்களும் தெருக்களில் அணிவகுத்து வந்தனர்: இளைஞர்களுக்கான நீதித்துறை பாதுகாப்பு துறையை சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள், சுற்றுப்புற சூழல் துறையின் 35 சதவீத ஊழியர்கள் மற்றும் விவசாய சேவை, கலாச்சார சேவை மற்றும் ஆவணக்காப்பகங்களின் ஊழியர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். அன்றைய தினம் பல அருங்காட்சியகங்களும், நினைவு சின்னங்களும் மூடப்பட்டன, மற்றும் உள்ளாட்சி ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். கல்வித்துறை நீங்கலாக அன்றையதினம் வேலை நிறுத்தம் செய்த சிவில் சேவை ஊழியர்கள் 20.25 சதவீதம் என்று அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. CGT, CFDT, FO, FSU மற்றும் UNSA ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்புகளும், பெரிய கூட்டமைப்புகளும் கூட்டாக இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன, இவை அத்தனையும் சோசலிச கட்சி பிரதமர் லியோனல் ஜோஸ்பனின் முந்தைய பன்மை இடது கூட்டணியில் அரசாங்கத்திடம் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தனவாகும்.

2003 இளவேனிற்காலத்தில் ஓய்வூதிய உரிமைகள் மற்றும் தேசிய கல்வி முறையைக் காத்து நிற்பதற்காக நடைபெற்ற வெகுஜன இயக்கத்திற்குப் பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில், 70-க்கு மேற்பட்ட பிரான்சின் நகரங்களில் 210,000 முதல் 3,30,000 வரை அரசு ஊழியர்கள் பேரணி நடத்தினர். பாரிசில் 30,000, மார்செய்யில் 10,000, றென்னில் 8,500 பேர் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை நடவடிக்கைகள் ஒரு நாள் வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து நடைபெற்றதன் உச்சக்கட்டமாக இருந்தன.

செவ்வாயன்று, சுமார் 30 சதவீத அஞ்சலக ஊழியர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அஞ்சல் சேவைகளை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவு விவாதிக்கப்படுவதை அவர்கள் எதிர்த்தனர்---- அது பிரெஞ்சு சட்டத்தில் 1997 மற்றும் 2002 ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட இரண்டு கட்டளைகளை உள்ளடக்கியதாகும், அவை இரண்டும் தனியார் போட்டிக்கு அஞ்சல் சேவையை திறந்துவிட வகை செய்வதாகும்.

புதனன்று, பெரிய பட்டாளம் போல் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சில இடங்களில் அரசு ஊழியர்களோடு சேர்ந்து கொள்வதற்காக வியாழன் வரை வேலை நிறுத்தத்தை நீடிக்கவும் முடிவு செய்தனர். புதனன்று மருத்துவ அறுவை சிகிச்சை கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது, அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு மிக நெருக்கடியான நிலையிருப்பதை அவர்கள் கண்டித்தனர்.

மின்சாரத்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து 2003-ல் பாரியளவு வேலை நிறுத்தம் செய்த மற்றும் வாக்கெடுப்பு எடுத்த தொழிலாளர்கள் புதன் கிழமையன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதற்கு, CGT அழைப்பு விடுத்திருந்தது. அரசிற்கு சொந்தமான மின்சார மற்றும் எரிவாயு தொழிற்துறை ஆகிய EDF மற்றும் GDF ஆகிய இரண்டினதும் தனியார்மயமாக்கல் அடுத்த நாடாளுமன்றத்தின் சட்டத்திற்காக இருக்கின்றன. என்றாலும், 2004 டிசம்பர் 21-ல் தடைப்பட்டுவிட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்க கோரி CGT தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக்கொண்டது. CGT கூடுதல் ஓய்வூதிய சந்தாக்கள் செலுத்துவதையும் இந்தத் தொழிற்துறையிலிலுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்டவும் 5.5 சதவீத ஊதிய உயர்வு கோருகிறது, அதேபோல சுகாதார சலுகைகளை மேம்படுத்த கோரியும், கல்வித் தகுதிகளை அங்கீகரிக்க கோரியும் குரல் எழுப்பிவருகிறது. தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் ஒப்பந்தப்பேர விவரங்கள் குறித்த பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கி இருக்கின்றது.

CGT, CFDT மற்றும் FO உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் 35 மணி நேர வாரப்பணி இரத்து மற்றும் ஊதியங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்தக்கோரி பிப்ரவரி 5-ல் பிரான்ஸ் முழுவதிலும் ஒரு நாள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நடத்த கூட்டாக அழைப்பு விடுத்திருக்கின்றன. இது ஒரு சனிக்கிழமை நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது, அது ஒரு விடுமுறைநாள். ''தனியார் துறையைச் சேர்ந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள முடியாத ஊழியர்களும் பங்கெடுத்துக் கொள்வதற்காக'' நடத்தப்படுகிறது.

பொதுத்துறையில் பணியாற்றி வருகின்ற 5 மில்லியன் தொழிலாளர்கள் பிரெஞ்சு தொழிலாளர் சக்தியில் 23 சதவீதமாகும். அவர்களது வேலை நிறுத்தங்கள் தனியார் துறை தொழிலாளர்களை எச்சரிக்கும் தன்மை கொண்டது, தனியார் துறையில் உள்ளவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்கள் பழிவாங்கப்படுவர், அல்லது தண்டிக்கப்படுவர், எனவே அவர்களுக்கும் சேர்த்து இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக தொழிற்சங்க தலைமை, காட்டிக்கொடுத்ததன் விளைவாகும், தொழிலாளர்களிடையே வர்க்க நனவும், ஐக்கியமும் ஏற்பட்டுவிடாது முறியடிக்கும் விதத்தில் தனித்தனியாக போராட்டங்களை தனிமைப்படுத்தி, அவர்கள் முதலாளிகளோடும், அரசாங்கங்களோடும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவுதான் இது.

சென்ற வார நடவடிக்கைகளுக்கு அணிதிரட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் வெளியிட்ட துண்டு அறிக்கைகளும் இதர வெளியீடுகளும் ஓய்வூதிய உரிமைகள் பற்றிய நெருக்கடியான பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்வதற்கு வழி வகுத்தது. இந்த பிரச்சனையில் 2003 மே, 13-ல் 4 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர் மற்றும் தொழிலாளர்களது ஓய்வூதியம் பெறும் வயதை உயர்த்துகின்ற மற்றும் ஓய்வூதியங்களை 30 சதவீதம் வரை குறைக்கின்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மில்லியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இத்துடன் ஆசிரியர்கள் அல்லாத அமைப்பிலுள்ள ஊழியர்களை உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு மாற்றுகின்ற திட்டமும் இணைந்து கொண்டது.

இந்த நாள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் சில இடங்களில் ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தம் செய்தது உட்பட பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு உயர் புள்ளிதான் அது. மே, 13-க்கு பின்னர் பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுப்பது ஒரு மையமான கோரிக்கையாகிவிட்டது, பொது வேலைநிறுத்தம் அரசாங்கத்தின் அரசியல் சட்டபூர்வ தன்மையை கீழறுக்கும் என்ற அடிப்படையில் இதை வெளிப்படையாக பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகள் எதிர்த்தன.

2003-ல் பணியாற்றாத எந்த நாளுக்காகவும் ஊதியங்களை மறுப்பதில் உறுதியுடன் செயல்பட்டதால் வேலை நிறுத்தம் சிதைக்கப்பட்டுவிட்டதாக வலதுசாரிகள் கூறுகின்றனர், மீண்டும் இது போன்ற வெகுஜன இயக்கம் நடைபெறாதவாறு இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தும் என்கின்றனர். என்றாலும் அந்த இயக்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் கொள்கைதான். பூகோளமய போட்டியிலிருந்து தேசிய பொருளாதாரத்தை காத்து நிற்க அவர்கள் நடவடிக்கையை ஆரம்பித்தனர், அரசாங்கத்திற்கும் அதன் நவீன-தாராளவாத வேலைதிட்டத்திற்கும் எதிராக அந்த இயக்கம் ஒரு அரசியல் சவாலாக வளர்ந்து விடாது தடுக்க தொழிற்சங்க தலைவர்கள் முயன்றனர். பன்மை இடதுகளை சார்ந்த கட்சிகள் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு" அடிப்படையிலேயே உடன்பட்டிருந்தன.

2003 இளவேனிற்காலத்தில் நடத்தப்பட்ட இயக்கத்திற்கு ஏற்பட்ட தோல்வி, அரசாங்கம் சவால்விடுவாரன்றி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதும் ஒட்டு மொத்தமாக நடவடிக்கைகளை தொடக்குவதற்கு வழி திறந்து விட்டது. மேலும், இவை இந்தவார நடவடிக்கைகளுக்காக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் எந்தக் குறிப்பும் இல்லை. பென்ஷன் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு அது அமுல்படுத்தப்பட்டும் வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிப்போரின் பல்வேறு வகைப்பட்ட ஒட்டுமொத்த உரிமைகளும் அழிக்கப்பட்டு விட்டன. முதலாளிகள் குறைந்தபட்சம் நிலைநாட்ட வேண்டிய பணிகளின் தரங்கள் மற்றும் வசதிகள் மற்றும் பணிப்பாதுகாப்பு தொடர்பான சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து விடுவிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கான நெறி முறைகள், மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் வாரத்திற்கு 35 மணி நேர வேலை என்ற நிலை சிதைக்கப்பட்டு வருகிறது, இதில் முதலாளிகள் அலை போன்ற மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேர பணி மற்றும் குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால் அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் மற்றும் முதலாளிகள் அமைப்பான MEDEF இந்த உரிமையை "அதிகமாகப் பணியாற்றி அதிகமாக சம்பாதிப்பது" என்று கூறுகிறது. மருத்துவ சேவைகள் இலவசமாகக் கிடைப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அதேபோல் டாக்டர்கள், விஜயம் மற்றும் மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருகின்றன. நீதி நிர்வாக முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் Perben Two என்றழைக்கப்படுகின்றன, அவற்றின் மூலம் போலீஸாரின் கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளன மற்றும் கைது செய்யப்படுவோர் மற்றும் குற்றம் சாட்டப்படுவோரின் உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களது கோரிக்கைகளை ஏற்கவியலாத நிலையில் இருப்பதாக வலியுறுத்தி வெகுஜன இயக்கத்திற்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. பிரதமர் ரஃப்ரன் அறிவித்திருப்பதாவது, "எப்போதுமே பேச்சு வார்த்தைகள் பகிரங்கமாக நடத்தப்பட்டாக வேண்டும் மற்றும் பேச்சு வார்த்தைகளை முறித்துக்கொள்ள முடிவு செய்பவர்கள் தேவையான உறுதிப்பாட்டோடு எதிர்கொள்ளும் நிலையை எதிர்பார்த்தாக வேண்டும்". அரசாங்கம் தன்னால் முடிந்த வரை செய்திருக்கிறது என்று அவர் சொன்னார்.

தொழிற்சங்கங்கள் போக்குவரத்து மற்றும் இதர பொதுத்துறைகளில் ஒரு கட்டாய குறைந்தபட்ச சேவை இருக்கவேண்டுமென்ற கோரிக்கையை அமைதியாக ஏற்றுக்கொண்டுவிட்டதால் முதலாளிகளும் அரசாங்கமும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்றுவருகின்ற கண்டனங்கள் அலையை அவர்கள் வெற்றிகரமாக சமாளித்து விடுவார்களானால் தங்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னோக்கிச் செல்வார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சென்றவாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மற்றும் உரிமைகள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற பெரும் தாக்குதல்கள் மற்றும் தொழிலாளர்களின் பொதுவான நனவிற்கும் இடையிலான இடைவெளியை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பூகோளமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்திற்குள் ஒரு உலக ரீதியான போக்கின் அடையாளச் சின்னத்தின் ஓர் அங்கமாகத்தான், ஜேர்மனியில் ஹேர்ட்ஸ் IV சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு தொழிலாளர்களிடையே ஏறத்தாழ இல்லை.

அரசாங்கத்திற்கு பரந்த அளவிலான குரோதமும் எதிர்ப்பும் இருக்கின்றன மற்றும் பொதுவாக முன்னாள் பன்மை இடதுகளின் கொள்கைகளுக்கு அவநம்பிக்கை நிலவுகின்ற அதேவேளை, ஓய்வூதியங்கள் மற்றும் தேசிய கல்வி சேவையை பாதுகாத்து நிற்பதற்கு 2003 இளவேனிற் காலத்தில் நடத்தப்பட்ட வெகுஜன இயக்கத்தின் தோல்வியிலிருந்து அரசியல் படிப்பினைகள் எதையும் பெறவில்லை. சமூக நெருக்கடிக்கு ஒரு அரசியல் தீர்விற்கான முன்னோக்கு எதுவுமில்லை. போர்க்குணமிக்க தொழிற்சங்க நடவடிக்கை, இன்றைய ஆட்சியை குறைந்தபட்சம் சில சலுகைகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த உணர்வை பிரான்சிலுள்ள பல்வேறு தீவிரவாத போக்குகள் ஊக்குவிக்கின்றன, அவர்கள் தங்களை புரட்சிகர சோசலிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவராக பணியாற்றி வருகின்றனர்.

உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 20, வியாழனன்று Amiens-ல் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பேட்டி கண்டது. Amiens ஆசிரியர் பயிற்சி துறையில், Marc Becquet தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடியோ விஷ்வல் ஊடக பயிற்சியளித்து வருகிறார். அவர் WSWS - க்கு பேட்டியளிக்கும்போது, தான் இரண்டு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். "Fillon திட்டம் (François Fillon, கல்வியமைச்சர்) ஒரு பேரழிவு ஆகும் மற்றும் குழந்தைகளுக்கான பள்ளிகளின் எதிர்காலம் மிகப் பெருமளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, என்றாலும் அமைச்சர் பிரெஞ்சு குழந்தைக் கல்வியின் தரத்தை வலியுறுத்தியிருக்கிறார். வளங்களும், ஊழியர்களும் கூட குறைக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டு மொத்த கல்விக்கொள்கையும் இந்த ஆட்சியின் கல்வி பற்றிய கருத்தும் குறைந்துள்ளது, ஊதியங்களும் கூடத்தான் ஆனால் அது இரண்டாம் பட்சம்தான்."

Marc வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பயன்படுத்துவது முக்கியமானது என்று கருதுகிறார், அது கைவைக்க முடியாத உரிமையாக நீடிக்க வேண்டும் என்கிறார். "எனவே அவை அனைத்தையும் ஏற்க மறுக்கிறோம், என்பதைக்காட்ட தெருவில், அணிவகுத்து வரவேண்டியது முக்கியமானதாகும்." என்றாலும் இந்த அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள இந்த நடவடிக்கைகளால் செய்ய முடியுமா என்பது குறித்து சந்தேகம் கொண்டிருக்கிறார். "அது சிக்கலானது ஏனெனில் அவர்கள் வளைந்து கொடுக்காதவர்கள். பலவற்றை அவர்கள் உடைக்க விரும்புகிறார்கள் ஆனால் அவர்களிடம் தருவதற்கு அதிகமில்லை. சமூகத்திற்கு அல்லது கல்விக்கு அவர்களிடம் எந்த செயல்திட்டமும் இல்லை. சமூகம் பெற்றுள்ள பயன்கள் கீழறுக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச மக்களுக்கு, குறைந்தபட்சம் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்".

முன்னாள் பன்மை இடதை சார்ந்தவர்கள் ஒரு மாற்றீடு என்று அவர் கருதுகிறாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார்: "அதை ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. பங்கெடுத்துக் கொள்ளும் குடிமக்கள் என்று கூறுகிற மக்களும் இருக்கிறார்கள். அத்தகைய மக்களை நாம் திரட்டவேண்டும். 2003-ல் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நாம் பெருமளவிற்கு இழந்துவிட்டோம் ஆனால் நாம் மீண்டும் தொடக்குவதற்கு தயாராகயிருக்கிறோம். அந்த போராட்டத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் என்ன? நான் உண்மையிலேயே அதைப்பற்றி சொல்ல முடியாது. எதிர்காலம்? சில மனப்போக்குகளில் இருந்து அவற்றை சிதைத்துக்கொண்டு நாம் வெளியே வந்தாக வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஒருவருக்கொருவர் கலந்துரையாட வேண்டும்--- சில சொற்ப சலுகைகளை மட்டும் மிகுந்த மெத்தனமாக நம்பி அதில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மக்கள் தங்களது கண்ணோட்டங்களை சிறிதளவிற்கு விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்".

Benoît உயர்நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு விஞ்ஞான பாடத்திட்டத்தில் (‘S' science curriculum) படிப்பவர், அவர் CFDT தொழிற்சங்க கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு மூன்று நண்பர்களோடு வந்திருந்தார். "நடப்பு அரசியல் பற்றிய விழிப்புணர்வு கொள்ள வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் நமது எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது'' என்று தான் பங்கெடுத்துக் கொண்டதற்கு கூறினார். இன்றைய தினம் கல்வி மற்றும் அவர்கள் சமூக சேவைகள் தொடர்பாக செய்யவிருக்கின்ற ஒவ்வொன்றும் என்னை பயமுறுத்துவதாக உள்ளது. இந்த அரசாங்கம் ஒவ்வொன்றையும் மாற்ற விரும்புகிறது. ஜனநாயக விரோதமாக கொள்கைகளை திணிப்பதற்கு பதிலாக அவர்கள் தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

நடப்பு நடவடிக்கைகள் போதுமானவை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "அரசாங்கம் கவனிக்கும் என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால் அவர்கள் கவனிக்கும்வரை மீண்டும் நாங்கள் போராடுவோம். அவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும், இல்லையென்றால் அது ஜனநாயகமாகாது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக, நாங்கள் எப்போதுமே அவர்களோடு உடன்பட்டு நிற்போம் என்று நினைப்பார்களானால் அது நல்லதல்ல."

முன்னாள் பன்மை இடதை சேர்ந்தவர்கள் நடப்பு ஆட்சிக்கு ஒரு மாற்று என்று Benoît கருதினார். ஆனால் "சில புள்ளிகளில்தான் அனைத்திலும் அல்ல.'' இங்கே பிரச்சனை என்னவென்றால் சில கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் சீர்திருத்தங்களை எல்லா சீர்திருத்தங்களையும் எதிர்க்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓய்வூதியங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் இல்லையென்றால், இளைஞர்கள் அதற்காக பணம் செலுத்த வேண்டி வரும் மற்றும் எங்களது ஓய்வூதியங்கள் ஒன்றிற்கும் பயனற்றதாகிவிடும். ஆம், அவர்கள் ஓய்வூதியங்களை குறைத்துவிட்டார்கள் ஆனால் இழப்பதிலும் ஒரு குறைந்தபட்சம் உண்டல்லவா".

Force Ouvrière union (FO) தொழிற்சங்கத்திற்காக, Brigitte Leclercq துண்டறிக்கைகளை வினியோகித்து கொண்டிருந்தார். அவர், அந்த தொழிற்சங்கத்தின், தேசிய சாலை பராமரிப்பு சாதன சேவையின் (DDE) Somme பிரிவின் செயலாளர், பிரான்ஸ் முழுவதிலும் அந்த சேவை குறைக்கப்பட்டு வருகிறது என்று அவர் WSWS-யிடம் கூறினார். "இரண்டு ஆண்டுகளில் எங்களது துறையில் பணியாற்றுகிற தொழிலாளர்கள் எண்ணிக்கை 1,000 திலிருந்து 300 ஆக குறைந்துவிடும். எல்லா சாலைகளுமே தேசிய அரசாங்கத்திடமிருந்து உள்ளூர் அரசாங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. ஊதியங்கள் மாறும் DDE -ல் 55 வயதில் ஓய்வு பெறுவார்கள், அதேவேளை உள்ளூர் அரசாங்கப்பணிகள் 60 வயது வரை நீடிக்கும். சிவில் சேவை அமைச்சகம் தனது தொழிலாளர்களை மதிக்கவில்லை. சிவில் சேவைகளில் தரப்படுகின்ற குறைந்த ஊதியம் உயர்த்தப்படவேண்டும்.

"அரசாங்கம் பின்வாங்கச் செய்யப்பட வேண்டும்----அது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆட்கள் பன்முகப்படுத்தல் நடப்பதை குறைந்தபட்சமாக ஆக்குவதற்கு நாம் முயல முடியும். ஒவ்வொருவருக்கும் வேலை மற்றும் ஊதியம் கிடைக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையை நாம் மாற்றிவிட முடியாது ஏனென்றால் பன்முகப்படுத்தல் தொடர்பாக அவர்கள் ஒரு சட்டம் இயற்றிவிட்டார்கள் அதில் உள்ள பாதக அம்சங்களை குறைப்பதற்கு நாம் முயற்சிக்க முடியும்."

"ஓய்வூதிய சட்டத்தை பொறுத்தவரை அது ''தொழிலாளர்களுக்கு சாதகமாக இல்லை" என்பதை Brigitte தெளிவாக எடுத்துரைத்தார். "2003-ல் இந்த சட்டத்தின் எல்லா விளைவுகளையும் நாம் அறிந்திருந்தோம். ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர்தான் அதன் பொருள் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டோம். இப்போது உறுதி செய்து தரப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தையும் கூட அவர்கள் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

2003 மே 13-ல் 4 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர் மற்றும் 2 மில்லியன் தொழிலாளர்கள் தெருக்களில் அணிவகுத்து வந்தனர் அப்போது காலவரையறையற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு பரவலாக ஒரு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை WSWS சுட்டிக்காட்டியிருந்தது. அப்போது FO-வின் பொதுச் செயலாளராக இருந்தவர் Marc Blondel, அவரது சங்கம் பொது வேலை நிறுத்தத்தையும் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தையும் திட்டவட்டமாக எதிர்த்தது. "மக்களை பாதுகாத்து நிற்க வேண்டும். ஆம், ஒரு பொது வேலை நிறுத்தம் ஏற்றதொரு தீர்வாக இருக்கும். ஆனால் நான் அரசியலை சார்ந்திருக்கவில்லை" என்று Brigitte குறிப்பிட்டார்.

இந்த ஆட்சி பதவி விலக வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார், "குறைந்தபட்சம் அது தனது போக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். அது MEDEF [பிரதான முதலாளிகள் அமைப்பினால்] நடத்தப்பட்டு வருவதாக தோன்றுகிறது" முன்னாள் பன்மை இடதை சார்ந்தவர்கள் ஒரு மாற்றாக இருக்க முடியுமென்று அவர் கருதினார். "ஆனால் நான் நிச்சயமாக அதில் எதுவும் கூற முடியாது. இடதுசாரி ஆட்சிகளும் கூட பயன் எதுவும் தராத சீர்திருத்தங்களை நிறைவேற்றியிருக்கின்றன. அனைத்தும் மாறவேண்டும், குறைந்தபட்சம் ஒரு ஐரோப்பிய அளவிற்காவது மாற வேண்டும் அது ஒன்றுதான் தீர்வு".

Top of page