World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italy seeks arrest of 13 CIA agents for abduction of Egyptian cleric

எகிப்திய மதகுருமாரை கடத்தியதற்காக 13 சிஐஏ முகவாண்மைகளை கைது செய்ய இத்தாலி கோருகிறது

By Barry Grey
27 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வெளிநாட்டு மண்ணில் கடத்தி இரகசியமாக மூன்றாவது நாடுகளுக்கு அனுப்பும் அமெரிக்காவின் நடைமுறை, அங்கு அவர்கள் குற்றச்சாட்டு எதுவும் தாக்கல் செய்யப்படாமலும் மற்றும் வழக்கமாக சித்திரவதை செய்யப்படுவதும், சர்வதேச இராஜதந்திர உறவுகளில் முன்னணிக்கு உந்தித் தள்ளப்பட்டிருப்பதுடன், எகிப்திய மதகுருமார் ஒருவரை மிலான் தெருக்களில் கைது செய்து அவரை எகிப்து சிறைக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 CIA முகவாண்மைகள் மீது கிரிமினல் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாரண்டுகள் மிலானிலுள்ள போலீசாராலும் அரச தரப்பு வழக்கறிஞர்களாலும் கோரப்பட்டது, மற்றும் ஜூன் 22-ல் ஒரு நீதிபதியினால் கையெழுத்திடப்பட்டது. அவை அபு உமர் என்றும் அழைக்கப்படும் 42 வயது ஹசன் முஸ்தபா ஒஸாமா நசர் வழக்கு சம்மந்தப்பட்டதாகும், அவருக்கு இத்தாலியினால் அரசியல் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது மற்றும் அவர் கடத்தப்பட்ட நேரத்திலும் மற்றும் 2003 பெப்ரவரி 17-ல் காணாமல் போய்விட்ட நேரத்திலும் அவர் மிலானிலுள்ள ஒரு மசூதியில் தலைவராக பணியாற்றி வந்தார்.

அந்த கைது ஆணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியாது என்று இத்தாலி அதிகாரிகள் கூறினர், ஆனால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், விசாரிக்கப்பட்டு மற்றும் தண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இதுதொடர்பாக சிஐஏ-வோ அல்லது ரோமிலுள்ள அமெரிக்க தூதரகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இந்த வழக்கில் தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்பதை மட்டுமே அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவிக்க முடிந்தது.

நசர், வழக்கமாக அமெரிக்காவை கண்டித்து வந்த ஒரு போர்குணமிக்க இஸ்லாமியர், அந்த நேரத்தில் இத்தாலி அதிகாரிகளால் புலன்விசாரணை செய்யப்பட்டு வந்தார், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் அல் கொய்தா பாணியிலான பயங்கரவாதிகளுக்காக ஆள்சேர்க்கும் குழுவை உருவாக்க அவர் முயன்றார் என்று அவர்கள் சந்தேகித்தனர். இத்தாலிய புலனாய்வாளர்கள் தங்களது நசர் பற்றிய புலன் விசாரணை முடிவுகளை இத்தாலியிலுள்ள CIA அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர், மற்றும் அந்த கடத்தல் மூலம் ஆத்திரமூட்டப்பட்டனர், அது தங்களுக்கு தெரியாமலேயே நடத்தப்பட்டது என்று அவர்கள் நிலைநாட்டினர், மற்றும் அந்த மதகுருமாருக்கு எதிராக தாங்கள் திரட்ட முயன்ற கிரிமினல் வழக்கை அது சிதைத்துவிட்டது.

சனிக்கிழமையன்றும் ஞாயிறன்றும் பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை ஆவணங்களின்படி, 13 CIA நடவடிக்கையாளர்களில் சிலர், நண்பகலில் நசர் தமது வீட்டிலிருந்து அவரது மசூதிக்கு நடந்து சென்றபோது பிடித்தனர், அவரது கண்களில் ஒரு இரசாயனவியல் பொருளை தூவினர் மற்றும் அவரை ஒரு மூட்டையாக கட்டி ஒரு வேனுக்குள் ஏற்றினர். பல மணி நேர பயணத்திற்கு அப்பால் இருந்த ஒரு கூட்டு அமெரிக்க-இத்தாலி சிறைக்கு அவரை கொண்டு செல்வதற்காக ஏவியானோ விமானப்படைத்தளத்திற்கு கொண்டு சென்றனர், செல்லுகின்ற வழியில் அந்த தளத்திலுள்ள ஒரு அமெரிக்க கொமாண்டருக்கு தங்களது நடவடிக்கை முன்னேற்றம் பற்றி தெரிவிப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆவியானோவிலிருந்து அவர் ஜேர்மனியில் ராம்ஸ்டினிலுள்ள அமெரிக்கத் தளத்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார் மற்றும் அங்கிருந்து எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

2004-ல் ஒரு குறைந்த காலத்தில் நசர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார், அப்போது, அவர் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தொலைபேசி செய்து, தன்னுடைய உடல் உறுப்புக்களில் மின்சார அதிர்ச்சி பாய்ச்சப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தார் மற்றும் ஒரு காது செவிடாகிவிட்டது என்றும் கூறினார். அதற்குப் பின்னர் அவர் மீண்டும் காணாமல் போய்விட்டார், அவர் எகிப்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டிருக்கலாம்.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்றழைக்கப்படுவதுடன் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக, வெளிநாட்டு அதிகாரிகளால் CIA முகவாண்மைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டமை இதுதான் முதல் தடவையாகும். இத்தாலியிலிருந்து இது வருவது, அதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, அதன் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனி தலைமையிலான வலதுசாரி அரசாங்கம், புஷ் நிர்வாகத்தையும் ஈராக் போரையும் உறுதியாக ஆதரித்து வருகிறது.

நசரை கடத்தியதில் ரோமிற்கு ஏதாவது பங்களிப்பு உண்டா என்பது குறித்து ஒரு புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே பொதுமக்களது கோரிக்கைகள் எழுந்துள்ளன, மற்றும் மிலான் அரசு வழக்கறிஞர்கள் எடுத்துள்ள கிரிமினல் வழக்கு அரசியல் ரீதியான நோக்கம் கொண்டது என்று பெர்லூஸ்கோனியின் சில ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். என்றாலும், கடத்தலை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய முறையில் காணாமல் போய்விட்ட நசர் மீதான விசாரணைக்கு தலைமை வகித்த, மிலானின் துணை தலைமை அரசு வழக்கறிஞர் ஆர்மண்டோ ஸ்பாடரோ, பொதுவாக இத்தாலிய அரசியலில் ஒரு வலதுசாரி பிரமுகர் என்று கருதப்படுகிறார். ஸ்பாடரோ 1970-களிலும் 1980-களிலும் செம்படை பயங்கரவாத அமைப்பு மீதான அரசதரப்பு விசாரணைக்கு தலைமை வகித்தவர் ஆவார்.

சமீபத்திய பேட்டியின் பொழுது ''கைதிகள் ஒப்படைக்கப்படுவது'' (Rendition) என்று அழைக்கப்படும், மூன்றாவது நாடுகளில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களை மாற்றும் மற்றும் நீதிமன்றத்திற்கு புறம்பானவகையில் கடத்தும் அமெரிக்காவின் நடைமுறைகளுக்கு ஸ்பாடரோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்'' சர்வதேச சட்டங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படவேண்டும்" என்று அவர் கூறினார்.

கைதிகள் ஒப்படைக்கப்படுவது தொடர்பாக அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருப்பது, இன்றுவரை இத்தாலிய அதிகாரிகள் மட்டுமே என்றாலும், இந்தநாட்டின் குடிமக்கள் அல்லது குடியிருப்போர் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக ஸ்வீடன், ஜேர்மனி, மற்றும் கனடாவில் நீதித்துறை அல்லது நாடாளுமன்ற புலன் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க அமெரிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது.

9/11-க்கு பின்னர் அமெரிக்கா குறைந்தபட்சம் 100 மக்களை கடத்தி, ''விசாரணைக்காக ஒப்படைத்துவிட்டது'' என்று பொதுவாக ஒத்தக்கருத்து நிலவுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான், மார்ச் 16-ல் பத்திரிகை மாநாட்டில், அந்த நடைமுறைகள் பற்றியும் அதை தற்காத்து நிற்பது பற்றியும் ஜனாதிபதி புஷ்ஷிடம் கேட்கப்பட்டது.

இத்தாலியிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள அரசு வழக்கறிஞர்கள் அமெரிக்காவின் நடைமுறையான கைதிகளை விசாரணைக்காக ஒப்படைப்பதற்கு எதிராக வளர்ந்து வரும் ஆத்திரம் கொண்டவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களது சொந்த எல்லைகளுக்குள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாக நடத்தப்படுகின்ற தங்களது சொந்த புலன் விசாரணைக்கு மற்றும் வழக்கு தாக்கல் செய்வதற்கு அவர்கள் அவசியம் என்று கருதுகின்ற புலனாய்வு தகவலையும் மற்றும் சாட்சிகளை தொடர்பு கொள்ளவும், அமெரிக்கா அனுமதிக்க மறுக்கிறது என்பது குறித்தும் வளருகின்ற ஆத்திர உணர்வில் உள்ளனர். ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் "ஒரு மூத்த இத்தாலிய எதிர் பயங்கரவாத நடவடிக்கை அதிகாரியின்" பேட்டியை மேற்கோள்காட்டியிருக்கிறது, அதில் அவர், "அமெரிக்க முறையால் எங்களுக்கு எந்த பயனுமில்லை. அது ஒருவழி பாதையாக உள்ளது. எங்களிடம் இருப்பதை நாங்கள் அவர்களுக்கு தருகிறோம், ஆனால் எங்களுக்கு நபர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு உதவுகின்ற வகையில் எந்த பயனுள்ள தகவலும் தரப்படவில்லை" என்றார்.

டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, ஜேர்மனியில், "செப்டம்பர் 11 விமானக் கடத்தல்காரர்கள் பலரது கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட Mounir el-Montassadeq-ற்கு எதிரான ஒரு கிரிமினல் வழக்கு உடைந்து நொறுங்கி அவர் விடுதலை செய்யப்பட்டபோது எதிர்பயங்கரவாத நடவடிக்கை அதிகாரிகள் மிகுந்த கோபத்தோடு இருந்தனர். முக்கியமான சாட்சியத்தை தருவதற்கு தவறிவிட்டனர் என்று அவர்கள் பகிரங்கமாக அமெரிக்க அதிகாரிகள் மீது பழி போட்டனர்."

டைம்ஸ் தொடர்ந்து எழுதியது; ''2001 தாக்குதல்களை திட்டமிடுவதில் உதவியதாக மாட்ரிட்டில் நடைபெற்ற விசாரணைகளில் இரண்டுபேர் மீது குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தங்களின் வழக்கை தாங்கி நிறுத்துவதற்கு ஸ்பெயின் அதிகாரிகள், கொய்தாவின் முக்கியமானவர் என்று சந்தேகிக்கப்பட்ட ராம்சி பின் அல்சிப்பை பேட்டிகாண அனுமதிக்க புஷ் நிர்வாகம் மறுத்துவிட்டது."

அமெரிக்கா மற்றும் இத்தாலிய பயங்கரவாத எதிர் நடவடிக்கை, அதிகாரிகள், போலீசார், மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு இடையிலான மோதல்களில் தெளிவான அறிக்கையின் குறைந்தபட்ச ஒருபகுதியாகத்தான், மிலான் புலனாய்வு அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு CIA முகவாண்மைகள் தொடர்பாக தங்களது புலன் விசாரணைகளில் பல விவரங்களை தருவதற்கு தயாரானார்கள். வாரக்கடைசியில் தந்த பேட்டிகளில், இத்தாலி அதிகாரிகள் நசர் கடத்தல் மற்றும் ஒப்படைக்கப்பட்டதில் மொத்தம் 19 CIA நடைமுறையாளர்கள் ஈடுபட்டிருப்பதாக தாங்கள் நம்புவதாக கூறினர், என்றாலும் இதுவரை 13 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். மிகப்பெரும்பாலான முகவாண்மைகள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், மிகப்பெரும்பாலானவர்கள் மிலானில் பணியாற்றியபோது தங்களது இரகசிய பெயர்களை பயன்படுத்தியதாக தோன்றுகிறது, அந்தக் கடத்தல் நேரத்தில் மிலானிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பணியாற்றிய CIA நிலையத் தலைவர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என்று இத்தாலிய வட்டாரங்கள் அடையாளப்படுத்தியுள்ளன.

சனிக்கிழமையன்று லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அப்போது CIA அலுவலகத் தலைவராக மிலானில் பணியாற்றியவர் 51 வயது ஹோண்டூரானில்-பிறந்த அமெரிக்கர், "அபு ஒமர் [நசர்] எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவருடன் சென்றவர் அல்லது அவரைப் பின்தொடர்ந்து சென்றவர் என்று நம்பப்படுகிறது, மற்றும் சில விசாரணைகளின்போது அவர் உடன் இருந்ததாக ஒரு மூத்த இத்தாலிய நீதித்துறை அதிகாரி சனிக்கிழமையன்று கூறினார்".

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தொடர்ந்து எழுதும்போது, "சித்திரவதை குற்றம் சாட்டப்பட்டிருப்பது தொடர்பாக அந்த அமெரிக்க முகவாண்மை அறிந்திருந்தார் என்ற சாத்தியக்கூறை அது எழுப்பியிருப்பதாக, இத்தாலிய அதிகாரி கூறினார். அந்த மனிதரது நடமாட்டங்கள் அவர் அபு ஒமர் எகிப்திலிருந்து காணாமல் போய்விட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் எகிப்திலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பதற்கு பயன்படுத்திய செல்தொலைபேசி மூலம் தடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

அவர் ஒருவர்தான் அபு ஒமர் பற்றி அனைத்தையும் அறிந்திருந்தார்,' என்று முன்னாள் அலுவலக தலைவர் பற்றி அந்த அதிகாரி கூறினார், எனவே இந்த புலன் விசாரணையில் அவர் மிகவும் பயன்படுபவராக இருந்திருக்க கூடும்".

வியாழன்று இத்தாலிய போலீசார் முன்னாள் CIA அலுவலகத் தலைவருக்கு சொந்தமான டூரின் அருகிலுள்ள ஒரு வீட்டை திடீர் சோதனையிட்டனர், கம்பியூட்டர், கம்பியூட்டர் டிஸ்க்குகள், மற்றும் காகிதங்களை பறிமுதல் செய்தனர்.

நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களில் மிலான் அரசு வழக்கறிஞர்கள், தாங்கள் கண்டுபிடித்திருப்பவைகள் "இந்தக் கடத்தலில் CIA நிச்சயம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்று கற்பிப்பதற்கு எங்களுக்கு அனுமதியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் போஸ்ட் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்தியில் தனது சொந்த புலன் விசாரணையில் இத்தாலிய கைதாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் பற்றிய விசாரணையில் CIA-வுடன் ஒரு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது, என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருப்பது; "இரண்டு தனிநபர்கள் தங்களது முகவரிகளை Dunn Loring, Va-விலுள்ள ஒரே தபால் அலுவலகத்தில் தபால் பெட்டி எண்களாக குறிப்பிட்டிருக்கின்றனர். அது ஒரு மனிதரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அவர் பிரிமியர் எக்சிகியூட்டிவ் போக்குவரத்து துறையில் ஒரு அதிகாரி என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் CIA கைதிகளை வேறு நாட்டில் ஒப்படைப்பதற்கு பயன்படுத்திய இரண்டு விமானங்களுக்கு உரிமையாளர் ஆகும்."

இத்தாலிய அதிகாரிகள் அந்த குறிப்பு பற்றிய விவரங்களையும் கடத்தலில் சம்மந்தப்பட்டிருப்பதாக தாங்கள் குற்றம் சாட்டும் CIA நடவடிக்கையாளர்கள் விட்டுச் சென்றிருக்கும் மின்னியல் தடய விவரங்களையும் தந்தனர். இவற்றில் செல்தொலைபேசி சான்றுகள், ஓட்டல் பதிவேடுகள், கார் வாடகை ரசீதுகள், நெடுஞ்சாலை எலக்ட்ரானிக் சோதனைச் சாவடி அனுமதிச் சீட்டுகள், மற்றும் இதர ஆவணங்களும் அடங்கும். மிலானிலும், இதர நகரங்களிலும் அந்த முகவாண்மைகள் மிக தனித்தன்மை கொண்ட ஓட்டல்களில் தங்கியிருந்திருக்கின்றனர், எகிப்து மதகுருமார் கடத்தப்படுவதற்கு முன்னரும், அதற்கு பின்னரும் அவர்கள் தங்கியிருந்த ஆடம்பர ஓட்டல்களில் பெருந்தொகையை கட்டணமாக செலுத்தினர் என்பதை அவை காட்டுகின்றன.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு பட்டியலில் அந்தக் குழு, உணவு விடுதிகளுக்கு மட்டுமே 150,000 டாலர்களை செலுத்தியிருக்கிறது.

ஆவியானோவின் ஒரு கமாண்டரான கர்னல். ஜோசப் ரோமனோவை தாங்கள் விசாரிக்க விரும்புவதாகவும், அவர் இத்தாலியிலிருந்து சென்றுவிட்டதாகவும், அவரை கைது செய்ய ஆலோசித்து வருவதாகவும் இத்தாலிய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். முன்னணி அரசு வழக்கறிஞர் ஸ்படரோ, சந்தேகத்திற்குரியவர்களை அந்தந்த நாடுகளில் கைது செய்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக குறிப்பிட்டார், மற்றும் கைதாணைகள் ஐரோப்பிய ஒன்றிய போலீஸ் அமைப்புக்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார், அதன் பொருள் என்னவென்றால், அந்த பெயர் உள்ளவர்களை எந்த நாட்டிலும் கைது செய்யலாம்.

திங்களன்று, நீதிபதி கைதாணைகளில் கையெழுத்திட்டார், அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பொது எதிர்த்தரப்பு வக்கீல்களை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தவுடன், முழு புலனாய்வு அறிக்கையும் குற்றம் சாட்டப்பட்டவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும் நீதிபதியின் 230 பக்க கைது ஆணை பகிரங்கமாகிவிடும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள CIA நடவடிக்கையாளர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா நடத்தப்படாதா என்பதை விட அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு உலக அரங்கில் அமெரிக்காவின் சட்டவிரோத பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆனால், இதர நாடுகளால் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீது புலன் விசாரணைகள் மற்றும் வழக்குகள் தாக்கல் செய்வதை இடையூறு செய்யும் வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் நடைமுறைகளால் இதர கேள்விகளும் எழுப்பப்படுகிறது.

எதற்காக புஷ் நிர்வாகமும் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களும் பயப்படுகின்றன? அவர்கள் பழைய பழமொழியான செத்தவர்களோ-- ''காணாமல் போய்விட்ட'' மனிதர்களோ கதை சொல்லமாட்டார்கள் என்பதை பின்பற்றுகிறார்களா? அவர்கள் திட்டமிட்டு விசாரணைகளை கருச்சிதைவு செய்து கொண்டிருப்பது, 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற தாக்குதலோடு சம்மந்தப்பட்டவர்கள் உட்பட, அமெரிக்க அரசிற்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையிலுள்ள உறவுகளை அவை அம்பலப்படுத்திவிடும் என்பதாலா?

Top of page