World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Chancellor Schröder justifies no-confidence vote:

New German elections aimed at breaking resistance to Agenda 2010

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்களிப்பை அதிபர் நியாயப்படுத்துகிறார்:

2010 செயற்பட்டியல் மீதான எதிர்ப்பை முறியடிக்கும் நோக்கத்தை புதிய ஜேர்மன் தேர்தல்கள் கொண்டுள்ளன

By Ulrich Rippert and Peter Schwarz
4 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

அதிபர் ஹெகாட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயக கட்சி-SDP) கடந்த வெள்ளியன்று முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு எதிர்பார்த்ததை போலவே ஜேர்மனிய பாராளுமன்றம் ஆதரவாக வாக்களித்தது.

ஆட்சிபுரியும் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி கூட்டாச்சியின் தலைவரான ஷ்ரோடரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிராகவே கொண்டுவரப்பட்டிருந்த ஒரு பாராளுமன்ற ஏமாற்று முறையாகும்; அவருடைய அரசாங்கத்தின் தற்போதைய ஆட்சிக்காலம் சட்டபூர்வமாக இன்னும் ஓராண்டு இருப்பதற்கு முன்னதாகவே ஒரு தேசிய தேர்தலை நடத்துவதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷ்ரோடர், அவருடைய மந்திரிகள் மற்றும் கூட்டணி அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. இதன் விளைவாக சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் பிரதிநிதிகளில் பாதிப்பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்குப் போட்டனர்.

ஜேர்மனியின் ஜனாதிபதி ஹோஸ்ட் கோலர் இப்பொழுது 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களுக்கு நாள் குறிப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசியலமைப்புக் கண்ணோட்டத்தில் இந்த முடிவில் அவருக்கு விருப்புரிமை உள்ளது. அவர் மறுத்தால், ஒருவேளை ஷ்ரோடர் இராஜிநாமா செய்யலாம்; அந்நிலையிலும் புதிய தேர்தல்களுக்கு வகை செய்யப்படும்.

கோலர் பாராளுமன்றத்தை கலைத்தால், அரசியலமைப்பு நீதிமன்றம் பின் இறுதித் தீர்ப்பளிக்கும். இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் ஏற்கனவே தாங்கள் அதிபரின் முடிவான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடத்துவது என்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வெள்ளியன்று நிகழ்வின் முடிவு ஏற்கனவே அப்படித்தான் ஆகும் என்று தெரிந்தபடியால், கவனம் முழுவதும் ஷ்ரோடர் தன் தீர்மானத்திற்கு சாதமாக கூறிய வாதங்களை பற்றி இருந்தது.

ஜனாதிபதியோ, அதிபரோ அல்லது பாராளுமன்றமோ கூட பாராளுமன்றத்தை தம் விருப்புரிமையின்படி கலைத்து அதையொட்டி முன்னதாகவே தேர்தல்களை நடத்துவதற்கு ஜேர்மன் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. அதிபர் மீது பாராளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்ற நிலையில்தான் அத்தகைய நடவடிக்கை அரசியலமைப்பின்படி சரியெனக் கொள்ளப்படும்.

சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் பாராளுமன்றத்தில் குறைவான, ஆனால் உறுதியான பெரும்பான்மையை கொண்டிருப்பதாலும் அவற்றின் பிரதிநிதிகள் அதிபரை இதுகாறும் ஆதரித்துவந்துள்ளதாலும், ஷ்ரோடர் தன்னுடைய பெரும்பான்மையை தானே இழந்துவிட்டதாக கூறுவதற்கு தீவிரமான அடிப்படை ஏதும் கிடையாது. வாக்குப் பதிவிற்குமுன் அரசியலமைப்பை திரித்தல், தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை பற்றி பல முறையும் குறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கடந்த வெள்ளியன்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் குறிப்பான வலுவான எதிர்ப்புக்கள் பசுமைக் கட்சியின் கிழக்கு ஜேர்மனிய பிரதிநிதியால் எழுப்பப்பட்டன; வெயனர் சூல்ஸ் என்னும் பிரதிநிதி இந்த முடிவை எதிர்த்து அரசியலமைப்பு நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவிற்கு தன்னுடைய உத்தியோகபூர்வமான நியாயப்படுத்தலை தெரிவிக்கையில், ஷ்ரோடர், அது ஏதோ அரசாங்க இரகசியம் போல் பேசினார். விவாதத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால்தான் தன்னுடைய மந்திரிசபைக்கே அவர் அதைப்பற்றித் தெரிவித்தார்; சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் பசுமைக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் வாக்கெடுப்பிற்கு ஒரு மணி நேரம் முன்புதான் தெரிவிக்கப்பட்டனர். ஆனால் பின் அவருடைய 30 நிமிட பாராளுமன்ற உரையில் அவர் தன்னுடைய நியாயப்படுத்துதலை தெளிவாகக் கூறினார்.

"செயற்பட்டியல் 2010" என்று அழைக்கப்படும் அவருடைய திட்டமான சமூகப், பொதுநலச் செலவினங்களுக்கு பரந்த அளவில் மக்களிடையே எதிர்ப்பு இருப்பதை முறியடிப்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பது ஒன்றுதான் வழிவகை என்று அவர் நியாயப்படுத்திப் பேசினார். தன்னுடைய சமூகக் கொள்கையை சட்ட நெறிப்படுத்தும் நோக்கத்தைத்தான் சீக்கிரமாக வரும் தேர்தல்கள் இலக்காக கொண்டுள்ளன என்று அவர் கூறினார். இந்தக் கொள்கையின் அடிப்படை உந்துதல் தற்போதைய கூட்டணி அரசாங்கத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்தபின் செயல்டுத்தப்படும் அல்லது எதிர்த்தரப்பில் இருக்கும் பழைமைவாத கட்சிகளையும் கொண்டிருக்கும் ஒரு புதிய அரசாங்கம் மூலமாக செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

செயற்பட்டியல் 2010இன் பொருளரை உண்மையில் ஜேர்மனின் சமூகநல அரசாங்கத்தின் வடிவமைப்பை தகர்ப்பது ஆகும்.

தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில், சமூக ஜனநாயகக் கட்சிக்கு "தேர்தல்களில் மனத்திற்கு வலியை கொடுக்கும் தொடர்ச்சியான தோல்விகளைப்பற்றி" ஷ்ரோடர் கூறினார்; இத்தொடரில் கடைசிப் பகுதியாக "வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் நிகழ்ந்த மாநில பாராளுமன்றத்தின் கசப்பான முடிவு" இருந்தது என்றும் அவர் கூறினார். இந்தத் தோல்விகள் தன்னுடைய கொள்கைக்கான பரந்த எதிர்ப்பின் விளைவுகள் என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

"2010 செயற்பட்டியலும், அதன் விளைவுகளும் தான் என்னுடைய கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்ததற்கு காரணம் எனலாம்" என்று கூறிய ஷ்ரோடர், "இந்த செயற்பட்டியலை இன்னும் செயல்படுத்தவேண்டும் என்றால் [புதிய] தேர்தல்கள் மூலம் சட்டபூர்வ தன்மையை அடைதல் முக்கியமானதாகும்" என்று அவர் முடிவுரையாக கூறினார்.

தன்னுடைய அரசாங்கம் "சில தன்நலக்குழுக்களின் மகத்தான எதிர்ப்பிற்கு இடையே தேவையான சீர்திருத்தங்களை" செயல்படுத்தியுள்ளதாக ஷ்ரோடர் தற்பெருமையுடன் கூறிக் கொண்டார். மேலும் தன்னுடைய அரசாங்கம் இத்தகைய சீர்திருத்தங்களை செயல்படுத்த முந்தைய கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவர் ஹெல்மூட் கோலைவிட அதிக உறுதியுடன் செயல்பட்டதாகவும் அவர் அறிவித்தார். ஷ்ரோடரின் 2010 செயற்பட்டியல் வணிக அமைப்புக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றிருந்தது என்பதை காணும்போது "தன்னலக்குழுக்கள்" என்பவை என்பது இதனால் தெளிவாகிறது; அதாவது அது, தொழிலாளர்கள், வேலையின்மையில் வாடும் மக்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆவர்.

அவர் கூறினார்: "அரசாங்கமும் [பாராளுமன்றத்தில்] இருக்கும் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சிக் கூட்டணிப் பிரிவுகளும் நம்முடைய நாட்டில் ஆழ்ந்த மாறுதலுக்கான வகைகளை அறிமுகப்படுத்தின. அதன் பரப்பு, விளைவுகளை பொறுத்தவரையில், சீர்திருத்த வழிவகை குடியரசின் வரலாற்றில் தனித்தன்மை பெற்றது ஆகும். எங்களுக்கு முந்தைய அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் எடுத்துக் கொண்டு செய்தோம். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன், தாராளவாத ஜனநாயக கட்சி ஆகியவை 16 ஆண்டுகளில் செய்திருக்கக் கூடிய செயலை, ஆனால் தைரியம் இல்லாததால் செய்யாமல் விட்டதை நாங்கள் தொடங்கினோம். செயற்பட்டியல் 2010ல் உள்ள சீர்திருத்தங்களை பொறுத்த வரையில் நாங்கள் நம்முடைய சமுதாயத்தின் முக்கிய கூறுபாடுகளின் அடிப்படைகளை, அதாவது சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதியக் கொள்கைகள், உழைப்புச் சந்தை ஆகியவற்றை புதிப்பித்தோம்."

இந்த வழிவகையை நிராகரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரையும் பின்னர் ஷ்ரோடர் கடுமையாக தாக்கினார். "சிலர் இந்த நிலைமையை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி குடிமக்களிடையே உறுதியற்ற உணர்வை தோற்றுவிக்க காரணமாக இருந்துள்ளனர். தொடக்கத்தில் சீர்திருத்தங்கள் சுமைகளுடன் பிணைந்திருப்பதாலும், அவற்றின் நல்ல விளைவுகள் வரவிருக்கும் ஆண்டுகளில்தான் உணரப்படும். மருத்துவருக்கான கட்டண முறை தொடக்கப்பட்டபோது பொதுமக்கள் நிகழ்த்திய ஆர்ப்பாட்டங்கள் நன்கு நினைவிருக்கும் என நம்புகிறோம்; இதைத் தவிர Hartz IV என அழைக்கப்படும் சட்டங்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தபோது தோன்றிய கிளர்ச்சிகளையும் நினைவுறுத்துகிறோம்." என்று அவர் அறிவித்தார்.

இத்தகைய வார்த்தைஜாலங்கள் பொதுவாக சர்வாதிகார ஆட்சியாளர்களால்தான் மரபுவழியே பயன்படுத்தப்படும்; அவர்கள்தான் சமூக எதிர்ப்புக்களை பொறுப்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்களால் நடத்தப்படுபவை எனக் கருதுவர். உண்மையில் நூறாயிரக் கணக்கான மக்கள் Hartz IV சட்டங்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் அவர்கள் மற்றவர்களால் "கருவிபோல் பயன்படுத்தப்பட்டதால்" ஒன்றும் கலந்து கொள்ளவில்லை; ஆளும் தட்டினர் மிகுந்த ஆடம்பரத்துடன் வாழும்போது, தாங்கள் பல தசாப்தங்கள் கடுமையாக உழைத்த பின்னர் அணிவகுத்து, எதிர்ப்பு நடத்தியவர்கள் மிகச் சிறிய தொகைக்குள் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டதைத்தான் எதிர்த்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சிக் கூட்டணியின் முழு சமூக கொள்கைகளுக்கு ஆழ்ந்த எதிர்ப்புக்களைத்தான் வெளிப்படுத்தின. ஆனால் இவற்றை மக்களை கிளர்ச்சிப்படுத்தும் பிரச்சாரங்கள் என்று ஷ்ரோடர் காண்கிறார்.

இதற்குப் பின் தன்னுடைய கொள்கைகளுக்கு பாராளுமன்றத்திலும் நம்பிக்கையை உறுதியாகக் காணமுடியாது என்ற உண்மையான காரணத்தைப் பற்றிக் கூறினார். 2010 செயற்பட்டியலுக்கு எதிர்ப்புக்கள் அரசாங்க கட்சிகளின் கவனத்திற்குள் வராமல் போகவில்லை.

அடுத்து எதிர்க்கட்சிகளை பற்றிப் பேசும்போது, அவர் கிட்டத்தட்ட கண்களில் நீர் மல்க, "சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு மிக உயர்ந்த விலையை" தன்னுடைய அரசாங்கம் கொடுத்துவிட்டது என்று கூறினார். "செயற்பட்டியல் 2010 செயல்படத் தொடங்கியதில் இருந்து, சமூக ஜனநாயக கட்சி அனைத்து மாநில மற்றும் ஐரோப்பிய தேர்தல்களிலும் வாக்குகளை இழந்துவிட்டதாகவும், சில இடங்களில் மாநில அரசாங்க அதிகாரத்தையும் இழந்துவிட்டது" என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

"இது அரசாங்கத்தில் இருக்கும் இரு கட்சிகளிடையேயும் வருங்கால போக்கு பற்றிக் கடுமையான விவாதத்தில் முடிந்தது" என்று அவர் விளக்கினார். மேலும், சில சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் "ஒரு பிற்போக்குத் தன்மையுடைய, மக்களை திருப்திப்படுத்தவதற்காக பேசும் இடது கட்சி, இனவெறியைக்கூட பயன்படுத்த தயங்காத, ஒரு பழைய சமூக ஜனநாயக கட்சி தலைவரை இப்பொழுது தலைவராக கொண்டுள்ள கட்சியுடன் சேருவதாகக் கூட அச்சுறுத்தினர்." என்றார். இது ''இடதுகளின் கட்சி'' (Party of the Left) எனப்படும் முன்னாள் ஸ்ராலினிச கட்சியான ஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் வருங்காலத்தேர்தலில் அதன் முக்கிய வேட்பாளராக முன்னாள் சமூக ஜனநாயக கட்சி தலைவரான Oskar Lafontaine இனை கொண்ட தேர்தல் மாற்றீடு (WASG) என்ற இரண்டையும் குறிக்கும்.

தன்னுடைய கட்சியில் இருந்து வரும் தெளிவான அத்தகைய அடையாளங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று ஷ்ரோடர் தொடர்ந்தார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தல்களில் தோல்வியுற்றபின்னர், பிரச்சினை அப்பட்டமாக வெளிப்பட்டது: "இந்தத் தேர்தல் காலத்தில் எனக்கும் என்னுடைய கொள்கைக்கும் சரியாகத் திறன்படும் ஆற்றல் இன்னும் உள்ளதா" என்பதே அது. ஓர் அரசாங்கக் கொள்கையில் அடிப்படைத் தேவை "திட்டமிட்டு உறுதியுடன் செயல்படும் திறனாகும்". இதற்கு "அரசாங்கம் கூட்டணியில் பாராளுமன்றப் பிரிவுகளுக்குள் ஒற்றுமையை கட்டாயம் நம்பியிருக்க வேண்டும்."

1998ல் பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயக கட்சி பிரிவின் பங்கை, சமூக ஜனநாயகக் கட்சி அதிகாரத்திற்கு வந்த பின் ஆராய்ந்தால், இந்த வாதம் அபத்தமாகத் தெரியும். சில நேரம் முணுமுணப்புக்கள் இருந்தாலும், ஒருமுறைகூட கூட்டணிப் பிரதிநிதிகள் ஷ்ரோடரின் போக்கைத் தீவிரமாக எதிர்த்ததில்லை. சமூக ஜனநாயகக் கட்சியில் இடது எனக் கூறிக் கொண்டிருப்பவர்கள் கூட கடந்த வெள்ளியன்று அதிபர் விரும்பியபடிதான் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி வாக்களித்தனர்; அவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்ற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்திருந்தனர்.

ஆயினும்கூட, ஷ்ரோடர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் புதிய தேர்தலகளையும் தன்னுடைய கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கருவியாக பயன்படுத்துகிறார். மிகக் குறைந்த அளவில் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அது வருங்காலத்தில் சமூக ஜனநாயக கட்சியின் உறுதியை தாக்கும் வகையில் உள்ளது என முத்திரை குத்தப்படுகின்றது. ஷ்ரோடரின் கூற்றின்படி அந்த வகையில்தான் முற்றிலும் இகழ்விற்குட்பட்டிருக்கும் "சீர்திருத்தங்களை செயல்படுத்தும்" வழிவகையை கட்சி தப்பிப் பிழைக்க வைக்க முடியும்.

தன்னுடைய பேச்சின் முடிவில், ஷ்ரோடர் எதிர் "யூனியன்" கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் பற்றியும் குறைகூறினார்; பாராளுமன்றத்தின் மேல்மன்றத்தில் இவருடைய ஆரம்ப முயற்சிகளைத் தடுக்கும் வகையில் அவை செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"கொள்கை பற்றிய வருங்காலம், எமது நாட்டின் வருங்காலம் பற்றிய முடிவுகள் முழுஉரிமை பெற்ற நம்முடைய குடிமக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது." மற்றும் "வருங்காலக் கொள்கையின் ஜனநாயக ஆளுமையை உறுதி செய்யும் வகையைத்தான் தேர்தல்கள் மேற்கொள்ளும்'' என்றார் ஷ்ரோடர்.

உண்மையில், வாக்காளர்களை பொறுத்தவரையில் எவ்விதமான மாற்றீடும் இல்லை. ஷ்ரோடர் ஒரு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார்: செயற்திட்டம் 2010ஐ திருத்தங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது இதே கொள்கைகள் யூனியன் கட்சிகளால் சுமத்தப்படுவதை பொறுத்துக் கொள்ளுங்கள்" என்பதே அது. அவருடைய கருத்து "மக்கள் இறைமை" என்பது இறைச்சிக்காக கொல்லப்படவிருக்கும் கன்றுக்கு சிகப்பு, பச்சை சீருடை அணிந்த வெட்டுபவர் விருப்பமா அல்லது கருப்பு, மஞ்சள் அணிந்த நபர் (இந்த நிறம் எதிர்க்கட்சியினருடையது) தேவையா என்பதற்கு ஒப்பாக உள்ளது.

இதைத் தொடர்ந்த விவாதத்திலும் இதுதான் அடிக்கோடிடப்பட்டது; அதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர். வரவிருக்கும் தேர்தல்களில் இவர்கள் என்ன கூறுவர் என்பதற்கு முன்மாதிரியாகத்தான் அவை இருந்தன. விவாதம் சூடாக நடந்தது என்றாலும் ஆழ்ந்த அரசியல் வேறுபாடுகள் ஏதும் வெளிப்படவில்லை.

ஒவ்வொரு கட்சித் தலைவரும் புதிய தேர்தல்களை ஆழ்ந்த "சீர்திருத்தங்களுக்கு" ஒரு முன்னோடி என்று வரவேற்றார். Franz Muntefering (SPD) அறிவித்தார்: "எங்களுடைய சீர்திருத்தக் கொள்கைகளுக்கு தெளிவான உத்தரவு வேண்டும்"; Angela Merkel (CDU) "சமூகத் தடையற்ற சந்தைப் பொருளாதாரம், ஜனநாயகம்" இவற்றிற்கு தன்னுடைய விசுவாத்தை பிரகடனப்படுத்தினார். உண்மையில் ஒரு பிற்போக்கான, தொழிலாள வர்க்க விரோத பொருளாதார வழிவகையை எவர் சிறந்த முறையில் சுமத்துவர் என்பதே பிரச்சனைக்குட்படுத்தப்பட்டுள்ள விடயமாகும். யூனியன் கட்சிகள் சமூக ஜனநாயக கட்சி "நிலையற்ற பாதையில் செல்லுகிறது" என்று குற்றம் சாட்டுகின்றன; சமூக ஜனநாயகக் கட்சியோ கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் இரண்டும் "தடைக்குட்படுத்தும்" கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டுகிறது.

அனைத்து முக்கிய கட்சிகளும் ஜனநாயக சோசலிச கட்சி மற்றும் தேர்தல் மாற்றீடு (WASG) கூட்டணியை தாக்குகின்றன; கருத்துக் கணிப்பின்படி இதற்கு 10 சதவிகித வாக்காளர்களின் ஆதரவு உள்ளது; இது பசுமைக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சியான தடையற்ற சந்தை ஆதரவை காட்டும் தாராளவாத ஜனநாயக வாதிகளுக்கு உள்ள ஆதரவைக் காட்டிலும் அதிகமானது ஆகும்.

"இடதுகளின் கட்சியின் (Party of the Left)" மீதான தாக்குல்களுக்கு காரணம் Lafontaine அல்லது ஜனநாயக சோசலிச கட்சி தலைவர் Gregor Gysi ஆகியோரின் முன்னோக்கிற்காக அல்ல; அவர்கள் இருவருமே இருக்கும் முதலாளித்துவ முறையை கேள்விக்கு உட்படுத்தவில்லை. ஜனநாயக சோசலிச கட்சி, கிழக்கு மாநிலங்கள் மற்றும் நகரசபைகளில் சமூக ஜனநாயக கட்சி இன் நம்பிக்கைக்கு உகந்த கட்சி என்று வெளிப்பட்டுவிட்டது; கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கும் அதே நிலைதான். தேர்தல் மாற்றீடு (WASG)ஐ பொறுத்த வரையில் இதில் நீண்டகாலம் சமூக ஜனநாயக வாதிகளாக இருந்தவர்களும் தொழிற்சங்க அதிகாரிகளாகவும் இருந்தவர்களுமாக ஒரு சோசலிச முன்னோக்கை நிராகரித்தவர்கள்தான் உள்ளனர். அரசியல் கட்டமைப்பினுள் உள்ள கட்சிகளிடம் இருக்கும் சீற்றத்திற்கு காரணம் மக்களிடையே ஓர் உண்மையான சோசலிச மாற்றீடு தேவை என்ற கருத்து இருப்பதுதான்; கருத்துக் கணிப்புக்களில் இது குழப்பமான, சிதைவுற்ற வகையில் புதிய "இடதுகளின் கட்சி" க்கு ஆதரவு என்று வெளிவந்திருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி வருவிருக்கும் தேர்தல்களில், ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தின் அடிப்படையில், அத்தகைய உண்மையான அரசியல் மாற்றீடு கொடுப்பதற்குத்தான் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தி வைக்கிறது.

See Also:

சமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள்.
(2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை)

Top of page