World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: powerful response to PSG election campaign

ஜேர்மனி: சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சக்திவாய்ந்த ஆதரவு

By our correspondents
4 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) வரவிருக்கின்ற தேசிய நாடாளுமன்ற தேர்தல்களில் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது. பெரிய கட்சிகள் இயல்பாக தேர்தலில் நிற்பதற்கு தகுதி பெற்றவை என்றாலும், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுவதற்காக இந்த ஆண்டு தேர்தலில் தரப்பட்டுள்ள மிக குறுகிய கால அவகாசத்தில் நான்கு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் 2,000 ஆதரவுக் கையெழுத்துக்களை திரட்டியாக வேண்டும்.

சென்ற வாரம், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சிக்காக பேர்லின், சாக்சோனி, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்ஸ மாநிலங்களில் குழுக்கள் கையெழுத்துக்களை சேகரிக்க தொடங்கியது. இதுவரை அந்த முடிவுகள் மிகவும் தீவிரமான ஆக்கபூர்வ தன்மை கொண்டதாகும்---மொத்தம் தேர்தல் மனுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 2500 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். வேறு பலர், குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் வாக்களிக்கும் வயதுவராத இளைஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் மற்றும் தங்களுக்கு வாக்களிக்கும் தகுதி இருந்திருக்குமானால் மனுக்களில் கையெழுத்திட்டிருப்பார்கள்.

சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கம் ஒரு மிகவும் பொது நெருக்கடியில் உள்ள சூழ்நிலையில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கான ஒரு புதிய தொழிலாளர் கட்சியை சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கில் அடித்தளத்தில் கட்டியெழுப்ப ஆதரவை வென்றெடுத்து வருகிறது. கையெழுத்திட்டவர்களில் பலர், அரசியல் பிரச்சனைகளை கலந்துரையாட விரும்பினர். விவாதத்தின் பொதுவானதொரு விடயம் என்னவென்றால், சமூகத்தில் பரவலான தட்டினருக்கிடையே வளர்ந்து வரும் வறுமையாகும் எல்லாவற்றிற்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் குழுக்களிடம் பேசிய பலர் இனி எப்படி உயிரை பிடித்துக்கொண்டு வாழ்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்று கூறினர்.

எடுத்துக்காட்டாக, குறைந்த உரிமைகள் கொண்ட ஒரு கிரேக்க தொழிலாளியின் விதவை மனைவி, அவரது கணவர் ஜேர்மனியில் 38 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் நம்மிடம் சொன்னது தற்போது மாதம் 600 யூரோக்களில் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் தனது குறைந்தபட்ச மாதாந்தர செலவினங்கள் 800 யூரோக்கள் ஆகின்றன என்று எங்களிடம் கூறினார் "என்னால் இதை எப்படி சமாளிக்க முடியும்?" என்று அவர் கேட்டார்.

புதிய ALG-II (வேலையில்லாதோருக்கு வழங்கும் உதவித்தொகை) இல் வாழவேண்டிய நிலையிலுள்ள ஒரு பெண் எங்களிடம் ''புதிய ஹார்ட்ஸ் IV விதி முறைகளால் உருவாக்கப்பட்டது, "நான் தனி ஆள், மற்றும் மாதம் 590 யூரோக்களை பெறுகிறேன். அது எல்லாச் செலவினங்களையும்----வாடகை, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் மற்றும் பிற செலவினங்களும் அடங்கும். நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிற காரணத்தினால், நிரந்தரமாக நான் மனுக்களை நிரப்பி அனுப்ப வேண்டியுள்ளது, அவை அனைத்திற்கும் பணம் செலவாகிறது. இதற்கு வேலை வாய்ப்பு நிலையத்திலிருந்து மொத்தமாக 5 யூரோக்களைத்தான் தருகிறார்கள்----மீதிச் செலவை நானே ஏற்க வேண்டும். எனக்கு சிறப்பு ''பிராங்பர்ட-பயணச் சீட்டு'' இருந்தும் (சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு இருந்தும்), ஒவ்வொரு மாதமும் பொது போக்குவரத்து வாகனச் செலவினம் 41 யூரோக்கள் ஆகிறது. அது எனக்கு கட்டுபடியாகாது." என கூறினார்.

புதிதாக வேலையில்லாதிருக்கும் ஒருவர், எந்த உதவிகளையும் பெறுவதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும், அதற்கிடையில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவையும் நாப்கின்களையும் எப்படி தன்னால் வாங்க முடியும் என்று தெரியவில்லை என்று கூறினார். சமூக சேவைகளுக்கான அமைப்புக்களும் (ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க அறக்கட்டளை) கரிட்டாஸ் போன்ற அமைப்புக்களும் தன்னை போன்றவர்களுக்கு உதவுவதற்கு எந்த பொறுப்பும் ஏற்பதற்கில்லை என்று கூறிவிட்டதாக எங்களிடம் கூறினார். அதிகாரதுவத்தின் பதில்களை கண்டு அவர் விரக்தியுற்றார் மற்றும் மக்களைவிட தங்களது கோப்புக்களை நகர்த்துவதில்தான் அதிகாரிகள் அதிக அக்கறை கொண்டிருப்பதாக தோன்றுவதாக அவர் கூறினார்.

பேர்லினில், தொழில்பயிற்சி பெற்றவர்களின் துயர நிலை குறித்து சில்வியா முல்லர் விளக்கினார். தொழிற்துறை முழுவதற்குமான பயிற்சி கழகத்தில் அவர் விற்பனை நிர்வாகப் பயிற்சி பெற்றவர், அங்கு இளைஞர்கள் ஒரு மூன்றாண்டு பயிற்சியை மேற்கொள்ள முடியும். இலாப நோக்கிற்கு வாழ்வின் இதர அனைத்து அம்சங்களும் கீழ்படிந்துவிட்டதை தான் எப்படி கண்டுகொண்டதாக அவர் விளக்கினார். "என்னுடைய தொழிற்பயிற்சி பிரிவில், ஒரு கண்ணியமான பயிற்சிக்கு அவர்கள் முயற்சிக்கவில்லை, முடிந்தவரை மிக மலிவான செலவினத்தில் பயிற்சி தரவே அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர், ஏனெனில் அந்த பயிற்சியை வழங்குவதற்கு மிகக்குறைந்த செலவு பிடிக்கும் என்பதால் அந்த பயிற்சியை நடத்தத்தான் ஒப்பந்தம் கிடைக்கும். இனி நான் எந்த உத்தியோகபூர்வ கட்சிகளையும் நம்ப முடியாது. இனிமேலும் அவர்களுக்கு வாக்களிப்பது அர்த்தமற்றது".

மறுபக்கத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குடன் அவர் உடன்பட்டார். "நாம் எதையாவது சாதிக்கமுடியும் என்பதற்கு முன்னர், நாம் சர்வதேச ரீதியாக ஐக்கியப்பட வேண்டும். இனி பழைய அதிகாரத்துவக் கட்சிகளை நாம் சார்ந்திருக்க முடியாது. இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் பக்கம் நாம் திரும்ப வேண்டும்."

நாங்கள் சந்தித்த குறைந்த ஊதிய தொழிலாளர்கள், மற்றும் வேலையில்லாதிருப்போர் சிலர், அரசியல் கட்சிகள் வலதுசாரி பக்கம் சாய்வதற்கு பதிலளிக்கின்ற வகையில் தங்களது கட்சிகளில் இருந்து இராஜினாமா செய்தனர். வழிப்போக்கர்கள், "கட்சி" என்ற சொல்லைக் கேட்டதுமே, தங்களது கையை அசைத்து கட்சிகளை தள்ளுபடி செய்தனர். வேறுபட்ட மண்டலத்திலிருந்து வந்தவர்களைப்போல், அரசியல்வாதிகள் எந்தத்தரப்பை சார்ந்தவர்களாயினும் உண்மை நிலவரத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களாகவே நோக்கப்படுகின்றனர்.

"சாதாரண மக்களது பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள், தங்களது சிந்தனையை சிறிதும் செலுத்துவதில்லை. அது சமூக ஜனநாயக கட்சியாக இருந்தாலும் அல்லது பழமைவாத எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனாக (்CDU) அவர்கள் முற்றிலுமாக எனது நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவர்கள் தங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஏராளமாக கிடைக்க வேண்டுமென்று உறுதி செய்து கொள்கிறார்கள், மற்றும் வர்த்தக வரிகளை குறைக்கிறார்கள், ஆனால் மற்ற தரப்பினராகிய நாங்கள் எப்படி வாழ்வது என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை." என்று ஒரு 40 வயதான பிராங்க்பர்ட்டை சேர்ந்த ராபர்ட் கோல் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு பல மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர், ஏனென்றால் அவர்களுக்கு பழைய கட்சிகள் மீது இனி நம்பிக்கையில்லை, மற்றும் கீழிருந்து ஒரு சுயாதீனமான இயக்கம் வரவேண்டும், மற்றும் புதிய கட்சியின் உடனடித்தேவை என்ற கருத்தை பகிர்ந்து கொண்டனர். எடுத்துக்காட்டாக, பேர்லினை சேர்ந்த வீட்டு ஓடுகளை தயாரிக்கும் தற்போது வேலையற்ற 26 வயது ஜென்ஸ் விட்டன்பெட்ச்சர் தனது மனைவியுடன் மனுவில் கையெழுத்திட்டார், விளக்கினார்: "நாங்கள் எங்களது ஆதரவை சோசலிச சமத்துவக் கட்சிக்கு தருகிறோம், ஏனென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள்தான் தங்களுக்கென்ற ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்."

சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச சோசலிச முன்னோக்கை பெரும்பாலான மக்கள் பகிரங்கமாகவும், குறிப்பிடத்தக்கவகையில் வரவேற்றனர். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் வலதுபுற திருப்பம், சமூக வெட்டுக்கள், மற்றும் வேலை அழிப்பும் குறிப்பாக உலக அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தாலும், முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாலும், ஒரு அரசியல் மாற்றீட்டிற்கான ஆவலை தெளிவாகக் கிளறிவிட்டிருக்கிறது.

கையெழுத்துக்களை திரட்டும் குழுக்கள் அடிக்கடி திறந்த கதவுகளை தட்டுவது போன்று உணர்ந்தனர். கையெழுத்திட்ட ஒவ்வொருவரும் பின்வரும் தர்க்கவியலை ஏற்றுக்கொண்டனர். அதாவது உற்பத்தி பூகோள அடிப்படையில் நடக்கிறது, எனவே பூகோள அடிப்படையில் சமூக வெட்டுக்கள் வேலையிழப்புக்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு உலகக் கட்சி கட்டியாக வேண்டும்.

குறிப்பாக, இந்த முன்னோக்கு இளைஞர்களிடையே ஒரு பெரும் வரவேற்பை உருவாக்கியது. நோர்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் பல கையெழுத்துக்கள் இசை விழாக்களில் பெறப்பட்டன. ஜூன் 23ல் எஸ்ஸனில் படிப்புக்கட்டண உயர்வைக் கண்டித்து ஒரு மாணவர் பேரணி நடைபெற்றபோது, 95 கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. பீலபெல்டு கிறிஸ்டோபர் தெரு தினத்தில் 74 பேர் கையெழுத்திட்டனர்.

ஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் சமூக ஜனநாயக கட்சி முன்னாள் தலைவர் ஓஸ்கர் லாபொன்டைன் தலைமையில் இயங்கும் தேர்தல் மாற்றீடு (WASG) இவற்றிற்கு இடையில் புதியதொரு அரசியல் குழுவை உருவாக்குவதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இணைந்து நிலவியது. கையெழுத்திட்ட சிலர் சோசலிச சமத்துவக் கட்சிக்காக மட்டுமே என்று குறிப்பிட்டனர், அதுவும் நாங்கள் எந்தவகையிலும் லாபொன்டைனுக்கோ அல்லது PDS தலைவர் கிரிகோர் கைசிகோ ஆதரவாக இருக்கமாட்டோம் என்று உறுதியளித்தபின்னரே கையெழுத்திட்டனர்.

பிராங்க்பர்ட் வேலைவாய்ப்பு நிலையத்திற்கு வெளியில், WSWS நிருபர்கள் இரண்டு சிறிய குழந்தைகளை கொண்ட திருமணமான ஜோடியான திரு.ஹெரோல்டையும் திருமதி. சினிட்ஸ்லரையும் சந்தித்தனர். அவர்கள் அண்மையில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் பிரன்சு முன்டபெயரிங் தொடக்கிய "வெட்டுக்கிளி" பிரசாரத்தை பற்றி பேச ஆரம்பித்தனர். (அப்படி அழைக்கப்பட்ட அந்த பிரசாரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் முதலாளித்துவத்தின் படுமோசமான அத்துமீறல்கள் சிலவற்றை விமர்சித்தார், அவற்றை அப்படி அத்துமீறல்களில் ஈடுபடும் சர்வதேச முதலாளித்துவ நிறுவனங்களை "வெட்டுக்கிளிகள்" என்று முத்திரை குத்தினார்.)

ஹரோல்டு கூறினார்: "தேர்தலுக்கு முன்னர், தற்போது எல்லா கட்சிக்காரர்களையும் போல் பிரன்சு முன்டபெயரிங்கின் சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரும் பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தும் என்று கூறுகிறார். கடந்த 8 ஆண்டுகளாக சமூக நீதியை புறக்கணித்துவிட்ட அவர் இப்போது அதை நிலைநாட்ட விரும்புகிறார். தற்போது அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது. 100 சதவீத இது தேர்தல் பிரசாரமே தவிர வேறொன்றும் அல்ல---கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் பெரிய கூட்டணியில் சேர்ந்துகொள்ள தாங்கள் தயார் என்று அவர்கள் தெளிவாக அறிவித்துவிட்டனர். இனி எவரும் சமூக ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதை சென்ற தேர்தலில் அனைவரும் கண்டனர், இந்த முறை வாக்குப்பதிவில் சமூக ஜனநாயக கட்சி 25 சதவீத வாக்குகளையே பெறும் என கருத்துகணிப்பெடுப்புகள் காட்டுகின்றன.

ஒரு கட்டுமான தொழிலாளி என்ற முறையில், ஒரு கான்கிரீட் கட்டடப்பணிகளில் பணியாற்றிய பின்னர் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை நடைபெற்றது எனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். "பல தசாப்தங்களாக கடுமையான உழைப்பை தந்த அவர் உழைத்துக் களைத்து விட்டார்". என்று அவரது மனைவி ஷினிட்ஷ்லர் கூறினார். "தற்போது அவர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். நான் ஒரு இல்லத்து பெண் இரண்டு குழந்தைகளின் தாய். தற்போது வேறு எவராவது எங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்களா என்று நாங்கள் தேட வேண்டியுள்ளது."

அவரது கணவர் கட்டுமான நிறுவனங்களுக்காகவும் துணை ஒப்பந்தக்காரர்களுக்காகவும் பல பெரிய பில்பிங்கர்/பெல்ஜர், வைப் & பிரீடாக் மற்றும் பிலிப் ஹோல்ஸ்மேன் போன்ற பெரிய நிறுவனங்களுக்காக ஒரு கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார், தற்போது ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகள் எப்படி ஐரோப்பியாவில் கட்டுமானத் தொழிலாளர்களை ஒருவர் மீது ஒருவர் மோதவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவர் விளக்கினார். "இந்த கட்டுமான நிறுவனங்களின் போலந்து மற்றும் செக் தொழிலாளர்கள் ஒரு துணை ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் இரவும் பகலும் திங்கள் முதல் சனிவரை ஒவ்வொரு நாளும் 10 அல்லது 12 மணி நேரம் ஒரு அற்பக் கூலிக்காக பணியாற்ற வேண்டியிருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்யும் உரிமை மீது எந்த கருணையுமில்லை, அவர்கள் உண்மையிலேயே கடினமாக பணியாற்ற வேண்டியுள்ளது. நானே கூட வீட்டிலிருந்து தொலைவில் சென்றுதான் பணியாற்றினேன், மற்றும் அது எது எவ்வாறிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதன் பொருள் தொழிலாளர்களது ஊதிய விகிதங்களும் உரிமைகளும் அழிக்கப்படுகின்றன மற்றும் அது ஒரு தீர்வு அல்ல."

"ஹோல்ஸ்மென் கட்டுமான நிறுவனம் திவாலான நேரத்தில் அதிபர் ஷ்ரோடர் பிராங்க்பேர்ட் நகரத்திற்கு வந்து எல்லாவிதமான உறுதிமொழிகளையும் தந்தார். அதற்குப்பின்னர் தொழிலாளர்களை சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்று விட்டுவிட்டார். அது மிகப்பெரியதொரு மோசடியாகும். ஏற்கெனவே லோலர் சாக்சானி மாநிலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் (தலைவர்) நூற்றுக்கணக்கான உறுதி மொழிகளைத் தந்தார், அதில் அவர் உறுதியாக நிற்கவில்லை. அந்த மனிதர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாக்களித்திருக்கவே கூடாது" என்று ஹரோல்டு மேலும் கூறினார்.

"சமூக ஜனநாயகக் கட்சியை விட கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் எந்தவகையிலும் சிறந்ததல்ல'' அதை இங்கே நாங்கள் ஹெஸ்ஸியிலேயே பார்க்கிறோம், அங்கு றொனால்ட் கோச் [CDU அமைச்சர் - ஹெஸ்ஸ மாநிலத்தின் தலைவர்] பதவியேற்று கல்வி முறையை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்து விட்டார். இன்னமும் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்! இனி வாக்களிப்பதில் எந்த பயனுமில்லை என்று கருதி---- நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்" என்று அவரது மனைவி இடைமறித்துக் கூறினார்.

நாங்கள் கேள்வி கேட்ட மிகப்பெரும்பாலான இதர மக்களைப் போல் இந்த குடும்பங்களும் லபொன்டைன் மற்றும் கீசியின் புதிய இடதுசாரி கட்சி ஒரு மாற்றீடு என்று கருதவில்லை. "லாபொன்டைன் பல ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியாக பணியாற்றி வந்தார். எனவே அவரை நம்புவதற்கு ஒன்றுமே இல்லை,"என்று ஹெரால்டு கூறினார்.

See Also:

சமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள்.
(2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை)

Top of page