World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Jailing of Times reporter: an attack on press freedom and democratic rights

டைம்ஸ் நிருபருக்கு சிறை: பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதல்

By Patrick Martin
7 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இதுவரை நடந்திராத பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மிகக்கடுமையான அரசாங்கத்தின் தாக்குதலாக, நியூயோர்க் டைம்ஸ் நிருபர் ஜூடித் மில்லர் புதன்கிழமை பிற்பகலில் அவர் இரகசியத்தை காப்பாற்றுவதாக ஒரு செய்தி மூலத்திற்கு தந்த உறுதிமொழியை மீறி அந்த மூலாதாரத்தை வெளியிட கட்டாயப்படுத்துகின்ற வகையில் ஒரு மத்திய நீதிபதி அவரை சிறையில் அடைத்தார். புஷ் நிர்வாகத்தின் ஒரு உயர்மட்ட வட்டாரம் இரகசியமாக வெளியிட்ட CIA உளவாளியை பற்றிய தகவல் கசிவானது குறித்து புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்ற மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர், பாட்ரிக் பிட்ஸ்ஹெரால்டு தூண்டுதலால் மத்திய மாவட்ட நீதிபதி தாமஸ் தி. ஹோகன் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

ஜூடித் மில்லர் சிறைக்கு அனுப்பப்பட்டதையும் டைம்ஸ் சஞ்சிகை நிருபர் மேத்யூ கூப்பர் சிறைக்கு அனுப்பப்படுவதாக மிரட்டப்படுவதையும், உலக சோசலிச வலைத் தளம் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கண்டிக்கிறது. மில்லர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அவர் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையில் அனைத்து மாணவர் குழுக்களும், இடதுசாரி அமைப்புக்களும் மக்கள் உரிமைக் குழுக்களும் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இங்கே பணயம் வைக்கப்பட்டிருப்பது ஒரு அடிப்படை ஜனநாயகம் பற்றிய பிரச்சனையாகும்-----புஷ் நிர்வாகம் இரகசியமாக வைத்திருக்க விரும்புகிற அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைகள் புலன் விசாரணை செய்து பொதுமக்களுக்கு தகவல் தரும் பத்திரிகை சுதந்திரம் சம்மந்தப்பட்டதாகும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை --- அது ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்கள் சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், சித்திரவதை ஆள்கடத்தல் மற்றும் சட்டவிரோதமான காவல் நடைமுறையாக இருந்தாலும், உள்நாட்டில் வேவு பார்க்கும் நடவடிக்கை பாரியளவிற்கு விரிவுபடுத்தப்படுவதாக இருந்தாலும், அல்லது பெருநிறுவன குற்றவியல்களை அதிகாரபூர்வமாக மூடிமறைப்பதாக இருந்தாலும், எந்தவிதமான விமர்சனக் கண்ணோட்டத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை வாய்மூடச் செய்வதை நோக்கமாகக் கொண்டு மில்லர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

வாஷிங்டன் DC நீதிமன்ற அறையிலிருந்து அருகாமையிலுள்ள ஒரு சிறைச்சாலைக்கு மில்லர் கொண்டு செல்லப்பட்டார், அதே நேரத்தில் பிட்ஸ்ஜெரால்டு நியமித்துள்ள மத்திய ஜூரிகள் முன் சாட்சியமளிக்க இணங்கியதால் அதுபோன்றதொரு தண்டனையிலிருந்து கூப்பர் தப்பினார். கூப்பரும் பிராசிகியூட்டரிடம் தனது செய்தி மூலத்தின் பெயரை வெளியிட மறுத்து சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு சற்றுமுன்னர், அவர் கூறிக்கொள்ளும், ``தனிப்பட்ட, தெளிவான, நிர்பந்தம் எதுவுமில்லாத விதிவிலக்கு ஒன்று ஜூரர்களிடம் பேசலாம்`` என்று தனது மூலாதாரத்திடமிருந்து வந்ததாகச் சொன்னார். அதன் மூலம் அவர் நம்பிக்கையை காக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திலிருந்து விடுவித்தது அந்தத் தகவல்.

கூப்பர் சாட்சியமளிக்க மறுத்ததை ஏற்கனவே டைம் நிர்வாக ஆசிரியர் நோர்மன் பியல்ஸ்டெயின் கீழறுத்துவிட்டார், அவர் சென்ற வாரம் கூப்பர் செய்தி சேகரிப்பது தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் அனைத்துக் குறிப்புக்களையும் பிராசிகியூட்டரிடம் தருவதற்கு சம்மதித்தார். அந்த இதழ் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களையும், கூப்பருடன் அவரது மறுப்பில் கலந்துகொண்டதற்காக ஒரு நாளைக்கு 1000 டாலர்கள் வீதம் அபராதத் தொகையையும் சந்தித்தது.

நியூயோர்க் டைம்ஸ் இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர் அல்ல, ஏனென்றால் மில்லர் CIA முகவாண்மையை அம்பலப்படுத்த உண்மையிலேயே ஒரு கட்டுரை எழுதவில்லை மற்றும் அவரது பூர்வாங்க ஆராய்ச்சி இந்த விவகாரத்தில் நடத்தப்பட்டதற்கு எந்த பதிவேடும் இல்லை.

இன்னும் நான்கு மாதங்களுக்கு தற்போதுள்ள ஜூரிகளின் பதவிக்காலம் நீடிக்கிறது, அதுவரை மில்லரை சிறையில் வைத்திருக்க முடியும். பிட்ஸ்ஜெரால்ட் தனது புலன் விசாரணையை நீடிப்பதற்கு ஒரு அவகாசம் கோருவாரானால் அப்பெண்ணுக்கு நீண்ட காலம்கூட சிறை தண்டனை விதிக்க முடியும். வீட்டுக்காவலில் அல்லது தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அருகாமையில் கனைக்டிக்கட்டிலுள்ள ஒரு சிறையில் வைக்க வேண்டுமென்று மில்லர் விடுத்த வேண்டுகோளை நீதிபதி ஹோகன் ஏற்க மறுத்துவிட்டார். அத்தகையதொரு தளர்வுப்போக்கு காட்டப்பட்டால் அவர் பெயர்களை குறிப்பிட மறுக்கும் தனது நிலைபாட்டில் நீடிக்கக்கூடும் என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

நீதிமன்றத்தில் படித்த ஒரு அறிக்கையில் மில்லர் குறிப்பிட்டார்: ``பத்திரிகையாளர்கள் நம்பகத்தன்மையை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியாவிட்டால், பத்திரிகையாளர்கள் செயல்பட முடியாது மற்றும் ஒரு சுதந்திர பத்திரிகை இருக்க முடியாது......சிவில் சட்ட மறுப்பு உரிமை தனிப்பட்ட மனசாட்சியை அடிப்படையாகக் கொண்டது, அது நமது முறைக்கு அடிப்படையானது மற்றும் நமது வரலாறு முழுவதிலும் அது மதிக்கப்பட்டிருக்கிறது.`` அதற்கு பின்னர் நீதிமன்ற அதிகாரிகளால் அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டைம்சின் நிர்வாக ஆசிரியர், பில் கெல்லரும் அந்த செய்தி பத்திரிகையின் வெளியீட்டாளரான இளைய ஆர்தர் சூல்ஸ்பெர்சரும், மில்லரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருவரும் அறிக்கைகளை வெளியிட்டனர். கூப்பரின் குறிப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்களை மத்திய பிராசிகியூட்டருக்கு தந்து ஒத்துழைப்பது என டைம் சஞ்சிகை எடுத்த முடிவை இதற்கு முன்னர் சூல்ஸ்பெர்ஜர் கண்டித்தார்.

ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் சாட்சியமளிக்க மறுத்ததால், சென்ற அக்டோபரில் நீதிமன்ற அவமதிப்பு சிவில் வழக்கில் மில்லருக்கும் கூப்பருக்கும் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டை ஒட்டி தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. சர்கியூட் மேல்முறையீடு நீதிமன்றம் நீதிபதி ஹோகனின் கட்டளையை ஏற்றுக்கொண்டது, மற்றும் சென்ற வாரம் உச்சநீதிமன்றம் அந்த வழக்கு விசாரணையை நடத்த மறுத்துவிட்டது, அதன் மூலம் அந்த இரண்டு நிருபர்களையும் சிறைக்கு அனுப்புவதற்கான கடைசி சட்டத்தடையும் நீங்கியது.

மத்திய அரசாங்கத்திற்கும், பத்திரிகைக்குமிடையில் மோதல் ஏற்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு CIA உளவாளி வலரி பிளாம் பெயர் அம்பலப்படுத்தப்பட்டதிலிருந்து எழுந்தது. திருமதி பிளாம் ஓய்வுபெற்ற அமெரிக்க தூதர், ஜோசப் சி. வில்சனின் மனைவி, அவர் புஷ் நிர்வாகத்தினால் 2002-ல் நைஜருக்கு வடக்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான அளவிற்கு யுரேனியத்தை வாங்குவதற்கு ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேன் முயன்றுவருகிறார் என்ற செய்தியை சோதனையிட அனுப்பப்பட்டார்.

வில்சன் புலன் விசாரணை செய்தார் மற்றும் அந்த செய்திகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கண்டுபிடித்தார், மாறாக அந்த குற்றச்சாட்டு தெளிவான பொய் தகவல்கள் அடிப்படையில் அமைந்தது என்று முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவிற்கு அப்பாலும், புஷ் நிர்வாகம் ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) உள்ளன என்ற குற்றச்சாட்டையும் சேர்த்துக்கொண்டது. 2003 ஜனவரியில் புஷ், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஆபிரிக்காவிலிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கு ஈராக் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய குறிப்பு இடம்பெறுவதில் இது உச்சநிலையை அடைந்தது.

2003 ஜூனில், ஆரம்ப அமெரிக்கப் படையெடுப்பு முடிவடைந்த பின்னர், வில்சன் போருக்கு நிர்வாகம் எடுத்து வைத்த வாதத்தை பகிரங்கமாக விமர்சிக்க தொடங்கினார். நியூயோர்க் டைம்சில் அவர் ஒரு தலையங்க பக்கக் கட்டுரையை எழுதினார் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளை தந்தார், அது புஷ் நிர்வாகத்திற்கு கடுமையான அரசியல் சங்கடத்தைத் தந்தது மற்றும் போர் எதிர்ப்பு உணர்வை புத்துயிர்ப்பதாக அச்சுறுத்தியது. வெள்ளைமாளிகை திருப்பித் தாக்க முடிவு செய்தது.

வில்சன் விமர்சனம் வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர், வலதுசாரி கட்டுரையாளர் றொபர்ட் நோவக், வில்சனின் மனைவி ஆயுதங்கள் பரவலை சிறப்பாக விசாரிக்கும் ஒரு CIA உளவாளி என்பதை அம்பலப்படுத்தினார். பிளாம் தமது ஏஜெண்சியை நைஜர் பயணத்திற்கு தனது கணவரை தேர்ந்தெடுக்குமாறு வற்புறுத்தினார் என்று இரண்டு உயர்மட்ட நிர்வாக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அவர் எழுதியிருந்தார், அதன் மூலம் உலகிலேயே பரம ஏழை நாடுகளில் ஒன்றான நைஜருக்கு அவர் விஜயம் மேற்கொண்டது ----அதற்காக வில்சனுக்கு ஆன செலவுகள்தான் வழங்கப்பட்டன---- அது ஏதோ ஒரு வரப்பிரசாதம் வழங்கப்பட்டதைப்போல் அவதூறு செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு அலை போன்ற பிரசுரங்கள் வெளிவந்தன, பல்வேறு நிருபர்கள் வில்சன்-பிளாம் உறவுகளை ஆராய முயற்சிகளை மேற்கொண்டனர் மற்றும் தலைமை புஷ் நிர்வாக அதிகாரிகள் பிளாமின் பெயரை பகிரங்கமாக வெளியிடுவதற்கு முடிவு செய்ததையும் ஆராய்ந்தனர். எடுத்துக்காட்டாக டைம்சிற்கு கூப்பர் எழுதிய கட்டுரை, அரசியல் அதிருப்திக்கு எதிராக பதிலடி நடவடிக்கைதான் நோவக்கின் கட்டுரை என்று சித்தரித்தது.

ஊடகங்களில் நடத்தப்பட்ட பிரச்சாரத்திற்கு பதிலளிக்கின்ற வகையிலும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவும், அன்றைய அட்டர்னி ஜெனரல், ஜோன் ஆஷ்கிராப்ட, பிட்ஸ்ஜெரால்டை ஒரு சிறப்பு பிராசிகியூட்டராக நியமித்து பிளாமின் பெயர் கசியவிடப்பட்டது, புலனாய்வு அடையாளங்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவதாக ஆகுமா என்று புலன் விசாரணை செய்ய கட்டளையிட்டார், அந்தச் சட்டப்படி புலனாய்வு இரகசிய அதிகாரிகளின் அடையாளங்களை அங்கீகாரம் இல்லாத வகையில் வெளியிடுவது ஒரு அரசாங்க அதிகாரி செய்கின்ற கிரிமினல் குற்றம் என்று வகை செய்திருக்கிறது.

இரண்டாண்டுகள் ஆகிவிட்டன, அந்த புலனாய்வு ஒரு மாறுபட்ட தன்மையை பெற்றுவிட்டது. சிறைக்கு அனுப்புவது இருக்கட்டும், எந்த புஷ் நிர்வாக அதிகாரி மீதும் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது றொபர்ட் நாவாக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் அரசியல் ``தாக்குதலுக்கு`` ஒரு பத்திரிகையாளர் கருவியாக பயன்பட்டார். அதற்கு மாறாக இரண்டு இதர நிருபர்களை குறி வைத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. மில்லர் தற்போது சிறையில் இருக்கிறார், ஒரு கட்டுரைகூட அவர் எழுதவில்லை, ஆனால் பிளாம் அம்பலப்படுத்தப்பட்டதற்கு பின்னணியாக உள்ள சூழ்ச்சிகள் சிலவற்றை அறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆக ஈராக் போர் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தண்டிப்பதற்கு புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியில் தொடங்கிய இந்த வழக்கு இப்போது அரசாங்கத்தின் தவறுகளை அறிந்து பிரசுரிக்கின்ற நிருபர்களின் முயற்சிகளை கிரிமினல் குற்றமாக ஆக்குகின்ற ஒரு பிரசாரமாக உருமாற்றப்பட்டுள்ளது.

மில்லரை சிறைக்கு அனுப்ப நீதிபதி ஹோகன் கட்டளையிட வேண்டும் என்று கடைசியாக கோரிக்கை விடுத்த பிட்ஸ்ஹெரால்டு நியூயோர்க் டைம்ஸையே ஒரு அமைப்பாக தனிமைப்படுத்தி சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதினார்: ``மில்லரை அவதூறு செய்வதற்கு தூண்டியதில் பெரும்பங்கு பிறரிடமிருந்து (குறிப்பாக அவரது வெளியீட்டாளர் உட்பட) வந்த தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் கிடைத்த கூடுதல் உதவிகள், அதன் மூலம் அவர் தன்னை சட்டத்திற்கு மேம்பட்டவராக கருதி அது தன்னை மன்னித்துவிடக்கூடும் என்று கருதினார். டைம்ஸ் வெளியீட்டாளரான திரு. Sulzberger திரும்பத்திரும்ப தமது பத்திரிகை திருமதி. மில்லரை ஆதரிக்கிறது என்று கூறினார்.``

டைம்சின் நிர்வாக ஆசிரியர் கெல்லர் இதற்கு பதிலளித்தார். ``இது ஒரு உறைய வைக்கும் நடவடிக்கை ஏனென்றால் அரசாங்கத்தின் சந்து பொந்துகளிலும் இதர அதிகாரம் படைத்த அமைப்புக்களிலும் எதிர்காலத்தில் தகவல்களை மூடிமறைப்பதற்கு இது பயன்படக்கூடும். அரசாங்கம் மற்றும் செல்வாக்குள்ள இதர அமைப்புக்களை நெருக்கமாகவும் தீவிரமாகவும் கண்காணிக்க வேண்டும் என்று நம்புகின்ற எவருக்கும் தங்களது முதுகுத்தண்டுவடம் வரை இன்றைய தினம் உறைய வைக்கும் உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்.``

வில்சன்-பிளாம் வழக்கில் பாதுகாக்கப்படும் மூலாதாரங்கள் அல்லது செய்தி மூலம் மேல்மட்டங்களில் நடக்கின்ற தவறுகளை தகவல் தருகின்ற கீழ்மட்டத்தினர், அம்பலப்படுத்துகின்ற பணியாளர்கள் அல்ல, ஆனால் இந்தத் தகவலை இரகசியமாக வெளியிட்டவர்கள் அரசியல் எதிர்ப்பிற்கு எதிராக ஒரு அவதூறு பிரசாரம் கிளப்பியவர்களில் ஒரு பகுதியினர். ஆனால் இது அடிப்படை கோட்பாட்டை எந்த வகையிலும் மாற்றவில்லை.

அல்லது ஜூடித் மில்லரின் கடந்தகால வரலாறு குறிப்பாக, பொருத்தமானது அல்ல. ஈராக் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திகளில் பெரும்பகுதி உலக சோசலிச வலைத் தளத்தினால் இழிவுபடுத்தப்பட வேண்டியதாக அமைந்திருந்தது. அவர் நீண்டகாலம் CIA மற்றும் பென்டகனுக்கு ஒரு பிரசார கருவியாகவும் ஈராக்கிலிருந்து வெளியேறிய அஹமது சலாபி தலைமையிலான குழுவின் ஒலிபெருக்கியாகவும் செயல்பட்டபர். (பார்க்க: செய்திகள் தயாரிப்பு: ஈராக் WMD-கள் பற்றி நியூயோர்க் டைம்ஸ் செய்தி; ஜேசன் பிளேயர் & ஜூடித் மில்லர் இதழியல் நெறிமுறைகள் நியூயார்க் டைம்சில் போரும், இரட்டை வேடமும் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஜூடித் மில்லர் ஈராக்கில் இராணுவ பிரிவையே கடத்தியதாக குற்றச்சாட்டு என்ற கட்டுரைகளை காண்க).

என்றாலும் மில்லர், பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய CIA கட்டுக்கதைகளை சுற்றுக்கு விட்டார் என்பதற்காக அல்ல சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டது எந்த சுதந்திரமான செய்தி சேகரிப்பதையும் ஏறத்தாழ இயலாத காரியமாக ஆக்குகின்ற ஒரு அரசாங்கத்தின் கோரிக்கையை அப்படியே பின்பற்றிச் செல்ல மறுத்துவிட்டார் என்பதற்காக ஆகும்.

மில்லரை சிறையில் அடைத்திருப்பது, 2000-ல் ஜனாதிபதி தேர்தல் திருடப்பட்டதைப் போல், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினர் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளை சிதைப்பதற்கு எந்த அளவிற்கு தயாராகிவிட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. கீழ்க்கண்ட படிப்பினையை பெற்றாக வேண்டும். ஆளும் செல்வந்தத்தட்டின் மிக அதிகாரம் படைத்த பிரிவினர், முதலாளித்துவ அரசியலுக்கு உள்ளேயே தங்களது எதிரிகளுக்கு எதிராக மற்றும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு எதிராக இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று சொன்னால், தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது எந்த அளவிற்கு அதைவிட கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

Top of page