World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report

Thousands lack aid in tsunami-affected areas of Sri Lanka

நேரடி அறிக்கை

இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு உதவி கிடைக்கவில்லை

By Ivan Weerasekera and W.A. Sunil
1 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 26 சுனாமி தாக்கி ஆறு மாதங்களின் பின்னர், கொழும்பிலுள்ள அரசியல் ஸ்தாபனம், நிவாரண உதவிகளை விநியோகிக்கவும் மீள் கட்டுமானத்தை தொடங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பாக ஒரு கசப்பான சர்ச்சையில் முற்றிலுமாக மூழ்கிப் போயுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜூன் 16 அன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), இதர சிங்கள பேரினவாதக் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த அமைப்பை ஸ்தாபிப்பது நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என கண்டனம் செய்கின்றது.

பல மாதங்கள் ஊசலாட்டத்தில் இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இறுதியாக சென்றவாரம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு உதவி கிடைக்க வழி செய்வதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அரசாங்கத்திற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டாலும், தனது சொந்த கட்சிக்குள்ளேயேயான சிங்கள இனவாத பிரசாரத்தின் தாக்கம் பற்றிய அக்கறையினால் குமாரதுங்க தயக்கம் காட்டிவந்தார். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), அந்த உதவி அமைப்பை ஆதரித்தது. ஆனால், ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்கள தீவிரவாதக் குழுக்களை சமரசப்படுத்தும் நோக்கில், "சில ஒதுக்கீடுகளுடனேயே" பொதுக் கட்டமைப்பை ஆதரித்தது.

இந்த பிற்போக்கு பிரச்சாரத்திற்கு மத்தியில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்கள் போதுமான உதவிகளின்றி தங்களால் முடிந்தவரை தற்காலிக முகாம்களிலும் அல்லது உறவினர்களுடனும் உயிர்பிழைத்து வருகின்றனர். பலர் தங்களது ஜீவனோபாயங்களை இழந்துவிட்டதுடன் அவர்களுக்கு உடனடி எதிர்கால வாய்ப்புகள் எதுவும் கிடையாது. நிவாரண உதவிகள் தீர்ந்துவிட்டன அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கொள்ளப்படுகின்றன. பெயரளவிலான மீள்கட்டுமான முயற்சிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.

சாதாரண மக்கள், சுனாமி தாக்கியவுடன் மத, மொழி அல்லது இன பின்னணிகளை கருதாமல் அனுதாபத்தை பொழிந்ததுடன் உதவிகளையும் செய்தனர். சென்ற மாதம் எங்களது நிருபர்கள் குழு, சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தென்பகுதி நகரங்களான மாத்தறை மற்றும் ஹம்பந்தொட்டைக்கு சென்றபோது, நீண்டகால இனவாத பிரச்சாரத்திற்கு எந்தவிதமான பொதுமக்கள் ஆதரவையும் காணவில்லை. மிகப்பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த எதிர்காலம் பற்றி கவலை தெரிவித்ததுடன் அரசாங்க உதவி பற்றாக்குறையாக இருப்பதையிட்டு ஆழமாக விரக்தியடைந்திருந்தனர்.

மாத்தறைக்கு அருகிலுள்ள பொல்ஹேனயை சேர்ந்த ஒருவர், அந்தப் பிரதேசத்தில் உதவி பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்ததோடு விடுதலைப் புலிகளுடனான பொது நிவாரண கட்டமைப்பு குறித்தும் சந்தேகங்களை எழுப்பினார். ஆனால், அவரது ஆத்திரம் தமிழ் சிறுபான்மையினரை விட ஜே.வி.பி உட்பட பிரதான அரசியல் கட்சிகள் மீதே திரும்பியது. "தெற்கிலுள்ள எங்களுக்கே மறுக்கப்படுகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு இந்த பொதுக் கட்டமைப்பு உதவி வழங்கும் என்று எப்படி நாங்கள் நம்ப முடியும்?" என அவர் கேட்டார்.

ஹம்பந்தொட்டையில் உள்ள தர்ம கபீர் மசூதியில் ஒரு நலன்புரி ஒருங்கிணைப்பாளர் எம்மிடம் கூறியதைப் போல், ஏனையவர்கள் இந்த பொதுக் கட்டமைப்பு "சமாதானத்தை கட்டியெழுப்பும் பாலமாக" இருக்கக்கூடும் என்று நம்பினார்கள். தெளிவாகவே அவர் ஆளும் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் என்றவகையில், அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு வசதிகள் இருப்பதாகவும், அரசாங்கம் அவர்களது நிலைமைகளை முன்னேற்றுவதற்கு வேலை செய்துகொண்டிருப்பதாகவும் எங்களுக்கு சொல்ல முயன்றார். அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகள் மீதான ஆழமான அவநம்பிக்கையே பெரும்பாலான மக்களின் அதிகரித்த உணர்வாக காணப்பட்டது.

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, ஹம்பந்தொட்டையும் மாத்தறையும் வழமையான நிலைமைக்கு திரும்பிவிட்டதாகவே தோன்றுகிறது. சுனாமி விட்டுச் சென்ற அழிமானங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைதொடர்புகள், போக்குவரத்து போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஓரளவிற்கு இயங்குகின்றன. ஆனால் அந்த பிரதேசத்தில் உள்ள பலரது வாழ்க்கையை பற்றி அவ்வாறு கூறிவிட முடியாது.

400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் ஹம்பந்தொட்ட நகர்புற பகுதியைச் சுற்றிலும் உள்ள தற்காலிக வீடுகளிலும் மற்றும் கூடாரங்களிலும் மிக நெரிசலாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் அதில் ஒரு பகுதியான ஹம்பந்தொட்ட நகரசபை மைதானத்திற்கு விஜயம் செய்தோம். அங்கு 104 குடும்பங்களை சேர்ந்த 383 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட்டமாக வாழ்கிறார்கள். ஒரு சிலர் சிறிய தற்காலிக வீடுகளில் வசிக்கும் அதேவேளை மற்றவர்கள் தங்களுக்காக வீடுகள் கட்டப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெறும் 20 சதுர மீட்டர் அளவு கொண்ட இந்த சிறிய குடிசைகள், மரப் பலகைகளாலும் மெல்லிய அலுமினிய கூரைத் தகடுகளாலும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, ஒரு மரப்பலகை தடுப்புச்சுவர் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளுமே ஒரு சில அடி இடைவெளிக்கிடையில் நெரிசலாக உள்ளன.

சுமார் 400 பேருக்கு 32 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. "அவை அடிக்கடி நிரம்பி வழிவதால் எங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது என ஒரு குடியிருப்பாளர் புகார் செய்தார். "இங்கு போதுமானளவு தண்ணீரும் இல்லை. பிரதான குழாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் இரவிலேயே தண்ணீர் தொட்டியை நிரப்ப முடியும். நண்பகலளவில் தாங்கியில் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

சுனாமி தாக்குவதற்கு முன்னர், இந்த மக்கள் மீன்பிடி, சுற்றுலாத் தொழில், தச்சு வேலை, தையல் தொழில் மற்றும் காய்கறிகள், பழங்கள் விற்பது போன்ற சிறிய வியாபாரங்களையும் செய்து வந்தனர். பேரழிவிற்குப் பின்னர், அவர்களுக்கு சிறிதளவு அல்லது ஒரு வருமானமும் இல்லாததோடு அரசாங்க பங்கீட்டு பொருள்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

ஒரு தச்சு தொழிலாளி, "நான் எனது வீட்டையும் கருவிகளையும் இழந்துவிட்டேன். அரச சார்பாற்ற நிறுவனம் ஒன்று எனக்கு சில கருவிகளை வழங்கியது. அவை கையினால் இயக்கப்படும் கருவிகள். ஆனால் நான் மின்சார கருவிகளிலேயே வேலை செய்தேன். எனவே அது எனக்கு கடினமாக இருக்கிறது. எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் மூவர் இன்னமும் பாடசாலை செல்கின்றனர். இந்த மாத (ஜூன்) முடிவின் பின்னரும் பங்கீடு தொடர்ந்து வழங்கப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தச் சூழ்நிலையில் எப்படி நாங்கள் சமாளிப்பது என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை," என்று எம்மிடம் தெரிவித்தார்.

ஒரு தாய் தனது குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதாக கூறினார். "அவர்கள் முகங்கொடுக்கின்ற நிலை குறித்து அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். இளைஞர்கள், குறிப்பாக பதின்மூன்று முதல் பத்தொன்பது வயது வரையானவர்கள் நாளின் பெரும்பகுதி நேரம் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். படிப்பில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் முழுமையாக போய்விட்டது. வேறு வசதிகள் இல்லாததால் பிள்ளைகள் தூசி பறக்கும் மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சிறுவர்கள் குழு ஒன்றை எங்களுக்கு காட்டியவாறு அவர் கூறினார்.

தர்ம கபீர் மசூதியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு முகாமில் 196 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தங்குமிடம் மயானத்திற்கு பக்கத்தில் இருப்பதோடு அவர்களது நிலை மிக பரிதாபகரமானது. "பாருங்கள் இறந்தவர்களுடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று சிலர் கூறினர். "15 குடும்பங்கள் இரண்டு மலசல கூடங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." ஒரு பொது சமையலறை, இரண்டு ஷவர்கள் மற்றும் ஒரு வாஷ்பேசினை 15 அல்லது 17 குடும்பங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஈ மொய்த்துக் கொண்டிருக்கும் பொது சமையலறையில் இருந்து தண்ணீரை கொண்டுவர வேண்டும்.

குடும்பங்கள் அனைத்தும் முஸ்லீம்கள் மற்றும் சொந்தமாக இடம் இல்லாததால் கலாச்சார பிரச்சனைகள் எழுகின்றன. "முஸ்லீம் பெண்களாகிய எங்களுக்கு அதிக தனி இடம் வேண்டும்," "எனது மகனுக்கு 13 வயதாகிறது. எனவே நான் அவன் முன்னால் எனது உடைகளை மாற்ற முடியாது. எனது 12 வயது மகளுக்கும் இதே பிரச்சனை எழுகிறது. இப்படி எத்தனை காலத்திற்கு நாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது?" என்று ஒரு பெண் கேட்டார்.

யூ.சீ குடியிருப்புக்கள் என்றழைக்கப்படும் பகுதியில் கொழும்பு--ஹம்பந்தொட்ட பிரதான வீதியின் ஓரங்களில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் கூடாரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அங்கிருந்த 800 க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள அதே வேளை அந்தப் பகுதியில் மீள் கட்டுமானத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் அந்த மக்கள் --அவர்களில் பலர் மீனவக் குடும்பங்களை சேர்ந்தவர்கள்-- எந்த வேலை வாய்ப்பையும் பெறுவதில் சிரமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் அப்பாலுள்ள சிரிபோபுர பகுதிக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.

"அரசாங்கம் எங்களை குற்றவாளிகளைப் போல் நடத்துகிறது. அதிகாரிகள் எங்களுக்கு எந்தவிதமான வசதிகளையும் வழங்காதது மட்டுமன்றி அரச சார்பற்ற அமைப்புகள், அறக்கட்டளை அமைப்புக்கள் போன்ற ஏனையவர்கள் எங்களுக்கு எதையும் கொடுப்பதையும் தடுக்கின்றனர்" என இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி சங்கச் செயலாளர் என்.எம்.எம். ரிவான் கூறினார்.

சிரிபோபுரவிற்கு நகர மறுப்பதற்கான காரணங்களை விளக்கிய மக்கள், அடிப்படை வசதிகள் இன்மையை சுட்டிக்காட்டினர். சில 45 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அங்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் கிடையாது. போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை.

ஏனைய இடங்களைப் போல் மக்கள் அரசியல்வாதிகளை எதிர்க்கின்றனர். "அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் கைவிடப்பட்டுள்ளோம். ஆரம்பத்தில், மற்றும் இப்போதும்கூட எப்போதாவது ஒரு முறை சில அரசியல்வாதிகள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக வருகிறார்கள். அவர்கள் வந்து எங்களுக்கு எதையாவது கொடுத்துவிட்டு அரசியல் விளம்பரம் தேடிக்கொள்வதற்காக தொலைக்காட்சி காமிராக்கள் முன் நிற்கின்றார்கள்," என்று ஒரு இளைஞர் குறிப்பிட்டார்.

மாத்தறை அருகிலுள்ள கெமுனு அகதிகள் முகாமில், மூன்று பாடசாலை கட்டிடங்களில் 39 குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பாடசாலை மாணவர்கள் அதே பகுதியிலுள்ள வேறொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பறையும் பலகை சீட்டுகளைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 சதுர மீட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு 39 குடும்பங்களுக்கும் 8 மலசலகூடங்கள், 8 தண்ணீர் குழாய்கள் மற்றும் 8 ஷவர்கள் மட்டுமே உள்ளன. இரு மலசல கூடங்கள் நிரம்பி வழிவதால் அவை பயன்படுத்த முடியாதவையாக உள்ளன.

சமைப்பதற்கு சமையல் அறைகள் இல்லாததால், ஆபத்துக்களும் சுகாதாரக் கேடுகளும் இருந்த போதிலும் மண்ணெண்ணை அடுப்புகளின் பயன்பாட்டுடன் அறைகளுக்குள்ளேயே சமையல் மேற்கொள்ளப்படுகிறது. "நாங்கள் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் ஒரே ஒரு உணவையே சமைக்கின்றோம் --பெரும்பாலும் சோறும் இரண்டு குழம்புகளும். ஒன்று காய்கறி மற்றையது கருவாடு. மீன் மற்றும் இறைச்சி விலைகள் அதிகரித்துவிட்டதால் அவற்றை நாங்கள் வாங்க முடியாது. இது மிகவும் துயரமான வாழ்க்கை. எவ்வளவு காலத்திற்கு இதை நாங்கள் சகித்துக்கொள்ள முடியும்?" என்று ஒரு பெண் விளக்கினார். மேலும் ஆறு மாதங்களுக்கு இங்கே தங்கயிருக்க வேண்டிவரும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொல்ஹேன மாத்தறைக்கு அருகிலுள்ள மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான 100 மீட்டர் வரையறைக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிலர், ஹங்கேரியாவை அடித்தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பு ஒன்றின் மூலம் சில உதவிகளை பெறுகிறார்கள். ஆனால் ஒதுக்கப்பட்ட வலையத்திற்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிகப் பெரும்பாலானவர்கள் மீன்பிடியிலும் சுற்றுலா பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இப்போது அவர்களது வருமானத்திற்கான வளங்களை இழந்துவிட்டனர். சுமார் 100 குடும்பங்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவர் எங்களிடம் கூறியதாவது: "எங்களுக்கு நிரந்தர வருவாய் கிடையாது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கிடைப்பதை கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்தப் பேரழிவுக்கு முன்னர் கூட நாங்கள் ஒரு சிறிய குடிசையிலேயே வாழ்ந்தோம். ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் வந்தால் எங்களால் சிறிதளவு பணம் சம்பாதிக்க முடிந்தது. இந்த அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவேயில்லை. இந்தக் குடிசையும் கூட ஒரு புத்த பிக்குவால் வழங்கப்பட்டதே. தற்போது அரசாங்கம் எங்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறது. நாங்கள் எப்படி உயிர்வாழப் போகிறோம்?"

உதவிகளை வழங்குவதற்கு மாறாக, அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரத்துடன் கண்டனங்கள் எழுப்பும்போது அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகிறது. பெந்தொட்டையிலிருந்து தங்கல்லவரை தெற்கு கடற்கரையின் பரவலான பகுதிகளில் கண்டனப் பேரணிகளுக்கு பொலிஸ் தடை விதித்துள்ளதுடன், பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வன்முறையாக மோதிக்கொண்டுள்ளது. ஆளும் தட்டு இனவாதத்தை நாடுவதானது பெருகிவரும் ஆத்திரத்தையும் விரக்தியையும் திசைதிருப்பவும் மற்றும் உழைக்கும் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக ஆக்கவும் மேற்கொள்ளும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

Top of page