World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The politics of opportunism: a look at the International Socialist Organization

சந்தர்ப்பவாத அரசியல்: சர்வதேச சோசலிச அமைப்பை பற்றிய ஒரு கண்ணோட்டம்

By Joseph Kay
7 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச சோசலிச அமைப்பு (ISO), "சோசலிசம் 2005: இடது மாற்றீட்டை அமைப்போம்" என்ற தலைப்பில், தன்னுடைய ஆண்டு மாநாட்டை ஜூலை 1ல் இருந்து 4 வரை சிக்காகோவில் நடாத்தியது. இம்மாநாட்டில், முக்கியமாக கல்லூரி மாணவர்கள் உட்பட சில நூற்றுக் கணக்கான சர்வதேச சோசலிச அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் வடிவமைப்பு, உள்ளடக்கம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வும் இல்லாதது மிகமுக்கியமானதாகும். தற்போதுள்ள அரசியல் நிலைமை பற்றிய ஆரம்ப அறிக்கை ஏதும் இல்லை; அமைப்பின் சமீபத்திய அனுபவங்களை மதிப்பீடு செய்த அறிக்கை அல்லது அதனுடைய தற்போதைய பணிகள் பற்றிய விவாதங்களும் இல்லை. மாறாக மாநாட்டில் 100 கருத்தரங்குகள் தனித்தனித் தொடர்பற்ற தலைப்புக்களில் நடைபெற்றன.

சர்வதேச சோசலிச அமைப்பு மாநாட்டில் இருந்த அமைப்புரீதியான ஒத்திசைவற்ற தன்மை அதன் தத்துவார்த்த ரீதியானதும் மற்றும் அரசியல் ரீதியான ஒன்றிணைவின்மையான தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது. சர்வதேச சோசலிச அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுள்ள தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை கொண்டுள்ள, அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் அல்ல. அமைப்பின் வரலாற்றை பற்றிய அறிந்து கொள்ளுதல் ஒரு புறம் இருக்க, அதன் அறிமுகமும் மிகக் குறைவாகத்தான் உள்ளது. கடந்த தசாப்தத்தில் அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கம் கடந்து வந்துள்ள முக்கியமான மூலோபாய அனுபவங்களை பற்றிய பொது மதிப்பீடு எதுவும் கொடுக்கப்படவில்லை. மாறாக, ஏதாவது ஒரு தந்திரோபாயத்துடன் ஈடுபாடுள்ள அனைவரும் அவரவர் விருப்பின்பேரில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.

மாநாட்டின் அமைப்பு சர்வதேச சோசலிச அமைப்பு செயல்படும் புத்திஜீவித, அரசியலின் மூடுபனி சூழ்நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. இதில் பங்கு பெற்றவர்கள், எந்த மையமான முன்னோக்கையும் காணாத நிலையில், ஒரு கூட்டத் தொடரில் இருந்து மற்றொன்றிற்குச் சென்றனர், ஒரு கருத்தரங்கில் இருந்து மற்றொன்றிற்கு தாவினர்.

இந்த தத்துவார்த்த, சித்தாந்த குவியல் அனைத்துவிதமான அரசியல் கருத்துகளுக்கும் அடிபணிந்து போவதற்குத்தான் உதவியளிக்கும். ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றைக் கொடுக்கும் வகையில் மாநாடு வடிவமைக்கப்பட்டிருந்தது. அடையாள அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு கறுப்பர்கள் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய கருத்தாய்வுகள் இருந்தன. பாலியல் அடையாளத்தை விவாதிக்க விரும்பியவர்களுக்கு, "பாலியில் உறவுகளும் வர்க்கப் போராட்டமும்" என்ற விவாதத் தொடர் இருந்தது. தங்களை பசுமைக் கட்சிக்குள் கரைத்துக் கொள்ள விரும்பியவர்களுக்கு, 2004 தேர்தல்களில் ரால்ப் நாடெருக்கு துணை ஜனாதிபதி வேட்பாளராக நின்றிருந்த பசுமைக் கட்சித் தலைவர் பீட்டர் காமெஜோவின் இரண்டு கூட்டங்கள் இருந்தன.

ஒரு குறிப்பிடத்தக்க கூட்டத்தொடர் "தொழிலாளரின் எதிர்காலம்: இங்கிருந்து எங்கு செல்லுகிறோம்?" என்ற தலைப்பில் இருந்தது. இது முற்றிலும் தொழிற்சங்கங்களின் தற்பொழுதைய நிலை, வருங்கால முன்னோக்கை பற்றியதாக இருந்தது.

"இங்கிருந்து நாம் எங்கு செல்லுகிறோம்?" என்ற கேள்விக்கு விடையிறுப்பதற்கு, முதலில் "இங்கு எப்படி வந்தோம்" என்று கேட்பது முக்கியமானது ஆகும். ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கம் கண்டுள்ள பேரழிவு தரும் தோல்விக்கு இந்த அமைப்புக்கள், இவற்றின் தலைவர்களின் பொறுப்பு பற்றிய நேர்மையான மதிப்பீடு இல்லாதது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், தொழிற்சங்கங்களில் பொருளாதார வரலாற்றுச் சரிவுக்க்கான காரணங்கள் பற்றிய விவாதமும் இல்லை.

மாறாக சர்வதேச சோசலிச அமைப்பின் உறுப்பினர் லீ சுஸ்ரர் தலைமையில் ஒரு தொடரில் "வர்க்கப் போராட்ட தொழிற்சங்கம்" புதுப்பிக்கப்படவேண்டும் என்பதற்கான முழு அழைப்புக்கள் இருந்தன; இது சீரழிவிற்குட்பட்டு சரிந்துள்ள AFL-CIO இன் தலைமையில் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. சர்வதேச சோசலிச அமைப்பு உறுப்பினர்களின் தொழிற்சங்கப் பணிகளின் பொதுவான இரண்டு மோசமான விளைவுகள் பற்றிய அறிக்கைகளுடன் இந்த அழைப்பு இணைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சோசலிச அமைப்பை பொறுத்தவரையில் அது தொழிற் சங்கங்களைத்தான் தொழிலாள வர்க்க அமைப்புக்களின் சட்டபூர்வமான வடிவமைப்பாக கருதுகிறது. இக்கருத்தரங்கில் இந்த அமைப்புக்களில் இருக்கும் ஆழ்ந்த ஊழலை பற்றி ஒரு சொல் கூடக் கூறப்படவில்லை; தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்குள்ளேயே பாரியளவில் மதிப்பினை இழந்துவிட்டன என்பதும் ஒப்புக் கொள்ளப்படவில்லை.

தொழிற்சங்கங்களுக்குள் செய்யும் செயற்பாடுகள் பற்றிய சர்வதேச சோசலிச அமைப்பின் கவனமெடுப்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வித்தியாசமான பிரிவுகளுடனான அதன் உடன்பாடுகளின் தந்திரமான நடவடிக்கைகளாகவே உள்ளது. இதனால் படிக்கும் இளைஞர்களை தங்களுடைய திவால்தன்மையை நிரூபித்துள்ள அமைப்புக்களிடம் திரும்பிச் செல்லுமாறு கூறப்படுகின்றனர்; கடந்தகாலத்தில் தொழிலாளர்கள் போராடிக் கிடைத்த வெற்றிகளை பாதுகாத்துக்கொள்ளவும் அவ் அமைப்புக்களை நோக்கி செல்லவேண்டும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச சோசலிச அமைப்பை பொறுத்தவரையில் அது முடிவெடுக்க முனையும் முக்கிய அரசியல் பிரச்சினை என்னவெனில், ஜனநாயகக் கட்சியுடனும் மற்றும் அதனை சூழ்ந்திருக்கும் "முற்போக்கான" என கூறப்படும் பிரிவுகளுடன் அது எவ்வாறு ஒத்துழைத்து செல்வது என்பதை கையாள்வதுமாகும். தான் இணைந்து செயலாற்றக்கூடிய வகையில் இருக்கும் பல போர் எதிர்ப்பு அல்லது இடது அமைப்புக்களை சர்வதேச சோசலிச அமைப்பு பெரும் ஆர்வத்துடன் தேடிவருகிறது. ஜனநாயகக் கட்சியுடனான இக்குழுக்களின் அரசியல் அணிதிரளலுக்கு அடிபணிந்திருக்கையில், இது ஜனநாயகக் கட்சிக்கு எதிராக தனது மேலெழுந்தவாரியான எதிர்ப்பையும் பாதுகாக்கவிரும்புகிறது; இதனால் இருகட்சி முதலாளித்துவ முறைக்கு உண்மையான எதிர்ப்புக் காட்ட தவறாக சர்வதேச சோசலிச அமைப்பிற்கு ஈர்க்கப்பட்டு வந்தவர்களுடன் அந்நியப்பட்டு கொள்ளாமல் இருப்பதும் அதன் நோக்கமாகும்.

அமைப்பின் அணுகுமுறை, கூட்டத்தொடரில் தெளிவாகவே விளக்கப்பட்டது: "போர் எதிர்ப்பு இயக்கம் எவ்வகையில் இயக்கப்பட வேண்டும்?" ஒரு நிமிஷம், சர்வதேச சோசலிச அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனப்படும் முயற்சிகளை கண்டிப்பார்; மறு நிமிஷம் அவர் கூட்டணி ஒன்று "சுயாதீனமான கீழ்மட்டத்தில் இயங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பரந்த அளவில் வலைப்பின்னலாக இணைக்கப்படவேண்டும்" என்றும் அத்தகைய பெரும் தொகுப்பு, ஜனநாயகக் கட்சியினருடன் வெளிப்படையாக சார்புடைய, சமாதானத்திற்காகவும் நீதிக்காவும் ஒன்றுபடுவோம் (United for Peace and Justice) என்ற அமைப்பு போன்றவற்றையும் அது இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

அரசியல் ரீதியாக, இத்தகைய நிலை சர்வதேச சோசலிச அமைப்பிற்கும், மாநாட்டில் மிக முக்கியமான சொற்பொழிவாளர்களில் ஒருவரான காமெஜோவிற்கும் இடையே உள்ள பெருகிய நெருக்கமான தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக காமெஜோ சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) ஒரு முக்கிய பிரமுகராக இருந்தவராவர். அவர் சோசலிச தொழிலாளர் கட்சியில் 1950களின் கடைசியில் சேர்ந்தார்; அந்த நேரத்தில் அமெரிக்காவில் அது ட்ரொட்ஸ்கிச கட்சி என்ற நிலையில் இருந்து அரசியல் சீரழிவையும், பின்னர் பலவிதமான, ஸ்ராலினிச, அடையாள, எதிர்ப்பு அரசியலை நோக்கிய ஒரு மத்தியதர வகுப்பின் தீவிரவாத அமைப்பாக மாறிய காலமாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சியின் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் காமெஜோ ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இது இன்றைய சர்வதேச சோசலிச அமைப்பின் செயல்பாட்டை போல், போருக்கான எதிர்ப்பை தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்துடன் இணைப்பது, ஜனநாயகக் கட்சியுடன் உடைத்துக்கொள்வதற்கான போாராட்டம் மற்றும் முதலாளித்துவமுறைக்கான எதிர்ப்பு போன்ற அனைத்திற்கும் எதிராக ஒரு பரந்த இடது கூட்டணியை தோற்றுவிக்க முற்பட்டிருந்தது. காமெஜோ 1980 களில் சோசலிச தொழிலாளர் கட்சியை விட்டு நீங்கினார். பின்னர் பசுமைக் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராக வெளிப்பட்டார்.

சர்வதேச சோசலிச அமைப்பிற்குள்ளேயே 2004ம் ஆண்டு நாடெருக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்ற முரண்பாடு இருந்த நிலையிலும் அது அவ்வாறு இருந்தது. கடந்த ஆண்டு சர்வதேச சோசலிச அமைப்பின் மாநாடு நடைபெற்ற போது, நாடெர் தீவிர வலதுடன் தான் பெரிதும் இணைந்திருப்பதில் ஈடுபட்டிருந்தார் மற்றும் சமீபத்திலும் பாட் புக்கானனுக்கு முக்கியமான, நட்புத் தன்மையுடன் கூடிய பேட்டி கொடுத்துள்ளார். காமெஜோ, நாடெருக்கு ஓர் இடது, ஏன் "சோசலிச" முகத்தைக்கூட வழங்குகிறபடியால், காமெஜோவை தன்னுடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளதாக நாடெர் அறிவித்தது சர்வதேச சோசலிச அமைப்பின் தலைமைக்கு தன்னுடைய சொந்த உறுப்பினர்களை பற்றிய எந்தவிதான கவலைகளையும் எளிதாக்க உதவியது.

இந்த முரண்பாடுகள் ஒருபுறம் இருந்த போதிலும், அவருடைய முடிவு சரியா, தவறா என்பது பற்றி வினாக்கள் எழுப்பப்படவில்லை; அவருடைய தொடர்பு சோசலிசத்தை முன்னேற்றுவிக்கும் பணிக்கு எவ்வாறு உதவும் என்ற வினாவும் எழுப்பப்படவில்லை. மாநாட்டில் இருமுறை காமெஜோ பேசினார்; முதலில் பசுமைக் கட்சிக்குள் தேசியரீதியில் இருக்கும் பிரிவுகள் பற்றியும் பின்னர் கலிபோர்னியாவில் இருக்கும் நிலைமை பற்றியும் பேசினார். அங்கு அவர் 2006ம் ஆண்டு ஆளுனர் பதவிக்குப் போட்டியிடக் கருதியுள்ளார். இருகட்சி முறையில் இருந்து உடைந்துகொண்டு போவது பற்றி மிகவும் கவனமாக நனவுடன் இருக்கின்றார். பசுமைக் கட்சியை அனைவரையும் ஈர்த்துப்பிடித்து வைக்கும் அமைப்பாக, அரசியல் அமைப்பிற்கு ஓர் இடது தூணாக உதவி செய்யும் வகையில் நிலைநிறுத்த அவர் இலக்கைக் கொண்டுள்ளார்.

"தீவிரவாதம்", "தாராளவாதம்" என்று பசுமைக் கட்சியின் இரு பிரிவுகளுக்கும் இடையே உள்ள பிளவை பற்றியும், முந்தையது முக்கியமாக தன்னால் பிரதிபலிக்கப்படுவதாகவும், பிந்தையது கட்சிக்கான ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை 2004ல் பெற்றிருந்த டேவிட் கொப்பினால் பிரதிபலிக்கப்படுகிறது என்றும் கூறினார். (நாடெர் பசுமைக் கட்சியினால் நியமிக்கப்படாததால், சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார்.) ஜனநாயகக் கட்சியினரிடம் முழு விசுவாசத்தையும் கொண்டிருப்பதற்காக கொப்பை காமெஜோ குறைகூறினார். பசுமைக் கட்சியின் சரிவிற்கு இதுதான் காரணம் என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால், காமெஜோவும், பசுமைக்கட்சியின் "தீவிரவாதப் பிரிவும்", கொப்பையும் "தாராளவாதிகளையும்" விட ஒன்றும் அரசியல் கட்டமைப்பில் இருந்து சுயாதீனமாக இருக்கவில்லை. ஜூன் 14ம் தேதி பதிப்பில் சர்வதேச சோசலிச அமைப்பின் நாளேடு Socialist Workers ல் வந்துள்ள பேட்டி ஒன்றில், காமெஜோ பசுமைக் கட்சியனரையும் சர்வதேச சோசலிச அமைப்பினரையும் "முற்போக்கான ஜனநாயகக் கட்சியினருடன்" இணைந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுத்தார்; இதன்மூலம் தொழிலாள வர்க்க மக்களுடைய நலன்களை பாதுகாக்க ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவினரை நம்பலாம் என்ற போலித் தோற்றத்தை ஊக்குவித்தார்.

பசுமைக் கட்சிக்குள் இருக்கும் பிளவு முற்றிலும் தந்திரோபாய ரீதியானதாகும். பசுமைக் கட்சியினர் வெளிப்படையாக ஜனநாயகக் கட்சி சார்பு கொள்ளுமானால், இரு கட்சி முறையில் வெறுப்பு அடைந்துள்ள மக்களை ஈர்ப்பதில் அது எத்தகைய நம்பகத்தன்மையையும் கொண்டிருக்காது என காமெஜோ கவலை கொள்கின்றார்.

குடியரசுக் கட்சியின் பிரிவுகளுக்கும் அழைப்பு விடுவதற்குத் தயக்கம் வேண்டாம் என்றும் காமேஜோ விரும்புகிறார். மாநாட்டில் பலமுறையும் அவர் இரண்டு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு திரட்ட முடிந்ததை பற்றிப் பேசினார். 2004 தேர்தல்களின்போது, நாடெர் முழு உணர்வோடு குடியரசுக் கட்சியினரின் உதவியை நாடுவதற்கு நாட்டுமக்கள் நலம், குடியேறுவோர் எதிர்ப்பு உணர்வு இரண்டுக்குமே அழைப்பு விடுத்திருந்தார்.

இரு கட்சி முறையில் இருந்து சுயாதீனம் என்ற பிரச்சினை அடிப்படையில் ஒரு வேலைத்திட்ட ரீதியாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புமுறை பிரச்சினை அல்ல. ஆட்சி வர்க்கத்தின் இரண்டு கட்சிகளும் பாதுகாத்து நிற்கும் முதலாளித்துவ முறையை எதிர்க்கும் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை ஒரு சுயாதீனமான அரசியல் கட்சி அடித்தளமாக கொள்ள வேண்டும். பசுமைக் கட்சி ஒரு குட்டி முதலாளித்துவ கட்சியாகும்; பெருநிறுவன அதிகாரத்தை குறைக்க சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற அழைப்புடன், தொழில்துறை, விவசாயத் துறை தொழில் நுட்பம் போன்றவை இன்னும் கூடுதலாள வளர்ச்சியடைதலை எதிர்க்கும் அடிப்படை தேசியவாத முன்னோக்கு போன்ற பிற்போக்குத்தனமான கூறுபாடுகளையும் இணைத்த முறையில் பசுமைக் கட்சி உள்ளது.

ஒரு சர்வதேசரீதியான போக்கு என்னும் முறையில், ஜேர்மனியை போல் பசுமைக் கட்சியினர் அதிகாரத்தை எங்கெல்லாம் கைப்பற்ற முடிந்ததோ அங்கெல்லாம் இந்த சீர்திருத்த உறுதிமொழிகளை கைவிட்டு, ஆளும்வர்க்கத்தின் கொள்கைகளை விசுவாசத்துடன் காப்பவர்களாக இருந்துள்ளனர். "அமைதிவாத" பசுமைக் கட்சியாக ஜேர்மனியில், அது ஜேர்மனிய வெளியுறவு மந்திரியாக ஒருவரை கொண்டவுடன் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் வெளிநாட்டில் ஜேர்மனிய படைகள் இறங்குவதை மேற்பாற்வையிட்ட நிலையை காட்டி தன்னுடைய தன்மையை நிரூபித்தது. இப்பொழுது சமூக ஜனநாயக கட்சியின் தலைமையில் உள்ள கூட்டணியில் இருந்து கொண்டு, அந்த அரசாங்கம் சமூகநல திட்டங்கள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தியும் வருகிறது.

பசுமைக் கட்சி வேலைத்திட்டத்தில் உள்ள சோசலிச-எதிர்ப்புத் தன்மை, அதேபோல் நாடெரின் நிலையும், மாநாட்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் காமெஜோவிடம் வினா எழுப்பிய போது நன்கு வெளிப்பட்டது. அவருடைய தேர்தல் பிரச்சாரம், அவரோ நாடெரோ சோசலிசத்தை பற்றிச் சிறிதும் பேசாதபோதும், போர், சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், முதலாளித்துவ அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராக பேசாதபோதும், சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி அவரது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுத்தது? என்று காமெஜோ கேட்கப்பட்டார்.

இதற்கு காமெஜோவின் விடை ஆணித்தரமாக இருந்தது: பசுமைக் கட்சி ஒரு சோசலிசக் கட்சி அல்ல; ஒருபொழுதும் அது ஒரு சோசலிஸ்ட் கட்சியாக இராது. சோசலிஸ்டுகள் அதில் சேரவேண்டும்; ஆனால் அது சோசலிசத்திற்கு ஒரு கருவியாகச் செயல்படாது.

"மக்களுடைய உள்ளத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி இவர்களுடைய படைப்புக்கள் பொதிந்திருக்கவில்லை" என்று அவர் அறிவித்தார். "அது சரி, ஏனென்றால் நூறாயிரக்கணக்கான மக்கள் கேட்கத் தலைப்பட்டு ஜனநாயகக் கட்சியில் இருந்து உடைந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு ஒரு நுழைவாயில் உள்ளது; நாம் அதைப் பின்பற்ற வேண்டும். தொழிலாளர் இயக்கத்தின் ஒரு பிரிவு ஜனநாயகக் கட்சியிடம் இருந்து முறிந்தால், அவர்கள் தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளவரோ? இல்லை. நாம் அவர்களை ஆதரிப்போமா? ஆம். பசுமைக் கட்சி ஒரு சோசலிஸ்ட் கட்சியாக வரவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.... சோவியத் ஒன்றியத்தில் என்ன நடந்தது என்பதை தொலைக்காட்சியில் விளக்குவது என்பது நான் நிகழ்த்தும் கடைசிச் செயலாகும். கருத்துக்கள் வெற்றியடைவதில்லை; நடைமுறைப் பிரச்சினைகள்தாம் வெல்லுகின்றன''.

இத்தகைய அறிக்கை ஒரு உறுதியான சந்தர்ப்பவாதி, சிறிதும் அரசியல் கொள்கைகள் இல்லாத மற்றும் சிறிதும் அரசியல் முதுகெலும்பில்லா ஒரு அரசியல்வாதியிடம் இருந்துதான் வரமுடியும். 45 ஆண்டுகள் சோசலிசம் எனக் கூறப்பட்ட அரசியலில் செலவழித்த பின்னர் கருத்துக்கள் உண்மையிலேயே பொருளற்றனவே என்று காமெஜோ பிரகடனப்படுத்துவது, அவநம்பிக்கைத்தன்மை, சீரழிந்துவிட்டதன்மை, புத்திஜீவித தன்மை திவாலான நிலை இவற்றை பிரகடனப்படுத்துவது ஆகும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் இருந்து தோன்றும் அரசியல் சோசலிசத்தோடு எந்தத் தொடர்பும் அற்றதுதான். சோசலிசத்தை பொறுத்தவரையில் தொழிலாள வர்க்கத்திடையே மாபெரும் சிந்தனைகளை கற்பித்தல் என்பது ஒரு தேவையாகும். ஆனால் ஒரு "நடைமுறை" அரசியல்வாதியான காமெஜோ போன்றவர்களுக்கு அது ஆர்வத்தை தராது; அவர் முதலாளித்துவ அரசியலின் ஓரத்தில் கிடைக்கும் நலன்களை துய்க்கும் வாய்ப்பைத்தான் விரும்புகிறார். இத்தகைய நபர் ஒருவர் அரசியலில் முன்மாதிரி என்ற முறையில் ஒரு மாநாட்டில் அணிவகுக்கப்படுவது சர்வதேச சோசலிச அமைப்பின் முன்னோக்கு பற்றி அனைத்தையும் கூறிவிடுகிறது.

சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற அமைப்புக்கள் ஆதரிக்கும் இவ்வாறான அரசியலுக்கு ஒரு திட்டவட்டமான தர்க்கம் உள்ளது; அதன் உறுப்பினர்கள் அதைப் பற்றி முற்றிலும் அறிந்திராவிட்டாலும், உண்மை அதுதான். சர்வதேச சோசலிச அமைப்பு எப்பொழுதும் ஐக்கியம், ஐக்கிய முன்னணி, "ஒதுக்காத தன்மை", "பரந்த மக்கள் அமைப்புக்களை" தோற்றுவித்தல் என்பது பற்றிப் பேசி வருகிறது.

இந்த ஒற்றுமை என்ன? மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவரவேண்டும் என்பது நல்லதுதான்; ஆனால் எந்த அடிப்படையில்? ஒரு சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட வலுவான இயக்கத்தை கட்டமைப்பது அதன் நோக்கம் அல்ல. மாறாக அதன் நோக்கம் சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதப் போக்கு காட்டும் வேறுபட்ட குழுக்களின் இடது அணியை தோற்றுவிப்பதுதான்; ஆனால் இந்த ஐக்கியம் எவ்வகை தந்திரோபாய தேவையின் அடிப்படையிலும் இருக்கலாம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற அமைப்புக்களின் தலைமைகள் முற்றிலும் சீரழிந்த ஒன்றாகும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்திற்கு உண்மையில் ஒரு வருங்காலம் உள்ளது என்பதை அவர்கள் காண்பதில்லை. எனவே தொடர்ந்து "மக்கள் இயக்கம்" என்ற பெயரில் தாங்கள் அதற்கேற்றால் போல் மாறிக் கொள்ளகூடிய ஏதாவது அமைப்பை கொண்டுவரவேண்டுமென முனைகின்றனர்.

சர்வதேச சோசலிச அமைப்பு என்ற பெயரே ஒரு தவறான புரிதலாகத்தான் தோன்றுகிறது. அது தேசியவாத முன்னோக்குடைய ஒரு தேசிய ரீதியான அடித்தளத்தை கொண்டுள்ளதால் அது ஒன்றும் சர்வதேச தன்மை கொண்டதல்ல. இவ் இயக்கம் ஒருங்கிணைந்த கட்டமைப்பின்மீது கட்டப்படாததால் இது ஒரு அமைப்பு என்றும் கூறப்படுவதிற்கில்லை. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட அக்கறைகொண்ட முயற்சி எதுவும் செய்யாததால் இது சோசலிச அமைப்பும் இல்லை.

Top of page