World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush pledges to veto stem cell bill

பரம்பரைக் கல மசோதாவை இரத்து செய்ய புஷ் உறுதியளித்துள்ளார்

By Joseph Kay
26 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

பரம்பரைக் கல (stem cell) ஆராய்ச்சியின் அரசாங்க நிதியை உயர்த்த வேண்டும் என்று கோரும் மசோதாவிற்கு தனது இரத்து அதிகாரத்தை பயன்படுத்தப்போவதாக புஷ் நிர்வாகம் இந்தவாரம் அறிவித்திருப்பது அதன் அறியாமையையும் பிற்போக்குத்தனத்தையும் காட்டுகிறது.

அமெரிக்க மக்கள் அனைவர் மீதும், கத்தோலிக்க மதவாதிகளின் கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் வலதுசாரி கூட்டணி சேர்ந்து ஒரு சிறிய தட்டினரின் மதக்கருத்துக்களை திணிப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை புஷ்ஷின் அறிவிப்பு வலியுறுத்திக் கூறுகிறது. நிர்வாகத்தின் கருச்சிதைவிற்கு-எதிரான செயல்திட்டத்தை வழக்கமாக ஆதரிக்கும் குடியரசுக்கட்சியின் உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் கொள்கை மாறியதால், குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்காவின் கீழ்சபையில் அந்த மசோதாவில் ஒரு பகுதியை புஷ் தனக்கு சாதகமாகபிடித்துக்கொண்டார். கிறிஸ்தவ வலதுசாரி பிரிவு நிர்வாகத்தின் பிரதான அரசியல் அடித்தளமாகவும், குடியரசுக் கட்சியின் ஆதரவு தளமாகவும் அவர்கள் பெருமளவில் மாறிக்கொண்டு வருகிறது.

புஷ், வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் செவ்வாயன்று கலந்து கொண்டார், அது சட்ட முன்வரைவை தடுத்து நிறுத்துவதற்கு அவரது முடிவை அதிரடியாக எடுத்துக்காட்டுவதாகும், டெர்ரி ஷியாவோ வழக்கில் குடியரசுக் கட்சி தலைமையிலான தலையீட்டின்மீது பரவலான பொதுமக்களது வெறுப்பிற்கு அப்பாலும் அவர் அமெரிக்க அரசியல் சட்டத்தின் மதசார்பற்ற அடிப்படைகளை தாக்குவதிலிருந்து பின்வாங்கும் எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

அந்த சட்டமுன்வரைவிற்கு கீழ்சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்ததால்தான், ஜனாதிபதியின் இரத்து அதிகாரத்தை சமாளிக்க முடியும், எனவே செனட் சபை அந்த மசோதாவை நிறைவேற்றினாலும், புஷ்ஷின் தலையீடு அந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்களது துன்பங்களை மட்டுப்படுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் அபிவிருத்திக்கு கடுமையாக இடையூறு செய்யும் மற்றும் இறுதியாக தற்போதுள்ள மோசமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதும் பாதிக்கப்படும்.

பரம்பரைக் கல ஆராய்ச்சி அபிவிருத்தி சட்டம், ஏற்கெனவே உள்ள ஒரு சிறியளவு பரம்பரைக் கல வழிகளின் ஆராய்ச்சிக்கு புஷ் 2001 ஆகஸ்டில் மத்திய அரசு நிதி மூலம் தடைவிதித்தை சற்று தளர்த்தக்கூடும். புதிய சட்டம், செயல்படுவதற்கு கையெழுத்திடப்பட்டால் அது செயற்கை கருத்தரிப்பு மருந்தகங்கள் நன்கொடையாக வழங்கும் கருப்பையிலிருந்து எடுக்கப்படும் புதிய பரம்பரைக் கல வழிகளில் ஆராய்ச்சி செய்வதற்கு அரசாங்கம் நிதியளிப்பதை அனுமதிக்கும். மேலும் விஞ்ஞான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படவில்லையென்றால் மற்றும் மருத்துவக் கழிவு என்று உதறித்தள்ளப்படும் கருப்பையிலிருந்து பெறப்பட்டதாக இருந்தால்தான் அந்த பரம்பரைக் கலங்களை பயன்படுத்த முடியும் என்று சட்டம் வகை செய்கிறது.

ஒரு கணிசமான பெரும்பான்மையோடு அந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது---- 50 குடியரசுக் கட்சிக்காரர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்--- அந்த வாக்குகள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு குறைவாக இருந்தது. வாழ்வியல் ஆய்விற்கு ஆதரவு காட்டும் நாடாளுமன்ற குழுவினால் (Pro-Life Congressional Caucus) வகுத்தளிக்கப்பட்ட ஒரு இரண்டாவது சட்ட முன்வரைவு கீழ்சபையில் மிகப்பெரும் வாக்குகள் வேறுபாட்டில் நிறைவேற்றப்பட்டது, அது நச்சுக்கொடி பரம்பரைக் கலங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. அத்தகைய ஆராய்ச்சி கருவிலிருந்து கலங்களை எடுப்பது சம்மந்தப்பட்டதல்ல. என்றாலும், நச்சுக்கொடியிலிருந்து பரம்பரைக் கலங்களை எடுப்பது கருவிலிருந்து எடுக்கும் பரம்பரைக் கலங்களை போல் விஞ்ஞான நோக்கத்திற்கு பிரயோசனமானவையல்ல.

ஒரு முக்கியமான நவீன மருத்துவ ஆய்வு துறையில் அமெரிக்கா பின்தங்கி விடுகின்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற கவலை ஆளும் செல்வந்தத்தட்டிலுள்ள ஒரு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது என்றதோர் அடையாளச்சின்னம்தான் பெரும்பான்மை ஜனநாயகக் கட்சிக்காரர்களும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சிக்காரர்களும் அந்த மசோதாவை ஆதரித்ததற்கான உண்மையாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலும் மிகத்தெளிவாக ஒன்றை அறிவார்கள் மிகப்பெரும்பாலான பொதுமக்கள் பரம்பரைக் கல ஆராய்ச்சியை ஆதரிக்கின்றனர். அதில் பெரும்பான்மை குடியரசுக் கட்சிக்காரர்களும் அடங்குவர். அவர்களுக்கு எதிர்காலத்தில் தங்களது வாழ்வை அல்லது தங்களுக்கு தெரிந்த மக்களது வாழ்வை அது மேம்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும்.

பரம்பரைக் கலங்கள் இதரவகை கலங்களாக பிரியக்கூடியவை. இதில் மிக முக்கியமான பரம்பரைக் கலம் விரைவான மாற்றத்திற்கு உள்ளாகின்ற கருவிலிருக்கும் பரம்பரைக் கலமாகும். முதல் கட்டங்களில் ஒரு கருவில் காணப்படுகின்ற இந்த கலங்கள் பின்னர் மனித உடலின் உள்ள அனைத்து கலங்களாக அபிவிருத்தியடைகின்றன.

இதர, மாற்றியமைத்துக்கொள்ள முடியாத பரம்பரைக் கலங்களும் வயதான மனிதரிடம் காணப்படுகின்றன. அத்தகைய பரம்பரைக் கலங்கள் எலும்பின் மச்சைப்பகுதியிலும் காணப்படுகின்றன, அவை ஒரு தனி மனிதனது வாழ்நாள் முழுவதிலும் பல்வேறு வகைப்பட்ட இரத்த கலங்களை தொடர்ந்து உற்பத்தி செய்கின்றது.

பல விஞ்ஞான நிபுணர்கள் நம்புவது என்னவென்றால், பரம்பரைக் கலங்களை குறிப்பாக கருவில் காணப்படும் பரம்பரைக் கலங்களை இழந்துவிட்ட அல்லது குறைபாடுள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டவும் அல்லது உதாரணமாக நினைவாற்றல் குறைவு நோய் (Alzheimer) அல்லது நீரிழிவு நோயாளிகளிடம் இன்சுலின் தயாரிக்கும் கலங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும். பரம்பரைக் கல சிகிச்சை தொழில்நுட்பம் முழுமையாக வளர்ச்சியடையுமானால், மருத்துவ அறிவியல் துறையில் உண்மையிலேயே புரட்சிகரமான விளைபயன்கள் ஏற்படும்

எனவே பரம்பரைக் கல ஆராய்ச்சி கிறிஸ்தவ அடிப்படைவாத வலதுசாரிகளால் கடுமையாக எதிர்க்கப்படுவதில் எந்தவிதமான வியப்பிற்கும் இடமில்லை, அவர்கள் நவீன விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் முற்போக்கான அனைத்தையும் தமது நோக்கத்திற்காக கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். "உருவாகிக் கொண்டிருக்கும் மனிதவாழ்வை தற்போது அழித்துக்கொண்டிருப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஊக்குவிப்புக்களை உருவாக்குகின்ற ஒரு நெருக்கடியான தார்மீக வழிக்கு இந்த மசோதா நம்மை இட்டுச்செல்லும்" என்று அன்று கீழ்சபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு பற்றி புஷ் அறிவித்தார், செவ்வாயன்று அந்தச் சட்டத்தை இரத்து செய்யும் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார். ''அந்தக் கோட்டை மீறிச் செல்வது ஒரு மகத்தான தவறாகும்'' என்றும் அவர் தொடர்ந்து கூறினார். அதற்கு முன்னர், ''மனித வாழ்வை காப்பாற்றுவதற்கு வாழ்வை அழிக்கின்ற'' ஒரு அறிவியலை வளர்ப்பதற்கு மத்திய அரசாங்க நிதிகளை பயன்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார்.

அத்தகைய அறிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன, அப்பட்டமான கொத்தடிமை அமெரிக்க ஊடகங்கள் அல்லது அவரது ஜனநாயகக் கட்சி எதிரிகள் என்று காட்டிக்கொள்பவர்கள் இவற்றில் எந்தக் கேள்வியையும் ஜனாதிபதி முன் எழுப்பப்போவதில்லை.

எந்த ''தார்மீக எல்லைக் கோட்டை'' அமெரிக்க மக்கள் கடக்க கூடாது அல்லது கடக்க கூடும் என்று முடிவு செய்வதற்கு புஷ் யார்? எல்லாவற்றிற்கும்மேலாக, இந்த அரைகுறை படிப்பாளிக்கு பரம்பரைக் கல அறிவியல் மற்றும் பரம்பரைக் கல ஆராய்ச்சி பற்றி என்ன தெரியும்?

அத்தகைய ஒரு தனி மனிதர், மிக பிற்போக்கான வெறிகொண்ட வகைப்பாடுள்ள மதக்கருத்துக்களை, தனது சொந்த மதக்கருத்துக்களை, பொதுமக்கள் அனைவர்மீதும் திணிக்கக் கருதுவது ஜனநாயகத்தின் ஆணிவேரான தேவாலயங்களையும் - அரசையும் தனியாக பிரித்திருக்கும் ஜனநாயகக் கொள்கையை ஒரு அரசாங்கம் எவ்வளவு முழுமையாக துச்சமாக மதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

மனித வாழ்வின் அடிப்படை, என்றும் சாகா வரம்பெற்ற ஒரு ஆன்மாவை அடிப்படையாகக்கொண்டது என்ற மதக்கருத்தின் அடிப்படையில், பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு நிர்வாகத்தின் எதிர்ப்பின் முழு அடிப்படையும் அடங்கியிருக்கிறது. அத்தகையதொரு கருத்தை மக்கள்மீது திணிப்பதற்கு முயற்சிப்பது மற்றும் பொது கொள்கையின் அடிப்படையாக அதை ஆக்குவது ஆகியவை அரசினால் மதத்தை ஸ்தாபிக்கக்கூடாது என்று அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதலாவது சட்டதிருத்த தடை ஆணைக்கு அடிப்படையிலேயே எதிர்மாறானதாகும்.

ஜனாதிபதியை மிஞ்ச வேண்டும் என்று கருதிய கீழ்சபையின் பெரும்பான்மை தலைவரான Tom Delay அந்த சட்ட முன்வரைவின் மீது திங்களன்று நடைபெற்ற விவாதத்தின்போது, அந்த மசோதாவிற்கு வாக்களிப்பது, "வரி செலுத்துவோரின் டாலர்களை வாழ்கின்ற தனித்தன்மை கொண்ட மனிதஉயிர்களை மருத்துவசோதனை நோக்கங்களுக்காக சிதைப்பதற்கு பயன்படுத்துவதாக ஆகும்..... கருவில் உருவாகும் பரம்பரைக் கல ஆராய்ச்சி என்பது மனித உயிர்களை கொல்வதால் ஏற்படக்கூடிய எதிர்கால பயன்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது என்றுதான் அதைப்பற்றி சிறப்பாக சொல்ல முடியும்." என்று குறிப்பிட்டார்.

இது குறிப்பாக அப்பட்டமான உண்மையை புரட்டுவதாகும், இரத்த வெறி கொண்ட விஞ்ஞானிகள் சிறுகுழந்தைகளின் அங்கங்களை பிளக்கிறார்கள் என்ற உருவகங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

விஞ்ஞான ஆராய்ச்சிற்கு மத்திய அரசாங்க நிதி வழங்க அனுமதிக்கும் சட்ட முன்வரைவு இது என்று சொல்லும்போது உண்மையிலேயே என்ன சம்மந்தப்பட்டிருக்கிறது? ''கருவிலே'' உருவாவது என்ற சொல்லைப் பயன்படுத்தி மரபியல் ஆய்வுகளை குறிப்பிடுவதே ஓரளவிற்கு தவறானது, ஏனென்றால் அந்த வார்த்தைக்கு விஞ்ஞான அடிப்படையிலான விளக்கம் என்னவென்றால், கருத்தரித்து இரண்டு வாரங்களிலிருந்து ஏழு அல்லது எட்டு வாரங்களுக்கு பின்னர் உருவாகின்ற கருவைத்தான் அது குறிக்கும். கருத்தரித்த பின்னர் இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு உள்ளாக ஏதாவதொரு நேரத்தில் கருத்தரிப்பு நிலையங்களில் அந்த கருக்கள் அல்லது கரு ஏற்படுவதற்கு முந்திய பொருட்கள் உறையவைக்கப்படுகின்றன. இந்தப் புள்ளியில், அவற்றில் ஒரு சில கலங்களை தவிர வேறு எதுவும் இல்லை, கல பிரிவின் வெகுசில கட்டங்களைத்தான் அவை கடந்திருக்கின்றன. படித்த திரு.டேலே குறிப்பிடுகின்ற "தனித்தன்மை மிக்க மனித உயிர்கள்" அப்படிப்பட்டவையே!

பல்வேறு காரணங்களால் வழக்கமான பாலியல் உறவுகளால் பிள்ளைகளை பெறமுடியாத சங்கடத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான ஜோடிகள் ஒவ்வொரு ஆண்டும் செயற்கை கருத்தரிப்பு முறைகளை பயன்படுத்திவருகிறார்கள். இதில் பயன்படுத்தப்படுகின்ற நடைமுறை என்னவென்றால், அந்த பெண்ணிடமிருந்து பல கருமுட்டைகளை எடுத்து ஆணின் விந்துடன் வெளியில்வைத்து சேர்த்து அவற்றை கருத்தரிக்க வைக்கிறார்கள். இப்படி கருத்தரித்த பல கருக்கள் பெண்ணிற்குள் மீண்டும் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது, அவற்றில் ஒன்றாவது வெற்றிகரமான கருவாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பில்தான் இப்படி செலுத்தப்படுகின்றது. அநேகமாக கூடுதலான கருக்கள் உருவாகும்போது அவை விஞ்ஞான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படுகின்றன, பின்னர் பயன்படுத்துவதற்கு உறைய வைக்கப்படுகின்றன, அல்லது கழிவுப்பொருள் என்று தள்ளப்படுகின்றன.

அத்தகைய கருக்கள் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் கைவிடப்படுகின்றன, இப்படி ''கைவிடப்பட்ட'' உறையவைக்கப்பட்ட கருக்களின் அளவு 1,00,000 என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் பலவற்றிலிருந்து அல்லது எல்லாக் கருக்களில் இருந்தும் பரம்பரைக் கலங்களை எடுக்க முடியும், அதற்கு பின்னர் அவற்றை, பரம்பரைக் கல ஊட்டிகளாக (stem cell lines) மாற்ற முடியும், அதாவது, தன்னைத்தானே மும்மடங்காக வளர்த்துக்கொள்ளும் கலங்ளாக மாற்றுவது மற்றும் விஞ்ஞான ஆய்விற்காக காலவரையற்று பயன்படுத்த முடியும்.

2001ல் புஷ் நிர்வாகம் ஒப்புதல் அளித்த சிறிய எண்ணிக்கையிலான பரம்பரைக் கல ஊட்டிகளுக்கான ஒப்புதலில் பெரும்பகுதி தரம்தாழ்ந்ததாகவும் அல்லது விலங்குகளால் கெட்டுப்போனதாகவும் இருந்ததால், மத்திய அரசு நிதியளிக்கும் தண்டுகல ஆய்வு தேங்கிவிட்டது. மத்திய அரசு நிதி வழங்குவது பெரும்பகுதி வளங்கள் புதிய விஞ்ஞான ஆய்விற்காக வழங்கப்படுகின்றன, எனவே அமெரிக்காவில் பரம்பரைக்கல ஆராய்ச்சி கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பரம்பரைக் கல தொழில்நுட்பத்தில் ஒரு புதிய முன்னேற்றம்

அமெரிக்க கீழ்சபையில் இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே தென்கொரியா ஆராய்ச்சியாளர்கள் மரபியல் உயிரணு மாற்ற அறிவியலில் - மருத்துவரீதியிலான செயற்கை மனிதனை உருவாக்கும் Somatic Cell மாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான கண்டுபிடிப்பை செய்திருப்பதாக அறிவித்தனர். Seoul தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த Woo Suk Hwang தலைமையிலான ஆராய்ச்சிக் குழு Science சஞ்சிகையின் மிக அண்மை வெளியீட்டில் ஒன்பது பல்வேறு நோயாளிகளின் மரபணுக்களுக்கு (DNA) இணையான பரம்பரைக் கல ஊட்டிகளை உருவாக்கி இருப்பதாக அறிவித்தனர்.

மிகப்புதுமையாக இந்தக் குழுவினர் உருவாக்கியிருக்கிற ஆராய்ச்சி நடைமுறை என்னவென்றால், ஒரு பெண் நன்கொடையாளரிடமிருந்து எடுக்கப்படுகின்ற ஒரு கரு முட்டை கலத்திலிருந்து எடுக்கப்படும் கலத்தின் அணுவை (அதில் கலத்தின் மிகப்பெரும்பாலான மரபணுக்கள் உள்ளன) ஒரு நோயாளியின் மற்றொரு (சோமாட்டிக்) கலத்தில் இருந்து எடுக்கப்படும் கருவின் மூலப்பகுதியுள் சேர்க்கிறார்கள். அதற்குப்பின்னர் கருமுட்டை கலங்களின் பிரிவின் ஆரம்பகட்டங்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது, அது எதுவரை என்றால், கருத்தரித்து சுமார் 5 நாட்கள் வரை Blostocyst (முதிரா நிலையிலுள்ள கலக்கூட்டம்) என்ற கட்டம் உருவாகும் வரை அனுமதிக்கப்படுகிறது, அப்போது ஏறத்தாழ 150 கலங்கள் உருவாகிவிடுகின்றன. Blastocyst கட்டத்தில் வளர்ச்சியடையாத தண்டு கலங்கள் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பிரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது, அதன் மூலம் புதிய பரம்பரைக் கல ஊட்டிகள் உருவாகிறது.

இந்த அணு மாற்ற தொழில் நுட்பம் எந்த ஒரு குறிப்பிட்ட நோயாளியின் மரபணுக்கும் இணையான புதிய கரு பரம்பரைக் கல ஊட்டிகளை உற்பத்தி செய்துவிட முடியும் என்ற சாத்தியக்கூறை உருவாக்கியுள்ளது. கலத்தை ஒரு நோயாளி உடலில் சிறு நோய்களுக்காக செலுத்தப்படும்போது ஒன்று கலங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுவதை அதி பாரியளவில் குறைத்துவிடும். இதன் மூலம் பரம்பரைக்கல தொழில்நுட்பத்தில் உள்ள பிரதான தடைகளில் ஒன்றை தாண்டிவிடலாம்.

கொரியா அறிவியல் நிபுணர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அவர்கள் உருவாக்கும் கலங்கள் நோயாளியின் சொந்த கலங்களில் அதே வெளிப்புற தன்மைகளை கொண்டவை. அதாவது, அவை அந்நியமான கலங்ககள் என்றும் நோயாளியின் நோய்தடுப்பு முறை கண்டுபிடிக்க இயலாத அளவிற்கு அவர்கள் கலங்களைத் தயாரித்து கொண்டிருக்கிறார்கள் இதன்பொருளாகும்

இதுதான் அணு மாற்றம் (nuclear transfer) என்கின்ற முறையினால் முதலாவதாக விளக்கிக்காட்டப்பட்டுள்ள நடைமுறையில் வளர்க்கப்பட்ட பரம்பரைக்கல ஊட்டிகளாகும். பதினைந்து மாதங்களுக்கு முன்னர், இதே குழு இந்த நுட்பமுறையை பயன்படுத்தி முதலாவது பரம்பரைக்கல ஊட்டிகளை பிரித்தெடுத்தது. என்றாலும் இந்தக் குழு ஒரு கரு முட்டையையும், மற்றொரு கலத்தையும் ஒரு தனி இளம்பெண்ணிடமிருந்து எடுத்து இந்த நுட்ப நடைமுறையை பயன்படுத்தியது, பொதுவான நோயாளிகள் பலருக்கும் இதே நடைமுறை சாத்தியமாகாது என்ற ஊகங்கள் இதன்மூலம் தூண்டிவிடப்பட்டன.

இந்த புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், 2 முதல் 56 வயது வரையிலான பெண் மற்றும் ஆண்கள் உட்பட 11 நோயாளிகளை பயன்படுத்தினர். இவர்களில் ஒன்பது பேர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக பரம்பரைக்கல ஊட்டிகளை உருவாக்க முடிந்தது.

ஆராய்ச்சியாளர்கள் புதிய பரம்பரைக்கலங்கள் பல்வேறு கலங்களாக உடலில் வளர்க்க முடியும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளனர். இதன் மூலம் செயற்கையாக நினைவாற்றல் குறைவு நோயுள்ளவர்களுக்கு இருப்பது போன்ற மரபணுவில் கலந்திருக்கும் நரம்புக்கலங்களை போன்று தயாரித்துவிட முடியும்.

இந்த தொழில்நுட்ப ஆய்வு எதிர்காலத்தில் எல்லையற்ற பயன்பாட்டு வாய்ப்புகளை கொண்டது. இதில் உள்ள புரட்சிகரமான ஆராய்ச்சி என்னவென்றால் நோய்களை குணப்படுத்தும் புதிய முறை சம்மந்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நோய் அறிகுறிக்கு அல்லது அதனை அடுத்த காரணங்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பதிலாக (எடுத்துக்காட்டாக, நீரழிவு குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி அளிக்கப்படும்) ஒரு நோய்க்கான அடிப்படை காரணிக்கு சிகிச்சை அளிப்பதாகும். (எடுத்துக்காட்டாக, இன்சுலினை தயாரிக்கும் கலங்களை மீண்டும் உருவாக்கலாம் அல்லது கணயச்சுரப்பியை (pancreas) நோயாளியில் மாற்றீடு செய்யலாம்) அதேபோல் மற்றொரு சாத்தியமான பிரயோகங்களும் உள்ளன, பரம்பரைக்கல தொழில் நுட்பத்தை பயன்படுத்தி Chemotherapy சிகிச்சை மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற நோய்தடுப்பு (immune system) பாதிப்பை குணப்படுத்திவிட முடியும் என நம்பப்படுகின்றது.

இந்த ஆய்வின்மூலம் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை பயன்கள் தவிர கரு எவ்வாறு வளர்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின்மூலம் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும். மற்ற பயன்களை தவிர, பல்வேறு வகையான நோய்கள் தாக்குவதையும் கண்டுபிடித்துவிட முடியும்.

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புஷ் வழக்கமான அறியாமையுடன் கருத்து தெரிவித்திருக்கிறார், "செயற்கை மனிதர்கள் (cloning) பற்றி நான் பெரிதும் கவலையடைந்திருக்கிறேன். செயற்கை மனிதனை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ளும் ஒரு உலகைப்பற்றி நான் கவலைப்படுகிறேன" என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை மருத்துவ அறிவியல் சிகிச்சை செயற்கை மனிதன் உருவாக்கும் ஆய்வை குழப்புவதை நோக்கமாக கொண்டது. மரபியல் அணு அடிப்படையில் ஒரே மாதிரியான மனிதர்களை உருவாக்கும் ஆய்வோடு இதை இணைத்து குழப்பி இருக்கிறார்கள். ஜனாதிபதியின் Council on Bioethics தலைவரான Leon Kass கருச்சிதைவு உரிமைகளை எதிர்த்து வருபவர். அவர் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவ விஞ்ஞான ஆய்வு முன்னேற்றம் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, மருத்துவ சிகிச்சை முறையிலான கலங்களை உருவாக்கும் (therapeutic cloning) ஆய்வுகளுக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Top of page