World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Fortune Global Forum celebrates corporate profiteering in China

சீனாவில் பெருநிறுவன கொள்ளை லாபத்தை போட்யூன் பூகோள அரங்கு கொண்டாடுகிறது

By John Chan
25 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

நியூயோர்க்கிலிருந்து வெளியிடப்படும் போட்யூன் (Fortune) வர்த்தகப் பத்திரிக்கை, ஒன்பதாவது ''போட்யூன் பூகோள அரங்கை'' மே 16 ல் பெய்ஜிங்கில் கொண்டாடியுள்ளது. அதில் பூகோள பெருநிறுவனங்களின் வர்த்தகத் தலைவர்கள் அரசாங்க தலைமை அதிகாரிகள் உட்பட 800 பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நூற்றுக்கணக்கான CEO- கள் (Chief Executive Officers) கலந்து கொண்டதானது, பூகோள முதலீடுகள் எந்த அளவிற்கு சீனாவை ஒரு முக்கிய உற்பத்தி தளமாகவும், மலிவு தொழிலாளர்களுக்கான வளமாகவும் கருதுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் கொண்டாட்ட தத்துவம் "சீனாவும் புதிய ஆசிய நூற்றாண்டும்" என்பதாகும். இதில், சீனாவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி, எரிபொருள் திட்டங்கள், முதலீட்டு சந்தைகள் மற்றும் மூன்றாவது தலைமுறை (3G) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேலும் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

போட்யூன் பத்திரிகையின் மூத்த ஆசிரியரான டேவிட் கிர்க் பாற்றிக் "நமது பத்திரிகை பணியாற்றிக் கொண்டுள்ள நிறுவனங்களில் மிகப்பெரும்பாலானவை ஒவ்வொரு நாளும் சீனாவில் மேலும் மேலும் அக்கறை செலுத்தி வருகின்றன. இதற்கு காரணம், இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததைவிட உலக பொருளாதாரத்திற்குள் சீனா மேலும் அதிகமாக ஒருங்கிணைந்து வருகிறது என்பதுதான் அதன் கருத்து என்று நான் கருதுகிறேன். அதன் விளைவாக, நாம் மாறிக்கொண்டு வரும் சீனாவை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படியே போட்யூனில் உள்ள 500 CEO- க்களும் செய்கிறார்கள்" என்று அறிவித்தார்.

பெய்ஜிங்கிற்கு ஒரு டசினுக்கு மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள், உலகின் மிக செல்வாக்கு படைத்த முதலாளித்துவவாதிகள் சிலரை ஏற்றி கொண்டு வந்தது. அவர்களது உற்சாகத்தை Time Warner CEO Richard Parsons சுருக்கமாக எடுத்துரைத்தார்: "இந்த அரங்கின் கூட்டம் நடத்துவதற்கு பெய்ஜிங்கை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மற்றும் அதை உலக வர்த்தக வட்டாரத்தின் கவன ஈர்ப்பு புள்ளியாக ஆக்குவோம்" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தக சபைத் தலைவரான தோமஸ் டொனகு (Thomas Donohue) "பொதுவாக இங்குள்ள அமெரிக்க கம்பெனிகள் வர்த்தகம் செய்வதில் மிகவும் மனநிறைவு அடைந்துள்ளன" என்று கருத்து தெரிவித்தார். அமெரிக்க முதலீட்டு நிறுவனமான Merrill Lynch, WalMart, பிரிட்டனின் தகவல் தொடர்பு பெருநிறுவனமான WPP, ஜெனரல் மோட்டார்ஸ், ஜெனரல் எலக்டிரிக்ஸ், சோனி, BMW, செல், மற்றும் போட்யூன் பூகோள 500 பட்டியலில் இடம் பெற்றுள்ள உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் தங்களது CEO-கள் அல்லது இதர மூத்த நிர்வாகிகளை இந்த அரங்கிற்கு அனுப்பியிருந்தன.

இந்த மூன்றுநாள் மாநாட்டிற்கு பிரிட்டன் நடத்தும் ஹாங்காங் மற்றும் ஷங்காய் வங்கிக் கழகமும் (HSBC) அமெரிக்காவிலிருந்து செயல்படும் Oracle கழகமும் தலா 500,000 அமெரிக்க டாலர்களை செலவிட்டன. Yahoo மற்றும் சீன நிறுவனங்களான Mission Hills Goly Club மற்றும் Sinopec, சீனாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனம் ஆகியன தலா 100,000 டாலர்கள் இதற்கு நன்கொடையளித்தன. இந்த அரங்கிலிருந்து போட்யூன் பத்திரிக்கை 3.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இலாப விகிதங்கள் ஈட்டும் திறனுக்கு தீவிரமான அழுத்தங்கள் தோன்றியதை ஈடுகட்டும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாடுகடந்த நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தங்களது நிறுவன நடவடிக்கைகளை பூகோள அளவில் மலிவு தொழிலாளர்கள் மற்றும் உயர்ந்த இலாபம் தருகின்ற பகுதிகளுக்கு மாற்றிக்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, ஒரு காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் விளிம்புநிலை முக்கியத்துவம் பெற்றிருந்த பல அபிவிருத்தி குறைந்த நாடுகள், இன்று பூகோள உற்பத்தியின் முக்கிய அரங்குகளாக மாறிவிட்டன.

இந்த நிகழ்ச்சிபோக்கின் மையமாக சீனா உள்ளது. தேசிய அளவில் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு தனி அதிகாரத்துவ பொருளாதாரமாக 1980 கள் வரை விவசாயத்தால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டு வந்த ஒரு பொருளாதாரம், தற்போது பல விமர்சகர்கள் கூறுவதைப்போல் இந்த நாடு ''உலகின் தொழிற்பட்டறையாக'' மாறிவிட்டது. 2004 வாக்கில் சீனா 550 பில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க டாலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடாக (foreign direct investment -FDI) திரட்டியுள்ளது. சீனாவின் எல்லா இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்கள் பங்களிப்புச் செய்கின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய நுகர்வோரைக் கொண்டுள்ள எலக்ட்டிரானிக்ஸ் நிறுவனமான ரோயல் பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ், எடுத்துக்காட்டாக, சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையில் சீனாவை தளமாகக் கொண்ட தனது தொழிற்சாலைகள் 2004 ல் தங்களது விற்பனையை 20 சதவீதம் உயர்த்தி 9 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகத்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் அனைத்து விற்பனையிலும் 60 சதவீதம் ஏற்றுமதிகளாக இருந்தன. இந்த நிறுவனம் சீனாவில் 3.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

அமெரிக்காவின் சில்லரை விற்பனை பெருநிறுவனமான Walmart ற்கு சீனாவின் 5000 நிறுவனங்கள் சென்ற ஆண்டு சப்ளை செய்தன. அமெரிக்காவின் மொத்த இறக்குமதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அல்லது இது 18 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களாகும். இவற்றில் பெரும்பாலான விநியோகத்தை சீனா நடத்தினாலும் அல்லது வெளிநாட்டவர் நடத்தினாலும் அவை உடல் உழைப்பு தொழிலாளர்கள் தயாரித்த காலனிகள், பொம்மைகள், ஆடைகள், வீட்டு பயன்பாட்டு கருவிகள் அல்லது நுகர்வோர் எலக்டிரானிக் பொருட்கள் ஆகும். வால்மார்டிற்கு சீனாவில் 45 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும் பல திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்த நிறுவனத்தின் CEO ஆன John Menze இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெய்ஜிங்கில் புதிதாக விற்பனை வளாகத்தை துவக்கி வைக்கும் விழாவில் கலந்து கொண்டார்.

Eastman Kodak ன் CEO வான Antonio Perez நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, நிறுவனத்தில் பிலிம்களுக்கான இரண்டாவது பெரிய சந்தை சீனா என்று குறிப்பிட்டார். சீனாவின் புகைப்பட பிலிம் மற்றும் இதர தொடர்புடைய பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்துறையில் கொடாக் 50 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், சீனாவில் 95 சதவீத டிஜிட்டல் காமிராக்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. சியாமென் சிறப்பு பொருளாதார வளாகத்திலுள்ள (Xiamen Special Economic Zone) அதன் திரைப்படச் சுருள் தொழிற்சாலை ஆசியாவிலேயே மிகப் பெரியது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, ஈஸ்ட்மேன் கொடக் 7,000 திற்கு மேற்பட்ட போட்டோ ஷாப்களை பாரியளவு நெட்வொர்க்காக துவங்கியுள்ளது. அதில் சீனா முழுவதிலும் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஐரோப்பாவை தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காகித உற்பத்தி நிறுவனமான UPM-Kymmene ன் CEO ஆன Jussi Posonen இந்த மாநாட்டில் பேசும்போது, எப்படி சீனா இந்த நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் ஆசிய பசிபிக் பிராந்திய விற்பனை அரங்காக மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். காகிதங்கள் மற்றும் அலுவலக அச்சுப்பொருட்கள் தேவை அதிகரிப்பதை சமாளிப்பதற்காக சீனாவில் இந்த நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. அதன் புதிய Changshu காகித தொழிற்சாலை, தனது ஆண்டு உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கி 800,000 டன்கள் அலுவலக மற்றும் Coated காகிதங்களை தயாரிக்கிறது------இந்த நிறுவனம் சீனாவிலேயே மிகப்பெரிய காகித நிறுவனமாகும்.

எப்படி ஒரு வீழ்ந்து கொண்டு வருகின்ற நிறுவனம் தனது அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கு சீனாவில் நுழைகிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமாகும். அதன் CEO ஆன Richard Wagoner இந்த மாநாட்டில் வெளியிட்ட விமர்சனத்தில், சீனா தற்போது அமெரிக்க கார் கம்பெனியின் இரண்டாவது பெரிய சந்தை என்று குறிப்பிட்டார். சென்ற ஆண்டு இந்த நிறுவனத்தின் அரை மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விளைவாக சீனாவில் இந்த நிறுவனம் 417 மில்லியன் டாலர்களை இலாபமாக சம்பாதித்தது---- அது இலாபம் ஈட்டும் வெகுசில இடங்களில் இதுவும் ஒன்று. அண்மையில் GM நிறுவனத்தின் கடன் பத்திரங்களின் தரத்தை மிக குறைவாக தர நிர்ணய நிறுவனம் மதிப்பிட்டிருந்தாலும், 2007 வாக்கில் சீனாவில் 1.3 மில்லியன் கார்களை தயாரிக்கின்ற அளவிற்கு உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவதற்கு மேலும் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

"நீங்கள் வாருங்கள், நீங்கள் லாபமடையுங்கள், நாம் அனைவரும் வளமடைவோம்"

சீனாவின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை குறித்து கவலை தெரிவிக்கும் குரல்கள் மாநாட்டில் வெளிப்பட்டாலும், அதில் பிரதான உணர்வு சீன முதலாளித்துவத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்ட உற்சாகமும் மற்றும் உலகின் பிரதான பெருநிறுவனங்களுக்கும், சீன ஆட்சிக்கும் இடையே நிலவுகின்ற நெருக்கமான உறவும்தான் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

1949, சீனப் புரட்சியின் சின்னமாக விளங்கிய பெய்ஜிங்கின் மக்கள் மகா மண்டபத்தில் பூகோள முதலாளித்துவ தலைவர்களை, சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ அன்பான முறையில் வரவேற்றார். ''கம்யூனிச'' ஆட்சி என்று அழைக்கப்படுவதன் அப்பட்டமான வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுத்தன்மை, அந்தக் கூட்டத்தின் முழக்கத்தில் வெளிப்பட்டது; "நீங்கள் வாருங்கள், நீங்கள் லாபமடையுங்கள், நாம் அனைவரும் வளமடைவோம்."

"உங்களில் பலரும் நீங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களும் பல ஆண்டுகளாக சீனாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலியுறுத்தி வருகின்றீர்கள். மற்றும் சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் சில தொழில்களில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளீர்கள். அத்தகைய ஒத்துழைப்பானது, நமது பரஸ்பர நலன்களுக்கு பயன்படுகின்றன என்ற உண்மையை நிரூபித்துள்ளன" என அவர் அறிவித்தார்.

1980 களில் காலஞ்சென்ற சீனத் தலைவரான டெங் சியோவோ பிங் வகுத்தளித்த ''பணக்காரர் ஆவது பெருமைக்குரியது'' என்ற முழக்கத்தை எதிரொலிக்கின்ற ஹூ ஜிந்தாவோவின் உரை மீண்டும் ஒருமுறை பெய்ஜிங்கிலுள்ள ஸ்ராலினிச ஆட்சி சோசலிசத்தோடு எந்த வகையிலும் சம்மந்தமில்லாதது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இயந்திரம் ஒரு புதிய சீன முதலாளித்துவ செல்வந்தத்தட்டை ஈன்றெடுத்துள்ளது. ----அவை கூட்டுத்தொழில் செய்வோர், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள்----- இவர்கள் பெரும்பாலும் நாடுகடந்த நிறுவனங்களுக்கு இடைத்தரகர்களாக பணியாற்றுகின்றனர்.

சீனாவிற்கு சொந்த பெருநிறுவன பலம் சொற்பமானது. பெரும்பாலும் அரசிற்கு சொந்தமான ஏகபோக நிறுவனங்களான 16 சீன நிறுவனங்கள் மட்டுமே சென்ற ஆண்டு போட்யூனின் பூகோள-500 பட்டியலில் இடம்பெறும் தகுதியைப் பெற்றன. ''சீனா 500'' என்றழைக்கப்படும் --- மிகப்பெரிய சீனாவை அடித்தளமாக கொண்டு இயங்குகின்ற நிறுவனங்களின்--- சொத்து பூகோள-500 மதிப்பில் 5.61 சதவீதம்தான். அவற்றின் இலாபங்கள் 5.22 சதவீதம் மற்றும் வருவாய் 7.3 சதவீதம் ஆகும்.

இவற்றின் விளைவாக, சீன பொருளாதாரத்தின் விரிவாக்கம் மற்றும் சீனத் தொழில்கள் தொடர்ந்து வளர்வது என்பது, குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளைப் போன்று தொடர்ந்து பாரியளவு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வருவதில் முற்று முழுதாக தங்கியுள்ளது. அரசியல் ரீதியாக, சீனா உலக முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமாக அமைந்திருப்பது ஸ்ராலினிச ஆட்சி சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும், கிராமப்புற ஏழைகள் மீதும் கொடூரமான போலீஸ்-அரசு ஒடுக்குமுறையை உறுதிசெய்து தருவதிலும், அள்ளக் குறையாத மலிவான அடங்கி நடக்கின்ற தொழிலாளர்களை சப்ளை செய்வதையும் பொறுத்தே அமைந்திருக்கிறது.

"இந்த முதலாளித்துவ-கம்யூனிச அன்பு பாராட்டும் விழாவிற்கு மிக தெளிவான விளக்கம் என்னவென்றால், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி கடைப்பிடிக்கின்ற கொள்கைகள் பல கட்சி ஜனநாயகத்தைவிட அதிக தொய்வின்றியும் குறைந்த நிலைத்தன்மை கொண்டதாகவும் அமைந்திருப்பதுதான்..... சீனாவின் அரசாங்கம் -------அதன் வெளிநாட்டு முதலீடுகளுக்கான உறுதிப்பாட்டை தெரிவித்திருப்பது----- பெரும்பாலான மேற்கு நாடுகளின் CEO-கள் சந்திக்கின்ற, தங்கள் சொந்த நாடுகளில் சந்திக்கின்ற வர்த்தக தன்மைக்கு அப்பாற்பட்டது போன்று காணப்படுகிறது. பெருநிறுவனங்களும் ஒரு கட்சி அமைப்புக்கள் தான்" என்று போட்யூன் பத்திரிக்கை கருத்து தெரிவிக்கிறது.

1989 ல் பெய்ஜிங் தியானென்மென் சதுக்கத்தில் தொழிலாளர்களும் இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முதலைக் கண்ணீர் வடித்த மேற்கு நாடுகளின் தலைவர்களும் ஊடகங்களும், அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை "சர்வாதிகாரத்தின் மீது ஜனநாயகம் பெற்ற ஒரு வெற்றி" என்று போற்றிப் புகழ்ந்தன. என்றாலும் 1989 ல் நடைபெற்ற ஒடுக்குமுறை அதன் சந்தை ஆதரவு கொள்கைகளின் தாக்கங்களுக்கு எதிரான எந்த பாதிப்பையும் நசுக்குவதற்கு பெய்ஜிங் தயாராக உள்ளது என்பதை காட்டுகின்ற அடையாளம்தான் என்பதை பெரு நிறுவன செல்வந்தத்தட்டினர் புரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே,1992 லிருந்து சீனா வளர்ந்துவரும் உலகில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) மிகப்பெருமளவில் ஈர்க்கின்ற நாடாக ஆயிற்று.

சீன ஆட்சியின் "ஒரு கட்சி அரசிற்கு" மனப்பூர்வமான பாராட்டு தெரிவிக்கப்பட்டதானது, பெரு நிறுவன வட்டாரங்களில் நிலவுகின்ற ஒரு உணர்வை எதிரொலிப்பதாக இருந்தது. அது என்னவென்றால் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் ஆழமாகிக் கொண்டுவரும் சமூக துருவமுனைப்பை எதிர்கொள்கின்ற வகையில் சந்தை ஆதரவுக் கொள்கைகளை எதிர்ப்புகளுக்கிடையே படுவேகமாக நிறைவேற்றுவதற்கு ஜனநாயகத்திற்கு எதிரான நடைமுறைகள் தேவை என்பதாகும். "அசையாத்தன்மை" என்று போட்யூன் தெரிவிப்பது, உழைக்கும் மக்களின் வாழ்கைத்தரம் தொடர்ந்து வீழ்ந்து வருவதற்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், அதை பெருவர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு துச்சமாக மதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

1998 முதல் சீன ஆட்சி 27 மில்லியன் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி, அரசிற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூடிவிட்டது. அலையலையாக எழுந்த கண்டனப் பேரணிகளை, தொழிலாளர் வர்க்க சமூகங்களை ஒடுக்குவதற்கு போலீஸாரும் இணை இராணுவப் படைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆகவே, இது போன்ற முறைகள் மற்ற நாடுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போட்யூன் பத்திரிக்கை விரும்புகிறது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த பரஸ்பர பாராட்டுகளுக்கு இடையில், அதிக தொலைநோக்குள்ள பொருளாதர நிபுணர்கள் சீனாவில் பாரியளவு முரண்பாடுகளும் சமூக பதட்டங்களும் உருவாகி வருகின்றன என்று எச்சரித்துள்ளனர்.

Morgan Stanly நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆய்வாளரான ஸ்டீபன் ரோச், இந்த நிறுவனத்தின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொண்டு "எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்திரத்தன்மைக்கு'' சீனா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். நாட்டின் முதலீட்டு நீர்குமிழி சிதறுவது தவிர்க்க முடியாததால், நாட்டில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி நிலைநாட்ட முடியாது. சீனப் பொருளாதாரம் ஏற்றுமதிகளை நம்பியிருக்கிறது, குறிப்பாக பெரிய பொருளாதாரமான அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் ''மிகுந்த ஸ்திரத்தன்மையில்லாதவை''. அமெரிக்காவில் ஒரு பொருளாதார மந்த நிலை ஏற்படுமானால் சீனாவில் அது மகத்தான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளி நெருக்குதல்களால், சீனா பொருளாதார மந்த நிலையில் விழும் ஆபத்தை சமாளிப்பதற்கு சில பொருளாதார நிபுணர்கள் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக உள்நாட்டில் நுகர்வுகளுக்கு மாற்றலாம் என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர். இருந்தபோதிலும் ''2004 ல் சீனாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சாதனை அளவாக 42 சதவீதம் வீடுகளில் நுகர்பொருள்கள் பயன்படுத்துவது வீழ்ச்சியடைந்து விட்டது. உலகின் எந்த பெரிய பொருளாதாரத்திலும் இவ்வளவு குறைந்த அளவிற்கு நுகர் பொருள்களுக்காக செலவிடப்படவில்லை என்று ஸ்டீபன் ரோச் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அளவிற்கு நுகர்பொருள்களுக்கான உள்நாட்டு செலவினம் குறைந்திருக்கிற உண்மை எடுத்துக்காட்டுவது என்னவென்றால், பெரும் எடுப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் சீன வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பயன்படவில்லை என்பதாகும். மாறாக, அரசிற்கு சொந்தமான பழைய தொழிற்சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதால் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். கிராமப் பகுதிகளில் சுதந்திர சந்தைக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டதால், பத்து மில்லியன் கணக்கான ஏழை விவசாயிகள் தங்களது சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டு நகரங்களிலும், மிகுந்த உயர்ந்த அளவிற்கு தொழிலாளர்கள் சுரண்டப்படும் சுதந்திர வர்த்தக வலையங்களிலும் வேலை தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியைவிட மிகக் குறைந்த அளவிற்கு அல்லது தேக்கநிலை அளவிற்கு கிராம்புற வருமானமும் சென்றுகொண்டிருந்த நேரத்தில், சாதாரண மக்கள் ஆழமாகிக் கொண்டுவரும் சமூக நெருக்கடியை சந்தித்தனர். அவர்களுக்கு உத்திரவாத வேலைகள், பொது சுகாதார சேவைகள், பொது வீடுகள் அல்லது கல்வி எதுவும் கிடைக்கவில்லை. இரவோடு இரவாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலாளிகள் ஊதியங்களை வழங்க மறுப்பது, அல்லது திடீரென்று வேலையை நீக்கிவிடுவது சர்வ சாதாரணமாக சீனாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி நிரந்தரமாக பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதால், சாதாரண உழைக்கும் மக்கள் திடீரென்று ஏற்படும் வேலையிழப்பு அல்லது குடும்பத்தினர் நோய் நொடிகளுக்கு உள்ளாவதற்கு, சேமிப்பது அதிக அளவிற்கு உள்ளது.

போட்யூனின் பூகோள அரங்கு கொண்டாடிய பொருளாதார நடைமுறைகள் என்பவற்றின் பொருள், நூற்றுக்கணக்கான மில்லியன் சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு படுமோசமான வேலை மற்றும் வாழ்க்கை தரத்தைத் தருகிறது என்பதாகும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான அதிகரித்துவரும் இடைவெளி, எங்கும் நிலவுகின்ற அதிகாரபூர்வமான ஊழல் ஆகிய அனைத்தும் நீக்கமற நிறைந்துள்ள அரசியல் ஒடுக்குமுறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Top of page