World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wall Street Journal alibis for Nazi-style crimes in Iraq

ஈராக்கில் நாசிப் பாணி குற்றங்களுக்கு காரணத்தை தேடும் வோல் ஸ்டீரிட் ஜேர்னல்

By Bill Van Auken
25 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

"நாஜிக்களை போன்று மோசமாக," என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வோல் ஸ்டீரிட் ஜேர்னல் திங்களன்று எழுதி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிராக ஒரு அவதூறு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள அதே நேரத்தில் ஈராக்கில் சட்ட விரோதமாக நடத்தப்படும் போரில் அமெரிக்க இராணுவம் புரிந்த குற்றங்களை மூடி மறைக்க முயன்று வருகிறது.

அந்த செய்திப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் வலதுசாரி எழுத்துக்கள், புஷ் நிர்வாகத்திற்குள் தற்போது நிலவும் கருத்துக்களை நெருக்கமாக எதிரொலிப்பவை. ஆத்திரமடைந்த செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் ஈராக்கிலுள்ள ஒரு காவல் முகாமான Camp Bucca இல் பணியாற்றுகின்ற அமெரிக்க ஊழியர்கள் நாஜிக்கள் கைதி முகாமில் பணியாற்றிய காவலர்களைப்போன்ற பாணியில் நடந்து கொள்வதாக கூறியதைத்தொடர்ந்து, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாக அது நாடகம் ஆடியுள்ளது.

என்றாலும், ஜேர்னலின் கோபத்திற்கான உண்மையான மூலாதாரம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) மே 19 அறிக்கையாகும். அதில் திரும்ப திரும்ப குவாண்டாநாமோ வளைகுடா சிறைமுகாமில் அமெரிக்க அதிகாரிகள் குரானை முறைகேடாக இழிவுபடுத்துவதாக புகார் கூறியிருந்தது, அது சுருக்கமாக இந்த மாதத் ஆரம்பத்தில் நியூஸ் வீக் வார இதழில் வெளியிடப்பட்டது.

குரான் தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிறந்த ஆவண ஆதாரங்களை கொண்டிருந்தாலும் புஷ் நிர்வாகம் அந்த செய்தியில் காணப்பட்ட ஒரு தொழில்நுட்ப தவறை சுரண்டிக்கொண்டு புஷ் நிர்வாகம் திட்டமிட்டு ஊடகங்களின் கற்பனை என்று கிளப்பிவிட்டுள்ள ஒரு பிரசாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் விவரம் அடங்கியுள்ளது. நியூஸ் வீக்கும் இதர வெகுஜன ஊடகங்களும் இந்த பிரச்சாரத்திற்கு அப்பட்டமாக பலியாகிவிட்டனர், அபுகிரைப்பில் தொடங்கி அமெரிக்கா புரிந்த குற்றங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் அம்பலத்திற்கு வந்திருப்பது அனைத்தும் ''பாரபட்சம்'' கொண்ட பத்திரிகைகளின் அவதூறான கண்டு பிடிப்பு என்ற நிர்வாகத்தின் வெற்றிக்கு அவை உதவியிருக்கின்றன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை, "நியூஸ்வீக் பிரசுரித்திருந்த உண்மைக்கு புறம்பான தகவலிலிருந்து முஸ்லீம் உலகில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிகட்டுவதற்கு அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகின்ற நேரத்தில்" வந்திருப்பதாக'' ஜேர்னல் புகார் கூறியுள்ளது.

இது அப்பட்டமான முட்டாள்தனமாகும். ''முஸ்லீம் உலகில் ஏற்பட்ட சேதம்'' நியூஸ்வீக்கின் இரண்டு பத்தி செய்தியால் வந்ததல்ல, ஆனால் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஈராக்கிலிருந்து குவாண்டநாமோ வரை புஷ் நிர்வாகம் நடத்தி வருகின்ற ஆக்கிரமிப்பு போர்கள், வெகுஜன கைதுகள் சித்திரவதை மற்றும் கொலையால் வந்ததாகும். அந்த வார இதழின் தகவலால் அந்த பிராந்தியம் முழுவதிலும் நிலவுகின்ற அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராக நிலவுகின்ற வெடித்துச் சிதறும் ஆத்திரமூட்டலுக்கு வெடிப்புப் பொறியாக பயன்பட்டிருக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை ஒரு ''கருத்தியல்'' போக்குடையது என்றும் ''எவ்வளவு நியாயமற்ற வகையில் அமைந்திருந்தது என்றாலும் அமெரிக்காவை சங்கடப்படுத்துவதை நோக்கமாக கொண்டது'' என்றும் ஜேர்னல் தலையங்கள் நோக்கம் கற்பிக்கிறது. இந்த பாரபட்சம் என்று குற்றம் சாட்டப்பட்டதற்கு ஆதார தகவல் எதையும் அந்தத் தலையங்கம் தரவில்லை.

என்றாலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையே தனது ஆய்வுகளில் கண்டுபிடிக்கும் தகவல்கள் குறித்த தனது வழமையான அமைதியை ஏன் கைவிட்டு குரான் பிரச்சனையில் கருத்து தெரிவிக்க நேர்ந்தது என்பதை நியாயமாக தெளிவுபடுத்தியுள்ளது.

"இதர அலைவரிசைகளில் இந்தச் செய்திகள் பகிரங்கமாக வெளிவந்துவிட்ட காரணத்தினாலும், அவற்றின் தாக்கம் ஆப்கானிஸ்தானிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருப்பதாலும் நாங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு இதை கொண்டு வந்தோம் என்று நாங்கள் அறிக்கை தருவதற்கு முடிவு செய்தோம் மற்றும் எங்களது பணிக்கு மதிப்பு உள்ளது", என்று அந்த அமைப்பின் பேச்சாளரான Simon Schorno சென்றவாரம் கூறினார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த பிராந்தியத்தில் தனது சொந்த நம்பகத்தன்மையை தற்காத்து நிற்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முயன்று வந்தது, அது அதை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. மற்றும் இந்த கொடூரமாக கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டதில் உடந்தையாக செயல்படவில்லை. வாஷிங்டனின் பிரசார மோசடியிலிருந்து அது துவங்கவில்லை, ஆனால் முஸ்லீம் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என நம்பும் குற்றங்களிலிருந்து அது ஆரம்பிக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வாஷிங்டனுடன் ஒரு எதிரெதிரான உறவை ஏன் கொண்டிருக்கிறது, என்பதற்கு சில மறைமுக கருத்தியல் செயல்திட்டத்தை ஜோர்னல் சொல்வதைப்போல் விளக்கம் அடங்கியிருக்கவில்லை. ஆனால் ஜெனீவா ஒப்பந்தம் உட்பட அந்த அமைப்பு செயல்படுவதற்கு அடிப்படையான ஒப்பந்தங்களையெல்லாம் தள்ளுபடி செய்கின்ற வகையில் அமெரிக்க அதிகாரிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை கையாண்டதில்தான் அடங்கியிருக்கிறது.

ஈராக்கிலும் பிற இடங்களிலும், இதனுடைய பொருள் என்னவென்றால், அமெரிக்கா நடத்துகின்ற சிறைச்சாலைகளில் செஞ்சிலுவைச் சங்க கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, மற்றும் "நிழல் கைதிகள்" என்றழைக்கப்படுபவர்களையும் தம்முள் மறைத்துவிடுகிறார்கள்.

வாஷிங்டனின் உலகரீதியான சிறை முகாம்கள் மற்றும் சித்திரவதை வலைபின்னல்களை நிறுவியவர்கள் பயன்படுத்துகின்ற தர்க்கத்தை எதிரொலிக்கிற வகையில் ஜேர்னல் இதற்கு முந்திய செஞ்சிலுவைச் சங்க அறிக்கையை ''அபத்தமானது'' என்று தள்ளுபடி செய்கிறது, சர்வதேச செஞ்சிலுவையின் முந்தைய அறிக்கையில் குவாண்டனநாமோ வளைகுடாவில் குற்றச்சாட்டின்றி காலவரையற்ற காவலில் வைக்கப்பட்டிருப்பது "சித்திரவதைக்கு சமமானது" என்று கூறியிருந்தது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குவாண்டநாமோ கைதிகளுக்கு போர்க்கைதி அந்தஸ்து தர வாஷிங்டன் மறுப்பது குறித்தும் புகார் கூறியிருப்பதை ஜேர்னல் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர், மேலும், "யுத்தக் கைதிகளுக்கு வெளிப்படையாக ஜெனீவா ஒப்பந்தம் ஒரு போர்காலத்தில் காலவரையற்ற காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நுட்பமான குற்றம் கண்டுபிடிக்கும் கட்டுரை அடிப்படையிலேயே அமெரிக்கா எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது மற்றும் தான் ஒரு ''பயங்கரவாதி'' என்று முத்திரை குத்தும் எவரையும் எதுவும் செய்யலாம் என்றும் வலியுறுத்துகிறது. அந்தப் பத்திரிக்கை குறிப்பிடுகின்ற ''மோதல்'' ------புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போர்''----- அது வெளிநாடுகளில் முடிவற்ற அமெரிக்க போர்களை நடத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காகும். புஷ்ஷும் மற்றவர்களும் இந்தப்போர் என்றழைக்கப்படுவது, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார், இதன் பொருள் என்னவென்றால், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான ஒரு துரும்பைக்கூட சான்றாக காட்டாமல் அவர்கள் வாழ்கிறவரை எவரையும் காவலில் வைத்திருக்க தனக்கு உரிமையுண்டு என்று அமெரிக்க நிர்வாகம் தனக்குத்தானே இறுமாப்போடு அறிவித்துக்கொள்கிறது.

நாஜி பற்றிய குறிப்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜேர்னல் தனக்குத்தானே குற்றம் கண்டுபிடித்துக்கொள்ளும் போக்கை பற்றி என்ன சொல்வது? இந்த தலையங்கத்தை எழுதியவர்களே ஒப்புக்கொண்டிருப்பதைப்போல், திங்களன்று வெளியிடப்படுகின்ற திட்டமிட்ட தலையங்கள் பற்றி இரகசிய தகவல் கசிந்துவிட்டது. வலைத்தளத்தில் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன, "சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை நாங்கள் களங்கப்படுத்தப் போகிறோம்" என அவர்கள் எழுதினார்கள்.

என்னதான் தலையங்கம் எழுதுபவர்கள் மறுத்தாலும் -----அதுதான் உண்மை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு குற்றச்சாட்டு ----- அது உண்மையோ அல்லது பொய்யோ----- யாரோ ஒருவர் அமெரிக்க சிறைமுகாம்களுக்குள் நடைபெற்றுக்கொண்டிருப்பது உண்மையிலேயே நாஜிக்களது நடவடிக்கைகள் போன்று அமைந்திருக்கிறது என்று ஒப்பிட்டுக் கூறியிருப்பதை எப்படி ஒரு அவதூறாக கருதமுடியும்?

அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்குமானால் அது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரியின் ஆத்திரம் மற்றும் விரக்தியின் வெளிப்பாட்டைக் காட்டும் ஒரு தருணத்தில் தவறி உதிர்ந்த வார்த்தைகள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, அந்த அதிகாரி அமெரிக்க இராணுவத்தினால் அச்சுறுத்தப்படாவிட்டாலும் தடுக்கப்பட்டிருக்கிறார். இந்த அதிகாரிகள் இராஜதந்திர கலையில் பயிற்சி தரப்பட்டவர்கள், நாஜி பாணி சித்திரவதை மற்றும் முறைகேடுகள் நடக்கும் இடங்களில் தாங்கள் செல்வதற்கு பாதகமாக அமைகின்ற அத்தகைய தெளிவான கருத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

Camp Baca முகாம், அவுஸ்விட்ச் அல்லது டிரிபிலிங்கா வுக்கு இணையானதல்ல என்பது தெளிவு, ஏனென்றால் நாஜிக்கள் அந்தப்பகுதிகளில் திட்டமிட்டு மில்லியன் கணக்கான மக்களை விஷவாயு அறைகளில் வைத்துக்கொன்றார்கள். ஆனால் ஒரு மறுக்க முடியாத தொடர்பு இரண்டு முறைகளுக்குமிடையே நிலவுகிறது, அந்த வரலாற்று குற்றங்களுக்கும் ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள அட்டூழியங்களுக்கு வகைசெய்துள்ள முறைகளுக்கும் இடையில் தொடர்பு உண்டு.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை ''அவதூறு'' செய்ய விருப்பமில்லை, என்று கூறுகின்ற ஜேர்னல் "நடுநிலையோடு நேர்மையான புலன்விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ள ஒரு அமைப்பின் ஒரு பிரதிநிதி எப்படி அமெரிக்க போர்வீரர்களை நாஜி SS இற்கு ஒப்பிட முடியும் என்று நாங்கள் புரிந்து கொள்ள முயன்றுகொண்டிருக்கிறோம்" என்று எழுதியிருக்கிறது.

Camp Bacca விலும் அபுகிரைப் சிறைச்சாலையிலும் மறுக்க முடியாத அளவிற்கு நடைபெற்ற முறைகேடுகளை மேஜர் ஜெனரல் Antonio Taguba தந்துள்ள அறிக்கையை அவர்கள் திரும்பப்படிக்கலாம். அபுகிரைப்பில் சித்திரவதை மற்றும் பாலியல் முறைகேடு பற்றி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பென்டகன் புலன் விசாரணை செய்து சேதக்கட்டுப்பாட்டு முயற்சியாக இந்த அறிக்கையை வெளியிடுவதைத்தவிர வேறு வழியில்லை. செய்தி மூலத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, ஈராக்கில் அமெரிக்க நடவடிக்கைகளின் ஒழுக்கச் சிதைவு ஆதிக்கம் செலுத்துவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Taguba பட்டியலிட்டுள்ள இராணுவப்போலீசாரின் வேண்டுமென்றே திட்டமிட்ட முறைகேடு நடவடிக்கை பட்டியல் பின்வருமாறு.

* குத்துவது, கன்னத்தில் அறைவது, பூட் காலால் உதைப்பது, அவர்களது வெறும் பாதங்களில் தாவித் தாவிக் குதிப்பது.

* நிர்வாணமாக ஆண் மற்றும் பெண் கைதிகளை புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ படம் எடுப்பது.

* கைதிகள் வெளிப்படையாக அவர்களது பாலியல் உறுப்புக்களை காட்டும் வகையில் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுப்பது.

* ஒரே முறையில் பல நாட்கள் கட்டாயப்படுத்தி கைதிகளை அவர்களது ஆடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக வைத்திருப்பது.

* பெண்களின் உள்ளாடைகளை அணியுமாறு நிர்வாணமான ஆண் கைதிகளை கட்டாயப்படுத்துவது.

* ஒரு குழுவாக ஆண்கைதிகளை கட்டாயப்படுத்தி சுய இன்பம் அனுபவிக்குமாறு செய்து புகைப்படமும் பின்னர் வீடியோ படமும் எடுப்பது.

* நிர்வாணமாக உள்ள ஆண் கைதிகள் ஒருவர் மீது ஒருவர் செங்குத்தாக உட்காரச் செய்து அவர்கள் மீது தாவிக் குதிப்பது.

* ஒரு நிர்வாண கைதி சாப்பிடுவதற்கு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அடங்கிய சிறிய பெட்டி மீது அமரச் செய்து அவர் தலையில் மணல் மூட்டையை ஏற்றி, அவர் கைவிரல்களிலும், கால்விரல்களிலும் ஆண் உறுப்புகளிலும் மின்சார வயர்களை செருகி மின்சார அதிர்ச்சி கொடுத்து சித்திரவதை செய்வது.

* "நான் ஒரு கற்பழிப்பவன்" ஒரு கைதியின் காலில் எழுதி 15 வயது கைதியை கட்டாயமாக உணரச் செய்து அதற்கு பின்னர், அந்தக் கைதியை நிர்வாணமாக புகைப்படம் எடுப்பது.

* கைதியை ஒரு நாய்ச்சங்கிலி அல்லது வாரால் கைதியின் கழுத்தைக்கட்டி ஒரு பெண் இராணுவத்தை அருகில் நிற்கச் செய்து படம் எடுப்பது.

* ஆண்காவலர் [இராணுவப்போலீஸ்] ஒரு பெண் கைதியோடு உடல் உறவு கொள்ளச் செய்வது.

* இராணுவ புலனாய்வு நாய்களை (சங்கிலியில்லாமல்) கைதிகளை மிரட்டவும் பயமுறுத்தவும் பயன்படுத்துவது, குறைந்தபட்சம் ஒரு வழக்கில் ஒரு கைதி நாய் கடித்ததால் கடுமையாக காயமடைந்தார்.

* இறந்த ஈராக் கைதியை படம் எடுப்பது.

இந்தச் செயல்களை மறுக்க முடியாது ஏனெனில், புகைப்பட அல்லது வீடியோ ஆதாரம் உள்ளது---- கைதிகள் வர்ணித்த இதர நடவடிக்கைகள் ''நம்பகத்தன்மை'' கொண்டவையாக அமைந்திருந்தன என்று அந்த ஜெனரல் கூறுகிறார். அந்த நடவடிக்கைகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளும் அடங்கும்.

* இரசாயன விளக்குகளை உடைத்து கைதிகள் மீது பாஸ்போரிக் திரவத்தை ஊற்றுவது.

* ரவைகள் பொருத்தப்பட்ட 9 மில்லிமீட்டர் துப்பாக்கிகளால் கைதிகளை அச்சுறுத்துவது.

* நிர்வாண கைதிகள் மீது குளிந்த நீரை உற்றுவது.

* நாற்காலி மற்றும் துடப்பக்கைப்பிடியால் கைதிகளை தாக்குவது.

* ஆண் கைதிகளை பாலியல் பலவந்தப்படுத்தப்போவதாக மிரட்டுவது.

* தனது அறை சுவற்றில் முட்டப்பட்டதால் காயமடைந்த ஒரு கைதியின் காயத்திற்கு இராணுவப் போலீஸ் காவலர் தையல்போட அனுமதிக்கப்பட்டார்.

* ஒரு கைதியை கெமிக்கல் விளக்கினாலும், துடப்பத்தினாலும் செருகி துன்புறுத்தப்பட்டார்.

அல்லது, ஜேர்னல் நாஜிக்களுக்கும் Camp Baca விற்கும் இடையில் ஒப்புநோக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகின்ற அளவிற்கு எகிப்தில் பிறந்து கனடா குடிமகனாகி நிரந்தரமாக அமெரிக்காவில் வாழ்கின்ற Hossam Shaltout இன் சாட்சியத்தை மீண்டும் ஆராய்ந்தது சிறப்பாக புரிந்து கொள்ளக்கூடும், அவர் 2003இல் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.

"அவர் Camp Bucca வை ஒரு ''சித்திரவதை முகாம்'' என்று வர்ணித்தார், அங்கு இராணுவத்தினர் கைதிகளை அடித்தார்கள் மற்றும் இழிவுபடுத்தினார்கள்-----அந்த நடவடிக்கைகளில் ஒருவர் மீது ஒருவர் செங்குத்தாக நிர்வாணமாக அமருவது அல்லது பாலியல் நிலைகளில் அமரவைக்கப்படுவது ஆகிய நடவடிக்கைகளும் அடங்கியிருந்தன." என்று Knight Ridder செய்தி நிறுவனம் தெரிவித்தது. Shaltout, இராணுவத்தினர் நிர்வாண கைதிகளை குழுக்களாக கட்டுவதைப் பார்த்தார். அவர்களது கைகளையும், கால்களையும் கட்டினார்கள் மற்றும் ஒருவரது உடலில் தேளை விட்டார்கள். 'அமெரிக்க படையினர் தேளை விரும்புவதாக கூறினர்' என்று Shaltout கூறினார்".

சென்ற ஆண்டு CBC இக்கு பேட்டியளித்த Shaltout "அவர்கள் ஈராக்கியருக்கு, வாயால் வர்ணிக்கவியலாத காரியங்களை செய்தார்கள்'', அவர்கள் விரும்பியது ஒப்புதல் வாக்குமூலங்கள். ஏராளமான மக்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்கு ஏதுவுமில்லை" என்று குறிப்பிட்டார்.

சென்ற பெப்ரவரியில் பாக்தாத்திலுள்ள முஸ்லீம் மதபோதகர்கள் குழு ஒன்று அமெரிக்க காவலர்கள் கைதிகளின் கால்களையும் விரல்களையும் நொருக்கியதையும் மற்றும் மணிக்கணக்கில் பெரிய குளிரூட்டப்பெட்டிக்குள் உட்கார கைதிகளை கட்டாயப்படுத்தியது உட்பட பயங்கரமான வடிவங்களில் கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது பற்றிய கடிதங்களை மேற்கோள் காட்டினார்.

அதற்கு பின்னர், வாஷிங்டன் போஸ்ட் டிசம்பரில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது, அது 23 வயது பாக்தாத் ஓட்டல் பணியாளர் அஹ்னத் நஜே துலாய்மி புலன் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு Camp Bucca விற்கு அனுப்பப்பட்ட அனுபவத்தை மேற்கோள்காட்டியிருந்தது. ஒரு அமெரிக்க ஆண் மற்றும் ஒரு பெண்ணையும் ஒரு குவைத் மொழிபெயர்ப்பாளரையும் எதிர் கொண்டார் "ஆண் படையினர் கத்திக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தவுடன் உடனடியாக அவர் தலையில் சிறுநீர் கழித்தார்" என துலாய்மி கூறியதாக போஸ்ட் தகவல் தந்தது.

Bucca வில் நடைபெற்ற சில முறைகேடுகளை இராணுவமே உறுதிப்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டது. திட்டமிட்டு கைதிகளை தாக்கியதாக 320 வது இராணுவ போலீஸ்படை பிரிவைச்சேர்ந்த 4 இராணுவத்தினர் குற்றம்சாட்டப்பட்டனர். இரண்டு படையினர் கைதியின் கால்களை அகலமாக விரித்து பிடித்துக்கொண்டார்கள், மூன்றாவது படையினர் அவரது பிறப்பு உறுப்பு பகுதியில் அடித்தார்.

துல்லியமாக இது நாஜி மிரட்டல்காரர்களின் பாணியாக இல்லையா? ரஷ்யாவையும் போலந்தையும் வென்றெடுப்பதற்காக, மூன்றாவது ரைக்கின் (Third Reich) படைவீரர்களுக்கிடையே செய்யப்பட்ட திரிக்கப்பட்ட கருத்தியல் பிரச்சாரத்தின் அடிப்படையைப்போன்று தோன்றவில்லையா? அவர்கள் எதிர்கொண்ட மக்கள் மனிதஇனத்தில் தரம் தாழ்ந்தவர்கள் அல்லது Untermenschen (மனிதர்களல்ல) மற்றும் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட கொடுமைகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததோடு, அவ்வாறு செய்வதற்கு குற்றம் சாட்டவும் முடியாது.

இந்தக் கொடுமையின் நோக்கம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் நடத்தப்பட்டது போன்ற கொடுமை இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் எந்த வகையிலும் சம்மந்தப்பட்டிராத 90 சதவீதம் மக்களை அமெரிக்கப்படைகள் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் நம்பகத்தன்மையுள்ள மதிப்பீட்டை தந்திருக்கின்றன. எனவே அவர்கள் எவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டாலும், உண்மையிலேயே அவர்கள் ஒப்புக்கொள்வதற்கு எதுவுமில்லை. ஆனால், இப்படி கொடூரமாக அவர்கள் சித்திரவதை செய்யப்படுவது பொதுமக்களை மிரட்டி கிளர்ச்சிக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக்கொள்ளச் செய்வதற்குத்தான்.

இதில் மிக முக்கியமாக ஈராக்கில் நடத்தப்படுகின்ற குற்றங்களுக்கான மூலாதாரமும் ஹிட்லரின் SS புரிந்த குற்றங்களும் அடிப்படையில் ஒன்றுதான். அது ஒரு குற்றம்மிக்க ஆக்கிரமிப்பு போரை நடத்துவதுதான்.

இதுதான் நூரம்பேர்க் விசாரணைகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, நாஜிக்களின் எல்லாக் குற்றங்களுமே ஹிட்லரது ஆட்சி ஒரு ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு நடத்தியதிலிருந்து உருவானதுதான்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் நாஜிக்கள் புரிந்த குற்றங்களின் பிரதிபலிப்பாகத்தான் 1949 ஜெனீவா ஒப்பந்தங்கள் இயற்றப்பட்டன. ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத ஆக்கிரமிப்பு போரில் இறங்கி ''ஒருதலைப்பட்சமான போர்'' என்ற கொள்கையின் கீழ் புஷ் நிர்வாகம் இதே ஒப்பந்தங்களை மீறியிருப்பது தற்செயலாக நடந்துவிட்டதல்ல. வெள்ளை மாளிகையின் முன்னாள் வக்கீலும் நடப்பு சட்டமா அதிபருமான அல்பர்ட்டோ கொன்சால்ஸ் இன் வார்த்தையில் சொல்வதென்றால், "அது திட்டமிட்ட செயல்".

Wall Street Journal தலையங்கம் தனது முடிவுரையில் 140 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவை ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் இது என்று கூறுகிறது, "சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்று இருக்கக்கூடிய ஒரு ஒரு உண்மையான நடுநிலை மனிதநேய அமைப்பு உலகிற்கு தேவை" என்று கூறுகிறது. "ஆனால் Camp Baucca சம்பவம்... அந்த பணி இப்போது செய்யக்கூடியதல்ல என்பதற்கு சான்று.

வெள்ளை மாளிகை பாதுகாவலர்களின் கருத்துக்களை ஜோர்னலின் போர் வெறி பத்திரிகையாளர்கள் எதிரொலிக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் கொள்கைக்கு அல்லது வாஷிங்டனின் தவறான கட்டுகதைகளுக்கு மற்றும் ஈராக் கிரிமினல் நடவடிக்கையை மூடி மறைப்பதற்கு உருவாகும் எந்த சவாலையும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். NewsWeek ஐ போல் அடிப்பணியவைக்க முடியாதவர்கள் தீர்த்துக்கட்டப்பட வேண்டும்.

Top of page