World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Sharp conflicts precede European Union summit

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தீவிர மோதல்கள் வெளிப்படுகின்றன

By Chris Marsden and Julie Hyland
16 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

பாரிசில் செவ்வாயன்று பிரெஞ்சு ஜனாதிபதியை சந்தித்தபின், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர், 2007-2013க்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், "தீவிரக் கருத்து வேறுபாடு" உள்ளது என்று அறிவித்தார்; மேலும், "இந்த வேறுபாடுகளைக் களைவது கடினமாகத்தான் இருக்கும்" என்றும் அவர் கூறினார். பூசி மெழுகப்படாத உண்மையை ஒருமுறையேனும் பிளேயர் கூறியிருக்கிறார்.

ஜூன் 16-17ல் பிரஸ்ஸல்ஸில் நடக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் மற்றும் ஸ்கொட்லாந்தில் ஜூலை மாதம் நடக்க இருக்கும் G8 உச்சி மாநாடு இவற்றிற்கு முன்னதாகவே பிரிட்டனின் நிலைப்பாடு பற்றி பிரதம மந்திரி இந்த சிராக்-பிளேயர் கூட்டத் தொடர்களின் கடைசிக் கூட்டத்தில் வாதிட்டிருந்தார். பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்ட வகையில், இருவருக்கும் இடையே நிலவியிருந்த கடும் கசப்புணர்வின் கடுமையான தன்மையை ஒட்டி வழக்கமாக நடக்கும் கூட்டச் செய்தியாளர் கூட்டம் கூட கைவிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன், 1984ம் ஆண்டு மார்கரெட் தாட்சரால் பேரம் பேசப்பட்ட 3 மில்லியன் பவுண்டுகளை குறைத்துவிட வேண்டும் என்பதை பிரிட்டன் விட்டுவிடவேண்டும் என்று பிரான்சு, ஜேர்மனியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும், அதற்கு எதிர்க் கோரிக்கையாக பிளேயர் பொது விவசாயக் கொள்கை (Common Agricultural Policy CAP) அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் விவசாய உதவித் தொகைகளில் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதும் ஆதிக்கம் பெற்றன.

உள்நாட்டுப் பிரச்சினைகள், ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்டத்தின் மீதான தகராறின் கடுமையை பகுதியளவு மட்டுமே விளக்குகிறது பிரான்சும் ஜேர்மனியும், பிரிட்டன் மீதான தாக்குதல்களை தங்களின் முற்றுகை இடப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு மக்கள் ஆதரவை மீளப்பெறும் ஒரு வழிமுறையாகப் பார்க்கின்றன. தடையற்ற சுதந்திரமான சந்தைகளுக்கு முன்மாதிரியான "ஆங்கிலோ-சாக்சனிய" பொருளாதார வகையில் பிரிட்டன் அடையாளம் காணப்படுகிறது; ஆனால் அம்மாதிரியோ பிரான்சிலும் நெதர்லாந்திலும் ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்புக்களில் நிராகரிப்பிற்கு உட்பட்டுவிட்டது.

தன்னுடைய பங்கிற்கு, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புக் கூட்டத்தை திருப்தி செய்யும் வகையிலும், பிரான்ஸ், ஜேர்மனியின் கோரிக்கைகளான ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு ஏற்கப்படட்டும் என்ற கோரிக்கையை புறக்கணிக்கும் வகையில், ஏற்கனவே பிரிட்டனில் அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பு தற்போதைய செயற்பட்டியலில் இல்லை என்று அறிவித்து விட்டார்.

ஆனால் இப்பூசலில் இன்னும் அடிப்படையான பிரச்சினைகள் பணயம் வைக்கப்பட்டுள்ளன; அதிலும் தள்ளுபடி தொகையை பொறுத்தவரையில் பிரிட்டன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறன்து. இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு வருங்கால போக்கே பூசலில் நிர்ணயிக்கப்படும்போல் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "வேண்டாம்" வாக்குகள் விழுந்தது, பெருநிறுவனங்களின் நலன்களுக்காக பொருளாதார வாழ்வை மாற்றி அமைக்க திட்டங்களை கொண்டிருக்கும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான பரந்த சமூக விரோதப் போக்கைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. பொதுநல செலவினங்கள் அழிப்பு, தனியார் மயமாக்கப்படுதல், தொழிற்துறை மறுசீரமைக்கப்படுதல், ஜனநாயக உரிமைகள் அரிக்கப்பட்டுள்ளமை இவற்றின் விளைவாக ஐரோப்பா முழுவதும் வர்க்க உறவுகளில் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதுதான் இதன் அடித்தளத்தில் இருக்கும் உண்மையாகும்.

வாக்கெடுப்பின் முடிவுகள் ஐரோப்பாவின் ஆளும் செல்வந்தத்தட்டுக்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.

எஞ்சியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசியலமைப்பு ஏற்பது பற்றிய வாக்கெடுப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் பிரான்ஸ்-ஜேர்மனியின் நிலைப்பாட்டை தன்னையே தோற்கடித்து கொள்ளும் முயற்சி என்று பிளேயர் கருதுகிறார். இதற்குப் பதிலாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆவணத்தில் கூறியுள்ள பொருளாதார சீரமைப்பை செய்யட்டும், அதன் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டத்தை நடத்தி எஞ்சியியிருக்கும் பொதுநலன்களையும் அழித்துவிடலாம், அதுவரை வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்படலாம் என்று பிளேயர் கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது மரபுவழியில் பிரான்ஸ்-ஜேர்மனியின் ஆதிக்கம் குறைமதிப்பிற்குட்படும் வகையில் சற்று தளர்வான ஐரோப்பிய கூட்டமைப்பு தேவை என்ற தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாகவும் பிரிட்டன் காண்கிறது.

சிராக்குடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர், பிளேயர் செய்தியாளர்களிடம் கூறினார்: "பிரான்ஸ்-ஜேர்மனி உறவு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்; ஆனால் இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தினை உந்திச்செல்லும் அனைத்தையும் அவை கொண்டிருக்க முடியாது."

பிரான்ஸ், ஜேர்மனியின் விடையிறுப்பு பொருளாதார சீர்திருத்தத்திற்கு அரசியல் விரோதம் என்பதினால் உந்துதல் பெறவில்லை. தன்னுடைய முக்கிய சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக செயல்திறன் உள்ள வணிக முகாமை வளர்ப்பதற்கு அவை தேவை என்றே இரு நாடுகளும் உறுதியாகக் கருதுகின்றன. ஆனால் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராகவும், அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் இச்செயல்திட்டத்தில் இணைக்காமல் உள்ள சூழ்நிலையில் அவ்வாறு திட்டத்தை கொள்ளுவது இயலாது என்றும் அவை கருதுகின்றன.

பாரிஸ், மற்றும் பேர்லினில் உள்ள ஆளும் வட்டங்களுக்குள் சக்தி வாய்ந்த, பெருகிய உணர்வு ஒன்று வளர்ந்து வருகிறது; அதன்படி ஐரோப்பா முன்னேறுவதற்கும், பொருளாதார சீர்திருத்ததை செயல்படுத்தவும் சிறந்த வழி தங்களின் தலைமையில் ஒரு முக்கிய நாடுகளின் மையக் குழு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதாகும். இத்தோடு கூட, துருக்கி, குரோசியா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்ட முறையில் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் விரிவாக்கத்தை காண வேண்டும் என்பது உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படக்கூடாது என்றும் அவை கூறுகின்றன.

ஒரு மைய உட்கருக் குழுவை தோற்றுவிக்கும் முந்தைய முயற்சிகள், மிகவும் குறிப்பாக 2003ல், ஆதரவைப் பெற முடியவில்லை; பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெனுலக்ஸ் (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லுக்சம்பேர்க்) நாடுகளுக்கு வெளியே அத்தகைய முயற்சிக்கு புதிய உற்சாகம் ஏதும் இருப்பதாக சான்றும் இல்லை. எனவேதான் பிரிட்டன் குறைவாய் அளிப்பது மீதான தாக்குதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையும் ஏழ்மை நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலேயே பெரும் செல்வம் கொழிக்கும் நாட்டிற்கு பணம் கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை அவ்வாறு செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் விவசாய உதவித்தொகை பெரும் பிரச்சினை என்றும் அது பிரான்சிற்குத்தான் முக்கியமாக நலனைத் தரும் என்றும் பிரிட்டன் வாதிட்டுள்ளது.

இப்படி ஒரு தளர்வான கூட்டமைப்பு போதும் என்று அழைப்பு விடுத்திருப்பதோடு, விவசாயக் கொள்கை தேசிய அரசாங்கங்களின் அதிகாரத்திற்குள் பழையபடி கொடுக்கப்பட்டுவிட வேண்டும் என்றும் தேசிய அரசாங்கங்கள்தான் மானியத் தொகையை தொடர்வதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் என்றும் பிளேயர் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு கூறியது: "நாடுகள் தங்கள் பணத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக ஏன் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றன என்பதை நான் நன்கு உணர்கிறேன். ஆனால் என்னுடைய எதிர்ப்பு ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாகத் தீர்மானித்து தன்னுடைய வரவுசெலவுத் திட்டத்தில் 40 சதவிகிதத்தை, மக்களில் 4 சதவீதத்திற்கு மட்டுமே கொடுப்பது என்பதற்கு ஆகும். அதில் அர்த்தமே இல்லை." இதற்கு மாற்றீடாக அப்பணத்தை வலதுசாரியினரை திருப்திசெய்யும் வகையில் சட்டம், ஒழுங்கு, மற்றும் புலம்பெயர்தலை கட்டுப்படுத்துதல் போன்றவற்றிற்கு செலவிடலாம் என்பது அவருடைய கருத்து ஆகும்.

அரசியல் ஆதரவிற்காக பிரான்சில் கிராமப் புற வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கும் கோலிசவாதிகளுக்கு, பிளேயர் கோரும் சீர்திருத்த முறையை நினைத்தும் பார்க்க முடியாது. மேலும் பிரான்சும், ஜேர்மனியும் விவசாய உதவித்தொகைகள் தங்களுக்கு கிழக்கு ஐரோப்பாவில் ஆதரவை பெருக்க பயன்படும் என்றும் அப்பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கு வளர்ச்சியை குறைக்க இது உதவும் என்றும் கருதுகின்றன.

ஒரு ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் ஏற்படுவது தடுக்கப்படும் வகையில், பொது விவசாயக் கொள்கை (Common Agricultural Policy -CAP) யில் சலுகைகள் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டால் அன்றி, பிரிட்டனின் உதவித் தொகை பற்றிய நிலைப்பாட்டில் இருந்து தான் பின்வாங்குவதாக இல்லை என்று பிளேயர் கூறியுள்ளார்.

ஏதேனும் ஒரு வகையில், உச்சி மாநாட்டில், ஒரு சமரசம் ஏற்கப்படும் என்ற கருத்தை பகுப்பாய்வாளர்கள் கொண்டிருக்கின்றனர். பிரிட்டன் உட்பட மாநாட்டில் பங்கு பெறும் எந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய உடைவு பற்றி சிந்திக்கவில்லை. அரசியலமைப்பு ஏற்பதற்கான கால வரம்பு நவம்பர் 2006க்கும் மேலாக நீட்டிக்கப்படலாம் என்ற ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் இதன் பல கருத்துக்களும் அக்காலத்திற்குள்ளேயே செயல்படுத்தப்படவும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: "அரசியலமைப்பை சவக்கிடங்கில் தள்ளாமல், குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் வகையில் சொற்றொடர்களை பயன்படுத்துவோம்".

இருந்தாலும்கூட, "ஒவ்வொருவரும் தத்தம் சொந்த யுத்தங்களுக்கு போராடுகிற நிலைமையில் நாம் ஒருவேளை உள்ளோம் போலும்" என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்தார்.

"வேண்டாம்" வாக்குகளுக்கு பின்னர், தான் ஒரு வலுவான இடத்தில் இருந்து வாதிடுவதாக பிளேயர் நம்புகிறார். ஆனால் சாதாரணமாக காணும்போது அவருடைய நம்பிக்கை முற்றிலும் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு என்பது பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தியிருந்த செயற்பட்டியலுக்கு எதிராக இயங்கியிருந்தது.

பாரிஸ் மற்றும் பேர்லின் அனுபவித்து வரும் கஷ்டங்களில் ஒரு விந்தையான கூறுபாடு உள்ளது என்பது தெளிவு; ஆனால் பிளேயர் முரண்கொள்ளும் நிலைப்போக்கை எடுத்துள்ளதற்கு முக்கிய காரணம் அவர் சர்வதேச அளவில் இருக்கும் பெருவணிகத்தின் ஆதரவைக் கொண்டுள்ளார், அதிலும் வாஷிங்டனுடைய ஆதரவை குறிப்பாகக் கொண்டுள்ளார் என்பது அறியப்பட வேண்டும்.

ஐரோப்பா, மக்கள் கருத்திற்கு தலைவணங்கக்கூடாது என்றும் தன்னுடைய பொருளாதார சீர்திருத்தத்தை தொடர வேண்டும் என்று நிதியச் செய்தி ஊடகம் வலியுறுத்துகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் பிரஸ்ஸல்ஸிற்கு சென்றிருந்தபோது, அமெரிக்க நிதி மந்திரி ஜோன் ஸ்நோ ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கம் மறுசீரமைப்பைத் தொடரவேண்டும் என்ற அழைப்பைத்தான் விடுத்துள்ளார். "ஆங்கிலோ-சாக்சன் முதலாளித்துவ முறை" என்று பிரான்ஸ் குறிப்பிட்டு தாக்கியது பற்றியும், தனிப் பங்குதாரர்கள் என்ற பெரும் "உயிர்கொல்லிப் பூச்சிகள்" என்று ஜேர்மனியின் சமூக ஜனநாயக்க் கட்சித் தலைவர் பிரான்ஸ் முன்டெர்பெரிங் கண்டித்தது பற்றியும் குறிப்பிட்டு ஜோன் ஸ்நோ, "அமெரிக்க வணிகர்கள் தங்களுக்கு எங்கு நல்வரவு உள்ளதோ, எங்கு மூலதனத்திற்கு மதிப்பு இருக்கிறதோ, எங்கு மூலதனத்திற்கு நல்ல வருவாய் இருக்கிறதோ, அங்கு பணத்தை முதலீடு செய்வர்" என்று எச்சரித்தார்.

"பயன்படத்தக்கூடிய சொற்களைப் பற்றி என்று இல்லாமல், கொள்கைகள்தான் இப்பொழுது பிணைந்து நிற்கின்றன. கொள்கைகள் தழுவப்படுவதுதான் மூலதனத்தை நல்வரவிற்கு உட்படுத்த முடியாமல் செய்து, மூலதனம் வராமலும் போய்விடும்"

ஒருகாலத்தில் தான் பெரிதும் பரிந்துரைத்த ஐரோப்பிய ஒருமைப்பாடு பற்றிய செயல்திட்டத்தை, அமெரிக்கா இப்பொழுது எதிர்க்கிறது. புஷ் நிர்வாகம் ஒரு ஐரோப்பிய சக்திபோல் செயல்பட்டு, கண்டத்திலும், பரந்திருக்கும் ஐரோப்பிய-ஆசிய பகுதியிலும் பரந்த யுரேஷிய மக்ளதிரளிடையேயும் தன்னுடைய கூட்டு உடன்படிக்கைகளை கட்டமைக்க விரும்புகிறது; அதேநேரத்தில் தன்னுடைய விரோதிகளை பிரித்தும், தனிமைப்படுத்தியும் வைக்க பார்க்கிறது.

பிரஸ்ஸல்ஸில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா, முடியாதா என்பது ஒரு புறம் இருக்க, ஐரோப்பாவில் தொடர்ந்து உறுதியற்ற நிலைதான் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள விரோதப் போக்கு, ஐரோப்பிய சக்திகளுக்கிடையே இருக்கும் விரோதப் போக்கு ஆகியவை வளர்ச்சியுறும் அதேநேரத்தில், அரசாங்கங்கள் தங்கள் இகழ்வான பொருளாதார நடவடிக்கைகளை, எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களிடையே சுமத்தும் போது கண்டத்திற்குள்ளேயே சமூக உறவுகள் மோசமடையும்.

See Also:

ஐரோப்பிய அரசியலமைப்பு புறக்கணிக்கப்பட்டது
பிரெஞ்சு மக்களின் "வேண்டாம்" வாக்கின் அரசியல் விளைவுகள்

Top of page