World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

General Motors announces plans to eliminate 25,000 jobs in US

ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் 25,000 வேலைகளை இல்லாதொழிக்கும் திட்டங்களை அறிவித்தது

By David Walsh
9 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் 2008 இறுதியில் அமெரிக்காவில் 25,000 உற்பத்தி வேலைகளை இல்லாதொழிக்கவும் திட்டவட்டமாக குறிப்பிடப்படாத பல்வேறு தொழிற்கூடங்களை மூடிவிடுவதற்கான திட்டங்களை ஜூன் 7ல் அறிவித்தது. இந்த வெட்டுக்கள் மூலம் GM இல் மணித்தியால கணக்கில் பணியாற்றுகின்ற அமெரிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கையை 23 விகிதமான 1,11,000இலிருந்து 86,000 ஆக குறைக்கப்பட்டுவிடும். சமீபத்திய 1991இல் கூட, GM அமெரிக்காவில் மணித்தியால கணக்கில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் 2,60,000 பேரை வேலையில் அமர்த்தியிருந்தது. 1970களின் கடைசியில், அந்த நிறுவனத்தின் அமெரிக்க தொழிலாளர்களது எண்ணிக்கை மணித்தியால கணக்கிலும், ஊதிய அடிப்படையிலும் பணியாற்றியவர்களை சேர்த்து 6,00,000 இற்கு அதிகமானதாக இருந்தது.

ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களுக்கு மறு வேலைவாய்ப்பு தேடித்தரும் நிறுவனமான Challenger, Gray & Christmas நிறுவனம் இந்த அறிவிப்பு 2003 ஜனவரிக்கு பின்னர் அந்த கார் உற்பத்தியாளர் அறிவித்துள்ள ஒரு பெரும் ஆட்குறைப்பு என்று குறிப்பிட்டது, 2003ல் சில்லறை விற்பனையாளரான Kmart நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுப்பதற்கு ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில் 37,000 பணிகளை நீக்கிவிடும் திட்டங்களை வெளியிட்டது.

தற்போது பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றுவிட்ட தொழிலாளர்களது பொது சுகாதார சலுகைகளை பெருமளவில் வெட்டுவதை செயல்படுத்துவதற்கு 2007 செப்டம்பரில் காலாவதியாகும் நடப்பு ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் (UAW) சம்மதிக்க வேண்டும் என்றும் GM கோரி வருகிறது.

ஆண்டிற்கு 2.5 பில்லியன் டாலர் சேமிப்புக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வெட்டுக்களை GM தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Rick Wagonar, Delaware இலுள்ள Wilmington இல் நடந்த நிறுவனத்தின் ஆண்டு பேரவை பங்குதாரர்கள் கூட்டத்தின் போது கோடிட்டுக்காட்டினார். எந்தத் தொழிற்கூடங்கள் மூடப்படும் என்று திட்டவட்டமாக அறிவிக்க Wagoner மறுத்துவிட்டார், ஆனால் ஜென்ஸ்வில்லி, விஸ்கான்சின், டோராவில்லி, ஜோர்ஜியா, ஒகலஹோமா நகரம் மற்றும் பாண்டியாக், மிச்சிகன் ஆகியவை மூடப்படும் இலக்குகளாக இருக்கக்கூடும் என்று தொழிற்துறை ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.

இவற்றுடன் கூடுதலாக, லிவோனியா மற்றும் பே நகரம், மிச்சிகன் இலுள்ள மின்சார புகையிரத இயந்திரம் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். ஏற்கனவே இந்த ஆண்டு GM, பல்டிமோர், மேரிலண்ட் மற்றும் லிண்டன், நியூஜேர்சி, மற்றும் லான்சிங், மிச்சிகனில் இரண்டு தொழிற்கூடங்கள், ஆகிய தொழிற்கூடங்களை மூடிவிட்டது அல்லது உற்பத்தியை நிறுத்திவிட்டது. எடுத்துக்காட்டாக தனது உற்பத்தித் திறனில் 107 சதவீதத்தை எட்டிவிட்ட டொயோடா என்ற ஜப்பானிய கார் தொழிற்சாலையோடு ஒப்புநோக்கும் போது GM இன் வட அமெரிக்க தொழிற்சாலைகள் தற்போது சராசரியாக தனது உற்பத்தித்திறனில் 85 சதவீதத்தை எட்டியுள்ளது.

புதன்கிழமையன்று Detroit News வெளியிட்டுள்ள செய்தியில்: '' மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர் ஸ்டீபன் கிர்ஸ்கி அண்மையில் செய்துள்ள மதிப்பீட்டில் GM இன் வடஅமெரிக்க உற்பத்தித்திறன் 45 சதவீத அளவிற்கு உள்ளது------அது 15 தொழிற்கூடங்களின் உற்பத்திக்கு சமமானது---- அவை பயன்படுத்தப்படவில்லை அல்லது விலைகுறைக்கப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கார்கள் மற்றும் வாடகை கார் நிறுவனங்களுக்கு விற்கப்படும் இலாபமற்ற அல்லது குறைந்த இலாபத்தை தருகின்ற மாதிரி கார்களை தயாரிக்கின்றன.

மிச்சிகன் அன் ஆர்பரில் உள்ள கார்கள் ஆய்வு நிலையத்தை சேர்ந்த தலைமை பொருளாதார ஆய்வாளர் Sean McAlinden ஒரு நிருபருக்கு பேட்டியளித்தபோது GM இன் திட்டம் என்னவென்றால் ''நான்கு கார் பொருத்தும் தொழிற்கூடங்களையும், ஒன்றிரண்டு உடைக்கும் தொழிற்கூடங்களையும் மற்றும் ஒன்றிரண்டு மின்சார புகையிரத இயந்திர தொழிற்கூடங்களையும் மூடுவதற்கான திட்டமாகும்.''

Wagoner விவரித்துள்ளதைப்போல், GM திட்டத்தின் மற்றொரு பகுதி அந்த நிறுவனத்தின் எட்டு வகையான கார்களையும், ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்ட வகையில் தயாரிப்பது சம்மந்தப்பட்டது. Chevrolet மற்றும் Cadillac கார்கள் மட்டுமே முழு வாகனங்களாக தயாரிக்கப்படும், அதே நேரத்தில் GMC, Pontiac, Buick, Saturn, Saab மற்றும் Hummer கார்கள் தனக்கென்று செறிவூட்டப்பட்ட சிறந்த சந்தைகளுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வடக்கு அமெரிக்க நடவடிக்கை மூலம் 2005 இன் முதல் காலாண்டில் 1.3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது, 2005 இல் வடக்கு அமெரிக்க GM தொழிற்சாலைகளில் வரி செலுத்துவதற்கு முந்திய இழப்புக்கள் மொத்தம் 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மதிப்பிட்டிருக்கிறது.

மே மாத ஆரம்பத்தில், அந்த நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அடிமட்ட அந்தஸ்திற்கு தள்ளப்பட்டன. அண்மை மாதங்களில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு GM இன் பங்குகள் மிகக்குறைந்த விலைக்கு விற்றன. விற்காத கார்கள் 1.2 மில்லியன் கையிருப்பில் உள்ளது, அண்மையில் அந்த கார் உற்பத்தி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தருகின்ற கழிவு விலையிலேயே பொதுமக்களுக்கும் கார்களை விற்க முன்வந்தது.

நிறுவனத்தின் நிர்வாகக்குழு அறையில் பெருகிவரும் விரக்திகளுக்கான எல்லா சமிக்கைகளும் காணப்படுகின்றன. உலக பொருளாதாரத்திலும், அமெரிக்காவிலும், GM இன் அந்தஸ்த்தை கருதி பார்க்கும்போது பல விமர்சகர்களது வாயிலிருந்து அந்த நிறுவனம் திவாலாகும் சாத்தியக்கூறு உள்ளது என்று வருவது சம்பவங்களின் அசாதாரணமான திருப்பத்தை காட்டுகிறது.

மே மாதம் அமெரிக்காவின் GM கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை அமெரிக்காவில் 25.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது, ஓராண்டிற்கு முன்னர் இது 27 சதவீதமாக இருந்தது. 1970 களில் கூட இந்த கார் தயாரிப்பு பெருநிறுவனம் அமெரிக்காவில் விற்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தயாரித்து விற்பனைக்கு விட்டது. இந்த ஆண்டு GM இன் விற்பனைகள் 5.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டன, இதற்கு காரணம் எரிபொருள் விலை உயர்வு உட்பட சீர்குலைந்து வருகிற பொருளாதார சூழ்நிலைகளால் SUV என்றழைக்கப்படுகின்ற விளையாட்டிற்கு பயன்படுத்துகிற வாகனங்களின் விற்பனை குறிப்பாக கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

அமெரிக்க சந்தையில் ஆசிய நாடுகளின் கார் உற்பத்தியாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து பெருகிக்கொண்டு வருகிறது, மே மாதம் அது 36.5 சதவீதமாக இருந்தது, ஓராண்டிற்கு முன்னர் இது 34.3 சதவீதமாக இருந்தது. அமெரிக்கச் சந்தையில் டொயோடாவின் பங்களிப்பு 14 சதவீதமாக இருக்கிறது, இது ஒரு சில புள்ளிகள்தான் டைம்ளர்கிறிஸ்லர் மற்றும் போர்ட்டிற்கு கீழே உள்ளது.

Hoover's Online தந்துள்ள தகவலின்படி: ''2004 நிதியாண்டில் டொயோடா ஒவ்வொரு ஊழியருக்கும் நிகர வருமானமாக 85.41 டாலரை சம்பாதித்தது, அதே நேரத்தில் GM 8.66 டாலரையும் Ford 10.73 டாலரையும் சம்பாதித்தன. சென்ற ஆண்டு நான்காவது காலாண்டில், Merrill Lynch & Co கூறுகிறபடி, GMஇன் 0.5 சதவீதம் மற்றும் போர்ட்டின் 2.3 சதவீத மொத்த வருவாய்க்கான நிகர லாபவீத்த்தை ஒப்புநோக்குகையில், டொயோடா 9.1 சதவீத செயல்பாட்டு நிகர லாபவீதத்தை பெற்றது."

ஜூன் 8இல் Detroit News குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் GMஇன் பங்கு மதிப்பு உலகின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான டொயோடாவின் பங்கு மதிப்பில் 7இல் ஒரு சதவீதம்தான். மே மாதத் ஆரம்பத்தில் ஜப்பானிய கார் தயாரிப்பாளரின் சந்தை மதிப்பு 131.6 பில்லியன் டாலர்களாகும், அதே நேரத்தில் GM இன் மதிப்பு 18.5 பில்லியன் டாலர்கள்தான். GMஇன் இதர ஜப்பானிய போட்டி நிறுவனங்களான ஹோன்டா மற்றும் நிஸ்ஸான் ஆகிய ஒவ்வொன்றின் சந்தை மதிப்பும் 44.8 பில்லியன் டாலர்களாகும். கார் உற்பத்தியாளரின் ஆண்டு விற்பனை மதிப்பில் 10இல் ஒரு சதவீதமாகவுள்ள அமெரிக்க ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான The Gap நிறுவனத்தின் சந்தை மதிப்பு அளவிற்கு GM இன் சந்தை மதிப்பு வீழ்ந்துவிட்டது.

GM இன் திட்டம் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்வதுடன், கார் தொழிலாளர்கள் பெற்றுவரும் பயன்களின் வெட்டுக்களை கோரியுள்ளது. உலகிலேயே மிக அதிக அளவிற்கு சுகாதார சேவைகளை பயன்படுத்துகின்ற தனியார் நிறுவனம் GM, அது 1.1 மில்லியன் அளவிலான இன்றைய மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. 2004 இல் நிறுவனத்தின் சுகாதார சேவை செலவினம் 5.2 பில்லியன் டாலர்களாகும் மற்றும் அது இந்த ஆண்டு 5.6 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு GM வாகனத்தின் உற்பத்தி செலவிலும் சுகாதார சேவை செலவினம் 1500 டாலர் வீதம் சேர்க்கப்படுகிறது என்று செவ்வாய்கிழமையன்று Wagoner வலியுறுத்தி கூறினார். அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவினம் 1000 டாலர்களாக 50 சதவீத குறைப்பு வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

நிறுவனத்தின் சுகாதார சேவை செலவினங்களை குறைப்பதற்கான வழி வகைகள் குறித்து UAW உடன் நிறுவனம் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக பங்குதாரர்கள் கூட்டத்தில் GM இன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். ``இந்த நேரத்தில் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை மற்றும் உங்களிடம் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் 100 சதவீத உடன்பாட்டை காண்போம் என்று நிச்சயமாக நான் கூறமாட்டேன்`` என அவர் அறிவித்தார்.

Wagnor திட்டத்தின் முக்கியத்துவத்தை தொழிற்துறை மற்றும் வேர்ல் ஸட்ரீட் ஆய்வாளர்கள் குறைத்து மதிப்பிட்டனர் அல்லது மிகவும் ''காலம் கடந்த மற்றும் மிகச்சிறிய திட்டம்'' என்று தள்ளுபடி செய்தனர்.

USB ஆய்வாளர் Rob Hinchliffe யே தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில் Marketwatch.com தந்துள்ள கருத்தை குறிப்பிட்டிருக்கிறார், அந்தத் திட்டம் மிகத் தீவிரத்தன்மை போதுமான அளவிற்கு கொண்டதல்ல மற்றும் வேலை வெட்டுக்களும் கார்கள் தயாரிப்பில் செலுத்தப்பட்டுள்ள கவனமும் பழைய செய்திகள். ''இது 5 சதவீத அளவிற்கு மேல் செல்லக்கூடியதல்ல. SUV விற்பனைகள் மோசமாக உள்ளன மற்றும் சந்தைப் பங்கு வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது.''

ஒரு ஆலோசகரும் ''நீண்டகால GM கண்காணிப்பாளருமான'' Maryann Keler பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது ``GM சில விமான நிறுவனங்கள் சென்ற வழியில் சென்று கொண்டிருக்கிறதா அல்லது தன்னைத் தானே மீண்டும் புதுபித்துக்கொள்ளப் போகிறதா? கடைசியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக இல்லை'' என்று கூறினார்.

Detroit News இல் Daniel Howes வெளியிட்டுள்ள கருத்தில் ''Waganor ஏற்படுத்தியுள்ள திருப்பம் போதுமானதா? இன்றைய தலைப்புச் செய்திகள் 2008 வாக்கில் 25,000 GM வேலைகள் போகின்றன என்று கூச்சலிடுவதாக அமைந்திருக்கும், ஆனால் உண்மை என்னவென்றால், GM ஒவ்வொரு ஆண்டும் பேச்சுவார்த்தைகள் மூலமும் இயல்பான ஓய்வு பெறுதல் மூலமும் GM 5000 முதல் 6000 வேலைகளை நீக்குகிறது. மணித்தியால கணக்கு விகிதத்தில் பணியாற்றி வருகின்ற 36,000 தொழிலாளர்கள் இப்பொழுதே ஓய்வு பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள்; ஐந்து ஆண்டுகளுக்குள் 50,000 பேர் ஓய்வுபெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவர். கணக்குப்போட்டு பாருங்கள். சாதாரண சூழ்நிலைகளில் GM இன்றைக்கு தொடங்கி 2008 இறுதிவரை 24,000 வேலைகளை நீக்கிவிடும். இந்த வேலை இழப்புக்கள் தேசிய-----மற்றும் மிச்சிகன்----- பொருளாதாரத்திற்கு வேலையிழப்பாகுமா? ஆம். ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சிக்கன ஆட்குறைப்பை அது தீவிரமாக காட்டவில்லையா? உண்மையிலேயே அப்படி அல்ல''.

UAW தற்போது ஒப்பந்தத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த மறுத்திருப்பதன் மூலம் GM நிர்வாகம் தனது நெருக்கடியை தொழிலாளர்களின் முதுகில் சுமையாக ஏற்றுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக காட்டிக்கொண்டிருக்கிறது. GM இல் தொழிற்சங்கத்திற்கான பொறுப்பு வகிக்கும் UAW துணைத் தலைவர் ரிச்சர்ட் ஷூமேக்கர் ஒரு பத்திரிக்கை குறிப்பில் தொழிற்சங்கம் பாரியளவு ஆட்குறைப்பிற்கும், தொழிற்கூடங்கள் மூடல்களுக்கும் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார் மற்றும் GM இன் சுகாதார செலவினங்களை வெட்டுவதற்கான ஒரு பேரத்தை உருவாக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

''2008 இறுதிவாக்கில் வேலை வாய்ப்புக்களை வெட்டுவது மற்றம் தொழிற்கூடங்களை மூடுவது தொடர்பான திட்டவட்டமான இலக்குகள் பற்றி இந்த உரையில் குறிப்பிடுவதும், உண்மையிலேயே இதில் பல்வேறு முக்கிய காரணிகள் செயல்படத் தொடங்கும்-----அவற்றில் இயற்கையாக ஓய்வுபெறுவோர் விகிதம், சந்தைப் பங்கு மற்றும் மொத்த விற்பனையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் 2007 இல் UAW-GM இடையேயான உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் ஆகியவையும் அடங்கும்'' என்று அவர் தனது அறிக்கையை தொடங்குகிறார்.

ஷூமேக்கர் மேலும் கூறுகிறார் ``தனது நடப்பு பிரச்சனைகளிலிருந்து GM எளிதாக தன்னை சுருக்கிக்கொள்ள முடியும் என்பதை UAW ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன தேவை என்றால் GM அமெரிக்க சந்தையில் தனது பங்கை மீண்டும் உருவாக்குவதற்கு தீவிர கவனம் தேவை மற்றும் உலக தரத்திற்கு வடிவமைப்பும் தரமும் கொண்ட வாகங்களை சரியாக தயாரிக்க நிறுவனம் வழிவகை காண வேண்டும்.

Detroit News ல் பிரட் கிளான்டன் குறிப்பிட்டார் ''கார் உற்பத்தியாளர்களும் மற்றும் பிரதான உதிரி பாகங்களை விநியோகம் செய்பவர்களும் வேலையிழப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர், தொழிற்சங்கம் இதற்கு ஏற்ப அல்லது சமரசத்திற்கு புதிய விருப்பத்தை தெரிவித்துள்ளது.``

வெகுஜன ஊடகங்களும் அதன் பண்டிதர்களும் கார் தொழிலாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் மிதமிஞ்சிய பெருந்தன்மையான பயன்களை பெற்றுவருவதாகவும், இவற்றை விட்டுக்கொடுத்து தியாகம் செய்ய வேண்டுமென்றும் ஒருமனதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொண்டிருப்பதைப்போல் அந்த நிறுவனம் சுகாதார சலுகைகளால் ''முடக்கப்பட்டிருக்கிறதென்றும்'' இதர செலவினங்கள் GM இன் வருவாயை ''பாதிப்பதாகவும்'' கூறியுள்ளனர்.

GM நிறுவனத்தின் அவலங்களுக்கு காரணம் ''உரிமையின் கலாச்சாரம்'' தான் என்று Baltimore Sun இல் Maryland பல்கலைக்கழக பேராசிரியர் Peter Morici பழிபோடுகிறார். மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு அலுவலக ஆய்வாளர் Bruce Belzowski, Detroit News இற்கு பேட்டியளித்த போது ''சுகாதார சலுகைகளில் விட்டுக்கொடுப்பதை தவிர UAWவிற்கு வேறு வாய்ப்புக்கள் எதுவுமில்லை'' என்று கூறினார். பிரிட்டனிலிருந்து வெளிவரும் Economist மேலெழுந்தவாரியாக வெளியிட்ட கருத்தில் ''அந்த கார் உற்பத்தி பெருநிறுவனம் தாராளமாக தனது ஊழியர்களுக்கு சுகாதார சலுகைகளுக்காக வாரி வழங்கியிருப்பதால் ஜேனரல் மோட்டார்ஸின் இதயத்தில் நோய் பற்றிக்கொண்டது'' என்று குறிப்பிட்டிருந்தது.

அதே விமர்சகர்கள் GM இன் தலைமை நிர்வாகிகள் அனுபவித்து வரும் பெரும் ஊதிய மற்றும் இதர சலுகைகள் பற்றி எதுவும் சொல்லவில்லை அல்லது ஓரளவிற்கு குறிப்பிட்டிருக்கிறது. சென்ற ஆண்டு GM இன் மோசமான முடிவுகள் காரணமாக உயர் நிர்வாக அதிகாரியான Wagonar இன் ஊதியம், இதர சலுகைகள் ''வெறும்'' 10 மில்லியன் டாலர் அளவிற்கு 22 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது: 2003ம் ஆண்டு அளவிற்கு 2.2 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றார்கள். 2.5 மில்லியன் டாலர்களை மேலதிக ஊதியமாகவும், தற்போது 5.1 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்படும் 4,00,000 பங்குகளைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. 2003-ல் அவர் 2.9 மில்லியன் போனஸ் பெற்றார் 5,00,000 பங்குகள் பெறுகின்ற வாய்ப்புகள் இல் வழங்கப்பட்டன. 2003ல் Wagonar நீண்டகால ஊக்குவிப்புத் தொகையாக 3.3 மில்லியன் டாலர்களை ஈட்டினார், ஆனால் 2004 இற்காக அவருக்கு எதுவும் தரப்படவில்லை.

2004-ம் ஆண்டிற்கு வட அமெரிக்க பிரிவு தலைவர் Bob Lutz இற்கும், தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி John Devine க்கும் இழப்பீட்டு ரொக்கம் முறையே 4.4 மில்லியன் மற்றும் 4.2 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன. அதற்கு முந்திய ஆண்டில் அவர்கள் ஒவ்வொருவரும் 6.4 மில்லியன் டாலர்களைப் பெற்றனர். 2004ல் 2 மில்லியன் டாலர் மதிப்பிடப்பட்ட 1,60,000 பங்குகளைப் பெறுகின்ற வாய்ப்புக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன. அவை 2003ல் 2,00,000 பங்கு வாய்ப்புக்களாக இருந்து 2004ல் குறைந்துவிட்டது. வட அமெரிக்க GM நிர்வாகத்தலைவர் Gary Cowger இற்கு 2004ல் 1.6 மில்லியன் டாலர்கள் அளவிற்கு மொத்த இழப்பீடுகள் வழங்கப்பட்டன. அதற்கு முந்திய ஆண்டில் அவர் 2.3 மில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பீடு பெற்றார். 2004ல் Cowger 50,000 பங்கு வாய்ப்புக்களை பெற்றார், இது முந்திய ஆண்டைவிட 5,000 குறைவாகும் (Detroit News ஏப்ரல் 30, 2005).

புதிய வேலை வெட்டுக்கள் பல சமுதாயங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு காலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்திய மிச்சிகன், பிலின்ட் நகரில் நிலவுகின்ற மோசமான சூழ்நிலைகளை மட்டுமே ஒருவர் கருதிபார்க்க வேண்டும். New york Times சுட்டிக்காட்டியுள்ளதைப்போல் பிலின்ட் நகரில் GM ஒரு காலத்தில் (1970களில்) நடப்பு வேலை வெட்டுக்களுக்கு பின்னர் அமெரிக்கா முழுவதிலும் பணியில் அமர்த்தியுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அளவிற்கு பிலின்ட் நகரிலேயே அவ்வளவு அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தியிருந்தது. Challenger, Gray & Christmas, CEO, John Challenger விமர்சித்துள்ளது என்னவென்றால் ''பாரியளவு வேலை வெட்டுக்கள் நீர்சுழி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தொழிற்கூடங்களை மூடுவது சுற்றியுள்ள சமுதாயங்களை, விநியோகஸ்தர்களை, இந்த தொழிற்கூடங்களை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இதர வர்த்தகங்களை பாரதூரமாக பாதிக்கும்.``

இதர நிறுவனங்களும் GM இன் வெட்டுக்களை பின்பற்றி கடுமையான வெட்டுக்களை கொண்டு வருவது நிச்சயமாகும். Challenger குறிப்பிட்டிருப்பதைப்போல் ''இதுதான் கடைசியாக அறிவிக்கப்படும் பெரிய அளவிற்கான வேலை வெட்டாக அமையப்போவதில்லை. இந்த ஆண்டு நாம் காண்பது என்னவென்றால் இதர அமெரிக்க கார் தயாரிப்பாளர்கள் உட்பட பிற நிறுவனங்கள் சுகாதார சலுகைச் செலவினங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்ற சூழ்நிலையில் இலாபத்தை ஈட்டுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். அதிகரித்துவரும் ஓய்வுபெற்ற ஊழியர் எண்ணிக்கைக்கான சுகாதார செலவினங்களை சொல்லவே வேண்டியதில்லை.''

புஷ் நிர்வகத்தின் ஆதரவுடன் மற்றும் மறைமுகமாக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஆதரவோடும், தொழிலாள வர்க்கத்தின் மீது தற்போது நடந்துகொண்டிருக்கிற பெருநிறுவன தாக்குதலின் ஒரு அதிதீவிரத்தன்மையை தான் GM இன் அறிவிப்புக் காட்டுகிறது. அண்மைய வாரங்களில் United Airlines உம் US Air உம் தங்களது ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்களை தன்னிச்சையாக இரத்து செய்துவிட்டன. இது பொருளாதாரத்தில் ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார சலுகைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கான ஆரம்பக்கட்டமாகும். இந்த நடைமுறையின் தர்க்கரீதியிலான முடிவு என்னவென்றால், இலாபம் ஈட்டும் முறையில் உருவாகின்ற நெருக்கடியால் உந்தப்பட்டு ஒரு நூற்றாண்டு போராட்டங்களால் அமெரிக்க தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த ஒவ்வொரு சமூக நலன்களையும் அழித்து ஒழிப்பதில் போய் முடிந்திருக்கிறது.

Top of page