World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Despite US pressure, Russia signs nuclear fuel deal with Iran

அமெரிக்க அழுத்தத்தையும் மீறி, ரஷ்யா ஈரானுடன் அணுசக்தி எரிபொருள் ஒப்பந்தத்தை செய்கிறது

By Peter Symonds
2 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் ரஷ்ய, ஈரானுக்கு அணுசக்தி எரிபொருளை கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதானது ஐரோப்பாவில் கவர்ச்சிகரமான தாக்குதல் என்று அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி புஷ் வெறுங்கையுடன்தான் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார் என்பதை அழுத்தமாய் கூறியது. அட்லாண்டிக் கடந்த ஒற்றுமையை பற்றிய வனப்புரைகள் எவ்வளவு இருந்தபோதிலும், ஐரோப்பிய சக்திகள் எந்த முக்கிய பிரச்சினையிலும் சிறிதுகூட விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈராக்கின் ஆழ்ந்து கொண்டிருக்கும் புதைமணலில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கு எந்த ஐரோப்பியப் படைகளும் முன்வரவும் இல்லை.

பிராடஸ்லாவாவில் புஷ் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்து திரும்பிய சில தினங்களுக்கு உள்ளாகவே, ரஷ்யவின் அணுசக்தி துறைத் தலைவர் அலெக்சாந்தர் ருமியன்ட்சேவ், அந்நாட்டின் முதல் அணுசக்தி உலைக்களத்தை கட்டமைப்பதற்கு ரஷ்யர்கள் உதவிசெய்து கொண்டிருக்கும், தெற்கு ஈரானிய நகரான புஷெருக்குப் பறந்து சென்றார். ருமியன்ட்சேவ் அந்த இடத்திலேயே அணு எரிபொருள் பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அடுத்த ஆண்டிற்குள் இந்த உலை இயங்கத் தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புஷெர் திட்டத்துடன் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று அமெரிக்கா பலமுறையும் ரஷ்யவிடம் வலியுறுத்தியிருந்தபோதிலும், அதற்கு எந்த பலனும் இல்லாமற் போய்விட்டது. பிராடஸ்லாவா கூட்டத்தில் புஷ்ஷும் புட்டினும் ஈரான் அணுவாயுதங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒப்புக் கொண்டனர். ஆனால் அந்த ஒற்றுமை அத்துடன் நின்றுவிட்டது. புஷெர் உலைக்களம் உட்பட, ஈரானிய அணுசக்தித்திட்டங்கள் அணுவாயுத வளர்ச்சியை மூடிமறைக்கத்தான் உள்ளன என்ற அமெரிக்க கூற்றை ரஷ்ய அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஈரானிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளரான ஈரானிய தலைமை தேசியபாதுகாப்பு குழுவின் செயலாளரான ஹாசன் ரெளஹனியை புட்டின் மாஸ்கோவில் சந்தித்தார். "ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் அது அணுவாயுதங்கள் உற்பத்தி செய்ய விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை எங்களை நம்பவைத்துள்ளதால், ஈரானுக்கு எல்லாவிதங்களிலும், அணுசக்தி உட்பட அனைத்திலும் ஈரானுக்கு ஒத்துழைப்பை தொடர்ந்து தருவோம்" என்று புட்டின் கூறினார்.

அணுவாயுத எரிபொருள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள முறையில், ரஷ்ய திறமையுடன் வாஷிங்டனை இளக்காரம் செய்துள்ளது. செலவழிக்கப்பட்ட அனைத்து எரிபொருள் தண்டுகளையும் ரஷ்யவிற்கு பழையபடி உபயோகப்படுத்துவதற்காக ஈரான் கொடுக்கவேண்டும் என்றுள்ள விதி ஒன்றுதான் அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே சலுகையாகும். செலவழிக்கப்பட்ட எரிபொருள் தண்டில் இருந்து எடுக்கப்படும் மிகச் சிறிய புளூட்டோனியம் "அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எவ்விதத்திலும் பயன்படாது" என்று ரஷ்யவின் அணுசக்தி நிறுவனம் அறிவித்துவிட்டது.

அப்படியிருந்த போதிலும் கூட, இந்த உடன்படிக்கை அமெரிக்க தேசிய சட்டமன்றத்தில் கடும் பகைவிளைவையே ஏற்படுத்தியிருந்தது. குடியரசுக் கட்சியின் முன்னணி செனட் மன்ற உறுப்பினரான ஜோன் மக்கையின் இந்த உடன்பாட்டை "கிட்டத்தட்ட ஒரு மனச்சிதைவிற்கு ஒப்பானதாகும்" என்று கண்டித்ததோடு, எடின்பரோவில் ஜூலை மாதம் நடக்க இருக்கும் பெரிய தொழில்வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளின் ஜி- 8 உச்சி மாநாட்டிலிருந்து ரஷ்ய ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். புட்டின் ஜனநாயக விரோதியாக இருப்பதாகக் குறைகூறிய மக்கையின் ரஷ்ய ஜனாதிபதி "செல்லம் கொடுக்கப்பட்டதனால் குட்டிச் சுவராகிவிட்ட ஒரு குழந்தையைப் போல்" நடந்து கொள்ளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

Fox News இல் பேசிய மக்கையின் பின்வருமாறு அறிவித்தார்: "ரஷ்யர்கள்-ஈரானியர்களுக்கு இடையே நடந்துள்ள இந்தச் சமீபத்திய நடவடிக்கை நமக்கும் ரஷ்யவிற்கும் இடையே கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நமக்கிடையே இருக்கும் உறவை இது கெடுத்துவிடும். அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் "விளாடிமீர், அடுத்த ஜி-8 மாநாட்டை பொறுத்தவரையில் உங்களுக்கு நல்வரவு இல்லை என்று கூறத் தொடங்கவேண்டும்" என்றார்.

மக்கையினின் இந்தக் கருத்திற்கு, மன்ற உளவுத்துறைக் குழுவில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினரான ஜேன் ஹர்மனுடைய ஆதரவு இருக்கிறது. அவர் CNN ல் கூறியதாவது: "ரஷ்யவுடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஈரான் அணுசக்தியை பெறுவது என்பது ரஷ்ய உட்பட, உலகம் முழுவதிற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்."

ஆயினும், வாஷிங்டன், ரஷ்யவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுப்பதற்கு, தன்னுடைய "ஐரோப்பிய நட்பு நாடுகளை" உறுதியாக நம்பமுடியாது. ஐரோப்பிய குழுவின் வெளியுறவுச் செய்தி தொடர்பாளரான எம்மா உட்வின், செய்தி ஊடகத்திடம் திங்களன்று பேசுகையில், "எங்களுடைய அணுகுமுறையுடன் இயைந்துதான் இந்த அணுசக்தி எரிபொருள் உடன்பாடு உள்ளது" என்றும், சர்வதேச அணுவாயுதப் பரவல் தடுப்பு விதிகளுக்கும் உட்பட்டுத்தான் அது உள்ளது என்றும் கூறினார். மேலும் "புஷெர் (ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம்) சர்வதேச அணுசக்தி அமைப்பின் [International Atomi Energy Agency] கவனமான கண்காணிப்பின் கீழ்தான் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறினார்.

வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதர், டேவிட் மன்னிங் CNN இடத்தில் பேசுகையில், மக்கைனுடைய கருத்துக்களை எதிர்க்கும் வகையில் கூறினார்: "[G-8 கூட்டத்திற்கு] கண்டிப்பாக ரஷ்ய வருகை புரியவேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்." 2006ல் ரஷ்ய கூட G-8 மாநாடு ஒன்றை நடத்தும் திட்டம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஐரோப்பாவில் அமெரிக்காவிற்கு மிக நெருக்க நட்பு நாடான பிரிட்டனை பொறுத்தவரையில்கூட ரஷ்ய- ஈரான் ஒப்பந்தம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை; ஏனெனில் இதில் "முழுவிதமான உத்தரவாதப் பாதுகாப்புக்கள் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.

புஷெர் திட்டத்தை பற்றிய கருத்து வேறுபாடு ஈரானை பற்றிய பரந்த வேறுபாடுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், ஐரோப்பிய ஒன்றிய மூவர் எனப்படும் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டனும், ஈரானிடம் அதன் யுரேனிய அடர்த்தி திட்டம் நிறுத்தப்பட்டால் பரந்த பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு பதிலுக்கு கொடுக்கப்படும் என்ற வகையில் ஒரு தொடக்கவகை உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தன. புஷ் நிர்வாகம் ஐ.நா.பாதுகாப்பு சபையில், அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது என்று குறைகூறி, பொருளாதார தடைகள் அதற்கு எதிராக கொண்டுவருதலை முன்கூட்டியே தவிர்க்கும் இலக்கை இந்த உடன்படிக்கை கொண்டிருக்கக் கூடும்.

கடந்த வாரம் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின்போது, புஷ் ஏட்டளவில் ஐரோப்பிய சக்திகளுடன் ஈரான் உட்பட பல பிரச்சினைகளை கொண்டிருந்த அழுத்தங்களை பெரிதும் குறைக்க முற்பட்டார். "ஈரான் ஒன்றும் ஈராக் அல்ல" என்று கூறியவகையில் ஒரு தூதரகமுறை தீர்விற்கும் ஆதரவு கொடுத்தார்: அமெரிக்கா ஈரானை தாக்க திட்டமிட்டுள்ளது என்ற கருத்து "நகைப்பிற்கு இடமானது" என்றும் அறிவித்தார். அதே நேரத்தில், இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்துவகை தேர்வுகளும் மேசைமீது உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

முக்கிய நலன்கள் பணயம் வைப்பு

இப்படி ஆயுத ஒலியை வாஷிங்டன் எழுப்புவது பிரதானமாக தெஹ்ரானுக்கு எதிராக அல்ல, மாறாக அமெரிக்காவின் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு எதிராக ஆகும். ஈராக்கை அடக்கி, அதன் எண்ணெய் இருப்புக்களையும் தன்வசப்படுத்திய பின், ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், இப்பொழுது சிரியாவிற்கு எதிரான வகையிலும் அத்தகைய அச்சுறுத்தல்கள் என்பது, மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் அமெரிக்கா தடையற்ற முறையில் ஆதிக்கம் கொள்ளவேண்டும் என்ற பேராசையின் ஒரு பகுதிதான். இரண்டு பகுதிகளுக்கும் இடையே மூலோபாய ரீதியில் அமைந்திருக்கும் ஈரான் உலகில் இரண்டாம் பெரிய எரிவாயு இருப்பையும், எண்ணெயில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

தன்னுடைய செல்வாக்கை உறுதிசெய்வதற்காக ஈரானிடம் அணுவாயுத உற்பத்தித்திட்டங்கள் உள்ளன எனக் குற்றம் சாட்டுவது அமெரிக்காவிற்கு செளகரியமான சாக்குப்போக்காகிவிடும். பொருளாதார தடைகள் அல்லது இராணுவ நடவடிக்கை தெஹ்ரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டால் பெரும் இழப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம்தான் ஆளாகும்; ஏனெனில் வளர்ந்து கொண்டிருக்கும் இதனுடைய ஈரானுடனான வணிகம் 2003ல் 20 பில்லியன் டாலர்கள் என்று இருந்திருக்கிறது. மாறாக, அமெரிக்காவோ கடந்த இருபது ஆண்டுகளாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுள்ளதால் அதன் ஈரானுடனான தற்போதைய பொருளாதார தொடர்புகள் முக்கியத்துவம் இல்லாதவை ஆகும்.

தற்போதைக்கு, புஷ் நிர்வாகம் ஒரு அடி பின் வாங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது. ரஷ்ய-ஈரானிய உடன்பாட்டிற்கு வெள்ளை மாளிகையில் இருந்து வெளிப்பட்டுள்ள விடையிறுப்பு, ஒப்புமையில் குறைந்த ஒலியைத்தான் கொண்டுள்ளது. அமெரிக்க செய்தி ஊடகங்களில் வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, ஈரானுக்கு சில பொருளாதார சலுகைகள் கொடுத்து, அது யுரேனிய அடர்த்திக் கூடங்களை அகற்றிவிடுவதற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தக் கூடும், என்ற வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஈரான் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு, இந்த வாரம் வியன்னாவில் நடக்க இருக்கும் IAEA உச்சிமாநாட்டு கூட்டத்தில் எழுப்புவதற்கு அமெரிக்கா அதிக விருப்பம் கொண்டிருக்கவில்லை. அந்தக் கூட்டம் எப்பொழுதும் நடைபெறும் ஒரு தன்மையைத்தான் கொண்டுள்ளது. அதன் இயக்குனரான மகம்மத் எல் பராடி ஈரானுடன் அது தன்னுடைய அணுசக்தி கொள்கை பற்றி இன்னும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று முறையிட்டாலும், தெஹ்ரான் அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதற்கு எந்தவிதச் சான்றும் இல்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கூட்டத்திற்கு முன் நிகழும் செயற்பாடுகளில், அமெரிக்க செய்தி ஊடகம், பாகிஸ்தானிய விஞ்ஞானி அப்துல் காதீர் கான் எவ்வாறு 1987ல் ஈரானுக்கு அணுவாயுத பகுதிப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்தார் என்பதை சுட்டிக்காட்டி, ஈரானுக்கு அணுவாயுத தயாரிப்புக்கள் வேண்டும் என்ற விருப்பம் இருப்பதற்கு அது ஒரு சான்று என்றும் கூறியுள்ளது. அந்த அளிப்பு பற்றிய ஆவணங்களை தந்ததற்காக ஈரானுக்கு எல் பரேடி நன்றி தெரிவித்து, ஈரானிய அதிகாரிகள் முக்கிய அணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பை பெற மறுத்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய குறைந்த சிரத்தையை வாஷிங்டன் காட்டுவது, அமெரிக்க ஆளும் வட்டங்களில் உள்ள அணுகுமுறை பற்றி உள்ள தீவிர வேறுபாடுகளின் பிரதிபலிப்பாகும். CGSக்கு இந்த வாரம் தெரிவித்த கருத்துக்களில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி (Zbigniew Brzezinski) ஈரானிய-ரஷ்ய உடன்பாட்டை ஆதரித்துக் கூறியதுடன் ஐரோப்பாவுடனும் நெருக்கமான தொடர்புகளை கொள்ளவேண்டும் என்று கூறினார். "ரஷ்யர்கள் உண்மையில் சர்வதேச சட்டத்திற்கு இணங்கத்தான் நடந்து கொண்டுள்ளனர். ஈரானியர்கள் ஒரு அணுசக்தி வேலைத்திட்டத்தை வைத்திருக்க உரிமையை உடையவர்கள்" என்று கூறினார்.

ஆயினும், இத்தகைய வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயரீதியானவையாகும். அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு புஷ் நிர்வாக செயற்பாட்டின் விளைவு அல்ல, மாறாக அமெரிக்க கடன் திருகுப்புரிச்சுருளாய் உயர்ந்துள்ளதிலும் யூரோக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளதிலும் வெளிப்படும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியால் இயக்கப்படுகிறது. ஈராக்கில் பேரழிவை சந்தித்துக் கொண்டிருந்தாலும், இரண்டாம் புஷ் நிர்வாகம் ஈரான் மற்றும் சிரியாவிற்கு எதிராக கடுமையான விரோதப்போக்கை அதிகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய-ஈரானிய தூதரக முயற்சிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று கருதினால், அது பேச்சு வார்த்தைகளை கீழறுப்பதற்கும், தெஹ்ரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய உதவிகளை பெறுவதற்கும் ஒரு வழிமுறையாகத்தான் ஆகும். வெள்ளை மாளிகையானது ஐரோப்பிய தூதரக முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும்போது, ஈரான் ஏற்கமறுக்கையில் ஐ.நா. தடைகள் கொண்டுவந்தால் ஐரோப்பா அதற்கு ஆதரவைத் தரும் என்று ஏற்கும் வரை, அத்தகைய நிலைப்பாட்டை கொள்ளலாம் என்று செனட்டர் மக்கையின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக போருக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டுவருகிறது எனக் கூறப்படுதவதை "நகைப்பிற்கிடமானது" என்று புஷ் கூறியிருக்கிறார். ஆனால் நியூயோர்க்கரில் ஜனவரி மாதம், "வரவிருக்கும் போர்கள்" என்ற தலைப்பில் மூத்த செய்தியாளர் சேமர் ஹெர்ஷ், மிக விரிவாக அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள், தாக்குதல்கள் பிரிவு ஆகியவை ஈரானில் இலக்கிடப்பட்டு அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுவாயுதக் கூடங்கள்மீது எவ்வாறு நடத்தப்படும் என்பதை பற்றி விரிவாக, அல்லது ஒரு முழு அளவு ஈரானியத் தாக்குதல் பற்றி, எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் புஷ் நிர்வாகத்தில் உள்ள மிக இராணுவவாத பிரிவை ஆதிக்கம்செய்யும் போக்கிரிகளின் மனோபாவம் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துகிறது; அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் புதிய-ஏமாற்றுக்காரர்கள் என்று இவர்கள்தான் கூறப்படுகின்றனர்.

பென்டகனில் உள்ள இராணுவமில்லாத தலைமைப்பீடம் ஈரானிய அணுவாயுத அச்சுறுத்தல் பற்றி தூதரகப் பேச்சு வார்த்தைகளில், நாம் இராணுவ நடவடிக்கை எடுப்போம் என்ற அச்சத்தை கொடுக்காவிடில், முன்னேற்றம் ஏற்படப்போவது இல்லை என்று வாதிட்டுள்ளது. "புதிய ஏமாற்றுக்காரர்கள் பேச்சுவார்த்தைகள் என்பது மோசமான உடன்பாடு என்று தெரிவிப்பதாக IAEA உடைய மூத்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார். ஈரானியர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரே செயல் அழுத்தம்தான். அதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டும்" என்று ஹெர்ஷ் எழுதியுள்ளார்.

See Also:

பிராடிஸ்லாவாவில் புஷ் - புட்டின் பேச்சுக்களில் அமெரிக்க ரஷ்ய அழுத்தங்கள் ஆதிக்கம் செய்கின்றன

ஐரோப்பாவில் புஷ்: அட்லாண்டிக் கடந்த ஐக்கியம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு கீழே பதட்டங்கள்

வெளியுறவு அமைச்சர் ரைசின் பயணம்
ஈரானைப் பற்றிய அமெரிக்க - ஐரோப்பிய பூசல்கள் ஆழமடைகின்றது

Top of page