World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Trans-Atlantic tensions over EU plan to lift arms embargo on China

சீனாவிற்கு ஆயுதங்கள் விற்பதற்கான தடையை நீக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் மீதாக அட்லாண்டிக் கடந்த பதட்டங்கள்

By John Chan
21 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

1989-ல் தியனென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் சீனாவிற்கு ஆயுதங்கள் விற்பதற்கு விதித்திருந்த தடையை நீக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கத்தை கண்டித்து பெப்ரவரி 2-ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு தீர்மானத்தை இயற்றியிருப்பதானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வளர்ந்துவரும் பதட்டங்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. "சீனாவில் மனித உரிமைகள்'' பற்றிய கவலைகளின் வெளிப்பாடுகளாக அந்தத் தீர்மானம் ஜோடிக்கப்பட்டிருந்தாலும் அந்த தீர்மானமே தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க நலன்களுக்கு வருகின்ற அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நிலவுகின்ற ஆழ்ந்த கவலைகளை சுட்டிக்காட்டுகிறது.

இந்தவாரம் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கின்ற அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை "இந்த அறிவற்ற செயல்போக்கை மறுபரிசீலனை" செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமென்று நாடாளுமன்றம் வலியுறுத்தியது. "ஜப்பான், தென்கொரியா மற்றும் இதர முக்கிய பகுதிகள் உட்பட ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு பல்வேறு நலன்கள் உள்ளன" என்று அது குறிப்பிடுகிறது. அமெரிக்க இராணுவம் சீனாவினால் ஆபத்திற்கு உள்ளாகலாம் என்றும் கூறுகிறது. "ஏனென்றால் அதனிடம் பெருமளவில் ஆயுத பலமுள்ள இராணுவம் பெருகி வருகிறது மற்றும் இந்த பிராந்தியத்தில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லை தகராறுகள் மற்றும் அரசியல் தகராறுகளை அச்சுறுத்தல் மற்றும் படைபலத்தை பயன்படுத்துவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முயலக்கூடும்."

உலகின் இதர பகுதிகளைப் போல் ஆசியாவில் உடனடியாக அச்சுறுத்தலையும் படைபலத்தை பயன்படுத்தும் ஆபத்தும் சீனாவிடமிருந்து அல்ல, ஆனால் அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. 2000-ல் ஆட்சிக்கு வந்தது முதல் புஷ் நிர்வாகத்தின் வடகொரியாவின்பாலான போர் மிரட்டல் ஆத்திரமூட்டுகின்ற வகையில் ஒரு நிரந்தர ஸ்திரமின்மை மற்றும் எதிர்கால மோதலுக்கான சாத்தியக் கூறாகவும் அமைந்திருக்கிறது. சீனாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதம் விற்பதை வாஷிங்டன் ஆட்சேபிப்பதற்கு காரணம் அது அமெரிக்க இராணுவத்தின் வல்லமையை அரித்தழிக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது மற்றும் அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் மூலோபாய அபிலாஷைகளை பின்பற்றுவதற்கு ஆத்திரமூட்டும் வழி முறைகளை கையாளுவதற்கான ஆற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் குறிப்பாக பிரான்சிற்கு எதிராக வெளியிடப்பட்ட உயர்தார்மீக வேடமும் கடும் சொற்களும்தான் மேலாதிக்கம் செய்தன. குடியரசுக் கட்சி உறுப்பினர் Mark Kirk பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கை தனிமைப்படுத்தி தாக்குதலை தொடுத்தார். "[அந்த முடிவு] ஆசியாவின் பெரும்பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் மோதலுக்கான வித்துக்களை விதைக்கும், குறுகிய கால இலாபங்களுக்காக விற்கப்படும் பிரெஞ்சு ஆயுதங்களால் அமெரிக்கர்கள் கொல்லப்படுகின்ற நிலை ஏற்படக்கூடும்" என்று அவர் அறிவித்தார்.

அந்த மசோதாவை அவரோடு சேர்ந்து முன்மொழிந்த ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த Tom Lantos அவருக்கு இணையாக 2008 ஒலிம்பிக்கிற்கு பின் சீனா தைவானைத் தாக்குகின்ற ஆபத்துக்கள் பற்றி எச்சரித்தார். அதற்குப் பின்னர் அவர் கூறினார்: "இந்த சூழ்நிலைகள் சீனாவிற்கு ஆயுதங்களை தருவதற்கான தடை நீக்கப்படுவது குறித்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆலோசனைகள் நடந்து வருவது மிகப்பெருமளவில் ஆத்திரமூட்டுவதாகும்." ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையினால் உந்தப்பட்ட பேராசையை அவர் கண்டித்தார், மேலும் ''சில ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் போடுகின்ற இரட்டை வேடமும் பேராசையின் அளவும் நமக்கு குமட்டலைத் தருகிறது'' என்றும் கூறினார்.

அந்தத் தீர்மானம் மகத்தான இருதரப்பு ஆதரவோடு நிறைவேறியது--- ஆதரவாக 411 எதிராக 3 வாக்குகள் பதிவாகியும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்குமானால், எதிர்நடவடிக்கை தொடர்பான மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. அண்மையில் வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு சற்று முன்னர், அரிசோனா செனட்டர் Jon Kyl ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டார். அதில் "அமெரிக்காவின் நலன்களை கருத்தில் கொண்டு முக்கிய சோதனைகளிலும் பிரச்சனைகளிலும் தற்காலிக விருப்பக் கூட்டணிகளை உருவாக்குவதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்" என்று அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்தது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஈராக் படையெடுப்பில் போன்று வாஷிங்டன் இதர கூட்டணியினரை தேட வேண்டும்.

ஐரோப்பாவில் தனது கவர்ச்சி தாக்குதல் என்று அழைக்கப்பட்ட பயணத்தில் கருத்து வேறுபாடுகளை அமுக்கி வாசிக்க ரைஸ் முயன்றார், ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பெருகிவருகின்ற நெருக்கடிகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்பட்டன. தெஹ்ரானுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சு வார்த்தைகளை வெட்டி முறிக்கின்ற வகையில் ஈரானின் அணுத்திட்டங்கள் தொடர்பாக புஷ் நிர்வாகம் போர் வெறிப்போக்கை மேற்கொண்டிருக்கிறது, மற்றும் ஈராக்கில் நடைபெற்றது போன்று வளர்ந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உறவுகளை நிலைகுலையவைக்கும் அச்சுறுத்தலை விடுத்திருக்கிறது.

ஆயுதங்கள் தடைநீக்கம் தொடர்பாக விவாதம் மிக குறைந்த அளவிற்கு நடத்தப்பட்டாலும் கூர்மையான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகக் குழுவின் தலைவர் Jose Barroso-வுடன் கலந்து கொண்ட கூட்டு நிருபர்கள் மாநாட்டில் ரைஸ் இன்னும் அதுபற்றி முடிவு எடுக்கப்படவேண்டி இருப்பதை தான் புரிந்துகொள்வதாகவும் மற்றும் அமெரிக்காவின் கவலைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். என்றாலும், சில நிமிடங்களில் Barroso திட்டவட்டமாக வெளியிட்ட அறிவிப்பில், "ஆயுதங்கள் தடை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயன்று வருகிறது" என்று குறிப்பிட்டார்.

சென்ற டிசம்பரில் சீனாவுடன் ஒரு உச்சி மாநாடு நடத்திய பின்னர் ஆயுதங்கள் விற்பனைத்தடையை நீக்குவது என்று கொள்கையளவில் ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டது. இதில் ஆயுதங்களுக்கு மேற்பட்ட விவகாரங்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்பது இருதரப்பினருக்குமே தெரியும். பெய்ஜிங்கை பொறுத்தவரை தியனன்மென் சதுக்க படுகொலையை ஆறப்போடுவதற்கு இந்தத் தடை நீக்கம் உதவும், அந்தப் பிரச்சனை இன்னும் சீனாவில் ஒரு கொந்தளிப்பான விவகாரமாகவே உள்ளது மற்றும் இந்தத் தடை நீக்கத்தின் மூலம் ஐரோப்பாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளையும், முடிந்தால் மூலோபாய உறவுகளையும் சீனா நிலைநாட்டிக்கொள்ள முடியும்.

சீனாவில் தங்களது பொருளாதார நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்தை முறியடிக்கவும் ஒரு வழிமுறையாக ஐரோப்பிய வல்லரசுகள் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிற்கு ஆயுதங்களை விற்பதில் பெரிய நாடுகளும் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் சீனாவிடம் தங்களது வர்த்தகத்தில் நிலவுகின்ற பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகத்தான்.

இந்த முன்மொழிவிற்கு பிரதான எதிர்ப்பு பிரிட்டனிடமிருந்து வருகிறது, அது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் அனுசரித்து செல்ல முயன்று வருகிறது. லண்டன் தடைநீக்கத்தை ஒட்டு மொத்தமாக எதிர்க்கவில்லை, ஆனால் அந்த நடவடிக்கையை தாமதப்படுத்தவும் வாஷிங்டனை சமாதனப்படுத்தவும் சீனாவிற்கு ஆயுதங்கள் விற்பதை ஒழுங்குபடுத்த ஒரு ''நெறிமுறை'' தேவையென்று வற்புறுத்தியது. பிரிட்டனின் வெளியுறவு செயலர் ஜாக் ஸ்ட்ரோ சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ''நீங்கள் எதிர்பார்க்கின்ற விளைவுகள் அதனால் ஏற்படாது என்று'' வாஷிங்டனை ஏற்க செய்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரான்சையும் ஜேர்மனியையும் போன்று பிரிட்டன் தனது பொருளாதார நலன்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. பிரான்சும் பிரிட்டனும் ஆயுதங்களை மிகப் பெருமளவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் குழுவை சார்ந்ததாகும். ஆயுதங்கள் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், சீனாவிற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆயுதங்கள் விற்பனை 2001-ல் 54 மில்லியன் யூரோக்களிலிருந்து 2003-ல் 416 மில்லியனாக உயர்ந்திருப்பது பிரதானமாக பிரிட்டன் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளிலிருந்து வரும் ஆயுத விற்பனையினால்தான். எடுத்துக்காட்டாக, 2003-ல் பிரான்ஸ் குண்டுகள், டார்பிடோக்கள் மற்றும் ராக்கெட்டுக்களை 2 மில்லியன் யூரோக்கள் அளவிற்கும், இரசாயனவியல் மற்றும் உயிரியல் விஷப் பொருள்களை 2,79,000 யூரோக்கள் அளவிற்கும், இராணுவ விமானங்களை 43 மில்லியன் யூரோக்கள் அளவிற்கும், எலக்ட்ரானிக் சாதனங்களை 98 மில்லியன் யூரோக்கள் அளவிற்கும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது.

தற்போது சீன ஆயுத இறக்குமதிகளில் 90 சதவீதம் ரஷ்யா மற்றும் பிற முன்னாள் சோவியத் அரசுகளிடமிருந்து வருகின்றன. குறிப்பாக வளம் செறிந்த, ஸ்திரமற்ற மத்திய ஆசிய குடியரசுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை முறியடிக்க முயன்று வருவதில் ரஷ்யா ஏற்கனவே சீனாவிற்கு மூலோபாய பங்காளியாகும். ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் ஒரு கூட்டணியை நோக்கி சென்று கொண்டிருப்பது யூரேசிய வல்லரசுகளின் ஒரு கூட்டால் சவால்விடப்படுகின்ற சாத்தியக் கூறை வாஷிங்டன் எதிர்கொண்டுள்ளது.

அத்தகையதொரு சாத்தியக்கூறு தவிர்க்க முடியாததாகும், அதற்காகத்தான் வாஷிங்டன் அஞ்சுகிறது. Financial Times வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, ஒரு அண்மைக் கால சிஐஏ இன் மதிப்பீடு ஐரோப்பாவிற்கும் சீனாவிற்குமிடையே வளர்ந்து வருகின்ற தொடர்புகள் ஐரோப்பிய வல்லரசுகளை அமெரிக்காவுடனான நேட்டோ கூட்டணியிலிருந்து விலகிச்செல்ல செய்துவிடும். "ஒரு ஐரோப்பிய - சீன கூட்டணி தற்போது சாத்தியமில்லாததாக தோன்றினாலும், இனி சிந்திக்கவே முடியாதது அல்ல." என்று அறிக்கை குறிப்பிட்டது.

வலதுசாரி வாஷிங்டன் டைம்சில் பெப்ரவரி 3-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரை ஐரோப்பிய- சீன உறவுகள் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்திற்கு சவாலாக இருக்கும் என்று அதேபோன்று கவலைகளை எழுப்பியுள்ளது மற்றும் வளர்ந்துவரும் பொருளாதார உறவுகளையும் அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது "பிரான்சும் ஜேர்மனியும் சீனாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை அது அமெரிக்க வலிமைக்கு 'எதிர் எடையாக' உருவாக்கும் ஒரு வழியாகப் பார்க்கின்றன. பிரிட்டன் இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய அரசுகள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு ஆபத்தான வழியில் இட்டுச்செல்லப்படுகின்றன. சென்ற ஆண்டு முதல் 10 மாதங்களில் சீனாவுடனான வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக பற்றாக்குறை 73 பில்லியன் டாலர்களாகும். ஜேர்மன் தலைமையில் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவிற்கு தங்களது உற்பத்தியை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மற்றும் பின்னர் அங்கிருந்து கொண்டு உற்பத்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு திரும்ப அனுப்புகின்றனர். ஐரோப்பியர்கள் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக தங்களது ஏற்றுமதிகளை பெருக்க தீவிரம் காட்டுகின்றனர் மற்றும் பெய்ஜிங் ஆயுதங்களையும் இராணுவ தொழில் நுட்பத்தையும் விரும்புகிறது."

ஆயுத விற்பனைகள் தொடங்குவதற்கு முன்னரே கூட, அமெரிக்காவானது சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏற்றுமதியாளர்களிடம் தோல்வி அடைந்துவிட்டது. 2004-ல் சீன இறக்குமதிகள் 500 பில்லியன் டாலர்களுக்கு மேலானது, அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு அடுத்து மூன்றாவது பெரிய இறக்குமதியாளர் சீனா ஆகும். என்றாலும் சீன சந்தையில் அமெரிக்காவின் பங்கு வெறுமனே 8 சதவீதம்தான், இது 2002-ல் 9 சதவீதமாக இருந்ததிலிருந்து வீழ்ச்சியுற்றது மற்றும் அமெரிக்காவின் பங்கு ஐரோப்பிய மற்றும் ஜப்பானின் பங்கை விடவும் மிகக் குறைவாக உள்ளது.

அமெரிக்க தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் (NAM) செய்துள்ள ஆய்வு, சீனாவுடனான அமெரிக்க வர்த்தகத்தில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை ஒரு புதிய சாதனை அளவாக சென்ற ஆண்டு 160 பில்லியன் டாலர்களாகும் என்று குறிப்பிட்டது. இப்படி பற்றாக்குறை வளர்வதற்கு காரணம் பகுதி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானிடமிருந்து வளர்ந்து வரும் போட்டி ஆகும். அடுத்த 4 ஆண்டுகளில் சீனாவிற்கான ஏற்றுமதிகளை 100 பில்லியன் டாலர்களாக மும்மடங்கு உயர்த்துவதற்கு தங்களது போட்டி நிறுவனங்களை சமாளிக்க புஷ் நிர்வாகம் அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு தீவிர உதவி தர வேண்டும் என்று NAM கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா வெளிநாட்டு மத்திய வங்கிகளை குறிப்பாக சீன, ஜப்பான், தென்கொரியா, தைவான் - மத்திய வங்கிகளை டாலர்கள் அடிப்படையிலான சொத்துக்களை வாங்குவதன்மூலம் அமெரிக்காவின் பிரம்மாண்டமான பற்றாக்குறைக்கு நிதியளிக்க நம்பியிருப்பதால் வாஷிங்டனின் பொருளாதார அச்சங்கள் மேலும் அதிகரிக்கின்றன. டாலருக்கு எதிராக யூரோவின் மதிப்பு உயர்ந்து கொண்டு வருவது உலகின் பிரதான செலாவணி என்ற நிலையிலிருந்து டாலர் பெருமளவில் மாற்றப்படுகின்ற ஒரு ஆபத்தை உருவாக்கியிருப்பது, அமெரிக்காவில் ஒரு நிதி மற்றும் நாணய நெருக்கடியை உண்டுபண்ணும்.

அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கு அப்பாலும், ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத ஏற்றுமதி தடையை நீக்குவதில் திட்டப்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்காவின் பதில் முன்கணிப்பிடமுடியாதது. ஏனென்றால் ஐரோப்பிய - சீன உறவுகள் வளர்வதை வெட்டி முறிப்பதற்காக, பூகோளத்தின் இதர பகுதிகளில் செய்வதுபோன்று புஷ் நிர்வாகம், தென் கிழக்கு ஆசியாவில் ஏதாவதொரு சிக்கல் நிறைந்த பகுதியை கிளறிவிடுவது உட்பட, ஈவிரக்கமற்ற வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் எதிர்பாராத நடவடிக்கைகளில் இறங்கலாம்.

Top of page