World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australia: SEP launches Werriwa by-election campaign

ஆஸ்திரேலியா: சோசலிச சமத்துவக் கட்சி வெரிவாவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கியது

By Richard Phillips
28 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) மார்ச் 19-ல் நடைபெறவிருக்கும் வெரிவா இடைத்தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை இரவு Ingleburn-ல் வெற்றிகரமான ஒரு பொதுக்கூட்டத்தோடு ஆரம்பித்தது. வெரிவாவில் இடைத்தேர்தல், பிரதானமாக தொழிலாள வர்க்க வாக்காளர்கள் நிறைந்த, மேற்கு சிட்னியில் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாக உள்ள இந்த பகுதியில், 1996-க்குப் பின் தொடர்ந்து 4-வது தடவையாக தொழிற்கட்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தலைவராயிருந்த மார்க் லாதெம் தேர்தல் முடிந்து 3 மாதங்களில் ஜனவரி மாதம் திடீரென்று பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து நடைபெறுகிறது.

வெரிவாவிற்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் மைக் ஹெட் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி மத்திய குழு உறுப்பினர் டெரி குக் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் பிரதான பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். உள்ளூரில் வசிப்பவர்களும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சார மேலாளர் ஜேம்ஸ் கோகன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார், 16 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று விளக்கினார். உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எதிர்நோக்குகின்ற மையமான அரசியல் பிரச்சனைகளை -ஈராக்கில் போர் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையும் வறுமையும்- பற்றி ஒரு பரந்த கலந்துரையாடல்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில்தான் சோசலிச சமத்துவக் கட்சி தலையிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மைக் ஹெட் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தொடர்ந்து கட்டுரைகளை எழுதுபவர் மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் ஒரு சட்ட விரிவுரையாளர், 2004 மத்திய தேர்தலில் வெரிவாவில் சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர். ஹோவார்டு அரசாங்கம் 450 துருப்புக்களை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளுக்கு உதவுவதற்காக ஈராக்கிற்கு அனுப்புவதென்ற சென்ற வாரம் எடுத்த முடிவை சோசலிச சமத்துவக் கட்சி ஐயத்திற்கிடமின்றி கண்டிப்பதாக விளக்கி ஹெட் தனது உரையைத் தொடக்கினார்.

"எங்களது பிரச்சாரத்தின் மையமாக அமைந்திருப்பது அனைத்து ஆஸ்திரேலிய, அமெரிக்க, பிரிட்டிஷ், ஜப்பானிய மற்றும் இதர வெளிநாட்டுத் துருப்புக்களும் முழுமையாகவும், உடனடியாகவும் வெளியேறுவதற்கான கோரிக்கையாகும்'' என்று அவர் குறிப்பிட்டார். "அவர்களது நாட்டைச் சூறையாடியதற்காகவும் பேரழிவை ஏற்படுத்தியதற்காகவும் ஈராக் மக்களுக்கு தகுந்த இழப்பீடுகளையும் சேத இழப்பீடுகளையும் தரவேண்டும் என நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம்" என அவர் கூறினார்.

ஈராக்கில் அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு உத்திரவாதம் செய்து தருவதற்காக கூடுதல் துருப்புக்கள் தேவை என்ற ஹோவர்டின் கூற்று "அபத்தமானது மற்றும் முட்டாள்தனமானது" என்று சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் கூறினார். "இதில் உண்மை என்னவென்றால், அது ஜனநாயகத்தை நோக்கி ஓரடி எடுத்து வைப்பது என்பதற்கு பதிலாக, அந்த நாடகத் தேர்தலானது வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் பீரங்கிக் குண்டுகளின் கீழிருந்து வந்ததாகும், மற்றும் அமெரிக்கா நியமித்துள்ள பொம்மை அரசாங்கத்தின் இராணுவச் சட்ட நிலைமைகளில் நடைபெற்ற தேர்தலாகும்."

கூடுதல் ஆஸ்திரேலிய துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, ஆனால் ஈராக் போரின் நவீன- காலனித்துவத் தன்மையும் சட்டவிரோதப் போக்கையும் மேலும் அம்பலப்படுத்துவதாக அவர் கூறினார். "ஹோவார்ட் தானே ஒப்புக்கொண்டிருப்பதைப் போல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற ஈராக் அதிகாரிகளிடமிருந்து துருப்புக்களுக்கான கோரிக்கை வரவில்லை, மாறாக பிரதான ஆக்கிரமிப்பு வல்லரசுகளிடமிருந்துதான் வருகிறது."

ஈராக்கில் மோசமடைந்து கொண்டு வருகின்ற இராணுவ மற்றும் அரசியல் புதைசேற்றிலிருந்து ஐரோப்பிய நாடுகள் துருப்புகளை அனுப்ப மறுப்பதால் அல்லது வாபஸ்வாங்கிக் கொண்டிருப்பதால், வாஷிங்டனின் சிதைந்து கொண்டு வரும் ''விருப்பக் கூட்டணிக்கு" தனது ஆதரவை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென்ற விருப்பமுள்ள சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என ஹெட் விளக்கினார்.

அமெரிக்கா தலைமையிலான இராணுவ முற்றுகை ஈராக்கோடு முடிந்து விடப்போவதில்லை, என அவர் எச்சரித்தார். "வாஷிங்டனின் இராணுவவாதம் நவீன-காலனித்துவத்தின் ஒரு புதிய காலக்கட்டமும், பெரிய வல்லரசுப் போட்டியும் திறக்கப்படுகின்றதைக் குறிக்கிறது, அமெரிக்காவின் நீடித்த பொருளாதார வீழ்ச்சியை மாற்றியமைப்பதற்கு புஷ் நிர்வாகம் அமெரிக்க இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, அமெரிக்காவை அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களுக்கு எதிராக உயர்ந்த தேசிய-அரசு ஆக நிலைநாட்டவும் புஷ் நிர்வாகம் முயன்று வருகிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய இராணுவவாதத்தை பெருக்கிக் கொள்வதற்கு உறுதி செய்து தரும் வகையில் வாஷிங்டன் ஆதரவு தனக்கு வேண்டுமென்பதற்காகவே ஹோவார்ட் இந்த கிரிமினல் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். புதிய ஆஸ்திரேலிய துருப்பு அனுப்புதலில் உறுதிமொழி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான ஜப்பானுடன் ஒருங்கிணைந்த நெருக்கமான உறவுக்கு அனுமதி வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியிடமிருந்து உண்மையான எதிர்ப்பு எதுவும் வராது என்பதை அறிந்துதான், ஹோவார்ட் துருப்புக்களை அனுப்புவதில் நம்பிக்கையோடிருக்கிறார் என சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விளக்கினார். "ஈராக் மீது படையெடுப்பதற்கு புஷ் மற்றும் ஹோவர்ட் அரசாங்கங்கள் கூறிய பொய்களையும் கிரிமினல் குற்ற செயல்களையும் எந்த நேரத்திலும் லாதெம் அல்லது வேறு எந்த தொழிற்கட்சி தலைவரும் கண்டிக்கவில்லை. அல்லது ஆஸ்திரேலிய குடிமக்களான டேவிட் ஹிக்ஸ் மற்றும் மம்தோ ஹபீப் உட்பட சட்டவிரோதமாக 'எதிரிக்காக போரிடுபவர்'' என்று முத்திரை குத்தப்பட்டு மற்றும் ஈராக் குடிமக்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாகவும் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

"தொழிற்கட்சி தாராண்மைவாதிகளுடன் இணைந்து செயல்பட்டிருப்பது வெளிநாட்டுக் கொள்கையின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை." பொது சுகாதாரம், கல்வி மற்றும் இதர அடிப்படை சமூக தேவைகளை கீழறுக்கும் கொள்கை திட்டமிடலை தொழிற்கட்சித் தலைவர் Beazley முழுமையாக ஆதரித்தார். ஹோவார்ட் அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு தொழிற்கட்சி உடன்பட்டது மற்றும் இரகசியமாக மக்களை கைது செய்து விசாரணை செய்வதற்கு போலீசாருக்கும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கும் பெருமளவிலான புதிய அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்கு உதவியது" என ஹெட் குறிப்பிட்டார்.

இந்தக் கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது இலாப அமைப்பு முறையின் ஆழமாகிவரும் நெருக்கடிதான் என்பதை ஹெட் விளக்கினார். இராணுவவாதமும் போரும் வெடித்திருப்பது மற்றும் பெருகிவரும் சமத்துவமின்மை பெருகி இருப்பதற்கும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கும் முற்போக்கு பதில் ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சுயாதீனமான உழைக்கும் மக்கள் இயக்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் கட்டுவதாகும் என்பதை அவர் விளக்கினார். அந்தப் போராட்டத்தின் ஒரு முக்கிய பாகமாகத்தான் வெரிவா தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பங்கெடுத்துக் கொள்கிறது.

தொழிற்கட்சியின் நிலைச்சான்று

சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டெரி குக் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நிலைச்சான்றை ஆராய்ந்தார், குறிப்பாக ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கத்தின் 13 ஆண்டு கால ஆட்சி பற்றி குறிப்பாக குவிமையப்படுத்தினார்.

முன்னாள் தொழிற்சங்க அலுவலரும், சிறு வர்த்தகருமான Chris Hayes தொழிற்கட்சியின் வெரிவா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்ட்டிருப்பது, ALP பணக்காரர்களது நலன்களுக்காக பாடுபடும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழிற்கட்சி தலைவர் Kim Beazley- வெளிப்படையாக அறிவித்த கருத்துக்களை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கம் என்கிற வலதுசாரி அமைப்பின் முன்னாள் தேசிய துணை செயலாளராகவும் போலீஸ் கூட்டமைப்பிற்கு ஆலோசகராகவும் பணியாற்றிய Hayes, தொழிற்கட்சியும் தொழிற்சங்க இயக்கமும் பெருவர்த்தகத்தின் நேரடி கருவியாக மாற்றப்பட்டுவிட்டதன் சின்னமாக விளங்குகிறார் என குக் வலியுறுத்தினார்.

ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவம் என்ற நிலைச்சான்றை பயன்படுத்தி Hayes 1999-ல் அவரே வர்த்தகத்தில் "தொழில்துறை உறவுகள் மத்தியஸ்தராக பணியைத் தொடக்கினார்." தொழிற்துறை கிளர்ச்சிகளை எவ்வவளவு கடுமையாக நசுக்கி அதேவேளை பாடுபட்டுப் பெற்ற உரிமைகளை பறிப்பது என முதலாளிக்கு ஆலோசனை வழங்கும் ஒரு ஏஜெண்டை மரியாதையாக குறிக்கும் சொல் அது" என்று குக் குறிப்பிட்டார். அவருடைய வாடிக்கையாளர்களில் சிட்னி விமான நிலைய கழகம், தேசிய குற்ற ஆணையம், அச்சுத் தொழில்துறை முதலாளிகள், சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லம் நடத்துவோர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

ஹோவார்டின் புதிய தொழில்துறை உறவு சீர்திருத்தங்கள் பற்றி தொழிற்சங்க அதிகாரத்துவம் அண்மையில் புகார்கள் கூறியிருப்பது பற்றி குறிப்பிட்ட பேச்சாளர், இந்த கூட்டணி அரசாங்கம் ஹாக்-கீட்டிங் அரசாங்கம் செய்ததை --கட்டுமான தொழிலாளர் சம்மேளன தொழிற்சங்கத்தை சிதைத்தது உழைக்கும் மக்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டியது ஆகிய இவற்றை -செய்யவில்லை--

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொழிற்கட்சி நடத்திய தாக்குதலால், ஊதியங்களில் இருந்து இலாபத்தை நோக்கி ஒரு பெரிய மாற்றம் ஏற்படுத்துவதற்கு உறுதி செய்து தந்தது, அதன்மூலம் கடுமையாக போராடிப் பெற்ற ஊழியர்களது சலுகைகளை இரத்து செய்ததுடன் ஒரு மலிவு ஊதியமுள்ள தொழிலாளரை உருவாக்கி, 1996-ல் ஹோவார்ட் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி செய்தது. ஹோவார்டின் கீழ் ஊதியங்களும் சலுகைகளும் நசுக்கப்படுவதை தொழிற்சங்கங்கள் கண்காணித்தன என்று அவர் கூறினார்.

தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் பெருவர்த்தகத்தின் நேரடி ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றிருப்பது உற்பத்தியின் பூகோளமயமான தன்மையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது, அது தொழிற்கட்சியின் தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையை நிரந்தரமாக கீழறுத்துவிட்டது என்று குக் குறிப்பிட்டார். "தொழிற்கட்சிக்கு புத்துயிர் ஊட்ட முடியாது,'' ஒரு காலத்தில் அது அடிப்படையாகக் கொண்டிருந்த தேசிய சீர்திருத்தவாத முன்னோக்கிற்கும் புத்துயிர் ஊட்ட முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொழிற்கட்சியின் நிலைச்சான்று குறித்தும் அதன் வெரிவா இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்தும் மம்தோ ஹபீப்பிற்கு ஹோவார்ட் அரசாங்கம் தந்த கிரிமினல் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர், அந்த கேள்விகள் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு ஹெட்டிற்கும் குக்கிற்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் நிதி வசூலிப்புடனும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடுத்த மூன்று வாரங்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதுடனும் கூட்டம் நிறைவுற்றது.

1989-ல் தியனன்மென் சதுக்க படுகொலைகளைத் தொடர்ந்து சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்துள்ள Lu Jian உலக சோசலிச வலைத்தளத்திடம் பேசினார். இதற்கு முன்னர் தொழிற்கட்சியை ஆதரித்த அவர், மேலும் 450 ஆஸ்திரேலிய துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதாக ஹோவார்ட் அரசாங்கம் அறிவித்திருப்பதை எதிர்க்க மறுத்துவிட்ட தொழிற்கட்சி பற்றி கவலையுற்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.

"சென்ற தேர்தலில் போருக்கு எதிராக தொழிற்கட்சி ஏதாவது கூறும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை, எனவே ஹோவார்ட் வட்டி விகிதங்கள் பற்றி மக்களுக்கு அச்சமூட்டி, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"அவர்கள் ஏன் அப்படி மவுனம் சாதித்தார்கள் என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. அவர்கள் சராசரி மனிதனின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கக் கூடும், ஆனால் எனக்குத் தெரிந்த எவரும் ஈராக் மீதான படையெடுப்பை ஆதரிக்கவில்லை. இன்றிரவு உங்களது பேச்சாளர்கள் குறிப்பிட்ட பிரதான பிரச்சனையாக இதுதான் இந்தத் தேர்தலில் இடம்பெறும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

"ஈராக் நிலவரம் படுமோசமாகப் போகிறது என்பது தெளிவாக உள்ளது எல்லா நேரங்களிலுமே இதர நாடுகளை புஷ் அச்சுறுத்திக்கொண்டு வருவதை கேட்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. உள்ளூர் சமுதாயத்தில் நிலவுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட பிரச்சனைகள் பற்றி நான் கவலைப்படுகிறேன். ஈராக்கைப் போன்று, அரசியல்வாதிகள் எவரும் சென்ற தேர்தலில் இதைப்பற்றி பேசவில்லை, இந்தத் தேர்தலிலும் எவரும் அதுபற்றி உண்மையிலேயே பேசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை"

Escol Park பகுதியைச் சார்ந்த வேலையில்லாதிருக்கும் ஒற்றைதாயான நரல்லே கெல்லி உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஈராக் படையெடுப்பை அவர் எதிர்த்தார் மற்றும் அந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் முன்னெடுத்து வைத்த எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஆனால் புஷ் ஹோவார்ட் மற்றும் மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை மற்றும் மக்களை அதைப் பின்பற்றுமாறு இழுத்துச்சென்றனர்.

"கேம்பல் டவுன் TAFE கல்லூரியில் சமூக நலன் பற்றி படித்தேன், எனவே எனக்கு சமூக சமத்துவமின்மைகள் அனைத்தும் நன்றாகத் தெரியும், ஆனால் இன்றிரவு ஏராளமான பிற சமூக அநீதிகள் பற்றி எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்," என்று அப்பெண் கூறினார்.

ஆஸ்திரேலிய அறக்கட்டளை பணியில் ஈடுபட்டிருந்த தமது அனுபவத்தை எடுத்துரைத்தார், அரசாங்க நலன்புரி அமைப்பான சென்டர்லிங், அதேபோல ஆஸ்திரேலிய அறக்கட்டளை அமைப்பு ஆகியவை நிரந்தரமாக நலன்புரி உதவி பெறுவோரை ''பயமுறுத்தும்'' வகையில் அவற்றை வெட்டிவிடுவதாக அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன என்று கூறினார். தொழிற்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று எப்போதுமே என்னிடம் சொல்லுவார் என்று குறிப்பிட்ட கெல்லி "தொழிற்கட்சி பரிணாம வளர்ச்சி பற்றிய உங்களது மதிப்பீட்டை ஏற்றுக்கொள்கிறேன், அது தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டார்.

Top of page