World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush administration tries to suppress evidence

US air traffic authority had multiple Bin Laden hijack warnings before 9/11

சான்றுகளை புஷ் நிர்வாகம் ஒடுக்க முயற்சி

9/11 க்கு முன்னர் பின் லேடன் விமானங்களை கடத்துவதற்கான திட்டம் பற்றிய பல எச்சரிக்கைகள் அமெரிக்க விமானக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு வந்தன

By Patrick Martin
11 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்க முயன்ற 9/11 கமிஷன் அறிக்கையின்படி, 2001 செப்டம்பர் 11 ல் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அல் கொய்தாவும், ஒசமா பின் லேடனும் விமானங்களை கடத்தி தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற சாத்தியக்கூறுகளை எச்சரிக்கும் டசின் கணக்கான புலனாய்வு அறிக்கைகள் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்கு (Federal Aviation Administration) கிடைத்தது.

9/11 கமிஷன் ஆவணத்தின் முதல் அறிக்கையை நேற்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. ஆகஸ்டில் அது கலைக்கப்படும் முன், சென்ற கோடை காலத்திலேயே அந்த கண்டுபிடிப்பிற்கு கமிஷன் ஒப்புதல் அளித்தது. புஷ் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள்காட்டி அந்த ஆவணம் வெளியிடப்படுவதை ஐந்து மாதங்களுக்கு மேல் தடுத்து நிறுத்தியது. இது புஷ்ஷின் மறுதேர்தல் பிரச்சார அரசியல் நோக்கங்களுக்கு பயன்பட்டது. அந்த ஆவணம் நிர்வாகத்தின் அப்பட்டமான கவனக்குறைவை அல்லது ---அதைவிட மோசமாக--- எடுத்துக்காட்டிவிடாது தடுப்பதற்காக 2004 ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவிற்கு முன்னர் வெளியிடப்படவில்லை.

9/11 கமிஷனின் முன்னாள் அதிகாரிகள் டைம்ஸிற்கு பேட்டியளித்ததன்படி, புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 க்கு முன்னர் FAA வின் செயல்பாடு பற்றிய இரண்டு ரகசிய அறிக்கைகளுக்கும் இறுதியாக ஒப்புதல் வழங்கியது. மற்றும் 120 பக்கங்களைக் கொண்ட ரகசியம் அல்லாதது என்று பகுப்புச் செய்யப்பட்ட ஆவணத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் புஷ் நிர்வாகம் ஒப்புதல் அளித்து அவற்றை தேசிய ஆவண காப்பகங்களுக்கு அளித்தது. இந்த ரகசிய பகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆவணம் மிகக் கடுமையாக, "மறுதிருத்தம்'' செய்யப்பட்டு கணிசமான பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தாலும் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, "அரசாங்க ரகசியமல்ல என்று மறுபகுப்பு செய்யப்பட்ட விவரம் இதுவரை இல்லாத அளவிற்கு விமானங்களுக்கு ஒரு தாக்குதல் அச்சுறுத்தல் பற்றி விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு மிக உறுதியான எச்சரிக்கை செய்வதாக அமைந்திருந்தது. மற்றும் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்து துறை தவறிவிட்டதையும்" சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ரகசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அறிக்கையில், FAA அதிகாரிகள் "ஒரு தவறான பாதுகாப்பு உணர்வினால் மந்தப்படுத்தப்பட்டுவிட்டனர். மற்றும் புலனாய்வில் ஒரு உண்மையான பெருகிவரும் அச்சுறுத்தல் வரும் என்ற எச்சரிக்கையானது, 9/11 வரை பாதுகாப்பு நடைமுறைகளில் கணிசமான அதிகரிப்புகளை ஊக்குவிக்கவில்லை" என்று அந்த அறிக்கை கூறுவதாக டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 11 க்கு முந்திய ஐந்து மாத காலத்தில் பின் லேடன் அல்லது அல் கொய்தாவை குறிப்பிட்டு 52 புலனாய்வு அறிக்கைகளை தங்களது சொந்த பாதுகாப்பு கிளையிலிருந்து FAA அதிகாரிகள் பெற்றனர். அந்த நிறுவனம், தலைமை சுற்றுக்கு விட்ட புலனாய்வு சுருக்கக் குறிப்புகளில் பாதியில் பயங்கரவாத தலைவர் அல்லது அவருடைய சங்கிலித்தொடர் போன்ற அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஐந்து அறிக்கைகளில் விமானங்களை கடத்துவதில் அல்கொய்தாவின் ஆற்றல்பற்றி கலைந்துரையாடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இரண்டு தற்கொலை நடவடிக்கைகளைப்பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முந்தைய அறிக்கைகளில் FAA, விமானத் தொழிற்துறைக்கு 2001 கோடைக் காலத்திலும் இளவேனிற் காலத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் விமானங்களை கடத்துவதற்குரிய சாத்தியக்கூறுகள் பற்றி பொதுவாக ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. 9/11 கமிஷன் ஆவணத்தில் மேற்கோள் காட்டப்பட்ட அத்தகைய எச்சரிக்கையில் ஒன்று, அமெரிக்க விமான நிலைய நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் அமைந்திருந்தது. FAA, ஒரு வெளிநாட்டு விமானக் கடத்தல் நடக்கக்கூடும் என்று இன்னமும் கருதுகிறது. அப்படி "கடத்துபவரின் நோக்கம் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு கைமாறாக கைதிகளை பிணையாக பிடித்து வைத்துக்கொள்வது இல்லாமல் ஒரு பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் கடத்தலாக இருக்குமானால், அதற்கு உள்நாட்டில் விமானம் கடத்தப்படலாம், அது ஏற்றது என்று விமானக் கடத்திகள் கருதலாம்'' என்று அந்த எச்சரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பு புஷ் நிர்வாகத்தின் பிரதிநிதிகளான கொண்டலிசா ரைஸ் போன்றவர்களின் இழிபுகழ்பெற்ற அறிக்கைகளை மீண்டும் ஒரு முறை மறுப்பதாக உள்ளது. அவர் 2002 ல் ''ஒரு விமானத்தை ஒரு ஏவுகணையாக அவர்கள் பயன்படுத்த முயலக்கூடும்'' என்று எவரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது என்று பரபரப்பாக அறிவித்தார்.

9/11 கமிஷன் ஆவணத்தின்படி, FAA "உண்மையிலேயே பயங்கரவாதிகள் ஒரு விமானத்தை கடத்தி அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு பற்றி சிந்தித்தனர்" என்று உள்ளது. 2001 ல் FAA ஒரு CD-ROM ஐ விமானங்களிலும் விமான நிலையங்களிலும் வினியோகித்தது. அதில் ஒரு தற்கொலை விமானக் கடத்தல் சாத்தியக்கூறுகள்பற்றி சித்தரிக்கப்பட்டது என்று செய்தி கூறுகிறது. மற்றும் கோடை காலத்தில் FAA 19 மிக பரபரப்பான நெரிசல் உள்ள அமெரிக்க விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பின் லேடன் மற்றும் அவரது அமைப்பினால் ஏற்படுகின்ற அச்சுறுத்தல் பற்றி குறிப்பாக எச்சரிக்கை செய்தது. இவ்வளவும் செய்த பின்னரும் சில மாதங்களுக்கு பின்னர் போஸ்டன், நெவார்க் மற்றும் டல்லஸ் விமான நிலையங்களில் விமானக் கடத்திகள் விமானத்தில் ஏறியதை தடுக்க முடியவில்லை.

9/11 கமிஷன் ஆவணம் தொடர்பாக டைம்ஸ் தந்துள்ள செய்தி பல பிரச்சனைகளை எழுப்புகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் FAA வை பகிரங்கமாக விமர்சிப்பவரும் செப்டம்பர் 11 பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நண்பருமான மேரி சியாவோ சாட்சியத்தை அது உறுதிப்படுத்துகிறது. அவர் தாக்குதல் நடப்பதற்கு முன்னரும் தாக்குதல் நடந்த நேரத்திலும் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி ஒரு நடுநிலையான விசாரணை நடத்துவதற்கு வற்புறுத்த முயன்றார்.

மேரி சியாவோ கமிஷனுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் கூறுகையில் "இந்த விமானக் கடத்தல்களும் பயங்கரவாத நடவடிக்கைகளும் விமான நிறுவன மற்றும் FAA மக்கள் உறவு நிர்வாகம் எதிர்பாராத மற்றும் எதிர்பார்க்க முடியாத ஆபத்து என்று கூறுவது வெறும் கற்பனை" என்று குறிப்பிட்டார். போக்குவரத்துத்துறை செயலாளரான நோர்மன் மினட்டா, புஷ் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள ஒரே ஜனநாயகக் கட்சிக்காரர், கமிஷன் முன் கூறும்போது "ஒரு விமானத்தை ஒரு ஏவுகணையாக பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் எப்போதாவது சிந்தித்தோமா என்று கூற முடியாது" என்று கூறினார்.

புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான திட்டங்களை மேற்கொள்வதில் முன்னாள் ஆலோசகரான ரிச்சர்ட் கிளார்க் தந்த சாட்சியத்தையும் இந்த ஆவணம் உறுதிப்படுத்துகிறது. அவர், அமெரிக்க விமான போக்குவரத்து தொடர்பாக செப்டம்பர் 11 க்கு முந்திய காலத்தில், நிர்வாகம் அப்பட்டமாக பாதுகாப்புகள் தொடர்பான நடவடிக்கைகளில் மந்தமாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டினார். 2001 ஜூலை 5 ல் கிளார்க், ரைஸ் மற்றும் ஆன்ரூ கார்ட் வெள்ளை மாளிகை தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பயங்கரவாத எதிர்ப்பு முன்னேற்பாடுகளை விவாதிப்பதற்கு அவசர கூட்டம் ஒன்றை நடத்தினர்.

மறுநாள் கிளார்க் ரைசிற்கு அனுப்பிய மின்னஞ்சலில், கூட்டத்தில் "மூன்று முதல் ஐந்து தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நடக்குமானால் அதைத் தடுப்பதற்கு விரிவான திட்டங்கள் குறித்து விவரம் உருவாக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் FAA நிர்வாகி Jane Garvey அல்லது போக்குவரத்து செயலாளர் மினெடா ஆகியோருக்கு அந்த கூட்ட முடிவுகள் தெரிவிக்கப்படவுமில்லை அல்லது அவற்றை செயல்படுத்த கட்டளையும் பிறப்பிக்கப்படவுமில்லை.

புஷ் நிர்வாகம் துவக்கத்தில் 9/11 கமிஷன் அமைப்பதையே எதிர்த்து வந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அமெரிக்க மண்ணில் உள்நாட்டுப் போருக்கு பின் நடைபெற்ற மிகக் கொடூரமான ரத்தம் சிந்தும் சம்பவத்தைப் பற்றி பொது விசாரணை நடத்த மறுத்து வந்த நிர்வாகத்திற்கு எதிராக பொதுப் பிரச்சாரத்தை நடத்தத் துவங்கி ஒராண்டு கடந்த பின்னர்தான் விசாரணை நடத்த அது இணங்கியது. அரசியல் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய பிரமுகர்கள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட, குறிப்பாக FAA அதற்கு ஒத்துழைக்க மறுத்தது. கமிஷன் அந்த அமைப்பிற்கு கட்டாயம் வரவேண்டுமென்று ஆணையிட்டது. அதற்கு பின்னர்தான் செப்டம்பர் 11 அன்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமானப்படை பாதுகாப்பு விமானங்கள் நடமாட்டம் பற்றிய ராடார் பதிவேடுகளை கமிஷனுக்கு அது தாக்கல் செய்தது.

9/11 தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் அண்மையில் அம்பலத்திற்கு வந்திருப்பது கீழ்கண்ட தெளிவான கேள்வியை எழுப்புகிறது. இருந்த போதிலும் டைம்ஸ் அதுபற்றி கேட்கவில்லை: FAA 52 எச்சரிக்கைகளை செய்திருக்குமானால் CIA, FBI, NSA மற்றும் பென்டகன் எத்தனை எச்சரிக்கைகளை விடுத்தன?

FAA பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு சுதந்திரமான புலனாய்வு வலைப்பின்னலை நடத்தவில்லை---- ஆப்கானிஸ்தானிலோ அல்லது வேறு எங்குமோ அவர்களுக்கு எந்த புலனாய்வு அதிகாரிகளும் பணியாற்றவில்லை. அப்படியிருந்தும் 2001 கோடை காலத்திலும் இளவேனிற்காலத்திலும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு பொதுவாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் திட்டவட்டமான எச்சரிக்கைகளை உருவாக்கி, 9/11 தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உருவாக்கப்படவிருந்த செயல்படும் முறையை ஒரு ''பாரிய வெடியை ஏற்படுத்தும் தற்கொலை குண்டு வெடிப்பை'' நோக்கமாகக் கொண்டு விமானங்களை கடத்த முடியும் என்பதை திட்டவட்டமான எச்சரிக்கையாக அவர்களால் தர முடிந்திருக்கிறது.

ஆக டைம்ஸ் செய்தி ஒரு பிரச்சனையை முன்வைக்கிறது----பெரு நிறுவனக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை பிளேக் நோய் போன்று தவிர்த்தன----செப்டம்பர் 11 தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்க அமைப்புகளும் உயர்மட்ட புஷ் நிர்வாக அதிகாரிகளும் முன்கூட்டியே அறிந்திருக்க கூடும் என்பதுதான் அந்தப் பிரச்சனை. இதில் இப்போது தெரிந்திருக்கிற அனைத்து விவரங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தற்கொலை விமானக் கடத்தல்கள் திடீரென்று ''விண்ணில் தோன்றிய மின்னல்'' போன்று நடந்துவிட்டது அதை எதிர்பார்த்திருக்கவோ அல்லது தடுத்திருக்கவோ முடியாது என்ற அதிகாரபூர்வமான கதைக்கு முரணாக திட உறுதிப்பாடு இருந்திருக்குமானால் தடுத்திருக்க முடியுமென்பதுதான் இப்போதுள்ள நிலை.

விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பான குழப்பம், அறியப்பட்ட அல் கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய, மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட்டதிற்கு விளக்கம் தர முடியாத முடிவு, மின்னசோட்டாவிலும் அரிசோனாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி பெற முயன்று வருகிறார்கள் என்ற கீழ்-நிலை FBI அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கையை விசாரிக்க மறுத்தது, 2001 ஆகஸ்ட் 6 ல் CIA புஷ்ஷிற்கு தந்த "அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்த பின் லேடன் உறுதி" என்ற தலைப்பில் தரப்பட்ட குறிப்பு, ஆகியவற்றிக்கு இழிபுகழான பதில்கள் தவிர ஒரு சட்டபூர்வமான விளக்கம் இல்லை.

9/11 கமிஷன் விசாரணையின்போது, விசாரணை கமிஷனர்களில் ஒருவரான முன்னாள் ஜனநாயகக் கட்சி வலதுசாரி செனட்டரும் ஈராக் போர் ஆதரவாளருமான பாப் கெர்ரிக்கும் CIA மற்றும் அரசுத்துறை பயங்கரவாத நடவடிக்கை எதிர்ப்பு துறையைச் சார்ந்த அதிகாரி கோபர் பிளாக்கிற்கு மிடையில் (Cofer Black) நடைபெற்ற அசாதாரணமான உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துவது பயனுள்ளது.

கெர்ரி: நான் உங்களிடம் ஒரு கடைசிக் கேள்வியை எழுப்புகிறேன். இது எப்படி நடந்திருக்க முடியுமென்று கடவுள் பெயரால் நான் கேட்கிறேன்? போர் ஆயத்தங்கள் மற்றும் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக்கும்போதே நமது விமான நிலையங்களில் மிகவும் ஓய்வாக இருந்தோம் என்று நான் கேள்விப்படுகிறேன். நாம் ஆயுதங்களை வைத்திருக்கிறோம். ஒரு விமானக் கடத்தல் நடப்பதற்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கும் தயார் நிலையில் இல்லை. "இந்த சதிகளைப்பற்றி எங்களுக்கு தெரியாது" என்று நீங்கள் சொல்லக்கூடும்---- ஒரு விமானக் கடத்தல் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அதைத்தான் Betty Ong கூறினார், அவரது குரலிலேயே அதை நாம் கேட்டோம். அரசாங்கம் மற்றும் FAA ----நம்மில் எவரும் ஒரு சாதாரண விமானக் கடத்தலை தடுப்பதற்கு கூட தயாராக இருக்கவில்லை. அது எப்படி நடந்திருக்க முடியும் என்று கடவுள் பெயரால் நான் கேட்கிறேன்?

பிளாக் : அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ஐயா?

கெர்ரி: ஆம், உங்களால் முடியுமென்றால். உங்களால் முடியாவிட்டால், அதுவும் நல்லது. நான் என்ன பொருளில் சொல்கிறேன் என்றால், நான் இப்போது அதை உறுதியாக சொல்ல முடியாது.

கெர்ரி, "ஆயுதங்களை வைத்திருக்கின்றோம்" என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பது போரிட திட்டவட்டமாக மறுத்ததைக் குறிப்பிடுகிறது. அந்த தாக்குதல்கள் ஒரு முழுமையான வியப்பாக நடந்திருக்கிறது என்ற நிர்வாகத்தின் கூற்றை விட அதிக நம்பிக்கை கொண்ட ஓர் அம்சம் என்னவென்றால், ஒரு பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவிற்குள் உடனடியாக நடக்கவிருக்கிறது என்று தெரிந்தும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது என்பது அதிக நம்பகத்தன்மையிலுள்ள தகவலாக இருக்கிறது. புஷ் வெள்ளை மாளிகை அந்த சம்பவத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்திக்கொண்டது. (அந்தத் தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்தவர்கள் அந்தத் தாக்குதல் எந்தளவிற்கு நடக்கக்கூடும் அல்லது பிரமாண்டமான அளவிற்கு உயிர்களை பழிவாங்கும் என்பதை சரியாக மதிப்பிட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.)

இந்த தத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகிற வகையில் கடைசியாக கிடைத்துள்ள 9/11 அறிக்கை குறித்து புஷ் நிர்வாகத்தின் பதில் தரும் செயல் அமைந்திருக்கிறது. FAA வின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ரகசியத் தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு வெள்ளை மாளிகை திட்டமிட்டு தாமதப்படுத்தி, தேர்தலுக்கு பின்னர் அதைத் தள்ளிவைத்தது. ஏனென்றால் "பயங்கரவாதத்தின் மீதான போரை" மிகத் தீவிரமாக நடத்திக்கொண்டு வர புஷ் முயன்று வருவதாக தேர்தலில் காட்டுவதற்குத்தான்.

தேர்தல் முடிந்து ஒரு பாதுகாப்பான நிலைக்கு வந்ததும் வெள்ளை மாளிகை அந்த அறிக்கையை அரவம் காட்டாமல் தேசிய ஆவண காப்பகத்தில் மூடி புதைக்கப்பட்டதை டைம்ஸ் கண்டுபிடித்து விட்டது. 9/11 கமிஷனை சேர்ந்த ஒரு கோபம் கொண்ட உறுப்பினர் தந்த தகவலின் பயனாக இது நடந்திருக்கிறது. இது தேர்தல் மோசடியை விட அதிகமானதுடன் அதுவே கண்டனத்திற்கும் போதுமானது. இது பல குற்றங்களை மறைக்க வேண்டிய நிலையிலுள்ள ஒரு அரசாங்கத்தின் சிறப்புத் தன்மையை காட்டுகிறது. ஆகவே, செப்டம்பர் 11 ல் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதல்களைவிட, அந்தக் குற்றங்களின் பங்களிப்பு எந்தவகையிலும் குறைந்தது அல்ல.