World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: further evidence Hindu-supremacist BJP culpable in Gujarat pogrom

இந்தியா: குஜராத் படுகொலையில் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக்கட்சி உடந்தையாகச் செயல்பட்டதற்கு மேலும் சான்று

By Kranti Kumara
9 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

குஜராத் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக 2002 பெப்ரவரி-மார்ச்சில் நடைபெற்ற படுகொலையானது அன்றைய இந்திய கூட்டணி அரசாங்கத்தின் மேலாதிக்க பங்குதாரரான பாரதிய ஜனதாக் கட்சி (BJP) யாலும் அதன் இந்து மேலாதிக்கவாத கூட்டாளிகளாலும் சேர்ந்து செய்யப்பட்டது என்பதற்கு மேலும் புதிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

குஜராத் சம்பவங்கள் நடந்தபோது இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த K.R.நாராயணன் அண்மையில் ஒரு மலையாள-மொழி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், உடனடியாக இராணுவத்தை குஜராத்திற்கு அனுப்பி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களை அடக்க கட்டளையிடுமாறு பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் BJP தலைவர் அவரது வேண்டுதல்களை புறக்கணித்தார் என்றும் கூறினார். "வன்முறையை அடக்க இராணுவத்திற்கு அதிகாரங்கள் தரப்பட்டிருந்தால், 2000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்ததற்கும் 1,50,000 பேர் வீடிழந்ததற்கும் வழிவகுத்த மாநிலம் தழுவிய வன்முறையாக குஜராத் கலவரங்கள் வெடித்திருக்க முடியாது.

"ஆனால் [BJP] மாநில அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை, மத்திய அரசாங்கமும் அப்படிச் செய்யவில்லை. குஜராத் வன்முறைக்கு மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் பொறுப்பாகும் வகையில் இவற்றிற்கிடையில் சதிச்செயல் ஏற்பட்டுள்ளது." என்று அவர் குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் அவர் இந்து மேலாதிக்கவாத ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (RSS) உறுப்பினராக இருந்தாலும் வாஜ்பாயை BJP-ம் இந்திய ஊடகங்களில் பெரும்பகுதியும் ஒரு மிதவாதி என்று பாராட்டின, அவர் நாராயணனின் குற்றச்சாட்டுகளை இறுமாப்புடன் தள்ளுபடி செய்துவிட்டார்.

2002 பெப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் தீப்பிடித்து----எரிந்த சம்பவம் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைக்கு ஒரு சாக்குப்போக்காக சேவை செய்தாலும் அரசாங்கம் நியமித்த விசாரணைக் குழு தந்திருக்கும் பூர்வாங்க அறிக்கைக்கு BJP தலைமை அதேபோன்று எந்தவித கடுமையான மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆரம்பத்திலிருந்தே BJP-ம் அதன் RSS கூட்டணியினரும் 59 பேரை கொன்ற அந்த தீ விபத்தை---அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அயோத்தியிலிருந்து குஜராத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் (வலது-சாரி இந்து போராளிகள்),--- முஸ்லிம்களினால் வைக்கப்பட்டது, பாக்கிஸ்தானின் புலனாய்வு சேவையின் உதவியுடன் சாத்தியமாகி இருக்கலாம் என்று வலியுறுத்திக் கூறிவந்தன.

அந்த தீ பிடித்த சிலமணி நேரத்திற்குள், பிஜேபியும் அதன் கூட்டணியினரான இந்து வகுப்புவாத அமைப்புக்களும் கோத்ரா சாவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்களுக்கு வந்து போராட்டத்தை நடத்த வருமாறு, குஜராத்திகளை தூண்டிவிட்டுக்கொண்டிருந்தன. வன்முறை தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் இலக்கானபோது, அந்தத் தாக்குதல்கள் தன்னியல்பாக எழுந்த உணர்வுகள், ''பழிக்குப்பழி'' வாங்க வேண்டுமென்ற இந்துக்களின் விருப்பத்தினால் எழுந்தவை என்று அவர்கள் சித்தரித்தாலும் பிஜேபி பொறுப்பாளர்களும், ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்துள்ள விஷ்வ இந்து பரிஷத் (அல்லது உலக இந்து சபை) மற்றும் பஜ்ரங்தள் (இந்து இளைஞர் கழகம்) காரியாளர்களும் அதைத் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதலுக்கு தலைமை வகித்தார்கள் என்பதற்கு அதிக அளவில் சான்றுகள் இருந்தன.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி U.C. பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கோத்ரா தீ பற்றிய விசாரணைக்குழு அந்த ரயில் தீ விபத்திற்கு பிஜேபி, RSS மற்றும் பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கம் மற்றும் குஜராத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் கூறிய விளக்கங்களை அழுத்தம் திருத்தமாக புறக்கணித்திருக்கிறது. அந்த விசாரணைக் குழுவின் பூர்வாங்க அறிக்கையின்படி, சபர்மதி எக்ஸ்பிரஸின் S-6 பெட்டியை சூழ்ந்து கொண்ட நெருப்பு திட்டமிட்டு வைக்கப்பட்டதல்ல, மாறாக "தற்செயலாக" நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குஜராத் அரசாங்கமும் போலீசாரும் கரசேவகர்களுக்கு எதிராக கோத்ரா ரயில் நிலையத்தில் கண்டனப் பேரணி நடத்திய முஸ்லீம்கள் குழுவின் ஒரு பகுதியினர் அல்லது அந்தக் கண்டனத்தை ஒரு முகமூடியாக பயன்படுத்திக்கொண்டு S-6 பெட்டியில் நுழைந்தவர்களால் தீ வைக்கப்பட்டது என்று வாதிட்டனர். அது எப்படியிருந்தாலும், அக்குற்றத்தை செய்தவர்கள் தீ வைப்பதற்கு தீ பிடிக்கக் கூடிய திரவப்பொருளை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு வாதங்களையுமே தடயவியல் (forensic) சான்றுகள் ஆதரிக்கவில்லை என்று பானர்ஜி குழு வாதிடுகிறது. குஜராத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளை அது சுட்டிக்காட்டியுள்ளது, காற்றுவீச்சு மற்றும் ரயிலின் உயரம் ஆகியவற்றை பார்க்கும்போது பிளாட்பாரத்திலிருந்து ரயில் பெட்டிக்குள் தெளிக்கப்பட்ட எந்த திரவமும் 10 முதல் 15 சதவீதம்தான் பெட்டிக்குள் விழுந்திருக்கும், மற்றும் தீ பற்றவைக்க வேண்டும் என்று முயலுபவர்கள் மீது அந்தத் திரவம் பட்டிருக்கும். யாராவது ஒரு நபர் அல்லது சிலர் அந்தப் பெட்டிக்குள் நுழைந்து தீ பிடிக்கும் திரவத்தை அந்தப் பெட்டியின் தரைகளில் தெளித்திருப்பார்கள் என்ற கருத்தைப்பொறுத்தவரையில், காயம்பட்டவர்கள் பெரும்பாலும் உடலின் கீழ் பகுதியில் அல்ல, மேல் பகுதியில் காயம் பட்டிருப்பது பொருத்தமற்றதாக ஆக்குகிறது என்று பானர்ஜி குழு அறிக்கை குறிக்கிறது. "தீ பிடிக்கின்ற திரவம் பற்றிய ஊகக் கருத்து'' தங்களது உடலின் கீழ்ப் பகுதியில் அல்லாமல், மேல் பகுதியில் காயம் பட்டவர்கள் சிலர் தந்திருக்கும் அறிக்கைகளாலும் மற்றும் தங்களது முழங்கைகளால் கதவு வரை திறந்து வந்து அதிக காயமில்லாமல் வெளியே வர முடிந்திருக்கிறவர்கள் தந்த அறிக்கைகளாலும் மறுக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

யாரோ ஒருவர் அந்தப் பெட்டிக்குள் ஊடுருவிச் சென்று, மூன்று முனை ஈட்டியான திரிசூலங்களை கையில் வைத்திருந்த கரசேவகர்களுக்கு தெரியாமல், பெட்டியின் தரையில் பெருமளவிற்கு தீ பிடிக்கும் திரவத்தை ஊற்றியிருக்க முடியும் என்பதை நம்புவதற்கு இடமில்லை என்றும் அந்த அறிக்கை வாதிடுகிறது.

பானர்ஜி குழு அறிக்கை ரயில்வே அதிகாரிகளை கடுமையாக விமர்சித்திருக்கிறது, அவர்கள் அதி விரைவாக திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது என்று கூற்றை தழுவிக் கொண்டார்கள், அதன் மூலம் ரயிலில் மிதமிஞ்சிய கூட்ட நெரிசல் போன்ற இது போன்ற துயர காரணிகளின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு சீற்றத்தை தூண்டிவிடுவதற்கு உதவியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரு பகுதி எரிந்துவிட்ட பக்கத்து S-7 பெட்டியை ஒரு சாட்சியாக பாதுகாத்து வைப்பதற்கு பதிலாக, அது போய்ச் சேர வேண்டிய கடைசி சந்திப்பான ஆமதாபாத்க்கு அனுப்பிவிட்டனர். அந்த தீ தொடர்பாக சட்டபூர்வமான விசாரணை நடத்துவது பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை.

அந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தான் நம்புவது எதையும் பானர்ஜி குழு சொல்லவில்லை, ஆனால் கரசேவகர்கள் சிலர் அந்த ரயிலில் சமையல் செய்தார்கள் என்று தெரியவருகிறது.

டில்லியை அடித்தளமாகக்கொண்டுள்ள அரசு-சாராத அமைப்பான ஹசார்ட்ஸ் சென்டர் நடத்திய ஒரு தொழில் நுட்ப புலன் விசாரணையும் கோத்ரா தீ தொடர்பாக பானர்ஜி குழு தெரிவித்துள்ள முடிவு சம்பந்தமாக ஆதரிப்பதாக அமைந்திருக்கிறது. விபத்துக்களில், ரயில் பெட்டி எரிந்த சம்பவங்களில் சம்மந்தப்பட்ட ரயில் பெட்டிகளை புலனாய்வு செய்த பின்னர், S-6 ரயில் பெட்டிக்கு ஏற்பட்ட சேதத்தை தீவிபத்தில் எரிந்துபோனதாக தெரிய வந்த பெட்டிகளுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து, S-6 பெட்டிக்குள்ளேயே அந்த தீ ஏற்பட்டிருக்க வேண்டும் மற்றும் அது நீண்ட நேரம் நீறுபூத்த நெருப்புப் போல் புகைந்து கொண்டிருந்திருக்க வேண்டும், மாறாக ஒரு தீ பிடிக்கும் திரவத்தினால் எரிந்திருக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருக்கிறது.

பிஜேபி அரசியலில் குஜராத் படுகொலையின் பங்களிப்பு

வகுப்புவாத வன்முறைகளோடு நீண்ட நெடுங்காலமாக பிஜேபி தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. வரலாற்றில் இடம்பெற்ற பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோயிலை கட்டவேண்டும் என்று அயோத்தியில் கிளர்ச்சி நடத்திவிட்டு திரும்பிய கரசேவகர்கள், கோத்ரா ரயில் தீயில் கொல்லப்பட்டனர். 1992-ல் இந்து மேலாதிக்கவாத போராளிகள் அந்த மசூதியை தரைமட்டமாக்கினார்கள்------வாஜ்பாயி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய எல்.கே. அத்வானி தலைமையில் ஒரு ஆண்டு முழுவதும் நடைபெற்ற கிளர்ச்சியின் இறுதி கட்டம் தான் அது. தெற்கு ஆசியாவில் 1947-ல் ஏற்பட்ட வகுப்புவாத பிரிவினைக்கு பின்னர் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது, நாடு தழுவிய வகுப்புவாத வன்முறை அலையை உருவாக்கிவிட்டது.

அப்படியிருந்தாலும், இந்திய அரசாங்கம் பாக்கிஸ்தான் எல்லையில் ஏறத்தாழ ஒரு மில்லியன் படையினரை குவித்து படையெடுப்பதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், குஜராத் படுகொலைகள், பிஜேபி-ன் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது.

உச்சநீதிமன்றத்தின் கட்டளையை மீறுவதாக அமைந்த பாபர் மசூதி இடிப்புத் திட்டம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அத்வானி, வாஜ்பாயி மற்றும் இதர பிஜேபி தலைவர்கள் பாசாங்கு செய்தனர். பிஜேபியின் குஜராத் முதலமைச்சரான நரேந்திரமோடி, முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலையை தூண்டிவிட்ட தனது பங்களிப்பை மறைப்பதற்கு சிறிதே முயற்சிசெய்தார், அதற்குப்பின்னர், டிசம்பர் 2002-ல் வகுப்பு வெறுப்புணர்வுகளை தூண்டிவிட்டு மறுதேர்தலில் வெற்றிபெற்றார் மற்றும் தன்னை இந்து மதத்து சக்திவாய்ந்த மனிதனாக மெருகூட்டியதுடன், அதற்குப் பின்னர் பிஜேபியின் ஒரு தேசிய தலைவராகவாகவும் ஆனார்.

கோத்ரா ரயில்பெட்டி எரிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் தழுவிய ''பொது வேலை நிறுத்தத்தை`` மோடி ஆதரித்தார், விபத்தில் எரிந்துவிட்ட சடலங்களை மாநில தலைநகருக்கு கொண்டுவர கட்டளையிட்டார், அங்கு விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை அந்த சடலங்களை வைத்து அணிவகுப்பு நடத்தின, அதற்குப்பின்னர் வன்முறை வெடித்தபோது, போலீசார் தங்கள் கைகளை கட்டிகொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், வாஜ்பாயி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், மோடியும் அவரது மாநில அரசாங்கமும் இதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தனர். ஒரு குறிப்பிட்ட புள்ளியில், வாஜ்பாயி குஜராத்தில் நடைபெற்ற இரத்தக்களரியின் தன்மை குறித்து ஓரளவிற்கு அதிர்ச்சி தெரிவித்தார் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அது கெட்ட பெயரை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார், ஆனால் இறுதியில் மோடியின் கூற்றான கோத்ராவில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்குப் பதிலடியாக புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை நடைபெற்றிருப்பதாக மோடி கூறியதை இறுதியில் அவர் அரவணைத்துக்கொண்டார்.

அதேபோன்று, சென்ற ஆண்டு பொது தேர்தல் பிரசாரத்தில் பெருவர்த்தக நிறுவனங்கள் BJP-ன் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் வகுப்புவாத வாய்வீச்சுத்தன்மையின் அழிவுத்தன்மைகள் குறித்து தெரிவித்திருந்த கவலைகளுக்கு சமாதானம் கூறுகின்ற வகையில் வாஜ்பாயி தனது அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கை சாதனை அடிப்படையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இருந்தபோதிலும், மோடி விரைவில் பிஜேபியின் மிக முக்கியமான தேர்தல் பிரச்சாரகர்களில் ஒருவராக உருவானார். அந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அவரது அடியாட்கள் மற்றும் மிகமூத்த அமைப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பளிப்பதற்கு அவர் தலைமையிலான குஜராத் அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. இன்றுவரை, குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கொலை வெறித்திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்ட எவர் மீதும் எந்த வழக்கும் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை.

பானர்ஜி அறிக்கையை இழிவுபடுத்த பிஜேபியின் முயற்சிகள்

பானர்ஜி குழுவின் அறிக்கை தொடர்பாக பிஜேபி தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியைச் சேர்ந்த எல்லா பிரிவினரும்--- இந்துத்துவ கடுங்கோட்பாட்டாளர்களான மோடி போன்றவர்களிலிருந்து மிதவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வரை அனைவரது கரங்களிலும்- குஜராத் முஸ்லீம்களின் இரத்தத்தின் கறைபடிந்துள்ளன என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

பிஜேபி அரசியல்வாதிகள் அந்த அறிக்கையை இழிவுபடுத்துகின்ற தங்களது முயற்சிகளில் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். அவர்களது அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு, அவர்கள் தங்களது தாக்குதலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது குவிமையப்படுத்த முயற்சிக்கின்றனர், அவர் பிஜேபியின் ஒரு கசப்பான எதிரி, அவர் பானர்ஜி விசாரணைக்கு ஏற்பாடு செய்தார், தனது சொந்த மாநிலமான பீகாரில் தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அந்தத் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் நேரம் பார்த்து பானர்ஜி குழுவின் பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டார் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக பணியாற்றிவரும் லாலுபிரசாத் யாதவ், ஒரு இழி புகழ்பெற்ற ஊழல் அரசியல்வாதி, இந்தியாவிலேயே பரம ஏழை மாநிலங்களுள் ஒன்றான பீகார் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு மக்களைக் கவரும் விஷயங்களையும் சாதி ஆதரவையும் திரட்டி வருபவர், கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும் பகுதியில் மேலாதிக்கம் செய்து வருகிறார். அவர் இந்தியாவின் கிராமப்புற ஏழை சாதிகளின் பாமர பேச்சாளர் என்ற தனது செல்வாக்கை நீண்ட காலமாக பேணி வளர்த்துவருகிறார், அதன் மூலம் பிஜேபியின் உயிர்நாடி ஆதரளாவர்களான மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் உயர்ந்த சாதிக்காரர்களுக்கு கடுந்தொல்லையாக ஆகிவிட்டார்.

இதற்கிடையில், குஜராத் அரசாங்கம் தனது சொந்த விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறது, அதுவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் கோத்ரா தீ விபத்து பற்றி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த விசாரணைக்காக வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணை அந்த விசாரணை ஒரு நடுநிலையான மறுஆய்வு அல்ல என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த குஜராத் விசாரணை கோத்ரா தீ விபத்திற்கான காரணத்தை புலன் விசாரணை செய்யாது, ஆனால், மாறாக ``தீ வைக்கப்பட்டதற்கு இட்டுச்சென்ற`` சூழ்நிலைகளை ஆராயும்.

கோத்ரா தீ விபத்து ஒரு துயர விபத்து என்று அதிக அளவில் தோன்றுகிறதாக இருந்தாலும், அல்லது அது ஒரு வகுப்புவாத மோதலின் விளைவுதான் என்றாலும், அது நிச்சயமாக பொறுத்தமற்ற ஒன்று அல்ல. S-6 ரயில்பெட்டி தீ வைக்கப்பட்டதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். என்றாலும் கோத்ரா தீ விபத்திற்கு உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், குஜராத் முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அதற்கு பொறுப்பென்று குற்றம்சாட்டுவதற்கு போதுமான நியாயமில்லை நியாயம் இருந்ததுமில்லை, இந்த பெரும்பாலும் வறுமைவயப்பட்ட சிறுபான்மையினருக்கெதிராக கண்மண் தெரியாத இந்த வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதற்கு சிறிதும் நியாயமில்லை. கோத்ரா தீ விபத்தை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதற்கு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடுவதற்கும் அல்லது அந்த படுகொலைக்கு உடந்தையாக செயல்படும் வகையில் போலீசிற்கும், இராணுவப்படைகளுக்கும் அந்த இரத்தக்களரியை தடுத்து நிறுத்த கட்டளையிட தவறிய மோடியில் தொடங்கி வாஜ்பாயி, அத்வானி மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் வரை அனைவரும் மனித இனத்திற்கெதிராக ஒரு கொடூரமான குற்றம் புரிந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார்கள்.

Top of page