World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: house arrest legislation a fundamental attack on democratic rights

பிரிட்டன்: வீட்டுக்காவல் சட்டம் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு அடிப்படை தாக்குதலாகும்

By Richard Tyler and Chris Marsden
4 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

தொழிற்கட்சி அரசாங்கத்தின் பயங்கரவாதத் தடுப்பு சட்டமியற்றல், பிரிட்டனில் பலநூறு ஆண்டுகளாக இருக்கின்ற ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படுகின்ற ஒரு அடிப்படைத் தாக்குதலாகும்.

அல்கெய்டாவோடு சம்மந்தப்பட்ட பயங்கரவாத குழுக்களிலிருந்து அச்சுறுத்தலையிட்டு போரிடுகிறோம் என்ற சாக்குப்போக்கில், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இன ஒதுக்கல் ஆட்சி பயன்படுத்தி வந்த இழிபுகழ் "தடையாணைகளுக்கு" அமைதியாகவும், அரசியல் எதிர்ப்பாளர்களை அது தனிமைப்படுத்தியும் அதற்கு மேலாக அரசாங்கம் தனக்குத்தானே அதிகாரங்களை வழங்கிக்கொள்வதாக இந்த சட்ட முன்வரைவு அமைந்திருக்கிறது.

கொண்டுவரப்பட்டுள்ள சட்ட முன்வரைவை ஆராய்வதற்கும், விவாதிப்பதற்கும் உரிய காலத்தை வெட்டிவிட்டு இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் அவசரக்காலத்தில் நிறைவேற்றப்படுகின்ற நிலைக்கு அந்த சட்ட முன்மொழிவு வந்திருக்கிறது.

பிப்ரவரி 23-ல் மக்களவையில் சட்ட முன்வரைவை முன்மொழிந்த உள்துறை செயலாளர் சார்லஸ் கிளார்க் புதிய அதிகாரங்கள் தேவைப்படுகின்றன, ஏனெனில் பிரிட்டன் "2001 செப்டம்பர் 11-க்கு பின்னர் நமது சமுதாயத்திலுள்ள, மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இருக்கின்ற சுதந்திரத்தின் தரம் சம்பந்தமான வேறுபாடு உண்மையான மற்றும் கணிசமான அச்சுறுத்தல்களை முகம்கொடுக்கிறது" என்றார்.

சுதந்திரத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் வந்திருப்பது கிளார்க் உறுப்பினராக இருக்கின்ற அரசாங்கத்திடமிருந்துதான்

Magna Carta காலத்திலிருந்து (பிரித்தானிய அரச சாசனத்தில் அரசருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு உரிமைகளும் சுதத்திரங்களையும் பாதுகாப்பும் உடன்படிக்கை 1215 இல் King John I கையொப்பமிட்டது--மொ-ர்) பலநூறு ஆண்டுகளாக நடைபெற்றுள்ள கிரிமினல் குற்றவியல் நிகழ்ச்சிப்போக்கில், ஒரு "தங்க இழை'' போன்று----குற்றம் நிரூபிக்கப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவர் அப்பாவி என்ற அடிப்படை சட்ட கொள்கையை தகர்ப்பதை இந்த மசோதா குறிக்கிறது---என்று லிபர்டி மனித உரிமைக்குழு கூறியுள்ளது.

இந்த சட்டம் இயற்றுதல் சட்டமாக ஆக்கப்பட்டுவிட்டால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் அடங்கியிருப்பவை: வீட்டுக்காவல், எலக்டிரானிக் ஒட்டுக்கேட்டல், பயணச்சீட்டு வழங்க மறுப்பது, மற்றும் இதர பயணக் கட்டுப்பாடுகள், தொலைபேசிகள் மற்றும் இணைதளத்தைப் பயன்படுத்துவதற்கு தடை சில மக்களோடு அல்லது ஒருவர் வர்த்தகத்தை அல்லது தொழிலை செய்வதற்கு தடை விதிப்பது ஆகியவை.

அல்கொய்டாவோடு சம்மந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கும் சிறையிலடைப்பதற்கும் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் இனி போதுமானவையல்ல என்பதற்கமைய கிளார்க், "சகிப்புத்தன்மையை ஒழித்துக்கட்டுகின்ற..... கருத்து சுதந்திரத்தை, சுதந்திரமான விவாதத்தை ஒழித்துக்கட்டுகிற..... பெண்களிற்கான சமத்துவத்தை ஒழித்துக்கட்டுகிற'' வலைபின்னல் அமைப்பு என்று வர்ணித்தார், மற்றும் குறைந்தபட்சம் Clarke-ற்கு எப்படியாயினும், படுபயங்கரமான செயல் "நமது சந்தைப் பொருளாதாரத்தை அழிப்பது"

"அல்கெய்டா உயிரியல், வேதியியல் மற்றும் அணு போர் நடவடிக்கைக்கு நீர் வழங்கும் நிலையங்களை விஷமாக்குவதற்கும், வாழ்க்கையின் ஒட்டுமொத்த முறையையும் ஒழித்துக்கட்டுவதற்கும் -----இதற்கு முந்திய எந்த பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்களிலும், தாக்கத்திலும் பாரிய வெகுஜன கொலைகளில் ஈடுபட தயாராகயிருக்கிறது" என்று உள்துறை செயலாளர் மேலும் கூறினார்.

போர் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்ற நூரம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி தலைவர் ஹெர்மன் கோயரிங் வெளியிட்ட அறிக்கையைத்தான் நினைவு படுத்துகிறது, "தலைவர்களின் கட்டளைக்கு மக்களை எப்போதுமே கொண்டு வந்து விட முடியும். அது மிக எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்று சொல்லவேண்டும், மற்றும் சமாதான விரும்பிகள் தேச பக்தியில்லாதவர்கள் நாட்டையே ஆபத்திற்குள்ளாகிவிடுவார்கள் என்று அம்பலப்படுத்தவேண்டும். அது எந்த நாட்டிலும் இதே வழியில் செயல்படும்."

மீண்டும் ஒரு முறை ஒரு நிரூபிக்கப்படாத மற்றும் மிதமிஞ்சிய அச்சுறுத்தல் ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் செயற்திட்டத்தை கட்டாயப்படுத்தி வருகிறது. அல்கெய்டா அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வல்லமையுள்ளதா என்பதை எடுத்துக்காட்டுவதற்கு கிளார்க் எந்தச் சான்றையும் தரவில்லை. 9/11-ல் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, கடத்தப்பட்ட விமானங்களை பயன்படுத்தியது தவிர அல்கெய்டாவோடு சம்மந்தப்பட்ட எந்தக் குழுவும் பாராம்பரிய வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தினார்கள் அல்லது அதை வைத்திருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்படவில்லை. கிளார்க் தானாகவே ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதைப்போன்று தற்போது சந்தேகத்திற்குரியவர்கள் அல்லது சிறையில் இருப்பவர்கள் எவருக்கும் எதிராக பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகள் தேவையில்லை.

முன்மொழியப்பட்டுள்ள அதிகாரங்கள், "மிக அபூர்வமாகத்தான்" பயன்படுத்தப்படும் என்று கூறி நியாயப்படுத்திய, கிளார்க் செப்டம்பர் 2001-க்கும், டிசம்பர் 2004-க்குமிடையில், 2000-ல்" இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்படி 701 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 119 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. 119 களில் 45 பேர் பிற குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் 135 பேர் 2000 சட்டத்திற்கு அப்பாற்பட்ட சட்டங்களின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் மற்றும் 17 பேர் இதர குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதானமாக முஸ்லீம் ஆண்களை இலக்காகக் கொண்டுதான் பரந்த அடிப்படையில் அவர்கள் எப்படி இந்த பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதை கிளார்க்கின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர், அல்லது பயங்கரவாதத்தோடு சம்மந்தமில்லாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தகைய குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளின் தன்மை பரப்புவதற்கு புதிய சட்டம் வகை செய்யும், தண்டனை எதுவுமில்லாமல் அதிகமான மக்கள் சிறைவைக்கப்படுவதற்கு வழி செய்யும்.

பயங்கரவாதத்திற்கு எத்தனைபேர் மீது உண்மையிலேயே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் என்பதை குறிப்பிடுவதை உள்துறைச் செயலாளர் தவிர்த்துவிட்டார். ஆனால், இன உறவுகள் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் 2001 செப்டம்பருக்கும் 2004 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்ட 609 பேரில் பின்னர், 15 பேர் மட்டுமே பயங்கரவாதம் தொடர்புடைய ஏதாவதொரு வகையில்-----பிரதானமாக வெளிநாடுகளில் தீவிரமாக உள்ள குழுக்களுக்காக நிதி திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டனர்.

"பயங்கரவாதம்-தொடர்பான நடவடிக்கையில்" ஒரு தனி மனிதர் சம்மந்தப்பட்டிருக்கிறார், என்று சந்தேகப்படுவதற்கு ''நியாயமான காரணங்கள் இருக்குமானால்" அப்போது ஒரு கட்டுப்பாட்டு கட்டளையை திணிக்க இயலும் வகையில் உள்துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்க தொழிற்கட்சி விரும்புகிறது. ஒரு சிறைக்காவல் கைதி தண்டிக்கப்படுவதற்கு உண்மையான குற்றத்தை, ஜூரிகள் ''சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கருதுகிற அளவிற்கு'' நம்பவைக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு மிகக் குறைந்த தரமுள்ளதாக இந்த அதிகாரம் அமைந்திருக்கிறது.

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கை என்கிற புதிய குற்றப்பட்டியலில் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடுவோர் அல்லது அதில் ஈடுபடுவோருக்கு "ஊக்குவிப்புக்களை அல்லது வசதிகளை", செய்து தரும் செயலும் அடங்கும், அல்லது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் என்று "நம்பப்படுபவர்கள் அல்லது அப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தவர்களுக்கு'' ஆதரவு அல்லது உதவி செய்பவர்கள் என்ற விளக்கம் தரப்பட்டிருக்கிறது (அழுத்தம் சேர்க்கப்பட்டது). அத்தகைய முடியும் அடியும் இல்லாத ஒரு சட்ட பிரிவு தன்னிச்சையாக எவரையும் எந்தவித சான்றும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு வகை செய்கிறது.

அத்தகைய கட்டுப்பாட்டுக் கட்டளையை உள்துறை செயலாளர் அவரது விருப்பப்படி பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்குகிறது, "அவர் தனிமனிதர் மீது, அந்த தனி மனிதர் நிறைவேற்ற வேண்டிய எந்த கடமையையும் சுமத்த முடியும்'' (அழுத்தம் சேர்க்கப்பட்டது).

உள்நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழையக்கூடாது என்ற வடிவத்தில் ஒரு கட்டுப்பாட்டு கட்டளையைத் திணிக்க முடியும், அது ஒரு தனிமனிதன் பிரிட்டனில் அல்லது பிரிட்டனுக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் நடமாடுவதற்கு அல்லது பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடைவிதிப்பதாக அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்ற கைதிகள் சம்பிரதாய சிறைக்கைதிகளை விட கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டிவரும், அவர்கள் எவரோடும் பேச முடியும். ஆனால் ஒரு தனிமனிதர் மீது ஒரு ரகசிய சான்று அடிப்படையில் உள்துறை செயலாளர் ஒரு கட்டுப்பாட்டு கட்டளையை பிறப்பிக்க முடியும், அந்த ரகசிய சான்றை குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது சட்டபூர்வமான பிரதிநிதிகள் கூட பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தகையதொரு கட்டளை, அதனால் பாதிக்கப்படுபவர் பத்திரிக்கைகளுக்கு அவரது வழக்கு தொடர்பாக பேட்டியளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அவர் தனது குற்றமற்ற தன்மையை பகிரங்க கண்டனம் மூலம் கட்டுப்பாட்டு ஆணையை மீறி வெளிப்படுத்துவாரானால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். ஒரு கட்டுப்பாட்டு ஆணையை மீறி செயல்படுகின்ற எவரும் அவர் எந்தவகையில் அதை மீறினாலும் அவர் ஒரு கிரிமினல் குற்றம் புரிந்ததாக கருதப்பட்டு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

தனது இந்த முன்மொழிவுகளுக்கு எதிர்க்கட்சியின் கடுமையான எதிர்ப்பு எதையும் அரசாங்கம் எதிர்கொள்ளவில்லை. துவக்கத்திலிருந்தே, பழமைவாதக்கட்சி பயங்கரவாத எதிர்நடவடிக்கை சட்டமுன்வரைவில் தொழிற்கட்சியுடன் ஒன்றுபட்ட கருத்தை உருவாக்கிக் கொள்ளவே விருப்பம் தெரிவித்து வந்தது. தற்போதுள்ள அதிகாரங்களை விரிவுபடுத்த ஆதரவும் அது வழங்கியது, அத்தகைய நடவடிக்கைக்கு பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தின் சட்ட பிரபு சென்ற நவம்பரில் அளித்த தீர்ப்பில் அது வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே, எதிராக செயல்படுத்தப்படுவது பாரபட்சமானது மிதமிஞ்சியது அளவிற்கு அதிகமானது, முடியும் அடியுமில்லாமல் காவல் நீடிப்பது வழக்கமான சட்ட தத்துவங்களுக்கு ஏற்றதாக இல்லையென்று தீர்ப்பளித்தது.

புதிய நடவடிக்கைகளில் மிகக் கடுமையானவற்றை நீதித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என டோரிக்கள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளது கோரிக்கை இருந்தது. இதில் வீட்டு காவல் கட்டளைகள் நீதிபதிகள் ஊடாகவே நிறைவேற்றப்படவேண்டும் என ஒரு சிறிய சலுகையை தருவது அரசாங்கத்திற்கு இலகுவானதாகவே இருந்தது. ஆனால் இந்த சலுகையோடு மற்றொரு அறிவிப்பும் இணைத்து வந்திருக்கிறது, ஒரு நீதிபதி அந்த பிரச்சனையை முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்வதற்கும், காவலில் வைப்பதற்கும் ''ஒரு புதிய திட்டவட்டமான அதிகாரத்தை'' போலீசாருக்கு வழங்குவதனை உள்துறை செயலாளர் வேண்டிநின்றார்.

தொழிற்கட்சி பின்வரிசை MP களின் பலவீனமான எதிர்ப்பு, அரசாங்கம் புதிய சட்டத்தை திணிக்கும் முயற்சிக்கு உதவியாக அமைந்துவிட்டது. அந்த சட்ட நகர்வு பற்றிய முக்கிய தீர்மானத்திற்கெதிராக 32 தொழிற்கட்சி MP-கள்தான் வாக்களித்தார்கள்.

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதித்துறை மேற்பார்வையிடுவது ஒரு தடைக்கல்லாக அமையுமென்ற கூற்று அடிப்படையில்லாதது. "வேறு எந்த ஜனநாயகங்களில் மக்கள் குற்றச்சாட்டு எதுவும் தாக்கல் செய்யப்படாமல் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்?" என்று தொழிற்கட்சி MP-யான Tam Dalyell நாடாளுமன்றத்தில் கேட்டார். அதற்கு பதிலளித்த கிளார்க் "பிரான்சில், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் அது நடக்கிறது, எடுத்துக்காட்டாக ஒரு வேறுபட்ட சட்ட ஆட்சியில் அது நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.

பிரான்சை உதாரணம் காட்டியது பயனுள்ளது. பிரிட்டனைவிட அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதம் தொடர்பான சதி குற்றச்சாட்டுக்களில் சிறப்பு நீதிபதிகள் கட்டுப்பாட்டில் கைது செய்யப்படுகிறார்கள். பொலீஸ் நூற்றுக்கணக்கானவர்களை கண்மூடித்தனமாய் கைதுசெய்கின்றது அத்துடன் அவர்கள் வழமையாக ''பயங்கரவாதம் தொடர்பான சதி" எனக் குற்றம் சுமத்தப்படுகின்றனர், அவர்களுள் சிலர் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்கு முன் தடுப்புக்காவலில் நான்கு ஆண்டுகள்வரைகூட சிறையில் கழித்துள்ளனர்.

மேயில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேர்தலுக்கு முந்திய பிரசாரத்தில் பொதுமக்களிடையே அச்ச உணர்வு சூழ்நிலையை உசுப்பிவிடுவதற்காகத்தான் அரசாங்கம் இந்த புதிய பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்தை முன்னெடுத்து வைத்து உடனடி அரசியல் செல்வாக்கை உருவாக்க விரும்புகிறது. அமெரிக்காவிலுள்ள தனது அரசியல் ஆசான்களின் முன்மாதிரியை பின்பற்ற முடியும் என்று பிளேயர் நம்புகிறார், அமெரிக்காவில் சென்ற நவம்பரில் புஷ் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இதேபோன்ற தந்திரோபாயம்தான் கையாளப்பட்டது.

ஆனால் இங்கு வெறும் தேர்தல் பிரசாரத்திற்கு மேற்பட்ட முக்கிய விவகாரங்களும் அடங்கியிருக்கின்றன. முறைகேடான கைதுகளுக்கு எதிரான தனிமனிதர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு நீண்ட நெடுங்காலமாக நிலவிவரும் சிவில் உரிமைகளை தொழிற்கட்சி பயங்கரவாத அச்சுறுத்தல்கள் என்ற சாட்டை பயன்படுத்தி துடைத்தெறிந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்பத்தில் நேரடியாக பயங்கரவாதிகள் என்று கருதப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராகத்தான் என தோன்றினும் குற்றமற்றவர் என உண்மையாக ஏற்றுக்கொள்வதை ரத்து செய்வது, ஒருபோதுமில்லதவாறு சர்வாதிகார வடிவங்களைக் கொண்ட ஆட்சியை உருவாக்குவதற்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்திவிடும்.

Top of page