World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Did the US military target Italian journalist Giuliana Sgrena in Iraq?

ஈராக்கில் இத்தாலிய பத்திரிகையாளர் Giuliana Sgrena-வை அமெரிக்க இராணுவம்
குறிவைத்ததா?

By Peter Symonds
7 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளிக்கிழமை இரவு பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகில் அமெரிக்கத் துருப்புக்கள் இத்தாலிய பத்திரிகையாளர் Giuliana Sgrena-வையும் மற்றும் மூன்று இத்தாலிய புலனாய்வு அதிகாரிகளையும் சுட்டமானது இத்தாலியில் கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது மற்றும் ஈராக்கிலிருந்து இத்தாலிய இராணுவ வீரர்கள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவரது விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்த இத்தாலிய பிரதிநிதி Nicola Calipari, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார் மற்றும் Sgrena-வும் வேறு இருவரும் காயமடைந்தனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரந்த அளவிலான விரோதப்போக்கும் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் இந்தச் சம்பவம் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற கொடூரமான கருணையற்ற முறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆனால் இதில் உண்மை அதைவிட கெடு நோக்குடையது: வெளியில் அதிகம் தெரியாத இஸ்லாமிய குழு ஒன்று Sgrena-வை ஒரு மாதத்திற்கு மேலாக பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த நிலையில் அவர் வாயை மூடுவதற்காக அல்லது ஒரு எச்சரிக்கை விடுப்பதற்காக திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்மந்தமாக பல கேள்விகள் விடைதரப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. என்றாலும், மிகக் குறைந்த அளவு விளக்கத்தையே அமெரிக்க இராணுவம் தந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மூன்றாவது காலாட்படைப்பிரிவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி ரோந்து படைவீரர், "அந்த வாகனம் தங்களது சோதனைச் சாவடியை நோக்கி மிகவேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் மற்றும் தனது கை சைகைகளால் அந்த வாகனத்தை நிறுத்துமாறு எச்சரித்தார், வெண்மையான ஒளி வெள்ளத்தை பாய்ச்சினார் மற்றும் அந்தக்காரின் முன் எச்சரிக்கை செய்யும் குண்டுகளை வெடித்தார்." அந்த வாகனம் நிற்கத் தவறிவிட்டதால், துருப்புகள் "எஞ்சின் பகுதிக்குள் சுட்டனர்".

ஒரு அமெரிக்க இராணுவ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், சனிக்கிழமையன்று இத்தாலி திரும்பிய Sgrena இந்த காரணங்கூறல்களின் ஒவ்வொரு அடிப்படையையும் சர்ச்சைக்கு உட்படுத்தினார். "சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மிக வேகமாகச் செல்லவில்லை. அது ஒரு சோதனைச்சாவடியும் அல்ல, ஆனால் ஒரு ரோந்து படையாள், ஒரு ஒளி விளக்கை ஏற்றி விட்டு சுடத் தொடங்கினார். எங்களது கார் சென்ற வேகத்தை கணக்கிடும்போது அப்படி சுட்டது நியாயமற்றது" என்று அவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஒரு இத்தாலி அதிகாரி குறிப்பிட்டார்.

அந்தக் காரை நிறுத்துவதற்கு ''எஞ்சின் பகுதிக்குள் சுட்டது'' சாதாரண விவகாரமல்ல. "நான் நிக்கோலா (கலிபாரி) உடன் பேசிக்கொண்டிருக்கும் போது, மழைபோல் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தார்கள்" என்று Sgrena வர்ணித்தார். குண்டுகள் என்மீது பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக தனது சொந்த உடலால் என்னை மறைத்த பின்னர் அந்த புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். Sgrena எழுதும் இடதுசாரி நாளிதழான Il Manifesto ஆசிரியர் கபிரியேல் போலோ, இத்தாலிய அதிகாரிகள் தன்னிடம், அந்த கார்மீது 300 முதல் 400 குண்டுகள் சுடப்பட்டதாக குறிப்பிட்டனர் என்று கூறினார். அந்தத் தாக்குதல் விமான நிலையத்திலிருந்து 700 மீட்டரிலேயே நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனது "வருத்தத்தை" தெரிவிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி பிரதம மந்திரி பெர்லுஸ்கோனிக்கு மீண்டும் உறுதிமொழியளித்தார்" என்று வெள்ளை மாளிகை பேச்சாளரான ஸ்கொட் மெக்கல்லன் ஊடகத்திற்கு கூறினார். ஆனால் வாஷிங்டன் அந்த காரில் Sgrena விமான நிலையத்திற்கு செல்கிறார் என்று தங்களது அமெரிக்க சரிநிகர் பொறுப்பிலுள்ளவர்களிடம் கூறவில்லை என்று கூறியதன் மூலம் உடனடியாக அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான பழியை இத்தாலிய அதிகாரிகள் மீது போட முயற்சித்தது.

"இந்த விளக்கம்" மேலும் எதையும் குறிப்பிடுவதாக இல்லை. Sgrena-வின் விடுதலைபற்றி அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை. போலீஸ் பணியில் நீண்டகால சேவையில் உயர்ந்த அனுபவம் பெற்ற பிரதிநிதி காலிபாரி. அவர் இதற்கு முன்னர், ஈராக்கில் பிணைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் சம்மந்தப்பட்டிருந்தவர் மற்றும் சென்ற செப்டம்பர் மாதம் இரண்டு இத்தாலிய உதவிப் பணியாளர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு துணைபுரிந்திருக்கிறார். பாக்தாத் விமான நிலையம் அருகிலுள்ள வெற்றி முகாமிலுள்ள, அமெரிக்க தளத்திலிருந்து அவர் செயல்பட்டார் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி, அவர் ஒரு அமெரிக்காவின் பணயக்கைதி ஒருங்கிணைப்பாளருடன் நெருங்கி பணியாற்றி வந்தார்.

இந்த சம்பவம் பெர்லுஸ்கோனிக்கு ஒரு கடுமையான அரசியல் சங்கடமாக வந்திருக்கிறது, அவரது அரசாங்கம் ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட சட்டவிரோதமான படையெடுப்பை உறுதியாக ஆதரித்தது மற்றும் இத்தாலியில் பரந்தரீதியான போர் எதிர்ப்பு கண்டனங்களுக்கு அப்பாலும் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஆதரவாக 3,000 படைகளை அனுப்பியது. வெளியுறவு அமைச்சரான, தேசிய பாசிச கூட்டணியின் தலைவர் Gianfranco Fini, இந்த துப்பாக்கி சூட்டின் ஒரு துயர சம்பவத்தை தள்ளுபடி செய்துவிட்டு "ஒரு விதியின் கூத்து" என்று குறிப்பிட்டார். தகவல் தொடர்பு அமைச்சர் Maurizio Gasparri இத்தாலிய துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்து விட்டார், "இராணுவப் பணி தொடர்ந்து நடைபெற்றாக வேண்டும், ஏனென்றால், ஈராக்கின் ஜனநாயகத்தை மற்றும் சுதந்திரத்தை அது உறுதிப்படுத்தியுள்ளது" என்று அறிவித்தார்.

அந்த துப்பாக்கிச் சூடு "தவறாக" நடைபெற்றிருக்குமானால், அமெரிக்க இராணுவம், ஈராக்கில் இருப்பது "ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும்'' காப்பாற்றுவதில் எந்தவகையிலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஒரு செல்வாக்கு மிக்க பிரபலமான பத்திரிகையாளர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டமை, மற்றும் அவர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளாக வந்த பின்னர் அமெரிக்க துருப்புக்களால், இத்தாலிய புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்த்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறார்கள் என்றால், அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள் என்பதற்காக, எத்தனை ஈராக்கிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இதே கதிக்கு ஆளாகியிருப்பார்கள்? படுமோசமான சம்பவங்களில் ஒரு சில மட்டுமே சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்கப்படுகின்றன.

வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு தாக்குதல்

ஆனால், இந்த "அப்பாவித்தனமான" விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. Sgnena முடிவாகக் கூறியிருப்பதைப்போல் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று சுட்டிக்காட்டும் சான்று உள்ளது. Sky TG 24 செய்தி அலைவரிசைக்கு பேட்டியளித்த அவர், இத்தாலிய அதிகாரிகள் பயன்படுத்துகின்ற நடைமுறைகளோடு, வாஷிங்டன் உடன்பாடு கொண்டிருக்காத காரணத்தினால்தான் தனது கார் குறிவைக்கப்பட்டது என்ற சாத்தியக்கூறை எழுப்பியுள்ளார். "பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை அமெரிக்கர்கள் விரும்பவில்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான். பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களது உயிர்களை காப்பாற்றுவதற்கு இத்தகைய நடைமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் எல்லாவகையிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். எனவே, என்னை குறிவைத்தார்கள் என்ற சாத்தியக்கூறை நான் தள்ளுபடி செய்துவிடுவதற்கு எந்த வித அடிப்படையும் எனக்கு தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

ஞாயிறன்று Il Manifesto-வில் "எனது உண்மை" என்ற தலைப்பில் அவர் பிரசுரித்துள்ள ஒரு கட்டுரையில் தன்னை பிணைக்கைதியாக பிடித்தவர்கள், தான் விடுதலை செய்யப்பட்டபின்னர், தான் மிகுந்த விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்ததை "தேவையில்லாதது அவர்களது கருத்தியல் ரீதியானது" என்று அவர் தள்ளுபடி செய்திருந்தார், ஆனால் துப்பாக்கி சூடு நடந்துகொண்டிருந்த போது அவர்கள் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. "என்னை விடுதலை செய்வதில் முழுமையான உறுதியுடன் இருப்பதாக அவர்கள் அறிவித்தனர், ஆனால் நான் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும், 'அமெரிக்கர்கள் நீங்கள் உயிரோடு திரும்பிப் போவதை விரும்பவில்லை.' "

Sgrena-வின் கூட வந்தவரான Pier Scolari அவரது குற்றச்சாட்டை பகிரங்கமாகவே வெளியிட்டார். "Giuliana உயிரோடு வருவதை அமெரிக்க இராணுவம் விரும்பவில்லை... அமெரிக்க இராணுவம் தான் உயிரோடு திரும்ப வருவதை விரும்பவில்லை என்பதற்கு Guliano-விடம் தகவல் இருந்தது." அவரோ அல்லது Sgrena-வோ இந்த நேரம்வரை அந்தத் தகவல் எதுவாக இருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டவில்லை.

தகவல் தொடர்பு அமைச்சர் Gasparri கட்டுப்பாடு தேவை என்று வலியுறுத்தினார்: "இந்த நேரங்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தவர்கள் தங்களை நிதானப்படுத்திக் கொண்டு எதையும் சொல்வதை தவிர்க்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார். அந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்பதை இத்தாலிய புலனாய்வு அமைப்பான SISMI மறுத்தது, ஆனால் மேலும் எந்தத் தகவலும் தரவில்லை, இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பிரதான, "சான்றே" தாக்குதலின் கொடூரத்தன்மைதான். அமெரிக்க உளவாளிகள் அவரைக்கொன்றுவிட்டு ஈராக்கியர் மீது பழி போடக்கூடும், அது பயனுள்ளதாகவும் இருக்கக்கூடும் என்று SISMI கருத்துத் தெரிவித்தது.

Sgrena-வும், Scolari-ம் முன்னெடுத்து வைத்துள்ள காட்சிகள் சரியாகவும் இருக்கலாம் அல்லது சரியில்லாமலும் இருக்கலாம், ஆனால் அமெரிக்க இராணுவம் பத்திரிகையாளரை திட்டமிட்டு குறிவைத்தது என்பதை நிச்சயமாக தள்ளுபடி செய்து விட முடியாது. அவர் அமெரிக்கா படையெடுப்பையும் அதற்கு பிந்திய ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றார். மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் செய்திகளை தொகுப்பதில் தேர்ச்சிபெற்ற Sgrena, ஈராக்கில் படுமோசமான சமூக நிலைமைகள் பற்றியும், இழிபுகழ் பெற்ற அபு கிரைப் சிறைச் சாலை கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதையும் பற்றி தெளிவாக பல கட்டுரைகளை Il Manifesto பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.

பாக்தாத் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் அமைந்துள்ள மசூதியில் பல்லூஜா அகதிகளை Sgrena பேட்டிகண்ட பின்னர், பிப்ரவரி 4-ல் அவர் கடத்தப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு பின்னர் அவரை பிடித்தவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர், அதில் அவர் தமது வாழ்விற்காக கண்ணீர் விட்டு மன்றாடுவது காட்டப்பட்டது, ஈராக்கிலிருந்து இத்தாலி மற்றும் வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ ரோமில் பத்தாயிரக்கணக்கானோர் தெருக்களில் கண்டனப் பேரணிகளை நடத்துமாறு தூண்டியது மற்றும் Sgrena-வின் விடுதலைக்காக தொடர்ந்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.

சென்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூடுதான் குறிப்பாக ஈராக் போரை கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிக்கையாளர்கள் அமெரிக்க இராணுவத்தால் குறிவைத்து நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் அல்ல. 2003 ஏப்ரலில் பாக்தாத்திலுள்ள அல்ஜெசீரா வலைப்பின்னல் அலுவலகங்களில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியபொழுது அதன் நிருபரான Tarek Ayyoub கொல்லப்பட்டார். ஒரு பாக்தாத் ஓட்டலில் ராக்கெட் தாக்குதல் நடப்பது பற்றி செய்தி திரட்டிய இரண்டு அல் அராபியா தொலைக்காட்சி நிலைய பத்திரிகையாளர்களை அமெரிக்க துருப்புக்கள் 2004 மார்ச்சில் சுட்டுக்கொன்றனர். தனது நடவடிக்கைகளிலிருந்து வருகின்ற அரசியல் தாக்கங்கள் குறித்து அமெரிக்க இராணுவம் அதிகமாக கவலைகொண்டிருக்கிறது என்பதை பொய்யாக்குகின்ற வகையில் இந்தக் கொலைகள் நடந்திருக்கின்றன.

Sgrena-வின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் Nicola Calipari அதில் மடிந்தது, ஆகியவை ஏற்கனவே இத்தாலியில் ஆத்திரமூட்டலை தூண்டிவிட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இத்தாலியர்கள் Calipari-ன் தீரச்செயலுக்கு அஞ்சலி செலுத்தினர், இன்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. சென்ற வாரக் கடைசியில், ரோமில் நடைபெற்ற ஒரு கண்டனப் பேரணி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தது மற்றும் ஈராக்கிலிருந்து துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஐரோப்பிய துருப்புக்களின் மற்றைய பிரிவுகள் வெளியேறுவதை தொடர்ந்து, இந்த சம்பவம் புஷ் நிர்வாகத்தின் விருப்பக் கூட்டணி என்று அழைக்கப்படுவதை மேலும் கீழறுக்க அச்சுறுத்துகிறது.

Top of page