World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Mutual concern over US militarism brings China and India closer

அமெரிக்க இராணுவவாதத்தை பற்றிய கவலை சீனாவையும் இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது

By K. Ratnayake
27 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவிவின் ஏப்ரல் 5 - 12 தேதிதகளில் நடைபெற்ற சமீபத்திய தெற்கு ஆசிய பயணம் இன்னும் கூடுதலான முறையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தற்காலிக நல்லிணக்க முயற்சிகளில் இன்னும் ஒரு ஊக்க நிலைப்பாட்டைக் குறித்தது. 1962ல் போரிட்டிருந்த இரு நாடுகளும் தங்கள் எல்லைப் பூசல்கள் பற்றிய வேறுபாடுகளை அகற்றவும், பொருளாதார உறவுகளில் நெருக்கமான தொடர்பு காணவும் சற்று முன்னேற்றம் கண்டனர். பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கும் சென்றிருந்த வென் இந்தியாவிற்கு தான் சென்றது அவருடைய பயணத்தில் "மிக முக்கியமான கட்டம்" என்று குறிப்பிட்டார். தன்னுடைய எட்டு நாட்கள் பயணத்தில், அவர் நான்கு நாட்கள் இந்தியாவில் கழித்திருந்தார்.

"இந்தியாவும் சீனாவும் ஒன்றாக உலக ஒழுங்கை மறு வடிவமைக்கும்" என்று அறிவித்த முறையில், இந்தியப் பிரதம மந்திரி, வென்னின் வருகைக்கு புதுடெல்லி கொடுத்த உற்சாகத்தை சுருக்கி தொகுத்துரைத்தார். கிட்டத்தட்ட 100 உயர்மட்ட சீன அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் வந்திருந்த வென், மற்ற மூத்த இந்திய அரசியல் வாதிகள், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட, பலரைச் சந்தித்தார். முடிவில் இரண்டு பிரதம மந்திரிகளும் 21 அம்சக் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்; இதில் 12 ஒப்பந்தங்கள், ஒழுங்கு முறைகள், இருநாடுகளுக்கும் இடையிலான உணர்தல் குறிப்புக்கள் ஆகியவை பட்டியலிடப்பட்டிருந்தன.

நீண்ட காலமாக உள்ள எல்லைப் பிரச்சினையைப் பற்றிய உடன்பாடுதான் பட்டியலில் உயர்ந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தச் சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளில், இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் பற்றிய சீனாவின் வலியுறுத்தல்களும், சீனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும், காஷ்மீர் லடாக் பகுதிக்கு அருகில் இருக்கும் அஸ்காய் சின் பகுதிக்கான இந்திய வலியுறுத்தல்களும் அடங்கியிருந்தன. புலம் பெயர்ந்தவராய் இந்தியாவில் வசிக்கும் தலாய் லாமா உட்பட, திபெத்தியர்களின் நடவடிக்கைகள் பற்றியும் பெய்ஜிங் அக்கறை காட்டியது.

இந்த வருகையின்போது, இரண்டு தலைவர்களும் எல்லைப் பிரச்சினை பற்றிய வேறுபாடுகளை களைவதற்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். சீனா, சிக்கிம் இந்தியாவிற்குத்தான் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டது. இதற்குப் பதிலாக புது டெல்லி திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்றும் திபெத்திய அகதிகள் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வலியுறுத்திக் கூறியது. மற்ற வேறுபாடுகள், "நட்புமுறையிலான கலந்தாலோசிப்புக்கள்" மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று விடப்பட்டன.

பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் கூட்டறிக்கையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் 2008 அளவில் $ 20 பில்லியனை எட்டும் என்றும், இது 2004ல் இருந்த $13 பில்லியனில் இருந்து அவ்விதத்தில் அதிகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரண்டு தலைவர்களும் கூட்டுப் பொருளாதார குழுக்கள், வணிகம், மூலதன வளர்ச்சி இவற்றை இயக்கத் தக்க கருவிகளை கொள்ள, நெருக்கமான நிதி உறவுகளை கொள்ள, முன்னேற்றமான தொழில்நுட்ப தகவல் ஒத்துழைப்பு மற்றும் நேரடி கப்பல், விமானத் தொடர்புகளை கொள்ளவும் உடன்பட்டனர்

சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான துறை எண்ணெய், எரிவாயு பற்றியது ஆகும். "ஆற்றல் பாதுகாப்பு, சேமிப்பு நிலைத் துறைகளில் ஒத்துழைக்க வேண்டும்" என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன; மேலும் இந்த இரு நாடுகளிலும் இருக்கும் நிறுவனங்கள், "மூன்றாம் நாடுகளில், பெட்ரோலியம், எரிவாயு இருப்புக்களை மதிப்பீடு செய்தல், கண்டறிதல்" இவற்றில் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் ஊக்குவிக்க உடன்பாடாயிற்று. இந்த உடன்பாடு இரு நாடுகளுக்கும் முக்கியமானது; ஏனெனில் தங்களின் மிக விரைவாகப் பெருகிக் கொண்டிருக்கும் சக்தி தேவைகளுக்கு இரண்டுமே போட்டியிட்டுக் கொண்டுதான் உள்ளன.

கடந்த தசாப்தத்தில் இந்தியா, சீனா இரண்டுமே மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தன; இதற்கு காரணம் இந்த நாடுகளில் இருக்கும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு மூலதனம் வெள்ளமென பாய்ந்திருந்தது. சீனா, "உலகத்தின் தொழிற்பட்டறை" என்று உள்ளநிலையில், இந்தியா "உலகத்தின் அலுவலகம்" என்று தன்னை மாற்றிக் கொண்டுள்ளது; வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதன் குறைவூதிய, கல்வியறிவுள்ள, ஆங்கிலம் பேசும் தொழில்நுட்ப வல்லுனர்கள், கணினிதிட்ட மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோரை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்திய, சீன ஆளும் செல்வந்தத்தட்டுக்கள் இரண்டுமே கூடுதலான, முக்கியமான சர்வதேச பங்கைக் கொள்ள விழைகின்றன; இதனால் இவர்கள் சந்தைக்கும் வளங்களுக்கும் மட்டும் போட்டியாளர்கள் என்றில்லாமல், ஆசிய பகுதியில் செல்வாக்கை பெருக்கிக் கொள்ளுவதிலும் போட்டியாளர்கள் ஆவர். உதாரணமாக, இந்தியா சீனா, இரண்டுமே தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள (ASEAN) நாடுகளில் தங்கள் பொருளாதார, அரசியல் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளன. பர்மாவில் உள்ள இராணுவ ஆட்சிக் குழுவிடம் சீனா நீண்டகாலமாகவே தொடர்புகளை கொண்டுள்ளது; அந்நாடு இந்தியாவுடன் எல்லையை கொண்டுள்ளது; புதுதில்லி தன்னுடைய இருப்பை அங்கு விரிவாக்க முயல்கிறது.

ஆயினும், உண்மையான பிரச்சினை, போட்டிக்கும் சாத்தியமான மோதலுக்கும் அந்த அளவுக்கு எது இட்டுச்செல்லுகின்றது என்பதல்ல, மாறாக இரு நாடுகளையும் எது ஒன்றாகக் கொண்டுவந்துள்ளது என்பதே ஆகும். உறவுகள் உறுதிப்பாட்டிலிருந்து தள்ளி இருக்கும் அதேவேளை, பல தசாப்தங்களின் பதட்டத்திற்கு பின்னர் உறவில் உளங்கனிந்தநிலையை பதித்திருக்கிறது. செய்தி ஊடகத்திற்கு பேசுகையில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஷ்யாம் சரண் அறிவித்தார்: "இந்தியாவும், சீனாவும் பங்காளிகள், போட்டியாளர்கள் அல்ல. நாங்கள் ஒருவரை ஒருவர் பகைவர்களாகப் பார்த்துக் கொள்ளவில்லை."

கூட்டு அறிக்கை இதைப் பற்றிய காரணங்களை சுட்டிக் காட்டியது. அது ஒவ்வொருநாடும் "ஒரு புதிய சர்வதேச அரசியல், பொருளாதார ஒழுங்கின் ஏற்பாட்டை முன்னிலைப்படுத்தும் செயல்முறையில் ஒவ்வொரு நாட்டின் முக்கியப் பாத்திரத்தை" குறிப்பட்டது மற்றும் "இரண்டு நாடுகளும் சர்வதேச உறவுகள், மற்றும் பன்முகச் செயற்பாடுகள் ஜனநாயகமுறைப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கின்றன" என்றும் குறிப்பிட்டது. உலக சமாதானத்திற்கான ஐ.நா.வின் முக்கியத்துவம், "பன்முகத்தன்மை" பற்றிய குறிப்புக்கள் மறைமுகமாக இருக்கின்றன, ஆனால் வாஷிங்டனுடைய ஒருதலைப்பட்ச, சட்ட விரோத ஈராக்கிய படையெடுப்பு பற்றிய குறிப்புக்கள் வெளிப்படையாக இருக்கின்றன.

இரண்டு நாடுகளையும் ஒன்றாகக் கொண்டுவந்த முக்கிய காரணி, இரண்டுமே கடிவாளமற்ற அமெரிக்க இராணுவவாதத்தின் விளைவுகளைப் பற்றி பரஸ்பரம் கவலை கொண்டிருப்பதுதான். சீனாவைப் பொறுத்தவரையில், இந்தியாவுடன் பூசல்களை அகற்ற வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவால் சூழப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாடு ஆகும். செப்டம்பர் 11 அமெரிக்காவின்மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, அமெரிக்க இராணுவத் தளங்களை முதன் முதலில் மத்திய ஆசியாவில் ஏற்படுத்தி, தென் கிழக்கு ஆசியாவில் தன்னுடைய இராணுவ வலிமையை மீண்டும் கட்டமைக்க முற்பட்டுள்ளது.

வாஷிங்டனும் பொருளாதார மற்றும் இராணுவ பிணைப்புக்களை புதுதில்லியுடன் வலுப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளது; இது சீனாவிற்கெதிரான மேலதிக நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அது கருதுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய, அமெரிக்க இராணுவப் படைகள் உளவுத்துறையிலும், கூட்டுப் பயிற்சிகளிலும் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளன. அமெரிக்கத் திட்டமான ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புக் கவசத்திற்கான திட்டங்கள் உள்பட மிக உயர்மட்ட கூட்டங்கள் பல பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் பனிப்போர்க்காலத்தில் போட்டி நாடான பாக்கிஸ்தான் அமெரிக்கா, சீனா இரண்டின் ஆதரவையும் கொண்டிருந்த அதேவேளை, இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளிலிருந்து ஒரு முறிவை பிரதிநிதித்துவம் செய்கிறது. புதுடெல்லியில் அமெரிக்கச் செல்வாக்கு ஓரளவிற்கு சமன் செய்யப்பட்டுவிடவேண்டும் என்று பெய்ஜிங் தெளிவாக நம்பிக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் சீனா கொண்டுள்ள உறவுகளும்கூட எந்தவிதமான அமெரிக்க சுற்றிவளைப்பையும் தடுக்கும் நோக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாய ரீதியில் அமைந்துள்ள பாகிஸ்தானில் க்வாடர் என்னும் இடத்தில் உள்ள ஆழ்நீர்த் துறைமுகத்தை கட்டுமானம் செய்யும் பணியில் பெய்ஜிங் இறங்கியுள்ளது. இந்த வசதி கண்காணிப்புக் கருவிகள் பலவற்றையும் கொண்டு சீனக் கப்பல்களின் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்; அதில் போர்க் கப்பல்களும் அடங்கும். இந்தக் கட்டுமானத்தில் பெய்ஜிங் தொடர்பு கொண்டுள்ளது அதனுடைய கடல் வலிமையை சீனாவின் முக்கியமான எண்ணெய் வரத்துக்கள் மத்திய கிழக்கில் இருந்து வருவதைப் பாதுகாக்க்கும் வகையில் விஸ்தரிக்க உதவும். வென்னின் வருகையின் போது, பங்களாதேஷ் சீனாவிற்கு சிட்டகாங் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வசதியை அளித்தது.

இந்திய நலன்கள்

சீனாவுடன் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவிற்கான காரணங்கள் அவ்வளவு வெளிப்படையாக தெரியவில்லை. 2000ம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தெற்கு ஆசியாவிற்கு பயணித்து, குறிப்பாக இந்திதியாவின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியதில் இருந்தே, புதுடெல்லி தன்னுடைய உறவுகளை வாஷிங்டனுடன் வளர்த்துக் கொள்ளுவதில் கணிசமான அக்கறை காட்டியது. அந்த உறவுகள் இன்னும் நெருக்கமாக புஷ் நிர்வாகத்தில் பெருகின; அதிலும் செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பின் உடனடியான காலத்தில் ஆயிற்று. இந்தியா ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்ததிற்கு முழு ஆதரவு கொடுத்தது, அது அதன் போட்டி நாடான பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் என்று கருதியது.

ஆனால், இந்தியாவுடைய சொந்த "பயங்கரவாதத்தின் மீதான தாக்குதலுக்கு" அமெரிக்கா ஆதரவு கொடுக்கும், அதாவது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆயதம் ஏந்திய போராளிகள் இந்தியா காஷ்மீரை ஆள்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கொண்டுள்ள முயற்சிகளை நிறுத்தும் என்ற புதுதில்லியின் கணிப்பீடுகளை, அதுவல்ல என்று நிரூபித்தது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தான்மீது அழுத்தம் கொண்டுவந்த போதிலும் கூட, வாஷிங்டன் முஷாரஃபைப் பதவியில் தக்கவைக்கும் முயற்சியைப் பற்றியும் கவனம் செலுத்தியது. எனவே தாலிபானுக்கு ஆதரவைக் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திய பின்னர், அமெரிக்க இராணுவ முயற்சிகளில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதம்தாங்கிய எதிர்ப்பை எதிர்த்துப்போரிடும் அமெரிக்க இராணுவத்தின் முயற்சிகளின் முக்கியக்கூறாக பாகிஸ்தான் ஆனது.

மார்ச் 2003ல் அமெரிக்கா தலைமையிலான ஈராக்கின்மீதான படையெடுப்பு, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளின் அபாயங்கள் பற்றி இந்திய ஆளும் செல்வந்த தட்டுக்களில் பயத்தை தூண்டிவிட்டது. போரைப் பற்றிய புதுதில்லியின் விமர்சனங்கள் மட்டுப்பாட்டை கொண்டிருந்தன; ஆனால் இந்திய அரசாங்கம் இந்தியப் படைகளை ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக அனுப்ப மறுத்துவிட்டது. படையெடுப்பிற்குப் பின், அமெரிக்க-இந்திய உறவுகள் வளரவேண்டும் என்று ஆதரவளித்த பாரதீய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம், எச்சரிக்கையுடன் வேறுபுறம் திரும்பிவிட்டது.

பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பேயி ஐரோப்பாவிற்கு 2003ல் பயணித்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இரண்டிற்கும் சென்றிருந்தார்; இருநாடுகளுமே படையெடுப்பு பற்றிக் குற்றங்காண்கின்ற நிலையில் இருந்தன. Business Line ல் ஒரு கட்டுரையாளர், அப்பொழுது, "ஈராக் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஏற்படும் மிகப் பெரிய பொருளாதார மாறுதல்கள் தக்க காலத்திலும், முக்கியமானதாகவும் இந்தியாவிற்கு இருக்கும்" என்று எழுதியிருந்தார்.

வாஜ்பேயி பெய்ஜிங்கிற்கும் 2003ல் சென்றிருந்தார்: பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் அங்கு செல்லுவது அப்பொழுதுதான் முதல்தடவை ஆகும். அவருடைய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த நிலைப்பாட்டின் பார்வையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். சீன அணுவாயுத தளவாடங்களால் முன்வைக்கப்படும் இந்தியாவிற்கெதிரான அச்சுறுத்தலைக் குறிப்பிட்டிருந்ததன் மூலம் 1998ல் வாஜ்பேயி அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனுக்கு எழுதிய கடிதத்தில் அணுவாயுத சோசதனைகளை நடத்துவதற்கான இந்தியாவின் முடிவினை நியாயப்படுத்தினார். அவருடைய பாதுகாப்பு மந்திரி ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று சீனாதான் "இந்தியாவின் முதல் எதிரி" என்று அறிவித்திருந்தார்.

2003ஐ ஒட்டி அத்தகைய சொற்ஜாலங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. வாஜ்பேயியின் சீனப் பயணத்தின்போது, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் முக்கூட்டுத் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற முன்னோக்கை சீனா முன்வைத்தது. Press Trust of India வின் அறிக்கை ஒன்று ஒரு மூத்த சீன அதிகாரியை மேற்கோள்காட்டி, "ஜனநாயக சர்வதேச உறவை மேம்படுத்துவதிலும், சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதிலும் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை பல பொது அக்கறைகளை கொண்டுள்ளன" எனக் குறிப்பிட்டதாக கூறியது. இந்த மாதமும் தன்னுடைய விஜயத்தின்போது வென் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

இந்திய ஆளும் செல்வந்தத் தட்டுக்களின் சில பகுதிகள் வாஜ்பேயியுடைய முயற்சிக்கு நல்ல ஊக்கம் கொடுத்தன. The Hindu, ஏடு, பெய்ஜிங்கும், புது தில்லியும், "தங்கள் கூட்டுத் தலைமையினால், உலக விவகாரங்களில் தேவையான சமநிலையை அளிக்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் "சர்வதேச உறவுகள் முன்னோடியில்லாத அளவிற்கு குழம்பியுள்ள நிலையில், அமெரிக்கக் கொள்கைவழியான முன்னரே தாக்கித் தடுக்கும், ஈராக்கின் மீதான போர்" என்ற நிலையில் சீனாவுடனான உறவு முக்கியமானது என்றும் அது மேலும் கூறியது.

BJP தலைமையிலான அரசாங்கம் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தல்களில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் தாக்கத்திற்கு பரந்த எதிர்ப்பின் விளைவாக தோல்வியை அடைந்தது. இந்திய அரசியலில் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பெரும்பகுதி ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி, தன்னுடைய கூட்டுச்சேரா இயக்கம் என்று அழைக்கப்படுவதுடன் பிணைக்கப்பட்டு, சோவியத் ஒன்றியத்துடன் குளிர்யுத்த காலத்தில் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தது. ஆயினும்கூட அமெரிக்காவுடன் வாஜ்பேயியின் கீழ் நிறுவப்பட்ட அமெரிக்க உறவுகளைத் தொடர்ந்து வருகிறது.

ஆயினும், கடந்த மாதம் அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் புதுதில்லிக்கு வந்தபோது, இந்திய ஆளும் வட்டங்களில் அமெரிக்கா தங்கள் நலனுக்கு அதிக அக்கறை காட்டவில்லை என்ற உணர்வு வலுவடைந்தது. அவ்வம்மையார், ஈரானில் இருந்து எரிவாயுக் குழாயை அமைப்பதற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானால் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கான புஷ் நிர்வாகத்தின் எதிர்ப்பை வலியுறுத்திக் கூறிவிட்டார். ஈரானின் மீது அழுத்தத்தை அதிகரிக்க வாஷிங்டன் முயலும்பொழுது, புதுதில்லி டெஹ்ரானுடன் தொடர்பு கொள்ளுவதுடன் குழாய் வழி மீது கணிசமான முக்கியத்துவத்துவம் கொடுத்துள்ளது.

ரைசிற்கு மறைமுகமான மூக்கறுப்பு கொடுக்கும் வகையில், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் சமீபத்தில் சீனாவிடம் "ஈரானின் இயற்கை எண்ணெய் வயல்களின் வளத்தைப் பயன்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர் இவற்றின் மூலம் குழாய்த் திட்டம் அமைத்து அது தென்மேற்குச் சீனப் பகுதியான யுனானில் முடியுமாறு செய்யலாம் எனத் தெரிவித்ததாகக் கூறினார். இந்தத் திட்டம் பற்றி விவாதிக்க அய்யர் இவ்வாண்டின் பிற்பகுதியில் சீனா செல்லவுள்ளார்.

உண்மையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உறவுகள் ஒன்றும் சுமுகமான பயணமாக இல்லை. இருநாடுகளும் வட்டாரத்தில் போட்டியாளர்களாக இருந்து, தத்தம் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கூட்டத்தான் ஒருவரை ஒருவர் பயன்படுத்த விரும்புகின்றன. தன்னுடைய பயணத்தின் போது, சீனப் பிரதமர் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் பேரவாவிற்கு ஆதரவுதர உரிய தகுதியற்ற கடப்பாடு எதையும் கொடுத்துவிடவில்லை. வென்னின் வருகைக்கு சற்றே முன்பு, இந்தியப் பாதுகாப்பு மந்திரி பிரணாப் முகர்ஜி, சீனாவின் படைகள் நவீனப்படுத்துவது பற்றி புதுதில்லி ஒரு கண்வைத்திருக்கும் என்று எச்சரிக்கை கொடுத்திருந்தார்.

சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் திரும்புவதன் மூலம், இந்தியா வாஷிங்டன் மீது கொண்டுள்ள எந்த சார்பையும் குறைத்துக் கொண்டுவிடவில்லை. புஷ் நிர்வாகம் இத்தகைய புதுதில்லியின் சமநிலைப்படுத்தும் செயலில் ஈடுபட அனுமதிக்குமா என்பது வேறு விஷயம். வென் இந்தியாவிற்கு வந்து சென்றபின், அமெரிக்க அரசுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் இந்திய-சீன உறவுகள் அமெரிக்காவிற்கு கெடுதல் செய்யும் என்ற கருத்துக்களை "முற்றிலும் ஊகத்தன்மையானவை" என்று உதறித் தள்ளினார். ஆயினும், இந்தக் காட்சிகளுக்குப் பின்னணியில், வெள்ளை மாளிகை இந்தியாவை சீனாவிற்கு எதிராகப் பயன்படுத்தும் அதன் திட்டம் சற்று பின்னடைவு கொண்டுள்ளது என்று மகிழ்ச்சியடைவதிலிருந்து தள்ளியே இருக்கிறது என்பதைக் கற்பனை செய்வது கடினம் இல்லை.

See Also:

எண்ணெய் தேடும் போட்டியில் இந்தியாவும் சேர்கிறது
 

Top of page