World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: The May 5 general election and the failure of Labourism

பிரிட்டன்: மே 5 பொதுத் தேர்தலும், தொழிற்கட்சியிசத்தின் தோல்வியும்

By Chris Marsden
5 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலண்டனில் கடந்த ஞாயிறன்று மே தினக் கூட்டம் ஒன்றில், பிரிட்டனின் சோசலிசச் சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ட்சன் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தொழிற் கட்சி ஒரு வலதுசாரி அமைப்பாக மாறியுள்ளமை முழுமையடைந்துள்ள நிலையில் மட்டும் இல்லாமல், இந்த மரபு வழியிலான கட்சியுடன் பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், விரோதப் போக்குடைய சூழ்நிலை என்ற நிலைமயும் அசாதாரணமாக நிலவும் நேரத்தில்தான் பிரிட்டனின் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பெறுகின்றன.

இது ஒரு முன்னோடியில்லாத நிலைமையாகும்; 1997ல் டோனி பிளேயர் ஒரு புதிய தொழிற் கட்சி (New Labour) வந்துவிட்டது என்று பிரகடனப்படுத்தி, சமூக சொத்துடைமைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த கட்சியின் நான்காம் சட்டவிதியை தகர்த்துவிட்டிருந்த போதிலும் கூட, மில்லியன் கணக்கான மக்கள் இது கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராக மனிதாபிமான தன்மையில் ஒரு மாற்றாக இருக்கும் என்று கருதியிருந்தனர்.

இது 2001ம் ஆண்டு நிலமையுடன்கூட ஒப்பிடத்தக்கதாக இல்லை; அப்பொழுது, தொழிற் கட்சியின் முக்கிய கோட்டைகளில் கூட மிகப் பெரிய சரிவு கட்சிக்கு இல்லாமற் போனாலும்கூட, பிளேயர் இரண்டாம் பதவிக்காலத்திற்கு வெற்றியைக் கண்டிருந்தார். இதற்குப் பின்னர் அரசாங்கத்தை பற்றிய பலரது எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும்தான் கண்டன. இன்று, பிளேயருக்கு தனிப்பட்ட முறையிலும், புதிய தொழிற் கட்சிக்கும் முழுமையாகவும் பரந்த வெறுப்பு இருக்கிறது என்பது மட்டும் இல்லாமல் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்ற உந்துதலும் காணப்படுகிறது.

அரசாங்கமும், செய்தி ஊடகங்களும், பல முறையும் பிரச்சினையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட முயன்றபோதிலும், இந்த அரசியல் மாற்றத்தை நிர்ணயிக்கும் முக்கிய பிரச்சினை தொழிற் கட்சி பிரித்தானியாவை ஒரு சட்டவிரோதப் போருக்கு இழுத்ததும் பின்னர் ஈராக்கை ஆக்கிரமித்ததும், அதனையொட்டி உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளின் மீது தாக்குதல் நடத்தியதும்தான்.

கடந்த சில நாட்களில், தேர்தலைப் பொறுத்தவரையில் கோல்ட்ஸ்மித் பிரபு சட்ட ஆலோசனை ஒன்றைக் கொடுத்தது வெளிவந்துள்ளதன் விளைவினால் ஆதிக்கப் பெற்றுள்ளது; ஆனால் இது அவருடைய மந்திரி குழுவிற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ சுற்றறிக்கைக்கு அனுப்பப்படவில்லை என்பது ஈராக்கியப் போரின் சட்டத்திற்குட்பட்ட தன்மை பற்றி தீவிர ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது.

கடந்த வார இறுதியில், போர் தொடங்குவதற்கு ஓராண்டு முன்னர் இதேபோன்ற ஆலோசனைகள் வந்ததை வெளியுறவுத்துறை அலுவலகம் கசியவிட்டிருந்தது. இதில் மிகப் பாதிப்புக் கொடுக்கக் கூடியது Sunday Times ஒரு தகவலை வெளியிட்டிருந்ததுதான்; அது ஜூலை 23, 2002 கூட்டத்தின் குறிப்புக்கள் வெளியிடப்பட்டதுதான். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை டெக்சாசில் உள்ள கிராபோர்டில் பிளேயர் மதிப்பிழந்த வகையில் கூடிப் பேசியற்கு சற்று முன்னர் வெளிவந்திருந்தது. இக்கூட்டத்தில் அவர் பிரிட்டன் ஈராக்கின் மீதான இராணுவத் தயாரிப்பிற்கு தான் பங்கு பெறும் என்ற உறுதிமொழி கொடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில், பிளேயர், வெளியுறவுத் துறை மந்திரி ஜாக் ஸ்ட்ரோ, பாதுகாப்பு மந்திரி ஜெப் ஹூன், அரசாங்கத் தலைமை வக்கீல் லோர்ட் கோல்ட்ஸ்மித், மூத்த இராணுவ, உளவுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பிளேயரின் உயர்மட்ட ஆலோசகர்களான அலஸ்டேர் காம்ப் பெல், ஜோனதன் பவெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday Times, ஈராக்கிற்கு எதிரான போர், ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அது அறிவிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பாக விவாதிக்கப்பட்டது; "ஆட்சி மாற்றம்" என்பது சர்வதேசச் சட்டத்திற்கு விரோதமானது என்பதுடன், இதில் பிரிட்டன் கலந்து கொள்ளும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது'' என குறிப்பிட்டிருந்தது.

இந்தக் குறிப்பின்படி, பிளேயர் கூறியிருந்தார்: "அரசியல் சூழ்நிலை சரியாக இருந்தால், மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுப்பர்."

முக்கிய பிரச்சினைகள், "இராணுவத் திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டதா, இராணுவத் திட்டத்தை செயல்படுத்தத் தக்க அரசியல் உத்தியை நாம் கொண்டு இருக்கிறோமா" என்பவைதான் முக்கிய பிரச்சினைகளாக பிளேயர் சேர்த்துக் கொண்டார் என்று டைம்ஸ் தெரிவிக்கிறது.

"ஈராக்கிய பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) மிகப் பெரிய அச்சுறுத்தலை அளித்ததால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை அரசியல் மூலோபாயமாக மேற்கொண்டது. ஆனால், ஜூலை மாத கூட்டத்தில், வெளியுறவு மந்திரியான ஜாக் ஸ்ட்ரோ போருக்காக காரணம் "மிக வலுவற்றதாக" இருக்கிறது என்றும் "சதாம் தன்னுடைய அண்டை நாட்டுக்காரர்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை என்றும் அவருடைய பேரழிவுகரமான ஆயுதங்கள் திறன்கள் லிபியா, வட கொரியா அல்லது ஈரானைவிடக் குறைவானதுதான்" என்று வாதாடியதாகவும்" டைம்ஸ் மேலும் கூறியுள்ளது.

"ஆயுதங்களைப் பற்றி ஒரு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஆயுத ஆய்வாளர்கள் அறிக்கை கொடுத்து "சட்டப்படி நியாயப்படுத்தும் வகையில்" உதவ வகைசெய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஸ்ட்ரோ ஆலோசனை தெரிவித்தார். "சதாம் ஐக்கிய நாடுகள் ஆய்வாளர்கள் பார்வையிட மறுத்தால் அரசியல், மற்றும் சட்டபூர்வமான முறையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று பிளேயர் கூறியதாகத் தெரிகிறது."

"இதைத் தவிர ஒரு இரகசிய முறையில் கூட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் பிரிட்டனும், அமெரிகாவும் போரை நியாயப்படுத்துவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது."

ஈராக் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல், ஐ.நா. தீர்மானத்தை அது மீறியது இரண்டும் முன்னரே எடுக்கப்பட்டிருந்த அமெரிக்க கொள்ளை முறை ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு காரணம் என்று நாம் வலியுறுத்தியிருந்ததை இந்தக் குறிப்பு உறுதிபடுத்துகிறது.

ஈராக்கின்மீது போர் தொடுப்பதற்கான பாதையானது ஏமாற்றுத்தன்மை, உண்மையைத் தவிர்த்தல், நேரடியான பொய்கள் இவற்றைக் கொண்ட தளமாக இருந்தது என்பதும் பிளேயர், புஷ், மற்றும் படையெடுப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவர் மீதும் போர்க் குற்றங்களுக்காக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதும் இப்பொழுது ஐயத்திற்கிடமின்றி வினாவிற்கே இடம் இல்லாத வகையிலுள்ளது.

இப்பொழுது ஈராக்கிய போர் பிளேயருடைய போர்தான், தாங்கள் அதில் இருந்து ஒதுங்கி இருந்தவர்கள் என்று அரசியல் உயர் மட்டத்தில் உள்ள சில பிரிவுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளினால் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும்.

எப்படிப்பட்ட அரசியல் குற்றமானாலும் அவருடைய பங்கை தனிப்படுத்தி மத்தியப்படுத்தல் என்பது போர் என்பது பிரித்தானிய ஆளும்வர்க்கத்தின் ஆதிக்கம் மிகுந்த பிரிவுகளின் நிர்ணயிக்கப்பட்ட முடிவு, இது பாராளமன்றத்தினால் வாக்கெடுத்து முடிவு செய்யப்பட்டது என்பதை மறைப்பதற்காகக் கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும்.

ஏனைய சட்ட வல்லுனர்கள் போர் சட்டவிரோதம், ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை கொண்டிருக்கிறது, உலக அமைதிக்கு அது ஓர் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது வெளிப்படையான மோசடி என்று தெரிந்திருந்தும்கூட, பெரும்பாலான தொழிற்கட்சி எதிர்ப்பாளர்கள் தங்களுடைய எதிர்ப்பை கைவிட ஆவலுடன் இருந்து அவ்வாறு செய்வதற்கு கோல்ட்ஸ்மித்தின் ஆலோசனையை அது நல்ல நாணயம்தான் என்ற கருத்தில் அதை ஏற்பதற்குத் தயாராக இருந்தனர்.

ஆனால், நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்: மில்லியன் கணக்கான மக்கள் பிரிட்டனிலும், சர்வதேச அளவிலும் ஏமாறத் தயாராக இல்லை என்ற நிலையில், தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் ஏமாற்றப்பட்டனர்? இதற்கு விடை என்னவென்றால், இது ஒரு நியாயமான, சட்டபூர்வமான போர் என்பதை அவர்கள் நம்பி ஏமாற்றப்பட விரும்பியிருந்ததுடன், பின்னர் தலைமையுடன் மீண்டும் சேர்ந்துகொள்ளலாம் என்ற நினைப்பைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர்.

டோரிக்கள் ஏன் ஆதரவு கொடுத்திருந்தனர்? அவர்கள் போரை நடத்துவதற்கு பிளேயரைப் போலவே கடமைப்பட்டிருந்தனர். உண்மையில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மைக்கேல் ஹோவார்ட் BBC இன் Question Time நிகழ்ச்சியில் இப்பொழுது தெரிந்துள்ள அனைத்தையும் முன்னரே அறிந்திருந்தாலும், பேரழிவு ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், போலியான உளவுத்துறை தகவல் இருந்த போதிலும், சட்ட அக்கறைகள் ஒருபுறம் இருந்தாலும், அவர் போருக்கு ஆதரவு கொடுத்திருப்பேன் என்றுதான் கூறியுள்ளார்.

தாராளவாத ஜனநாயகவாதிகள் இப்பொழுது போருக்கு எதிராக தாங்கள் வாக்கு அளித்ததற்கு நலன்களைக் காண முயற்சி செய்கின்றனர்; ஆனால் போர் ஆரம்பித்த பின்னர் அவர்கள் ஏன் விசுவாசத்துடன் அரசாங்கத்தை ஆதரித்தனர் என்ற வினாவிற்கு விடையிறுக்க முடியவில்லை.

பாராளுமன்றத்திற்கு தான் கூறியதில், பிளேயர் முழு உண்மையாக இருக்கவில்லை என்பது ஒரு கவனத்திற்கு எடுக்கப்படாத விஷயம் என்பதல்ல. ஆனால் இங்கு அடிப்படைப் பிரச்சினை பாராளுமன்றம் ஏமாற்றப்பட்டது என்பது அல்ல; அது ஜனநாயக நெறிகளை உறுதிப்படுத்த தவறியதோடு ஒரு சட்ட விரோத ஆக்கிரமிப்புப் போரை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1441என்ற பலவீனமான போலிக்காரணத்தின் துணை கொண்டு ஆதரித்தது என்பதுதான்.

தொழிற்கட்சியின் பல பிரிவுகள் இப்பொழுது பிளேயரை ஒரு சொத்து என்றில்லாமல் சுமை என்றுதான் காண்கின்றன; ஆனால், அவர்கள் இப்பொழுது அவருக்குப் பதிலாக கோர்டன் பிரெளனை பதவியில் இருத்தினால் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. டோரிகள் மார்கரெட் தாட்சரை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு ஒப்பாகத்தான் இதுவும் இருக்கும்; அவரை அகற்றியமை தாட்சர் முறையிலான நிதிநிலைபாட்டின் அடிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடப்படவில்லை.

அரசியல் உயர் தட்டினர் தங்களை ஈராக்கியப் போரில் இருந்து அந்நியப்படுத்திவைத்துக் கொள்ளும் முயற்சியாலும், இந்தக் காலனித்துவவகையிலான ஆக்கிரமிப்புப் போர் சட்டபூர்வமானதோ அல்லது இல்லையோ அல்லது அது ஐக்கிய நாடுகள் ஆதரவு என்ற போர்வைக்குள் நடத்தப்பட்டதோ என்பதாலும் ஏமாற்றப்பட்டுவிடாது, இப்பொழுதுள்ள இராணுவவாதம், போர் இவற்றை எதிர்ப்பதற்கு ஒரு மூலோபாயத்தையும் ஒரு தலைமையையும் தயாரிப்பதே தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள பிரச்சினை ஆகும்.

அரசியல் மாற்றங்கள்

அரசியல் மாற்றங்கள் நீண்ட கால அபிவிருத்தியின் விளைவாக நிகழ்ந்து, ஒரு முற்றுப்பெற்ற வடிவத்தை ஒரு நீண்ட காலத்திற்கு எடுக்காமலும் இருக்கக் கூடியவை ஆகும்.

இப்பொழுதும்கூட தொழிலாள வர்க்கம் தொழிற்கட்சியின் கைகளால் தான் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு தக்க வகையில் விடையிறுப்பதில் இருந்து வெகு தொலைவில்தான் உள்ளது; அதாவது ஒரு புதிய உண்மையான சோசலிசப் பாதையை காண்பதற்கான முயற்சிகளை அது இன்னும் எடுக்கவில்லை. பாரிய குழப்பங்கள் இன்னும் நிலவுகின்றன; தொழிற்கட்சிக்கு எதிர்ப்பு என்பது பெரிதும் ஒழுங்கமைக்கப்படாத நிலையில்தான் உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயகத்தில் இருந்து விரோதப் போக்கு உடையது என்பது கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிப்பட்டுள்ளது என்பதின் தன்மையை எவரும் குருட்டுத்தனமாக கவனிக்காது இருந்துவிடக்கூடாது.

பிளேயர் அவருடைய குழுவின் ஆர்வத்துடன் கூடிய நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்க, ஈராக் போர் போன்ற நிகழ்வுகள் தொழிலாள வர்க்க பிரிவினர் மத்தியில் உணர்மையை ஒழுங்கமைக்காமல் (உருவமைக்காமல்) கடந்துவிடுவதில்லை. போருக்கு எதிராக எதிர்ப்புக் காட்டியிருந்த மில்லியன் கணக்கானவர்கள் நடந்துவிட்டதை ஏற்றுவிட்டோம் என்ற நிலையில் இல்லை. இது தொழிற் கட்சியை உண்மையான பரந்த மக்களின் ஆதரவுத் தளத்தைப் பெற்றிராத நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.

அது மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டாலும்கூட, பெரும்பாலான மக்கள் பிளேயருக்கு மாற்றாக தொழிற் கட்சியின் எதிர்ப்பாளர்கள் இருப்பதாகக் காணவில்லை என்பதைத்தான் உறுதிப்படுத்தும்; இவர்களில் எவரும் தொழிலாள வர்க்கத்திடையே பெரிய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் டோரிக்கள்தான் தொழிற்கட்சியின் மிகப் பெரிய தேர்தல் சொத்தாக உள்ளனர்.

ஒரு சமீபத்திய ICM கருத்துக் கணக்கின்படி, 35 வயதிற்குட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முழு அரசியல் போக்குப்பற்றியும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நிலையில்லாத வாக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் 60 சதவிகிதத்தினர் ஏதேனும் ஒரு கட்சிக்கு உறுதியான ஆதரவு என்று இல்லாமல் உள்ளனர்; தொழிற்கட்சியில் 17 சதவிகிதத்தினரும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 13 சதவிகிதத்தினரும்தான் தாங்கள் கட்சிக்கு "வலுவான ஆதரவாளர்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

1997ம் ஆண்டு பிளேயரின் செல்வாக்கு மிக உயர்ந்த கட்டத்தில் இருந்தபோது வாக்குப்பதிவு 71 சதவிகிதமாக இருந்தது. 1992ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு மிக உயர்ந்த நிலையில் 78 சதவிகிதமாக இருந்தது. 2001க்குள் அது 59 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. ஒரு தசாப்தத்திற்குள் 19 சதவிகிதப் புள்ளிகள் குறைந்து வரலாற்றளவு குறைவாகப் போய்விட்டது; இதன் விளைவாக கடந்த முறை தொழிற்கடசி் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதற்கு வாக்குப் போடும் மக்களில் 25 சதவிகித ஆதரவுதான் கிடைத்திருந்தது. இம்முறை சில கணிப்புக்களின்படி வாக்குப்பதிவு 50 சதவிகிதம் இருக்கலாம் என்று கூறப்படுவதால் அஞ்சல் வாக்குகளைத் திரட்டும் வகையில் பாரியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்படியும்கூட, தொழிற்கட்சிக்கான வாக்கில் சரிவு டோரிக்களுக்கு எந்த நன்மையையும் அளித்துவிடவில்லை; ஓர் அரசாங்கம் அமைப்பதற்கு அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கவேண்டும். பிளேயர் மிகப் பெரிய முறையில் செல்வாக்கிழந்திருந்தாலும் கூட, பலராலும் நம்பிக்கைக்கு உகந்தவர் இல்லாத பொய்யர் என்று கருதப்பட்டாலும்கூட, ஹோவர்டின் செல்வாக்கு இதைவிடக் குறைவாகத்தான் உள்ளது.

கன்சர்வேடிவ் தலைவரின், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக புகலிடம் கோருவோர், குடியேறுவோர் இவர்களுக்கு எதிராக அச்சத்தையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் முயற்சிகள், அவர்மீதே மோசமான முறையில் திரும்பியது; இதனால் முக்கிய டோரிக்கள் மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி நிறையக் கேள்விப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்ததுடன், இந்த விடயம் மட்டும் பற்றிய ஒரு கொள்கை, கட்சி என்று காணப்படும் ஆபத்து வந்துவிடும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

இப்பொழுது, தாங்கள் முழுமையாக ஆதரித்திருந்த போரை நியாயப்படுத்துவதற்காக பிளேயர் பொய்கூறினார் என்று சொல்லி வாக்குகள் கேட்க வேண்டிய கட்டாயத்தில் ஹோவர்ட் தள்ளப்பட்டு விட்டார்!

தங்களுடைய பங்கிற்கு, தாராளவாத ஜனநாயகவாதிகள் சில அதிருப்தி அடைந்திருந்த தொழிற் கட்சி ஆதரவாளர்கள் வாக்குகளைப் பெறக்கூடும்: இதற்குக் காரணம் ஆரம்பத்தில் அவர்கள் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன், சில பரிதாபத்திற்குரிய சீர்திருத்தங்களுக்கும் வாதிட்டிருந்தனர். ஆனால் இது ஒன்றும் தொழிலாள வர்க்கத்துடனான அரசியல் நம்பிக்கையை உருவாக்கும் பாரிய திருப்பம் ஏற்படும் என்று கூறப்படமுடியாது.

ஒரு சமீபத்திய BBC கருத்துக் கணிப்பு அரசியல் போக்கிலிருந்தும் மற்றும் அனைத்துக் கட்சிகளிடம் இருந்து எந்த அளவிற்கு தொழிலாளர்கள் அந்நியப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதன்படி ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டவர்கள் 81 சதவிகிதமானவர்கள் கட்சிகளுக்குள் எந்தவித உண்மையான கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

1964ம் ஆண்டில் பாதிக்கும் மேலான வாக்காளர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சார்பானவர்கள் என்று வலுவாக அடையாளம் காட்டிக் கொண்டனர்; 2001ல் 16 சதவிகித வாக்காளர்கள்தாம் அப்படி வலுவான முறையில் தொழிற்கட்சிக்கும், 14 சதவிகிதத்தினர் கன்சர்வேட்டிவு கட்சிக்கும் வலுவாக சார்பானவர்கள் என்றும் கூறிக்கொண்டனர்.

தொழிற்கட்சி் அதிகாரத்துவத்தின் கூடுதலான உணர்மையான பிரிவினர் தாங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை இழந்துவிட்டோம் என்பதை நன்கு உணர்ந்துள்ளதுடன், குறைந்த பட்சம் இதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்தாகும். எனவேதான் மார்ச் 18 பதிப்பில் Guardian ல் ரொபின் குக் எழுதினார்: "வாக்குப் போட வராமல் இருக்கும் கட்சிதான், பெரும் அச்சுறுத்தலே ஒழிய, டோரிக்கள் அல்ல."

இக்கட்டுரையில் அவர் இன்று 40 சதவிகித வாக்காளர்கள் ஓய்வூதியம் பெறுவோர் என்றும், மொத்த வாக்காளர் பட்டியலில் அவர்கள் 30 சதவிகிதம் என்றாலும், "சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் மற்ற மக்களிடம் வாக்குப் போடும் விருப்பம் கடந்த பொதுத் தேர்தலைவிட மிகக் குறைவாகப் போய்விட்டது என்று சுட்டிக் காட்டுகின்றன; அத்தேர்தலில் வாக்குப்பதிவே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று வந்த பின்பு மிக மிகக் குறைவானது ஆகும்.

அவர் தொடர்ந்து எழுதுவதாவது: "அரசியல் போக்கு மீது பரந்த அளவில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளது உடனடித் தேர்தலுக்கு அப்பால் அதிகம் செல்லும் முக்கிய தாக்கங்களை கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடத்திய கணிப்பு ஒன்றில் மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் இவ்வழிமுறையில் கலந்து கொள்ளுவதின் மூலம் நாடு நடத்தப்படும் முறையை தங்களால் மாற்ற முடியும் என்று கருதுவதாக நம்பினர்.

''இப்பெரிய அளவிற்கு அந்நியப்படுதல் என்பது ஆழ்ந்த ஆபத்தைக் காட்டுவது ஆகும். நீண்ட கால நோக்கில், ஜனநாயகத்தின் பால் மக்களுடைய நம்பிக்கை குறைவது என்பது அதனுடைய உண்மைத்தன்மையை இல்லாதொழித்துவிடும். குறுகிய காலத்தில், நம்முடைய தேர்தல் முறையை திடீரென எழுச்சி பெறும் கட்சிகள், மக்களைத் திருப்தி செய்யும் வகையில் செயல்நோக்கத்தை கொண்டவையின் கருணைக்குள்ளாக்கிவிடக் கூடும்; இம்முறையில்தான் நெதர்லாந்து நாட்டில் தொழிற்கடசி் அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்பட்டது."

இதற்குப் பின் பிளேயரின் வணிக சார்புக் கொள்கையின் தாக்கம் பற்றி குக் விளக்குகிறார்; அக்கொள்கைகள் டோரிக்களுடைய உடைகளையே திருடிவிடும் தன்மையைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். "இந்த அரசியல் மாற்று உடை உடுத்தும் பிரச்சினைதான் நம்முடைய ஆதரவாளர்களிடையே உண்மையில் தொழிற் கடசி எந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கருத்துக் கணிப்புக்கள் தொழிற் கட்சி ஆதரவாளர்கள் அதைத் தங்களுடைய கருத்துக்களுக்கு வலதுபக்கத்தில் இருப்பதாகக் கூறுவதாகக் கண்டறிந்துள்ளன. ... இதன் நிகர விளைவு இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள வாக்காளர்களின் விகிதம் தாட்சர் காலத்தில் 80 சதவிகிதத்தில் இருந்து பிளேயர் காலத்தில் 30க்கும் குறைவாகச் சரிந்துள்ளது."

உண்மையில் தொழிலாள வர்க்கம் இத்தகைய சரியான முடிவாய்வுகளை கொள்வதை குக் எதிர்க்க வேண்டும் என்பதோடு தொழிற்கட்சிக்கான ஆதரவு இழப்பு வலதில் இருந்து வரும் என்ற ஆபத்தை சித்திரித்துக் காட்டவேண்டும்.

இறுதியாக அவர் கூறுகிறார்: "ஒவ்வொரு தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கும் இந்த கருத்து உண்மையில் யதார்த்தத்தை திரிபுபடுத்தல் என்பது நன்கு தெரியும்; ஆயினும் எப்படி தொழிற் கட்சியின் கணிசமான சாதனைகள் அனைத்தும், அதன் தனிச்சிறப்பு மதிப்புகளான சமத்துவம், ஐக்கியம், சமூக நீதி, சுதந்திரம் இவற்றில் வேறூன்றியுள்ளது என்பதை தொழிற் கட்சியின் தலைமை விளக்கும் வரையில், இதை நாங்கள் விடமாட்டோம்."

இத்தகைய வெற்று வாக்குறுதிகளை கையாண்டுதான் அதிகாரத்துவத்துடனான தன்னுடைய அரசியல் முறிவுக்கான எதிர்ப்பை நியாயப்படுத்தும் வகையில் குக் பிரச்சாரம் செய்யவேண்டியுள்ளது.

கடந்த மாதம் டோரி மீண்டும் பதவிக்கு வரும் ஆபத்து என்பதின் பொருள் போருக்கு விரோதப் போக்கு காட்டும் எதிர்ப்பு வாக்காளர்களுக்கு எந்த வாக்கும் கூடாது என்பதே ஆகும்.

ஈராக் படையெடுப்பை ஒட்டி ஏற்கனவே பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பிரித்தானிவில் உள்ள மக்களையும் பாதிப்பிற்கு உட்படுத்தும் நிலையைக் கொண்டு வந்துவிடாதீர்கள். அவர்கள்தாம், டோனி பிளேயர் அல்ல, தொழிற் கட்சி அரசாங்கம் இல்லாவிட்டால் தண்டனையை பெற்றுக் கொள்ள நேரிடும்'' என மேலும் கூறுகின்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இத்தகைய கருத்துக்களை கூறி, ஈராக் பிரச்சினை பற்றி அமைச்சரவையில் இருந்து இராஜிநாமா செய்து என்ன நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டாரோ, அதை விலைமாது போல் இழிவிற்குக் கொண்டும் வகையில் உரையாற்றி, போரினால் கோபமுற்றிருக்கும் பழைய தொழிற் கட்சி வாக்காளர்களை தன்னைப் போல் விசுவாசமாக இருக்குமாறு வலியுறுத்தி வருகின்றார்.

கோல்ட் ஸ்மித்தின் ஆலோசனை பற்றியும் அவர் தெரிவித்துள்ள கருத்துத்துக்கள் இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றிக் கூறுகின்றன.

"சட்டமா அதிபருக்கு சந்தேகம் இருந்தது என்பது அறியப்பட்டிருந்தாலும் கூட, ஈராக் போர் பற்றிய பாராளுமன்ற வாக்குப் பதிவு வேறுவிதமாக இருக்கும் என்பதில் எனக்கு அவநம்பிக்கைதான் உள்ளது" என்று கூறும் வகையில் பாராளுமன்றம் போரை ஆதரிப்பதற்காக ஏமாற்றப்பட்டது என்ற கூற்றை அவர் ஒப்புக் கொள்ளுகிறார்.

அவர் மேலும் வலியுறுத்துவதாவது "ஈராக் பற்றிய தன்னுடைய கடைமையை செய்யாததற்காக கன்சர்வேடிவ் கட்சி தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; போர் எதிர்ப்பாளர்களை அது கைவிட்டதற்காக டெளனிங் தெருச் சாவிகள் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுக்கப்படக்கூடாது.

"பழைய" தொழிற்கட்சிக்கு இனி திரும்பு முடியாது

இந்நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தை எங்கு நிறுத்தியுள்ளது?

தொழிற் கட்சிக்கு மாற்றாக ஒரு அமைப்பு தேவை என்பதை பெரும்பான்மையான தொழிலாளர்களை நம்ப வைக்கும் பிரச்சினை அல்ல இது; இத்தகைய மாற்றும் ஏதும் அதிகாரத்துவத்தின் எந்தப் பிரிவாலும் கொடுக்கப்படவில்லை என்பதை வலியுறுத்துவதும், எத்தகைய மாற்று தேவைப்படுகிறது என்பதை விளக்குவதும்தான் முக்கியம் ஆகும்.

பழைய கட்சியில் இருந்து விரோதப் போக்கு என்பது தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிசத்திற்கான வளர்ச்சியை தன்னியல்பாக தோற்றுவித்துவிடாது. அந்த விளைவு சிக்கல் வாய்ந்தும் மற்றும் ஒரு நீண்டகால தலையீடு மூலம் நம்முடைய கட்சியினால் மார்க்சிசத்தை தொழிலாளர்களுக்கு படிப்பித்தல் மூலம்தான் முடியும். இந்தப் பணிக்கு மையமாக இருப்பது தொழிற் கட்சியின் சீரழிவிற்கு விடையாக பழைய வகை சீர்திருத்தவாதத்திற்கு திரும்புதல் என்ற கருத்தை எதிர்ப்பது ஆகும்; அதேபோல் ஒரு புதிய கட்சி தொழிற் கட்சி இடதுகள், தொழிற்சங்க ஆதரவின் தலைமையினால் நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதும் ஏற்கப்படமுடியாது; பலர் இவ்வாறு கூறுவதற்கு காரணம் தொழிற்சங்கங்கள் தொழிற் கட்சியை போன்றே சீரழிவிற்குட்பட்டுவிட்டன என்ற உண்மையை அசட்டை செய்கின்றனர்.

தாராளவாத ஜனநாயகவாதிகள் "தொழிற் கட்சிக்கு சற்று இடது" என்ற நிலையை தமக்கு ஆதரவழிக்குமாறு அழைப்புவிட மட்டும் எடுக்கவில்லை. அரசியல் காட்சியரங்கில் ஏராளமான குழுக்கள் பழைய தொழிற் கட்சி அரசியல் கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

இவை அனைத்தும் குறிப்பிட்ட முறையில் வெற்றி அடையவில்லை என்பது உண்மைதான்; ஏதோ ஓரிரு தொழிற் கட்சி சீர்திருத்த தலைமுறை தொழிலாளர்கள் என்பது இப்பொழுது அறியப்படாத அளவிற்கு போய்விட்டதுடன், சீர்திருத்தத்தை மீண்டும் புதுப்பிக்கலாம் என்பதில் அவர்கள் மிக்ககுறைந்த நம்பிக்யையே கொண்டுள்ளனர்.

"பழைய தொழிற்கட்சியின் உண்மையான வாரிசுகள் என்று தங்களை முன்னேற்றுவித்துக் கொள்ளும் குழுக்கள் தங்களை காலம்கடந்துவிட்ட சகாப்தத்திற்கு மீண்டும் செல்லுவோம் என்ற கருத்திற்கு முன்னின்று ஆதரவு கொடுப்பவர்கள் ஆவர். ஆனால் அவர்களையும் புறக்கணிக்க முடியாது; ஏனெனில் அவர்கள், தொழிலாள வர்க்கத்திடையே, இப்பொழுது மிக ஆபத்தான அரசியல் குழப்பத்தில் இருக்கின்றனர்: தொழிற்கட்சியின் சீரழிவைப் பற்றிய தேவையான முடிவான கருத்துக்களை ஆய்ந்து எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜோர்ஜ் காலோவே, Respect-Unity கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறார்; இதுதான் இக்குழுக்களிலேயே அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் "பழைய தொழிற்கட்சியின் ஆவி" என்று Respect ஐ பற்றி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்; அதுதான் தாங்கள் நேசித்த கட்சியினால் கைவிடப்பட்டவர்களுக்கு இயற்கையான வீடு போன்றதாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அது ஒரு ஆவியாக இருக்குமானால், ரெஸ்பெக்ட் தன்னுடைய தவறுகளுக்காக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த பழைய ஜாக்கோப் மார்லியைவிட கூடுதலான சுமைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஏனெனில் இதன் முக்கியபங்கு தொழிலாளர்களை சீர்திருத்தவாதத்தில் இருந்து முறித்துக் கொள்ளாமல் தடை செய்யவேண்டும் என்பதும், அவர்கள் சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும்தான்.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), ரெஸ்பெக்ட்க்கு உந்து சக்தியை கொடுப்பதாக விளக்கி, சீர்திருத்தவாத கொள்கைகள்தான் தொழிலாளர்கள் ஏற்கத் தயாராக இருக்ககூடியதாக உள்ளதால் இதுதான் சாத்தியமானது என்று வலியுறுத்துகிறது. நவ-கீன்சிய (Neo-Keynesian) அரசிலுக்கு, தொழிற் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவையால் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதார கட்டுப்பாட்டிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று அது வாதிடுகிறது.

ஒரு உதாரணம் கொடுக்க வேண்டும் என்றால், ரெஸ்பெக்ட்டின் செயலாளரான, சோசலிச தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜோன் ரீஸ் மற்றும் அதன் பொருளாதார ஆலோசகர் கிரஹாம் டர்னர் இருவரும் ஏப்ரல் 18, 2005ல் Guardian பத்திரிகையில் எழுதினர்: "தடையற்ற ஊகமுறை என்ற மடத்தனத்திற்கு நாட்டை தள்ளி விட்டுள்ள தடையற்ற சந்தை முறை மாற்றம் ஒரு நிறுத்ததை காணவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அளவு பிரிவினை இல்லாத, அரித்து விட்டிராத பொருளாதார உத்தியைத்தான் பிரித்தானியா கொள்ளவேண்டும். கடன் கட்டுப்பாட்டு முறை வலுப்படுத்தப்படவேண்டும்.

"வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கைகளுக்கு ஒரு ரொபின் வரி (Tobin tax) விதிக்கப்பட வேண்டியது, தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டும், இதை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பம் உள்ளது; அது ஒருவேளை மத்திய வங்கிகளை மீண்டும் உலகப் பொருளாதார முறையின் மீது கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கு அனுமதிக்கக் கூடும்; இப்பொழுது அது ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு 1997இலிருந்து சென்றுகொண்டிருக்கிறது.

"எல்லாவற்றிற்கும் மேலாக, பெருவணிகத்திற்கு முற்றிலும் தாழ்ந்து நடப்பது என்பது தொடர்ச்சியாக நடைபெறக் கூடாது என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ளவேண்டும். பொதுத் துறை முக்கிய பங்கைக் கொண்டு பெருநிறுவனங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளை உயர்த்துவது, பொருளாதார வளர்ச்சி உந்துதலுக்காக கடன் வாங்குவதில் நம்பிக்கை கொண்டிருத்தல் என்ற இறுதியான, மனஉளைச்சல் முறையை தவிர்க்கவும் நடவடிக்கைகள் வேண்டும்."

இந்தக் கொள்கை எவ்விதத்திலும் 1960, 1970 களில் தொழிற் கட்சி வாதிட்டிருந்த கொள்கையில் இருந்து வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. இலாப முறையின் தொடர்ச்சி என்ற கொள்கை அடிப்படையாக இது கொண்டுள்ளது; மேலும் தொழிலாள வர்க்கம் பிரித்தானிய அரசாங்கத்தின் அமைப்புகளையே தன்னுடைய நலன்களுக்கு நம்பி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது; அதாவது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திடம் நம்பிக்கை என்பது கூடாது எனப்படுகிறது. இது தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு தாழ்மையான முறையீடு என்று அது கூறுவதை மேற்கோளிடுகிறேன்; "பெருவணிகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அதிகாரச் சமநிலையை சீராக்குக."

சோசலிச தொழிலாளர் கட்சியை அல்லது ரெஸ்பெக்ட் போன்ற குழுக்ளை மத்தியவாதிகள் அல்லது "வலது மத்தியவாதிகள்" என்று வரையறுத்தால் அது போதாது. இவர்கள் கலப்படமற்ற சீர்திருத்தவாதிகள் ஆவர்; தொழிற் கட்சி், தொழிற்சங்க ''இடதுகள்'' அரசியல் மறு ஒழுங்கமைப்பு முறையில் ஒரு பங்கை இவர்கள் பெற வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் கருதவில்லை. அதிகாரத்துவத்தின் வலதுசாரி பிரிவு தொழிலாள வர்க்கத்தின் மீதான கட்டுப்பாடை இழந்து கொண்டிருப்பது என்ற பயத்தைத்தான் இவை பொதுவாகக் கொண்டுள்ளன.

சோசலிச தொழிலாளர் கட்சியின் சீர்திருத்தவாதம் சமீபத்தில் அதன் முந்தைய நண்பர் காலோவேயினாலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "பெருந்தகை ஜோர்ஜ்" ஒரு செய்தியாளரான ஜோன் ஹாரிசால் பேட்டி காணப்படுகிறார்; ஹாரிஸ் சில தொகுதிகளில் உத்தி முறையில் வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளார்; அம்முறை பிளேயருக்கு அழுத்தம் கொடுக்கும் என்று கருதுகிறார். அப்புத்தகத்தின் பெயர், இப்பொதுது நாங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றோம்? (So Who Do We Vote For Now?)

இவர் காலோவேயைக் கேட்பது; "ஒருகாலத்தில் வெறுத்திருந்தவர்களுடன் வெளிப்படையாக கைகுலுக்குவது வினோதமாக இல்லையா? அவர் கூறுகிறார் "நன்று, இல்லை" அப்பொழுது அவர் முகத்தில் ஒரு சிரிப்பு தோன்றுகிறது. "உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் எவருடனும் கைகுலுக்குவேன்."

சதாம் ஹுசைனுடன் கைகுலுக்கியதற்காக காலோவே இழிபுகழ் பெற்றவர் ஆவார்.

ஆனால் தன்னுடைய கருத்தை வலியுறுத்தும் வகையில் ஹாரிஸ் நம்பிக்கைத் தன்மையுடன் கூறுகிறார், "எனக்கு ட்ரொஸ்கிஸ்டுககளை பிடிப்பதே இல்லை. உங்கள் புத்தகத்தை படிக்கும் போது உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்."

அதற்கு காலோவே பதில் கூறுகிறார்:

"இல்லை. எனக்குப் பிடிக்காது. அவர்களுக்கு எதிர்ப்பு என்பதில் எனக்கு நீண்ட கால வரலாறு உண்டு ...முதலில் இந்த சோவியத் யூனியன் இல்லா தற்போதைய உலகில் நமக்கிடையே உள்ள உறவுகள் பற்றி மறு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். தீவிர இடது குழுக்கள் தென்பட்டால், நமக்கு அவர்களைப் பற்றி உறுதியாகத் தெரியும். சோசலிச தொழிலாளர் கட்சி ஒன்றும் தீவிர இடது வகையில் நடந்து கொள்ளுவதில்லை. அது அவ்வாறு நடந்து கொண்டால் Stop the War movement இயக்கத்தின் உந்து சக்தியாக அது இருந்திருக்காது; அது இரண்டு மில்லியன் மக்களை தெருக்களுக்கு கொண்டுவந்தது. அந்த இயக்கத்தில் மில்லியன் கணக்கான மக்கள் ஈடுபட்டிருந்தனர்; சோசலிச தொழிலாளர் கட்சி Stop the War movement இனை ஒரு தீவிர இடது வகையில் நடத்தியிருந்தால் அவ்வாறு செய்து காட்டியிருக்க முடியாது. பிரித்தானியாவில் இரண்டு மில்லியன் ட்ரொட்ஸ்கிச வாதிகள் இல்லை.

"மற்றவர்களை போலவே, அவர்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.... அவர்களுடைய தலைவர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பரந்த முறையில் செயல்பட விரும்பும் SWP ஐத்தான் நீங்கள் இப்பொழுது காண்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு பாராளுமன்ற பாதையை தேர்ந்துடுத்துள்ளார்கள்; எனவே நீங்கள் களிப்படைய வேண்டும்; அதைப்பற்றி குறைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை." (p.146)

"களிப்படைதல்தான்" உண்மையில் -- இதே உத்தரவுதான் தெற்கு ஜோர்ஜியா மீண்டும் 1982ல் கைப்பற்றபட்ட பின்னர் பாக்லாந்து போர் பற்றிக் குறைகூறியவர்களுக்கு தாட்சர் கொடுத்த சொற்களாகும்."

SWP காலோவேயின் கருத்துக்களை பற்றி குறைந்த அளவு சங்கடத்திற்காவது உள்ளாயிற்று என்பது அதை மறைக்க அது மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து தெரியவரும். இப்புத்தகம் பற்றி லிண்ட்சே ஜேர்மன் கொடுத்துள்ள ஆய்வில், "ஹாரிசை பொறுத்தவரையில் ஜோர்ஜ் காலோவே இன் கருத்துக்களை பற்றி சிரிப்பைக் கொண்டார். ...இவ்விதத்தில் ரெஸ்பெக்ட் சற்று கவனத்தை ஈர்த்துள்ளது என்றுதான் கூறவேண்டும். காலோவே ஒரு பெரிய வெற்றிதான், ஆனால் SWP குறைவான நிலையில்தான் உள்ளது." என்று கூறியுள்ளார்.

அந்தச் சிரிப்பு SWP இன் இழப்பில் வந்ததாகும்; அதுதான் எள்ளி நகையாடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு, திருவாளர் காலோவே போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகள் விரும்பும் வகையில் கருவியாக நடந்து கொள்ளுகிறது.

ஆனால் தொழிற் கட்சியின் இழிசரிவு போலவே, இத்தகைய போக்கும் மோசமான தனிநபர்களுடைய செயற்பாடுகளினால் என்று கூறுவதற்கில்லை. அதிகாரத்துவத்திடம் வெளிப்படையாக ஆர்வம் காட்டுதலும், வெளிப்படையான தேசிய சீர்திருத்தவாத வேலைத் திட்டங்களை தழுவுதலும் - புரட்சிகர சொற் ஜாலங்களை தவிர வேறு எதுவும் இல்லை -- முந்தைய தீவிரப்போக்கினரிடையே எங்கும் காணப்படும் இயல்நிகழ்ச்சி ஆகும்.

இந்தக் குழுக்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே, சுயாதீனமான மார்க்சிச கட்சி ஒன்றை தொழிலாள வர்க்கத்திற்காக கட்டியமைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டவை ஆகும்; சமுதாயத்தில் சோசலிச மாற்றத்தை கொண்டுவர ஸ்ராலினிச மற்றும் தொழிற்கட்சிகளுக்கு இடதுபுறம் செல்ல அழுத்தம் கொடுத்து நிர்பந்திக்கப்படக்கூடியவை என்பதைத்தான் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இன்று, தங்களுடைய பழைய கட்சிகளில் இருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் முறித்துக்கொண்டு வரும் நிலையில், அதிகாரத்துவத்துவம் தொடர்பான நோக்குநிலை என்பது இதன் போலித்தனமான மார்க்சிச போக்கு அகற்றப்பட்டு, அதிகாரத்துவத்தை புதுப்பிக்கும் வழிமுறையாக முன்வைக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் நடுவில், பழைய தீவிரப்போக்கினர் பல நாடுகளிலும் தங்களுக்கு என்று ஒரு முக்கியமான இடத்தை தொழிலாளர் அதிகாரத்துவம் என்ற கருவியினுள்ளே மட்டும் இல்லாமல், அதிகாரத்தின் மிக உயர்ந்த அணிகளிலும் முக்கிய இடம் பெற்றுவிட்டனர்.

அவர்களுடைய அரசியல் ஒருங்கிணைப்பு எந்த அளவிற்குச் சென்றிருக்கிறது என்றால், அவர்களுடைய சொந்த அணிகளுக்கு இடையே கூட அதுபற்றி பேசப்படுகிறது. உதாரணமாக ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியின் (SSP) அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்ட கொலின் பாக்ஸ் மற்றும் ஆலன் மக்கோம்ப்ஸ் கொடுத்திருந்த அழைப்புக்களை நான் பார்த்தேன்.

SSP ஸ்காட்லாந்தின் பாராளுமன்றத்தில் ஆறு உறுப்பினர்களை கொண்டுள்ளது. வாக்குப் போட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையில், இறுதியில் வெற்றி பெற்ற பாக்ஸ், பாராளுமன்றத்தை பற்றி எட்டு முறை குறிப்பிட்டு, வலியுறுத்தி உள்ளதாவது:

"என்னுடைய முழு நம்பிக்கை என்னவென்றால் சோசலிசத்தை தோற்றுவித்தல் என்பது பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து உந்தப்படும். பாராளுமன்றம், பாராளுமன்றத்திற்கு புறம்பான சக்திகளை கட்டமைப்பு செய்வதற்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது. நமக்கு நல்ல அரங்குகளை பாராளுமன்றம் அளித்துள்ளது; இதுகாறும் பேசியதைவிடக் கூடுதலான மக்களுக்கு நாம் உரையாற்ற இது அனுமதிக்கிறது.

"பாராளுமன்றத்தில் இருக்கும் SSP க்கும் நம்முடைய அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே செயற்கையான பிளவுகள் தோற்றுவிக்கப்பட வேண்டாம்."

பாராளுமன்றத்தின் பங்கு பற்றி பாக்ஸ் ஏன் இத்தனை வலியுறுத்தும் தன்மையை கொண்டுள்ளார் என்று பார்ப்பது கடினம் அல்ல. ஏனெனில் அவரது எதிரி மக்கோம்ஸ் எழுதுகிறார்: "நான் போட்டியில் தாமதமாக நுழைந்தேன் --விண்ணப்பித்தல் மூடப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் நுழைந்தேன். கட்சி அடிமட்டத் தொண்டர்களின் அழுத்தத்தின் பேரில் அவ்வாறு செய்தேன். நம்முடைய கட்சி ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்தின் ஈர்ப்பு சக்திக்கு ஒரு மாற்று மருந்து போல் செயல்பட வேண்டும் என்பதற்காக என்னை அவர்கள் வேட்பாளராக நிற்கச் சொன்னார்கள்...

"பாராளுமன்றத்திற்குள், முன்னேற்றங்களுக்காகவும், சீர்திருத்தங்களுக்காகவும் நாம் தொடர்ந்து போராடுதல் வேண்டும். ஆனால் நாம் நம்முடைய பார்வையை கிட்டப் பார்வையாக்கிவிட கூடாது; பிரிட்டிஷ் அரசு நிர்ணயிக்கும் வரம்பிற்குள் அது குறுகிவிடக் கூடாது... எமது பணியை சமன் செய்வதுதான் நம்முடைய தற்போதைய செயற்பாடு ஆகும்; அதற்குப் பின், ஹோலிரூட் உலகிற்கு வெளியே SSP இன்னும் தீர்க்கமான முறையில், வெளியுலகில் கவனத்தைச் செலுத்தும்."

SSP ஸ்காட்லாந்து தேசியம், மற்றும் ஹோலிரூட் ஆகியவற்றை தழுவவேண்டும் என்ற கருத்திற்கு உந்துதல் கொடுத்து தலைமவகித்த மக்கோம்ஸின் உள உறுத்தல்கள் வெளிவந்த போதிலும் கூட, பாராளுமன்றமும் அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியலும் தொடர்ந்து SSP மீது அதன் "ஈர்ப்பு ஆற்றலை" தொடர்ந்து தீவிரப்படுத்தும்; இப்படித்தான் அவர்கள் தங்களின் எதிரிணையானவர்கள் Respect மற்றும் சர்வதேச ரீதியில் ஏனையோரிடமும் நடந்து கொண்டு வந்துள்ளனர்.

பாராளுமன்ற அரங்கு மற்றும் தேர்தல்களை சாத்தியமான நிலைமையில் எப்பொழுதும் எங்கும் சோசலிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும்; இங்கும் முன்னாள் தீவிரப்போக்கினர் தேர்தல் முறையின் சிறப்புக்களை முற்றிலும் ஏற்கும் வகையில் உள்ளனர்; அதுவும் முற்றிலும் இழிவிற்கும் குறைமதிப்புக்கும் அது பெரிதும் உட்பட்டுவிட்ட நிலையில் அத்தகைய முயற்சியைக் கொண்டுள்ளனர்.

சோசலிசக் கொள்கைகையைப் புதுப்பிப்பதற்கான புறநிலை அடிப்படை

SWP போன்ற முன்னாள் தீவிரப்போக்கினர் அனைவருக்கும் ஆரம்ப நிலையாக இருப்பது காலோவே போன்ற தொழிற் கட்சி வாதம், ஸ்ராலினிசம் இவற்றின் சீரழிந்த மிச்சசொச்சங்களால் வழங்கப்பட்ட கச்சாப்பொருட்களில் இருந்து தேர்ந்தெடுத்து, மிகக் கொடூரமான முடிவுகளுக்கு உட்பட இருக்கும் பிராங்கன்ஸ்டைன் அரக்கன் போல் அவர்களை கண்டனத்திற்கு உட்படுத்தி, புதிய கட்சியைக் கட்டுவதாகும்.

இன்னும் அடிப்படையான முறையில், அவர்கள் ஆதரிக்கும் வேலைத்திட்டம் பூகோளமயமாக்கலின் வளர்ச்சியினால் செயல்படுத்த முடியாத தன்மையைப் பெற்றுவிட்டது. தொழிலாளர்கள் இடையே நிலவும் சீர்திருத்தவாதப் பிரமைகளால் இது மாறிவிடவில்லை.

தொழிற் கட்சி வாதம், ஸ்ராலினிசம் இவற்றின் சரிவைப் பற்றி புலம்பும் தீவிரப்போக்கினருடன் நாம் சேரவில்லை; அல்லது மிகக் குறைந்த அளவு அரசியல் நனவு உடைய தொழிலாளர்களிடம் தாழ்ந்த நிலையிலும் நிற்கவில்லை மற்றும் எமது முன்னோக்கிற்கு இதைத் ஆரம்ப நிலையாகவும் கொள்ளவில்லை.

முதலும் முக்கியமானதாகவும், முதலாளித்துவத்திற்குள்ளேயான -பூகோளரீதியாக ஒழுங்கு செய்யப்படும் உற்பத்தி முறைக்கும், பகைமை உடைய தேசிய அரசுகளாக பிளவுபட்டிருக்கும் உலகத்திற்கும் இடையில், தனியார் உடைமைக்கும் சமூக வகையிலான உற்பத்தி முறைக்கும் இடையில் உள்ள- புறநிலை முரண்பாடுகள் பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் நம்மை இருத்திக் கொள்ளுவோம். இவைதான் தவிர்க்க முடியாமல் அவற்றின் முறிவிற்கு இட்டுச் சென்று புரட்சிகரப் போராட்டங்களை தொடக்கிவைக்கும்.

நன்காம் அகிலம் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அடிப்படையான பணிகளில் இது பெரும் சிறப்பை அளித்து, அவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் உண்மையில் கலாச்சார மட்டத்தை உயர்த்தவேண்டுவதற்கு ஆவன செய்யும், அப்பொழுதுதான் அது எதிர்கொண்டிருக்கும் புறநிலைப் பணிகளை திறமையுடன் சந்திக்க அதனால் முடியும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் அரசியல் புரிதலின் மட்டத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக நாம் பாடுபடவேண்டும்; புறநிலை சூழ்நிலைமை நமக்குச் சாதகமாக இருக்கிறது என்ற முழு நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காகவும் நடத்தப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அரசியல் மரபுரிமைச் செல்வத்தை நாம் அடிப்படையாக கொண்டுள்ளோம்.

Weekly Worker என்ற பத்திரிக்கையில் வந்த, ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) இன் - எந்தக் கொள்கை முறையினாலும் ஏற்படாத இயல்பைக் கொண்ட - ஒரு பிளவுபட்ட குழுவின் அறிக்கை ஒன்றை உங்கள் கவனத்திற்கு, இதைப் பொறுத்தவரையில் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த, பெரிதும் ஐக்கியமற்ற கட்சி, தொழிற்சங்கம், தொழிற்கட்சி இடதுகள் மற்றும் சீர்திருத்தவாத கொள்கையை பின்பற்றும் குழுவின் அடிப்படையில் ஒரு புதிய கட்சியை ஏற்படுத்தும் முயற்சிக்கு மற்றொரு உதாரணமாகும். இது ஜிம்மி நோலன் மற்றும் டெரி டீக் இவர்களைச் சுற்றிய லிவர்பூல் கப்பல் கட்டும் தொழிலாளர்களின் ஸ்ராலினிச தலைமையினால் முன்முயற்சிக்கப்பட்டிருந்தது. இதில் 1980களில் நுழைந்திருந்த 47முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர்களும் கூட்டாக இருந்தனர். இதன் தலைமை முன்னாள் மற்றும் தற்போதைய தீவிரக் குழுக்கள் பல தன்னிடத்தில் இணைந்து பிரிவுகளை ஏற்படுத்தும் நிலையை நிராகரித்த அளவில் முறிந்தே போயிற்று; மேலும் தலைமை கடுமையான மையப்படுத்தப்பட்டுள்ள அமைப்பு வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

இத்தகைய சமீபத்திய இழிந்த நிலை சற்று கூடுதலான முறையில் கவனத்தை கொடுக்கிறது; ஏனென்றால், "எந்த அரங்குகளும் பிரிவுகளும் வேண்டாம்" என்று ஒரு நிலைப்பாட்டை உறுதியாக கொண்டுள்ள ஸ்ராலினிச மூத்த தலைவர்கள் WRP இன் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்; இதில் ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்று அடக்க முடியாத வகையில் ஆதரித்து வாதிடும் டொட் கிப்சனும் அடங்கியுள்ளார்.

உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச கட்டுப்பாட்டை நிராகரித்திருந்த கிளிவ் சுலோட்டரின் WRP பிரிவு ஒன்றில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் கிப்சன் ஆவார். இந்தப் பிரிவு ட்ரொட்ஸ்கிசத்துடனும் முறித்துக் கொண்டு பல்வேறு குட்டி முதலாளித்துவ பிரிவுகளுடனும் மறுசேர்க்கை நாடி, பல நேரமும் வெளிப்படையான மார்க்சிச விரோதப் போக்குகளை கொண்டிருந்தது ஆகும்.

உள்ளூர் போக்குவரத்து மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்திற்கு வாதிடுபவர் என்ற முறையில் இவ்வம்மையார் பேச்சு வார்த்தைகளை நடத்தினர்; அது 1996ல் லிவர்பூல் துறைமுக தொழிலாளர்கள் கதவடைப்பிற்கு உட்பட்டபோது ஏற்பட்டது. அப்பொழுது இவர் USP ஏடு ஒன்றின் ஆசிரியராக இருந்தார்; வெகுஜன தொழிலாளர் கட்சிக்கான இயக்கம் (Movement for a Mass Workers Party) என்ற பெருமையான பெயரை கொண்டு இதன் வாழ்வை இது தொடங்கியது என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

ஒரு கட்சிக்குள் பல பிரிவுகளும் அமைக்கப்படலாம் என்ற உரிமைக்கு எதிராக கிப்சன் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளார், ஏனெனில் "ஏற்கனவே இருக்கும் உட்குழுக்களை 'அரங்கங்களாக' கொள்ள வேண்டும், அவற்றை, 'மக்கள் சக்தியாகக் கொள்ள வேண்டும்' என்ற கருத்துடையவர்கள் தொழிலாளர் கட்சிக்கு விரோதப் போக்கு உடையவர்கள் ஆவர்."

அவர் தொடர்கிறார்: "நாம் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம்; கட்சி உறுப்பினர்களுக்கு உரிமை இருப்பதற்கு காரணம் கட்சியே தன்னுடைய வழியை தவற விட்டுவிடக்கூடாது, இலக்கை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்கும்தானே ஒழிய தனி நபர்களுடைய தனிச் செயற்பாடுகளை ஏற்பதற்கோ, அவர்களுடைய காயமுற்ற உணர்வுகளை ஆற்றுவதற்கோ அல்லது தற்கால சமூகத்தின் அழுத்தத்தை கொல்லைப் புறமாக உள்ளே அனுமதிக்கவோ அல்ல."

WRP அதன் சீரழிவுக் காலத்தில் ஒரு ஊழல் தலைமை தன்னை எப்படிக் காத்துக் கொண்டது என்பது பற்றிய எதிர்மறை படிப்பினைகளை கிப்சன் மறக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. "காயமுற்ற உணர்வுகளால்" பிணைப்புடைய அரசியல் ஆபத்துக்களை பற்றிய அவருடைய விளக்கம், எவ்வாறு அவரும் சுலோட்டருடன் இணைந்து WRP-ன் உறுப்பினர்கள் பலரின் அகநிலைவாதம் மற்றும் நோக்குநிலைதவறலை பயன்படுத்தி, அனைத்துலகக் குழுவில் இருந்து WRP-ஐ உடைப்பதில் அவர் ஆற்றிய பங்கிலிருந்து கற்றுக்கொண்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சிறிய வழிவிலகியபோக்கை நியாயப்படுத்தும் வகையில் கிப்சனும் "ஒரு புதிய தொழிலாளர் கட்சியானது, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இவற்றின் உடைவிலிருந்துதான் வெளிவரமுடியும் என்று கூறியிருந்ததை குறிப்பிட அனுமதிக்கவும்.

முன்னாள் தீவிரவாத போக்கினரின் இயக்கம் சீர்திருத்தவாத மற்றும் தேசியவாத அரசியல் வழியில் மற்றும் அதிகாரத்துவம் தொடர்பானதில், துல்லியமாக தொழிலாள வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய தன்மைக்கும் முற்றிலும் எதிராக இருந்தது. சோசலிசத்திற்கான போராட்டமானது, தொழிற் கட்சி வாதத்தில் இருந்து அரசியலளவில் முறித்துக்கொள்வதிலும், பூகோள அளவில் நடைபெறும் சுரண்டல் அமைப்பிற்கும் ஆளும் செல்வந்தத்தட்டுக்களுக்கு எதிராக, தொழிலாளர்களை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்தும் ஆற்றலிலும் தங்கியிருக்கிறது.

அந்த உணர்வுதான் மே தினம் ஒரு சர்வதேசத் தொழிலாளர் தினம் என்று நிறுவப்படுவதற்கான ஊக்கத்தை அளித்தது ஆகும். அந்த முன்னோக்கை நாம் மீண்டும் உயிர்ப்பித்து தொழிலாளர்கள் இயக்கத்தை ஒரு புதிய, சுகாதாரமான அஸ்திவாரங்களில் அமைக்க வேண்டும்.

பழைய தொழிலாளர் இயக்கத்தின் சீரழிவு முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பு ரீதியாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் எவ்விதமான வழிவகையும் இல்லாமல் விட்டுவிட்டது. ஆனால் விஷயத்திற்கு இதுவே முடிவு அல்ல.

ஒரு தோற்வியுற்ற முன்னோக்கு நிராகரிக்கப்படல், தோல்வியுற்ற அமைப்புக்கள் நிராகரிக்கப்படல் என்பது துல்லியமாக ஒரு புதிய, புரட்சிகரமான அரசியல் நோக்குநிலைக்கு வழியைத் திறக்கும். அத்தகைய வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கும் ஒரே கட்சி நம்முடையதுதான் என்பதை தெளிவாக காணலாம்.

Top of page