World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

On the 60th anniversary of the victory of the Red Army over Nazism

Anti-Russian nationalism in the Baltic States

நாசிசத்தின் மீது செம்படை வெற்றி கொண்டதின் 60 ஆண்டு நிறைவு விழா

பால்டிக் அரசுகளில் ரஷ்ய தேசியவாத எதிர்ப்பு

பகுதி 1 | பகுதி 2

By Niall Green
10 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது ஒரு இரு கட்டுரைத் தொடரின் முடிவுப் பகுதியாகும். முதல் பகுதி மே 16 அன்று தமிழில் வெளிவந்தது.

1945-க்கு பின்னர், பால்டிக் அரசுகள் சோவியத் ஒன்றியத்திற்குள் மீண்டும் இணைக்கப்பட்டது, அவை சோசலிச சொத்துடமை அடிப்படையில் மைய திட்டமிடலின் கீழான பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. மிகக் கடுமையான அதிகாரத்துவ ஊனங்கள் இருப்பினும் மற்றும் உண்மையான தொழிலாளர் ஜனநாயகத்தின் எவ்வித வெளிப்பாடு இல்லை என்றாலும் கூட, இது 1917 புரட்சியின் நீடித்த வெற்றியாக இருந்தது.

பால்டிக் அரசுகளின் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து முறைகள் முன்கண்டிராத மட்டத்திற்கு அபிவிருத்தியடைந்திருந்தன. சோவியத் ஒன்றியத்தின் மிகுந்த அபிவிருத்தியடைந்த விஞ்ஞானம், இராணுவம், தொழிற்துறையின் வளாகத்தின் சில கூறுபாடுகளுக்கு பால்டிக் குடியரசுகள் தளமாயின.

பால்டிக் தொழிலாள வர்க்கத்தால் எதிர்கொள்ளப்பட்டிருந்த அடிப்படை பிரச்சனைகள் ஒன்றும் அவை சோவியத் யூனியனில் சேர்க்கப்பட்டிருந்தது அல்ல, மாறாக சோவியத் பொருளாதாரம் மார்க்சிச விரோதக் கொள்கையான, பொருளாதார தேசியவாதத்தை அடிப்படையாக கொண்டிருந்த, ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவ செல்வந்த தட்டால் ஆளப்பட்டுவந்ததுதான் ஆகும். பால்டிக் அரசுகளை முற்போக்கு ரீதியாக இணைக்கும் முயற்சியில் அதிகாரத்துவம் வெற்றியடைய முடியவில்லை, ஏனெனில் அது அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு பெரும் விரோதப் போக்கை கொண்டிருந்தது. இக்கொள்கைக்கு சோவியத் தொழிலாள வர்க்கத்தை உலக பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து வைப்பது மட்டுமல்லாமல், சோவியத் யூனியனுக்குள்ளேயே சக தொழிலாளர்களிடம் இருந்தும் பிரித்து வைப்பதையும் தேவையாக கொண்டிருந்தது. இதன் பொருள் தேசியப் பிளவுகள் ஒருபோதும் கடக்கப்பட முடியாதவை என்பதோடு மாஸ்கோவிற்கும் பல குடியரசுகளுக்கும் இடையே இருந்த உறவு ஓர் ஆதிக்க சக்தி தன்னுடைய துணைக்கோள்கள் மீது கொண்டிருந்த வகையிலான மேலாதிக்க வடிவைப் பெற்றது.

சோவியத் ஒன்றியத்திற்குள் 45 ஆண்டுகளுக்கும் மேலான பால்டிக் குடியரசுகள் உறுப்பினர் நிலைமை, மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் Tallinn, Riga, Vilnius இவற்றில் இருந்த உள்ளூர் அதிகாரிகளும் இன, மொழி அடிப்படையில் தொழிலாளர்களிடையே சக்திவாய்ந்த பிளவுகளை பேணிவந்தனர். அதிகாரத்துவம் வேண்டும் என்றே அப்பகுதிக்கு வந்திருந்த ரஷ்ய தொழிலாளர்களை பிரித்து-ஆளும் கொள்கையின் அடிப்படையில் தனித்தனி பகுதிகளில் குடியமர்த்தியிருந்தது.

ரஷ்யா உட்பட, சோவியத் குடியரசுகளில் 1980களில் வெளிப்பட்டிருந்த சுதந்திர இயக்கம், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின்பால் நியாயப்படுத்தப்பட்ட ஆனால் குழப்பமுடைய வெகுஜனம் கொண்டிருந்த வெறுப்பு, தேசியவாதத்திற்கு ஆதரவு என்ற முறையில் வழிநடத்தப்பட்டது. இது முதலாளித்துவ சொத்து உறவுகளை மீள ஏற்படுத்துவதற்கு ஸ்ராலினிஸ்டுகளை அனுமதிக்கும் அதேவேளை, சோவியத் தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதற்கு உதவியது.

மிகத்தீவிர வலதுக்கு திருப்பம்

ஸ்ராலினிசத்தின் பாரம்பரியம் முன்னாள் சோவியத் தொழிலாள வர்க்கத்திடையே பாரியளவில் குழப்பத்தை தோற்றுவித்திருந்தது, இது தேசிய முதலாளித்துவத்தை மீண்டும் 1920-களில் இருந்ததுபோல் அமைத்துக் கொள்ளுவதற்கு உதவிற்று. 1920-கள், 1930-களின் ஸ்திரமற்ற பால்டிக் ஆட்சிகளுக்கும் இன்றைய பால்டிக் ஆட்சிகளுக்கும் இடையே ஓர் அரசியல் தொடர்ச்சியை காணமுடியும், இது அவர்களுடைய ஸ்திரமற்ற ஆட்சிக்கு முண்டுகொடுக்க பெருமளவில் பிற்போக்குவழிகளுக்கு திரும்பியிருந்தது. சோவியத் ஆட்சிக் காலம் மற்றும் நாஜி ஆக்கிரமிப்பு காலம் இவை அறவழியில் ஒரே தன்மையைத்தான் கொண்டிருந்தது என்று வலியுறுத்தியபோதிலும் கூட, பால்டிக் ஆளும் வர்க்கங்கள் நாஜி பாரம்பரியத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களை பொறுத்து கொள்ள விருப்பம் காட்டுவதோடு, அவர்களுக்கு பரிவு உணர்வையும் காட்டுகின்றனர்.

லாத்வியாவில், அரசாங்கம் Schutzstaffel (SS எனப்படும் நாஜி ஜேர்மனியின் செல்வந்த தட்டுகளின் அதிகாரத்துவ-இராணுவ அமைப்பின்) வருடாந்திர அணிவகுப்புக்களில் கலந்து கொள்ளுவதற்கு, அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக சேரவிருந்தது அவர்களை அதிகாரபூர்வமாக நாசிசத்தை பெருமைக்கு உட்படுத்துவதில் இருந்து ஒதுக்கிக் கொள்ள நிர்பந்தித்தபொழுது வரைக்கும், ஒரு பிரதிநிதியை 2000-ம் ஆண்டு வரை அனுப்பி வந்தது.

இந்த அணிவகுப்புக்கள் நவீன-பாசிச குழுக்களை தங்களை சுற்றி ஈர்த்துக் கொண்டன. இரண்டாம் உலகப்போரில், ஆக்கிரமித்திருந்த ஜேர்மனிய படைகளுடன் சேர்ந்து சண்டையிட்டிருந்த மூத்த இராணுவ வீரர்கள், ரஷ்யன், லாத்வியன் தீவிர வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்களின் இணைப்பையும் பெற்றனர். இந்த அணிவகுப்பை தடுக்க முற்பட்டிருந்த நாஜி-எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்கள் 20 பேருக்கும் மேலானவர்களை போலீஸ் கைது செய்த்து.

2004, ஜூலை 6-ம் தேதியன்று, SS இன் 20-வது எஸ்தோனிய படைப்பிரிவின் மூத்த வீரர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும், எஸ்தோனிய தலைநகரான டால்லின் தெருக்களில் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், இது எஸ்தோனிய இராணுவம், சோவியத் படைகளுக்கு எதிராக நிகழ்த்திய போர்களின் 60-வது நிறைவு விழா என்றும், 1990-களின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் நாட்டில் இருந்து வெளியேறியதை கொண்டாடும் நிகழ்ச்சி என்றும் கூறினர்.

SS இன் மூத்த வீரர்களின் அணிவகுப்புக்கள் 1991-ல் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நடைபெற்று வருகின்றன. 1998-ல் SSஇன் முன்னாள் மூத்த வீரர்கள் எஸ்தோனியப் படைவீரர்களுக்கு உரையாற்றுமாறு அழைக்கப்பட்டனர். 2002-ம் ஆண்டு, Waffen-SS சீருடையில், ஒரு துப்பாக்கியை கிழக்கு நோக்கி ரஷ்யாவை காட்டிக் கொண்டிருக்கும் எஸ்தோனியர் ஒருவரை சித்தரித்த நினைவுச் சின்னம் ஒன்று பர்னு நகரத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இதேபோன்ற மற்றொரு நிகழ்வும் எஸ்தோனியா பற்றிய செய்தியில் கடந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, லிஹுலா சிறுநகரத்தில், இரண்டாம் உலகப் போரில் ஒரு எஸ்தோனிய வீரர், ஜேர்மனிய சீருடையில் இருப்பதை, இந்த நினைவுச் சின்னம் சித்தரித்துக் காட்டியது. இரண்டு வாரங்களுக்கு பின்னர், சிலையை அகற்றுவதற்காக, நகராட்சி ஊழியர்கள் போலீஸ் ஆதரவுடன் சிறுநகரத்திற்குள் நள்ளிரவில் அனுப்பப்பட்டனர். ஜுகான் பார்ட்சின் அரசாங்கம் அதை ஒரு தர்ம சங்கடமாகக் கருதியதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்ற குறுகிய காலத்திலேயே, நாட்டின் தோற்றம் பற்றிய சர்வேதேச பார்வை, இதன் மூலம் சீரழிந்துவிடும் என்ற அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடும் என்றும் கருதியது. (ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தால் அது கணிசமான வகையில் இதன் சுற்றுலா தொழிற்துறைக்கு உதவியாக இருக்கும் என்று எஸ்தோனியா கருதுகிறது; கடந்த தசாப்தத்தில் இதன் பொருளாதாரத்தில் அது ஒரு பெரும் முக்கியமான பிரிவாக வளர்ந்துள்ளது.)

நாசிசம் பெருமைப்படுத்தியிருப்பது இந்தச்சிலையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பதை கண்டிப்பதற்குப் பதிலாக, இந்த கட்டமைப்பு அகற்றப்பட்ட விதத்தை குறித்து அதிக அக்கறை எடுத்து மன்னிப்புக் கோரினார். டிசம்பர் மாதம் நகரத்திற்கு வந்த அவர் சிலையை அகற்றுவதற்காக எடுத்த முடிவு தன்னுடைய பிரதம மந்திரிப் பதவிகளில் கடுமையான ஒன்றாகும் என்று தெரிவித்ததுடன், "எஸ்தோனியா ஒரு வெற்றிடத்தில் வாழவில்லை" என்ற கருத்தைக் கொண்டு இச் செயல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

தீவிர வலது மற்றும் பாசிச கூறுபாடுகளின் வளர்ச்சி, 1991-ல் இருந்து பால்டிக் அரசுகளில் முதலாளித்துவ ஆட்சிக்கு அடிப்படையான முட்டுக் கொடுக்கும், பிற தேசிய இன பழிப்புவாத மற்றும் பரந்த கம்யூனிஸ்ட் விரோதப் போக்கு நிலவிய அரசியல் சூழ்நிலையின் விளைவாகும். இது மூன்று நாடுகளிலும் அதிகமாக ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிரான வெளிப்படையான பாரபட்சங்கள் சம்பத்தப்பட்டுள்ளது. அதிலும் ரஷ்ய மொழி பேசுவோர் மிக அதிகமாக இருக்கும் லாத்வியா, மற்றும் எஸ்தோனியாவில் (முறையே சுமார் 40, 25 சதவீதத்தினர் பேசுகின்றனர்), சிறுபான்மையினர் கல்வி, பொதுப் பணித்துறை, தேர்ந்தெடுக்கப்படும் அலுவல்கள் ஆகியவற்றில் ஒதுக்கிவைக்கப்படும் நிலையை காண்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு இச்சுதந்திர நாடுகளில் குடியுரிமைகூட கொடுக்கப்படவில்லை.

பெரிய வல்லரசுகளிடையேயான இன்றைய போட்டி

யூரேசியக் கண்டத்தில் ஆதிக்கம் அடைய முயற்சிக்கும் வல்லரசுகளுக்கு பால்டிக் நாடுகள், புவி சார்அரசியல் முறையில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன; இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே இந்த நிலை தொடர்ந்து காணப்பட்டது. ரஷ்யாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள நிலையில், ரஷ்யாவின் பெரும்பகுதி ஏற்றுமதிகள்----குறிப்பாக இதன் பரந்த எரிசக்தி இருப்புக்கள் உலகச் சந்தைக்கு வெளியேற்றப்படும் வகையில், இந்த மூன்று சிறிய அரசுகளும் போட்டித்தன்மை கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்ய நலன்களுக்கும் தலையீடுகளுக்கும் உட்பட்டுள்ளன.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாக இருக்கும் இந்த மூன்று நாடுகளும் அரசியலில் மேலை ஏகாதிபத்திய வல்லரசுகளின் சார்பைக் கொண்டுள்ளன; இதே நிலையைத்தான் 1920க்கு முன்பும் அவை கொண்டிருந்தன. அந்த முந்தைய காலத்தை போலவே, அவை ரஷ்யாவுடன் உள்ள சங்கடமிக்க, ஆனால் கட்டாயத் தேவை என்ற முறையில் ரஷ்யாவோடு நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய நிலையில், மாஸ்கோவில் நடைபெறும் 60-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் உறுதியாக ஒரு தற்காலத்திய அரசியல் தன்மையைக் கொண்டுள்ளன.

முன்னாள் சோவியத் குடியரசுகளின் நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் விளாடிமீர் புட்டின் அழைப்புவிடுத்துள்ளமை, வெறும் வரலாற்று நினைவு நாளைப் போற்றும் செயல் அல்ல. ஸ்ராலினிச அதிகாரத்துவம் செய்தது போலவே, புட்டினுடைய கிரெம்ளினுக்கும் பாசிசத்தை தோற்கடித்த சோவியத் தொழிலாள வர்க்கத்தின் பெரும் வீர முயற்சிகளை தேசியவாத வீச்சில் பிணைப்பது என்பதில், வரலாற்றை தவறாக தானே பெருமைகொள்ளுவது பற்றி, எந்த விதமான மன உறுத்தலும் கிடையாது.

புட்டினும், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருசிலவராட்சி தட்டுக்கும் தேசியவாதம் மற்றும் இனப் பிளவுகளை பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும், தங்களுடைய சலுகைகள் மிக்க மற்றும் அதிகரித்தளவிலான சர்வாதிகார ஆட்சியை பாதுகாப்பதற்கும் படிப்பனைகளை பெற ஸ்ராலினிசத்தை நோக்குகின்றனர்.

புட்டின் பெரும் பிற இனப்பழிப்பு ரஷ்ய இனவாதம் என்ற நரம்புக்கோளாறை பொறுத்தளவில், இவருடைய நடவடிக்கைகள், ரஷ்ய-எதிர்ப்பு தேசியவாதத்தை கொண்டுள்ள எஸ்தோனிய, லாத்வியன், லித்துவேனிய தலைவர்களை போன்றே உள்ளன; இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் அவர்களுடைய பெருவணிக கொள்கைகளிலிருந்து கவனத்திருப்புதலாக தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தேசிய பாரபட்சங்களை பெரிதும் சார்ந்துள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்த மே 9 நிகழ்வுகளை பயன்படுத்திக் கொண்டு இப்பிராந்தியத்தில் தன்னுடைய செயற்பட்டியலை முடுக்கிவிடப் பார்க்கிறது. பால்டிக்கின் செல்வந்த தட்டுக்களின் கையாளுதலுக்கு செவிமடுக்கும் வகையில், ஜனாதிபதி புஷ்ஷும் மற்ற வாஷிங்டனின் முக்கிய நபர்களும் சோவியத் "ஆக்கிரமிப்புக் காலம்" பற்றிய விமர்சனங்களை இன்றைய ரஷ்யாவின் மீது மெல்லியதாக மறைக்கப்பட்டுள்ள தாக்குதலாகத்தான் மாற்றிவிட்டனர்.

"ஆக்கிரமிப்பு மற்றும் கம்யூனிஸ்ட் ஒடுக்குமுறை" இவற்றை மே 7ம் தேதி ரீகாவில் நடந்திய உரையில் புஷ் கண்டிப்பதற்கு முன்பே, முன்னாள் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் பெப்ரவரி மாதத்திலேயே, லித்துவேனிய ஜனாதிபதி வால்டஸ் ஆடம்குஸின் தர்மசங்கடமான நிலையான மே 9 கொண்டாட்டத்திற்கு போவாதா வேண்டாமா என்பது பற்றிக் கருத்தை தெரிவித்துள்ளார். ரஷ்யா சற்று "கவலை கொடுக்கும் போக்கை" பால்டிக் அரசுகளிடம் நடந்து கொள்ளும் முறையில் காட்டி வருகிறது என்றும் இப்பிராந்தியத்தில் ரஷ்ய செல்வாக்கு அமெரிக்க இராஜதந்திரத்திற்கு ஒரு சவாலாக மாறிவருகிறது என்றும் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட்டில் பெப்ரவரி 9-ம் தேதி எழுதும்போது, ஹோல்ப்ரூக் கூறினார்: "சில பழைய சோவியத் குடியரசுகளிடைய பெருகியுள்ள சுதந்திர உணர்வு பற்றி புட்டின் அதிர்ந்து போயுள்ளார், அதிலும் ஜோர்ஜியா, உக்ரைன் இரண்டும் குறிப்பிடத் தக்க முறையில் அவருக்கு கவலையை கொடுத்துள்ளன. ஆனால் திறமையற்ற முறையில் அவர் இதை கையாண்டதில், கடந்த ஆண்டு இந்த இரண்டு நாடுகளிலும் மக்கள் ஜனநாயக முறையில் எழுச்சி பெறுவதை தடுக்க முடியாமற் போனவகையில், இவர்தான் பலவீனமுற்றார்."

அமெரிக்க காங்கிரசில் இரு கட்சியினரின் குரல்களும், சோவியத் ஒன்றியம் 1940-களிலும் மற்றும் பழைய படி போருக்கு பின்னரும் 1991-ல் USSR-ன் வீழ்ச்சி வரை, சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது என்பதை ரஷ்யா ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், ஏப்ரல் 12 அன்று, கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இணைந்து ஒலித்தன. "பால்டிக் நாடுகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, இணைப்பு ஆகியவை ரஷ்ய வரலாற்றின் அடக்குமுறை நிகழ்வுகளில் ஒப்புக் கொள்ளப்படாத பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்னும் இருக்கிறது.

இந்தச் சொற்றொடர் இல்லினாயின் உறுப்பினரும், குடியரசுக் கட்சியை சேர்ந்த, லித்துவேனிய வழியினருமான ஜோன் ஷிம்குஸ் மற்றும் ஓகியோவிலுள்ள ஜனநாயகக் கட்சியின், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான டெனிஸ் குசினிக் மற்றும் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களாலும் முன்மொழியப்பட்டது.

லாத்வியா ஜனாதிபதி விகே-ப்ரீபெர்கா இந்த தீர்மானத்தை தன்னுடைய பிரச்சாரத்திற்கு உதவியளிக்கும் என்ற முறையில் பெரிதும் வரவேற்றார்: "இதன் பொருள் சட்ட மன்றம் இந்தப் பிரச்சினை பற்றி விவாதிக்க உள்ளது என்றும் அமெரிக்கா அப்பொழுது என்ன நடந்தது என்பது பற்றி நினைவுறுத்தப்படும் என்றும் அதன் பொருளுரை என்ன என்றும் புலனாகும். என்னைப் பொறுத்தவரையில் அத்தகைய விவாதம், தீர்மானத்தின் விளைவு எப்படி இருந்தபோதிலும், மிகவும் மதிப்புடையதாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்."

இறுதியாக, புஷ்ஷே தலையீடு செய்து லாத்விய அரசின் தலைவருக்கு ஆதரவாக எழுதினார். புஷ்ஷின் கடிதம் 1945ம் ஆண்டு, ''சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா இவற்றின் இணைப்பு, கம்யூனிசம் திணிக்கப்படுதல் ஆகியவற்றைக் குறித்தது" என்று கூறுகிறது.

அது மேலும் தொடர்ந்தது, "நாம் கடந்த காலத்தைப் பற்றி ஒப்புக் கொள்ளும் போதே, இந்த ஆண்டு நினைவுதினம் ஒரு வாய்ப்பை வரவிருப்பதை எதிர் பார்ப்பதற்கும், நம்முடைய பகிர்ந்து கொண்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் வருங்காலத்தைக் கட்டமைக்கவும் சுதந்திர நாடுகளில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள பொறுப்புக்களைப் பற்றி அறியவும் உதவும். கூட்டணியினர்கள், நண்பர்கள் என்ற முறையில், நம்முடைய நாடுகள் உள்நாட்டில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தவும் வெளிநாடுகளில் சுதந்திரத்தை முன்னேற்றுவிக்கவும் உழைக்க ஒன்றுபடுவோம். அமெரிக்கா உங்களுடன் தோளோடு தோள் இணைந்து நிற்பதில் பெருமிதம் கொள்கிறது."

இத்தகைய கருத்துக்கள் புட்டின்மீது அழுத்தம் கொடுக்கும் திட்டத்தை கொண்டுள்ளன, வாஷிங்டன் அவரை சர்வாதிகாரி என்று விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. கொடுங்கோன்மைக்கு எதிராக புஷ் தானே பறைசாற்றிக் கொண்டிருக்கும் சிலுவைப் போருக்கு ஒப்பான நிலையில், பூகோள முழுவதும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பரந்த விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் சொற்றொடர் அது, கடிதம் எடுத்துக் கூறியுள்ள இலக்கான "வெளி நாடுகளில் சுதந்திரத்தை முன்னேற்றுவிக்க" என்ற சொற்றொடர் பெரும் தீமையான உட்குறிப்புக்களைக் கொடுத்துள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நிலப்பகுதிகள் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் ஆக்கிரமிப்பு மிகுந்தவையாக உள்ளன. அரசுத்துறை செயலரான கொண்டலீசா ரைஸ், சமீபத்தில் பால்டிக் அரசுகளுக்கு அருகில் இருக்கும் முக்கிய ரஷ்ய கூட்டாளியான பைலோரஷ்யாவிற்கு கொடுத்த அச்சுறுத்தல்களில் நன்கு தெரியும். ஏப்ரல் 20 அன்று, ரைஸ் லித்துவேனியாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் "பைலோரஷ்யா மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது" என்று கூறி மத்திய ஐரோப்பாவில் அதுதான் "கடைசி உண்மையான சர்வாதிகாரம்" என்று குறிப்பிட்டார். இந்த கருத்தை மாஸ்கோவிற்கு அரசு முறையில் சென்றிருந்தபோது அவர் புட்டினுடைய சர்வாதிகாரப் போக்கு பற்றிக் கண்டித்தலை தொடர்ந்து வந்தது.

வாஷிங்டன் யூரேசியாவின்மீது தன்னுடைய மேலாதிக்கத்தை முன்னேற்றுவிக்க இலக்கு கொண்டு, இதற்காக ரஷ்யாவை வலிமை குன்றச் செய்தும், ஸ்திரமற்றதாக்கவும் ஆக்க வேண்டியுள்ளது. அமெரிக்க சார்புடைய பால்டிக் அரசுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள அழுத்தங்கள் மாஸ்கோவின் மீது அழுத்தங்கள் கொடுப்பதற்கு ஒரு வழிவகையாகும். இதற்காக சோவியத் ஒன்றியத்தின் மீதும் "கம்யூனிசத்தின் மீதும்" அக்டோபர் புரட்சி மீதும் அரசியல் தாக்குதல் நடத்தவேண்டும் என்று உள்ள நிலை அமெரிக்க செல்வந்த தட்டுகளுக்கு ஒரு போனஸ் கிடைத்தது போல்தான் உள்ளது.

இது பால்டிக் அரசுகளுக்கு ஒரு சாதகமான நிலையாகும்; அங்குள்ள தேசிய சக்திகள் வாஷிங்டன் மாஸ்கோவின்மீது கொண்டுள்ள பெருகியுள்ள விரோதப் போக்கினால் துணிவூட்டப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 19 அன்று, லித்துவேனிய பாராளுமன்றம் ஓர் அறிக்கையை இயற்றியது. இதன் தலைப்பு "ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் முடிவைப் பற்றிய மதிப்பீடு" என்பதாகும். பாராளுமன்றத் தலைவர் Arturas Paulauskas, பால்டிக் அரசுகளை ஆக்கிரமித்தது பற்றிக் கிரெம்ளின் மன்னிப்புக் கேட்கும் முடிவு என்பது "இன்றோ, நாளையோ எதிர்பார்க்கப்படுவதற்கில்லை" என்றார், ஆனால் அமெரிக்காவின் அறிக்கை "ரஷ்ய குடிமக்களை சிந்திக்க வைத்து, ரஷ்ய அரசியல் வாதிகளை முடிவெடுக்க வைக்கும்" என்று கூறினார்.

வாஷிங்டனும், மாஸ்கோவும் ஒரு பூசலில் ஈடுபட்டுள்ளன; இதில் இரண்டுமே தேசியவாத பிளவுகளைப் பயன்படுத்தி தங்கள் புவிசார் அரசியல் பேரவாக்களை அடைய முற்பட்டுள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்த, ரஷ்ய-எதிர்ப்பு பேரினாவாத போக்கை., மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்கும் இனவழியிலான பலதரப்பட்ட பிரிவுகளின் திறனையும் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பிராந்திய துண்டாடலை ஊக்குவிக்க முற்பட்டுள்ளது.

இந்த ஏகாதிபத்திய மூலோபாயத்திற்கு எதிராக, பால்டிக் அரசுகள் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் இருபதாம் நூற்றாண்டின் சிக்கல் வாய்ந்த படிப்பினைகளை பற்றிய சரியான மதிப்பீட்டை கொள்ள வேண்டும், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பங்கு பற்றியும், இடது எதிர்ப்பு, நான்காம் அகிலம் ஆகியவை அதை எதிர்த்து நடத்திய போராட்டம் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய படிப்பினைகளை நன்கு உள்ளீர்த்துக்கொண்டால்தான், அப்பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர் வர்க்கம், ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ரஷ்யா, முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் ஐரோப்பியத் தொழிலாளர்கள் இவர்களுடனான ஒரு கூட்டை நோக்கி தங்களை அரசியல் ரீதியாக மறுநோக்குநிலைப்படுத்திக் கொள்ளமுடியும்.

முற்றும்

Top of page