World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

May Day awards in China honour the wealthy elite

சீனாவில் செல்வந்தத்தட்டினரை கெளரவிக்கும் மேதின விருதுகள்

By John Chan
13 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

இந்த ஆண்டு சீனாவின் "முன்மாதிரி தொழிலாளர்கள்" மே தின பட்டியலானது பெய்ஜிங் ஸ்ராலினிச ஆட்சியின் முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. "சோசலிச கட்டுமானத்தில் சுயநலமற்ற திட்டத்தை" வழங்கியவர்கள் என்று கருதப்பட்ட 3000 முன்னணி தனி மனிதர்களில் 30 பேர் முன்னணி வணிகர்களாகும், மற்றும் அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்க (US National Basketball Association -NBA) விளையாட்டு வீரர் யாவோ மிங்-கும் அடங்குவார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 1978-ல் சுதந்திர சந்தையை தழுவியதையும் நாட்டை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிட்டதையும் தொடர்ந்து மே தின விடுமுறை இந்த ஆட்சியின் பாரம்பரிய அடையாள சின்னத்தை இழந்துவிட்டதை காட்டுகிறது. ஒரு காலத்தில் மே தினம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கொண்டாட்டமாக பாராட்டப்பட்டது மற்றும் போலி சோசலிச வாய்வீச்சிற்கு, ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பது பற்றிய பேச்சிற்கு ஒரு நிகழ்ச்சியாக பயன்படுத்தப்பட்டது, 1990களில் நடுப்பகுதியிலிருந்து ஒருவார மே தின விடுமுறை புதிய நகர்ப்புற செல்வந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு "ஒரு தங்க விடுமுறை" வாய்ப்பாக கருதப்பட்டு அவர்கள் இந்த விடுமுறை நாட்களில் பல்வேறு பண்டங்களை வாங்கிக் குவித்து சீனாவின் நுகர்வோர் செலவினத்தை ஊக்குவித்து வருகிறார்கள்.

Houston Rockets அணியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய விளையாட்டு வீரர்களில் ஒருவரான யாவோ மிங்-மீது அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்தால் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. "தேசபக்தி உணர்விற்கு" ஒரு எடுத்துக்காட்டாக "எப்போதுமே நான் தாய் நாட்டிற்காக கடமையாற்றி வருகிறேன்". என்று அவர் அறிவித்திருக்கும் நன்கறியப்பட்ட அறிக்கையின் காரணமாக சீன அரசாங்கம் அவர் ஒரு முன்மாதிரி தொழிலாளராக அறிவிக்கப்படுவதற்கு தகுதிபடைத்தவர் என்று அறிவித்தது.

ஏப்ரல் 28 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தனது கருத்தில் கூறியிருந்ததாவது: "அவரது ரசிகர்கள் பலருக்கு அந்த "சிறிய" ராட்சதர் என்று செல்லமாக அன்போடு அழைக்கப்படும் அவர் ஒரு தேச பக்தி மிக்க விளம்பர குழந்தையாகும். NBA-வில் அவர் சேர்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு நிபந்தனை NBAவில் அவருக்கு கிடைக்கும் ஊதியத்தில் பாதியை சீன விளையாட்டு அமைப்புக்களுக்கு வழங்கிவிட வேண்டும் என்பது. அடுத்த பத்தாண்டுகளுக்கு மேலாக மாக் டொனால்ட், ஆப்பிள் கம்யூட்டர், விஷா இண்டர்நேஷனல், Tag Heuer கடிகார நிறுவனம், மற்றும் கார்மின் பூகோள நிலைப்பாட்டு கம்யூட்டர் பொருட்களை தயாரிப்பவர்கள் போன்ற நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்காக தருகின்ற 70 மில்லியன் டாலர்களில் எவ்வளவு தொகை அரசாங்கத்தின் விளையாட்டு ஆணையங்களுக்கு சேரும் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை".

தேசியவாதத்தை வளர்ப்பதோடு தொடர்ந்து, யாவோ-வை ஒரு முன்மாதிரி தொழிலாளராக அறிவித்திருப்பது மத்திய தர வர்க்க இளைஞர்களுக்கு கோரிக்கை விட முயற்சிப்பதாகும், மற்றும் சீனா பூகோள முதலாளித்துவ சந்தையில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தனி மனிதர்கள் மிகப்பரந்த செல்வத்தை திரட்ட முடியும் என்ற பிரமைகளை கிளறிவிடுவதற்காகவும் ஆகும்.

தனிப்பட்ட தொழில் முகவர்களை இந்த விருதிற்கு தேர்ந்தெடுத்திருப்பது பற்றி LA Times, "இந்த விருதுகளுக்கு இந்த ஆண்டு சட்டபூர்வமான தன்மையை அதிகரிப்பதற்காக, அதிகாரிகள் மாற்றங்களை செய்தார்கள். மக்களை ஒடுக்குபவர்களாக ஒருகாலத்தில் கருதப்பட்ட முதலாளித்துவவாதிகள் இப்போது நாட்டின் தலைமை கெளரவத்தை பெற முடியும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் Forbes சஞ்சிகை சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் என்று பட்டியலிட்டுள்ள வர்த்தகரான Liu Yonghao உதாரணமாக இந்த ஆண்டு முன்மாதிரி தொழிலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அந்தப்பட்டத்தை பெற்றிருக்கும் இன்னொரு தொழில் முகவர், Fujiah Hengan Group நிறுவனத்தலைவர், சென்ற ஆண்டு 200 மில்லியன் யான் அல்லது 24 மில்லியன் டாலர்களை வரியாக செலுத்தியவராவார்

மில்லியன் கணக்கான சீனத் தொழிலாளர்கள் நீண்டநேரம் பணியாற்றுகின்றனர், குறைந்த ஊதியம் பெறுகின்றனர், பயங்கரமான நிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த மே, தின விடுமுறையும் முன்மாதிரி தொழிலாளர் பரிசுகளும் பொருளற்றவை. ''தங்க'' வாரம் ஒருபுறம் இருக்கட்டும், பல தொழிலாளர்கள் மே தினத்திற்காக ஒருநாள் விடுமுறை கூட கிடைக்காத நிலையில் உள்ளனர்.

பெய்ஜிங்கில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பணியாற்றிக்கொண்டுள்ள 42 வயது வெல்டர் Wei Yanzhou மாதத்திற்கு 100 டாலர் ஊதியம் பெறுகிறார். அவர், LA Times-க்கு பேட்டியளிக்கும்போது கூறினார். "அவர்கள் எங்களில் எவரையும் எப்போதும் (முன்மாதிரி தொழிலாளராக) தேர்ந்தெடுக்கமாட்டார்கள்." ஒரு செங்கல் தொழிலாளி Zhu Zhou கூறினார், ஒரு நாளைக்கு மூன்றுமுறை நாங்கள் முட்டைக்கோஸை சாப்பிடுகிறோம். சில நேரங்களில் நாங்கள் சாப்பிடுகிற அரிசி உணவில் மண்ணும் சேர்ந்துவிடுகிறது. ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் மாமிசம் சாப்பிடுகிறோம். எங்களுக்கு போதுமான குடி தண்ணீர் கூட கிடைப்பதில்லை, குளிப்பதை பற்றியும் நாங்கள் கவலைப்படுவதில்லை." மற்றொரு தொழிலாளியான Fu Xiewen கூறினார், "எங்களை முன்மாதிரி தொழிலாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். யாவோ மிங் யார் என்பது அனைவருக்கும் ஏற்கெனவே தெரியும், அவர் எங்களது நட்சத்திரம் நாங்கள் அவரோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லை."

ஒருவார விடுமுறையின்போது தொழிலாளர்கள் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர், கலவரம் செய்தனர், அதற்கு பதிலாக போலீஸ் ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

Radio Free Asia தந்துள்ள தகவலின்படி சிச்சுவான் மாகாணத்திலுள்ள Gong county ஐச் சார்ந்த அரசிற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களை சார்ந்த 2000 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மே தினத்தன்று உள்ளூர் அரசு அலுவலகங்கள் முன்னர் கண்டனப் பேரணிகளை நடத்தி, கலவரத்தடுப்பு போலீஸாரோடு மோதினர். அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகள் மறுசீரமைப்பினாலும் மூடப்படுவதாலும், தங்களது வேலை போய்விடும் என்று நிலவிய ஊகங்களினால் இந்தக் எதிர்ப்பு கிளறிவிடப்பட்டது. பல தொழிலாளர்கள் போலீஸாரால் காயப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மே 5-ல் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங் ழூவில் உள்ள தைவானியருக்கு சொந்தமான காலணி தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்திற்கும், மே தின விடுமுறைக்கு பதிலாக ஒருநாள் மட்டுமே விடுமுறை தரப்பட்டதைக் கண்டித்தும் 700 தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸார் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும்வரை ஒரு மணி நேரம் ஒரு பிரதான சாலையை அவர்கள் அடைத்துக்கொண்டு நின்றனர். தாங்கள் ஒரு மாதத்திற்கு 180 மணி நேரத்திற்கு மேல் மேலதிக நேர பணி செய்து வருவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 1.8 யான் (0.20 டாலர்) வீதம் 510 யான்கள் (63 டாலர்கள்) மட்டுமே மேலதிக நேர பணிக்கு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் புகார் கூறினர்.

அதே நாளில் உள் மங்கோலியாவிலுள்ள Touqiuan County-ல் ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு வாயு வெடிப்பில் 12 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது தொழிற்சாலை விபத்துக்களில் ஊனமடைகின்றனர்.

1919 May-4 இயக்க ஆண்டு விழாவில் ஜப்பானைக் கண்டித்து அண்மையில் நடத்தப்பட்ட பிரதான பேரணிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக பெய்ஜிங் எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சீனாவிற்குள் நிலவுகின்ற வர்க்க உறவுகளின் கொந்தளிப்பான நிலையைக் காட்டுகிறது.

மே 4 பேரணிகள் தொழிலாள வர்க்க கண்டன பேரணிகளாக மாறிவிடும் என்று அஞ்சிய ஆட்சி டசின் கணக்கான மக்களை கைது செய்தது. ஜப்பானுக்கு எதிரான பல வலைத் தளங்களை மூடியது. ஏப்ரல் 16-ல் பிரதான ஜப்பானுக்கு எதிரான கண்டனத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர் Tang Hua-வை ஷாங்காயில் போலீஸார் கைது செய்தனர். அதற்குப் பின்னர் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தியனன்மென் சதுக்க சம்பவ நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு 18 வயதாகும் மாணவர்கள் தேவை என்ற சாக்குபோக்கைக் கூறி பெய்ஜிங் போலீஸார் அந்த பகுதியில் வெகுஜனக் கூட்டங்களை தடுக்கும் வகையில் அந்தப் பகுதி முழுவதையும் மூடி சீலிட்டுவிட்டனர். தலைநகரிலுள்ள பல்கலைக்கழகங்கள் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளும் எந்த மாணவரும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளன.

சென்ற மாதம் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற கண்டனப் பேரணிகளுக்கு ஆட்சியின் மறைமுக ஆதரவு தரப்பட்டது. அதில் சமுதாயத்தில் வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவ சந்தையினால் பயனடைந்தவர்கள் மேலாதிக்க பங்கு வகித்தனர். என்றாலும், பெய்ஜிங்கின் கவலை என்னவென்றால் ஆரம்பத்தில் அரசு ஆதரவு இயக்கமாக இருந்தாலும், எந்த இயக்கமும் தொழிலாளர்கள் தங்களது சமூக மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னெடுத்து வைப்பதற்கு ஒரு சாதனமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான்.

சென்ற மாதம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஜப்பானின் எலக்ட்ரானிக் நிறுவனமான Uniden, Walt Mart-ற்காக வயர்லஸ் டெலிபோன்களைத் தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு ஒரு சுதந்திர தொழிற்சங்கம் நிறுவக் கோரி இரண்டாவது வேலை நிறுத்தம் நடைபெற்றது. கொடூரமான போலீஸ் ஒடுக்குமுறையால் அந்த வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. ஜப்பானுக்கு எதிரான கண்டனங்களுக்கு இடையில், அருகாமையிலுள்ள Dongguan நகரில் மற்றொரு 2,000 தொழிலாளர்கள் தங்களது பணி நிலையை மேம்படுத்தக் கோரி கலவரம் செய்தனர். இந்த நடவடிக்கைகள் ஒரு விரிவான இயக்கத்திற்கான உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்த உணர்வுகள் ஜப்பானிய பெரு நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமின்றி வெளிநாட்டவருக்கு சொந்தமான சீனாவில் நடத்தப்படும் நிறுவனங்களின் நிலைக்கு எதிராகவும் செலுத்தப்பட்டதாகும்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Business Week மே 4-ல் எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில் "வெளிநாட்டு முதலீடுகளுக்கு அச்சுறுத்தலாக" மற்றும் சீனாவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் உருவாகின்ற புள்ளி வரை பெய்ஜிங் இந்த கண்டனப் பேரணிகளை அனுமதிக்காது என்று எழுதியுள்ளது.

``ஜப்பானுக்கு எதிரான தேசியவாத உணர்வுகள் வெடித்துச் சிதறுவது பற்றி பெய்ஜிங் கவலைப்படவில்லை. அரசாங்கத்தின் ஊழல், வேலை இழப்புகள் மற்றும் எல்லையற்ற பணத்தாசை ஆகியவற்றால் மக்களிடையே தோன்றியுள்ள அதிருப்தியை வெளியிடுவதற்கு ஒரு வால்வு கிடைத்துவிட்டது என்று கருதுகிறது. அது சீன அரசாங்கத்திற்கு எதிராக திரும்பாதவரை பாதுகாப்பு என்றே கருதுகிறது. ஆனால், மக்களது சுய உணர்வு வெளிப்பாட்டிற்கு எவ்வளவு தூரம் அனுமதிப்பது என்பதில் மட்டுப்பாடு உண்டு. அந்த எல்லைக்கோட்டை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்துவிடுமானால், சீனாவின் பொருளாதார நலன்களுக்கு அபாயத்தை விளைவிக்கும்...``

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஸ்ராலினிச ஆட்சியால் ஒரு சிறுபான்மை செல்வந்தர்கள் மற்றும் சலுகைமிக்கோர் மே தினத்தில் கொழுத்துக் கொண்டிருப்பது சீனாவின் மிகப்பரவலான வெகுஜன தொழிலாளர்களையும், கிராம ஏழைகளையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கும், வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஆளாக்குவதில்தான் தங்கி இருக்கிறது.

Top of page