World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

More than 500 killed, thousands wounded

Uzbekistan: US "war on terror" yields a bloodbath

500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர்

உஸ்பெகிஸ்தான்: அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" இரத்தக்களரியை விளைவிக்கிறது

By Bill Van Auken
16 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

நூற்றுக்கணக்கான ஆண், பெண் மற்றும் குழந்தைகளை உஸ்பெக் நகரமான ஆண்டிஜானில் படுகொலை செய்ததின் மூலம், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்" தன்னுடைய மிகக் குருதி படிந்த வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்துள்ளது.

மத்திய ஆசியாவில் புஷ் நிர்வாகத்தின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான ஜனாதிபதி இஸ்லாம் கரிமோவின் ஆட்சியால்தான் இந்த மிருகத்தனமாக படுகொலை நடத்த பெற்றுள்ளது. இந்த பரந்த அளவிலான படுகொலையை செய்துள்ள அவருடைய இராணுவப் படைகள் பென்டகனால் பயிற்சி கொடுக்கப்பட்டு, போர்க்கலங்கள் கொடுக்கப்பட்டு, உதவியையும் பெற்று வந்துள்ளன.

நகர டாக்டர் ஒருவரின் சாட்சியத்தை மேற்கோள்காட்டி, உறவினர்கள் அடையாளம் காணும் பொருட்டு உள்ளூர் பள்ளி ஒன்றின் முன் 500 சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரெஸ் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. இன்னும் ஒரு 2,000 மக்கள் வெள்ளிக்கிழமையன்று நகரத்தின் மத்திய சதுக்கத்தில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது காயமுற்றனர் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.

"எங்களை முயலைச் சுடுவது போல் சுட்டனர்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஒரு இளம் வயது சிறுவன் தெரிவித்தான். 3,000 பேருக்கு மேல் இருந்த மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டத்தை ஆயுதமேந்திய படைகளும் கவச கார்களும் சூழ்ந்து கொண்ட பொழுது இத்தகைய வெறித்தனமான செயல் இடம்பெற்றதாக அச்சிறுவன் விவரித்துக் கூறினான்.

இன்னும் தெருக்கள் இரத்தக் கறையில் மிதப்பதாகவும், நடைமேடைகளில் சடலங்கள் ஏராளமாக கிடப்பதாவும், உடல் பகுதிகள், மற்றும் இரத்தம் தோய்ந்த உடைகள் பல இடங்களிலும் காணப்படுவதாகவும் நகரத்தில் இருந்து வரும் அறிக்கைகள் கூறுகின்றன.

காயமுற்றவர்களையும் கொல்லுமாறு துருப்புக்கள் உத்தரவிடப்பட்டிருந்தனர் என்று ஒரு சாட்சியை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

"காயமுற்றிருந்தவர்களில் தப்பியோட முயற்சி செய்தவர்கள் கலாஷ்நிகோவ் துப்பாக்கியில் இருந்து ஒரு சுடுதலில் கொல்லப்பட்டுவிட்டனர்" என்று ஒரு வணிகர் கூறினார். "காயமுற்றவர்களை கொன்றுவிடுவதற்கு மூன்று அல்லது நான்கு இராணுவத்தினர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தனர்."

எவ்வாறு லாரிகள் நிறைய சடலங்கள் சதுக்கத்தில் இருந்து அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன என்று மற்றவர்கள் விவரித்தனர். உண்மையில் தொன் கணக்கான பிணங்கள் இத்தகைய முறையில் நகரத்தின் மையப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

இப் படுகொலையை அடுத்து, அடக்குமுறையில் இருந்து தப்புவதற்காக பல்லாயிரக்கணக்கான உஸ்பெக்கியர் தங்கள் நாட்டு எல்லைகளை கடந்து அண்மையில் இருக்கும் நாடான கிர்கிஸ்த்தானிற்கு ஓடியுள்ளனர்.

புஷ் நிர்வாகம் கடந்த ஓராண்டாக ஜோர்ஜியாவிலும், உக்ரைனிலும் நிறுவப்பட்டுள்ள முறையான ஆட்சிகளுக்கு எதிராக கண்டனம் செய்து, முதல் நாட்டில் "ரோஜா புரட்சி" என்ற பெயரிலும், இரண்டாவது நாட்டில் "ஆரஞ்சுப் புரட்சி" என்ற பெயரிலும் ஊக்குவித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஆண்டிஜான் தெருக்கள் குருதியினால் சிகப்பாய் தோய்ந்திருப்பதை பார்த்தும் வாஷிங்டன் குறிப்பிடத்தக்க வகையில் நிதானத்தைக் காட்டியுள்ளது.

வெள்ளை மாளிகையோ அல்லது வெளியுறவுத்துறையோ இந்த கொலைவெறியை கண்டித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை; ஆனால் ஜோர்ஜியா, உக்ரைன் இவற்றில் தேர்தல் முறைகேடுகள் பற்றி பெரிதும் பரபரப்பை காட்டியிருந்தன, அங்கு அத்தகைய படுகொலைகள் இடம்பெறவில்லை. மாறாக, உஸ்பெக் ஆட்சி ஆண்டிஜான் சதுக்கத்தில் இருந்து சடலங்களை அள்ளி எடுத்துக் கொண்டிருந்தபொழுதும் கூட, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இருதரப்பினரும் "நிதானத்தை" கடைப்பிடிக்க வேண்டும் என்ற மழுப்பிப்பேசும் வேண்டுகோளைத்தான் வெளியிட்டது.

ஆண்டிஜானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களுக்கு வந்து வேலைகளை கோரியதோடு, அரசியல் அடக்குமுறைக்கும் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்று முறையீடு செய்தனர். ஆயினும்கூட அமெரிக்க நிர்வாகம் அவர்களுடைய போராட்டத்திற்கு எவ்வித பரிவுணர்வும் காட்டவில்லை. மாறாக வன்முறைக்கு அவர்களையே குற்றம் சாட்டியதோடு, ஆண்டிஜான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளில் "பயங்கரவாதிகளும்" இருந்தனர் என்ற கவலையையும் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் "ஜனநாயகம்", மற்றும் "கொடுங்கோலாட்சிக்கு" எதிரான அக்கறையை வாஷிங்டன் காட்டுவதும், மற்றும் சர்வதேச அளவில் எங்கு இருக்கின்ற ஆட்சியை கவிழ்த்து அமெரிக்காவின் புவிசார்-அரசியல் இலக்குகளுக்கு அர்ப்பணிக்கும் புதிய ஆட்சியை திணிக்க விரும்புகிறதோ அந்த நாடுகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது. உஸ்பெக்கிஸ்தானில் ஏற்கனவே அது ஒரு வாடிக்கையாளர் நாட்டைக் கொண்டிருக்கிறது. கரிமோவ் ஒரு கொலைகார சர்வாதிகாரியாக இருந்தபோதிலும், புஷ் நிர்வாகத்தின் கருத்தின்படி, அவர் நம்மவர்.

இந்த ஆட்சியில் 6,000க்கும் மேற்பட்ட அரசியல் கருத்துவேறுபாடு உடையவர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்; இங்கு சித்திரவதை ஒரு வகையாகவே எப்பொழுதும் செயல்படுத்தப்படுகிறது; அரசியல் விரோதிகளை உயிரோடு வறுத்தெடுப்பது ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். இந்தக் கிரகத்திலேயே இருக்கும் மிக ஊழல் வாய்ந்த சர்வாதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆயினும் கூட நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீது நிகழ்ந்த செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு முன்பே, அதை அடுத்து நிகழ்ந்த ஆப்கானிஸ்தானில் போருக்கும் முன்பே, இந்நாடு மிக நெருக்கமான தொடர்புகளை அமெரிக்க அரசாங்கத்துடன் பெற்றுவந்துள்ளது.

9/11 தாக்குதலுக்கு பின்னர், அமெரிக்க காங்கிரஸ் கரிமோவின் ஆட்சிக்கு 25 மில்லியன் டாலர்களை கொடுத்து அமெரிக்க ஆயுதங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கடனாக கொடுத்திருந்தது: இதைத் தவிர மற்றும் ஒரு 40.5 மில்லியன் டாலர் பொருளாதார மற்றும் சட்டத்தை செயல்படுத்தும் செலவிற்காக உதவித்தொகையாக கொடுக்கப்பட்டதுடன், "பயங்கரவாத எதிர்ப்பு நிதிக்காக" 18 மில்லியன் டாலரும் கொடுக்கப்பட்டன. இந்த உதவி ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக்கப்பட்டு வருகிறது.

2003 அளவில், இந்த உதவித்தொகை 86 மில்லியன் டாலர்களாக பெருகிவிட்டது. இதற்கு மறு ஆண்டு, அரசுத்துறை 2002ம் ஆண்டு காங்கிரஸ் முடிவான உஸ்பெகிஸ்தானின் மனித உரிமைகள் மீறல், அரசியல் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பெயரளவிற்கு 18 மில்லியன் டாலர்கள் உதவித் தொகையைக் குறைத்தது. கரிமோவ் ஆட்சிக்கு இதனால் குழப்பம் ஏற்பட்டது; ஆனால் அதிகாரிகள் நிதியுதவி அந்நாட்டிற்கு எப்படியும் சிறிது சிறிதாக வந்து சேர்ந்துவிடும் என்று கூறிவிட்டனர்.

அமெரிக்க உதவித் திட்டத்தில் உஸ்பெக் அதிகாரிகள் வட கரோலினா மாவட்டத்தில் உள்ள Fort Bragg ல் பயிற்சி பெறல் மற்றும் இராணுவ லாரிகள் வழங்கப்படுவதற்கு வகை செய்தல் ஆகியவையும் அடங்கியுள்ளன. இதன் விளைவுகளைத்தான் வெள்ளிக்கிழமை அன்று நடந்த படுகொலைகளிலும் அதன் பின்னர் சடலங்களுக்கு நேர்ந்த கதியிலும் காண்கிறோம்.

உஸ்பெகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு பயணித்திருந்தபோது, அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் கரிமோவின் ஆட்சி, "மகத்தான, உறுதியான ஆதரவை நம்முடைய பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளுக்கு" அளிப்பதற்காக பாராட்டினர்; மேலும் இந்த நாடு "ஆப்கானிஸ்தான் மக்களை விடுவிக்கும் நம்முடைய முயற்சிகளுக்கு" இது பெரும் சாதகமாக இருந்துள்ளது என்று கூறினார்.

தன்னுடைய மக்களின்மீதே சித்திரவதைகள், கொலைகள் இவற்றைச் செய்யும் ஓர் ஆட்சியில் இருந்து எத்தகைய "சுதந்திரம்" வெளிப்படும் என்ற கேள்வி ஒருவர் எழுப்பக்கூடியதுதான். "பயங்கரவாத்த்திற்கு எதிரான முயற்சிகளில்" ஒத்துழைப்பு என்பது அரசியல் எதிர்ப்பு எந்த வகையில் வந்தாலும் அதன் மீதான அதன் மிருகத்தனமாக ஒடுக்குமுறைக்கான ஒரு போலிக்காரணமாக கரிமோவின் போலீஸ் அரசாங்கம் தொடர்ந்து அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த இழிந்த ஆட்சியின் பணி வாஷிங்டனுக்கு மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளத்தை ஆப்கானிஸ்தானுடனான நீண்ட எல்லைப் பகுதியில் Karshi-Khanabad ல் நிறுவுவதற்கு உதவியுள்ளது. அங்கு 1,500 அமெரிக்க இராணுவ இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்; இது ஆப்கானிஸ்தானிற்கு சரக்குகள் அனுப்பும் பாதையாக இருப்பதுடன் மத்திய ஆசியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ செல்வாக்கை உயர்த்திக் காட்டும் வகையிலும், எண்ணெய் வளமுடைய காஸ்பியன் படுகையில் அதன் செல்வாக்கு படர்ந்து இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

அதே நேரத்தில், உஸ்பெக் ஆட்சியில் வெறுப்பிற்குட்பட்ட உளவுத்துறை பென்டகனுடனும் சிஐஏ உடனும் ஒத்துழைக்கிறது. உஸ்பெக்கிஸ்தானுடைய அயோக்கியத்தனமான மனித உரிமைகளை மீறல் சான்றுகளை பற்றி தொடர்ந்து பொருள் விளக்கம் கொடுத்தபோதிலும், வாஷிங்டன் அதன் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று கூறிக்கொள்ளும் நடவடிக்கைகளில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களை இந்த நாட்டிற்குத்தான் அனுப்பி வருகிறது. துல்லியமாக, ஏனெனில், அங்கு அவர்கள் சித்தரவதைக்குட்படுவர் என்பதை அது அறியும்.

அமெரிக்க தேசிய சட்ட மன்றத்தின் கீழ் பிரிவு குழு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் சாட்சியம் அளித்தபொழுது, சர்வதேச பாதுகாப்பு கொள்கை துறையின் துணைச் செயலாளரான மீரா ரிகார்டெல் உஸ்பெக் ஆட்சியை புகழ்ந்து "உஸ்பெகிஸ்தானின் படைகளில் போற்றத்தக்க வகையில்" சீர்திருத்தங்கள் நடந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

கரிமோவின் போலீஸ் அரசாங்கம், "அப்பகுதியில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு ஒரு மாதிரி போன்றதாகும்", "இது அமெரிக்காவின் மதிப்பிற்குரிய பங்காளியும், நட்பு நாடாகவும் உள்ளது" என்று இவ்வம்மையார் மேலும் அறிவித்தார்.

Top of page