World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Dutch government facing likely defeat in upcoming referendum

டச்சு அரசாங்கம் வரும் கருத்து வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவக் கூடும்

By Jörg Victor
27 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்சில் திட்டமிடப்பட்டுள்ள கருத்துவாக்கெடுப்பிற்கு மூன்றே நாட்களுக்கு பின்னர், நெதர்லாந்து தன்னுடைய தேசிய வாக்கெடுப்பை ஐரோப்பிய ஒன்றிய புதிய அரசியல் அமைப்பிற்காக நடத்த உள்ளது. கருத்துக் கணிப்புக்கள், பிரதம மந்திரி Jan-Peter Balkenendeயின் அரசாங்கம் தீவிர தோல்வியை எதிர்கொள்ளக்கூடும் என்று குறிப்பிடுகின்றன. சமீபத்திய கருத்துக் கணிப்பு, டச்சுப் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் எதிராக, மக்களில் பெரும்பாலோர் வரைவு அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிக்க இருப்பதாக காட்டுகிறது.

கருத்துக் கணிப்பில் விடையிறுத்தவர்களில் 62 சதவிகிதத்தினர் அரசியல் அமைப்பு பற்றி "வேண்டாம்" என்றும், 12 சதவிகிதத்தினர் மட்டுமே "வேண்டும்" என்று வாக்களிக்க இருப்பதாகவும், 26 சதவிகிதத்தினர் முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இந்தப் புள்ளி விவரங்கள், ஆறு மாதங்களுக்கும் குறைவாக முன்னர் எடுக்கப்பட்ட தேசிய கருத்தை முற்றிலும் மாற்றிவிட்ட தன்மையை காட்டுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், யூரோபாரோமிட்டர் மதிப்பீடு (Eurobarometer survey), அரசியலமைப்பிற்கு 73 சதவிகிதத்தினர் ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன் பின்னர், ஆதரவாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு மாதம் கடக்கப்பட்டபோதும், பெரிதும் குறைந்துவிட்டது.

தோற்றப்பாட்டில் அரசியலமைப்பிற்கு பெரும் ஆதரவு இருக்கும் என்று தோன்றியதுதான், முதலில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தது -- டச்சின் நவீன வரலாற்றிலேயே இது முதலாவது வாக்கெடுப்பு ஆகும். 2003ம் ஆண்டு வரை கூட்டணியில் இருக்கும் Christian Democratic Appeal (CDA), மற்றும் Freedom and Democracy Party (VVD) இரண்டுமே இந்த விவகாரத்தில் எவ்விதமான மக்கள் வாக்கெடுப்பும் கூடாது என்றுதான் எதிர்த்து வந்திருந்தன. பாராளுமன்றத்தின் சுதந்திரத்தை கருத்துவாக்கெடுப்பு குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்று CDA, VVD இரண்டுமே வாதிட்டிருந்தன.

இவர்களுடைய கூட்டணியில் இருக்கும் சிறுபான்மைக் கட்சி Democrats 66 (D66) என்பது மக்களுடைய வாக்கெடுப்பிற்கு ஆதரவைக் கொடுத்தது. பாராளுமன்றத்தில் D66 உறுப்பினர்கள் கட்டுப்படுத்தாத கருத்துவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற சட்ட மசோதா கொண்டுவந்த பின்னர்தான் CDA, VVD இரண்டும் தங்கள் எதிர்ப்பை விலக்கிக் கொண்டன. அப்பொழுது சாதகமான கருத்துக் கணிப்புக்கள் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அரசாங்கத்தின் வழியிலேயே மக்கள் வாக்களிப்பர் என்ற வகையில் அது பாதுகாப்பானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடுகள்

CDA, VVD இவற்றுடன், D66 ல் இருக்கும் தன்னை தாராளவாதிகள் எனக் கூறிக் கொள்ளுபவர்கள் ஆகியோரை தவிர அரசியலமைப்பிற்கு, எதிர்க்கட்சியான Social Democratic Labour Party (PvdA) இடம் இருந்தும், பசுமைக் கட்சியிடமிருந்தும் (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல கிறிஸ்துவ சமாதானக் கட்சிகளின் இணைப்பில் தோன்றியுள்ள கட்சி) ஆதரவு வந்தது. மொத்தத்தில் டச்சின் 150 பாராளுமன்ற உறுப்பினர்களில் 128 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவு அரசியலமைப்பிற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சிகளுமே முந்தைய தேர்தல் பிரச்சாரத்தில் செய்திருந்த வலதுசாரி வாதங்களை மீண்டும் கூறுவதில்தான் ஆர்வத்தை காட்டியுள்ளன. ஒரே குரலாக, அவை அனைத்துமே அரசியலமைப்பு பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை எதிர்த்துப் போரிட வலிமையை கொடுக்கும் என்று தெரிவிக்கின்றன. PVdA, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால "தாக்கும் சக்தியை" பெரிதும் பாராட்டியுள்ளது.

42 இடங்களை கொண்டுள்ள PvdA பாராளுமன்றத்தில் இரண்டாம் பெரிய கட்சியாகும். ஐரோப்பிய அரசியலமைப்பு பிரச்சினையில் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பது மட்டுமின்றி, முன்னோடியில்லாத வகையில் இருக்கும் அரசாங்கத்தின் சமூகப் பணி செலவினங்கள் வெட்டிற்கும் ஆதரவு கொடுத்துள்ளது. சமூக ஜனநாயகவாதிகள் இந்தத் திட்டம் அமைக்கப்படுவதற்கான 2002 பேச்சு வார்த்தைகளின் போது, புதிய கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு திரைக்குப் பின்னணியில் உதவியும் புரிந்தனர். ஈராக்கிய போரில் அரசியல் மற்றும் இராணுவமுறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தன்னுடைய ஆதரவையும் PvdA கொடுத்துள்ளது.

அரசியலமைப்பிற்கு ஆதரவு கொடுப்பவர்கள், தற்போதைய மறு மாற்றுக் குழுக்களுக்கும் புகலிடம் கோருவோர், தஞ்சம் கோருவோர் ஆகியோரை பற்றிய ஐரோப்பிய கொள்கை கடுமையாக இருக்கவேண்டும் எனப்படுதலுக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர். இதற்குப் பொறுப்பான மந்திரியான Rita Verdonk (CDA) அம்மையார், குடிபெயர்ந்தோர் ஏராளமானவர்களை நாடுகடத்தவும், இன்னும் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாதவர்களையும் வெளியேற்றவும் உத்தரவு இட்டுள்ளார். வெளியேற்ற மையங்கள் தோற்றுவிக்கும் முயற்சிகளை இந்த அம்மையார் தொடக்கியுள்ளதோடு, அகதிகள் நிரபராதிகளாக இருக்கலாம் என்ற நினைப்பை நடைமுறையில் ஒழித்து, அவர்களை குற்றவாளிகள் போலத்தான் நடத்துகிறார்.

அரசாங்க கட்சிகள் ஐரோப்பிய பொதுச் சந்தை, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், "யூரோ நாணயத்தின் அடிப்படையில் அமைந்து, உறுதி உடன்பாட்டினால் பாதுகாப்பிற்குட்பட்டிருப்பதின்" முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த ஆண்டிற்கான டச்சுப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உறுதியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வளர்ச்சி சாதாரண மக்களுக்கு எந்த பயன்களுக்கும் வழிவகுக்காது. சமூகப் பணிகள், ஊதியங்கள் இவற்றில் பெரும் வெட்டுக்கள் இருக்கப்போவதாலும், வணிகத்திற்கு நிதிச் சலுகைகள் பெரிதும் வழங்கும் திட்டம் இருப்பதாலும், நாட்டில் இருக்கும் சமூக துருவமுனைப்படல் தீவிரமாக வளர்ச்சியடைந்துள்ளன, வேலையின்மை மிகவும் உயர்ந்துள்ளது மற்றும் பொது வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்களில் வலதுசாரி Pim Fortuyn List (LPF), மற்றும் என்னும் முன்னாள் VVD உறுப்பினரும் தற்போது மிகவும் இழிபுகழ்பெற்ற வலதுசாரி ஜனரஞ்சக தலைவராக நாட்டில் இருப்பவருமான Geert Wilders ஆகியோர் உள்ளடங்குவர். இவர்கள் இருவரும் தங்கள் வாதங்களை தேசியம், மற்றும் பிறநாட்டாரிடம் வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுள்ளனர். அரசியலமைப்பு தேசிய இறைமையை குறைத்துவிடும், ஒரு அதிகாரத்துவ அரக்கனை தோற்றுவிக்கும் என்றும் நாட்டில் இன்னும் பெரிய குடியேறுவோர் அலைகளைப் புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இருந்து, குறிப்பாக துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்டால் அங்கிருந்து வரும், என்றும் வாதிட்டுள்ளனர்.

Geert Wilders குறிப்பாக துருக்கிக்கு எதிராக முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வுகளை விசிறி விட்டுக் கொண்டுள்ளார். துருக்கி ஒரு உறுப்பு நாடாக வந்துவிட்டால், "மில்லியன் கணக்கான மக்களை கொண்டுள்ள இஸ்லாமிய நாடு என்ற முறையில் அது கூட்டமைப்பு அரசாங்கத்தில் மாபெரும் செல்வாக்கை பெற்றுவிடும்" என்று கூறுகிறார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு "துருக்கிக்கு டச்சுச் சட்டத்தின்மீது கூடுதலான செல்வாக்கை, டச்சு நாட்டைக் காட்டிலும் கொடுத்துவிடும்" என்றும் கூறியுள்ளார்.

வில்டெர்சுக்குச் செய்தி ஊடகத்தில் மிகப் பெரிய ஆதரவு கொடுக்கப்படுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, அவர் திட்டமிட்டுள்ள, இன்னும் தொடங்காத கட்சி பாராளுமன்றத்தில் 26 இடங்களைப் பெறும் என்றும் இது 2002 தேர்தல்களில் பிம் பார்டுனுக்குக் கிடைத்த இடங்களுக்கு ஒப்பாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் LPF மிக அதிக முறையில் செய்தி ஊடகம் காட்டிய கவனம், மற்றும் அதிகாரபூர்வ அரசியலில் மக்கள் கொண்டிருந்த அதிருப்தியின் விளைவாக நலன்களை அடைந்தது. 80 நாட்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கு வகித்தபின்னர், தான் பெற்றது போலவே விரைவாக தன்னுடைய செல்வாக்கையும் அது இழந்தது; அடுத்த தேசிய தேர்தல்களில் எட்டு இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.

சோசலிசக் கட்சியில் (SP) இருக்கும் முன்னாள் மாவோயிஸ்டுகளும், ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர். இந்த அரசியலமைப்பு ஒரு புதிய-தாராளவாத கொள்கைத் திட்டம், இராணுவ வாதத்தையும் "அழிவு சக்திகளையும்" வலிமைப்படுத்தும் என்றும், வாழ்க்கைத் தரத்தை உடைத்து விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் ஒரு வலதுசாரி, தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து அரசியலமைப்பை எதிர்த்து "வலுவான தேசிய நாடு" இருந்தால்தான் வாழ்க்கைத் தரங்கள் காப்பாற்றப்பட முடியும் என்ற பொய்த்தோற்றத்தை பரப்பிவருகின்றனர். ஏப்ரல் மாதம் NRC Handelsblade செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, SP தலைவர் Jan Marijnissen டச்சு அரசாங்கத்தின் தேசிய உரிமைகள் சிறிது சிறிதாக, பிரஸ்ஸல்ஸின் நலனுக்காக கைவிடப்படுகின்றன என்று கூறியுள்ளார். "அரசியலமைப்பிற்கு "வேண்டும்" வாக்கு அளிப்பதற்கு முன்பு, அரசியலமைப்பு ஏற்கப்பட்டால் நெதர்லாந்து ஒரு சக்தியற்ற மாநிலம் போல் ஆகிவிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று Karijnissen எழுதியுள்ளார்.

கூட்டணி அரசாங்கத்தின் அரசியல் உறுதியற்ற நிலை

பிரான்சுக்கு எதிரிடையாக, நெதர்லாந்தில் நடைபெறும் வாக்கெடுப்பு அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது. மக்களுடைய விருப்பத்திற்கு எதிரானது என்றிருந்தாலும் பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு இசைவு கொடுக்க முடியும். D66, பசுமை இடது, SP ஆகியவை மக்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு தாங்கள் நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. வாக்குப் போடுபவர்கள் எண்ணிக்கை "அதிகமாக" இருந்தால்தான் வாக்கெடுப்பு முடிவின்படி தான் நடந்துகொள்ளும் என்று PdvA அறிவித்துள்ளது. அதிகம் என்பது எப்படிக் கணக்கிடப்படும் என்று தெரியவில்லை. CDA இன்னும் சரியான முறையில் வாக்கெடுப்பு முடிவு ஏற்பதற்கான அளவுகோலைக் கொடுத்துள்ளது: குறைந்தது 30 சதவிகித மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு, அதில் 60 சதவிகிதத்தினர் எப்படி விருப்பம் தெரிவிக்கின்றனரோ, அதுவே மக்கள் விருப்பம் என்கிறது.

"வேண்டாம்" உணர்வின் வளர்ச்சி அரசாங்கத்தின் அரசியலுக்கு மக்கட்தொகுப்பின் பரந்த அடுக்குகள் காட்டும் எதிர்ப்பின் விளைவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக வெட்டுக்களும், ஈராக்கின்மீதான போருக்கு அரசாங்கம் ஆதரவு கொடுத்ததும் பெரிய எதிர்ப்பை கொடுத்துள்ளன. வாக்கெடுப்பு நாள் நெருங்கி வருகையில், பொது விவாதம் தீவிரமடைந்து, "வேண்டாம்" வாக்கிற்கான ஆதரவு வலிமையாகிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவிற்கு ஒரு ஜனநாயகப் போர்வை கொடுக்கும் என்று நினைக்கப்பட்டது, இப்பொழுது கூடுதலான அரசியல் உறுதியற்ற தன்மையும், கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு நிரந்தர நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

தங்களைத் தாங்களே "இடது தாராளவாதிகள்" எனக் கூறிக் கொள்ளும் D66 ல் இருப்பவர்கள் இந்த நெருக்கடியினால் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்த வார்த்தைகளின்படி, சமூக சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு சமுதாயத்திற்காக நிற்கின்றனர். ஆனால் சமூகப் பிளவுகளை அதிகப்படுத்தியுள்ள கொள்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதற்கு அவர்கள்தான் பொறுப்பாக இருந்துள்ளனர். தற்போதைய கருத்துக் கணிப்பின்படி, D66 உறுப்பினர்கள் தேர்தல் ஒன்று நடந்தால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கூடப் பெறமாட்டார்கள் என்று தெரிகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் D66 ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது; இதன்படி மேயர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் எனப்பட்டது; ஆனால் இந்தச் சட்டவரைவு விரைவில் கைவிடப்பட்டது. இதற்கு முக்கியமாக பின்னணியில் இருந்த D66 மந்திரியான Thom de Graf ராஜிநாமா செய்தமை அரசாங்கத்திற்குள் ஒரு நெருக்கடியை கட்டவிழ்த்தது. கூட்டணியில் இருந்து D66 கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ளுதல் என்பது கட்சிக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்ட பின்னரே தவிர்க்கப்பட்டது. CDA மற்றும் VVD இரண்டும் கல்விச் செலவினங்களை அதிகரிப்பதற்கு வாக்களித்ததுடன் தங்கள் ஆதரவு வருங்காலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும், "நேரடி ஜனநாயகம்" செயல்படுத்தப்படுவதற்கும் இருக்கும் என்று உறுதியளித்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பிற்கு தோல்வி என்பது "இடது தாராளவாதிகளுக்கு" பெரிய அடி கொடுத்தது போல் இருக்கும் என்பதுடன், மற்றொரு அரசாங்க நெருக்கடி ஏற்படுவதற்கும் வகை செய்யும். இதேபோல், அரசியலமைப்பிற்கு எதிராக மக்கள் எதிர்த்து வாக்களித்து அது பாராளுமன்றத்தில் மாற்றப்பட்டுவிட்டால் (பாராளுமன்றம் எப்படியும் இசைவு கொடுக்கும்) D66 க்கும் பேராபத்தை ஏற்படுத்தும். இந்த அரசியலில் தப்பும் போராட்டத்தில் அதன் ஒரு விருப்பம் கூட்டணியில் இருந்து பின்வாங்கல் அல்லது அரசியலின் மறைவிடத்தில் மூழ்கிவிடுதல் என்பதுதான்.

இந்த அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அரசியலமைப்பு பற்றிய வாதங்களை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கம் 1.5 மில்லியன் யூரோக்களை "வேண்டும்" வாக்கிற்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு ஒதுக்கியுள்ளது.

D66 இன் இடைக்காலத் தலைவரான Lousewies van der Laan அம்மையார் இது பற்றி குறிப்பிடும்பொழுது, "எவரும் எந்தக் குறிப்பையும் கொண்டிருக்கவில்லை; அரசியலமைப்பு எதைப் பற்றி என்று எவருக்கும் தெரியாது, எவரும் முடிவிற்குப் பொறுப்பு என்று உணரவில்லை; நம்பமுடியாத அளவிற்கு இதைப்பற்றி பொருட்படுத்தா தன்மைதான் உள்ளது" என்று கூறியிருப்பது மக்களை அவமானப்படுத்தியுள்ள குறிப்பாகும். "நேரடி ஜனநாயக" இயக்கத்தின் மையத்தில் தாங்கள் இருப்பதாக தங்களின் சொந்த வார்த்தைகளில் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் முக்கிய தலைவரிடம் இருந்து வரும் கருத்து இது; இதன்மூலம் (முதலாளித்துவ) அரசியலுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவை அகற்ற முற்பட்டுள்ளனர்.

அதிகரித்த வகையில் டச்சின் ஆளும் செல்வந்தத் தட்டின் பதட்டநிலை இருக்கும் நிலையில், அவர்கள் பிரான்சில் நடக்கும் வாக்கெடுப்பை உன்னிப்புடன் கவனிப்பதில் வியப்பேதும் இல்லை. அரசாங்க வட்டங்களுக்குள் இருக்கும் பலரும் நெதர்லாந்தில் வாக்கெடுப்பு நடக்க இருப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு மக்கள் ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரித்தால், மக்களை வாக்களிக்க வற்புறுத்துவதில் பயன் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

See Also:

ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

Top of page