World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The new German parliament shows its true face

புதிய ஜேர்மன் பாராளுமன்றம் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டுகின்றது

By Ulrich Rippert
22 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம், செவ்வாயன்று தன்னுடைய முதல் கூட்டத்திலேயே தன் இயல்பை வெளிப்படுத்தியது. காலையில், மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற அவைத் தலைவரான கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU) சேர்ந்த நோர்பெர்ட் லாம்மெர்ட், ஜனநாயகத்தின் கோட்டையும், இதயுமுமாக இருக்கும் "மாண்புயர் மன்றத்திற்கு" உயர்ந்த புகழாரங்களை சூட்டி மகிழ்ந்தார். மாலையின் தொடக்கத்தில் பிரதிநிதிகள் முற்றலும் ஜனநாயக நெறியற்ற முடிவை எடுப்பதற்கு ஆயத்தமாயினர்.

இடது கட்சியின் தலைவரான லோதர் பிஸ்கி (Lothar Bisky) பாராளுமன்ற அவைத் தலைவரின் துணைவர்களில் ஒருவர் என்ற பதவிற்கு தன் பெயரையே மூன்று முறை வாக்களிப்பிற்கு முன் வைத்தார்; ஒவ்வொரு முறையும் அவர் பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டார். சாதாரண பெரும்பான்மை இருந்தால் போதும் என்ற மூன்றாம் வாக்கெடுப்பின்போது கூட, பிஸ்கிக்கு 248 வாக்குகள்தாம் கிடைத்தன; அவருக்கு எதிராக விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை 258 ஆகும்.

இதற்கு சிலமணி நேரங்கள் முன்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் செயற்பட்டியலுக்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தனர்; அதில் ஒவ்வொரு பாராளுமன்ற கட்சிப் பிரிவிற்கும் ஒரு பாராளுமன்ற துணைத் தலைவர் பதவிக்கான உரிமை உண்டு என்று வெளிப்படையாக கூறப்பட்டிருந்தது.

உள்துறைக்கான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவரான வொல்ப்காங் போஸ்பாக் செய்தித் தொடர்பாளர்களிடம் அன்று மாலை பேசுகையில், இடது கட்சிக்கு துணைத் தலைவர் பதவிக்கு உரிமை இருப்பது பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை என்றார். "வேண்டாம்" என்ற வாக்கு "லோதர் பிஸ்கி" என்ற தனிநபருக்கு எதிராகப் போடப்பட்டது என்று அவர் விளக்கினார்; முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியில் அவருடைய பங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்தது என்றும் கிழக்கு ஜேர்மனியின் (GDR) அரசாங்க உளவுத் துறைப் பணி (Stasi) ல் அவர் பணிபுரிந்ததாக வதந்திகள் வந்துள்ளன என்றும் அவர் கூறினார். இடது கட்சியில் இருந்து வேறு ஒரு நபர் போட்டியிட்டால் அவருக்கு வாய்ப்பு சிறந்ததாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

உண்மையில் செவ்வாயன்று பிரச்சினைக்கு உரியதாக இருந்தது லோதர் பிஸ்கி அல்ல. பல ஆண்டுகள் அவர் போஸ்ட்டாம் மாநிலத்தில் சட்டமன்ற துணைத் தலைவராக, சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் போன்ற பிராண்டன்பேர்க் ஆளும் கட்சிகள் ஆதரவுடன் பணியாற்றி இருக்கிறார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், சமூக ஜனநாயக கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுடன் பாராளுமன்றக் குழுக்களில் பரஸ்பர நம்பிக்கையுடன் தொடர்ந்த பல காலமும் நெருக்கமாகவும் பணியாற்றியுள்ளார்: இதை அவரே அடிக்கடி களிப்புடன் சான்றுடன் கூறியுள்ளார்.

இப்படி பிஸ்கிக்குக் கொடுத்த நிராகரிப்பு ஒரு முன்னுதாரணத்தை கொடுத்து ஒரு தகவலையும் வெளிப்படையாக கொடுக்கிறது: அது இங்கு எதிர்ப்பு பொறுத்தக் கொள்ளப்பட மாட்டாது என்பதேயாகும். மக்களை கவரவேண்டும் அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவேனும் "இந்த மாண்புயர் மன்றத்தில்" மக்களின் பரந்த உணர்வை வெளிப்படுத்த விரும்பினால், அவர்கள் கடுமையான ஒதுக்கத்திற்கு உட்படுவர், ஒதுக்கிவைக்கப்படுவர், தண்டனைக்கும் உட்படுத்தப்படுவர்.

தன்னுடைய கொள்கைகளுக்காக (செயற்பட்டியல் 2010, ஹார்ட்ஸ் IV நடவடிக்கைகள் என்று ஜேர்மனிய நலன்புரி அரசை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள்) எதிர்ப்புக்கள் பெரும் அழுத்தத்தை கொடுத்தபோதும், பல உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றிச் சந்தேகங்களை வெளிப்படுத்தியபோதும், முன்னாள் அதிபர் ஷ்ரோடர் கடந்த கோடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கோரியது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் தயக்கத்துடன் அவ்வாறு கோரினர் என்பதோடு, அரசாங்கத்தின் போக்கு மாற்றப்பட வேண்டும் என்று அழைப்பும் விட்டிருந்தனர்.

தன்னுடைய முதல் நாள் பணியில், புதிய ஜேர்மன் பாராளுமன்றம் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஜனநாயகம் என்பது வாக்காளர்களுடைய நலன்களோடு எந்தப் பொதுக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. "அனைத்து அதிகாரமும் மக்களிடம் இருந்துதான் பெறப்படுகிறது!" என்று ஜேர்மனிய அரசியலமைப்பு பிரகடனம் செய்கிறது. ஆனால் பாராளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை பொறுத்தவரையில் இந்த அதிகாரம் எப்பொழுதாவது வாக்கு அளித்தல் என்ற வரம்போடு நின்று விடுகிறது. தேர்தல் முடிவிற்கு பிறகு வருவது முற்றிலும் அரசியல்வாதிகளால் முடிவெடுக்கப்படும்.

செப்டம்பர் 18 அன்று வாக்காளர்கள் ஏஞ்சலா மெர்க்கல் (CDU) மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சியின் கீடோ வெஸ்டெர்வில்லேயின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக தெளிவாக வாக்களித்தனர்; தேர்தல் பிரச்சாரத்தின்போது மெர்க்கலின் போக்கிற்கு எதிராகப் பேசியிருந்த சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சிக்கு தெளிவான பெரும்பான்மையை கொடுத்திருந்தனர். ஆயினும் கூட எந்தக் கொள்கைகள் நிராகரிக்கப்பட்டனவோ அவற்றைத்தான் துல்லியமாக செயல்படுத்துவோம் என்று நோக்கமாகக் கொண்டிருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடைய தலைமையில் ஒரு பெரும் கூட்டணிதான் முடிவாக வந்துள்ளது.

"அவர் ஒரு பலியாடு போல் நடத்தப்படுகிறார்" என்று ஒரு பழமொழி உண்டு. இடது கட்சிக்கு கொடுக்கப்படும் தண்டனையும், மிரட்டலும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை மிரட்டும் இலக்கை கொண்டுள்ளது; இதில் நாட்டின் கிழக்கு, மேற்குப் பகுதியில் இருக்கும் சீற்றம் நிறைந்த வேலையற்ற இளைஞர்கள் பலரும் உள்ளனர்; பாராளுமன்றம் அல்லது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்க முற்படும் எந்த முயற்சியும் பலனளிக்காது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் "மக்களுடைய பிரதிநதிகள்" என்று தங்களை விவரித்துக் கொண்டாலும், மக்களிடையே செல்வாக்கற்ற முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுப்பதுதான் தங்களுடைய முக்கிய பணி என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்ற உண்மை மறைப்பதற்கில்லை; அவ்வாறு நடந்து கொண்டபின் விரோதப் போக்கு உடைய மக்களிடம் தங்கள் செயலை காத்து, நியாயப்படுத்தவும் அவர்கள் முற்படுகின்றனர்.

நன்கு புடைக்கப்பட்ட நாய் ஒன்று தனது வாலைச் சுருட்டிக் கொண்டு வாயிற்படியில் ஓலம் இடும் வகையில், இடது கட்சியின் சார்பில் பேசிய உறுப்பினர் ஒருவர், பாராளுமன்ற சக உறுப்பினர்களின் நடவடிக்கையினால், தாம் மிகவும் "ஏமாற்றம் அடைந்துள்ளதாக" அறிவித்தார். அதேநேரத்தில் இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவு பிஸ்கியின் பெயரை இன்னும் ஒரு வாக்கெடுப்பிற்கு முன்வைக்கும் என்றும் அவர் அறிவித்தார்; அவர் மீண்டும் நிராகரிக்கப்பட்டால், பின்னர் வேறு ஒரு வேட்பாளரை முன்னிறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இடது கட்சித் தலைவர் Gregor Gysi தன்னுடைய இகழ்வுணர்வை வெளிப்படுத்தியதுடன், வாக்கெடுப்பிற்கு ஒரு நாள் முன்பு தான் அனைத்துப் பாராளுமன்றப் பிரிவுகளிடனும் நெருக்கமான, நம்பிக்கையான ஒத்துழைப்புக் கொடுக்கத் தயாராக இருப்பதாக அறிவித்ததையும் சுட்டிக்காட்டினார்.

இடது கட்சி பற்றிய வினா என்றால் இத்தகைய எச்சரிக்கை தேவையற்றது. அனைத்து பிரச்சனைகளிலும் தாழ்ந்து நின்று, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தே அது இகழ்வுற்று நிற்கிறது. அரசாங்க அதிகாரத்தில் இது பங்கைக் கொண்டிருக்கும் பேர்லின் மற்றும் மெக்லென்பேர்க்-மேற்கு போமரேனியாவில் அது முற்றிலும் நம்பிக்கைக்கு உரிய அரசியலமைப்பிற்குட்பட்ட கட்சியாகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளது. பிஸ்கியின் சொந்த அரசியல் அதிகாரத்தை பொறுத்தரையில், ஆங்கில அரசியல்வாதி Dennis Healy அரசியல் விரோதியின் குறைகூறலை "இறந்த ஆட்டினால் இழிவிற்குட்படுத்தப்படுதல் போன்றது" என்ற விளக்கத்தை நினைவு கூறுவது போல் உள்ளார்.

தற்போதைய பெரும் கூட்டணி ஏற்பட்டதற்கு காரணமான அரசியல் சதியை அடையாளம் காணவோ அல்லது எதிர்க்கவோ இடது கட்சி எதையும் செய்யவில்லை. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சி என்று தேர்தலில் தோல்வியுற்ற இரண்டு கட்சிகளும் பெரு வணிக, முதலாளிகள் செல்வாக்கிற்காக, வாக்களர்கள் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கண்டிப்பதற்கு பதிலாக, பெரும் கூட்டணி "இரண்டாம் சிறந்த சாத்தியம்" என்று இடது கட்சி அறிவிப்பதோடு, சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தில் இருந்துகொண்டு மோசமான விளைவுகளை தவிர்க்கும் என்ற தப்பான பொய்தோற்றத்தையும் பரப்பி வருகிறது.

பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் மற்றும் ஒரு பழிதீர்ப்பும் வழங்கப்பட்டது. பாராளுமன்ற அவைத்தலைவராக இருந்து வெளியேறும் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த Wolfgang Thierse, இம்முறை மன்றத் துணைத் தலைவராக போட்டியிட்டபோது, 136 வாக்குள் எதிராகவும், 56 உறுப்பினர்கள் வாக்களிக்காத முறையில், முற்றிலும் எதிர்பாரா வாக்கெடுப்பைக் கண்டார். 20 மில்லியன் யூரோக்கள் அபராதத்தை Thierse பாராளுமன்ற சபாநாயகராக இருந்தபோது சுமத்தியதற்காக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் எடுத்த பழிவாங்கும் படலமாகும் இது. அந்த அபராதம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினர்கள் தேர்தல் நிதிக்காக முறைகேடாக நடந்து கொண்டது அம்பலமானதை அடுத்து அவரால் வழங்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், நன்கொடை ஊழலுக்கு பொறுப்பானவர்களில் இருவர் புதிய அரசாங்கத்தில் மந்திரிகளாக இருக்ககூடிய கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் பதவியை இந்த ஊழல் தொடர்பு காரணமாக ராஜிநாமா செய்திருந்த Wolfgang Schauble அடுத்த உள்துறை மந்திரியாகவும், Franz Joseph Jung பாதுகாப்பு மந்திரியாகவும் நியமிக்கப்பட உள்ளனர். 2000ம் ஆண்டு வசந்த காலத்தில் ஹெசிய மானிலத்தில், அங்கிருந்து கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் நடத்திய நிதி ஊழலில் பெரும் தொடர்பு கொண்டிருந்தான் என்பது அதற்குக் காரணமாகும். முற்றிலும் இனவெறி நிறைந்த பிரச்சாரத்தை 1999ல் நடத்தி ஹெசிய மானில தேர்தலில் வெற்றி கண்ட ரோலண்ட் கொச்சின் தேர்தல் பிரச்சார மேலாளராக Jung பணியாற்றி இருந்தார்.

புதிய பாராளுமன்றத்தில், இத்தகய பிற்போக்கான, வலதுசாரிப் போக்குகள் மேற்கொள்ள இருக்கும் பங்கு புதிய தலைவரான நோர்பெர்ட் லாமெர்ட்டினால் தெளிவாக்கப்பட்டது; "ஜேர்மனிய கலாச்சாரத்தை வரையறுத்தல்" பற்றி புதிய விவாதம் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தேசிய பிரச்சாரத்தை தொடக்க முயன்றது. இப்பொழுது அத்தகைய தாக்குதலுக்கு தக்க நேரம் வந்துவிட்டது என்று அவர்கள் உணர்கின்றனர்.

Top of page