World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The political implications of the Libby indictment

hH குற்றவிசாரணையின் அரசியல் விளைவுகள்

By Barry Grey
31 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு CIA பணியாளரின் அடையாளம் கசியப்பட்ட விஷயத்தில் நீதித்துறை நடத்திய விசாரணையின்போது சட்டத்திற்கு தடையாக இருந்தமை, பொய்ச்சாட்சி கூறியமை ஆகியவற்றிற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று I. Lewis Libby மீது குற்றச் சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது வெள்ளை மாளிகையை மட்டுமல்லாமல், அமெரிக்க அரசியல் கட்டமைப்பு முழுவதையுமே உலுக்கி எடுத்துள்ளது.

ஈராக் மீதான படையெடுப்பிற்கு முக்கிய திட்டமிட்டவர்களில் லீபியும் ஒருவராவார். போர் எதிர்ப்பாளர் ஒருவருக்கு நிர்வாகத்தின் "கறைபடிந்த தந்திர" நடவடிக்கைகளை கூறியது பற்றிய பொய் தொடர்பாக லீபி மீதான குற்ற விசாரணை துணை ஜனாதிபதி மற்றும் புஷ்ஷையேகூட தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அக்டோபர் 29 அன்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியுள்ளபடி, "ஜனாதிபதி புஷ்ஷின் அந்தரங்க வட்டத்தில் முழு உறுப்பினர் என்ற உயர்ந்த தகுதியை லீபி பெற்றிருந்தார்.... மூன்று முக்கிய வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்துவந்தார்: ஜனாதிபதிக்கு உதவியாளர், துணை ஜனாதிபதி அலுவலர்களின் தலைமை அதிகாரி மற்றும் திரு. ஷென்னிக்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்புக்களே அவை."

லீபி மீதான குற்றச் சாட்டில், முதலும் முக்கியமானதுமாக ஈராக்கின் மீது பேரழிவு கொடுத்துள்ள முடிவுகளை தந்துள்ள அமெரிக்க படையெடுப்பில் இருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள ஆழ்ந்த நெருக்கடியாகும்; இத்துடன் போருக்கும், பெரும்பாலான உழைக்கும் மக்கட் திரட்டின் பரந்த பிரிவை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நிலைமைக்கும் எதிராக பெருகி வந்துள்ள உள்எதிர்ப்பும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

புஷ்ஷின் தனிப்பட்ட குறைபாடுகள், ஷென்னி, ரம்ஸ்பெல்ட் மற்றும் சக சதிகாரர்களின் தன்னிலை சங்கட நிலைமையில் ஏற்பட்டுள்ள இறுதி முடிவை விட ஆழ்ந்த தன்மையை இந்த நெருக்கடி கொண்டுள்ளது. இது வரலாற்று பரிணாம ரீதியான ஒரு புறநிலை நெருக்கடியில் வேரூன்றியுள்ளது: அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு முட்டுச்சந்தை அடைந்துள்ளது. போரையும் பிற்போக்குத் தன்மையையும் தவிர அதற்கு இதிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வகை இல்லை.

அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் குற்றம் சார்ந்த தன்மையைத்தான் இந்நெருக்கடி அடிப்படையில் உணர்த்துகிறது; இன்னும் கூடுதலான வகையில் அரசாங்கம் தன்னுடைய முரண்பாடுகளிலேயே சிக்கிக் கொள்ளும்போது, இன்னும் ஆபத்தான, வன்முறை வகையை அது மேற்கொள்ளும் என்ற கட்டாயத்தையும் இது தோற்றுவித்துள்ளது. புஷ் நிர்வாகம் லீபியின் குற்றச்சாட்டை அடுத்து இராணுவவாதம் மற்றும் சமூக பிற்போக்குத்தனம் என்ற தன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்க ஒரு சமரசத்தை மேற்கொள்ளும் என்று கருதினால் அது மிகப் பெரிய தவறான நம்பிக்கை ஆகிவிடும். இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகத்தின் உள்ளுணர்வு விடையிறுப்பாக அமையும்.

தலைமை நீதிமன்றத்திற்கு ஹாரியற் மியர்சை புஷ் நியமனம் செய்த முயற்சி சரிந்ததை அடுத்து, ஜனாதிபதியின் அடுத்த தேர்வு நிர்வாகத்தின் புதிய பாசிச "அடிதளத்தின்" விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் என்பதுதான் கிறிஸ்துவ வலதிற்கு புஷ் நிர்வாகம் கொடுக்கும் சைகையில் இப்பொழுதே காணமுடியும்.

நெருக்கடி ஏற்பட்டு தன்னுடைய நிர்வாகம் சீர்குலைந்துள்ள போதிலும்கூட, புஷ்ஷிற்கு ஒரு பெரும் நலன் உள்ளது: இவருடைய பெயரளவு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு இவருடைய அரசாங்கம் சரிந்து போகவேண்டும் என்பதில் எந்த அக்கறையும் கிடையாது. இது போரில் ஜனநாயகக் கட்சி கோழைத்தனமும், சதியில் பங்கேற்று இணைத்திருந்த நிலையில் புஷ்ஷிற்கு தன்னுடைய எதிர்த்தாக்குதலை நடத்துவதற்கு போதுமான காலஅவகாசம் கிடைப்பதை உறுதி செய்து விடும்.

முன்னாள் இராஜதந்திரி ஜோசப் வில்சனை மதிப்பிழக்க செய்யவேண்டும் என்ற வெள்ளை மாளிகை முயற்சியை அடுத்துத்தான் லீபியின் மீதான குற்றச்சாட்டு எழுந்தது. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான சான்றுகள் எதையும் அமெரிக்க படைகள் ஜூலை 2003ல் கண்டுபிடிக்க முடியாத நிலைமையில், அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சி வளரத் தொடங்கிய நிலையில், நியூயோர்க் டைம்சில் வில்சன் கட்டுரை ஒன்றில் புஷ்ஷும் மற்ற உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளும் பாக்தாத்தில் இருக்கும் அணுவாயுத அச்சுறுத்தல் ஆட்சிக்கு எதிராக என்று கூறிய சான்றுகளை தங்கள் பொய்யுரைகளில் மேற்கோளிட்டபோது, அவற்றின் தவறுகளை அம்பலப்படுத்தினார். ஆபிரிக்க நாடு ஒன்றான நைகரில் இருந்து சதாம் ஹுசைன் யூரேனியத்தை வாங்க முற்பட்டார் என்பது அப்பொய்யுரைகளில் ஒன்றாகும்.

முந்தைய ஆண்டு தான் CIA ஆல் யூரேனியம் பற்றி விசாரிக்க நைகருக்கு அனுப்பப்பட்டதாகவும், அக்கூற்றில் உண்மை ஏதும் இல்லை என்றும் வில்சன் உணர்த்தினார். புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களை போரில் இழுக்கும் வகையில் உளவுத்துறை தகவலை "திரித்துக் கூறுவதாகவும்" அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் நிர்வாகம், வில்சன் மனைவியான வலேரி ப்ளேம் வில்சன் ஒரு CIA பணியாளர் என்றும், வில்சன் ஆபிரிக்க யூரேனிய கூற்று பற்றி விசாரணை நடத்துவது அப்பெண்மணி கொடுத்த ஆலோசனைப் படிதான் நடந்தது என்றும் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துவிட்டது. இதன் நோக்கம் வில்சன்மீது சேற்றை எறிதலும், அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்த நினைக்கும் மற்ற தகவல்கள் வெளியிடுவோரையும் செய்யவிடாமல் செய்வதுதான்.

போரைப் பற்றி விமர்சிக்கும் ஒருவரை மெளனப்படுத்துவது என்பது ஏராளமான குற்றங்கள், பொய்கள் இவற்றைக் கொண்டிருந்த ஒரு பாரிய பொய்தளத்தின் ஒரு சிறு பகுதிதான். அமெரிக்க மக்களை வேண்டுமென்றே முறையாக ஏமாற்று முறையின் மூலம் தூண்டுதலற்ற முறையில் ஈராக்கின் மீது போர் தொடுப்பதற்கு கூறப்பட்ட பொய்களை நியாயப்படுத்துவதில் தொடங்கிய மத்திய குற்றத்தில் இருந்துதான் இது வெளிவந்தது. நூரம்பேர்க் விசாரணையில் ஏற்கப்பட்ட கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த ஆக்கிரமிப்பு போரே புஷ், ஷென்னி, லீபி இன்னும் மற்றவர்கள் மிக அதிக தண்டனை பெறுவதற்குப் போதுமான காரணமாகிவிடும்.

ஈராக்கிய போரின் அடித்தளத்தில் இருந்த சட்டவிரோத முன்கருத்துக்களை புஷ் நிர்வாகம் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையின் அஸ்திவாரம் என்ற தரத்திற்கு, "ஒருதலைப்பட்சமான போர்" என்ற கோட்பாட்டளவிற்கு, உயர்த்தியது; இது சர்வதேச சட்டத்தை நேரடியாக நிராகரிக்கும் கருத்து ஆகும். இக்கொள்கையை கடைபிடித்துள்ளமை மிகப் பரந்த அளவில் சித்திரவதை பயன்படுத்தப்படுதல், பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவர்கள் "மாயமாக காணாமற்போய்விடும் வழக்கம்" மற்றும் உலகின் பல பகுதிகளில் அமெரிக்கா நடத்தும் குண்டர்கள் செயற்பாட்டுவகை ஆகியவற்றை தோற்றுவித்துள்ளது.

இந்தக் குற்றங்களின் மிகப் பெரிய தன்மை, மற்றும் அவற்றை நியாயப்படுத்த அல்லது மறைப்பதற்கு கூறப்பட்ட பொய்களின் பெரிய அளவையும் காணும்போது, சதியின் ஒரு சிறிய கூறுபாடு வெளிவந்துள்ளது, குற்றவாளிகளில் ஒருவர்மீதுதான் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தரவில்லை; நிர்வாகத்திற்கு இத்தனை ஆண்டுகள் எவ்வித பாரிய தாக்கங்களும் நேரவில்லை என்பதுதான் வியப்பை தருகிறது.

இந்த அரசாங்கம் மூடிமறைத்தல்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்துள்ள அரசாங்கமாகும்: ஓர் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குழு உலக வர்த்தக மையத்தைத் தகர்த்தது, பென்டகனை தாக்கியது என்பவை நடந்தபோது "உளவுத்துறை தோல்வி" என்ற பெயரில் இது கொண்டிருந்த பங்கு; "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் காவலில் வைத்திருப்பவர்களை சித்திரவதை செய்யும் இதன் வழக்கம்; ஏற்கனவே நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களின் உயிரையும், 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் உயிர்களையும் குடித்த ஒரு சட்டவிரோதப் போரில் இந்நாட்டை இழுத்த சதி என்றெல்லாம் அவை உள்ளன.

மேலும் மோசடி மூலமாகவும், வாக்குகளை நசுக்கிய முறையிலும் அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கமாகும் இது.

ஆயினும்கூட தடையற்ற முறையில் இயங்குவதற்கு இதற்கு ஜனநாயகக் கட்சி, தேசிய சட்ட மன்றம், நீதிமன்றங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வசதியை கொடுத்துள்ளன. ஜனநாயகக் கட்சி, சட்ட மன்றக் குழு விசாரணைகள் அல்லது நடைமுறையில் இருக்கும் செய்தி ஊடகத்தின் ஆராய்வுகளால் லீபியின் மீது குற்றச்சாட்டைக் கொண்டுவந்துள்ள விளைவை கொடுத்துள்ள CIA கசிவு பற்றிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, இது CIA க்கும் வெளிவிவகாரத்துறைக்கும் இடையே ஒருபுறம், மற்றும் வெள்ளை மாளிகை, ஷென்னி மற்றும் பென்டகன் மறு புறத்திலுமாக, பெருகிய வகையில் அதிகாரவரம்பு பற்றிய அழுத்தங்கள், பூசல்களினால் விளைந்த முடிவாகும். CIA க்குள்ளேயே ஷென்னியும், ரம்ஸ்பெல்டும் வெளிப்படையான இகழ்வுணர்வுடன், நிறுவனத்தையும் அதன் பணியாளர்களையும் நடத்திய முறை பற்றி கசப்புணர்வும், சீற்றமும் பெருகின. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றி CIA கொடுத்த அறிக்கைகளில் அதிருப்தியுற்ற ஷென்னி ஒரு படையெடுப்பை நியாயப்படுத்தக்கூடிய உளவுத்துறை அறிக்கையை தயாரிக்குமாறு CIA ஆய்வாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டார்; அதே நேரத்தில் மிக முக்கியமான அறிக்கைகளை தயாரிப்பதற்காக இருக்கும் அமைப்புக்களுக்கு மேலாக தனக்கென தனியாக உளவுத்துறை பிரிவு ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டார்.

வலெரி பிளேம் வில்சன் என்னும் இரகசிய பணியாளரின் அடையாளத்தை நிர்வாகம் வெளிப்படுத்திய முறையில், CIA அதிகாரத்துவம் அரசியல் காரணங்களுக்காக ஒற்றர் அமைப்பு பற்றிய அடிப்படை விதிமுறைகளை அரசாங்கம் மீறியது பற்றிப் பெரும் அதிர்ச்சியை அடைந்தது. தான் பதிலடி கொடுக்க அது முடிவு எடுத்தது. உண்மையில் CIA இடம் இருந்து அதிகாரபூர்வமாக வில்சனின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது பற்றி ஒரு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைதான் அப்பொழுது அரசாங்கத் தலைமை வக்கீலாக இருந்த John Ashcroft ஐ ஒரு சிறப்பு வக்கீல் நியமித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்யத் தூண்டியது.

ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய நிர்வாகத்தின் கூற்றுக்கள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அல்லது நேரடிப் பொய்கள் என்பது அரசியல், செய்தி ஊடக நடைமுறை முழுவதும் நன்கு அறிந்திருந்த ஒன்றாகும். ஐக்கிய நாடுகளின் ஆயுத ஆய்வாளர்களும் சர்வதேச அணு சக்தி அமைப்பும் (International Atomic Energy Agency) வாஷிங்டனுடைய கருத்துக்களை நிராகரித்திருந்தன. 1991ம் ஆண்டு முதல் வளைகுடா போரில் இருந்து சதாம் ஹுசைனை கவிழ்த்து, பெரும் எண்ணெய் இருப்புக்களுடன் ஈராக்கை ஓர் அமெரிக்கப் பாதுகாப்பிற்குட்பட்ட நாடாக மாற்ற வேண்டும் என்ற போராட்டம் புதிய பழைமைவாதிகளின் (Neo-Conservatives) ஆதிக்கத்தில் இருந்த புஷ் நிர்வாகத்தில் இருந்தது என்பதும் அனைவரும் அறிந்ததேயாகும்.

போர் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் முந்தைய ஜனநாயகக் கட்சியின் பில் கிளின்டன் நிர்வாகம் ஈராக் பேரழிவு ஆயுதங்களை கட்டமைத்து வருகிறது என வலியுறுத்தியதை வெள்ளை மாளிகை வேண்டுமென்றே பொய்கூறவில்லை என்பதற்கு நிரூபணமாக அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றனர். பாதிஸ்ட் ஆட்சி பற்றிய இடைவிடா அமெரிக்க அழுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக, கிளின்டன் அக்கூற்றை உரைத்து வந்தார்; அதில் ஆகாய போர்களும், பொருளாதார தடைகளின் தொடர்ச்சியும் இருந்தன; அவைதான் நாட்டின் உள்கட்டுமானத்தை அழித்து பல நூறாயிரக்கணக்கான குடிமக்கள் மடிந்து போவதற்குக் காரணமாயிற்று.

இரு கட்சிகளுமே ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் என்ற கற்பனையை வளர்த்தது என்ற வாதம் உண்மையானதுதான். ஆனால், இது ஒன்றும் புஷ்ஷின் நிரபராதித் தன்மையை நிரூபிக்கவில்லை; மாறாக இது எந்த அளவிற்கு ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை முன்கருத்திற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பொய்யுரையாக நின்றது என்பதைக் காட்டுகிறது.

இப்பொய்யை சூழ்ந்துள்ள இரு கட்சிகளின் இணக்கமும், அதையொட்டிய தவிர்க்க முடியாத இரத்தம் தோய்ந்த விளைவுகளும் 2004 தேர்தல் பிரச்சாரத்தில் கிளின்டன் சகாப்தத்தில் வெளிவிவகார பிரிவில் ஓர் உயரதிகாரியாகவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேடபாளர் ஜோன் கெர்ரிக்கு ஆலோசகராகவும் இருந்த James Rubin தெளிவாகக் கூறியுள்ளார். 2000 தேர்தலில் ஜனநாயக அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், அமெரிக்க எப்படியும் ஈராக்கின்மீது படையெடுத்திருக்கும் என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்க முதலாளித்துவ முறையின் ஒவ்வொரு அமைப்பும் ஆக்கிரமிப்பு போர் என்ற குற்றத்தில் உட்தொடர்பு கொண்டுள்ளது என்பதும், அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதியில் அம்மக்களில் ஒரு பகுதியாக இருக்கும் அரசாங்கமே சதியை நடத்தியது என்பதையும் இந்த அரசியல் உண்மைகள் காட்டுகின்றன. ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் செய்தி ஊடகம் எத்தகைய ஒத்துழைப்பு அல்லது அடிபணிந்து நின்றாலும், பொய்களின் அடிப்படையில் நாட்டை போருக்கு இட்டுச் செல்வது என்பது, இதை சதித்திட்டம் இட்டு செயலாற்றியவர்கள் நிகழ்த்திய மிகப் பெரிய விபரீதமான, எதிர்பாராத விளைவுகளை தரக்கூடிய செயல் ஆகும்.

லீபி மீதான குற்றச்சாட்டை தோற்றுவித்தது, மற்றும் அமெரிக்க அரசியல் முறையில் பரந்த அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியதும் இறுதியில் ஈராக்கிய எதிர்ப்பை அடக்குவதற்கு அமெரிக்க இராணுவம் இயலாததாலும், போருக்குப் பெருகிய முறையில் அமெரிக்க மக்களின் வளரும் எதிர்ப்பும்தான். மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு உணர்வு பெருகியது, கத்திரீனா சூறாவளி தொடர்பான அரசாங்கம் கொண்டிருந்த மோசமான பிரதிபலிப்பினால் அதிகமாயிற்று; அதேபோல் வேலைகள் இழப்பு, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரக் குறைப்பு ஆகியவற்றை நிகழ்த்தும் பெரு வணிகத்தின் மீதான எதிர்ப்பு உணர்வும் வளர்ந்துள்ளது.

ஈராக்கின் மீது படையெடுத்து அந்நாட்டை ஆக்கிரமிப்பிற்குட்படுத்துவதற்கு சதி செய்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் கிடைக்கும் சட்டபூர்வ தண்டனை முறையானதுதான். ஆனால், இராணுவமுறை, போர், ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதல் ஆகியவை இக்குற்றங்களுக்கு காரணமும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ள நிறுவன அமைப்புக்களினாலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிடாது.

மாறாக, தன்னுடைய பெருகிய பெரும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய அமெரிக்க ஆளும் தட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தாக்குதலை நடத்தும் என்ற அபாயத்தைத்தான் அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளுகின்றனர். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க இராணுவம் பெரும் அவதியுற்றுத் தத்தளித்தாலும், நிர்வாகத்தின் நோக்கம் மத்திய கிழக்கில் போரை பரவலாக்க வேண்டும் என்றுதான் இருக்கும்.

அக்டோபர் 29 அன்று நியூயோர்க் டைம்ஸின் தலையங்கப் பக்கம் அறிவுரை தரும் வகையில் பயனுடையதாக இருந்தது. லீபி மீது குற்றச்சாட்டப்பட்டு ஒரு நாள் கடந்த பின்னர், நிர்வாகத்தின் பொய்கள் மற்றும் ஈராக்கிற்கு எதிரான போர் உந்துதலை வளர்த்ததில் முக்கிய பங்கினை கொண்டிருந்த டைம்ஸ் ஈரான் மீது ஒரு தலையாங்கம் எழுதி, சர்வசாதாரணமாக, ஈரான் ஒரு அணுவாயுதத் தயாரிப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது ஒரு பிரச்சனைக்குரியது...." என்று எழுதியிருக்கிறது.

சர்வதேச அணுசக்தி அமைப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ள இக்கூற்று, எவ்வித ஆதாரமும் கொடுக்கப்பட்டிராத இக்கூற்று, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றித் தயாரிக்கப்பட்ட பொய்யுரைகளை போலவே ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத்தான் உதவும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் அத்தகைய அல்லது இன்னும் மோசமான இரத்தம் சிந்தும் பேரழிவுகளை தடுப்பதற்கும் ஒரே அடிப்படை, நிதியாதிக்க உயர்குழுவின் நலன்களுக்காக செயல்படும் இரு கட்சி முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான வகையில் அரசியலில் திரட்டுவதுதான்.

Top of page