World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: "far-left" LCR refuses to take a stand on police repression

பிரான்ஸ்: "அதி இடது" எல் சி ஆர் போலீஸ் ஒடுக்குமுறை மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறது

By Antoine Lerougetel
8 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு அரசாங்கம் மிகப் பெரிய அளவில் போலீஸ் அடக்குமுறைக்கு திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) முக்கிய உறுப்பினரான Christian Piquet அக்டோபர் 4ம் தேதி, பாரிசில் தொழிலாள வர்க்க குடியிருப்புக்களில் இருந்து கலகப்படை போலீசார் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தார்.

அரசாங்கம் கடுமையாக தனியார் மயமாக்கலை நடத்திக் கொண்டிருப்பது, திட்டமிட்டுள்ளது இவற்றை எதிர்க்கும் வகையில் நவம்பர் 8 அன்று தேசிய அளவில் ஆர்ப்பாட்டகளும் எதிர்ப்புக்களும் நடத்த வேண்டும் என்று கோரியிருந்த தொழிற்சங்கங்களின் மற்றும் இடது கட்சிகளுடைய துண்டுப் பிரசுர அழைப்பில் இருந்த சொல்லாட்சி பற்றி, LCR ன் புத்தகக் கடையில் நடைபெற்ற கூட்டம், விவாதித்தது.

அக்டோபர் 27 அன்று இரண்டு இளவயதினர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது அவர்கள் குடியிருப்புக்களில் இறந்ததை அடுத்து, முதலில் தலைநகரிலும், இப்பொழுது பிரான்ஸ் முழுவதுமாக தொழிலாள வர்க்கப் புறநகர் பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் 10 நாட்களாக, மிகப் பெரிய வகையில் ஆயுதமேந்தியுள்ள கலகப்படை போலீசார் (CRS Republican Security Companies) உடைய பெரும் தலையீட்டை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். LCR இன் முக்கிய செய்தித் தொடர்பாளரான Alain Krivine, கட்சியில் வலைத் தளத்தில் கொடுத்த அறிக்கை ஒன்றில் அவருடைய கட்சியுடன் "முற்போக்கு சக்திகள்" இணைந்து நிலைமைக்கு தக்க விடையிறுப்பு காணவேண்டும் என்று கூறியுள்ளது. WSWS நிருபர்கள் இக்கூட்ட நிகழ்வுகளை கண்டிருந்தனர்.

கட்சியின் முக்கிய உறுப்பினரும், வாரந்திர ஏடான Rouge -ன் செய்தியாளருமான Piquet தலைமையில், LCR இளைஞர் பிரிவின் உறுப்பினர்கள், Revolutionary Communist Youth JCR உறுப்பினர்கள் ஆகியோர், இந்தக் கோரிக்கை கலகப்படை போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் இருந்து திருப்பப் பெறவேண்டும் என்று இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் கூறினர். இதுதான் குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள இளைஞர்களின் முக்கிய கோரிக்கை என்றும் சில பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர்.

பிக்கெட் கூறினார்: "கலகப் படைப் போலீசார் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு நான் உடன்படுகிறேன். ஆனால் PCF (பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி) அல்லது LDH (மனித உரிமைகள் குழு) இதற்கு ஒப்புக் கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை." PCF மட்டும் அவ்வாறு இல்லை என்று சிலர் சுட்டிக்காட்டினர். இன்னும் பல அமைப்புக்களும், ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள CGT (General Confderation of Labour), இன்னும் மற்ற தொழிற்சங்கங்களும் இக்கோரிக்கை சேர்க்கப்பட்டால் அழைப்பில் கையெழுத்திட மாட்டார்கள் என்று அவர்கள் கூறினார்.

இக் கோரிக்கையை தற்காலிகமாக சேர்த்துக்கொள்ளலாம் என்று பிக்கே உடன்பட்டார்; ஆனால் அவர் உறுதியாகக் கூறினார்: "மற்ற அமைப்புக்கள் இதையொட்டி விலகுவதற்கு காரணமானால், பின்னர் அக்கோரிக்கையை அழைப்பில் இருந்து எடுத்துவிடலாம்." இது LCR கோரிக்கையை எதிர்ப்பதற்கு ஒப்பாகும் என்றுதான் கூட்டத்தில் இருந்த அனைவரும் முற்றிலும் உணர்ந்தனர்.

தன்னுடைய அறிக்கையை உறுதிசெய்வாரா என்று பிக்கேயை இந்நிருபர் கேட்டதற்கு, அவர் கூட்டத்தில் இருந்தவர்களை CRS-ஐ குடியிருப்புக்களில் இருந்து திருப்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா என்று வினவினார். பெரும்பாலனவர்கள் இணங்கும் வகையில் தலையாட்டி, ஒப்புதல் அடையாளத்தை கொடுத்தனர். கோரிக்கையை எதிர்ப்பதாக எவரும் குறிப்பிடவில்லை.

பிக்கேயின் நிலையை ஏற்பதை நியாயப்படுத்தும் வகையில் சிலர் மிகப் பரந்த அளவில் ஒற்றுமை இன்றியமையாதது என்று வாதிட்டனர். கூட்டம் முடிந்தவுடன், இந்நிருபர் பங்கு பெற்றவர்களை குடியிருப்புக்களில் கலகப் படைப் போலீசை நிறுத்திவைப்பதை ஏற்கும் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுவரா என்று கேட்டார். இதைப் பற்றி அதிகம் பேசவிரும்பாமல் "ஒற்றுமை" என்பதற்காக அவர்கள் வாளாவிருந்துவிட்டனர். போலீஸ் தூண்டுதலுக்கு விடையிறுத்து இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு வேண்டும் என்று வாதிட்டு தோல்வியுற்ற JCR இளைஞர்களும், அவர்களுடைய திட்டங்கள் ஏற்கப்படாதது பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவப்பட்டபோது, விடையிறுக்க முடியவில்லை.

இடதில் இருக்கும் அனைத்துக் கட்சிகள், அமைப்புக்களுக்கும் LCR அழைப்பு விடுத்துள்ளதாக கூட்டத்தில் பிக்கே தெரிவித்தார். கிட்டத்தட்ட 20 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வரவியலாததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டது. இடது தொழிற்சங்கக் குழு Sud Solidaires ஐ சேர்ந்த Annick Coupe தான் வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இவ்வம்மையார் பின்னர் வரவில்லை. பசுமைக் கட்சி ஒன்றுதான் பிரதிநிதியை அனுப்பியிருந்த ஒரே அரசியல் கட்சியாகும். LCR உறுப்பினர்கள் மற்றும் ஒரு சிறிய இடது குழுவின் பிரதிநிதியை தவிர பங்கேற்ற மற்றவர்கள் இனவெறி எதிர்ப்பு, பெண்ணியக்கம் அல்லது மற்ற எதிர்ப்பு அமைப்புக்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

நடைமுறையுடன் இணக்கமாக நடந்து கொள்ளுதல்

CRS திரும்பப் பெறவேண்டும் என்று குழப்பத்திற்கு இடமில்லாமல் LCR கூற மறுத்தது அது முதலாளித்துவ நடைமுறையை ஒட்டித்தான் உள்ளது என்பதை நிரூபித்துவிட்டது, நடைமுறையே ஏதேனும் ஒருவிதத்தில் எழுச்சி செய்யும் இளைஞர்கள் பலவந்தமாக அடக்கப்படவேண்டும் என்று கோருகிறது.

"மக்களை காப்பாற்றுவதற்கு என்றில்லாமல்" இளைஞர்களை ஒடுக்குவதற்காகத்தான் CRS குடியிருப்புக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிருகத்தனமான முறைக்கும், இனவெறிக்கும் இது பெரிதும் இகழ்வுற்ற அமைப்பாகும். குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை "இழிந்தவர்கள்", "தீராக் காயங்கள்" என்று தூண்டும் வகையில் சார்க்கோசி குறிப்பிட்டுள்ளது போல், CRS அங்கு இருப்பதே ஒரு நிரந்தர ஆத்திரமூட்டல் ஆகும்.

LCR குறிப்பிடும் "ஒற்றுமை" புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உட்பட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமை அல்ல; மாறாக LCR, PCF- ஸ்ராலினிஸ்டுகள், பசுமைக் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகள் ஆகியவற்றின் கூட்டணி அல்லது உடன்பாடு ஆகும். இக்கட்சிகள் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் விளைவாகத்தான் இப்பொழுது குடியிருப்புக்களில் சமூக நெருக்கடி தோன்றியுள்ளது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட குடியிருப்புக்கள் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சி மேயர்களின் தலைமையில் உள்ள நகரசபை ஆட்சிக்குள் பல தசாப்தங்களாக இயங்கி வருகின்றன.

போலீசாரின் அடக்குமுறை தேவை என்று வெட்கம் கெட்டத்தனமாக சோசலிஸ்ட் கட்சி கோரியுள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கட்சியின் தேசிய செயலாளர் Delphine Batho கூறினார்: "சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புக்கள் (போலீஸ் மற்றும் CRS), தீயணைப்பு படையினர், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் மிகக் கடினமான நிலைமையில் செய்துவரும் பணிக்கு, சோசலிஸ்ட் கட்சி பாராட்டை தெரிவிக்கிறது."

தேசிய சட்டமன்றத்தில் சோசலிஸ்ட் குழுவின் தலைவரான Jean-Marc Ayrault இன்னும் கடுமையான வகையில் இளைஞர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்: "ஒரு காரை எரிப்பது என்பது சிறிய, வெற்றுச் செயல் அல்ல; அது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய விஷயமாகும்."

தன்னுடைய தேசியக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள "தூண்டிவிடுதலும் பொறுப்பற்ற தன்மையும் போதும்!" என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. "சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பது மிக விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்." என்று அது கூறுகிறது. கிளர்ச்சிக்காக சார்க்கோசியை குறைகூறி அவர் அகற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தாலும், தொழிலாள வர்க்கத்திலுள்ள மற்றவர்களுக்கு குடியிருப்பு பகுதியில் இருக்கும் இளைஞர்களை காத்திடல் வேண்டும் என்று எந்தக் கோரிக்கையையும் அது முன்வைக்கவில்லை. புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் சமூகப் பிரச்சினைகள் சில மோசமானவற்றை தீர்த்து வைக்கும் பட்டியல் ஒன்றில் "சிறைத் துறைக்கு" கூடுதலான பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உயர்த்திக் கூறப்பட்டுள்ளது.

"போராட்டங்களை இணைக்க வேண்டும்" என்ற அழைப்புக்களை எப்பொழுதும் கொடுக்கும் LCR, பிரான்சின் முதலாளிகள், அரசியல் அமைப்பு முறையின் முதலாளித்துவ சார்புடைய, புதிய பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களில் புறநகர்ப்பகுதியில் இருக்கும் இளைஞர்களை ஒதுக்கி வைப்பதற்கான முயற்சிகள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொழிலாளர்கள் பெருகிய போலீஸ், அரசாங்க அடக்குமுறைக்கு எதிராகவும் போரிட வேண்டியுள்ளது. இக்கொள்கைகள் எதிர்ப்பதற்கு, வறுமை, வேலையின்மை, பிரித்து நடத்தப்படுதல், அடக்குமுறை இவற்றிற்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களில் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் உள்ள ஏனைய தொழிலாள வர்க்கமும் இணைக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையாகும். ஆனால் இதைத்தான் குறிப்பாக LCR தவிர்க்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியல் நடைமுறையின் (சோசலிஸ்ட் கட்சி உட்பட) ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கான பிரச்சாரம் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த வளர்ந்து வரும் நெருக்கடிதான் இளைஞர்களின் அடிப்படை எழுச்சியின் வெளிப்பாடு ஆகும். பிரெஞ்சு மக்களில் பெரும்பாலானவர்கள் அக்டோபர் 4 பொது வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிற்கு கொடுத்த ஆதரவு, மார்சை படகுத்துறைத் தொழிலார்களின் உறுதியான போராட்டம், நகர்ப்புற போக்குவரத்துத் தொழிலாளர்கள் தனியார்மயம், வேலையின்மை, வாழ்க்கைத்தர தகர்ப்பு, உரிமைகள் பாதிப்பு இவற்றிற்கு எதிராக போராடுவதற்கு காரணமும் இதே அடிப்படை சமூக முரண்பாடுகளின் உந்துதலினால்தான். கம்யூனிஸ்ட் கட்சியும், CGT ம் இந்தப் போராட்டங்களை தனிமைப்படுத்தி, தன்மையை குறைத்து, தனித்தனியே ஒவ்வொன்றையும் தோற்கடிக்க முயல்கின்றன.

சமீபத்திய படகுத்துறை தொழிலாளர்கள் CGTயால் கைவிடப்பட்டது உட்பட, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒவ்வொரு காட்டிக்கொடுப்பையும் மூடிமறைக்கும் LCR இதன் வெளியீடுகளில் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் எழுச்சி பற்றி அதிகம் குறிப்பிடுவதில்லை. இதனுடைய வலைத் தளம் ஒரு நான்கு பத்தி தலையங்கத்தைத்தான் நிகழ்வுகளை பற்றி Rogue இன் சமீபத்திய தலையங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளது; இந்நிகழ்வுகளோ கடந்த 11 நாட்களாக ஐந்தாம் குடியரசின் அஸ்திவாரங்களையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் மிகத் தெளிவு. LCR என்பது கட்டுக்கோப்பான ஒரு கட்சியாகும். 2002 ஜனாதிபதித் தேர்தலில் மிகத் தீவிர வலதுசாரி Jean Marie Le Pen ஐ, பிரான்சின் முக்கிய பூர்ஷ்வா அரசியல் வாதியான ஜாக் சிராக்கை, இரண்டு தீமைகளில் குறைவான தீமை என்று கொண்டு எதிர்த்தனர். Krivine, Picquet மற்றும் பல LCR தலைவர்கள் பிரெஞ்சு அமைப்புமுறையின் "இடது" உறுப்பினர்களாகும்

CRS திரும்பப் பெற வேண்டும் என்பதை LCR மறுக்கும் நிலைப்பாட்டிற்கு உடனடிப் பின்னணியில், அது பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் இன்னும் பன்முக இடது என்று அழைக்கப்படும் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை கொள்ள வேண்டும் என்ற அதன் பெரு விருப்பம்தான் உள்ளது. 2002 தேர்தலின் முதல் சுற்றில் LCR இன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த Olivier Besancenot கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கொண்டு "முதலாளித்துவ எதிர்ப்பு" தேர்தல் கூட்டணி ஒன்றைக் கொள்ளலாம் என்பதற்கான வாய்ப்பை எழுப்பியுள்ளார்; இதில் சோசலிஸ்ட் கட்சியின் "ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரிக்க" என்று கூறும் முகாமும் இருக்கும். புதிதாக பன்முக இடது அரசாங்க அமைப்பில் மந்திரிப் பதவி வெகுமதியாக வரும் என்று LCR கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

லியோனல் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கம் 2002 தேர்தலில் உறுதியாக நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் அதன் வணிக சார்புடைய கொள்கைகளினால்தான். ஒரு புதிய சோசலிஸ்ட் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி இணைந்த ஆட்சிக்கு LCR நம்பகத்தன்மை கொடுக்கும் வகையில் தன்னுடைய பணிகளைக் கொடுக்க விழைகிறது; அக்கூட்டணி சிராக், வில்ப்பன், சார்க்கோசி ஆகியோரின் கொள்கைகளுக்கு மாற்றீடு என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இடதும் வலதுமான இந்த அரசியல் சக்திகள் இப்பொழுதுள்ள நெருக்கடியில் இளைஞர்களை போலீஸ் அடக்குமுறை கொண்டு ஒடுக்குவதை தங்கள் முன்னுரிமையாகக் கொண்டுள்ளன.

அடிப்படை வர்க்க உணர்வு, அரசியல் கொள்கை உடைய எந்த LCR உறுப்பினரும், Krivine இன்னும் கட்சியின் மற்ற தலைவர்கள் எடுத்துள்ள கோழைத்தனமான நிலைப்பாடடில் வெறுப்புணர்வைத்தான் கொள்ளுவர்.

பல "இடது" அமைப்புக்களின் அதிகாரத்துவங்களும் ஒன்றுபடுவதற்காக இந்த தவறான, கொள்கையற்ற வகையில் விடும் அழைப்புக்களை பிரெஞ்சு தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இவை அனைத்தும் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் பெருவணிகம் மற்றும் அரசியல் நடைமுறையில் உள்ள அதன் நட்பு சக்திகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையைத்தான் கொண்டுள்ளன. அவர்களுடைய அரசியல் தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்தை இளைஞர்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பார்வையில் இழிவுபடுத்த வேண்டும் என்றுதான் உள்ளது.

உயர் செல்வந்த வட்டத்தினரின் செல்வத்தை பெருக்குவதற்கல்லாமல், அனைவருடைய தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் சமுதாயத்தின் செல்வம் திட்டமிட்ட முறையில், பயன்படுத்தப்படுவதன் மூலம் இலாப முறை அகற்றப்படுகின்ற - ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் முழுவதும் ஒன்றுபடுத்தப்படுகின்ற ஒரு போராட்டத்தின் பகுதியாக, குடியிருப்புக்களில் இருக்கும் இளைஞர்களின் பாதுகாப்புக்கான மற்றும் கலகப்படைப் போலீஸ் பிரிவை திருப்ப பெறுவதற்கான அழைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் .

See Also :

போலீசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக பாரிஸ் கலகங்களை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன

போலீசிற்கு எதிரான கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு

Top of page