World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Gaullist officials stoke up racism to justify state of emergency

பிரான்ஸ்: அவசரகால நிலைமையை நியாயப்படுத்துவதற்கு கோலிச அதிகாரிகள் இனவெறியை தூண்டிவிடுகின்றனர்

By Antoine Lerougetel
22 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஆளும் கோலிச, UMP (Union for a Popular Movement) இன் மந்திரிகளும், பாராளுமன்ற அங்கத்தவர்களும், முன்னோடியில்லாத வகையில் தங்கள் அரசாங்கம் சுமத்தியுள்ள மூன்று-மாத கால அவசரகால நிலைமையை நியாயப்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் இனவெறி நிறைந்த உணர்வுகளை தூண்டுவதற்கு திட்டமிட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற UMP குழுவின் தலைவரான Bernard Accoyer, கடந்த புதன் கிழமை RTL வானொலியில், புலம்பெயர்ந்த ஆபிரிக்க குடும்பங்களில் உள்ள பலதார திருமணம் பாரிஸ் மற்ற பிரெஞ்சு நகரங்களின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சேரிகளில் புலம் பெயர்ந்த இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட போலீசுக்கு எதிரான மூன்று வார வன்முறை எதிர்ப்புகளுக்கான "காரணங்களுள் நிச்சயமாக ஒன்று" என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினை பற்றி அதிகாரிகள் "விந்தையான முறையில் கண்டிப்பில்லாதவராக" காட்டிக்கொண்டனர் என்று Accoyer கூறினார். சோசலிஸ்ட் கட்சியின் தலைமை மந்திரி லியோனல் ஜோஸ்பன் (1997-2002) பன்முக இடது அரசாங்கத்தை நடாத்தியபோது புலம்பெயர்ந்தோர் குடும்பங்கள் இணைவதற்கான கொள்கைகளை கொண்டிருந்தது பற்றியும் அவர் குற்றம் கூறினார். தண்டிக்கப்பட்ட கலகக்காரர்களுடைய குடும்பங்களுக்கு பொதுநல உதவித்தொகைகள் நிறுத்திவைக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, "சில பேரை பொறுத்தவரையில் அது நியாயமாகும்... ஆனால் பொதுவான விதி என்று அது கூறப்படக்கூடாது" என்று அவர் கூறினார்.

பாராளுமன்றம் நவம்பர் 15ம் தேதி அவசரகால நிலைமையை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கும் சட்டத்தை இயற்றியபோதே, இளைஞர்களுடைய வன்முறை கணிசமாக குறைந்திருந்தது. அவசரகால நிலைமை 12 நாட்களுக்கு மந்திரிசபையால் பிரகடனப்படுத்தப்பட்டு நவம்பர் 21 அன்று முடிவடைவதாக இருந்தது.

அவசரகால நிலைமையை அரசாங்கம் பிரகடனம் செய்ய அதிகாரம் கொடுத்துள்ள 1955 சட்டம் பாராளுமன்றத்தால்தான் அதன் நீடிப்புக் காலம் நிர்ணயிக்கப்படலாம் என்று வரையறுத்துள்ளது. இச்சட்டத்தின்படி போலீஸ் அதிகாரங்கள் மிகப் பரந்த அளவில் விரிவாக்கப்படுவதுடன், குடியுரிமைகள் மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டும் விடும்.

ஆபிரிக்க புலம்பெயர்ந்த குடும்பங்களில் ஒரு சிறிய பிரிவுதான் அனைத்திற்கும் காரணம் என்று மிகப் பெரிய அளவில் மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீது நடத்திய தாக்குதல் மற்றும் அது பிரதிபலிக்கும் அவசரகால நிலைமைப் பிரகடனம் ஆகியவற்றை நியாயப்படுத்துவது, அரசாங்கத்தின் வலதுசாரி சமூகக் கொள்கைகள் பிற்போக்குத்தனமாக இருப்பதற்கு மக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்களை திசைதிருப்பும் வகையில் கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும்.

உள்துறை மந்திரியும் UMP இன் தலைவருமான நிக்கோலா சார்க்கோசி தன்னுடைய சட்டம்-ஒழுங்கு, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ஆத்திரமூட்டலை தொடர்ந்தார்; Express ஏட்டிற்கு அவர் கூறியதாவது: "இருக்கும் விஷயங்களை அப்படியே கூறுவோம்: பலதார திருமணமுறையும் சில குடும்பங்களின் பண்பாட்டு இயல்புகளும் ஒரு இளைய பிராஞ்சுக்காரரை மற்ற இடங்களைவிடக் கூடுதலான முறையில் கறுப்பு ஆபிரிக்கருடன் இணைந்து வாழ்வதற்கு கடினமான கூறுபாடுகளாக ஆக்கியுள்ளன." குடியிருப்பு பகுதிகள் "தாடி வைத்துக் கொண்டிருப்பவர்களின்" ஆதிக்கத்திற்குட்படாமல் தான் தடுத்து நிறுத்த உறுதிகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இளைஞர்கள் வேலைவாய்ப்புத்துறை இளைய மந்திரியான Gerard Larcher "பலதார திருமணமுறை" ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றார். பலதாரமுறை சில சமயம் சமூக விரோத நடவடிக்கைகளை ஏற்படுத்துகின்றன என்றும், "சில சமூகங்களில் இந்த சமூக எதிர்ப்பு நடவடிக்கை வெளிப்படுவதால், அவர்களில் சிலருக்கு வேலை இங்கு கிடைப்பதில் இடர்ப்பாடுகள் இருப்பதில் வியப்பில்லை" என்று முடித்தார்.

எங்கும் நிறைந்து, ஆழமாக வேரூன்றியுள்ள, பெரும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பிரிவினைகள், தவறாக போலீசார் நடந்து கொள்ளுதல் என்று பிரான்சை இந்த மாதம் உலுக்கிய எதிர்ப்புக்களின் வெடிப்பிற்கு உண்மையான காரணத்தை மறைக்க முயல்வதுதான், இத்தகைய இழிவான இனவெறிப் பேச்சு என்பது வெளிப்படையாகும். புலம்பெயர்ந்தோர் பிரான்சில் தங்கள் குடும்பத்துடன் இணைந்து கொள்ளும் உரிமைகளை இன்னும் கூடுதலான வகையில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டும் என்ற அழைப்புடன், இத்தகைய அறிக்கைகளும் வந்துள்ளன.

UMP அதிகாரிகளின் இனவெறி அறிக்கைகள், புதிய பாசிச தேசிய முன்னணியின் ஜோன் மரி லூ பென் உடைய ஒப்புதலை உடனடியாக பெற்றது.

Academie Francaise இன் "நிரந்தர செயலாளரான" Helene Carrere d'Encausse இன் கருத்துக்களை ஒட்டி மேற்கூறியவை வெளிவந்தன. இந்த நிறுவனம் பிரான்சில் மொழி, இலக்கியம் ஆகியவை பற்றிய அதிகாரபூர்வமான நடுவர் நிலையை பதினான்காம் லூயி இன் காலத்தில் இருந்து ஆற்றிவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல பிரெஞ்சு அரசாங்க குழுக்களில் Encausse உறுப்பினராக உள்ளார். பிரான்சின் புறநகர்ப்பகுதிகளில் வன்முறைகளுக்கான காரணம் பற்றி ரஷிய செய்தி ஊடகத்திற்கு விளக்குகையில் இந்த அம்மையார் கூறியதை Liberation மேற்கோளிட்டுக் கூறுகிறது: "இம் மக்கள் ஆபிரிக்க கிராமங்களில் இருந்து நேரடியாக வருகின்றனர்.... ஆபிரிக்க குழந்தைகள் பள்ளியில் இல்லாமல் ஏன் தெருவில் உள்ளன? அவர்களுடைய பெற்றோர்கள் ஏன் அடுக்கு மனைகளை வாங்க முடியவில்லை? இதற்குக் காரணம் வெளிப்படையாக தெரிந்ததுதான்: பல ஆபிரிக்கர்களும் பலதார மணம் புரிந்தவர்கள். ஒரு அடுக்கு இல்லத்தில் மூன்று அல்லது நான்கு மனைவிகளும் 25 குழந்தைகளும் உள்ளனர். மிகுந்த நெரிசல் வீட்டில் இருப்பதால், வீட்டிலேயே இருப்பதில்லை; கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஏன் இந்தக் குழந்தைகள் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்."

நாஜி ஆக்கிரமிப்பு, அதற்கு மார்ஷல் பிலிப் பெத்தன் (1940-1944) ஒத்துழைத்த ஆட்சிக் காலத்திற்கு பின்னர் முன்னோடியாய் இருந்திராத வகையில் இத்தகைய கருத்துக்கள் கூறப்படுகின்றன; இது புலம்பெயர்ந்தோர், இனவெறி எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமையாளர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை தருவதாகும். பிரான்சில் உள்ள சமூக நெருக்கடியும் கீழிருந்து ஒரு புரட்சி வரக்கூடும் என்ற பயங்களும், முன்னாள் காலனித்துவ சக்தியின் அறிவுஜீவுகள், அரசியல் உயரடுக்கில் உள்ளவர்களின் ஆழ்ந்த, இனவெறித் தீவிர உணர்வுகளை கீழிருந்து மேலுக்குக் கொண்டுவருகின்றது.

ஜனாதிபதி ஜாக் சிராக்கை சுற்றியுள்ள பழைய கோலிச தலைமைக்கு UMP க்குள் உள்ள முக்கிய போட்டியாளரான சார்க்கோசி இத்தகைய உணர்வுகளை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சியைத்தான் காண்கிறார்; பிரெஞ்சு சமுதாயத்தின் மிகப் பின்தங்கிய அடுக்குகளுக்குத்தான் அழைப்பு விடுக்கிறார். இனவெறி, தீவிர நாட்டுப்பற்று ஆகியவைற்றை இணைத்த வலதுசாரி இயக்கம் ஒன்றை புதிய தாராள "தடையற்ற சந்தை" கொள்களைகளுடன் இணைத்து, நலன்புரி அரசை அழிக்கும் வகையில் அவர் கட்டமைக்க முற்பட்டுள்ளார்.

UMP தலைவர் என்னும் முறையில் சனிக்கிழமையன்று சார்க்கோசி புதிய உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டத்தில் பேசினார். சட்டம் ஒழுங்கு, புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்புப் பேச்சு இவற்றை வலியுறுத்தி அவர் UMP க்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் பயன்படுத்துகிறார்; குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் வறுமையில் வாடும் இளைஞர்களை விவரிக்கையில் மீண்டும் "இழிந்தவர்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். "வேலையின்மை, திகைப்பு, வன்முறை ஆகியவை புறநகர்ப்பகுதிகளில் இருப்பதற்கு காரணம் பாகுபாட்டு உணர்வோ, பள்ளிகளின் தோல்வியோ அல்ல. பெருந்திகைப்பு இவ்விடங்களில் இருப்பதற்கு காரணம் போதை மருந்து விற்பனை, குண்டர்கள் கூட்ட ஆட்சி, பயத்தின் சர்வாதிகார ஆட்சி மற்றும் குடியரசில் இருந்து விலகி நிற்றல் ஆகியவை ஆகும்."

புறநகர்பபகுதிகளில் இருந்து அரசாங்க சமூகப் பணிகளுக்கான நிதியங்கள் விலக்கப்பட்டுவிட்டதை அவர் குறிப்பிடவில்லை; மாறாக, தன்னுடைய போலீஸ் அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில்தான் பேசினார். இளைஞர்கள் வன்முறை என்ற அலை, போலீசாருக்கு எதிரான வன்முறை ஆகியவை "குண்டர்கள் கூட்டங்களை அகற்றும்" நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களால் தூண்டிவிடப்பட்டவை ஆகும்" என்றார் அவர்.

பிரான்சின் நலன்புரி அரசு மற்றும் பிரான்சின் பாதுகாப்புச் சட்டங்கள்தாம் சமுதாய தீமைகளுக்கு காரணம் என்று அவர் குறைகூறினார். "எமது சமுதாயத்தை ஆழ்ந்த முறையில் மாற்ற வேண்டும்; கடந்த 30 ஆண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார முறைதான் பல தீமைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக வேலையின்மை, கடன்சுமை, வேறிடம் செல்லமுடியாத நிலை ஆகியவற்றை தோற்றுவித்துள்ளது; அதில் இருந்து நாம் முறித்துக் கொள்ள வேண்டும்."

UMP க்குள் இருக்கும் சிராக் மற்றும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சார்க்கோசியுடன் சேர்ந்து கொண்டு போலீஸ் அடக்குமுறை மற்றும் பிற ஜனநாயக எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்; ஆனால் சார்க்கோசியின் ஆத்திரமூட்டல் பேச்சுக்களையோ, தந்திரோபாயங்களையோ அவர்கள் விரும்பவில்லை. சார்க்கோசி காட்டும் மக்கள் கவர்ச்சி உரையின் மற்றும் அவாவின் வெடிப்புத்தன்மை வாய்ந்த சமூக, அரசியல் விளைவுகளை பற்றி அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்; அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராக பூர்ஷ்வா அரசாங்கத்தை காத்து வலுப்படுத்தவும் அவை சமூக ஒருமித்த கருத்தாகவும் இருப்பது போல் தோன்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

பலதார திருமணமுறை பற்றி குறிப்பிடுகையில் வில்ப்பன் கூறினார்: "பொதுக் கருத்துக்களாக கூறுவதை தவிர்க்கவேண்டும்... அமைதியாக இருந்து, கோபம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்... ஒரே ஒரு காரணம் மட்டும் இல்லை... பல காரணங்களும் உள்ளன.... ஒழுக்கநெறி மதிப்பீட்டின் நெருக்கடி... சமூகப் பரிமாணம் போன்றவை..." கடைசிச் சொற்றொடர் புலம்பெய்ர்ந்தோர் அண்டை அயற் பகுதிகளில் இருக்கும் 40 சதவீத வேலையின்மை மற்றும் வறிய நிலைபற்றிய நிலைமைகளுக்கு மறைமுகச் சொல் (இடக்கரடக்கல்) ஆகும்.

இவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பாதுகாப்பு மந்திரி Michele Alliot-Marie கூறியது: "தங்களை கட்டுக்கடங்கா சிறார்களை நடத்துவது போல் உள்ளதாக, இளைஞர்கள் கருத்தைக் கொண்டுள்ளனர்." அவர்களுடைய வன்முறை "ஒரு தற்கொலை மனத்தளர்ச்சிக்கு ஒப்பானதாகும். இந்த நெருக்கடிக்கு ஒரே விளக்கத்தோடு தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தாமல் இருக்குமாறு அனைத்து அரசியல் வாதிகள், வர்ணனையாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று இந்த அம்மையார் கூறியுள்ளார்.

இத்தகைய அறிக்கைகள் கோலிசவாதிகளின் சிராக் பிரிவில் இருந்து வரும்போது வலுவான பாசாங்குத்தனம்தான் தெரிகிறது. இனவெறி துருப்பை பயன்படுத்த சிராக் தயங்கியதில்லை. 1991ம் ஆண்டு ஜூன் 19 அன்று ஓர்லியன்சில் அவர் நிகழ்த்திய இழிபுகழ்பெற்ற உரை ஒன்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்பொழுது அவர் கூறினார்: "எமது பிரச்சினை வெளிநாட்டவர்கள் அல்ல; ஆனால் கூடுதலான எண்ணிக்கையில் முஸ்லிம்களும், கறுப்பர்களும் உள்ளனர்... தன்னுடைய மனைவியுடன் கடுமையாக உழைக்கும் பிரெஞ்சுத் தொழிலாளி 15,000 பிராங்குகள் சம்பாதிக்கிறார்; தனக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் குடியிருப்பு இல்லத்தில் பலர் குழுமியுள்ளதையும், ஒரு தந்தை மூன்று அல்லது நான்கு மனைவியருடன், ஏராளமான குழந்தைகளை வைத்துக் கொண்டு, உழைக்காமல், பொதுநலச் சலுகைகளாக 50,000 பிராங்குகள் வாங்குவதையும் காண்கிறார்... இத்தோடு கூச்சல், துர்நாற்றத்தையும் சேர்த்துக் கொண்டால், பிரெஞ்சு தொழிலாளருக்கு பைத்தியமே பிடித்துவிடும். இதைச் சொன்னால் இனவெறி என்று பொருளாகிவிடாது."

Le Figaro ஏட்டிற்கு நவம்பர் 19 அன்று வில்ப்பன்: "இந்த வார்த்தை போர்களுக்கு பின்னே கணிசமான அளவு உடன்பாடும் மறைந்து உள்ளது." என்று தெரிவித்தார்.

See Also:

பிரான்ஸ்: அவசரகாலநிலை மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது

பிரான்ஸ்: "அதி இடது" எல் சி ஆர் போலீஸ் ஒடுக்குமுறை மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறது

போலீசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக பாரிஸ் கலகங்களை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன

போலீசிற்கு எதிரான கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு

Top of page