World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After the Sri Lankan election: what next for the working class?

இலங்கை தேர்தல்களுக்கு பின்னர்: தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்தது என்ன ?

By Wije Dias
22 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் நவம்பர் 17ம் தேதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நின்றிருந்த விஜே டயஸ் இன் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான மகிந்தா இராஜபக்ஷ இப்பொழுது இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக பதவியில் இருத்தப்பட்டுள்ளார். ஆனால் தொலைவிளைவுகளை கொடுக்கக் கூடிய அரசியல் அமைப்பு அதிகாரங்களை கொண்டுள்ள இந்தப் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை இராஜபக்ஷ பெறவே இல்லை; ஏனெனில் அவர் ஏமாற்றுத்தனம், மோசடி ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது ஆட்சியின் கீழ், தங்கள் வாழ்வு செழிக்கும் என்று நம்பும் வகையில் பொய்யான நம்பிக்கைகளை கொடுத்து எளிதில் ஏமாற்றப்படும் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் முன்னோடியில்லாத வகையில் தொடர் பொய்யுரைகளை அவருடைய தேர்தல் அறிக்கை கொண்டிருந்தது. மேலும் தீவின் யுத்தப் பகுதிகளிலும், கடல் கடந்து வாழ்பவர்களுமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்காளர்கள் என்று மக்கட்தொகுப்பின் பெரும் திரளான பிரிவினர் தங்கள் வாக்குப் போடும் உரிமையையும் இழந்தனர். இலங்கை ஜனாதிபதி தேர்தல்களிலின் வரலாற்றிலேயே இவருடைய உண்மையான பெரும்பான்மை மிக மிகக் குறுகியதாகும்.

இப்பொழுது இராஜபக்ச அதிகாரத்தில் இருப்பதால், நாட்டின் 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கு ஒரு முடிவு அல்லது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் என்னும் பெரும்பான்மையான மக்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்பது விரைவில் தெளிவாகிவிடும்.

மக்கள் விடுதலை முன்னணி (JVP), மற்றும் ஜாதிக ஹெல உறுமய (JHU) இவற்றின் கூட்டுடன் தன்னுடைய பிரச்சாரத்தை இராஜபக்ஷ நடத்தியிருந்தார்; இவை தற்போதைய போர் நிறுத்தம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை எதிர்ப்பவையாகும். இப்பொழுது இவர் "கெளரவமான சமாதானம்" வரும் என்று உறுதிமொழி கொடுக்கிறார்; அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு ஏற்கப்படமுடியாத நிபந்தனைகளை முன்வைக்க உள்ளார். அரசியல் அரிச்சுவடி அறிந்தோர் அனைவருக்கும் இது ஒன்றும் சமாதானத்திற்கான திட்டம் இல்லை, போருக்கான திட்டம்தான் என்று நன்கு தெரியும்.

நவம்பர் 19 அன்று தன்னுடைய பதவிப் பிரமாண உரையில், "சமாதானத் திட்டம்" பற்றிய தன் கருத்தை மிகச் சிறந்த முறையில் வெளியிட்ட வகையில், ஒரு ஆபத்தான சமநிலைச் செயலை, மேற்கொள்ள இராஜபக்ஷ முற்பட்டார். ஆனால் இவ்வாறு செய்கையில் முந்தைய சமாதான வழிவகைகள் அனைத்தையும் முற்றிலும் தான் நிராகரித்துவிட்டதாக மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளார். இந்த "சமாதான வழிவகைக்கு" உதவி புரியும் நோர்வேயை பற்றி எந்தக் குறிப்பையும் கூறாது விட்டதன் மூலமும் போர்நிறுத்த ஒப்பந்தத்தத்தில் பிரதான திருத்தங்களுக்கு அழைப்பு விடுவதன் மூலமும் சிங்கள பேரினவாத JVP மற்றும் JHU-க்கு பிழையில்லா வகையில் இரண்டு சலுகைகளை அவர் செய்தார். நோர்வேயும், போர்நிறுத்த உடன்பாடும் "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவை" என்று பலமுறையும் கண்டிக்கப்பட்டுள்ளன. JVP-க்கு ஊக்கமளிக்கும் செயலான இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தல் என்பதையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய போட்டியாளர், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த, ரனில் விக்கிரமசிங்கவை இராஜபக்ஷ முறியடிக்க முடிந்ததின் முக்கிய காரணம் 2001-04 காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கொண்டிருந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்களுடைய விரோத உணர்வைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்ததால்தான். JVP வாய்ச்சவடால்களின் உதவியுடன், கிராமத்தில் எவ்வாறு வசிப்பது என்பது அவருக்குத் தெரிந்திருப்பதால், ஆலோசகர்கள் தேவைப்படாத "மக்களின் தலைவர்" என்று இராஜபக்ஷ தன்னைக் காட்டிக் கொண்டார். தான் ஒன்றும் வாயில் தங்க கரண்டியுடன் பிறக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த அவருடைய பொய்கள் அனைத்துமே, மற்றைய பொய்யான உறுதிமொழிகளுடன் இணைந்தவகையில், IMF, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கொழும்பில் இருக்கும் பெருவணிக உயரடுக்கினர் ஆகியோருடைய தேவைகளுக்கு ஏற்ப சந்தைச் சீர்திருத்தங்களை முந்தைய SLFP தலைமையிலான அரசாங்கங்கள் மேற்கொண்டதுபோல், விரைவில் புதிய அரசாங்கமும் தன்னை மாற்றிச் செயல்படுத்திக் கொள்ளும்போது அம்பலப்படுத்தப்படும்.

இராஜபக்ஷவும் அவருடைய JVP ஆதரவாளர்களும் முன்வைத்த வகுப்புவாதத்திற்கு எதிர்ப்பைக் கொடுக்கும் திறன் இல்லை என்பதை ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய தேசிய கட்சி போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதும் அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதும் இப்போரினால் ஏற்பட்டுள்ள மக்களுடைய துன்பங்களுக்கு முடிவு காணவேண்டும் என்பதிலிருந்து அல்ல, மாறாக பெருவணிகமும் சர்வதேச முதலீட்டாளர்களும், பொருளாதார மறு சீரமைப்பிற்கு அமைதி முன்னிபந்தனை என்று வலியுறுத்தியிருந்ததன் காரணமாக ஆகும். சிங்களத் தீவிர வாதிகளால் போர்நிறுத்த ஒப்பந்தம் தாக்குதலுக்குட்பட்ட நிலையில், வகுப்புவாத அரசியலில் தானும் சிக்குண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி பலமுறையும் அடிபணிந்து நின்றது.

தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இந்த வழிவகைதான் இருந்தது: JVP போர் நிறுத்த உடன்படிக்கையை கண்டித்தது; தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இது ஒரு வழிவகை என்று ஐக்கிய தேசிய கட்சி அதன் செயற்பாடுகளை தற்காத்து நின்றது. கொழும்பிற்கு சாதகமான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒரு சமாதான பேரத்தின் வெற்றியை உத்திரவாதம் செய்யும் "சர்வதேச பாதுகாப்பு வலை" ஒன்றை தன்னால் கட்டமைக்க முடிந்திருந்ததாக விக்கிரமசிங்க பீற்றிக் கொண்டார். உண்மையில் இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்காவும் மற்ற பெரிய சக்திகளும் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ளும் வகையில் தீவில் தலையிடுவதற்குத்தான் அவர் வழிவகுத்தார். போர் கூடாது என்பதற்காக ஒன்றும் வாஷிங்டன் சமாதான வழிவகைகளுக்கு ஆதரவைக் கொடுத்துவிடவில்லை; மாறாக தீவிலும், இன்னும் பரந்த வகையில் இப்பகுதி முழுவதும் தன்னுடைய பேரவாக்களை அடைவதற்கான வழிவகைகளாக இப்பேச்சுவார்த்தைகளை கருதியதால் ஆகும்.

தேர்தலுக்கு இரண்டே நாட்களுக்கு முன்பு, அமெரிக்க செனட் மன்றத்தில் முன்னோடியில்லாத வகையில் இருகட்சிகளுமாக சேர்ந்து, இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் "பேச்சுவார்த்தை வழிமுறைகளுக்கு தொடர்ந்து அர்ப்பணிக்குமாறும் தேசிய சமரசத்தை நோக்கி ஒவ்வொரு சாத்தியமான நகர்வையும் செய்யுமாறும்" வேண்டிக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றின. "அரசியல், இனக்குழு மற்றும் கருத்தியல் நிறமாலையில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினரின் பயங்கரவாத குழுக்களின் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வெளிநாட்டு அரசாங்கங்கள், தனி நபர்கள் மற்றும் குழுக்களை" அது அழைக்கிறது.

அச்சுறுத்தல் போல் அமைந்திருந்த இத்தீர்மானம் குறிப்பிட்டது: "ஜனநாயக நெறியற்ற வெளி சக்திகளும் தனியார் வளங்களும் இலங்கையில் சிங்கள தீவிரவாதிகள் மற்றும் தமிழ் தீவிரவாதிகள், கட்சிகள் மற்றும் குழுக்கள் உள்பட பல அரசியல் குழுக்களுக்கும் உதவித்தொகை அளித்து புரவலர் போல் நடந்து கொள்வது பற்றி அமெரிக்காவிற்குத் தெரியும்." இந்தச் சிறிய தீவில் தேர்தல் நடக்கிறது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்று உறுதிப்படுத்துகிறது என்பதே வெள்ளை மாளிகை வெறுமே உட்கார்ந்திராது என்பதற்கு தக்க எச்சரிக்கை ஆகும். அமெரிக்கா பொருளாதார மூலோபாய நலன்களில், குறிப்பாக இந்தியாவுடனான அதன் உறவுகளில் பெருகிய முறையில் கொண்டிருக்கும் நலன்கள் இலங்கையில் மீண்டும் போரைப் புதுப்பிப்பதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது.

அதே நேரத்தில், வாஷிங்டனின் நட்புநாடாகிய இந்தியாவும் மறைமுகமான அச்சுறுத்தலை கொடுத்தள்ளது. டாக்காவில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான அமைப்பு (SAARC) கூட்டத்தில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இந்தியா "தோல்வியுற்ற நாடுகளினால்" சூழப்பட்டுள்ளது என்று கூறினார். புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மொழியில், "தோல்வியுற்ற நாடு" என்ற பதம் முறையான அனுமதியுடனோ, அனுமதியின்றியோ அரசியல், இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தும் சொற்றொடராகும். இலங்கையில் போருக்கு எந்திவிதமான திரும்புதலும் புது டெல்லி, வாஷிங்டன் இரண்டையும் சம்பந்தப்படுத்தக்கூடும் என்பதுதான் மிக உண்மையான உட்குறிப்பு ஆகும். இவ்வாறு உள்நாட்டுப் போர் பெரிய அளவில் பரந்து, கூடுதலாக அழிவைத் தரும் மோதலாகி விடும்.

உழைக்கும் மக்கள், இலங்கையில் மட்டும் இல்லாமல், தெற்கு ஆசிய பகுதி முழுவதும் இத்தகைய ஆபத்துக்களை அசட்டை செய்யக் கூடாது என்று சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்துகின்றது. தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், இளைஞர்கள், வாழ்க்கைத் தொழிலை உடையவர்கள் அனைவரும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும் தங்களுடைய நலன்களை காக்க வேண்டும் என்றால் அனைத்து ஆளும் கட்சிகளில் இருந்தும் முறித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டால்தான் முடியும். எதிர்ப்புக்களும், வேலநிறுத்தங்களும் எத்தன்மையான போர்க்குணம் மிக்க தன்மையை கொண்டிருந்தாலும், போரை நோக்கிச் சரியும் நிலைமையை நிறுத்தப்போவதில்லை அல்லது சமூக அழிவுக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை தடுக்கப் போவதில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் வேட்பாளர் என்னும் முறையில், தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு திட்டம் வேண்டும் என்று நான் வலியுறுத்தியதுடன், பாட்டாளி வர்க்க சர்வதேசிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான ஜனநாயக உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரும் பொதுவான அடக்குமுறையையும் மற்றும் சமூக நெருக்கடியையும்தான் எத்கொண்டுள்ளனர். இதற்கு ஒரே தீர்வு அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் அனைத்து சமூகங்களிலும் இருக்கும் ஆளும் உயர்தட்டுக்களுக்கு எதிராக ஐக்கியப்படுவது, அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதுதான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ் காலனித்துவ பேரரசிற்கு பதிலாக நிறுவப்பட்ட செயற்கையான, செல்தகைமையற்ற அரசு அமைப்புக்கு எதிரான எதிர்ப்பில், தெற்கு ஆசிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதிதான் SEP உடைய ஸ்ரீலங்கா, ஈழ சோசலிச குடியரசிற்கான போராட்டம் ஆகும். தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆகியவற்றின் சமூக, ஜனநாயக பிரச்சினைகள் ஏதும் கடந்த 50 ஆண்டுகளில் சுதந்திரம் என்று கூறப்பட்ட வகையினால் தீர்வு காணப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் 1947ம் ஆண்டு இந்திய பிரிவினையை தொடர்ந்து வந்த காட்டுமிராண்டித்தனமான வகுப்புவாத படுகொலைகள், போர்கள் மற்றும் படுகொலைகள் என்ற வடிவில் தணியாத வகையில் தொடர்கின்றன.

ஆசியா முழுவதுமே, குறிப்பாக இந்தியாவும் சீனாவும், பெரும் சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது; இங்கு சர்வதேச மூலதனம் உள்ளூர் முதலாளிகளுடன் இணைந்து, குறைவூதியத் தொழிலாளரின் முடிவற்ற அளிப்பைச் சுரண்டும் வகையில் ஈடுபட்டுள்ளது. வறுமைக்கு முடிவுகட்டுவதற்கு பதிலாக, இந்தப் பொருளாதார வழிவகைகள் செல்வந்தருக்கும், வறியவருக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தியுள்ளன. இப்பகுதி முழுவதும் உள்ளூர் உயரடுக்கினர் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுடைய பழைய உத்தியான பிரித்தாளும் முறையைத்தான் கையாள்கின்றனர்; தங்களுடைய அதிகாரத்தையும், சலுகைகளையும் தக்கவைத்துக் கொள்ளுவதற்காக வகுப்புவாத அழுத்தங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர்.

Newsweeek இதழில் வந்த சமீபத்தியக் கட்டுரை ஒன்று சமூக நெருக்கடியின் பேரளவை விளக்கமாய் தெரியும்படி காட்டியுள்ளது: "எண்ணிக்கையை பொறுத்தவரையில், உலகின் மிக வறியவர்களில் 10 பேருக்கு 7 பேர் என்ற கணக்கில் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களுக்கு ஆசியா உறைவிடம் ஆகும்; இவர்கள் நாளொன்றுக்கு ஒரு டாலர் அல்லது அதற்குக் குறைவான பணத்தில் வாழவேண்டியுள்ளது. இன்னும் கூடுதலான மக்கள் சமூகப் பொருளாதார ஏணியில் ஒரு படி மேலே நின்று நாளொன்றுக்கு தலா 2 டாலர்கள் என ஊதியம் பெறுகின்றனர். மொத்தத்தில் 1.9 பில்லியன் ஆசியர்கள் உலக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். வேறுவிதமாகக் கூறினால், ஆசியாவின் வறுமை நிறைந்த மக்கள் இப்பொழுது, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்த மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளனர்."

சோசலிச சமத்துவக் கட்சி, வாக்குகள் சேகரிப்பதற்காக என்றில்லாமல் இலங்கை மற்றும் இப்பகுதி முழுவதும் இருக்கும் தொழிலாளர்களிடையே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் தேவை பற்றிய விவாதத்தை ஆரம்பிப்பதற்காகத்தான் பங்கு பெறுகிறது என இலங்கையின் தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒரு சிறிய நாடான இலங்கை போல் இருந்தாலும் அல்லது ஒரு பெரிய நாடான இந்தியா, சீனா போன்று இருந்தாலும், ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் எதுவும் தீர்க்கப்படமுடியாது. உலக மூலதனத்துடன் போரிடுவதற்கு தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த பூகோள மூலோபாயத்தை கட்டாயம் கொள்ள வேண்டும்; அதாவது, சலுகை பெற்ற சிறு குழுவினரின் இலாப நோக்கங்களுக்கு என்றில்லாமல், மனித குலத்தின் பெரும்பாலானோரின் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமூகத்தை சோசலிச வழியில் மறுவடிவமைக்க ஆசிய, சர்வதேச தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

இங்கையில், சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து நனவான முறையில் வாக்களித்தவர்களுக்கும், எங்கும் எங்களுடைய பிரச்சாரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கும் நான் விடும் அழைப்பு இதுதான்: உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் ஆகுங்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வேலைத்திட்டம், முன்னோக்கு பற்றி அக்கறையுடன் படியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இலங்கை, அல்லது இந்தியா அல்லது உலகில் எங்கு இருந்தாலும், எமது சர்வேதச கட்சியின் அணிகளில் இணைந்து போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக போராடத் தொடங்குங்கள்.

See Also:

ஜே.வி.பி யும் இலங்கையில் அரசியல் நெருக்கடியும்

 இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: நவ சமசமாஜ கட்சியும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் முட்டுச் சந்தும்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page