World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

New Delhi bomb blasts a heinous crime

புது டெல்லி குண்டு வெடிப்புகள் ஒரு கொடிய
குற்றமாகும்

By Deepal Jayasekera and Keith Jones
3 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய தலைநகரான புது டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கள் பிற்போக்குத்தனத்தை மட்டுமே வலுப்படுத்தும் கொடிய குற்றம் ஆகும்.

இந்த குண்டுவெடிப்புக்கள் சாதாரண மக்கள் மீது மிக அதிகபட்ச சேதங்களை கட்டாயமாய் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. டெல்லி ரயில் நிலையத்தின் அருகிலிருக்கும் பஹர்கஞ்ச் கடைப்பகுதிகள், தெற்கு டெல்லியில் இருக்கும் சரோஜினி கடைத்தெரு, மொத்த வணிக மையமான கோவிந்தபுரி என்று மூன்று பரபரப்பான கடைகள் நிறைந்த இடங்களை அவை இலக்காக கொண்டிருந்தன; பெரும்பாலான மக்கள் இந்து சமய பண்டிகைகளில் முக்கியமான தீபாவளியை கொண்டாட தயாரிப்பு செய்துகொண்டிருந்தனர்; இவ்வாண்டு இப்பண்டிகை நவம்பர் 1, செவ்வாய் அன்று வந்தது.

இந்த மூன்று குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 62 பேராவது கொல்லப்பட்டனர். நூறுக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். ஒரு டெல்லி நகரசபை பஸ்ஸில் பயணிகள் சந்தேகத்திற்கு உரிய ஒரு பொதியைச் சுட்டிக்காட்ட, பஸ்ஸின் நடத்துனரும், ஓட்டுநரும் எச்சரிக்கையுற்று அதைத் தூக்கியெறிந்த அளவில் அப்பொட்டலம் வெடித்தது; பஸ்ஸுக்குள் வெடித்திருந்தால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகியிருக்கும்.

தீபாவளியை ஒட்டி குண்டுவெடிப்புக்கள் நடத்தப்பட்டது, இந்துக்களுக்கும் நகரத்தின் பெரிதும் வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே மத வகுப்புவாத வன்முறை கலகங்களை தூண்டும் என்ற நம்பிக்கை இதை நிகழ்த்தியவர்களுக்கு இருந்திருக்கலாம் என்பதை தெரியப்படுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிட்டிஷார், இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை துணைக்கண்டத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்ததை அடுத்து, முஸ்லிம்கள் மேலாதிக்கத்தை உடைய ஜம்மு-காஷ்மீரின் இந்து மகாராஜா 1947ல் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்திய டொமினியனுடன் அதனை சேர்த்தார்.

காஷ்மிரில் உள்ள கிளா்ச்சிக் குழுக்களில் ஒன்றுதான் சனிக்கிழமை கொடூர நிகழ்ச்சியை நடத்தியிருக்கக் கூடும் என்பது நிச்சயமாக சாத்தியம்தான். இந்தக் குழுக்களில் சிறந்த ஆயுதம் தாங்கியவர்கள் ஒரு பிற்போக்குத்தனமான இஸ்லாமிய கருத்தியலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் மற்றும் அவர்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சாதாரண குடிமக்கள்மீது வகுப்புவாத பாணி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

ஆனால் இன்றுவரை இந்திய அதிகாரிகள் எந்த காஷ்மீர் கிளர்ச்சிக் குழுவிற்கும் இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்பதற்கு நம்பத்தகுந்த சான்று எதையும் கொடுக்கவில்லை.

இஸ்லாமிய புரட்சி இயக்கம் (Islamic Inquilabi Mahaz -Islamic Revolutionary Movement) என்று செய்தி ஊடகத்தில் குறிப்பிடப்படும் இயக்கம், அதிகம் அறியப்படாத ஒன்றாகும்; அல்லது இதற்கு முன்பு அறியப்பட்டிருக்கவில்லை; இந்த அமைப்பு குண்டுவெடிப்புகளுக்கு தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக ஞாயிறன்று காஷ்மீரில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இஸ்லாமிக் இன்குலாபி மஹஸ்ஸிற்கும், ஒருகாலத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றதும் முன்பு பல முறை டெல்லியில் தாக்குதல்கள் நடத்தி பலரால் அறியப்பெற்றதுமான (இறைவனின் வீரர்கள் எனப்படும்) Laskhkar-e-Toiba என்னும் இயக்கத்திற்கும் இருந்த தொடர்பை இந்திய அதிகாரிகள் விரைவில் தொடர்புபடுத்தினர்.

ஆனால் லஷ்கர்-இ-தொய்பாவின் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை குண்டு வெடிப்புக்களுக்கும் தங்கள் இயக்கத்திற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதியாக மறுத்துவிட்டார். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் "முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை" என்று கூறியதோடு மட்டுமல்லாமல், இக்குழு சாதாரண குடிமக்களை, அதுவும் "குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும்" இலக்காகக் கொள்ளுவதில்லை என்றும் கூறினார்.

இந்திய, பாகிஸ்தானிய சமாதானப் பேச்சு வழிவகைகளுக்கு எதிராக உள்ள இந்திய இராணுவ உளவுத்துறை நடைமுறையோ அல்லது இந்து மேலாதிக்கவாத வலதோ, இந்திய பாகிஸ்தான் அரசாங்கங்கள் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக கொண்டுள்ள நிலப் பரப்பு, புவியியல் சம்பந்தமான தீவிரப்போட்டியை முடித்துக் கொள்ளும் வகையில் ஒரு முழுமையான உடன்பாட்டிற்கு வரரும் முயற்சியை தடம்புரளச்செய்யும் குறிக்கோளுடன் இத்தகைய தூண்டுதலை தரக்கூடிய செயலை செய்திருக்கவும் கூடும்.

டெல்லி குண்டுவீச்சுக்கள் நடைபெற்ற மறுநாள், இந்திய மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அக்டோபர் 8 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கும் முயற்சிகளின் வசதிக்காக நவம்பர் 7 அன்று இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும், 1947-48ல் ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள ஆசாத் காஷ்மீர் எனப்படும் பகுதிக்கும் இடையே எல்லையில் ஐந்து இடங்கள் திறக்கப்படும் என்று உடன்பட்டிருந்தனர்.

ஐ.நா. சர்வதேச நிவாரணஉதவி அமைப்புக்கள் மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கம் காஷ்மீரிலும் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள வட மேற்கு எல்லை மாகாணத்திலும் பல மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்ற எச்சரிக்கையை விடுத்திருந்த போதிலும், இதுகாறும் கிட்டத்தட்ட இரும்புத்திரை போன்ற, இந்தியாவையும் பாகிஸ்தான் கட்டுப்பாடு கொண்டுள்ள காஷ்மீருக்கும் இடையே இருக்கும், கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி இருக்கும் தடைகள் சற்று தளர்த்தப்படுவதற்கு முன்னர் புது டெல்லிக்கும், இஸ்லாமாபாத்திற்கும் இடையே பல வாரங்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

தற்போதைய காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு முன்பு பதவியில் இருந்த கூட்டணியுடைய விடையிறுப்புடன் ஒப்பிடும்போது, குண்டு வெடிப்பிற்கு இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் ஆரம்ப விடையிறுப்பு சற்று நிதானமாகத்தான் இருந்தது. 2001 டிசம்பர் மாதம் இந்திய பாராளுமன்ற வளாகம் தாக்குதலுக்கு உட்பட்டபொழுது பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கிட்டத்தட்ட உடனே பாகிஸ்தான்தான் தாக்குதலுக்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டியதோடு மகத்தான அளவு இராணுவத்தையும் குவிக்க ஆணையிட்டது, அது துணைக்கண்டத்தை போரின் விளிம்பில் நிறுத்தியது.

மன்மோகன் சிங் எதிர்கொண்டவிதம், குறிப்பாக காஷ்மீரில் எல்லை கடந்த உடன்பாட்டிற்கு வகைசெய்யும் விதத்தில் எடுத்த முடிவை செயல்படுத்துவது என்பது இப்பொழுதுள்ள அரசாங்கம் பாகிஸ்தானுடன் உறவுகளை சீரமைக்க வேண்டும் என்பதற்கான ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்திய, பாகிஸ்தானிய முதலாளித்து வர்க்கத்தினரிடையே நலன்களை பெறுவதற்காக ஏமாற்றும் முயற்சிகள் முடிந்து விட்டது என்றோ அவர்களுக்கு இடையே இருக்கும் போட்டி கட்டுப்பாட்டை மீறி போர் வெடிக்கும் தன்மையை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்றோ இது பொருள் தராது.

பாகிஸ்தானின் வலுவான ஜனாதிபதி தளபதி பர்வேஸ் முஷாரஃப், திங்களன்று மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சனிக்கிழமை குண்டு வெடிப்பு நடத்தியவர்களை கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் உதவியளிக்கும் என்று கூறியபோது, மன்மோகன் சிங் அவரைச் சற்றே கடிந்து கொண்டதாக இந்திய அரசாங்க அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

"வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்கள்" தொடர்பு இருப்பதாக "குறிப்புக்கள் உள்ளன", அதாவது காஷ்மீர் கிளர்ச்சிக்கு அயல்நாட்டு உதவி இருக்கிறது என்றும் "பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது" என்றும் இந்தியப் பிரதமர் முஷாரஃப்பிடம் கூறியதாக தெரிகிறது.

இந்து பத்திரிகை குறிப்பு ஒன்றின்படி, முஷாரஃப்பிடம் சிங், "தொடர்ந்த ஆத்திரமூட்டலுக்கு எதிராக முடிவில்லா பொறுமையையும், சகிப்புத்தன்மையையுமே எப்பொழுதும் இந்தியா காட்டிவரும் என எதிர்பார்க்கமுடியாது" என்று கூறியதாக தெரிகிறது.

வேறு வார்த்தைகளில் கூறினால், சனிக்கிழமையன்று நடந்த குண்டுவெடிப்பு இந்திய அரசாங்கத்திற்கு, சாதாரண பாக்கிஸ்தான் குடிமக்கள் மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தங்களுடைய நடவடிக்கைகளுக்கு ஆசாத் காஷ்மீரை தளமாக கொண்டுள்ள பல காஷ்மீர் கிளர்ச்சிக் குழுக்களின் செயல்களை கட்டுப்படுத்த பாக்கிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது.

இத்தகைய அணுகுமுறையின் மூலம் இந்திய அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் வனப்புரையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்துகிறது; அமெரிக்காவின் புவிசார் அரசியல்/உளவுத்துறை நடைமுறை ஏற்கனவே காஷ்மீர் பூசல் இஸ்லாமிய பயங்கரவாதிகளை வளர்க்கும் இடமாக கருதுவதால், வாஷிங்டன் தன்னுடைய நெருக்கமான நண்பர் முஷாரஃப்பை சற்று இறுக்கிப்பிடிக்க இது உதவும் என்றும் இந்திய அரசாங்கம் நினைக்கிறது.

பாகிஸ்தானின் வலிமைக்கும் மேலாக இந்தியாவில் விரைவாக பெருகிவரும் பொருளாதார, இராணுவ முன்னேற்றங்களை உணர்ந்து, புஷ் நிர்வாகம் இந்தியாவை சீனாவிற்கு எதிர்நிலையாக வளர்ப்பதற்கு ஆர்வத்தை கொண்டுள்ளதை அறிந்ததும், இந்திய ஆளும் செல்வந்தத்தட்டு இஸ்லாமாபாத்துடன் எந்த சமாதான உடன்படிக்கை காண்பதிலும் கடின பேரத்தை கொள்ளத்தான் இருப்பதாக கணக்கிட்டுள்ளது. இவ்வகையில் பொதுவில் டெல்லி தெருக்களில் நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை அது கண்டித்தாலும், இந்த குண்டுவெடிப்பு அடாவடித்தனத்தை பயன்படுத்தி தன்னுடைய சொந்த கொள்ளையிடும் நலன்களையும் பெருக்கிக் கொள்ள முற்படுகிறது.

தன்னுடைய பங்கிற்கு பாகிஸ்தானிய அரசாங்கம், மன்மோகன் சிங்கின் கருத்துக்கள் பால் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது; கடந்த சனிக்கிழமை கொடுமைக்கு எந்த வெளிநாட்டு தொடர்பிற்கான சான்றும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்தியாவிற்குள், பல பெருவணிக, வலதுசாரி சக்திகள் இந்தக் குண்டுவெடிப்பை, வகுப்புவாதத்தையும் பாகிஸ்தானிய எதிர்ப்பு இனவெறியையும் வளர்க்கவும், ஜனநாயக உரிமைகள் மீதான கூடுதலான தடைகளை அமல்படுத்தவும் பயன்படுத்திக்கொள்கின்றன.

இந்துக்கள் தலைமை வேண்டும் என்று கூறும் ஙியிறி, அரசாங்கம் "எல்லையில் மிருதுவான கொள்கை" கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டிய உடனடித் தேவையை இக்குண்டு வெடிப்புக்கள் காட்டுகின்றன எனக் கூறியுள்ளது; இது காஷ்மீரில் கட்டுப்பாட்டு கோட்டை தடையின்றி தாண்டிச் செல்லலாம் என்ற உடன்பாடு மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகள் என்பது பற்றிய குறிப்பு ஆகும். ஙியிறி இன் பொதுச் செயலாளர் கிக்ஷீuஸீ யிணீவீtறீமீஹ், நாட்டின் எல்லையில் இராணுவப் படைகள் குறைத்தல் என்பது இந்தியாவின் கிழக்கு, மேற்கு எல்லைகளில் சட்டவிரோதமாக பலர் வருவதற்கு வசதியளித்துள்ளது என்று கூறியுள்ளார்; இதனால் "இந்தியா எளிதான இலக்காகவும், மென்மையான நாடாகவும் போய்விட்டது" என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஹிறிகி, ஙியிறி தலைமையில் இருந்த அரசாங்கத்தின் கடுமையான பொடா (Prevention of Terrorism Act- POTA) சட்டத்தை கைவிட்டதற்காகவும் அதைக் கண்டித்தார்.

"இந்தியப் பாதுகாப்பு" என்ற தலையங்கத்தில் நாட்டின் செல்வாக்கு மிகுந்த நாளேடுகளில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ், இதேபோல் இந்தியா ஒரு "மென்மையான நாடு" என்ற கருத்தை அரசாங்கம் அகற்றவேண்டும் என்று கோரியுள்ளது. ஹிறிகி அரசாங்கம், பிரிட்டனின் டொனி பிளேயரின் அரசாங்க செயல்களை பின்பற்ற வேண்டும் என்று இது வலியுறுத்துகிறது; "தேசிய பாதுகாப்பிற்கு, அரசியல், சமூகம், சட்டம் என்று எவ்விதத்திலும் சமரசப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இருக்காது; நாட்டிற்குள் அனுமதிப்பது, குடிமையுரிமை, குற்றம் சாட்டப்படுதல் இவற்றில் தாராளச் சட்டங்கள் கைவிடப்படவேண்டும் என்றால் அத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" என்று கடந்த கோடையில் அவ்வரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்துஸ்தான் டைம்ஸ் என்னும் ஏடு போலீஸ் கண்காணிப்பு மற்றும் மக்கள் அன்றாடச் செயல்களுக்கு செல்லும்போது சோதனை நடத்துதல் ஆகியவை தீவிரப் படுத்தப்படவேண்டும் என்று கோரியுள்ளது. "ஓர் உலக சக்தியாக வரவேண்டும் என்று நாடு விழையும்போது, உலகத்தர போலீஸ் படை வேண்டும் என்று எவரும் கோரவில்லை... ஏன் சிறந்த முறையில் குறைந்தது டெல்லியின் சில பகுதிகளிலாவது போலீஸ் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்பது புரியவில்லை; குண்டுவெடிப்பிற்கு அடுத்த நாளான ஞாயிறன்றுதான் போலீஸ் அத்தகைய கடுமையை காட்டியது. கடைக்காரர்கள் அத்துமீறிய இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என்ற உத்தரவை நிறைவேற்றியும், வாகனங்களை அவர்கள் சோதித்ததும் அருகில் இருந்த மக்கள் சிலரின் முந்தைய செயற்பாடுகள் பற்றி விசாரணை நடத்தியதும், இதில் அடங்கும்."

Top of page