World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament snubs Left Party's chairman for fourth time

ஜேர்மன் பாராளுமன்றம் நான்காவது தடவையாக இடது கட்சி தலைவரை இழிவுபடுத்தியது

By Ulrich Rippert
16 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் பாராளுமன்றத்தின் ஜனநாயக விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகின்ற ஒரு செயலாக பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் பதவிகளுக்கான 6 வேட்பாளர்களில் புதிய இடது கட்சி /ஜனநாயக சோசலிச கட்சி (PDS) கூட்டணி வேட்பாளர் லோத்தா பிஸ்கியை புறக்கணித்துவிட்டது. இது தொடர்ந்து நான்காவது தடவையாக பிஸ்கி அந்த பதவிக்கு போட்டியிட்டு வேண்டுமென்றே இழிவுப்படுத்தப்பட்டுள்ளார்.

பிஸ்கியின் கட்சி சமூக ஜனநாயக கட்சியின் (SPD) முன்னாள் உறுப்பினர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் கிழக்கு ஜேர்மன் ஆளும் ஸ்ராலினிச கட்சியான ஜேர்மன் ஐக்கிய சோசலிச கட்சியிலிருந்து (SED) உருவான ஜனநாயக சோசலிச கட்சி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட ஒரு கூட்ணியின் விளைவாக தோன்றியதாகும்.

ஒரு மாதத்திற்கு முன்னர் பிஸ்கி மூன்று முறைகளுக்கு குறைவில்லாத வகையில் இந்தப் பதவிக்கு போட்டியிட்டு பெரும்பாலான பிரதிநிதிகளின் வாக்குகளை வென்றெடுக்கத் தவறிவிட்டார். அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முன்னணி தலைவர்கள் ''சிந்திப்பதற்கு சற்று காலம் கொடுக்கலாம்'' என்று உடன்பட்டனர். அதன்மூலம் பிஸ்கி அவரது சொந்த வரலாறு குறித்து எல்லா பிரிவினருடனும் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு வழி செய்யப்பட்டது.

ஸ்டாசி (Stasi) என்கிற கிழக்கு ஜேர்மனி ஸ்ராலினிச ஆட்சியின் இரகசிய போலீசோடு அவர் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட எல்லா பிரச்சனைகளிலும் அவர் முழு விவரங்களை தர முன்வந்து தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று கூறினார். கிழக்கு ஜேர்மன் பாதுகாப்புப் படைகளுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் பாபல்ஸ்பேர்க் திரைப்படக் கழகத்தின் முதல்வர் என்ற முறையில் ஏற்பட்ட வரையறுக்கப்பட்ட தொழில் சார்ந்த நிலை என்று வலியுறுத்தினர். எப்போதுமே தான் ஒரு "சம்பிரதாயமற்ற செயற்பாட்டாளராக" ஸ்டாசிக்கு தான் பணியாற்றியதில்லை என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

எனவே பிரதிநிதிகள் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் ஒரு செயலாக பதவி விலகும் நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில், நவம்பர் 8-ந்தேதி கூட்டத்தில் அவருக்கு எதிராக அளித்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பதிவு செய்தனர். சென்ற வாரம் 310 நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இல்லை'' என்று வாக்களித்தனர். இதை ஒப்பு நோக்கும் போது இதற்கு முன்னர் 258 பேர் தான் அவரது வேட்பு மனுவை புறக்கணித்தனர்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தின் நிலையாணைகள் ஒவ்வொரு பாராளுமன்ற கன்னையும் ஒரு துணைத் தலைவர் பதவியை நிரப்புவதற்கு உரிமை படைத்தது என்று திட்டவட்டமாக அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு கட்சிக் கன்னையும் தனது சொந்த வேட்பாளரை நியமிக்க முடியும். ஜேர்மன் குடியரசின் வரலாறு முழுவதிலும் இந்த உரிமை எப்போதும் ஐயத்திற்கு இடமின்றியும் வழங்கி வந்திருக்கிறது. இதற்கு முன்னர் எப்போதுமே பதவிக்கான ஒரு வேட்பாளர் அவற்றிற்கு ஆதரவு வழங்குவது பெருபான்மை பிரதிநிதிகளால் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இடதுசாரி கட்சி மீது புதிய நாடாளுமன்றம் வெளிப்படையாக விரோதப் போக்கைக்காட்டுவது அக்கட்சியின் தலைவர் பிஸ்கியை இலக்காக் கொண்டுதான். பிஸ்கியின் முதலாவது தோல்வியைத் தொடர்ந்து தேசிய ZDF தொலைக்காட்சி அலைவரிசை வெளியிட்ட ஒரு செய்தியில் பிஸ்கி பேர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த பின்னர் மற்றும் எல்பி (Elbe) ஆற்றிற்கு கிழக்குப் பக்கத்தில் மட்டுமல்லமால் அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக "அரசியல் ஸ்தாபனத்தின் நீண்டகால அங்கமாகவும் செயல்பட்டு" வந்திருக்கிறார்.

பிரதான பழைமைவாதக் கட்சிகளுக்கு சாதகமான போக்குடன் ZDF தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அது பிஸ்கியை பாராட்டியுள்ளது. அது கூறியிருந்தது: ``சிலருக்கு அதை ஏற்றுக் கொண்டு ஜீரணிப்பது சங்கடமாக இருந்தாலும் பிஸ்கி போன்ற மக்கள் தான் சரியாக முன்னணி தலைவர்களையும் அவர்களது அனுதாபிகளையும் முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜேர்மன் அரசிலிருந்து மேற்கு ஜேர்மன் ஜனநாயக அரசில் இணைப்பதில் வெற்றி பெற்றனர், அதன் மூலம் முன்கணித்துக்கூற இயலாத அதி தீவிர இடது சாரி குழுக்கள் புதிய ஜேர்மனியில் வளராது தடுத்தார்.``

அப்பட்டமான உண்மை! இது 1989-1990-ல் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக மாற்றங்களிலும் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த 15 ஆண்டுகளிலும் ஜனநாயக சோசலிச கட்சி முதலாளித்துவ உறவுகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதில் ஒரு பிரதான பங்களிப்பு செய்திருக்கிறது. இந்த பங்களிப்பை அது முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் தொடக்கியது, அதன் மூலம் பரவலான வேலையில்லாத நிலையும் சமூக நலன்களின் இரத்தும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி போக்கிற்கான எதிர்ப்பை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றது மற்றும் அந்த எதிர்ப்புக்களை பிரியோசனமற்ற கண்டன வழிகளில் திருப்பி விட்டது. அந்த நேரத்தில் PDS தலைவராக இருந்த கிரிகோர் கீசி 1990-ல் பொதுக்கட்சி பிரதிநிதிகளுக்கு நீண்ட உரையாற்றி பொதுக் கொள்கைகளை விளக்கினார். ``நாம் திறமைக்கு பரிசு அளிக்கின்ற பொருளாதார முயற்சியை வளர்க்கின்ற சந்தை பொருளாதாரத்தை ஆதரித்து நிற்கிறோம்``.

2003 அக்டோபரில், பிஸ்கி கட்சி மாநாட்டில் ஒரு கொள்கை அறிக்கையை வழங்கினார் அதில் ZDF தொலைக்காட்சி குறிப்பிட்டிருப்பதைப் போல் ``வர்த்தக நிர்வாகத்திற்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்படுவதை அந்த அறிக்கை பாராட்டுகிறது மற்றும் உலக அமைதிக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு இராணுவப்படையை அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிற்கு உரிமை உண்டு என்று அந்த அறிக்கை மேலும் ஒப்புக் கொள்கிறது.`` அவரது நிலைப்பாட்டிற்காக "கம்யூனிச அரங்கு" என்றழைக்கப்படும் அவரது கட்சிக் கன்னையால் பிஸ்கி தாக்குதலுக்குள்ளாகினார், ஆனால் அவர் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு ஓராண்டு கூட முடிந்திருக்காத நிலையில் கட்சியின் எல்லாக் கன்னைகளும் "எந்த விதமான அதிருப்தி அடையாளமும் இல்லாத நிலையில் அவர் பாராளுமன்ற துணைத் தலைவர் பதவிக்கு பிராண்டன்பேக் மாநில நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மத்திய பாராளுமன்றம் பிஸ்கியை விரோதமான நிலையில் தள்ளுபடி செய்ததற்கு காரணம் என்ன?

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்ற நேரத்தில் இது தற்செயலாக நடைபெற்றதாக இருக்கக் கூடும் என்ற சமயத்தில் பாரிசிலுள்ள அரசாங்கம் தேசிய நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் ஒரு அவசரகாலநிலை பிரகடனத்தை வெளியிட்டது. அதன் மூலம் பிரான்ஸ் தலை நகரத்து புறநகர்களில் இளைஞர்கள் நடத்தி வருகின்ற கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு சுதந்திரமான அதிகாரம் வழங்கப்பட்டது. எப்படியிருந்தபோதும் இந்த சம்பவங்களுக்கிடையே ஒரு தொடர்பு இருக்கிறது.

ஒரு காலத்தில் ரைன் ஆற்றிற்கு இரு தரப்பிலும் உள்ள ஆளும் செல்வந்தத் தட்டுக்களை சேர்ந்தவர்கள் சமூக பதட்டங்களையும், மோதல்களையும் சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலம் தீர்த்து வைத்தது உண்டு. ஆனால் தற்போது அவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு பதிலைத்தான் தருகின்றனர்: அது அரசு கட்டுப்பாட்டையும் ஒடுக்கு முறையையும் பயன்படுத்துவது.

தற்போது பதவியிலிருந்து நீங்கவிருக்கின்ற பொருளாதார மற்றும் தொழில் அமைச்சர் வொல்வ்கங் கிளேமண்ட் (SPD) அண்மையில் வேலையில்லாதிருப்பவர்களையும், மிக கடுமையாக குறைக்கப்பட் ஹார்ட்ஸ் IV சமூக சலுகைகளையும் ஜேர்மனியில் பெற்றுக் கொண்டு வருபவர்களை அவதூறு செய்கின்ற முறையில் கூறிய வார்த்தைகளை போன்று பிரான்ஸ் கோலிஸ்ட் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி வாய்மொழியாக தாக்குதல்களை தொடுத்திருக்கிறார். பிரான்சின் புறநகர் சேரிப்பகுதிகளில் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்ற இளைஞர்களை "ஒழுங்கற்றவர்கள்" என்றும் "இழிவானவர்கள்'' என்றும் அவர்களை உயர் அழுத்த ஹோஸ் பைப்புகளின் உதவியோடு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வர்ணித்திருக்கிறார்.

வேலையில்லாதிருப்பவர்களை, வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது போன்ற திட்டங்களுடன் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வதற்கு தற்போது வேலையில்லாதவர்கள் பகிரங்கமாக பயமுறுத்தப்படுகின்றனர். "ஒரு யூரோ வேலை'' உட்பட எந்த வகையான குறைந்த ஊதிய பணியிலும் சேர வேண்டும் என வெளிப்படையாக பயமுறுத்தவும், கட்டாயப்படுத்தவும் படுகின்றனர். அதே நேரத்தில் வேலையில்லாதிருக்கும் பட்டாளம் போன்ற மிகப் பெரும்பாலோரும் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களும் தேசியரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் நிலைமைகளை இரத்துச் செய்வதற்கு கட்டாயப்படுத்தும் நெம்புகோலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மகாத்தான கூட்டணி ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்ததும் ஹார்ட்ஸ் IV பெறுபவர்களுக்கு அதிகாரம் வழங்கும் செலவீனங்கள் 4 பில்லியன் யுரோக்களை சிக்கனப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது சமூகரீதியாக சலுகைகள் இழக்கப்பட்ட அனைவர் மீதும் விழுந்த ஒரு அடியாகும் மற்றும் நலன்புரி வெட்டுகளுக்கு எதிராக பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள ஓர் போர் பிரகடனமுமாகும்.

இடது கட்சி/PDS எங்கெல்லாம் ஆட்சியிலிருந்ததோ அங்கெல்லாம் பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகளை ஆதரித்து மற்றும் செயல்படுத்தியது. என்றாலும் அது "சமூக நீதி" பற்றி பேசியதாலும் அண்மையில் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஹார்ட்ஸ் IV இரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாலும் அது புறக்கணிக்கப்படுகிறது மற்றும் மத்திய பாராளுமன்றத்திலும் தண்டிக்கப்பட்டிருக்கிறது.

PDS சில நேரங்களில் "விமர்சனரீதியாக'' கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவ உறவுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதை வரவேற்றது மற்றும் ஆதரித்து, அதன் மூலம் மிகவும் வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு வலுவூட்டியது. இந்த செயல்களுக்காக PDS இப்போது சொற்களால் பாராட்டப்படுவதில்லை ஆனால் எட்டி உதைக்கப்படுகிறது.

கீசி இடது கட்சி /PDS நாடாளுமன்ற குழுத் தலைவர் தனது நண்பர் பிஸ்கியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததை ஆவேசமாக கண்டித்திருக்கிறார். பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளின் கடந்த கால நாசி தொடர்புகளில் கவனத்தை ஈர்த்துள்ள அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார். ``லோத்தா பிஸ்கியின் வாழ்க்கை வரலாற்றிலும் குறைகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்``.

முதலாவது குறை பிஸ்கி தமது இளமை காலத்தில் ஹிட்லரின் மையின் கேம்பை (எனது போராட்டம்) படித்ததில்லை மற்றும் "அதை பற்றி உற்சாகம்" கொள்ளவில்லை. இரண்டாவது குறை அவர் எப்போதும் ஹிட்லரின் தேசிய சோசலிச (நாசி) கட்சியில் சேர்ந்ததில்லை. மூன்றாவதாக (Goebbels's) கோயபெல்சின் பிரசார அமைச்சகத்தில் அவர் எப்போதுமே பணியில் அமர்த்தப்படவில்லை. முன்னாள் அதிபர் Kurt-Georg Kiesinger (CDU) போன்று இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருப்பாரானால் கீசி குறிப்பிட்டிருப்பதை போல் CDU-வும் அதன் சகோதர கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் (CSU) அவர்களது நட்புக் கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சியுடன் (FDP) இணைந்து பாராட்டியிருப்பார்கள் மற்றும் இந்த மனிதர் ஒரு நாள் அதிபராக ஆகக் கூடும் என்றும் கூறியிருப்பார்கள்.

கீசியின் இந்த கூற்றுகள் ஒரு புயல் போன்றதொரு சீற்றத்தை கிளப்பியுள்ளது. FDP நாடாளுமன்ற தலைவரான வொல்வ்கங் ஹேகார்ட், கீசி நாடாளுமன்ற நண்பர்களை ``பாரியளவிற்கு அவதூறு செய்திருக்கிறார்`` என்று விமர்சித்தார். பாராளுமன்றத்தின் துணைத் தலைவரான SPD-யை சேர்ந்த சுசான காஸ்டனர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது கட்சி நண்பரான ஸ்டீபன் ஹில்ஸ்பர்க் கீசியின் கருத்துக்கள் "ஆணவ மற்றும் முட்டாள்தனமானவை" என்று கூறியுள்ளார், மற்றும் இடதுசாரி கட்சியிலிருந்த அனைத்து பிரதிநிதிகளும் ஸ்டாசி பின்னணிக்கான சாத்தியக் கூறுகள் உள்ளவர்களா என்று ஒரு புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

பசுமைக் கட்சிக்காரர்களின் நாடாளுமன்ற குழுத்தலைவர் குளோடியா ரோத், பிஸ்கிக்கு தங்களது வாக்குகளை தர மறுத்துவிட்டார்கள் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாசிகளோடு இணைப்பது "தெளிவான ஆத்திரமூட்டலாகும்" என்று கூறியிருக்கிறார். அவரும் கீசி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ரோத்தும், பசுமைக் கட்சிக்காரர்களும் கொண்டிருக்கின்ற தனி இயல்பு என்னவென்றால் ஆத்திரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தங்களது ஐக்கியத்தை வெளிப்படுத்துகின்றனர். மற்றும் ஜேர்மன் அரசு எந்திரத்தில் உள்ள நாசி பாரம்பரியத்தின் மீது மூச்சு விடாத முக மூடியைப் போட முயலுகின்றனர். அவர்கள் நிச்சயமாக என்ன ஆபத்து இதில் உள்ளது என்பதை அறிவார்கள்.

போருக்குப் பிந்தைய ஜேர்மன் சமுதாயத்தில் நாசிகளின் தொடர்புகள் பற்றிய பிரச்சனை 1968-ல் நடைபெற்ற கண்டன இயக்கங்களில் முழுமையாக துருவி ஆராயப்பட்டது. அதிலிருந்துதான் பசுமைக் கட்சிக்காரர்கள் எழுந்தார்கள். என்றாலும் தற்போது அதே பிரச்சனை ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வர்க்கத்தன்மையை மிக அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது, பொதுவாக முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கிடையில் ஐக்கியம் சீர்குலைக்கப்படுவதுடன் மிகவும் குறிப்பாக எதிர்காலத்தில் பசுமைக்கட்சி - பழமைவாதிகள் கூட்டணி உருவாவதற்கான சாத்தியக் கூறு பற்றிய பேச்சுவார்த்தைகளை CDU/CSU வுடன் நடத்துவதாக அமைந்திருக்கிறது.

1998 முதல் 2005 வரை ஏழு ஆண்டுகள் பசுமை கட்சித் தலைவர் ஜோஸ்கா பிஷ்ஷர் ஜேர்மனியின் வெளியுறவு அலுவலகத்திற்கு தலைமை வகித்தார், அது 1945 ற்கு பின்னர் அமைக்கப்பட்டு, பெரும்பாலும் வேறு எந்த அரசாங்க அமைச்சகத்தையும் விட முன்னாள் நாசிகளால் நடத்தப்பட்டு வந்தது. நாசிகளின் கடந்த கால தொடர்புகள் 1970-கள் வரை நீடித்தன.

பிஷ்ஷருக்கு முந்தைய வெளியுறவு அமைச்சர்கள் பதவியிலிருந்த - ஹான்ஸ் டீட்ரிக் கென்சர் மற்றும் வால்ட்டர் ஸ்கீல் போன்றவர்கள் பின்னர் ஸ்கீல் மத்திய ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்றார் - அப்படிப்பட்டவர்கள் ஹிட்லரின் தேசிய சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அண்மையில் பிஷ்ஷர் ஒரு கட்டளையை பிறப்பித்தார் அதில் வெளியுறவு அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் தூதர்களில் நாசி பாரம்பரியத்தை கொண்டவர்கள் அலுவலகத்தை விட்டு விலகும்போது அல்லது ஒய்வு பெறும்போது அதிகராபூர்வமாக அவர்களுக்கு பாராட்டுக்களை பெறுகின்ற உரிமையில்லை என்று கட்டளையிட்ார். இதற்கு முன்னணி ஜேர்மன் தூதர்கள் ஆத்திரமாக எதிர்ப்பு தெரிவித்தனர், அதன் விளைவாக அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

மேற்கு ஜேர்மன் போருக்கு முந்திய நாசி பின்னணியைக் கொண்ட அரசியல்வாதிகளின் பட்டியல் பல தொகுதிகளை கொண்டது. அவற்றில் பிரபல்யமான சிலரது விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

லூட்விக் எர்ஹார்ட் (CDU) 1963 அக்டோபரில் கோன்றாட் ஆடநோவரிடம் (CDU) இருந்து அதிபர் பதவியை பெற்றவர், தான் நாசிக்கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்தாக கூறப்பட்டதை மறுத்தார், ஆனால் உண்மையிலேயே பல ஆண்டுகள் நாசிக் கட்சியைச் சேர்ந்த ஜோசப் பூர்கலுக்கு, சார் மாநிலத்தில் ஒரு ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் Gerhard Schröder (போருக்கு பின்னர் CDU நிறுவன உறுப்பினர் - இப்போது பதவிவிலகும் SPD அதிபரோடு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்) நாசிக் கட்சியின் ஒரு உறுப்பினராகவும் 1941-ல் ராஜினாமா செய்யும் வரை 1933 லிருந்து SA அதிரடித்துருப்புக்களில் ஒரு உறுப்பினராகவும் இருந்தவர்.

மத்திய உள்துறை அமைச்சர் ஹெர்மன் ஹோச்சல் (CSU) 1931ல் நாசிக்கட்சியில் சேர்ந்தார். மற்றும் 1933 முதல் 1945 வரை ரீகன்ஸ்பேர்க்கில் ஒரு வக்கீலாக பணியாற்றி வந்தார்.

மத்திய நிதியமைச்சர் ரொல்வ் டால்குரூன் (FDP) 1933-ல் நாசிக் கட்சியில் சேர்ந்தார் மற்றும் அவரது போர்கால சேவைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

நாடு கடத்தப்பட்டவர்களுக்கான அமைச்சர் ஹான்ஸ் குரூகர் (CDU) 1923 முதல் ஹிட்லரின் ஒரு ஆதரவாளர் மற்றும் 1933-ல் நாசிக்கட்சியில் சேர்ந்தார். 1961-ல் அவரது நாசித் தொடர்புகள் அம்பலத்திற்கு வந்த நேரத்தில அவர் போலந்து ஆக்கிரமிக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்த துருப்புக்களுக்கு தலைமை வகித்துச் சென்றவர் மற்றும் போர் குற்றங்களை புரிந்தவர் என்பது அம்பலத்திற்கு வந்ததும் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆனால் CDU வின் பாராளுமன்றக் கன்னையின் உறுப்பினர் பதவியில் நீடித்தார்.

சீக்பிரட் சோக்ல்மன் 1957-ல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரானார் பின்னர் FDP கன்னையில் ஒரு துணைத் தவைராகினார். அவர் 1934-ல் தேசிய சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தார் பின்னர் 1939 ல் "protectorate of Bohemia, Moravia" வில் ஹிட்லரின் இளைஞர் அணியிலும் தலைவராக சேர்ந்தார். பிராகில் (Prague) அவர் நாசித்தலமைக்கு தலைவரானார், மேலும் 1942 முதல் இழிபுகழ் மிக்க இராணுவ வன்முறைப் படையான SS சிலும் ஹிட்லரின் தனி மெய்க்காவலர் குழுவிலும் ஒரு தொண்டராக பணியாற்றினார்.

FDP-ன் பாராளுமன்ற குழு நிர்வாகி என்ற முறையில் சோக்ல்மன் மத்திய பாராளுமன்றத்தில் முன்னாள் SS உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான சட்டத்தை முன்மொழிவு செய்தார். மற்றும் 1970-ல் SPD-க்கும் வில்லிபிராண்ட் தலைமையிலான FDP-க்கும் இடையில் ஒரு கூட்டணி உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வலதுசாரி முன்னணி பிரமுகர் அவர், பின்னர் "ஜேர்மன் ஒன்றியம்" என்ற அதிதீவிர வலதுசாரிக் குழுவை நிறுவினார். 1973-ல் மத்திய குடியரசில் மிக உயர்ந்த மெரிட் (Merit) விருதை பெற்றார்.

(பேர்ன்ட் ஏஞ்சல்மன் எழுதிய, 1991-ல் பொன்னில் வெளியிடப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட தகவல் இது)

Top of page