World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands arbitrarily deprived of vote in Sri Lankan presidential election

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருதலைப்பட்சமாக வாக்குகளை இழந்தனர்

By W.A. Sunil
25 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 17ம் தேதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை, வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நேரடியாக புறக்கணிப்பு என்று சொல்லாமால் புகுத்திய புறக்கணிப்பை தவிர, மற்ற இடங்களில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் "சுதந்திரமான, நியாயமான" தேர்தல் என்று பாராட்டியுள்ளன. ஆனால் பல்வேறு தகவல்கள் தீவின் ஏனைய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறுவது, தேர்தல் முடிவை பாதிக்கும் திறனுடையவை ஆகும்.

இலங்கையின் செய்தி ஊடகத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. UNP இன் துணைப் பொதுச் செயலாளர் Tissa Attanayake, Island ஏட்டிற்கு நவம்பர் 19 அன்று தெரிவித்ததாவது: "வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அப்பாலும் பல தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே பட்டியிலில் இருந்து ஜனாதிபதி தேர்தலையொட்டி நீக்கப்பட்டுள்ளன; அவர்கள் தங்களுடைய அடிப்படை உரிமையாகிய வாக்களிக்கும் உரிமையை செலுத்த முடியவில்லை." தேர்தலில் தோற்றுப்போன UNP, LTTE புறக்கணிப்பினால் கணிசமான வாக்காளர் வருகை குறைந்த இடங்களிலும் மறு எண்ணிக்கை தேவை என்று கூறியுள்ளது.

திராட்சைப்பழங்கள் புளிக்கும் என்று கூறுதலுக்கு ஒப்பாக UNP இன் கருத்துக்களை கூறலாம்; ஆனால், மற்றய சான்றுகள் மிகப் பெரிய அளவில் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்ததைத்தான் சுட்டிக்காட்டியுள்ளன. "வாக்குரிமை ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டது" என்ற தலைப்பில் கடந்த வார இறுதியில் Sunday Times, கம்பஹா, காலி, புத்தளம், கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி ஆகிய இடங்களில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்த பின் தங்களுடைய பெயர்கள் பட்டியலில் இடம் பெறாததைக் கண்டனர் எனத் தகவல் கொடுத்துள்ளது. சில இடங்களில், வாக்காளர்கள் குறிப்பிட்ட காலத்தில் பெயரை பதிவு செய்திருந்த போதிலும்கூட தங்களுடைய தேர்தல் அட்டையை பெற்றிராததால், தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முற்பட்டபோது, வாக்களிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். 1959ல் இருந்து ஒரே விலாசத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த ஒரு பெண்மணியின் பெயர் ஒருதலைப் பட்சமாக நீக்கப்பட்டிருந்ததையும் இந்த ஏட்டின் தகவல் கூறுகின்றது.

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களிடம் பேசிய உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல தனிப்பட்டவர்களின் நிலைமையையும் நன்கு அறிந்தனர். சோசலிச சமத்துவக் கட்சி இன் ஆதரவாளர்கள் இருவர் ஒரே பகுதியில் தொடர்ந்து வசித்து, வாக்களித்தவர்கள், தங்களுடைய பெயர்கள் பட்டியலில் இல்லாததைக் கண்டு, பல நாட்கள் முயற்சியில் ஏன் அவ்வாறாயிற்று எனக் கண்டுபிடித்து, நிலைமையைச் சீரமைக்கும் முயற்சியில் வெற்றி பெறாமல் தோல்வியுற்றனர். கண்டியில் Deiyannewela Rajasinghe College அருகில் இருந்த வாக்குச் சாவடி ஒன்றில் ஒரு வயதான பெண்மணி WSWS இடம் தன் வாழ்நாள் முழுவதும் அங்குதான் வாக்களித்ததாகவும், இப்பொழுது வாக்குரிமை இல்லாமற் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

கொழும்பிற்கு வடக்கே உள்ள மாத்தறையில் உள்ள சித்தி என்னும் ஒரு முஸ்லிம் பெண்மணி WSWS இடம்: "என்னுடைய கணவர் மற்றும் என்னுடைய பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்தோம். 1980 களில் இருந்து நான் வாக்களித்து வருகிறேன். கடந்த பொதுத் தேர்தலின்போது (ஏப்ரல் 2004), நானும் என் கணவரும் வாக்களித்தோம். இம்முறை நாங்கள் எங்கள் மகனின் பெயரையும் பட்டியலில் பதிவிற்குச் சேர்த்திருந்தோம். ஆளும் கட்சிக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற சந்தேகத்தின் பேரில் வேண்டுமென்றே எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன என்று நான் நினைக்கிறேன்." எனக் கூறியனார்.

தேர்தல்களை கண்காணிக்கும் குழுவான People's Action for Free and Fair Election (PAFFREL) ல் உள்ள Kingsley Rodrigo வுடன் WSWS தொடர்பு கொண்டது. தன்னுடைய அமைப்பு கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 5,000 வாக்காளர்கள் பற்றிய 200 புகார்களை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) இன் கொழும்பு நகரசபை உறுப்பினரான கே. செல்லச்சாமி கொழும்பு வடக்கு மற்றும் மத்திய வாக்கு சாவடிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 20,000 வாக்களர்கள் இதேபோன்ற பிரச்சினையைத்தான் சந்தித்துள்ளதாக கூறினார். வாக்குகள் நீக்கப்பட்டது வேண்டுமென்றே இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகப்படுகிறார். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் இந்த இரண்டு பிரிவுகளிலும் 40 முதல் 60 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று செல்லச்சாமி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர் தயானந்தா திசநாயகவை திங்களன்று தொடர்பு கொள்ள WSWS முயற்சி எடுத்தது. ஆணையரின் சார்பாக பேசிய அவருடைய உதவியாளர்களில் ஒருவர் இந்தத் தகவல்களை மறுத்துப் பேசுகையில் அந்த அலுவலகம் இரண்டு அல்லது மூன்று புகார்களைத்தான் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிடப்படும் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று வாக்காளர்களின் மீது குற்றம் சுமத்தினார். "அவர்கள் சரிபார்க்கவில்லை என்றால், அது அவர்களுடைய பிழை." என்று அவர் கூறினார்.

எத்தனை வாக்காளர்கள் வாக்குகளை இழந்தனர் என்பதை உறுதிப்படுத்தலும், அது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் விளைவா என்பதை உறுதிப்படுத்தலும் இயலாததாகும். ஆனால் தேர்தல் ஆணையரின் அலுவலகம் எந்த அளவு வாக்காளர்கள் உரிமையை இழந்தனர் என்பதை உறுதிப்படுத்த மறுப்பது அல்லது இதைப் பற்றி விசாரணை செய்வதற்கு தயக்கம் காட்டுவது வெளிப்படையான அக்கறைகளைத்தான் காட்டுகிறது. முந்தைய தேர்தல்களில், வாக்காளர்களை மிரட்டும் வகையில் வன்முறை பயன்படுத்தப்படுதல், வாக்குகளை பெட்டியில் திணித்தல், மற்றய தேர்தல் மோசடிகள் நடந்துள்ளன. ஆனால் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குதல் என்பதற்கு அரசாங்க அதிகாரிகளுடைய தொடர்பு தேவைப்பட்டிருந்திருக்க வேண்டும்.

தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்றும் சில கருத்துக் கணிப்புக்கள் UNP வேட்பாளரான ரனில் விக்கிரமசிங்க, SLFP இன் மகிந்தா இராஜபக்சவை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அடைவார் என்றும் கூறியிருந்தன. இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரத்துவத்தினர் உட்பட, ஆளும்வர்க்க உயரடுக்குகள் LTTE யிடம் கொள்ளவேண்டிய நிலைப்பாடு பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தன. சிங்கள பேரினவாதிகளான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உடன் கூட்டு வைத்துக்கொண்ட ராஜபக்ச நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லும் ஒரு தீவிரக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகள் ராஜபக்சவுக்கு ஆதரவை கொடுக்கும் வகையில் இருந்தன. தேர்தலுக்கு முன்பு LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளுக்குள் வாக்குச் சாவடிகள் நிறுவுதலை எதிர்த்த நிலைப்பாட்டை அது கொண்டது; மேலும் வடக்கு, கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையையும் ஜனநாயக விரோத முறையில் குறைத்தது. LTTE புறக்கணிப்பை மீறி, இந்த போர் சேதமுற்ற பகுதிகளில் மக்கள் வாக்களித்திருந்த சாவடிகள் எல்லாவற்றிலும் விளைவு ராஜபக்சவுக்கு எதிராகத்தான் இருந்தது.

இறுதியில் ராஜபக்ச 50.29 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில்தான் -அரசியலமைப்பின்படி தேவைப்படும் 50 சதவிகிதத்திற்கு மேல் 28,632 வாக்குகளில்தான்- வெற்றி பெற்றார். 50 சதவிகிதத்தை பெற அவர் தவறியிருந்தால், தேர்தல் விளைவுகள் இன்னும் சிக்கலாக போயிருக்கும். இலங்கை தேர்தல் முறைப்படி, இரண்டாம் வாக்குப் பதிவிற்கு இடமில்லை. மற்றைய கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்ப வாக்குகள் கணக்கில் எடுத்து எண்ணப்பட்டிருக்கும், UNP வெற்றிபெறுவதற்கான சாத்தியத்தைத் திறந்திருக்கும்.

அரசாங்க ஆதரவு அதிகாரிகள், ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்துவத்றகான வெறிபிடித்த நிலையில், ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பதிவை நீக்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. முறைகேடுகள் அதிகம் இருந்த பகுதிகள் பெரும்பாலானவற்றில் முந்தைய தேர்தல்களில் UNP க்கான ஆதரவு வாக்குகள்தான் அதிகம் இருந்திருந்தன.

Top of page