World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese leadership plans to honour ousted party "reformer"

வெளியேற்றப்பட்ட கட்சியின் ''சீர்திருத்தவாதியை'' கெளரவிக்க சீனத்தலைமை திட்டம்

By John Chan
26 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 20 அன்று முன்னாள் கட்சி செயலாளர் ஹூ யாஓபாங் (Hu Yaobang) இன் 90வது பிறந்த தின நிறைவு விழாவை அதிகாரபூர்வமாக குறிக்கும் ஒரு திட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மத்திய குழுவின் பொது அலுவலகம் சென்ற மாதம் அறிவித்தது.

ஹூ கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக அரசியலில் முக்கியத்துவம் பெறாமல் திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கையில் இந்த அறிவித்தல் குறிப்பிடத்தக்கதாகும். 1989, ஜூன் 4ல் தினென்மென் சதுக்கத்தில் மாணவர்களும் தொழிலாளர்களும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பெய்ஜிங்கிலுள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொடர்ந்து எதிர்நோக்கும் அரசியல் சிக்கலோடு தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் கட்சித் தலைவர் தற்போது கண்ணியம் மிக்க தலைவராக ஹூ உண்மையில் மதிப்பளிக்கப்பட்டு வருகிறார்.

ஹூ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1981 முதல் 1987 வரை பணியாற்றி வந்தார் மற்றும் வரம்பிற்குட்பட்ட அரசியல் தாராளவாதத்திற்கு வாதிட்டார். 1989 ஏப்ரலில் அவர் மரணம் அடைந்தது, தினென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரண்டதற்கான ஆரம்பக் காரணங்களில் ஒன்றாகும். அப்போது நடைபெற்ற இரத்தக்களறி ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம் அந்த ஜனநாயக உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டங்களை இன்றைக்கும் அதிகாரபூர்வமாக ''எதிர்புரட்சிகர கலகம்'' அல்லது ''அரசியல் கொந்தளிப்பு'' என்று வர்ணிக்கின்றது.

1989இனைப்போல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மிக குறுகலான ஒரு சமூக அடித்தளத்தை கொண்டுள்ளதுடன் மற்றும் ஜனாதிபதி Hu Jintao தலைமையின் கீழ் மத்தியதர வர்க்க தட்டினரின் ஆதரவை விரிவுபடுத்த முயன்று வருகிறது. என்றாலும், அப்படிச் செய்வதற்கு தினென்மென் சதுக்கத்தின் சம்பவங்களால் உருவாக்கப்பட்ட ஆத்திரம் மற்றும் விரோதத்தை வெளிப்படுத்துவதை ஒழித்துக்கட்டியாக வேண்டும். ஹூ யாஓபாங் நினைவிற்கு மரியாதை செலுத்துவதற்கான இந்த நகர்வு அந்த திசையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிக முயற்சியாகும்.

விழாக்கள் பெய்ஜிங் மக்கள் மகா மண்டபத்திலும், ஹூவின் சொந்த நகரான ஹெனன் மாகாணத்திலும் மற்றும் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள Jiangxi மாகாணத்திலும் நடத்தப்படும். ஒரு அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல் திரட்டும் கூட வெளியிடப்படும். காலம் சென்ற தலைவரின் மைத்துனரான Hu Dezi, ஹூ யாஓபாங் இற்கு ஒரு நினைவு பூங்கா உட்பட, ஒரு சிலை, ஒரு பொது சதுக்கம், ஒரு கண்காட்சி மண்டபம் போன்றவை கட்டியெழுப்புவதற்குமாக ஹெனன் மாகாணத்திலுள்ள அதிகாரிகளுக்கு பெய்ஜிங்கிலிருந்து கட்டளைகள் வந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.

பெயர் குறிப்பிடப்படாத ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வாஷிங்டன் போஸ்டிற்கு கூறும் பொழுது 1989 சம்பவங்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை கட்சித் தலைமை கைவிடத் தயாராக இல்லை. ஆனால், ஹூவை புனருத்தானம் செய்வது ஒரு மாற்றத்தின் அடையாளம் என்றும் கூறினார். அவர் ''கட்சி ஹூ யாஓபாங் தொடர்பாக தனது நிலையை மாற்றிக்கொள்ள முடியுமென்றால் ஜூன் 4 தொடர்பாகவும், அரசியல் சீர்திருத்தம் தொடர்பாகவும் தனது நிலையை மாற்றிக்கொள்ள முடியும்'' என்று குறிப்பிட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது குற்றங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை, ஆனால் தனது கருத்தை மட்டுப்படுத்த முயன்று வருகிறது.

ஹூ யாஓபாங் காலம் சென்ற ''பாரிய'' தலைவர் டெங் ஜியாவோபிங்கின் தீவிர ஆதரவாளரும், 1976ல் மாசேதுங் மரணத்திற்கு பின்னர் டெங்கை அதிகாரத்திற்கு கொண்டு வருவதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். 1960 களிலும், 1970 களிலும் மாவோவுடைய அழிவுகரமான ''கலாச்சார புரட்சியை'' விமர்சிக்கும் ஒரு பிரசாரத்தை ஏற்பாடு செய்ததன் மூலம், டெங்கை திரும்பவும் பதவிக்கு கொண்டுவருவதற்கு ஹூ வழியமைத்துடன், சந்தை சீர்திருத்தத்திற்கு திரும்பவும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ''கதவை திறந்துவிடவும்'' வகை செய்தார்.

1980களின் தொடக்கத்தில், ஹூ மேலும் முன்னேறினார். கட்சியின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிப்பதை அவர் ஊக்குவித்தார் மற்றும் அரசியலில் பெரியதொரு பாத்திரத்தை வகிக்க விரும்பிய மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளின் ஒரு தட்டினரின் ஆதரவை வென்றெடுத்தார். 1987ல் இந்தக் கொள்கை அலைபோன்றதொரு மாணவர் கண்டன கிளர்ச்சிகளுக்கு வழியமைத்தது. அவை கட்சியின் ஆளுகின்ற சட்டபூர்வமான தன்மையையே ஆட்சேபித்தன, அப்போது ஹூவை டெங் களையெடுத்தார்.

அரசியல் கட்டுப்பாடு இழக்கப்பட்டால் அடிமட்டத்திலிருந்து வருகின்ற ஒரு சவாலை ஆட்சி சந்திக்க வேண்டியிருக்கும் என்று டெங் கவலை கொண்டார். அவரது கொள்கைகள் ஏற்கனவே கூட்டு விவசாய பண்ணைகளை சிதைத்துவிட்டது மற்றும் அரசாங்கம் நடத்துகின்ற தொழிற்துறைகளில் நெறிமுறைகளை தளர்த்தியதால் வேலையில்லாதோர் வளர்ச்சியுற வழிவகுத்தது. இந்த நிகழ்ச்சிபோக்கு சமூக துருவப்படுத்தல் ஆழமாவதற்கு வழிவகுத்ததுடன், சீன தலைவர்களின் குடும்பங்கள் இலாபத்திற்கான வேட்டையில் இறங்கியதால் பரந்த ரீதியான எதிர்ப்புணர்வு உருவாயிற்று.

1989 ஏப்ரலில் ஹூவின் மரணம் டெங்கின் அச்சத்தை உறுதிபடுத்தியது. பெய்ஜிங் மாணவர்கள் ஹூவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தினர் மற்றும் ஆரம்பத்தில் அரசாங்க-சார்புடைய ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர் மற்றும் அதிகாரிகளின் ஊழலுக்கு எதிரான கண்டனப் பேரணியாக மட்டுப்படுத்திக் கொண்டனர். இந்தக் கோரிக்கைகள் விரிவடையத் தொடங்கி ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளையும் உள்ளடக்கிக் கொண்டது. ஹூவின் வாரிசாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியேற்ற Zhao Ziyang தினன்மென் சதுக்கத்தில் வளர்ந்துவரும் பேரணிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். பிரதானமாக அரசு அதிகாரத்துவத்தின் பங்கை குறைக்கின்ற நோக்கத்தோடு கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களையும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மற்றும் மத்தியதர வர்க்க தட்டுக்களின் ஆதரவை திரட்டுவதற்கும் முன்மொழிவுகளை கொண்டு வந்தார்.

கண்டன பேரணி நீடித்துக் கொண்டிருந்தது, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெய்ஜிங்கிலும் இதர நகரங்களிலும் இணைந்து கொண்டனர் மற்றும் அதிகமான பணவீக்கம், வளர்ந்து வரும் வேலையில்லாத நிலை மற்றும் சமூக ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக தங்களது சொந்த கோரிக்கைகளை எழுப்பினர். ஒரு தொழிலாள வர்க்க கிளர்ச்சி ஏற்பட்டுவிடக்கூடும் என்று பீதியடைந்த டெங் துருப்புகள் பெய்ஜிங்கிற்குள் புகுந்து கண்டனங்களை ஒடுக்குமாறு கட்டளையிட்டார், ஆயிரக்கணக்கான மக்கள் என்ற அளவிற்கு இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

Zhao Ziyang பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மற்றும் ''அரசியல் கொந்தளிப்பை'' ஊக்குவித்ததற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் Zhaoவின் பதவிற்கு Jiang Zemin அமர்த்தினர். 1990கள் முழுவதிலும், ஜியாங் ஜனநாயக உரிமைகள் தொடர்பான எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை மற்றும் எந்த கிளர்ச்சி பற்றிய அடையாளம் தோன்றினாலும் குறிப்பாக தொழிலாளர்களை கொடூரமாக ஒடுக்கினார். 1989 ஜூன் சம்பவங்களின் அதிகாரபூர்வமான தகவல்களை ஆட்சேபித்த எவரும் உடனடியாக சந்தேகத்திற்கு ஆட்பட்டனர் மற்றும் போலீஸ் நடவடிக்கைகளை சந்தித்தனர்.

ஜூன் 4 நிறைவாண்டை ஒவ்வொரு ஆண்டும் சீனத் தலைமை பெரும் அமைதியின்மையுடன் அணுகியது. அரசு-கட்டுப்பாட்டிலுள்ள ஊடக தணிக்கை அந்த படுகொலை பற்றிய எந்தக் குறிப்பையும் நீக்கிவிட்டதுடன், பாதுகாப்பு படைகள் அணிதிரட்டப்படுகின்றன, தெரிந்த அரசியல் கருத்து வேறுபாடுடையவர்கள் போலீஸ் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சீன அதிகாரிகள் தினென்மென் சதுக்கத்தில் போலீசாரையும் சாதாரண உடை புலனாய்வு அதிகாரிகளையும் குவித்து எந்த கண்டனமும் நடைபெறாது தடுத்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் Zhao Ziyang மரணமடைந்ததானது பெய்ஜிங்கில் ஒரு கணிசமான அளவிற்கு அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது. சீன அதிகாரிகள் Zhao Ziyangவிற்கு எந்த பொது அஞ்சலி நடத்தினாலும் அது வெகுஜன அதிருப்தி திரும்பவும் திரளுவதற்கு மையமாக அமைந்துவிடும் என்று பயந்தனர். (பார்க்க "Beijing on heightened alert after the death of Zhao Ziyang").

சர்வதேச முதலீடுகளின் பெருக்கு

1989ல், மேற்கு தலைவர்களும், ஊடகங்களும், தினென்மென் படுகொலைகள் ஜனநாயகத்திற்கு எதிராக ''கம்யூனிசத்தின்'' ஒரு குற்றம் என்று கண்டித்தார், அதே நேரத்தில் பெய்ஜிங் ''சோசலிச முறையை'' பாதுகாத்து நிற்பதற்காக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று நிலைநாட்டி வந்தது. இன்றையதினம், இந்த இரட்டை வேட கூற்றுக்கள் ஒளிவுமறைவற்ற அபத்தமானவை என்று தெரிகின்றன.

அவர்களது முதலைக் கண்ணீர் காய்வதற்கு முன்னால், சர்வதேச முதலீட்டாளர்கள், பில்லியன் கணக்கான டாலர்களை சீனாவிற்குள் குவிக்க தொடங்கினர். பெய்ஜிங் எந்த அரசியல் எதிர்ப்பையும், குறிப்பாக தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க பெய்ஜிங் தயாராக இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலீட்டாளளர்களுக்கு பதிலளிக்கின்ற வகையில் சுதந்திரச் சந்தை சீர்திருத்தங்களை 1980களில் காண முடியாத அளவிற்கு முடுக்கிவிட்டது.

சீனா தொடர்பான முதலாவது பொருளாதார ஆய்வு அறிக்கையை OECD செப்டம்பர் 16 அன்று வெளியிட்டது. அது சந்தை சீரமைப்பில் "பெரும் விளைவுகளை" கண்டிருக்கும் சீனாவை பாராட்டியது. விவசாயம் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார்த்துறை தற்போது சீனாவில் 57 முதல் 65 சதவீத உற்பத்தியை தற்பொழுது செய்துகொண்டிருப்பதாக அது சுட்டிக்காட்டியது. 1998 க்கும் 2003க்கும் இடையில் தனியார் துறை நிறுவனங்களின் உற்பத்தி ஐந்து மடங்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி 3 மடங்கும் அதிகரித்துள்ளது. இவற்றோடு ஒப்பிடும்போது 1995க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் 1,50,000 அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனங்கள் அல்லது மொத்த நிறுவனங்களில் பாதி மூடப்பட்டுவிட்டன அல்லது தனியார் உடைமையாக்கப்பட்டுவிட்டன. 1998 முதல், 16 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

சீனாவின் 'அதிசயம்'' என்றழைக்கப்படுவதற்கு பின்னால் பத்து மில்லியன் கணக்கான சீன தொழிலாளர்கள் உயிர் வாழும் ஊதியங்களுக்காக மிகக் கொடூரமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் அளவை பெருக்குகின்ற வகையில் தொடர்ந்து மில்லியன் கணக்கான விவசாயிகள் நகர்புறங்களுக்கு இடம்பெயர்கின்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கடுமையான வரிவிதிப்பு, வறுமை அல்லது நிலம் எதுவும் இல்லாததால் வேலை தேடி நகரங்களில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். வறுமை, வேலையில்லாத நிலை மற்றும் ஊழல் மிக்க ஒடுக்குமுறை அதிகாரத்துவத்தால் உருவாகின்ற ஆத்திரம் ஆகியவை பெருகிவரும் எண்ணிக்கையில் கண்டனப் பேரணிகளுக்கு தூபம் போடுகின்றன என்றாலும், அவை தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.

சென்ற மாதம் சீன தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நடத்தியுள்ள ஒரு ஆய்வு விடுத்திருக்கின்ற எச்சரிக்கை என்னவென்றால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மற்றும் நகரப்பகுதிகளுக்கும் கிராமப்பகுதிகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஏற்றதாழ்வுகளை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுத்துக்கொள்ளப்படவில்லையென்றால், 2010 வாக்கில் சமூக கொந்தளிப்புக்கள் ஒரு ''சிகப்பு விளக்கு'' அளவை எட்டிவிடும் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தனத்தின் அச்சுறுத்தலும் உருவாகும். பெய்ஜிங் அரசியல் ஒடுக்குமுறையை பயன்படுத்த தயங்காது என்றாலும், ஜனாதிபதி ஹூ ஜின்டோ தலைமையிலான புதிய தலைமை தனது ஆட்சியை முண்டு கொடுத்து புதிய அரசியல் அமைப்புமுறைகளை ஸ்தாபிக்க முயன்று வருகிறது.

பெய்ஜிங் அதிகாரத்துவத்தின் பிரிவுகள் 1980களில் Hu Yaobangம், Zhao Ziyangம் வளர்த்த ''அரசியல் சீர்திருத்த'' வேலைதிட்டத்திற்கு புத்துயிர் ஊட்ட முயன்று வருகின்றன. இதன் நோக்கம் நியாயமான ஜனநாயக உரிமையை வழங்குவதல்ல ஆனால் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்கு புதிய நடுத்தரவர்க்கங்களில் வசதிமிக்க தட்டினர்களின் ஆதரவை திரட்டுவதற்காகத்தான்.

அத்தகையதொரு மூலோபாயம் செயல்படுத்தப்படாவிட்டால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் குறித்து நீண்டகாலமாக அரசியல் அதிருப்தியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஹொங் கொங்கை தளமாகக்கொண்ட வெளிநாடுகளுக்கான ''ஜனநாயக இயக்க'' பத்திரிகையான Cheng Ming செப்டம்பர் இதழில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் வர்க்கமோதலை ''நாடாளுமன்ற போராட்டங்களாக'' மாற்றுமாறு பெய்ஜிங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அத்தகையதொரு சீர்திருத்தம் தான் ''பெருமளவிலான கொந்தளிப்பை, வன்முறையை இல்லாதொழித்து மற்றும் புரட்சியையும் உள்நாட்டுப் போரையும் தவிர்க்கும்'' என்று அது எச்சரித்துள்ளது.

2002 அவர் பதவிக்கு வருவதற்கு முன்னர், ஹூ ஜின்டோ ''ஜனநாயக'' சீர்திருத்த விடயங்கள் தொடர்பாக அறிவுஜீவிகளிடையே விவாதங்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொண்டார். செப்டம்பர் 5ல் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் வென் ஜியாபோ தற்போது கிராம அளவில் மட்டுமே நடைபெற்றுக்கொண்டுள்ள தேர்தல்கள் அடுத்த பல ஆண்டுகளில் நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதே திசையில் அமைந்த மற்றொரு தற்காலிக நடவடிக்கைதான் ஹூ யாஓபாங் ஐ மறுசீரமைப்பதற்கான திட்டம். இது தினென்மென் சதுக்கப் படுகொலை பிரச்சனையை மூடி மறைக்க முயன்று எதிர்கால சமுதாய கொந்தளிப்புக்களை சமாளிப்பதற்கு அரசியல் சீர்திருத்தங்கள் என்ற மேற்பூச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

Top of page