World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Katrina, the Iraq war and the struggle for socialism

கத்திரினா, ஈராக் போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம்

Statement of the Socialist Equality Party
23 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

சனிக்கிழமையன்று செப்டம்பர் 24-ல் வாஷிங்டன் DC, லொஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டிலில் நடைபெறும் போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகளில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களும், விநியோகிப்பதற்கு கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. வாஷிங்டனில் நடைபெற்ற பிரதான கண்டனப் பேரணியில் SPD/WSWS எல்லிப்சியின் தென்மேற்குப் பகுதியிலும், வாஷிங்டன் நினைவுச் சின்னத்திற்கு அருகிலும் வெளியீடுகளுக்கான விற்பனை அரங்குகளை அமைக்கிறது. இந்த அறிக்கை ஒரு PDF வடிவத்திலும் கிடைக்கிறது. இதை WSWS வாசகர்கள் தங்களது கணினிகளிலிருந்து இறக்கம் செய்து விநியோகிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஈராக் போருக்கு எதிராக இந்த வாரக் கடைசியில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் செல்கின்ற நேரத்தில், நியூ ஓர்லியன்ஸ்-ல் திடீரென்று நிகழ்ந்த மற்றும் துயர நிகழ்ச்சிகள் மிக அப்பட்டமாக இராணுவ வாதம் மற்றும் சமூக பிற்போக்கிற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்த ஒரு புதிய சோசலிச அரசியல் மூலோபாயத்திற்கான தேவையை தெளிவாக முன்வைத்துள்ளது.

ஒரு நீடித்த சமுதாய சீரழிவின் காரணமாக, அமெரிக்க வளைகுடா கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பாரியளவு உயிரிழப்பும் மனிதர்கள் படும் துயரங்களும், .அந்த அளவுக்கு திடீரென்று ஏற்பட்ட இயற்கைப் பேரழிவின் விளைவு அல்ல, ஈராக் போரே அதன் ஒரு தெளிவான விளக்கிக் காட்டல் ஆகும்.

பத்தாயிரக்கணக்கான ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்க குடிமக்கள், நியூ ஓர்லியன்ஸ்-ல் வெள்ளம் பாய்ந்த தெருக்களில் உணவு, தண்ணீர் அல்லது மருந்துகள் இல்லாமல் கைவிடப்பட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல், சமூக மற்றும் தார்மீக திவாலை அம்பலப்படுத்தியுள்ளது.

முதலாளித்துவ சந்தையை புகழ்ந்து போற்றியமை, தனியார் செல்வம் குவிப்பதற்கு எல்லா சமுதாய நலன்களையும் கொடூரமாக கீழ்படிந்து செயல்பட வைத்தமை, பெருநிறுவனங்களின் இலாபநோக்கு முயற்சிக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத நிலையில் மிக அடிப்படையான சமுதாய திட்டமிடல்களைக்கூட புறக்கணித்தமை ஆகிய அனைத்தும் கத்திரினா பேரழிவிற்கு அடிப்படையாக அமைந்தது.

இந்த முறைக்கு அரசியல் மாற்றீடுகள் தொடர்பான எந்தவித நியாயமான விவாதத்திற்கும் ஊடகத்தாலும் ஆளும் நிர்வாகத்தாலும் அந்த அளவு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஓய்வு ஒழிவில்லாமல் சோசலிசம் பற்றி அவதூறு பொழியப்பட்டதும் -நியூ ஓர்லியன்ஸில் தரப்பட்ட கொடூரமான விலைக்கு பங்களிப்பு செய்துள்ளது.

ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், செர்நோபிள் அணுஉலை பேரழிவு ஏற்பட்டது. அதை அமெரிக்க ஊடகங்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களும், சோவியத் அமைப்பின் தோல்விக்கு அது ஒரு திட்டவட்டமான சான்று என்று அறிவித்தன. சோவியத் நிர்வாக முறை வீழ்ச்சியடையும் என்று நல்வரவு கூறினர். அது ஆளும் அதிகாரத்துவத்தின் அலட்சியப்போக்கையும் திறமைக் குறைவையும் வெளிப்படுத்தின என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்வியை கத்ரிதினா சூறாவளி அம்பலப்படுத்திவிட்டது என்று அதைவிட அதிகமாக இப்போது நியாயப்படுத்திக் கூற முடியாதா?

இந்த முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடியின் மிக அத்தியாவசியமான அம்சங்கள் சிலவற்றை இந்த சூறாவளி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது: பத்து மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களுக்கு சமூக உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதையும், ஊதியத்திற்காக பணியாற்றுகின்ற மிகப்பெரும்பாலான மக்களுக்கும் இரு பிரதான அரசியல் கட்சிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும் மிகப்பெரும் செல்வம் படைத்த ஒருசிலவராட்சிக்கும் இடையே நிலவுகின்ற மிகப்பரந்த இடைவெளியை இந்த சூறாவளி எடுத்துக்காட்டியிருக்கிறது.

இத்துடன் அது அமெரிக்க முதலாளித்துவத்தின் புறநிலை வீழ்ச்சியையும் அம்பலப்படுத்தியுள்ளது, அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் நிலவுகின்ற குழப்பம் மற்றும் திறமைக் குறைவு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் சிதைவு ஆகியவற்றின் மூலம் வெளிப்பட்டுள்ளது. "இன்றியமையாத மேல்நிலை வல்லரசு" என்று கருதப்பட்டு வரும் ஒரு அரசாங்கம், படுமோசமான வறுமை வயப்பட்ட மூன்றாவது உலக நாட்டைப் போன்று நடந்துகொண்டதை வியப்போடும் பயங்கர உணர்வோடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது.

புஷ் நிர்வாகம் நியூ ஓர்லியன்ஸ் மக்கள் தொடர்பாக காட்டிய அலட்சியப்போக்கும் குற்றகரமான புறக்கணிப்பும் ஈராக் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கொடுமைப்படுத்தி இன்பம்காணும் தன்மையையும், குற்றவியல் தன்மையையும் பிரதிபலிக்கிறது. அந்தப் போர் தற்போது 1,00,000ற்கு மேற்பட்ட ஈராக்கியர்களது வாழ்வையும், 1900க்கு மேற்பட்ட அமெரிக்க துருப்புக்களின் வாழ்வையும் பறித்துவிட்டது.

வளைகுடா கரையில் ஏற்பட்ட பேரழிவு எப்படி ஒரு இயற்கை பேரழிவும் மட்டுமே அல்லவோ, அதேபோலவே அந்தப் போரே திடீரென்று ஏற்பட்டுவிட்ட நிகழ்ச்சியுமல்ல. ஒரு சில வலதுசாரி சிந்தனையாளர்கள் உருவாக்கிய ஒரு சதியல்ல. மாறாக ஆழ்ந்த நெருக்கடியிலுள்ள அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து உருவாகியுள்ள தவிர்க்க முடியாத விளைபயனாகும்.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரின் நலன்களுக்காக ஈராக் போர் தொடக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே அதன் பிரதான மூலோபாய நோக்கம் என்னவென்றால், பாரசீக வளைகுடா பிராந்தியத்திலும், அதன் மகத்தான எண்ணெய் கையிருப்புக்களிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை கட்டாயப்படுத்தி நிலைநாட்டுவதும், அந்த எண்ணெய் கையிருப்புக்களில் வாஷிங்டனின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பொருளாதார போட்டி அரசுகளுக்கு எந்தவிதமான மேலாதிக்கமும் கிடைக்காமல் தடுப்பதுதான்.

உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டுவரும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிற ஒரு அச்சாணியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்க வலிமையை பயன்படுத்துவதற்கான விரிவானதொரு அமெரிக்க பூகோள மூலோபாயத்தின் ஓர் அங்கமாக ஈராக்கில் ஆயுதந்தாங்கிய ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டு வந்தது. அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ந்துகொண்டு வருவது இடைவிடாது அமெரிக்காவின் கடன்களும் வர்த்தக பற்றாக்குறைகளும் பெருகிக்கொண்டு வருவதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முக்கியமான வளங்களை கைப்பற்றிக் கொள்வதற்கும் சந்தைகளை பிடிப்பதற்கும், படை வலிமையை பயன்படுத்துகின்ற நேரத்திலேயே அமெரிக்காவிற்கு உள்ளே சமூக நலத்திட்டங்கள் சிதைக்கப்படுகின்றன. மற்றும் பணக்காரர்களுக்கு வரிவெட்டு சலுகைகளை வழங்குவதற்கு நிதியளிப்பதற்காக உண்மையான ஊதியங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சூறையாடுகின்ற ஒரு கொள்கையாகும்.

இராணுவ ஆக்கிரமிப்பு கொள்கையோடு இணைந்து ஒட்டுமொத்த சமுதாயமே இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஈராக் போர் நடத்தப்பட்டு வருவது பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறப்படுவதிலிருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதற்குத்தான் என்று வாஷிங்டன் தவறான முறையில் கூறிவருகிறது. அப்படியிருந்தும் நியூ ஓர்லியன்ஸில் ஏற்பட்ட பேரழிவின்போது அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க ஒட்டுமொத்தமாக தவறிவிட்ட நிலையானது, அரசாங்கம் அமெரிக்காவின் உழைக்கும் மக்களது நலன்களையும், பாதுகாப்பையும் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

"உள்நாட்டு பாதுகாப்பு" பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டதும் பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியதும், ஆக்கிரமிப்பு போர்களுக்கும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கும் ஒரு சாக்குப்போக்காக மட்டுமே பயன்பட்டது. உண்மையான பேரழிவு தாக்கிய நேரத்தில் வாஷிங்டன் அதற்கு தந்துள்ள பதில் இராணுவச் சட்டம் ஆகும்.

ஒரு புதிய சோசலிச இயக்கம் தேவை

கத்திரினா பேரழிவை சமாளிப்பதில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து உருவாகியுள்ள ஆத்திரத்தோடு சேர்ந்து ஈராக் போருக்கு எதிர்ப்பு ஆழமாகிக்கொண்டு வருவதும் இணைந்து நின்று அமெரிக்காவில் உழைக்கும் மக்கள் வலுவானதொரு அரசியல் எதிர்க்கட்சி இயக்கத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலைகளை தோற்றுவித்திருக்கிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், கத்திரினாவினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள வறுமையையும் சமூக ஏற்றத் தாழ்வையும் உருவாக்குகின்ற சூழ்நிலைகளை ஒழித்துக்கட்டுவதிலும் இந்த இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முற்றிலும் ஒரு புதிய புறப்பாட்டுப் புள்ளியாக கட்டாயம் இருக்க வேண்டும் - சமுதாயத்தை சோசலிச மறுஒழுங்கு செய்வதற்கான ஒரு போராட்டமாக இருக்க வேண்டும்.

அத்தகையதொரு இயக்கம், உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதை கட்டாயம் அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும், கண்டன மற்றும் அழுத்தம் கொடுக்கும் அரசியலாக இருக்கக்கூடாது.

தங்களது பெயரால் தொடக்கப்பட்ட ஒரு கிரிமினல் போருக்கு முற்றுப்புள்ளி ஒன்று வைக்க வேண்டும் என்றதொரு தீவிர விருப்பத்தாலும், நியாயமான ஆத்திர உணர்வோடும், இந்த வாரக் கடைசியில் வாஷிங்டன் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும், உழைக்கும் மக்களும் அணிவகுத்து வருவார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஆனால் இந்த கண்டனப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் ``எங்களது கோரிக்கைகளை நேரடியாக கொள்கைகளை உருவாக்குபவர்களது கவனத்திற்கு கொண்டுவரவும், வெள்ளை மாளிகைக்கும், நாடாளுமன்றத்திற்கும் தெளிவானதொரு அறிவிப்பை அனுப்புவதற்கும்`` விடுத்திருக்கின்ற அழைப்புக்கள் ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கத்திற்கு பயன்படுகின்றன. அது போருக்கு தோன்றியுள்ள வெகுஜன எதிர்ப்பை கீழ்படியச் செய்து மற்றும் நியூ ஓர்லியன்ஸ் தொடர்பாக எழுந்துள்ள ஆத்திரத்தை திசைதிருப்பி இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்குள் திரும்ப கொண்டுவந்து சேர்ப்பதாகும். அந்த இரண்டு கட்சிக் கட்டுக்கோப்புதான் முதலில் இந்த பேரழிவு ஏற்படுகின்ற சூழ்நிலைகளை உருவாக்கியது.

ஈராக் போருக்கு எதிராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கிடைத்த படிப்பினைகளை பெறவேண்டிய தக்க தருணம் இதுதான். 2003 படையெடுப்பிற்கு முந்திய மாதத்தில் ஒவ்வொரு கண்டத்தையும் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் அதை எதிர்ப்பதற்காக பேரணிகளை நடத்தினர். இந்த பாரியளவு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்களது இயல்பான உணர்வு வெளிப்பாடு, தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து சுயாதீமானதொரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை எடுத்துக்காட்டியது. அப்படியிருந்தும் அந்தப் போரை தடுத்து நிறுத்த கண்டனப் பேரணிகள் தவறிவிட்டன மற்றும் ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கு இல்லாத நிலையில் இந்த வெகுஜன இயக்கம் நீர்த்துப்போய்விட்டது.

2004 ஜனாதிபதி தேர்தலில் புஷ்சின் கொள்கையை சவால் செய்யும் ஒரு சாதனமாக ஜனநாயகக் கட்சி செயல்படும் என்ற மாயையின் அடிப்படையில்தான் அமெரிக்காவில் போருக்கான எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியின் பக்கம் திருப்பிவிடப்பட்டது. என்றாலும், அக்கட்சியின் வேட்பாளரான ஜோன் கெர்ரி ஜனநாயகக் கட்சி அந்தப் போரை இன்னும் பயனுள்ளவகையில் நடத்தும் என்று பிரச்சாரம் செய்தார்.

2004 தோல்வியிலிருந்து ஜனநாயகக் கட்சி மேலும் வலதுசாரி பக்கம் திரும்பிவிட்டது. 2008 ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்கக்கூடும் என்று கருதப்பட்டு வருகின்ற ஹில்லாரி கிளின்டன், ஜோசப் பைடன், ஜோன் எட்வார்ட்ஸ் மற்றும் பிறர், "வெல்லுவதற்கான ஒரு மூலோபாயத்தை வைத்திருக்கவில்லை" என்று வெள்ளை மாளிகையை குற்றம் சாட்டியுள்ளனர் அல்லது போரை விரிவுபடுத்துகின்ற வகையில் ஈராக் மக்களுக்கு எதிராக மேலும் கூடுதலாக அமெரிக்கப் படைகளை அனுப்ப வேண்டும் என்பதுடன் போரை விரிவுபடுத்த வக்காலத்துவாங்கி வருகின்றனர்.

ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இன்றைய தினம் எந்த ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சிக்காரரும் கோரவில்லை. அந்த ஒரு கோரிக்கையை அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் ஆதரிக்கின்றனர் என்பதை இப்போது கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன.

அமெரிக்க ஒருசிலவராட்சி குழுவினரையும், சம்பளத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிற அமெரிக்க வெகுஜனங்களையும் பிரிக்கும் சமூக இடைவெளி சமுதாயத்தின் மிகப்பெரும்பான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்கும் இரண்டு கட்சி கட்டுக்கோப்பில் அதன் அரசியல் பிரதிபலிப்பை காண்கிறது. இந்த சமூக மற்றும் அரசியல் பிளவுகள் இணைக்கப்பட முடியாதவை. இந்த அமைப்புமுறை சீர்திருத்தவோ அல்லது நெருக்குதல்கள் கொடுத்து சரிக்கட்டவோ முடியாது.

போருக்கு எதிரான, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ள ஒரே வழியானது, ஜனநாயகக் கட்சியுடன் இறுதியான அளவிற்கு முறித்துக்கொள்ளும் மற்றும் அடிப்படையிலேயே புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டும் பாதையில் மட்டுமே முன்னெடுக்க முடியும்.

இதன் பொருள் என்னவென்றால் பெருநிறுவன இலாபங்களும் தனிப்பட்டவர்கள் செல்வம் குவிப்பதற்குமான அடிப்படையாக அமைந்திருப்பதைக்காட்டிலும், சமத்துவம் மற்றும் சமூக தேவைகள் அடிப்படையில் சமூகத்தையே மறுஒழுங்கு செய்வதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் ஒரு வெகுஜன அரசியல் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும்.

இந்தக் கட்சி ஏகாதிபத்தியத்திற்கு எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத ஒரு எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அது உடனடியாகவும், அமெரிக்க பெருநிறுவன நலன்களை மேம்படுத்துவதற்காக ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அமெரிக்க துருப்புக்களை உடனடியாகவும் எந்தவிதமான நிபந்தனைகள் இல்லாமலும், அவற்றை திரும்பப் பெறவேண்டும் என்று கோர வேண்டும். பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்ட விரோதமான போரில் அமெரிக்க மக்களை இறக்கிவிட்டதற்கு பொறுப்பான அனைவர் மீதும் கிரிமினல் குற்றப் பொறுப்பு சாட்டுவதற்கு அது போராட வேண்டும்.

ஒரு பக்கம் போருக்கும் இராணுவவாதத்திற்கும் செலவிடப்படும் ஏராளமான வளங்களும் மறுபக்கம் பணக்காரர்களுக்கு தரப்படுகிற வரிச்சலுகைகள், வெட்டுக்கள் ஆகிய இந்த வளங்களும் அமெரிக்க வளைகுடா கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் மேற்கொண்டுவரும் கொள்கைகளால் படிப்படியாக தங்களது வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்காகவும் நல்ல ஊதியம் தருகின்ற வேலைகளையும், கண்ணியமான வீட்டு வசதிகளையும், கல்வி மற்றும் சுகாதார சேவைகளையும் வழங்குவதற்கு செலவிடப்பட வேண்டும்.

அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஈராக்கிலும், நியூ ஓர்லியன்சிலும் ஏற்பட்ட இரட்டை பேரிடர்கள், இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியை இனி தள்ளி வைக்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றன. போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும், அரசியல் பிற்போக்குத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு உண்மையான வழியை தேடுகின்றவர்கள். உலக சோசலிச வலைத் தளத்தை படித்து ஆதரிக்க வேண்டுமென்றும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Top of page