World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hurricane Rita slams Texas and Louisiana, reflooding New Orleans

சூறாவளி ரீட்டா, டெக்சாஸ், லூசியானா மீது தாக்குதல், நியூ ஒர்லியன்சில் மீண்டும் வெள்ளம்

By Patrick Martin
24 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

டெக்சாஸ்-லூசியானா எல்லையருகில் சனிக்கிழமை அதிகாலை சூறாவளி ரீட்டா தாக்குவதற்கு முன்னரே கூட சூறாவளி தொடர்புடைய சம்பவங்களில் ஏறத்தாழ 30 பேர் மடிந்தனர். மிகப்பெரிய புயல் காற்று கடற்கரை பகுதியில் ஒரு 350 மைல் அளவிற்கு வீசிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான டெக்சாசிலுள்ள ஹோஸ்டனில் ஒரு பேரழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் ஏற்கனவே வெள்ளத்தினால் நாசமாக்கப்பட்டுள்ள நியூ ஒர்லியன்சிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, ரீட்டா நிலத்தை தாக்குவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்னர் சூறாவளி காற்றும் மழையும் நியூ ஒர்லியன்சில் பல இடங்களில் கடல் அலை தடுப்பு அரண்களை உடைத்து கொண்டு மீண்டும் ஒன்பதாவது வட்டத்தின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது, அது சூறாவளி கத்தரினாவிற்கு பின்னர் வெள்ளத்தினால் மிகக் கடுமையாக தாக்கிய தொழிலாள வர்க்க பகுதியாகும். அது காய்ந்திருந்த தெருக்கள் வெள்ளிக் கிழமை காலை வெள்ளம் புகுந்ததால் அன்று இரவு வாக்கில் நான்கு முதல் ஆறு அடி வரையில் தண்ணீர் நின்றது மேலும் தடுப்புக்கள் உடையலாம், இரவில் மேலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற கவலைகள் நிலவுகின்றன.

ரீட்டா வருகிறது என்பதால் பேரழிவிற்கு உள்ளான நகரத்தில் இறந்தவர்கள் உடலை தேடுகின்ற நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்திரினாவினால் லூசியானாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 841ஐ தொட்டது -- இவர்களில் பெரும்பாலோர் நியூ ஒர்லியன்சை சேர்ந்தவர்கள்--மற்றும் வளைகுடா கடற்கரை பிராந்தியம் முழுவதிலும் மொத்தம் 1,078 பேர் மடிந்தனர்.

ரீட்டாவிலிருந்து உயிர் சேதம் மிகக் குறைவாக இருக்கக் கூடும், பொருளாதார பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஆண்டிற்கு ஹெளஸ்டன் பகுதி 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள உற்பத்தியை செய்கிறது. இது அமெரிக்க மொத்த உற்பத்தியில் 2 சதவீதமாகும், நியூ ஒர்லியன்சை விட ஐந்து மடங்கு பெரிய பகுதியாகும். அமெரிக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அளிப்பில் ஏறத்தாழ 40 சதவீதம், ஒன்று அல்லது இரண்டு சூறாவளிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

டெக்சாசில், 24 முதியவர்கள் அவர்களை ஹீஸ்டனிலிருந்து வெளியேற்றிய ஒரு பஸ் அவர்கள் சென்று சேர வேண்டிய டல்லாசிற்கு வெளியில் வெடித்ததில் மாண்டனர். அந்த பஸ்சின் பின் பக்க சக்கரம் ஒன்று சிக்கிக் கொண்டு, தீப்பிடித்தது, பிராண வாயு டாங்கிகள் வெடித்தன இப்படி மாண்டவர்களில் 70 முதல் 101 வயதுடைய முதியவர்களாவர்.

தீ பிடித்து வெடிப்பதற்கு முன்னர் பஸ் ஓட்டுனர் 21 பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். அச் சமயத்தில், வெடித்த போது பஸ்சிற்குள் இருந்தவர்கள் அனைவரும் தீயில் வெந்து இறந்தனர்.

கடற்கரை பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் போது டெக்சாசில் இதர சாவுகளும் நடந்திருக்கின்றன, இதற்கு முன்னர் லூயிசியானாவை சூறாவளி கத்திரினா தாக்கிய போது நிலவிய அதே குழப்பமும் முன்னெச்சரிக்கை இல்லா நிலையும் பெரும்பகுதி காணப்பட்டது. வியாழனன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஒரு 82 வயது பெண் வெப்பத்தால் மடிந்தார், ஏனென்றால் அப்போது பகல் நேர வெப்பம் 90 பாகைகளை தாண்டி விட்டது. அத்துடன் சாலைகளில் காணப்பட்ட வெப்பமும் சேர்ந்து காரில் சென்றவர்களை தாக்கியது, அந்த நேரத்தில் மூச்சு விட முடியாத அளவிற்கு திணறல் ஏற்பட்டது.

ஹெளஸ்டன் மேயர் பில் வைட்டும் ஹாரிஸ் கவுன்டி தலைமை நிர்வாகி ரொபேர்ட் எக்கல்சும் தொடக்கத்தில் ஏறத்தாழ எல்லா மக்களும் வெளியேற வேண்டுமென்று சுட்டிக்காட்டினர், ஆனால் கடற்கரையிலிருந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதியிலுள்ள சாலைகள் அனைத்தும் விரைவில் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அப்போது கார்கள் நகர முடியாததால் வியாழன் முழுவதிலும் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது கார்களிலேயே அமர்ந்திருந்தனர், இறுதியாக அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

வெகுஜனங்கள் மொத்தமாக வெளியேற்றப்படுவதில் குறிப்பாக ஹெளஸ்டனில் ஏற்பட்டுள்ள தோல்வியாகும். அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும், வேதியியல் தொழிற்கூடங்களும் குவியலாக பெருமளவில் இருப்பதால் எதிர்காலத்தில் ஒரு பயங்கரவாதி தாக்குதலுக்கு ஒரு பிரதான இலக்காகக் கூடும் என்று கருதப்படுகிறது. அப்படி தாக்குதல் நடந்தால் அதனால் ஆபத்தான வேதியல் பொருள் ஆயிரக்கணக்கான டன்கள் சுற்றுப்புறங்களில் ஆபத்தை ஏற்படுத்துகின்ற விளைவு ஏற்படும். ஆனால் மத்திய அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்புத் துறையோ அல்லது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளோ அந்த இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகள் எதையும் செய்யவில்லை.

வெள்ளிக்கிழமை நண்பகலில், வைட் பகிரங்கமாக ஹெளஸ்டன் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிவிட வேண்டும். மற்றும் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் திறந்த வெளிகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் சூறாவளி கரையை தாக்கும். ''நெடுஞ்சாலைகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது மரணத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு பொறியாகும்'' என்று அவர் ஒப்புக் கொண்டார்.

டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி இராணுவப்படைகளை அனுப்பினார் மற்றும் மத ஆறுதலை அளித்தார். டெக்சாஸ் தேசிய காவலர் துருப்புக்கள் 5,000 பேரை செயலூக்கமாக செயல்பட கட்டளையிட்டார். அவர்களில் பாதிப்பேர்தான் இப்போது மாநிலத்திற்கு சேவைக்காக கிடைக்கின்றனர் ஏனென்றால் மீதிப்பேர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். பெர்ரி, ஒரு குடியரசுக் கட்சிக்காரர் அவரது நிர்வாகம் பிரதானமாக கிறிஸ்தவ அடிப்படைவாதக் குழுக்களை நம்பியிருக்கிறது, அவர் மாநில தலைநகரான ஆஸ்டினில் அது பாதுகாப்பான உள்நாட்டு போரில் தோன்றி தனது செய்தியைக் கொடுத்தார். ``அமைதியாக இருங்கள், வலுவாக இருங்கள், டெக்சாசிற்காக ஒரு வழிபாடு நடத்துங்கள்`` என்று குறிப்பிட்டார்.

மத்திய அவசர நிர்வாக அமைப்பை (FEMA) சேர்ந்த அதிகாரிகள் கத்திரினாவினால் ''படிப்பினை பெற்றிருப்பதாகவும்'' அடுத்த சூறாவளி பேரழிவு ஏற்படும்போது முன்னேற்பாடுகளை செய்வதில் தவற மாட்டோம் என்று கூறி வந்தாலும், ரீட்டாவிற்கான முன்னேற்பாடுகள் மிகக் குறைந்த அளவிற்கே நடைபெற்றன. FEMA சில டசின் டிரக்குகளில் குடி தண்ணீரையும் குளிர் பானங்களையும் ஏற்றிக் கொண்டு 10 FEMA ஊழிய உறுப்பினர்களுடன் வாஷிங்டனிலிருந்து பேரழிவு மண்டலத்திற்கு வெளியில் நிறுத்தியிருந்தது.

சூறாவளி தாக்குவதற்கு முன்னர் இராணுவம் மிகப் பெருமளவிற்கு அணிதிரட்டப்பட்டது, தேசிய காவலர் துருப்புக்களும், முறையான இராணுவ மற்றும் கப்பற்படைகள் ஆகிய இரண்டுமாகும். வளைகுடா கடற்கரைப்பகுதியில் பணியாற்றுவதற்காக அவசியம் ஏற்பட்டால் 300,000 தேசிய காவலர் துருப்புக்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சூறாவளி கரையைக் கடந்தவுடன் உடனடியாக டெக்சாசிற்கு அனுப்புவதற்கான அழைப்பை செயல்படுத்துவதற்கு மூன்று படைப்பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன. லூயிசியானாவில் சூறாவளியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த 1,400 டெக்சாஸ் தேசிய காவலர் துருப்புக்கள் தங்களது சொந்த மாநிலத்தில் அதே பணிகளை மேற்கொள்வதற்காக திரும்பி வந்திருந்தன.

டெக்சாஸ் கவர்னர் பெர்ரியும் லூயிசியானா கவர்னர் கத்தலீன் பாபினக்ஸ் பிளாங்கோவும் 25,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர், டெக்சாசில் 10,000 லூயிசியானாவில் 15,000 துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்று கோரினர். ஜனாதிபதி புஷ் இரண்டு மாநிலங்களையும் பேரழிவு பாதிப்பு பகுதிகள் என அறிவித்து நிர்வாக கட்டளை பிறப்பித்தார் மற்றும் பல்வேறுபட்ட மத்திய அமைப்புக்கள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அங்கீகாரமளித்தார்.

வெள்ளை மாளிகை தொடக்கத்தில் வெள்ளிக் கிழமையன்று டெக்சாஸ் கடற்கரைக்கு புஷ் விஜயம் செய்வதற்கு திட்டமிட்டது, சூறாவளி தாக்குகின்ற நேரத்தில் ஜனாதிபதியை படம் பிடித்து காட்டவும் கத்திரினா தாக்கியபோது அலட்சியப்போக்கோடு, புறக்கணிப்போடு நிர்வாகம் நடந்து கொண்டது என்ற பேரழிவு அம்பலப்படுத்தலை சமாளிக்கவும் முயன்றார்கள். ஆனால் புஷ் அங்கு வருவதால் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்போது அதுவே நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக ஆகிவிடும் என்ற சாக்குப் போக்கில் அந்த பயணம் திடீரென்று இரத்து செய்யபட்டது.

மாறாக, புஷ் நேரடியாக வாஷிங்டனிலிருந்து கோலராடோவிலுள்ள கோலராடோ ஸ்பிரிங்சிற்கு விஜயம் செய்வார், அங்குள்ள வடக்கு இராணுவ தலைமையகங்களிலிருந்து மத்திய அரசாங்கத்தின் சூறாவளி நிவாரண நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்வார். இந்த புதிய இராணுவ தலைமையகம் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்கதல்களுக்கு பின்னர் நிறுவப்பட்டன, அவை அமெரிக்க கண்டம் முழுவதிலும் உள்ள எல்லா தரை, கடல் மற்றும் விமானப்படைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

புஷ் இராணுவ தலைமை அலுவலகங்களிலிருந்து சூறாவளி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கான முடிவானது வெறும் அடையாள பூர்வமானது மட்டுமல்ல அதற்கு மேலும் உள்ளன. அமெரிக்க மண்ணில் அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான தங்களது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சூறாவளி கத்திரினாவினால் ஏற்பட்ட பேரழிவை பயன்படுத்திக் கொள்ள முயன்ற பென்டகனும் வெள்ளை மாளிகையும் தற்போது சூறாவளி ரீட்டா ஏற்படுத்திய பேரழிவை தொடர்ந்தும் அதே முயற்சிகளையே மேற்கொண்டிருக்கின்றன.

1878ல் இயற்றப்பட்ட Posse Comitatus சட்டம் நீண்ட காலமாக ஒரு தடையை விதித்திருந்தது. வழக்கமான உள்நாட்டு போலீஸ் பணிகளுக்கு வழக்கமான இராணுவத்தை பங்கெடுத்துக் கொள்வதை அது கடைபிடித்திருந்தது. மற்றும் தற்போது பொதுமக்கள் பலமான ஆயுதந்தாங்கிய போர் வீரர்கள் பல நேரங்களில் ஈராக் பாலைவன போருக்கு ஏற்ற மிடுக்கோடும், உடுப்புக்களோடும் சூறாவளி நிவாரணப் பணிகளில் அமெரிக்காவின் பெரு நகரங்களில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்றனர்.

Top of page