World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

What can be expected from Germany's grand coalition?

ஜேர்மனியின் பாரிய கூட்டணியில் இருந்து என்ன எதிர்பார்க்கப்படலாம்?

By Peter Schwarz
19 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் யூனியன் கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) இவற்றின் பாரிய கூட்டணியினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆட்சிக் குழுவை பற்றி செய்தியாளர் Heribert Prantl (Suddeutsche Zeitung) அக்டோபர் 14 பதிப்பில், "உயர்மட்ட அரசு ஊழியர் அரசியல் அமைச்சர் குழுபோல் உள்ளது" என்று விவரித்து எழுதியுள்ளார்.

இதுகாறும் பொது அரசியல் அரங்கில் இருந்து வெகு தொலைவில் நிர்வாக கருவியின் பிரிவாக செயல்பட்டிருந்த தனிநபர்கள் இப்பொழுது மிக முக்கியமான அமைச்சர் பதவிகளை ஏற்றிருப்பது பற்றித்தான் பிரன்டல் குறிப்பிட்டுள்ளார்.

"இத்தகைய நவீனவகை தலைமை உயர் அரசு ஊழியர்களுக்கு" முன் மாதிரியாக இருப்பது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள Frank-Walter Steinmeier (SPD) என்பது பிரன்டலுடைய கருத்தாகும்; பொதுமக்கள் பார்வையில் இருந்து சமீபத்திய ஆண்டுகளின் அகற்றப்பட்டிருந்த ஸ்ரைன்மையர் முந்தைய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் (SPD) வெளியேறும் மந்திரிசபையில் முக்கிய பதவியை வகித்திருந்தார். "ஷ்ரோடரின் தலைமையில் இயங்கிய அரசாங்கத்தில் மிகவும் முக்கியத்துவம் கொண்டிருந்தவராக இவர் இருந்தார். இவர்தான் எந்த ஆடம்பரமும், அலட்டிக் கொள்ளுதலும் இல்லாமல் அனைத்தையும் இயக்கி வந்தவர் ஆவார்" என்றும் பிரன்டல் எழுதியுள்ளார்.

இதேபோன்ற உயர்மட்ட அரசுஅதிகாரிகள் வார்ப்பில் இருந்து வந்துள்ள மற்ற அரசியல்வாதிகள், ஷ்ரோடர் அரசாங்கத்தில் இதே நீதித்துறை பொறுப்பை மேற்கொண்டிருந்த Birgitte Zypries (SPD), நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள Peer Steinbruck (SPD), மற்றும் துணை அதிபராகவும், தொழிலாளர் துறை மந்திரியாகவும் பதவியேற்க இருக்கும் Franz Muntefering (SPD தலைவரும்கூட) ஆகியோர் ஆவார்.

ஒரு கட்சி தலைவர், "மற்றும் உயர்மட்ட ஆட்சி அதிகாரி என்ற வகைப்பட்ட" இரண்டின் தன்மைகளையும் மொத்தமாக முன்டர்பெரிங் பிரதிபலிக்கிறார் என்பது பிரன்டில் உடைய கருத்தாகும். கிறிஸ்தவ சமூக யூனியன் தலைவரும் வருங்கால பொருளாதார மந்திரியுமான எட்மண்ட் ஸ்டோய்பெருக்கும் இதே பொருந்தும்; இவர் "அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறார்" என்பதைவிட "இன்னும் கூடுதலான வகையில் உயர் அதிகாரியாகவும், தலையாய அதிகாரத்துவத்தினராகவும்" உள்ளார் என்பதே சரியாகும். "எவ்வித கவர்ச்சியும் இல்லாத, தனிமையான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர், புதிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கும்" இதே குணநலன் அடிப்படையில் பொருந்தும்.

உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள Wolfgang Schauble யும் கூட உயர்மட்ட ஆட்சித்துறை அதிகாரி என்று தரம் காணப்படாலும், ஷ்ரோடருக்கு ஸ்ரைன்மையர் பணியாற்றது போல், Schuble பல ஆண்டுகள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை சார்ந்த சான்ஸ்லர் ஹெல்முட் கோலுக்கு அதிகாரத்தின் பின்னணியில் முக்கியமான பங்கை ஆற்றியுள்ளார். பின்னர் அவர் முக்கிய அரசியல் பதவிகளில் இருந்து முதலில் கோலாலும் பின்னர் மெர்க்கலாலும் அகற்றப்பட்டார். ஆயினும்கூட இப்பொழுது அவர் புதிய மந்திரிசபையில் மெர்க்கலுடைய நம்பிக்கைக்கு உகந்த ஆதரவாளராக கருதப்படுகிறார்.

"அரசியல் வகை ஆட்சித்துறை பணியாளர்கள் நிறைந்த அமைச்சர் குழு" என்ற பிரன்டிலுடைய வர்ணனையில் உண்மையின் கூறுபாடு சிறிது இருக்கத்தான் இருக்கிறது.

இத்தாலியில் தொழில்நுட்பரீதியில் அரசாங்கத்திற்கு உதவியவர்கள் (Technocrats) என்று அழைக்கப்பட்டவர்கள், அரசியலில் இணைப்பு இல்லாத வல்லுனர்களுடன் சேர்க்கப்பட்டு, அரசியல் நெருக்கடிக் காலங்களில் பல முறையும் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் தலைவர்களான Carlo Azeglio Ciampi மற்றும் Lamberto Dini ஆகியோர் 1990 களில் கொண்டிருந்த அரசாங்கங்கள் இதற்கு தக்க உதாரணங்களாக திகழ்ந்தன.

பேர்லினில் உள்ள புதிய அரசாங்கம் நடைமுறையில் வேரூன்றியுள்ள கட்சிகளுக்கு புறத்தே நபர்களை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு செல்லவில்லை. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன், சமூக ஜனநாயக கட்சி ஆகியவை பெரும் முயற்சியுடன் நிறுவியுள்ள ஒரு சமநிலையின் அடிப்படையில்தான் பாரிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும்கூட அதன் அமைச்சர்கள் சராசரி அரசாங்க பணியாளர்களைப்போல் கட்சிகளின் திட்டங்கள், வாக்காளர்களின் கருத்துக்கள் பற்றிக் கவலைப்படாமல், அரசினதும் அதன் இலக்குகள் இவற்றின் அடிப்படையில் இவர்கள் கடமை உணர்வு நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு குறிப்பிடத்தக்கதுதான்.

இதன் நல்ல விளைவை பிரன்டில் சாதகமாகவே கருதுகின்றார். "இது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல" என்று கூறும் அவர் Bertolt Brecht என்னும் நாடகாசிரியரை மேற்கொளிடுகிறார்: "சிறப்பாக ஆட்சி நடைபெறும் நாடுகளில் நீதிக்கு சிறப்புத் தேவை ஒன்றும் கிடையாது."

"ஒரு நல்ல நிர்வாகம் இருந்தால் வரிகளை பெறுவதற்கும் கூட்டாட்சி சீர்திருத்தத்தை அடைவதும் இயலும்; சமூக பாதுகாப்பு முறை பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவைதான் தேவை." என்று அவர் முடிக்கிறார்.

இவ்வகையில், Suddeutsche Zeitung பத்திரிகைகளில் உள்நாட்டு பிரிவிற்கு தலைவராக இருக்கும் பிரன்டில், தான் முன்பு அரசாங்க வழக்கறிஞராக இருந்து, ஜேர்மனிய ஜனநாயகவாதியின் மாதிரியாக இருந்த தன்மையைப் புலப்படுத்துகிறார். இந்த ஜனநாயகவாதிகளுக்கு ஜனநாயகம் என்பது, பொதுமக்களுடைய விருப்பம் என்பதைவிட, அரசாங்கம் என்ற அமைப்பினுள்ளேயே உள்ளடங்கியிருக்கின்றது.

ஒரு நல்ல முறையில் நிர்வாகிக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும் என்று பிரன்டில் கருதும் தொழில்நுட்ப பிரிவினர், உண்மையில் தொடக்கத்தில் இருந்தே நெறியற்ற முறையில் வந்துள்ள அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற தன்மையைத்தான் எடுத்துரைக்கிறது; அதிபர் ஷ்ரோடர் ஒரு போலி நம்பிக்கையில்லா வாக்களிப்புக்கு விட்டு காலத்திற்கு முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அழைப்புவிட்டவுடன், அதைத் தொடக்கத்தில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தி பிரான்டில் எதிர்த்திருந்தார். நவம்பர் மாத இறுதிக்குள் வரவிருக்கும் கூட்டணி அரசாங்கம் ஒரு சர்வாதிகார போனபார்ட்டிச ஆட்சிமுறையின் கூறுபாடுகளைத்தான் கொண்டுள்ளது.

கடுமையான சமூக நெருக்கடிகள் நிலவும் காலத்தில், சமூக வர்க்கங்களுக்கு மேலாக எழுந்து பொது "ஒழுங்கை" பாதுகாக்கும் தோற்றத்தை கொடுத்து வரும் ஆட்சி முறையைத்தான் போனபார்ட்டிசம் என்ற சொல் குறிக்கும்; உண்மையில் அந்த ஆட்சி ஆளும்வர்க்கத்திற்கும் மிகவும் வலிமையும் அதிகாரமும் உடைய பிரிவுகளின் நலன்களைத்தான் பிரதிபலிக்கும். இந்தச் சொற்றொடர் வருவதற்கு காரணமானவர் மூன்றாம் நெப்போலியன் ஆவார்; அரசாங்க ஆட்சிக் கவிழ்ப்பு முறையில் இவர் 1852ல் பிரான்சின் பேரரசரானார். போலீஸ், இராணுவம், அரசாங்க இயந்திரம் ஆகியவற்றை இவருடைய ஆட்சி நம்பியிருந்தது; இம்முறையில் இது பாராளுமன்ற வண்ணகளை அணிந்திருந்த இராணுவ, போலீஸ் சர்வாதிகாரமாகும்

ஜேர்மனியில் உள்ள புதிய பாரிய கூட்டணி இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை. பெயரளவிற்கேனும் அது இருக்கும் பாராளமன்ற பெரும்பான்மை முறையை கடைபிடித்துள்ளது. இது போனபார்ட்டிச ஆட்சிக்கு முந்தைய முறை என்று நன்கு விவரிக்கப்படலாம்; சமூக ஜனநாயகவாதியான ஹெர்மன் முல்லர் வைமார் குடியரசுக் காலத்தில் இருந்த கடைசிக் கூட்டணியை இது ஒத்துள்ளது.

1930ம் ஆண்டு முல்லர் அதிகாரத்தை மத்திய-வலது அரசியல்வாதியான Heinrich Brüning இடம் ஒப்படைத்துவிட்டார். பாராளுமன்ற தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ப்ரூனிங், அவசரகால ஆணைகள் மூலம் ஆட்சியை நடத்தினார்; இவருடைய ஆணைகள் குடியரசுத்தலைவர் Hindenburg ஆல் கையெழுத்திடப்பட்டு பின்னர் சமூக ஜனநாயக கட்சியின் ஆதரவைப் பெற்றன. இவ்விதத்தில்தான் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாதை இடப்பட்டது.

சர்வாதிகாரம் நிறைந்த போனபார்ட்டிச குணநலன்களை கொண்ட தற்பொழுதைய பாரிய கூட்டணி தோற்றுவிக்கப்பட்ட முறையை நினைவுகூர்ந்தால் அதன் குறிப்பிட்ட சக்தி நன்கு புலனாகும்.

இந்த ஆண்டு மே மாதம் காலத்திற்கு முன்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிற்கு ஷ்ரோடர் வந்தார்; இதற்குக் காரணம் அவருடைய பெருவணிக நண்பர்களும் ஆட்சி உயர்தட்டினரும் அடுத்த பாராளமன்ற தேர்தலுக்காக இன்னும் 18 மாத காலம் காத்திருக்கத் தயாராக இல்லை; அவர்களை பொறுத்தவரையில் ஒரு புதிய அரசாங்கம்தான் "சீர்திருத்தங்களை" விரைவில் கொண்டுவரும்; அதாவது ஊதியங்கள், வேலை நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நிகழ்த்தும்; அதற்கான முயற்சிகள் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சிக் கூட்டணியால் ஏற்கனவே தொடக்கப்பட்டு விட்டன. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலிய தேர்தல்களில் சமூக ஜனநாயக கட்சி பேரழிவு தரும் தோல்வியை கண்டபின், சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்குள்ளேயே அதிருப்தி பெருகியதோடு புதிதாக தோன்றியுள்ள இடது கட்சியின் பால் மக்களுடைய ஈர்ப்பு இருக்கும் என்ற ஆபத்தும் ஏற்பட்டது; இவற்றால் சமூக ஜனநாயக கட்சி முடக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.

அதே நேரத்தில், பாராளுமன்றத்தின் மேலவையில் இருந்த கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்- கிறிஸ்தவ சமூக யூனியன் பெரும்பான்மை மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடை செய்யலாயிற்று. தேசிய, சர்வதேச வணிக ஊடகம் முழுவதும் ஒரே மாதிரியாக ஜேர்மனிக்கு இப்பொழுது தேவையானது கடுமையான, புதிய தாராளவாத கொள்கை சீர்திருத்த திட்டங்கள்தான் என்று பறையறிவித்தன.

அந்த சூழ்நிலையில், ஷ்ரோடர் தாக்குதலில் முனைந்து பாராளுமன்றத்தை முன்கூட்டியை கலைக்கும் முயற்சியைக் கொண்டார். அப்பொழுதிருந்த சூழ்நிலையில் அவருடைய நடவடிக்கை அதிகாரத்தை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் மெர்க்கலுக்கும், "தடையற்ற சந்தை" ஆதரவுடைய தாராளவாத ஜனநாயக கட்சிக்கும் (FDP) கொடுத்துவிடுவது போல் ஆயிற்று.

ஜேர்மனிய அரசியல் அமைப்பை தெளிவாக மீறிய முறையில் ஒரு போலி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், ஷ்ரோடருடைய முயற்சிக்கு நடைமுறையில் இருக்கும் அனைத்துக் கட்சிகள், கூட்டாட்சி தலைவர் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கான நீதிமன்றம் ஆகியவற்றுடைய ஆதரவும் கிடைத்தது. தன்னுடைய சட்ட நெறிகளை பின்பற்றுவதைவிட ஜேர்மனியின் ஆளும் வட்டங்களுக்கு அரசாங்கத்தை மாற்றுவது முக்கியமாகப் போயிற்று.

எவ்வாறாயினும், பின் தொடர்ந்த தேர்தல் ஒரு எதிர்பாராத திருப்பத்தை கண்டது. முதலில், இடது கட்சி எதிர்பார்த்ததைவிட விரைவாக அமைக்கப்பட்டு, கருத்துக் கணிப்புக்களிலும், சடுதியில் கணிசமான ஆதரவை பெற்றது. இடது கட்சியின் ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சமூக ஜனநாயக கட்சி பொது நல அரசுக்குத் தான் பாதுகாப்பு வழங்குவது என்று காட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது: தன்னுடைய அரசாங்கத்தின் செயல்களையே குறைகூறும் தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தியது. மெர்க்கலுடைய வேலைத்திட்டத்தில் இருந்த புதிய தாராளக் கொள்கை கூறுபாடுகள் தெளிவான முறையில் வாக்காளர்களுக்கு புரிந்ததால் அவருக்கு இருந்த ஆதரவு பெரிதும் சரிந்துவிட்டதாக கருத்துக் கணிப்புக்கள் கூறின.

மெர்க்கலுக்கும் தாராளவாத ஜனநாயக கட்சி தலைவர் Guido Westerwelle க்கும் தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் நல்ல மூக்குடைப்பு கொடுத்தனர். மெர்க்கலுடைய புதிய தாராளப் போக்கிற்கு ஏதேனும் ஒருவித்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்ப்புத் தெரிவித்திருந்த கட்சிகளான இடது கட்சி, சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் புதிய பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையை கொண்டன; யூனியன் கட்சிகள் தாராளவாத ஜனநாயக கட்சி இவற்றை விட 40 இடங்கள் இவற்றிற்கு அதிகம் கிடைத்தன. கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுள் இருப்போரும் முக்கியமாக கிறிஸ்தவ சமூக யூனியனுள் இருப்பவர்களுள் பலர் மெர்க்கெல், வெஸ்டர்வெல்ல ஆகியோரின் போக்கை நிராகரித்தனர் என்பது தெளிவாயிற்று.

தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு ஜேர்மனிய ஆளும் வட்டங்கள் தள்ளப்பட்டன. மெர்க்கலும், வெஸ்டெர்வெல்லும் திட்டமிட்டிருந்தபடி பரந்த சமூக தட்டுக்களுடனான நேரடியான மோதல் என்பது ஆபத்தானது என்றும் தேர்தல் முடிவு காட்டியுள்ளபடி கணிசமான எதிர்ப்பையும் கொள்ளும் என்பதால் ஆலோசனைக்கு உகந்தது அல்ல என்று கருதப்பட்டது. பல நாட்கள், வாரங்கள், பேரம் பேசிய பின்னர் ஒரு பெரும் கூட்டணி அமைப்பது பற்றி ஒரு சில முக்கிய அரசியல் வாதிகளினால் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

திட்டத்தின் தன்மை பற்றி முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, மெர்க்கல், கிறிஸ்தவ சமூக யூனியன் தலைவர் ஸ்ரொய்பர், சமூக ஜனநாயக கட்சி தலைவர் முன்டெர்பெரிங், பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஷ்ரோடர் ஆகியோர் எந்தக் கட்சி எந்த மந்திரி பதவிகளைப் பெறும், எந்த அரசியல் வாதிகள் குறிப்பிட்ட பதவில் இருப்பர் என்பது பற்றி ஓர் இரகசிய கூட்டத்தில் முடிவெடுத்தனர். கடுமையான இரகசியம் காக்கப்பட்ட இக்கூட்டம் கிட்டத்தட்ட சதித்திட்டத்தின் தன்மையை கொண்டிருந்தது. பொது மக்கள் போலவே, கட்சிக் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் எதையும் அறியா நிலையிலேயே வைக்கப்பட்டனர்.

இறுதியில் ஏற்கப்பட்டுள்ள அரசாங்கம் மெர்க்கல் மற்றும் வெஸ்டெர் வெல்லினால் திட்டமிடப்பட்டிருந்த முறையில் கொள்கையில் இல்லாமல் எந்த வழிவகையில் அவற்றை செயல்படுத்துவது என்பதில்தான் வேறுபாட்டைக் கொண்டது. ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின்மீது வெளிப்படையான போரை அறிவிக்காமல், அந்த இலக்கை ஆபத்தில்லாமல், சூட்சுமமாக அடைய விரும்பியது.

சமூக ஜனநாயக கட்சியும் தொழிற்சங்கத் தலைமையில் இருக்கும் அதன் கூட்டாளிகளும் இந்த விதத்தில் முக்கிய பங்கை ஆற்ற உள்ளனர். 614 உறுப்பினர்களில் 448 பேர் என்ற பெரும்பான்மை இருப்பதால், பெரும் கூட்டணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எந்த எதிர்ப்பும் வரும் என்ற அச்சம் இல்லாமலும் அதனால் பொதுமக்களுடைய அழுத்தத்தில் இருந்தும் ஒதுங்கி உள்ளது.

சமூக ஜனநாயக கட்சியை பொறுத்தவரையில் இந்தப் பெரும் கூட்டணியில் அது ஒரு அசாதாரண செல்வாக்கை கொண்டுள்ளது; இதற்கு மொத்தம் எட்டு மந்திரி பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவியைத் தவிர கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு நான்கு மந்திரி பதவிகளும், கிறிஸ்தவ சமூக யூனியனுக்கு இரண்டும் உள்ளன; அவற்றில் Horst Seehofer என்பவர் மெர்க்கலுடைய தீவிர எதிரியாக யூனியன் கட்சிகளில் இருப்பவர்; அக்கட்சிகளில் அவர் மறைமுக சமூக ஜனநாயகவாதியாக கருதப்படுகிறார். சமூக ஜனநாயக கட்சியுடைய எண்ணிக்கை உயர்வைவிட முக்கியமானது தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பு உடைய நிதி, தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை என்ற மந்திரி பதவிகளை இது தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.

மெர்க்கலும் வெஸ்டர்வெல்லேயும் திட்டமிட்டிருந்தது போன்ற கடுமையான கொள்கைகளைத்தான் வரவிருக்கும் கூட்டாட்சி தொடரும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. நிதி மந்திரியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் ஸ்ரைன்புரூக்கை நியமித்ததில் இருந்தே இது வெளிப்படையாகிறது. இந்த வாரம் திங்கட்கிழமை கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன், ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி 14.5 பில்லியன் யூரோக்களை வெட்டும் என்று ஸ்ரைன்புரூக்கின் நெருக்கமான வட்டங்கள் புலப்படுத்தியுள்ளன.

இப்படி குறைக்கும் திட்டம் 2003ல் ஸ்ரைன்புரூக் மற்றும் ஹெசிய மாநில பிரதம மந்திரி ரோலண்ட் கொக் (CDU) இருவரும் தயாரித்த ஆவணத்தின் அடிப்படையில் உள்ளது. சராசரி வருமானங்கள் பெறுபவர்களுடைய வரிவிதிப்பு சலுகைகள் குறைக்கப்படும் என்பதோடு அடிப்படை சமுதாய இழையில் இருக்கும் பள்ளிகள், கல்வி, பொதுநலம் போன்றவற்றின் செலவினங்களும் குறைக்கப்படும். மேலும் ஜேர்மனிய நிறுவனங்கள் சமீபத்தில் மிக உயர்ந்த இலாபங்களை ஈட்ட உதவிய வரிவிதிப்பு நீக்கங்களுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது.

ஸ்ரைன்புரூக் ஜேர்மனிய போக்குவரத்து பாதைகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் கொண்டிருக்கிறார். புதிய வாகன போக்குவரத்துக் கட்டணங்கள் தனியார்மயமாக்குதலுடன் பிணைக்கப்பட்டால், சாதாரண பயன்பாட்டாளர்களையும், சுய தொழிலில் ஈடுபட்டிருப்போரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய திட்டங்கள் யூனியன் கட்சிகளினால்கூட ஏற்கப்படுவதற்குக் கடினமாகும்.

கொள்கையைப் பொறுத்தவரையில், சமூக ஜனநாயக கட்சி யூனியன் கட்சிகளுக்கு இடதாக நிற்கிறது எனக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது தெளிவு. பெரும் கூட்டணியில் இதன் முக்கிய பணி எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் பொதுமக்கள் எதிர்ப்பை அடக்க வேண்டும் என்பதாகும். இந்த விதத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைவரான முன்டர்பெரிங், தொழிலாளர் துறை மந்திரி என்னும் முறையில் ஒரு முக்கிய பங்கை வகிப்பார். சாதாரண கிறிஸ்தவ சமூக யூனியன் உறுப்பினர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள Seehofer இதேபோன்ற விதத்தில்தான் பணியாற்றுவார்.

இந்த சதித்திட்டத்தில் இடது கட்சியும் மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளது. பேர்லின், மெக்லென்பர்க்-வெஸ்டெர்ன் போமரேனிய மாநிலங்களில் இது சமூக ஜனநாயக கட்சி உடன் ஏற்கனவே அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு கூட்டரசு அரசாங்கம் முடிவெடுக்கும் கடும் சிக்கன கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. சமூக ஜனநாயக கட்சிக்கும் யூனியன் கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தைகள் துவங்குவதற்கு முன், இடது கட்சியின் தலைவர்களுள் ஒருவரான Gregor Gysi தன்னுடைய அமைப்பும் சமூக ஜனநாயக கட்சி உடன் 2009ல் மத்திய அரசு மட்டத்தில் கூட்டணியை நிறுவ முற்படும் என்று அறிவித்தார். இது இடது கட்சி சமூக ஜனநாயக கட்சிக்கு தீவிர எதிர்ப்பாக இப்பொழுது இராது என்பதற்கு தெளிவான குறிப்பாகும்.

சமூக ஜனநாயக கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான துறை வெளியுறவு அமைச்சரகமாகும். ஷ்ரோடரின் நம்பிக்கைக்கு உகந்த ஸ்ரைன்மையர் முன்பிருக்கும் கொள்கைக்கு தொடர்ச்சியை கொடுத்து உலக அரங்கில் ஜேர்மனி மீண்டும் முக்கிய பங்கைக் கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். குறிப்பாக அவர் ஜேர்மனிய வணிக வட்டங்களில் பெரிதும் ஆதரவிற்குட்பட்டுள்ள ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை கொள்வார். மெர்க்கல் அவ்வாறு நடந்து கொள்ளுவாரா என்பது பற்றி ஜேர்மனிய வட்டங்களுக்கு ஐயம் இருந்தது.

செப்டம்பர் மாத இறுதியில் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய உரை ஒன்றில், ஸ்ரைன்மையர் ரஷ்யாவுடன் இருநாட்டு உறவுகளில் உள்ள திறன்களைப் புகழ்ந்து பேசினார். "பால்டிக் கடல் எண்ணெய்க்குழாய்த்திட்டம் என்ற சமீபத்திய திட்டத்தில் இது தெளிவாக காணப்படலாம். உள்நாட்டு, சக்தி, சுற்றுச் சூழல், ஐரோப்பிய அரசியல், புவியியல் உத்தி, பாதுகாப்புக் கூறுபாடுகளை அனைத்தும் இதில் பிணைந்து உள்ளன." என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான துறை உள்துறையாகும். பல ஆண்டுகளாக முன்னாள் அதிபர் கோலுடன் Wolfgang Schäuble இணைந்து பணியாற்றி, 15 ஆண்டுகள் முன்பு கிழக்கு ஜேர்மனியுடன் (ஜேர்மனிய ஜனநாயக குடியரசு-GDR) ஒன்றுபடுவதற்கான உடன்பாட்டின் வரைவை இயற்றுவதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளார். அப்பொழுதில் இருந்து ஜேர்மனிய ஜனநாயக குடியரசுடைய மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மை, வாழ்க்கைத்தர சரிவுகள் என்று கடுமையான விலையை இதற்குக் கொடுத்து வருகின்றனர்.

ஒரு வலதுசாரி, முற்றிலும் பழைமைவாத அரசியல்வாதியான Schäuble இதைத் தவிர ஒரு ஊனத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார் (அவர்மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக அவர் ஒரு சக்கர நாற்காலியில்தான் செல்ல முடியும்). இவருக்கு பெரும் கூட்டணிக் கொள்கையை எதிர்த்து வளரும் எதிர்ப்புக்களை அடக்க வேண்டிய பொறுப்பும் கொடுக்கப்படும். உண்மையில் பாராளுமன்றத்தில் முக்கிய பெரும்பான்மை இருந்தாலும், பாரிய கூட்டணிக்கு உண்மையான மக்கள் ஆதரவு இல்லை என்பதுதான் உண்மை; இது பாராளுமன்றத்திற்கு புறம்பான எதிர்ப்பு அபிவிருத்தியடைகையில் தவிர்க்க முடியால் சர்வாதிகார வகை ஆட்சியை நோக்கி திரும்பும்.

போருக்கு பிந்தைய கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் இறுதியும் ஒரே பாரிய கூட்டணியாக இருந்தது, 1966 இருந்து 1969 வரை ஆட்சி புரிந்திருந்த Georg Kiesinger மற்றும் வில்லி பிராண்ட் அரசாங்கத்தில் கூட்டணிதான். அது அவசரகால சட்டங்கள் பலவற்றை கொண்டுவந்தவகையில் இழிவுற்றது. தற்போதைய பெரும் கூட்டணி அவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டுவரக்கூடிய அரசாங்கமாக இருக்கலாம்.

See Also:

ஜேர்மனி: அதிபர் மெர்க்கெலின் தலைமையில் பெரும் கூட்டணி
வாக்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஓர் அரசாங்கம்

Top of page