World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Joint Russian-Chinese war games: a reaction to aggressive US policies

கூட்டு ரஷ்ய-சீன போர் பயிற்சிகள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கான பிரதிபலிப்பு

By Peter Symonds
24 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

சீனாவும் ரஷ்யாவும் சென்ற வாரம் முதலாவது கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தின. "பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை" எதிர்த்து போரிடும் "2005 அமைதிப்பணி" என்று இதன் நோக்கம் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், மாஸ்கோவிலும், பெய்ஜிங்கிலும் புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் தொடர்பாக குறிப்பாக மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் ஆழமாக நிலவுகின்ற கவலைகளிலிருந்து இந்த போர் பயிற்சிகள் எழுந்தது என்பது எந்தவித சந்தேகத்திற்கிடமற்றவையாகும்.

தைப்பே அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கைக்காக நேரடியாக தைவானுக்கு எதிரேயுள்ள வுஜியன் மாகாணத்தில் அந்தப் போர் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று சீனா விரும்பியது. பெய்ஜிங், தைவானை ஒரு கைவிடப்பட்ட மாகாணம் என்று கருதுகிறது. அது சம்பிரதாய சுதந்திரத்தை நோக்கி எந்த நகர்வு மேற்கொண்டாலும் அதற்கு இராணுவ பதிலளிக்கக்கூடும் என்று திரும்ப திரும்ப எச்சரித்தது. ரஷ்யாவுடன் வுஜியானில் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் அது தைப்பேக்கு ஒரு கடுமையான அறிவிப்பை தந்திருப்பதுடன் சீனாவின் தாக்குதலுக்கு எதிராக தைவானை காத்து நிற்பதாக உறுதியளித்துக் கொண்டிருக்கும் வாஷிங்டனுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்திருக்கும்.

ரஷ்யா ஆரம்பத்தில் அந்தக் கூட்டு பயிற்சிகள் சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் மேற்கொள்ள வேண்டுமென முன்மொழிவு செய்திருக்கிறது. அது மத்திய ஆசியாவிற்கு அருகிலுள்ள ஜின்ஜியாங்கில் அமெரிக்காவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து இரு நாடுகளுக்கும் பொதுவான கவலைகள் உள்ளன. இறுதியில் ஒரு சமரசம் உருவாயிற்று. தைவான் தொடர்பாக சீனாவை மிகவும் பகிரங்கமாக ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வந்த மாஸ்கோ வுஜியனுக்கு வடக்கேயுள்ள ஷன்டோங் தீபகற்பத்தில் அந்தக் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள சம்மதித்தது, என்றாலும் அப்பகுதி சீனாவின் கடல் எல்லையை ஒட்டித்தான் உள்ளது.

உண்மையில் பெய்ஜிங்கை பொறுத்தவரை, இந்த இராணுவப் பயிற்சிகள் தேவையான நோக்கத்தை கொண்டிருக்கிறது. எட்டு நாட்கள் கூட்டு கடற்படை, விமானப்படை, மற்றும் தரைப்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக நேற்று, "நேரடி போர்'' பயிற்சி தொடங்கியது. அது ஒரு கடற்படை முற்றுகைக்கான ஒத்திகை நிலத்தில் இறங்குவது மற்றும் அப்பகுதியிலிருந்து கட்டாயப்படுத்தி பொதுமக்களை வெளியேற்றுவது என்பதாகும். அனைத்து மத்திய ஆசிய குடியரசுகளும் நிலத்தால் சூழப்பட்டவை என்பதைப் பார்க்கும் போது, இந்த கற்பனையான ஐக்கிய நாடுகள் படையெடுப்பின் மிகத் தெளிவான இலக்கு என்னவென்றால், தைவான் தீவாகும்.

சீனாவிலிருந்து 7,000, ரஷ்யாவிலிருந்து 1,800 ஆக ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏறத்தாழ 10,000 துருப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாஸ்கோ தனது போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களை காட்சிக்கு விட்டது. இவற்றில் நுட்பமான TU-95 மூலோபாய குண்டுகளும், TU-22 தொலைதூர இலக்கு குண்டு வீச்சு விமானங்களும் அடங்கும், அவற்றை சீனாவிற்கு விற்க முடியும் என்று நம்புகிறது. சீனாவிற்கு ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர் அளவிற்கு ரஷ்யா இராணுவத் தளவாட விற்பனைகளை மேற்கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆனால் இவற்றிக்கெல்லாம் மேலாக சீனாவும், ரஷ்யாவும் மூலோபாயத்தை கருத்தில் கொண்டிருக்கின்றன. குளிர் யுத்த காலத்தில், இரு நாடுகளையும் சேர்ந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் கசப்பான எதிரிகளாக செயல்பட்டன மற்றும் 1969ல் அமூர் ஆற்று எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நேரடியாக மோதல்களில் ஈடுபட்டன. சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட வளம்-செறிந்த மத்திய ஆசிய குடியரசுகளில் அமெரிக்கா தலையிட்டதால் மாஸ்கோவும், பெய்ஜிங்கும் அதிகரித்தளவில் கவலையடைந்தன.

அந்த பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை எதிர்த்து நிற்பதற்காக, 1996ல் பெய்ஜிங்கின் முயற்சியால், "ஷங்காய் ஐந்து" ("Shanghai Five") ரஷ்யா, சீனா, கசாகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகியவை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 2001 ஜூனில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்தது. அது ஷங்காய் கூட்டு அமைப்பு (SCO) என்றழைக்கப்பட்டது. அதன் நிரந்தர தலைமைச் செயலகம் பெய்ஜிங்கில் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் ஓரு பாகமாக குறிப்பாக மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்ட பின்னர், ஷங்காய் கூட்டு அமைப்பு சீன, ரஷ்ய ஒத்துழைப்பு நெருக்கமாவதற்கு ஒருவழியாக அமைந்தது. மாஸ்கோவும், பெய்ஜிங்கும், மத்திய ஆசியா தங்களது கொல்லைப்புறம் என்று கருதுகின்றன மற்றும் அந்த பிராந்தியம் ஒரு முக்கிய மூலோபாய அக்கறை உள்ள இடமாகும். சீனாவிற்கு, அதன் நாட்டில் துரிதமாக விரிவடைந்து விரைவாக வளர்ந்து வரும் எரிபொருள் தேவைகளை ஈடு செய்கின்ற எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வளமும் ஆகும்.

சென்ற மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் சந்தித்தனர் மற்றும் "21ம் நூற்றாண்டு உலக ஒழுங்கு" என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். வாஷிங்டன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படாவிட்டால் கூட, அந்த அறிக்கை "ஒருதலைபட்ச" ஆபத்து குறித்து குறிப்பிட்டது, (இது அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்திற்கான ஒரு இரகசிய சொல்லாகும்) மற்றும் அது ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு கூடுதல் பங்களிப்பு தர கோரியது. "தைவான் மற்றும் செச்சேன்யா போன்ற முக்கிய பிரச்சனைகளில் பரஸ்பர ஆதரவு" தருவதென்று அறிக்கை அறிவித்ததுடன் கொரிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

சில நாட்களுக்கு பின்னர், ஜூலை 5ல் கசாஸ்தானில் நடைபெற்ற ஷங்காய் கூட்டு அமைப்பு கூட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து தனது தளங்களை அப்புறப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா ஒரு கால அட்டவணையை அமைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" பொதுவான சொற்பாங்கில் ஆதரித்தாலும் ஆப்கானிஸ்தான் தலையீட்டின் "ஆக்கபூர்வமான கட்டம்" முடிந்துவிட்டது மற்றும் தளங்களை "தற்காலிகமாக பயன்படுத்துவதை" முடிவிற்கு கொண்டுவருவதற்கான காலக்கெடுவை அமெரிக்கா நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டியது.

அமெரிக்க அதிகாரிகள் இந்த ஆலோசனையை புறக்கணித்துவிட்டனர் மற்றும் சீனாவும், ரஷ்யாவும் மத்திய ஆசியக் குடியரசுகளை "மிரட்டுவதாக" குற்றம் சாட்டினர். இதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பூகோளபரப்பில் தனது இராணுவத்தை நிறுத்துவதற்கு வசதியானதொரு சாக்குபோக்காகவே ஆப்கானிஸ்தான் அமைந்திருந்ததாக வாஷிங்டன் கருதியது. ஷங்காய் கூட்டு அமைப்பு அறிக்கைக்கு பதிலளிக்கிற வகையில் உடனடியாக அமெரிக்கா தனது சொந்த அழுத்தங்களைக் கொண்டுவந்தது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஜூலை மாதக் கடைசியில் கிர்கிஸ்தானுக்கு பறந்து சென்று அதன் அரசாங்கத்திடம் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுகின்றவரை எவ்வளவு காலத்திற்கு தேவையோ அவ்வளவு காலத்திற்கு அமெரிக்க துருப்புக்கள் அங்கு நீடிக்கும் என்ற உறுதிமொழியை பெற்றார். தாஜிகிஸ்தான் வான எல்லைக்கு மேல் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து செல்வதற்கும் உறுதிமொழிகளை அந்நாட்டு அரசிடம் இருந்து பெற்றார். என்றாலும், உஸ்பெகிஸ்தான் பென்டகனுக்கு 180 நாட்கள் காலக்கெடு தந்து அந்நாட்டிலுள்ள கார்சி-கானாபாத் (Karshi-Khanabad) விமானத்தளத்திலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மத்திய ஆசியாவிலும், முன்னாள் சோவியத் ஒன்றிய இதர பகுதிகளிலும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அரசியல் சூழ்ச்சிகள் குறித்து எல்லா ஷங்காய் கூட்டு அமைப்பு உறுப்பினர்களும் கவலையடைந்துள்ளனர். ஜோர்ஜியா, உக்ரைன் மற்றும் கிர்கிஸ்தானில் "வண்ண" புரட்சிகள் என்று அழைக்கப்படும் விளைவுகளால் பொதுவாக வாஷிங்டனுடன் மீது அதிக அனுதாபம் உள்ள ஆட்சிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த தமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்று கவலையடைந்துள்ள உஸ்பெக் ஜனாதிபதி இஸ்லாம் கரீமோவ், மே தின கண்டனப் பேரணி நடத்தியவர்கள் மீது அவர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா விமர்சனங்கள் செய்தது குறித்து ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

ஷங்காய் கூட்டு அமைப்பு உச்சிமாநாட்டை தொடர்ந்து, ரஷ்ய-சீன இணை இராணுவப் பயிற்சிகள் எதிர்காலத்தில் அமெரிக்க குறுக்கீட்டிற்கும், தலையீட்டீற்கும் எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை அமைப்பதை நோக்கமாக கொண்டது. ஷங்காய் கூட்டு அமைப்பின் மத்திய ஆசிய உறுப்பு நாடுகள் அனைத்தும் போர் பயிற்சிகளை பார்வையிட பார்வையாளர்களை அனுப்புவதற்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். நெருக்கமான இராணுவ உறவுகள் பரந்தரீதியான மூலோபாயக் கூட்டணியை நோக்கிய ஆரம்பகட்ட நடவடிக்கை என்று மாஸ்கோவும் பெய்ஜிங்கும் தெளிவாகக் கருதுகின்றன.

விலாடிவொஸ்டொக்கில் நடைபெற்ற ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில், ரஷ்ய தளபதி யூரி பலுயேவ்ஸ்லி, ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் மூலோபாயக் கொள்கையில், சீனா "ஒரு முக்கிய நிலையை" வகிக்கிறது என்று வலியுறுத்திக் கூறினார். "ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதிலும் இன்றைய தினம் நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிக்கிற வகையில்" இருநாடுகளின் இராணுவங்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்கின்ற வகையில் இந்த போர் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.

அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான கருத்து அமுக்கி வாசிப்பதாகவே அமைந்திருக்கிறது. அமெரிக்க அட்மிரல் கரி ரப்ஹெட் அசோசியேட் பிரஸ்ஸிற்க்கு சென்றவாரம் பேட்டியளித்தபோது "அந்தப் பயிற்சியில் நமக்கு அதிக நலன்கள் உண்டு, அவர்கள் செய்யக்கூடிய பயிற்சிகளின் தன்மைகளில் நாம் நலன்கள் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். தகவலை திரட்டுவதற்காக அந்தப் பகுதிக்கு பென்டகன் இரண்டு வேவுபார்க்கும் விமானங்களையும் இரண்டு போர்கப்பல்களையும் அனுப்பியிருந்தது. அமெரிக்க அரசுத்துறை பேச்சாளரான சியன் மெக்கார்மெக் ஒரு எச்சரிக்கை குறிப்பையும் அத்துடன் சேர்த்துக்கொண்டார்: "அந்த பிராந்தியத்தில் தற்போதைய சூழ்நிலையை சீர்குலைக்கின்ற வகையில், [ரஷ்யாவும், சீனாவும்] எதையும் செய்யமாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்."

என்றாலும், ஒரு ரஷ்ய-சீனக் கூட்டணி ஒரு சாத்தியமான அச்சுறுத்தல் நோக்கத்தை கொண்டிருக்கின்றது என்று வாஷிங்டன் கருதுகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. ஏற்கனவே அமெரிக்கா ஜப்பானுடனும், தென்கொரியாவுடனும் சம்பிரதாய இராணுவக் கூட்டணிகளை வைத்திருக்கிறது மற்றும் வடகிழக்கு ஆசியாவில் கணிசமான அமெரிக்கத் தளங்கள் உள்ளன. வடகொரியாவை சமாளிக்கிற அவர்களது ஆற்றலை மீளாய்வு செய்கின்ற நோக்கில் எண்ணிக்கை குறிப்பிடப்படாத அளவிற்கான தென்கொரியா துருப்புக்களுடன் 10,000 அமெரிக்க துருப்புக்கள் தற்போது இரண்டுவார கூட்டுப்போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, புஷ் நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அறைகூவல் விடுகின்ற அளவிற்கு சீனா பொருளாதார ரீதியாக விரிவடைந்து வல்லமை பெற்றுக்கொண்டு வருவது குறித்து புஷ் நிர்வாகம் கவலையடைந்துள்ளது. 2000ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில், புஷ் பெய்ஜிங்கை ஒரு மூலோபாய பங்குதாரர் அல்ல, அது ஒரு "மூலோபாய போட்டியாளர்" என்று அறிவித்தார். என்றாலும், குறிப்பாக பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போர் என்றழைக்கப்படுவதை பெய்ஜிங் ஆதரித்தப்பின்னரும், அணுத்திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் பங்குபெறுவதற்கு வடகொரியாவிற்கு அழுத்தங்கள் கொடுத்து உதவிய பின்னரும் வெள்ளை மாளிகை தனது வாய்வீச்சின் வேகத்தை குறைத்துக்கொண்டது.

அத்தகையதொரு அணுகுமுறை மன்னிக்க முடியாத கோழைத்தனம் என்று குடியரசுக் கட்சியின் வலதுசாரி பிரிவுகள் கருதுகின்றன. அண்மையில் கருத்து தெரிவித்துள்ள அதிதீவிர வலதுசாரி பத்திரிகையான வீக்லி ஸ்டாண்டர்ட் சீன இராணுவம் பற்றி இந்த ஆண்டு பென்டகன் மீளாய்வு செய்துள்ள அறிக்கையை "மகிழ்வு பேச்சின் ஒரு கலவை, பலமற்ற மூலோபாய சிந்தனைகள் மற்றும் சிந்திக்கவேண்டிய உண்மைகள்'' என்று கண்டித்துள்ளது. மற்றும் புஷ் நிர்வாகம் ஆரம்பத்தில் "சீனாவின் மூலோபாய நோக்கம் குறித்து மிகுந்த கலவரமூட்டும் முடிவுகளை அறிவித்திருந்ததை "தற்போது மட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக'' குற்றம் சாட்டியது. முடிவுரையில், அது அறிவித்திருப்பது: "பெய்ஜிங்குடன் நமது 'ஆக்கபூர்வமான' உறவு பற்றிய நமது நல்லவிதமான வார்த்தைஜாலங்கள் சீனா போட்டியை தனக்கு ஒருபக்கமாக சாதகமாக்கிக் கொள்கையில் நம்மை ஒரு பாதகமான நிலையில் விட்டுள்ளது. நடைமுறை விவகாரம் என்று பார்க்கும் போது, சீனாவின் புதிய முயற்சிகளுக்கு ஈடுகொடுக்க நேரிடும்போது இந்த அணுகுமுறை நம்மை பின்தங்க வைப்பதுடன், நமக்கு பண பற்றாக்குறையையும் ஏற்படுத்திவிடும்".

மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது, இந்தக் கருத்துக்கள் முற்றிலும் அபத்தமானவை. பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது சீனா வளர்ச்சி குன்றியதாகும் மற்றும் சீனாவின் பக்கத்து நாடுகளில் திட்டமிட்டு அது கூட்டணிகளை உருவாக்கியும், இராணுவத் தளங்களையும் அமைத்திருக்கிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும், சர்வதேச ரீதியாகவும் தட்டிக்கேட்பாரற்ற அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எந்த வகையிலும் சவாலாக தோன்றக்கூடிய வல்லமையுள்ள நாடுகள் கூட்டணி அல்லது தனி ஒரு நாடு உருவாகாது உறுதி செய்து கொள்வதற்கு போதுமான வலிமையுள்ள நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் எடுக்கவில்லை என்பதே வீக்லி ஸ்டாண்டர்ட் எழுத்தாளர்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது.

என்றாலும், புஷ் நிர்வாகத்தின் அரசியல் சூழ்ச்சியும் மிரட்டலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அதன் முரட்டுத்தனமான இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைநகரங்களில் ஒரு பிரதிபலிப்பை தூண்டிவிட்டிருக்கிறது. தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் நசுக்கப்படுவதை வாஷிங்டனின் போட்டி நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான மேலும் ஒரு சமிக்கைதான் கூட்டு சீன-ரஷ்ய இராணுவப் பயிற்சிகள் ஆகும்.

Top of page