World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Partei für Soziale Gleichheit certified to take part in German federal elections

ஜேர்மன் மத்திய தேர்தல்களில் கலந்து கொள்ள சோசலிச சமத்துவக் கட்சிக்கு அங்கீகாரம்

By the Editorial Board
17 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 18-ல் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு (Bundestag) நடைபெறவிருக்கின்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆகஸ்ட் 12-ல் பேர்லினில் நடைபெற்ற மத்திய தேர்தல் கமிஷன் (FEC) கூட்டத்தில் முடிவு செய்தது. ஜோஹான் ஹெலன் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில், கமிஷன் ஒருமனதாக ஒப்புதலை தெரிவித்ததுடன் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பங்கெடுத்துக் கொள்வதற்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முன் கூட்டியே கூட்டாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என்று மே 22-ல் ஜேர்மன் அதிபர் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக்கட்சி-SPD) அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தேர்தலில் உடனடியாக PSG வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அனுமதி கோரியது. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்களில் SPD படுதோல்வியை சந்தித்த அன்று மாலையிலேயே ஷ்ரோடர் தேர்தல் நடத்துவதற்கான அழைப்பை விடுத்தார்.

PSG உடனடியாக மனுச் செய்ததால் FEC தனது கூட்டத்தில் முடிவு செய்த ஐந்தாவது கட்சியாக அது இடம் பெற்றது. ஜோஹன் ஹெகலன் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான எல்லா நிபந்தனைகளையும் PSG நிறைவேற்றியிருப்பதாக விளக்கினார் மற்றும் கட்சியின் கடந்தகால தேர்தல் நடவடிக்கைகளை சுருக்கமாக எடுத்துரைத்தார், அதற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கோர்னேலியா சொன்டாக் வோல்காஸ்ட் தேர்தல் கமிஷனில் SPD சார்பில் இடம் பெற்றிருப்பவர், பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் PSG-ல் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதாக விமர்சித்தார் மற்றும் பல சகாப்தங்களாக அரசியலில் தீவிரமாக இருந்து வருகிற ஒரு கட்சிக்கு 500 க்கும் குறைவான உறுப்பினர்கள் இருக்கின்ற சூழ்நிலையில் ஜேர்மன் தேர்தல் சட்டப்படி அந்தக் கட்சியை அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டார்.

கமிஷன் விசாரணையில் PSG-யின் பிரதிநிதியான உல்ரிச் ரிப்பேர்ட் அந்தக் கேள்விக்கு பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது ரிப்பேர்ட் விளக்கம் தரும்போது ஒரு கட்சியின் பலத்தை அதனுடைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்து மட்டுமே அளவிட கூடாது. அப்படி செய்வதாக இருந்தால் மிக அண்மைக் காலத்தில் கணிசமான அளவிற்கு தங்களது உறுப்பினர்களை இழந்துவிட்ட கட்சிகளை அரசியல் அந்தஸ்த்தில் குறைத்து மதிப்பிட வேண்டியிருக்கும் என்று உல்ரிச் ரிப்பேர்ட் விளக்கினார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக PSG எட்டு வகையான தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினார் மற்றும் சென்ற ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களில் 25,000 வாக்குகளை பெற்றுக் கொண்டதை குறிப்பிட்டார். ``இது தவிர,'' தினசரி இணையதள செய்தி பத்திரிகையான உலக சோசலிச வலைத் தளத்தை நாங்கள் வெளியிடுகிறோம், அது பத்திற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது மற்றும் மிக வேகமாக வாசகர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டிருக்கிறது`` என்று அவர் குறிப்பிட்டார்.

``பொது அரசியல் விவாதங்களில் PSG பங்கெடுத்துக் கொள்வது தொடர்பாக குறைந்தபட்ச சந்தேகத்திற்கும் இடமிருக்க முடியாது மற்றும் ஜேர்மன் தேர்தல் சட்டம் விதித்துள்ள எல்லா நிபந்தனைகளையும் PSG நிறைவேற்றிருக்கிறது`` என்று ரிப்பேர்ட் வலியுறுத்திக் கூறினார்.

இந்த அறிக்கை தமக்கு மன நிறைவு அளிப்பதாக தேர்தல் கமிஷன் தலைவர் அதற்கு பின்னர் அறிவித்தார் மற்றும் தேர்தலில் கலந்து கொள்ள PSG யை ஏற்றுக் கொள்வதாக பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை கமிஷனின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.

கூட்ட ஆரம்பத்தில், நாடாளுமன்றத்தில் அல்லது மாநில பாராளுமன்றங்களில் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே எட்டு கட்சிகள் தேர்தலில் பங்குபெற அனுமதிக்கப்பட்டிருக்கின்றன, எனவே அவை மத்திய தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அந்த எட்டு கட்சிகளில் ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள பிரதான அரசியல் குழுக்களும் அடங்கும் - SPD, CDU (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்), CSU (கிறிஸ்தவ சமூக யூனியன்), பசுமைக் கட்சிக்காரர்கள், FDP (சுதந்திர ஜனநாயகக்கட்சி) மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடதுசாரி கட்சியும் அடங்கும். மீதமுள்ள இரண்டு குழுக்களான அதிதீவிர வலதுசாரி கட்சிகள் சில ஜேர்மன் மாநில நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களை பெற்றிருக்கிறது----அவை ஜேர்மன் மக்கள் ஒன்றியம் (DVU) மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சி (NDP).

மொத்தம் 58 கட்சிகளும் அரசியல் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்த மனுச் செய்திருந்தன, அவற்றில் மூன்று தங்களது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக் கொண்டன. 26 கட்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் 29 கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ள குழுக்களில் பல வலதுசாரி குழுக்களும் அடங்கும், அவற்றில் பழைமைவாத ஜேர்மன் மக்கள் கட்சியும், ஜேர்மன் ரைக் கட்சியும் (PDR) மற்றும் கத்தோலிக்க ஜேர்மன் மத்திய கட்சியும் அடங்கும்

வாக்களிக்காத கட்சி என்றைழக்கப்படுவது வேட்பாளர் மனுக்களை நிறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் கமிஷனில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது, அதற்கு கோலோன் நகரத்திலும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பிராந்தியத்திலும் ஓரளவிற்கு ஆதரவு உள்ளது. அந்த குழுவை பிரதிநிதித்துவ படுத்தும் டாக்டர். வேர்னர் பீட்டர்ஸ், தேர்தலை தவிர்த்துவிடுதல் என்று தான் கூறவில்லை என வலியுறுத்திக் கூறினார், ஆனால் ``அதற்கு நேர்மாறாக, அனைத்து நிலை பெற்றுவிட்ட கட்சிக் குழுக்களுக்கும் எதிராக வாக்காளர்களை அணிதிரட்ட விரும்புவதாக`` குறிப்பிட்டார். இந்த அமைப்பின் விதிகள் அக்கட்சி வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் மட்டுமே செறிவாக உள்ளது என்பதை காட்டுவதாக ஹெலன் விமர்சித்தார், ஆனால் அப்படியிருந்தாலும் அந்தக் குழு இந்த ஆண்டு அந்த மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த பீட்டர்ஸ் 2006-ல் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமது முயற்கிளை செயல்முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ள தமது அமைப்பு திட்டமிட்டு மறுத்துவிட்டதாக வாதிட்டார். இந்த இளவேனிற் காலத்தில் ''முன் கூட்டியே தேர்தல்களை நடத்துவது என்று அதிபர் ஜனநாயக விரோதமாக முடிவு செய்தது முற்றிலும் தனது அமைப்பை வியப்பில் ஆழ்த்தியது என்று குறிப்பிட்டார். மத்திய தேர்தல்களில் தனது அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டதை தேர்தல் கமிஷன் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் பீட்டர்ஸ்சின் அமைப்பு தந்திருந்த மனுவை கமிஷன் தள்ளுபடி செய்தது, அதற்கு பீட்டர் கண்டனம் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற இறுதி தேர்தல்களிலும் இதே அளவிற்கு கட்சிகள் மற்றும் குழுக்கள் புறக்கணிக்கப்பட்டன. 47 கட்சிகள் மனுச்செய்திருந்தன, அவற்றில் 23 அங்கீகரிக்கப்பட்டது மற்றும் 24 தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 1998-ல் 68 மனுக்களில் 34 மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற, தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே கட்சி PSG தான். ஜேர்மனியில் பெயரளவிற்கு செயல்பட்டு வந்த இடதுசாரி அமைப்புக்கள் அனைத்துமே ஏறத்தாழ அண்மையில் உருவாக்கப்பட்டு ஓஸ்கார் லாபொன்டைன் தலைமையிலுள்ள இடதுசாரி கட்சியிலும் (முன்னாள் SPD கட்சியினர்) மற்றும் கிரிகோர் கைசியின் தலமையில் இயங்கிவரும் ஜனநாயக சோசலிச கட்சியிலும் இணைந்துவிட்டன. (கிழக்கு ஜேர்மன் ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சியின் வாரிசான----PDS) மாவோயிச குழுவான MLPD செப்டம்பர் தேர்தலில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது, இடதுசாரி கட்சியில் பங்குபெற அது முன்வந்து ஆனால் அது புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

மற்றொரு ஜேர்மன் ஸ்ராலினிச அமைப்பான DKP, (ஜேர்மனி கம்யூனிஸ்ட் கட்சி) சென்ற ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியது, இடதுசாரிக் கட்சியில் பங்கெடுத்துக் கொள்வாதா? இல்லையா? என்பது குறித்து அவற்றிற்குள் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. FEC கூட்டத்தில், DKP-ன் அதிகாரம் பெற்ற நிர்வாகக் குழு இலையுதிர்கால தேர்தலில் தமது அமைப்பின் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டது.

லாபொன்டைன் மற்றும் கைசி தலைமையிலான இடதுசாரி அணிகள் திரும்ப குழுவாக சேர்வதை PSG எதிர்த்து நிற்கிறது. தனது தேர்தல் அறிக்கையிலும் தனது தேர்தல் பிரசார கூட்டங்களிலும் PSG விடுத்திருக்கும் எச்சரிக்கை என்னவென்றால் தேர்தல்களை ஒரு புதிய சுற்று சமூக மற்றும் அரசியல் தாக்குதல்களை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றாலும் லாபொன்டைனும், கைசியும் தொழிலாள வர்க்கத்தை சாந்தப்படுத்தச் செய்யும் ஒரு மாயையை உருவாக்குவார்கள். அது ஒரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி என்ற முறையில் பிரதான கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து 1970களின் தன்மையில் சீர்திருத்தவாத பாணி அரசியலை கொண்டுவந்து விட முடியும் என்பதுதான்.

PSG தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ``இந்ததத் தேர்தலில், தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயகக்கட்சி - பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கத்தின் திவால்தன்மையை மட்டும் அவர்கள் முகம்கொடுக்கவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு வரலாற்று நெருக்கடியையும் எதிர்கொள்கின்றனர்.

``உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டு விட்டதாலும் தேசிய அரசு முறையில் மோதல்கள் வளர்ந்து கொண்டு வருவதாலும் கடந்த நூற்றாண்டின் தீர்த்துவைக்கப்படாத அனைத்து பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் உலக பொருளாதாரம் ஒரு மோதல் கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஈராக் போரும் அந்த நாட்டின் மீது நடத்தப்பட்டு வருகின்ற கொடூரமான இராணுவ ஆக்கிரமிப்பும் ஒரு ஆரம்பம்தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசாங்கம் உலகையே மீண்டும் மறுகூறுபோட முயன்று வருகிறது மற்றும் மிக அப்பட்டமான முதலாளித்துவ சூறையாடல் மற்றும் சுரண்டல் அடிப்படையில் ஒரு பூகோள ஒழுங்கை நிறுவ விரும்புகிறது``

ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகரீதியாகவும் ஒரு சோசலிச முன்னோக்குக்கான அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்கின்ற ஒரு பரந்த அரசியல் வெகுஜன இயக்கத்தை வளர்ச்சிபெற PSG முயன்று வருகிறது.

PSG தனது வேட்பாளர்களை நான்கு மாநிலங்களில் பேர்லின், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா, ஹெஸ்ஸன் மற்றும் சாக்சோனியில் நிறுத்துகிறது மற்றும் வாக்குப்பதிவு தகுதிபெறுவதற்கு ஏறத்தாழ 10,000 கையெழுத்துக்களை திரட்டியிருக்கிறது. ஜேர்மனியின் தேர்தல் சட்டப்படி ஒரு மாநிலத்தில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிற கட்சி அந்த மாநிலத்தில் 2000 கையெழுத்துக்களை திரட்டியாக வேண்டும். தனது பிரச்சார நடவடிக்கையின்போது கட்சி அதன் கொள்கைகளுக்கு பரந்த அனுதாபத்தை பெற்றுக்கொண்டது.

Top of page