World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The Israeli state and the ultra-right settler movement

இஸ்ரேல் அரசும் அதிதீவிர வலதுசாரி
குடியேறியோர் இயக்கமும்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

By Jean Shaoul
16 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

1967ல் நாசர் இஸ்ரேலுடன் ஒரு மோதலுக்கு தூண்டியபோது இஸ்ரேலின் பலம்வாய்ந்த படைகள் குறித்து தெளிவாகவே அறிந்திருந்த அமெரிக்கா நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டான் மீது 1967 ஜூனில் நடைபெற்ற ஆறு நாள் போருக்கு இஸ்ரேலுக்கு அனுமதியளித்தது.

ஜூன் போரை, தொழிற்கட்சி தலைமையிலான ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் நடத்தியது, அதில் முதல் தடவையாக சியோனிச அரசு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், ஹெரூட் கட்சி என்று மறுபெயரிடப்பட்ட திரித்தல்வாத இயக்கத்தை (Revisionist movement) சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றமை இஸ்ரேலின் வரலற்றில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது.

அது பாலஸ்தீனிய அகதிகளின் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கியது ----சிலர் இரண்டாவது முறையாக அகதிகளாகினர்---- மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடு பாலஸ்தீனிய அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் வரை நீடித்தது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் பெரிய இராணுவ சக்தியாக மாறியது. அது பெரிய இஸ்ரேல் (Great Isreal) கொள்கையை தொடக்கியது மற்றும் ஒரு விரிவாக்கும் கொள்கையை சார்ந்திருக்கக்கூடிய மற்றும் அதை உறுதியாக பின்பற்றக்கூடிய ஒரு புதிய சமூகத்தட்டை உருவாக்கியது.

தொழிற்கட்சிக்கு உள்ளேயும் அதன் அரசியல் பங்குதாரர்களுக்கிடையிலும் இது ஒரு புதிய மிக வெளிப்படையான ஏகாதிபத்திய மற்றும் யிட்ஷாக் ராபின், மோஷே தயான், யிகால் அலோன் மற்றும் ஏரியல் ஷரோன் போன்ற இனவாத தட்டினரைக்கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிகள் உருவாக்கியது தெளிவாக வெளிப்பட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த போர் முடிந்து சில வாரங்களுக்குள் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் தேசிய ஐக்கிய அரசாங்கம் குடியிருப்புக்களை ஸ்தாபித்தது. தொழிற்கட்சியின் ஒரு அமைச்சரும், முன்னாள் தளபதியுமான யிகால் ஆலோன், ஜோர்டான் பள்ளத்தாக்கும் கோலன் மலையுச்சிகளும் இஸ்ரேல் எல்லைகளுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தார். இந்த ஒரு முன்மொழிவு பின்னர் தொழிற்கட்சியின் அதிகாரபூர்வமான கொள்கையாக ஆயிற்று. அவர் ஹெப்ரோன், கிர்யாட் அர்பா ஆகியவற்றிற்கு அருகில் ஒரு யூத குடியிருப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார் என்றாலும், அது ஒரு தசாப்தத்திற்கு பின்னர் வலதுசாரி குடியிருப்போருக்கான சக்திகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியது வரை அது அமுல்படுத்தப்படவில்லை. இன்றையதினம், இந்த நகரம் யூத தீவிரவாதத்தின் கோட்டையாக உள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றிருந்த எல்லாக் கட்சிகளுமே இந்தக் கொள்கையை ஆதரித்தன. அரபு நகரங்களிலும், ஜாபா மற்றும் ஹைபா அருகாமையிலும், யூதர்கள் வாழ முடியும் என்றால் அவற்றை தங்களது சட்டப்பூர்வமான வீடுகள் என்று கருத முடியுமென்றால் நப்லஸ் அல்லது ஹெப்ரான் நகரங்களில் அவர்கள் வாழ்வதை தடுப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

கோல்டா மேயர் 1970ல் பிரதமரானார் ஏனென்றால், அவர் தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகளின் தேசியவாத முன்னோக்கை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு மற்றும் வரலாற்று அடிப்படையில் புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள நாட்டில் யூத மக்கள் தனியுரிமையுடன் வாழ்வதற்கு சட்டபூர்வமாகவும் தார்மீக அடிப்படையிலும் சான்றுகள் இருப்பதாக கூறினார்.

ஆனால் விரோதப்போக்குள்ள அரபுமக்களால் சூழப்பட்டிருப்பதால் பெரும்பாலான இஸ்ரேலியர்களுக்கு அந்த யூத குடியிருப்புக்கள் கவர்ச்சிகரமாக அமையவில்லை. எனவே, மேயர் தலைமையின் கீழ் மதவாத புலம்பெயர்ந்தோரின் ஒரு புதிய அலையை, பிரதானமாக அமெரிக்காவிலிருந்து வந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆக இந்த குடியிருப்புக்கள் ஒரு சிறிய ஆனால் அரசியலில் செல்வாக்குமிக்க சமூக தட்டை உருவாக்கியது, அது இஸ்ரேலிய முதலாளித்துவத்தின் மேலாதிக்க தட்டினர்கள் மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கையில் மிகவும் நேரடியான சொந்த நலன் கொண்டதாக செயல்பட்டுவந்தது. அது சில மிக பிற்போக்கு சக்திகளுக்கு கவர்ச்சிக்கான முனையை வழங்கியடன் அத்தகையவர்கள் இல்லாமல் தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகள் அரபு எல்லைகளுக்குள் இந்த குடியிருப்புக்களை ஏற்படுத்தியிருக்க முடியாது.

புதிய வலதுசாரி சக்திகளின் தோற்றமும் தன்மையும்

இஸ்ரேலின் 1967 வெற்றியால் சில மதவாத வலதுசாரி குழுக்களுக்கு (இஸ்ரேலிய இராணுவ ஸ்தாபனங்கள் மற்றும் CIA தவிர அனைவருக்கும்) வியப்பபளிப்பதாக இருந்ததுடன், அவர்களுக்கு இது ஒரு அற்புதம் அல்லாமல் வேறொன்றும் அல்ல என தோன்றியது. இது ''உயிர்த்தெழும் விடுதலையின் தொடக்கம்'' என்றும் ஜீடியாவிற்கும், சமாரியாவிற்கும் இடையில் ''இஸ்ரேலின் முழு நிலப்பரப்பையும்'' பெறுவதற்கான விவிலிய நோக்கத்தை அடைவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதாகவும் அவர்கள் கருதினர்.

அவர்கள் ஒரு புதிய ''இஸ்ரேல் மண்'' என்ற மதத் தத்துவத்தை உருவாக்கினர், அது உயிர்த்தெழுதல் போக்கிற்கு மேற்குக்கரை குடியிருப்புக்கள் மிக முக்கியமானவையாக என்ற சியோனிச அரசு பற்றிய விவிலிய அர்த்தப்படுத்தலாக கருதப்படுகின்றது. அது ஒரு அடிப்படைவாதத்தை கொண்டதுமாகும்: அக்கருத்து விவிலிய யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கான அடிப்படையை தருகின்றன மற்றும் யூத அரசிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கான நெறிமுறைகளை வகுத்தளிக்கின்றது.

இதில் அவர்கள் தமது முஸ்லீம் சகோதரத்துவ (Muslim Brotherhood) அமைப்பின் நடவடிக்கைகளை எதிரொலிக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். மதச்சார்பற்ற சியோனிஸ்ட்டுகள் எப்போதுமே யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு திரும்ப வேண்டும் என்று ஊக்குவித்து வந்தாலும்கூட அவர்கள் அதை தேசியவாத அர்த்தத்தில் செய்தனர். அவர்களது வாதம் என்னவென்றால், யூதர்கள் ஒரு நாடு நிறுவது என்பதுதான். இந்த மதக்குழுக்களுக்கு ''திரும்புவது'' என்பது நிலத்தில் குடியேற வேண்டுமென்ற மதக்கடமையோடு பின்னிப்பிணைந்திருக்கும் கடமையாகவும், யூத மத நம்பிக்கைகளின் மறுமலர்ச்சியாகவும் கருதினர்.

அவர்களது சக்திகள் மிகச் சிறியவை என்றாலும் முதல் குடியேற்றக்காரர்கள் வந்ததிலிருந்து இந்த அதிதீவிர மதவாதக்குழுக்கள் இஸ்ரேல் அரசியலை வலதுசாரி பக்கம் திருப்புவதில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்திருக்கின்றன. குறைந்தபட்சம், இதில் ஒரு பாகமாக, அவர்கள் தங்களது ஒரு முக்கிய கூட்டாளியான தளபதி ஏரியல் ஷரோனை பெற்றனர்.

ஷரோன் ஒரு தொழிற்கட்சி சியோனிச பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், அவரது முரட்டுத்தனம் சந்தர்தர்ப்பவாதம் மற்றும் அவரது நடவடிக்கைகளின் நிச்சயமற்ற தன்மை ஆகியவை அவர் ஒரு தளர்வான பீரங்கி என்ற ஒரு பெயரை பெற்றுத்தந்தது. 1973ல் அவர் இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்த பின்னர், அவர் இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸ்சட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். லிக்குட் கட்சியின் முன்னோடியான தாராளவாத கட்சியின் சார்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டிற்குள் தனது இராணுவப் பணியை மீண்டும் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். தனது சொந்தக்கட்சியை உருவாக்குவதற்கு முன்னர் சிறிது காலம் தொழிற்கட்சி பிரதமர் ராபினின் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். மற்றும் அதற்கு பின்னர் 1977ல் தனது கட்சியை கலைத்துவிட்டு லிக்குட் கட்சியில் சேர்ந்தார்.

ஒரு மதச்சார்பற்ற யூதர், இராணுவத்திலிருந்த ஷரோனிற்கு சியோனிச அரசும் அதன் குடியிருப்புக்களும் விரிவடைவது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு எல்லைகளை கொண்டதாக இருக்க வேண்டும். அவர் இராணுவத்திலிருந்து 1973ல் இராஜினாமா செய்வதற்கு முன்னரே ஒரு அரசியல் பணியை மேற்கொள்வதற்காக ஷரோன் மதவாத இயக்கத்தோடு ஒரு கூட்டணி சேர்ந்துகொண்டார், அது புதிய யூத குடியிருப்புக்களுக்கு தேவைப்படுகின்ற சக்திகளை வழங்கும் என்று அவர் கருதினார். மத அடிப்படையில் குடியேறுவோருக்கு ஷரோன் இராணுவ அடிப்படையில் நியாயம் கற்பித்தார் மற்றும் பின்னர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார். அவர் விவசாய அமைச்சராக ஆனதும் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கினார்.

அரசியல் சியோனிஸ்ட்டுகளின் இராணுவத் தேவைகள் மதவாத சியோனிஸ்ட்டுகளோடு இணைந்து சென்றன. உண்மையிலேயே, இஸ்ரேலின் குடியிருப்புக்கள் மற்றும் நிலத்தை பறிப்பது ஆகியவை எந்த நேரத்தில் எல்லாம் சட்டபூர்வமாக இஸ்ரேலின் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்சேபனைக்கு உள்ளாகிறதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்தக் குடியிருப்புக்களின் பாதுகாப்பு அடிப்படையில் நியாயப்படுத்தி அரசாங்கம் குடியிருப்புகளை சார்ந்தே இருக்ககூடியதாக இருந்தது.

ஆனால் குடியிருப்புக்கள் மேம்படுத்தப்படுகின்ற வேகம் வலதுசாரிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையவில்லை. எகிப்துடன் 1973 அக்டோபர் போருக்கு பின் உருவான போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேலின் பூகோளஅரசியல் படத்தை சேதப்படுத்திவிட்டது. முதல் தடவையாக ஷினாய் தீபகற்பத்தில் எல்லைகளை விட்டுக்கொடுக்கின்ற கட்டாயம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது, அந்த நேரத்தில் அப்பகுதிகளில் குடியேறியவர்கள் 1967 தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இடம்பெற்றிருந்த தேசிய மதவாத கட்சியில் சேர்ந்தனர். எல்லைகளை விட்டுக்கொடுத்ததை அவர்கள் எதிர்த்தனர். அது அவ்வாறு செய்யத் தவறியதால் குடியிருப்போருக்கான இயக்கம் அரசியல் அடிப்படையில் வளர்வதற்கு மேலும் தூண்டுதலாக அமைந்தது.

1974ல், இந்த சக்திகளில் சில தேசிய மதவாதக்கட்சியின் ஒரு கன்னையாக செயல்பட்டவை Gush Emunim என்ற நம்பிக்கையாளர்கள் கூட்டு என்றழைக்கப்படுகின்ற ஒரு அமைப்பை மத ஆர்வலர்களில் ஒருவரான ராபி மூஷே லேவிங்கர் (Rabbi Moshe Levinger) தலைமையில் அமைத்தன. குஷ் எமுனிம் என்றழைக்கப்படுகின்ற இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியுடனும் சம்மந்தப்படாத நாடாளுமன்றத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு ஆதரவு திரட்டும் குழுவாகும். குடியிருப்போர் இயக்கத்தின் தந்தையாக லெவிங்கர் ஆனார்.

அதற்கு மேலும் வலதுசாரி பக்கம் இருந்தவர் அமெரிக்க யூத பாதுகாப்பு கழக (JDL) தலைவரான ராபி மேயர் கஹனே. இது ஒரு தீவிரவாத விழிப்புணர்வு இயக்கமாகும், அதன் அறிவிக்கப்பட்ட நோக்கம் நியூயோர்க் நகர அருகாமையில் உள்ள யூத குடியிருப்புக்களை தற்காத்து நிற்பதும், தெருக்களில் நடக்கின்ற குற்றங்களையும் யூதஎதிர்ப்புகளை எதிர்த்து நிற்பதும் ஆகும். அதற்கு பின்னர், யூத பாதுகாப்பு கழகம் சோவியத் யூதர்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக தீவிர பிரசாரத்தை செய்தது மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் யூதர்கள் இஸ்ரேலுக்கு புலம்பெயர்வதற்கு அனுமதி தர மறுத்ததையும் ரஷ்ய கலைஞர்களுக்கு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதையும் எதிர்த்து போராடியதுடன், ஆர்பாட்டங்களையும் நடத்தியது, ரஷ்ய அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியில் அடிக்கடி வன்முறையில் ஆர்பாட்டங்களை நடத்தியது. யூத பாதுகாப்பு கழகம் முரட்டுத்தன நடவடிக்கைகளில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பயன்படுத்துவதற்குக்கூட தயங்கியதில்லை, அமெரிக்காவின் அரசியல் செயற்திட்டத்திற்கு சோவியத் யூதர்களை ஆதரவு தருமாறு கட்டாயப்படுத்த உதவியது, கடுமையான கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான பனிப்போர் செயல்திட்டத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டது மற்றும் அமெரிக்க வர்த்தக சட்டங்களில் 1975ல் ஜாக்சன் வாணிக் திருத்தங்களை (Jackson-Vanick amendment) கொண்டுவருவதற்கு முன்நின்றது. இந்தத் திருத்தங்களின்படி யூதர்கள் புலம்பெயர்வதை கட்டுப்படுத்தும் நாடுகளுக்கு சலுகை வர்த்தக தகுதி மறுக்கப்பட்டது. இந்த மசோதாவின் முதன்மை சிற்பியாக இருந்த ரிச்சார்ட் பேர்ள் (Richard Perle) ஒரு முன்னணி நவீன-பழைமைவாத கருத்தியல்வாதியும், நடப்பு புஷ் நிர்வாகத்தின் நண்பருமாவார்.

யூத பாதுகாப்பு கழகத்தின் நடவடிக்கைகள் வாஷிங்டனின் பனிப்போர் அரசியலுக்கு ஒத்துவருகின்ற காலம்வரை கஹனேயின் (Kahane) வழியில் நிதி குவிந்தது. அவரது வன்முறை நாட்டம் சகித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் 1971ல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வைத்திருந்ததாகவும், வன்முறையை தூண்டிவிட்டதாகவும், அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர் இஸ்ரேலுக்கு தப்பி ஓடினார். 1970களின் நடுப்பகுதி வரை FBI நிரந்தரமாக யூத பாதுகாப்பு கழகத்தை ஒரு பயங்கரவாத குழு என்றே குறிப்பிட்டது.

இஸ்ரேலில், கஹனே (Kahane) ஒரு பாசிச கட்சியை ஸ்தாபித்து அதை Kach என்றழைத்து திரித்தல்வாத இயக்கத்தின் வாரிசு என்று கூறிக்கொண்டார். கஹனே பாலஸ்தீனிய மக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் உறவுகளை துருவப்படுத்துவதற்கு வன்முறை ஆத்திரமூட்டல்களை பயன்படுத்தினார் மற்றும் பாலஸ்தீனிய மக்களை ஆக்கிரமிக்கப்ட்ட பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு உள்ளேயிருந்தும் விரட்டுவதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கினார்---- அங்கு 1970களின் கடைசி காலத்தில் பாலஸ்தீனிய மக்கள் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதமாக இருந்தனர்.

Gush Emunim, Kach மற்றும் அதுபோன்ற சக்திகளின் பணி என்னவென்றால் மேலும் எல்லைகளில் விட்டுக்கொடுக்கும் சலுகைகளை தரக்கூடாது என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலின் இறையாண்மையை விரிவுபடுத்த வேண்டும் என்று போராடுவதும்தான். அந்த மண் புனிதமானது கடவுள் தந்த வரம் அதை பிறருக்கும் மாற்றித்தர முடியாத அளவிற்கு தங்களுக்கே சொந்தமானது ஆக உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்த முடியாது என்று அவர்கள் கூறினர். அவர்களது பணி என்னவென்றால், தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு நெருக்குதலை கொடுத்து முடிந்தவரை அதிகமான குடியிருப்புக்களை ''இஸ்ரேலின் மண்ணிலும்'' கிழக்கு ஜெரூசலத்திலும் அதிகமான குடியிருப்புக்களை ஏற்படுத்தி அரபு மக்களை அவர்கள் குடியிருக்கும் நெரிசலான பகுதிகளில் இருந்து ''மாற்றுவதும்'' ஆக இருந்தது.

1973 அக்டோபர் போருக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட பரந்த அடிப்படையில் கண்டன இயக்கம் உருவானதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டனர். அது இஸ்ரேல் போருக்கு ஆயத்தம் இல்லாத நிலைக்கு பொறுப்பான முன்னணி அரசாங்க அமைச்சர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியது மற்றும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிற பரவலானதொரு இயக்கத்தோடு கூட்டணி வைத்துக்கொண்டது. அக்ரநாட் கமிஷன் ஒரு விமர்சன அறிக்கையை தந்ததை தொடர்ந்து, பிரதமர் கோல்ட் மேயர் பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் மற்றும் வெளியுறவு செயலாளர் அப்பா ஈப்பன் ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பின்னர் புதிய தலைமுறை தொழிற்கட்சி தலைவர்களான ராபின் மற்றும் சிமோன் பெரஸ் வெற்றி பெற்றனர்.

குஷ் இமுனிம் எகிப்துடனும் சிரியாவுடனும் எந்த உடன்படிக்கைகளையும் செய்துகொள்ள கூடாது என்பதை தீவிரமாக எதிர்க்கவும் செய்தன. அந்த இயக்கம் பேரணிகளை நடத்தியது மற்றும் மேற்குக்கரையில் சட்டவிரோத குடியிருப்புக்களை உருவாக்கி, அடிக்கடி இஸ்ரேல் இராணுவத்துடன் மோதல்களிலும் ஈடுபட்டது.

அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் அரசாங்க அனுமதியில்லாமல் அல்லது அரசாங்க கொள்கைக்கு முரணாக அல்லது தவறான சாக்குப்போக்குகளின் காரணமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து குடியிருப்புக்களை அமைப்பார்கள் அதற்கு பின்னர் நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மை என்ற அடிப்படையில் அரசாங்கத்தை அங்கீகாரம் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, 1974-75 நேபுலஸ் பகுதியில் குடியிருப்புக்களை ஏற்படுத்த ஏழு முறை முயன்று தோல்விகண்ட அவர்கள் அன்றைய தொழிற்கட்சி பாதுகாப்பு அமைச்சரான சிமோன் பெரஸ் ஆல் நப்லஸிற்கு மேற்கே குவாடம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு இராணுவத்தளத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பபட்டனர். அது இரண்டு வருடத்திற்கு பின்னர் அதிகாரபூர்வமாக Qedumim குடியிருப்பாக அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது.

1974ல் ராபின் அரசாங்கம் அனுப்பிய இராணுவத்திற்கு எதிராக குடியேறியவர்களை தற்காத்து நின்றவர் ஏரியல் ஷரோன் ஆவார். அவர் ஒரு இஸ்ரேல் செய்தி பத்திரிகைக்கு அப்போது பேட்டியளித்தபோது அது ''ஒரு தார்மீக நெறிக்கு முரணான இராணுவக் கட்டளை மற்றும் அதுபோன்ற இராணுவக் கட்டளைகளுக்கு [இராணுவ வீரர்கள்] அடிபணிந்து நடக்க மறுப்பது அவசியமாகும். அத்தகைய கட்டளைகளை நான் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். ஷரோனை பொறுத்தவரை, அது தார்மீக நெறிக்கு முரணானது ஏனென்றால், அது இஸ்ரேலின் பாதுகாப்பு தேவைகளை கீழறுப்பதாக அமைந்தது, மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஊறு செய்கின்ற அளவிற்கு அது அமையவில்லை.

1977 வாக்கில், மேற்குக்கரையில் Allon திட்டத்தின் கீழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏறத்தாழ 30 குடியிருப்புக்கள் 4,500 இஸ்ரேலிய மக்கள் குடியிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுவிட்டன. மேலும் 50,000 இஸ்ரேலிய மக்கள் ஜெரூசலம் நகரில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தனர்.

தொடரும்.....

Top of page