World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Crackdown on looting

New Orleans police ordered to stop saving lives and start saving property

சூறையாடல் மீதான நடவடிக்கை

நியூ ஓர்லேயன்ஸ் போலீஸ் உயிர்கள் மீட்பதை நிறுத்துமாறும் உடைமைகளை காக்க தொடங்குமாறும் கட்டளை

By Patrick Martin
1 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

நியூ ஓர்லேயன்ஸ் மேயர் ரே நாகின் வெள்ளத்தினால் படுசேதம் அடைந்துள்ள நகரத்தில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போலீஸ் படையையும் மீட்புப் பணிகளை கைவிடுமாறு மற்றும் சூறையாடல்களை நிறுத்தும் முயற்சிகளில் மீது குவிமையப்படுத்தும்படியும் புதன் இரவு கட்டளையிட்டார். கேட்ரினா சூறாவளிகளினால் நகரம் ஏறத்தாழ அழிந்துவிட்டதால் அது கிட்டத்தட்ட சமூகப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது என்று கருத்துரைத்து, சூறையாடுபவர்களால் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வருவதன் மீது பெருமளவில் வலியுறுத்தல் வைக்கும் பரபரப்பூட்டும் செய்திஊடகங்களில் இருந்து பெருகிவரும் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு வந்திருக்கிறது.

சூறையாடுபவர்கள் ``பெருமளவில் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் ஓட்டல்கள், மருத்துவமனைகளை நெருங்கிவரத் தொடங்கியிருக்கின்றனர் மற்றும் இப்போதே அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தப் போகிறோம்`` என்று நாகின் குறிப்பிட்டார். சூறையாடலை தடுக்கும் பணியை 1500 போலீஸாருக்கு அவர் ஒதுக்கினார். ``தேடுதல் மற்றும் மீட்புப்பணியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை நியூ ஒர்லியேன்சிலுள்ள போலீஸ் படைக்கு இணையானது`` என்று அசோசியேட் பிரஸ் தகவல் தந்திருக்கிறது.

தங்களது வீடுகளில் வெள்ளத் தண்ணீர் புகுந்தால் சிக்கிக் கொண்டவர்களது உடல்கள் மீட்கப்படுகின்றதால் நியூ ஒர்லேயன்சில் இறந்தவர்கள் எண்ணிக்கை ``ஆயிரக்கணக்கில்`` உயரக்கூடும் என்று நாகின் எச்சரித்த சில மணி நேரத்தில் இந்தக் கட்டளை வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டு மாடிகளிலிருந்தும், வீட்டின் மேன்மாடத்திலுள்ள சிறு அறைகளிலிருந்தும் கடந்த இரண்டு நாட்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர், ஆனால் சொத்தை காப்பாற்றுவதற்கு புதிய கவனம் செலுத்தப்பட்டதன் விளைவாக உயிர் பிழைத்த மற்றவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன.

மத்திய அவசர உதவி ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை வெளியேற்றுவது மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவுடன், சூறையாடுபவர்களை தடுப்பதற்காக தேசிய காவலர்களை முடிந்தவரை மிக விரைவாக திரும்ப அனுப்ப தான் கட்டளையிடுவதாக லூசியானா கவர்னர் காத்தலின் பிராங்கோ கூறினார். ``நாங்கள் சட்டம் ஒழுங்கை மீட்போம்`` என்று அந்த ஜனநாயகக் கட்சி கவர்னர் அறிவித்தார். ``எனக்கு கோபம் மிக அதிகமாக வருவதற்கு காரணம் இது போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றபோது மக்களின் படுமோசமான குணங்களும் வெளிப்படுகின்றன. இந்த வகையான நடவடிக்கையை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்`` என்று அவர் குறிப்பிட்டார்.

புதன் கிழமை முழுவதும் ஊடகங்கள் சூறையாடல்களில் குவிமையப்படுத்தியதை தீவிரமாக்கியது, குறிப்பாக கேபிள் தொலைக்காட்சி வலைப்பின்னல்கள் சூறையாட்டியவர்களை, முக்கியமாக இளைஞர்களான கருப்புநிற மக்கள், வெள்ளத்தால் சேதமடைந்த கடைகளிலிருந்து பொருள்களை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறிவரும் ஒரே படக்காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின.

அத்தகைய செய்தி கோர்வைகளை வெளியிட்டதில் ஒரு திட்ட வட்டமான சமூக முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்திராத படுமோசமான இயற்கை பேரழிவின் உண்மையான தன்மையை அவை பெருமளவில் திரித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இலாப அமைப்பின் கீழ் மனித உயிரை விட தனியார் சொத்துதான் அதிகம் கணக்கில் எடுக்கப்படும் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

பரபரப்பூட்டும் பத்திரிகை செய்திக் கோர்வைகள் ஒரு தெளிவான அரசியல் நோக்கத்தை கொண்டிருக்கிறது: சூறாவளி, கற்றினாவால் பாதிக்கப்பட்டவர்களை பூதாகரமாக சித்தரிக்கவும் இனவாதம் உள்பட மிக இழிவான உணர்வுகளை கிளறி விடுவதுமாகும். இந்த வழியில், ஊடகங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தாலும் புஷ் நிர்வாகத்தாலும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கொள்கைளை நியாயப்படுத்துவதற்கு உதவுகின்றன----படுமோசமான அரைகுறை மீட்பு முயற்சிகளைத்தான் ஊடகங்கள் வெளியிட்டன மற்றும் அந்த பேரழிவுகள் பாதிக்கப்பட்ட மிகப்பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு கைவிடப்பட்டனர்.

போலீசாரை அணிதிரட்டுவதற்கு அவர் கட்டளையிட 12 மணி நேரத்திற்கு முன்னர் மாட் லாயரிடமிருந்து சூறையாடல் பற்றி வந்த கேள்விக்கு மேயர் நாகின் முரட்டுத்தனமாக நிராகரித்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். NBCன் Today நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சூறையாடல் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி பற்றி குறிப்பிட்ட அவர், சிலர் தொலைக்காட்சி பெட்டிகளையும் இதர எலக்ட்ரானிக் பொருள்களையும் எடுத்துக்கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தின. மிகப் பெரும்பாலான ''திருட்டு'' மிகவும் நெருக்கடிக்கு உள்ளான மக்கள் உணவுப் பொருள்களையும், தண்ணீர் பாட்டில்களையும், ஆடைகளையும் தங்களது உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக எடுத்துவரும் ஆற்றொணாநிலையில் வந்தனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பின்னர் ஒரு பத்திரிகை பேட்டியில் ``உண்மையிலேயே அது சங்கடமானது மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் சூறையாடல்கள் தொடங்கின. அதனால் அதை உண்மையில் அளவுக்கதிகமாக வாதிடமுடியாது. அதற்குப் பின்னர் ஒரு வெகு ஜன குழப்பம் அதிகமடைந்தது, அந்த நேரத்தில் எலக்ட்ரானிக் பொருள்களையும் பிற சாதனங்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர்`` என நாகின் குறிப்பிடுகிறார்.

புதன் கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி இந்த விவரத்தை உறுதிப்படுத்தியது, நியூ ஒர்லேயன்ஸ் லோயர் கார்டன் மாவட்ட டெக்கோபிடாலஸ் தெருவில் இருக்கும் சூப்பர் வால் மார்ட் பல் பொருள் அங்காடியில் நடைபெற்ற காட்சியை வர்ணித்துள்ளது, அங்கு டஜன் கணக்கான மக்கள் அந்த பல்பொருள் அங்காடியின் நிர்வாகம், உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படைவீரர்களின் மறைமுக சம்மதத்தோடுதான் பொருள்களை எடுத்துச் சென்றனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக ஆரம்பத்தில் அந்தக் கடை திறக்கப்பட்டது, ஆனால் உணவு மற்றும் உடைமைகளை தேடிக் கொண்டிருந்த உள்ளூர் மக்கள் அதற்குப் பின்னர் அந்தக் கடையை நோக்கிப் படையெடுத்தனர்.

தனது 20 வயதிற்கும் குறைந்த தனது மகளுடன் வந்த ஒரு பெண் டைம்சிடம் கூறினார் ``எவரும் எந்தப் பொருளையும் திருடவில்லை. 'உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள், ஏனென்றால் அந்த அளவிற்கு நிலவரம் முற்றிவிட்டது. வெள்ளம் வரப்போகிறது. அனைத்தும் அழியப்போகின்றன`` என்று அவர் கூறினார். ஒரு இளைஞர் அந்த பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது ``எங்களுக்கு உடைகளும் உணவும் தேவை. போலீசார் அனைவரும் உள்ளே சென்று தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுமாறு அனுமதித்தனர். தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை, ஆனால் அப்படிச் செய்தவர்களை பொதுமக்களே தடுத்து நிறுத்தினர்`` எனக் கூறினார்.

இது போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும், சூறாவளி பேரழிவு ஒரு மகத்தான சமூக அம்சத்தை கொண்டது. எப்படிப்பட்ட சமூக அமைப்பு அமெரிக்காவில் உள்ளது என்பதையே காட்டியது. என்றாலும் கவர்னர் பிளான்கோ கூறியதற்கு மாறாக ``மக்களிடையே காணப்படுகின்ற படுமோசமான குணம்`` அதிகாரிகள் தக்க முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதிலும் சூறாவளியை தொடர்ந்து ஏற்பட்ட புயல், கடலின் பேரலை மற்றும் வெள்ளத்தால் பல மில்லியன் மக்கள் துன்பத்திற்கு இலக்கானது குறித்து அலட்சியப் போக்கில் நடந்து கொண்டதையும் காட்டுகிறது.

திருட்டு என்று வருகின்ற போது, ஒரு சில சில்லறை விற்பனை அங்காடிகளில் வறுமை வயப்பட்ட நியூ ஒர்லியேன்சில் நடைபெற்ற சூறையாடல் பெருவர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாதவை. விலைகளை படுவேகமாக உயர்த்திவிட்டார்கள். பெட்ரோல் விற்பனையில் மட்டும் சில பகுதிகளில் சில்லறை விலை ஒரு கேலனுக்கு ஒரு டாலர் உயர்ந்து விட்டது----அமெரிக்கா முழுவதிலும் பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களிடம் இப்படி கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது போலீசார் மற்றும் தேசிய காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்த எண்ணெய் கம்பெனி நிர்வாகிகளும் அல்லது பெட்ரோல் விநியோகிப்பவர்களும் ஊடகங்களில் அவதூறு செய்யப்படவில்லை.

Top of page