World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington tries to evade political responsibility for Katrina's devastating impact

கேட்ரினாவின் பேரழிவுகரமான தாக்கத்தின் அரசியல் பொறுப்பை தட்டிக்கழிக்க வாஷிங்டன் முயலுகிறது

By Joseph Kay
2 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

கேட்ரினா சூறாவளியால் பேரழிவுகரமான தாக்கத்தை அடுத்து வாஷிங்டன், அமெரிக்க ஊடகங்களின் ஒத்துழைப்போடு, குறிப்பாக நியூ ஓர்லியேன்ஸ் நகரத்தில் பாரியளவிற்கு சேதத்திற்கு காரணமான அரசாங்கத்தின் பொறுப்பை மூடி மறைக்கின்ற நோக்கில் வரலாற்றுரீதியான பொய்மைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிபோக்கை தொடக்கியிருக்கிறது. அந்த சூறாவளியின் தாக்கங்களை ஆத்திரமூட்டும் வகையிலும் பத்தாயிரக்கணக்கான மக்களது வாழ்விற்கு ஆபத்துக்குள்ளாகுகின்ற வகையிலும் தெளிவான முடிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வோல் ஸ்டீரீட் ஜோர்னல் வியாழனன்று தனது முதல் தலையங்கத்தில் ''கேட்ரினாவின் பயமூட்டுகிற விடியல்'' என்று தொடக்கமே இவ்வாறு அறிவிப்பதாக அமைந்திருக்கிறது. ''தற்போது முக்கியமாக குறிப்பிட வேண்டிய படிப்பினை மிகத் தெளிவானதும் கூட: இயற்கையின் மிகப் பெரிய சீற்றத்தை மனிதனது கெட்டித்தனங்கள் அனைத்துமே முறியடித்து விடமுடியாது. ''நியூ ஓர்லியேன்சில் உள்ள அமெரிக்க இராணுவ பொறியாளர்கள் பிரிவுகளின் தலைமை பொறியாளரான வால்டர் பாமி புதன் கிழமையன்று கேட்ரினாவிற்கோ அதன் பின்விளைவிற்கோ தேவையான முன்னேற்பாடுகள் எதையும் அதிகாரிகள் செய்திருக்க முடியாது என்று கூறினார். ''அவ்விடத்தில் ஒரு திட்டம் இருக்கிறது.'' ஆனால் அந்த சூறாவளி ''எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகமாக அடித்திருக்கிறது. இந்த நகரம் முன்னர் இது போன்றதொரு எதையும் பார்த்ததில்லை'' என்று கூறினார்.

புதன்கிழமை ABC தொலைக்காட்சியில் ''காலை வணக்கம் அமெரிக்கா'' என்ற நிகழ்ச்சியில் ஒரு பேட்டியளித்த போது '' கடல் அலை தடுப்பு அணைகள் உடையும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியும் என நான் நினைக்கவில்லை'' என்று ஜனாதிபதி புஷ்ஷே அறிவித்தார்.

அத்தகைய அறிக்கைகள் திட்டவட்டமானதொரு நோக்கத்திற்காக வெளியிடப்படுகின்றன: ஒரு பெரிய சூறாவளி அந்த நகரத்தை நேரடியாக தாக்கும் நேரத்தில் அந்த நகரம் அதை சமாளிப்பதற்கு தயாராக இல்லாதிருந்தது என்பது எச்சரிக்கை தொடர்பான நீண்டகாலமான வரலாற்றிலிருந்து திசைதிருப்புவதற்கு வெளியிடப்படுகின்றன. கடல் அலை தடுப்பு சுவரை அதன் தரத்தை வலுப்படுத்த வேண்டும். வெள்ளம் பாய்வதிலிருந்து அந்த நகரத்தை காப்பாற்றுவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்புக்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன, அதேபோன்று தங்களது சொந்த போக்குவரத்து வாகன வசதிகள் இல்லாத பல்லாயிரக்கணக்கான மக்களை வெள்ளம் வரும்போது வெளியேற்றுவதற்கு ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் என்ற யோசனையும் பொருட்படுத்தப்படவில்லை.

கடந்த தசாப்தத்திற்கு மேலாக அடிக்கடி கடுமையான சூறாவளிகள் பற்றி எச்சரிக்கைகள் அதிகமாக வந்தன மற்றும் 1998ல் சூறாவளி ஜோர்ஜஸ் 2004ல் சூறாவளி ஐவன் தாக்கிய போதும் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. எந்த நேரத்திலும் நான்காவது அல்லது ஐந்தாவது தரத்தைச் சேர்ந்த ஒரு சூறாவளி நேரடியாக நியூ ஓர்லியேன்சை தாக்கக் கூடும் என்று தெரிந்தது. அப்போது நகரத்தின் தற்காப்புக்களை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் அதிகம் செலவு பிடிப்பவை என்று புறக்கணிக்கப்பட்டன, மற்றும் தற்போதுள்ள கடல் அரிப்புத்தடுப்பு திட்டங்களை நிலை நாட்டவும் மற்றும் பாதுகாப்பு சதுப்பு நிலப்பகுதிகளை புனரமைக்கவும் தீட்டப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதி வசதி தரப்படவில்லை.

அந்த நகரத்தை சுற்றியுள்ள கடல் நீரிலிருந்து கடல் மட்டத்தின் உயரத்திற்கு கீழுள்ள நியூ ஓர்லியேன்சை காப்பாற்றுவதற்கு தற்போதுள்ள கடல் அலை தடுப்பு அரண் ஏற்பாடு கடந்த ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்டதாகும். அது பல முறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது, மிக அண்மைக் காலமான 1965ல் சூறாவளி பெஸ்டி தாக்கியது. பெஸ்டி ஒரு 3வது வகையைச் (Category) சேர்ந்த புயலாகும், மற்றும் இதே வேகத்தோடு சூறாவளி தாக்குமானால் மட்டுமே நகரத்தை காப்பாற்றுவதற்காக கடல் அலை தடுப்பு முறை உருவாக்கப்பட்டது. கேட்ரினா சூறாவளி 4வது வகையை சார்ந்த சூறாவளியாகும். அது திங்கள் காலை நியூ ஓர்லியேன்சை நேரடியாக தாக்கியது.

ஜோர்ஜஸ் சூறாவளி தாக்கிய பின்னர் தடுப்பு அரண்முறையை மேம்படுத்துவது குறித்து புலனாய்வு செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1998 நவம்பர் 18ல், நியூ ஓர்லியேன்ஸ் Times-Picayune பத்திரிகை குறிப்பிட்டிருந்ததைப் போல் நியூ ஓர்லியேன்ஸ்க்கு கிழக்கே இருப்பதும் கேட்ரினாவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த நகரசபையுமான செயின்ட் பெர்னார்டு பரிஸ் நகர சபை நியூ ஓர்லியேன்சினால் சூறாவளி தடுப்பு அரண் முறையை மேம்படுத்தி ஜோர்ஜஸ் அல்லது மிச்சல் போன்ற வலுவான சூறாவளிகள் தாக்கும் போது (அவையும் 1998இல் நடைபெற்றன) சமுதாயத்தை காப்பாற்றுவதை மேம்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள பணம் ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டது.......... சென்ற வாரம் இராணுவ பொறியாளர்கள் படை உள்ளூர் அரசாங்கங்கள் மத்திய கூட்டாட்சி அதிகாரிகளிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு 4ஆவது அல்லது 5ஆவது தரத்தைச் சார்ந்த சூறாவளி தாக்கும் போது அதைத் தாக்குப் பிடிக்கும் வல்லமையுள்ள தடுப்பு அரணை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த நகர்வு வந்தது''.

2001 மார்ச் 17ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அந்தப் பத்திரிகை பொறியாளர்களின் இராணுவப் படையை சார்ந்த மூத்த திட்ட மேலாளர் அல் நவோமி தனது குறிப்பில் கூறியிருந்தது ''[ஜோர்ஜஸ்] சூறாவளி நம்மை நேரடியாக தாக்கியிருக்குமானால் நமது கடல் அலை தடுப்பு நம்மை காப்பாற்றி இருக்க முடியாது'' ஏனெனில் அத்தகையதொரு சக்தியுள்ள சூறாவளியைத் தொடர்ந்து வரும் அலைகளின் வீச்சு நமது தடுப்புச் சுவர்களுக்கு மேலான உயரத்தில் வரும். இராணுவ பொறியாளர்கள் பிரிவு தலைமையில் ஒரு திட்டம் அத்தகைய அச்சுறுத்தலை மதிப்பீடு செய்து சாத்தியமான தீர்வுகள் குறித்து முன்மொழிவு செய்யும்.

2001 டிசம்பர் 1ல், Houston Chronicle வந்த கட்டுரையில் வளைகுடாவிலிருந்து வருகின்ற ஒரு சூறாவளியினால் நியூ ஓர்லியேன்ஸ் மிகத் தீவிரமாக இலக்காகக்கூடிய சாத்தியக் கூறை ஆராய்ந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அவசர நிலை நிர்வாக அமைப்பு அமெரிக்காவில் மிகவும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய மூன்று சூறாவளிகளில் ஒன்று நியூ ஓர்லியேன்சை தாக்கக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தனர். ''ஒரு புயல் வருகிற போது எதிர்கொள்ளும் அணுகுமுறை தொடர்பாக ஒரு விஞ்ஞானி குறிப்பிட்ட, போதுமான அளவிற்கு பொதுமக்களை வெளியேற்றுகின்ற வழிகள் இல்லாததால் 250,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்வார்கள் மற்றும் 20 அடி ஆழத்திற்குள் நகரம் மூழ்கும் போது மிச்சமிருப்பவர்களில் 10 பேருக்கு ஒருவர் கொல்லப்படுகின்ற சாத்தியக்கூறு உண்டு.'' என்று Houston Chronicle எழுதியுள்ளது.

அந்த நகரத்தின் தடுப்புச் சுவரை மேம்படுத்துவதற்கு பலதசாப்தங்களுக்கு மேலாக எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்ற உண்மையை அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியது. ''பெஸ்டி சூறாவளி நியூ ஓர்லியேன்ஸை 8 அடி தண்ணீருக்குள் மூழ்கடித்து 36 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதற்கு பின்னர் சுற்றுப்புறச்சூழல் சீர்குலைந்து கொண்டுவந்தது மற்றும் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கி சென்றதன் காரணமாக அந்த நகரம் மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டது. அப்படியிருந்தும் அரசாங்கம் பல தசாப்தங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்காத போக்கை கடைபிடித்து வந்தால் அந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் விடப்பட்டது என நிபுணர்கள் கூறினர்''.

நெருங்கி வரும் சூறாவளியின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு தடுப்பாக சதுப்புநில பகுதியை மறுபடியும் கட்டியெழுப்ப விரிவானதொரு திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளும் அறிவியல் நிபுணர்களும் கருதுகின்றனர். இப்படி இயற்கையாக உருவாகும் தடுப்பு மிசிசிப்பி ஆற்றிலிருந்து வண்டல் மண்படிவங்களைக் கொண்டு வந்து சதுப்பு நிலத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததை சீர்குலைக்கும் வகையில் கடல் அலை தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்த சதுப்பு நிலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டப் பணிக்குழுவை 1990இல் ஒரு நாடாளுமன்ற சட்டம் அமைத்தது. அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ஆண்டிற்கு 40 மில்லியன் டாலர். இந்த தொகை முற்றிலும் போதுமானதாக இல்லாததால் சதுப்பு நிலம் சிதைவது படிப்படியாக அதிகரித்தது.

Chronicle கட்டுரை குறிப்பிட்டிருந்தது ''இதர சாத்தியமான திட்டங்களில் தடுப்பு நாணல்களை வளர்ப்பதும் பான்ட்சர்டேய்ன் ஏரி நிரம்பி வழிந்த செல்லாமல் பெரிய தடுப்பு கதவுகளை அமைப்பதும் அடங்கும். இவை அத்தனையும் பல பில்லியன் டாலர் திட்டங்கள் ''இவற்றில் எந்தத் திட்டமும் போதுமான நிதியைப் பெறவில்லை என்றாலும், கணணிகள் மூலம் உருவாக்கப்பட்ட சேத அழிவு பற்றிய மதிப்பீடுகள் அந்த நகரத்தை 4 அல்லது 5ஆவது வகையைச் சார்ந்த சூறாவளி தாக்குமானால் பத்தாயிரக்கணக்கான மக்கள் மடிவார்கள் மற்றும் பத்தாயிரக்கணக்கான டாலர்கள் பொருள் சேதம் ஏற்படும் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டன.

கடல் தடுப்புச் சுவரை உயர்த்துவதற்கு 1 அல்லது 2 பில்லியன் டாலர்கள் செலவாகும். மற்றொரு முன்மொழிவு நியூ ஓர்லியேன்சில் நீண்டகால புவியியல் பிரச்சனை தொடர்பாக குறிப்பிவது, உதாரணமாய் சதுப்பு நிலம் சீர்குலைவது தொடர்பாக பேசுவதாகும். இதன்படி ஆண்டிற்கு 470 மில்லியன் டாலர்கள் வீதம் 30 ஆண்டுகளுக்கு மேலாக மொத்தம் 14 பில்லியன் டாலர்களை செலவிட்டு மேம்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டங்கள் அனைத்துமே புறக்கணித்து தூக்கி எறியப்பட்டன. சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதை பல தசாப்தங்களுக்கு மேலாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்கள் புறக்கணித்துவிட்டு மக்களில் மிகக்குறுகிய ஒரு பிரிவைச் சார்ந்த மக்கள் பணக்காரர்கள் ஆவதற்கு சாதகமான கொள்கைகளை வகுத்தன. மிக அண்மைக் காலத்தில், ஈராக் போரினால் ஏற்பட்ட செலவினங்களும் மற்றும் பணக்காரர்களுக்கு புஷ் கொண்டு வந்த வரி குறைப்புக்களும் இதற்கு நேரடி பங்களிப்பு செய்தன. அந்த நகரத்தை சூறாவளிகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்காக 1995ல் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்த மத்திய நிதி ஒதுக்கீடு ஆரம்பத்தில் குறைந்த அளவுள்ளதாக இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலும் அந்த நிதி ஒதுக்கீடுகள் வறண்டுவிட்டன.

Editor & Publisherல் ஆகஸ்ட் 30ல் வில் பிரன்ச் ஒரு கட்டுரையின்படி மத்திய நிதிகளை நிர்வாகம் செய்கின்ற பொறியாளர்களின் இராணுவப்படைப்பிரிவு ''ஈராக் போரினாலும் உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களாலும் செலவின அழுத்தங்கள் வந்தன என்ற உண்மையை எப்போதுமே மறைக்கவில்லை-----மத்திய வரி வெட்டுக்களை கொண்டு வந்த நேரத்தில் உருவானதால் --அந்த நெருக்கடி முற்றிற்று: '' 2004 இருந்து 2005 வரை Times-Picayune வெளியிட்டுள்ள குறைந்தபட்சம் ஒன்பது கட்டுரைகள் திட்டவட்டமாக சூறாவளி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு டாலர்களின் பற்றாக்குறைக்கு ஒரு காரணம் ஈராக் போர் செலவினம் என்று சுட்டிக்காட்டுகின்றன.''

இந்த சூறாவளி நடைபெறுகின்ற காலம் வரை இந்த நிதி வெட்டுக்கள் நீடித்தன. நியூ ஓர்லியேன்ஸ் சிட்டிபிஸ்னஸ், 2005 ஜீனில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் 2006 நிதியாண்டில் ''அமெரிக்க இராணுவப்பிரிவு பொறியாளர்கள் நியூ ஓர்லியேன்ஸ் மாவட்டப் படைப்பிரிவு மத்திய நிதியில் ஒரு சாதனை அளவாக 71.2 மில்லியன் டாலர்கள் குறைக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளது. நியூ ஓர்லியேன் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் இவ்வளவு பெரும் நிதி வெட்டு இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை என்று அந்த படைப்பிரிவு அதிகாரிகள் கூறினர்.....நியூ ஓர்லியேன்ஸ் மாவட்டத்தில் வரவுசெலவுதிட்டம் குறைக்கப்பட்டிருப்பதால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று தென்கிழக்கு லூசியானா நகர வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டமாகும் [SELA], இது 1995 மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் செபர்சன், ஒர்லியேன்ஸ் மற்றும் St. Tammany parishes பகுதிகளின் வடிகால் வசதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. SELA வரவுசெலவுதிட்டத்தில் 2005ல் 36.5 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது 2006ல் 10.4 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க கீழ்சபையும் ஜனாதிபதியும் ஆலோசனை கூறியுள்ளனர்.``

100,000 ஏழைகள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள விடப்பட்டனர்

கேட்ரினா சூறாவளி உருவானதைத்தொடர்ந்து, அந்த நகரத்திற்குள் சிக்கிக் கொண்டவர்கள் தக்க நேரத்தில் வெளியேறவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மக்கள் மீது பழி போடவும் செய்தனர்.'' அந்த மக்கள் அனைவரையும் வெளியேறி வருமாறு நாங்கள் கெஞ்சி கேட்டுக் கொண்டோம். குறைந்த சூழ்நிலைகள் உள்ளவர்களுக்குக் கூட வாய்ப்பு தரப்பட்டது.'' என்று லூயிஸியானா ஆளுனர் காத்தலீன் பிளாங்கோ புதன் கிழமையன்று கூறினார். நியூ ஓர்லியேன்ஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் டெர்ரி எபர்ட் திங்கட் கிழமையன்று இன்னும் அந்த நகரத்தில் இருப்பவர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் உள்ளனர் என்று கருத்துத்தெரிவித்தனர். எந்த அளவிற்கு அரசாங்கம் புறக்கணிப்பு மனப்பான்மையோடு இரக்கமற்ற வகையில் நடந்து கொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் சூறாவளியால் பேரழிவிற்கு இலக்கான மக்களை நோக்கி அவர் ''அவர்களில் சிலர் இந்த மண்ணில் தாங்கள் தூங்குகின்ற கடைசி இரவு என்பதை தெரிந்தே செய்தனர். இது ஒரு படிப்பினையைப் பெறுவதற்கு மிகக் கடுமையானதொரு வழியாகும்'' என கூறினார்.

இதே நிலைப்பாட்டை ஊடகங்களும் கிளிப்பிள்ளை போல் எதிரொலித்தன. வாஷிங்டன் போஸ்டில் வியாழனன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை ("நியூ ஓர்லியேன்சில் ஒரு ஆற்றொண்ணா வெளியேற்றம்'' என்ற தலைப்பில் வெளியிட்டது அதில் நியூ ஓர்லியேன்சில் இன்னும் இருந்து கொண்டிருக்கும் மக்கள் ''முந்தி வெளியேறும் கட்டளைகளை எதிர்த்தவர்கள், அவர்களில் பல முதியவர்களும் ஊனமுற்ற குடிமக்களும் அடங்குவர். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

உண்மையிலேயே, ஒரு பெரிய சூறாவளியினால் முழு நகரத்து மக்களும் வெளியேற்றப்படவேண்டும் என்பது அரசாங்கத்திற்கு நீண்ட காலமாகவே தெரியும். பிரதானமாக போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளதால் 100000 இற்கு மேற்பட்ட மக்கள் அந்த நகரத்திலிருந்து வெளியேற்றுவது இயலாத காரியம். 2002ல் Times-Picayune ''கைவிடப்பட்ட'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் விடுத்திருந்த எச்சரிக்கை: ''ஒரு பெரிய புயல் தாக்கப் போகிறது என்பது நிச்சயமானது உடன் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதுதான் உயிர் பிழைப்பிற்கான சிறந்த வாய்ப்பாகும்.... மற்றும் 100,000 மக்கள் போக்குவரத்து வசதியில்லாமல் அச்சுறுத்தப்படுகின்றனர்..... குறைந்த வருமானம் கொண்ட ஏராளமான மக்களிடம் சொந்தத்தில் கார்கள் இல்லை மற்றும் அவர்கள் முன் கூட்டியே சோதித்து பார்க்கப்படாத அவசர உதவி போக்குவரத்து வசதியை நம்பியிருக்க வேண்டும்.''

ஏழைகளை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது தொடர்பான பிரச்சனைக்கு பதிலளித்த நகர அதிகாரிகள் அந்த ஏழைகள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்கின்ற நிலையில் விட்டுவிட்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சூறாவளி கேட்ரினா தாக்குவதற்கு ஒரு மாதத்திற்கு சற்று முன்னர், ஜீலை 24ல் Times-Picayune வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் ''நகர, மாநில மற்றும் மத்திய அவசர உதவி அதிகாரிகள் நியூ ஓர்லியேன்சில் உள்ள ஏழைகளுக்கு வரலாற்றுரீதியாக ஒரு அப்பட்டமான செய்தியை அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்: அது ஒரு பெரிய சூறாவளி தாக்கும் போது நீங்களே உங்களை தற்காத்து கொள்ள வேண்டும்'' என்பதாகும் என குறிப்பிட்டிருந்தது.

அந்த பத்திரிகை தொடர்ந்து ''இப்பொழுது பதிவுசெய்யப்பட்டுவரும் எழுதப்பட்ட செய்திகளில், நகரசபை தலைவர் Ray Nagin, உள்ளூர் செஞ்சிலுவை நிர்வாக இயக்குனர் கே வில்கின்ஸ் மற்றும் நகர சபை தலைவர் ஒலிவர் தோமஸ் போன்ற அதிகாரிகள் நகரில் 134,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போக்குவரத்து வசதியின்றி ஏற்றிச் செல்ல முடியாது, நகர சபையிடம் அத்தகைய வசதியில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளனர். நியூ ஓர்லியேன்ஸ் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கூட அதிகாரிகள் மக்களை வெளியேற்றுவதற்கான தங்களது செய்தியை பதிவு செய்திருக்கின்றன மற்றும் அவர்கள் லூயிஸ்யானாவின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள 60 சதவீதம் மக்கள் 3ஆவது வகையைச் சார்ந்த சூறாவளி தாக்கும் போது தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும்'' என எழுதியிருந்தது.

அந்த சூறாவளி நெருங்கி வந்த நேரத்தில் நகர அதிகாரிகளுக்கு ஒரு உண்மை தெரிந்தேயிருந்து அது என்னவென்றால் தாங்கள் அவசரமாக வெளியேறுவதற்கு கட்டளையிட்டிருப்பதை பெரும்பாலான பிரிவுகளைச் சார்ந்த மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆகஸ்ட் 27 மாலையில் அந்த புயல் தாக்குவதற்கு சுமார் 36 மணி நேரத்திற்கு முன்பு அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ''அந்த நகரத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் 100000 மக்கள் வெளியேறுவதற்கு வாகன வசதியில்லாதவர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தது. 74 வயதான ஹட்டி ஜோன்ஸ் கூறியதை குறிப்பிட்டிருந்தது: ''நகரத்தை விட்டு வெளியேறு என்று அவர்கள் சொல்வதை நான் அறிவேன், ஆனால் நான் வெளியேறுவதற்கு என்னிடம் எந்த வழியும் இல்லை...... உங்களிடம் பணம் இல்லையென்றால் நீங்கள் வெளியேற முடியாது.''

போக்குவரத்து வசதியில்லை என்பதுடன், அந்த நகரத்தின் ஏழை மக்கள் விடுதிஅறைகளில் தங்கியிருக்க கட்டணம் செலுத்த வசதியில்லாதவர்கள். நகரம், மாநிலம் அல்லது மத்திய அரசு உட்பட எந்த அரசாங்க அமைப்பும் அகதிகளாக மாறிவிட்டவர்களுக்கு நிதி உதவி எதையும் தராததால் இந்த மக்கள் வேறு வழியில்லாமல் தங்களது வீடுகளிலேயே இருந்தனர் மற்றும் அந்த புயல் கடந்து விடும் என்று நம்பினர். கேட்ரினா சூறாவளி கொண்டு வந்த வெள்ளத்தினால் இந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி இறந்து விட்டனர்.

பாரியளவு சூறாவளி வீசும் போது எந்தச் சூழ்நிலைகளிலும் ஓரளவிற்கு சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், நியூ ஓர்லியேன்சில் ஏற்பட்ட இந்த பாரிய பேரழிவு மற்றும் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு உருவாகிவிட்ட சேதங்கள் ஒரு திட்டவட்டமான கொள்கைகளின் விளைவுதான். அதற்கு அமெரிக்க ஆளும் தட்டினரும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் திட்டவட்டமான பொறுப்பிற்கு உரியவர்கள் ஆவர்.

See Also :

சூறையாடல் மீதான நடவடிக்கை
நியூ ஓர்லேயன்ஸ் போலீஸ் உயிர்கள் மீட்பதை நிறுத்துமாறும் உடைமைகளை காக்க தொடங்குமாறும் கட்டளை

Top of page